category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
மாவோயிஸ்டுகளுடன் திரிணமுல் தொடர்பு
கோல்கட்டா:திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளது என, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், மாவோயிஸ்டுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அவர்களை ஒடுக்குவதற்காக மத்திய ரிசர்வ் படை போலீசார், மாநில போலீசாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ந...
தமிழகம்
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு பரிந்துரை
மதுரை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலையால் அறிவிக்கப்பட்டுள்ள திட்ட உதவியாளர் (தொழில்நுட்பம்) காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான வயது வரம்பு ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 35 வயதுக்கு மிகாமல் இருத்தல் அவசியம். கல்வித்தகுத...
தமிழகம்
தமிழக கேரம் அணியில் ராமேஸ்வரம் மாணவி
ராமநாதபுரம் : தேசிய கேரம் சாம்பியன் போட்டிக்கான தமிழக அணியில், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி மாணவி ஜஸ்வர்யா இடம் பெற்றுள்ளார். 2009-10ம் ஆண்டின் மாநில சப்-ஜூனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டி, ஈரோடு மாவட் டம் அரச்சலூர் அமர்ஜோதி பப்ளிக் பள்ளியில் நடந்தது. ஜூலை 16 முதல் 18 வரை நடந்த இப்போட்டியில், ராமநாதபுரம் மாவ...
தமிழகம்
கடலோர காற்றில் உவர்ப்பு தன்மை அதிகரிப்பு : தீவுகளில் கருகும் தாவரங்கள்
ராமநாதபுரம் : கடலோர காற்றில் உவர்ப்பு தன்மை அதிகரித்துள்ளதால், மன்னார் வளைகுடா கடல் தீவுகளில் உள்ள தாவரங்கள் கருகி வருகின்றன. மன்னார் வளைகுடாவில் காற்றின் தன்மை நாளுக்கு நாள் மாறுபடுகிறது. இதன் வேகம் அதிகரிக்கும் போது , அதன் உவர்ப்பு தன்மையும் அதிகரிக்கிறது. தற்போது பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மன்னார் வளைகுடா கடலின...
தமிழகம்
அறிவுத் திறன் போட்டி
ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே ஊஞ்சாம்பட்டி எஸ்.எஸ். முத்துசெட்டியார் நினைவு இந்து ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி நடந் தது. தாளாளர் சதாசிவம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராமச் சந்திரன் வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியை ராஜலட்சுமிபரிசுகளை வழங்கினார். உதவி ஆசிரியை ஞானசெல்வி நன்றி கூறினார்.
தமிழகம்
உலக சுற்றுச்சூழல்தின ஊர்வலம்
சேத்தூர் : ராஜபாளையம் அமுத தென்றல் டிரஸ்ட் சார்பில் சேத்தூரில் உலக சுற்றுச்சூழல் தின ஊர்வலம் நடந்தது. சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,800 பேர் பங்கேற்றனர். 1,000 மரக்கன்றுகள் வழங்கப் பட்டன. யூனியன் வங்கி சேத்தூர் விவசாய ஊரக வளர்ச்சி மேலாளர் தாமோதரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சமூக சேவகர் தலைமலை பேசினார். டிரஸ்ட் தலைவர் ...
தமிழகம்
விபத்தில் வியாபாரி பலி ரூ.1.3 லட்சம் நஷ்ட ஈடு
ஸ்ரீவில்லிபுத்தூர் : சேத்தூரை சேர்ந்தவர் ஆதிமூலம்(60), வெங்காய வியாபாரியான இவர் கடந்த 2008 ஜனவரி 1ம் தேதி மதியம் 2.30மணிக்கு ராஜபாளையம் -தென்காசி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். பால் பண்ணை அருகில் வரும் போது பின்னால் மதுரையை சேர்ந்த ஜார்ஜ் அசோக் ஓட்டி வந்த ஹூண்டாய் கார் அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் மத...
தமிழகம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ராஜபாளையம் : ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். சாலை மற்றும் சங்கரன்கோவில் முக்கு பகுதியிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரையியலான ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.நகரமைப்பு ஆய்வாளர் சரவணன், இளநிலை பொறியாளர் சுப்புத்தாய், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சந்திரன் மேற்பார்வையிட்டனர். கடைகளின் முன் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், ...
தமிழகம்
தாசில்தாரை மிரட்டியவர் கைது
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியை ஒட்டிய குப்பாங்குளம் கண்மாயில் மண் திருடிய டிராக்டரை ஸ்ரீவி. தாசில்தார் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பிடித்தார்.   டிராக்டர் டிரைவர் மாரிமுத்து(48) அதிகாரிகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டிராக்டரை ஓட்டினார்.   தடுத்த தாசில்தாரை டிராக்டரை ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட...
தமிழகம்
மீனாட்சி கோயிலின் 46 ஏக்கர் நிலத்தை ரூ.4600க்கு கேட்ட குத்தகைதாரர்கள் : அதிகாரிகள் அதிர்ச்சி
மதுரை : திருச்சி மாவட்டத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 46 ஏக்கரை, 4600 ரூபாய்க்கு குத்தகைக்கு விடுமாறு கேட்டதால், கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இக்கோயிலுக்கு பல்வேறு காலக்கட்டங்களில் மன்னர்கள் முதல் பொதுமக்கள் வரை நிலம், ஆபரணங்களை தானமாக வழங்கியுள்ளனர். இதற்கு ஆதாரமாக செப்பு பட்டயங்கள், ஓலைச்...
தமிழகம்
விருதுநகரில் கறிக்கடைகளால் சுகாதார கேடு: கவுன்சிலர்கள் புகார்
விருதுநகர் : விருதுநகர் தெருக்களில் கண்ட இடங்களில் எல்லாம் கறிக்கடைகள் இருப்பதால் சுகாதாரக் கேடு,குடிநீர்  தட்டுப்பாடு, வாறுகால் அள்ளுவதில்லை போன்ற அடுக்கடுக்கான புகார்களை கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.விருதுநகர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் கார்த்திகா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் காசிராஜன், ஆணையர் ஜான்சன் மற்...
தமிழகம்
பெரியாறு நீர்மட்டம் கிடு கிடு உயர்வு: வைகைக்கு தண்ணீர் வரத்து
கூடலூர் : கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஜூலை 19 ல் 117 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று தினங்களில் நான்கு அடி வரை உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 121.30 அடியாக இருந்தது. நீர்வரத்து 3643 கன அடியாகவும், தமிழகப்பகுதிக்கு நீ...
இந்தியா
தனிச் சிறப்பு அடையாள அட்டை திட்டம் : 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
புதுடில்லி : நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும், தனிச்சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கு, 3,023 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 10 கோடி அடையாள அட்டைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை...
தமிழகம்
இலவச, கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை : இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் இடையில் மாணவர்களுக்கு, "டிசி' கொடுத்து வெளியே அனுப்பக் கூடாது என்றும், தமிழக அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் ஆ...
இந்தியா
புதுச்சேரிபோலீஸ் ஸ்டேஷன்களில் முதல்வர், அமைச்சர் திடீர் ஆய்வு
புதுச்சேரி:புதுச்சேரியிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் முதல்வரும், உள்துறை அமைச்சரும் நேற்று ஆய்வு நடத்தினர்.புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9 கொலைகள் நடந்துள்ளது. இதில் 4 கொலைகள் வெடிகுண்டு வீசி நடந்தது குறிப்பிடத்தக்கது.சிறிய பகுதியான புதுச்சேரியில் அதிகளவில் கொலைகள் நடப்பதாலும், வெடிகுண்டு கலாசாரம் உச்ச கட்டத்த...
தமிழகம்
தேரோட்ட ஆலோசனை கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோயில் தேரோட்ட ஆலோசனை கூட்டம் பிரபாகரன் எஸ்.பி., தலைமையில் நடந்தது.ஆர்.டி.ஓ., கொம்பையன், செயல் அலுவலர் குருநாதன், அறங்காவலர்குழு தலைவர் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி.தேவராஜ், மருத்துவ அதிகாரி பால்ராஜ் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தியா
தவறு செய்து விட்டோம் பவார் கட்சி பிரமுகர் பேட்டி
மும்பை:கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றும், முதல்வர் பதவியைப் பெறாமல் கை விட்டது, நாங்கள் செய்த பெரிய தவறு என, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர எரிசக்தி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அஜித் பவார், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவ...
தமிழகம்
பட்டாசு ஆலையில் மோசடி: 3 பேர் மீது வழக்கு
சிவகாசி: விருதுநகர் வேலுச்சாமி நகரை சேர்ந்த சுப்பிரமணியன்(63), இவருடன்  விக்ரமன், பராசக்திவேல், பரமசிவம் கூட்டு சேர்ந்து  சித்தமநாயக்கன்பட்டியில் சிவா பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையை 1998ல் நடத்தினர். சில ஆண்டுகளுக்கு பின் பயர் ஒர்க்சில் வேலை நடைபெறவில்லை. பின்னர் சுப்பிரமணியனுக்கு தெரியாமல் மூவரும்   பட்டாசு ஆலை லைசென்ஸ்சை...
தமிழகம்
வெண்கல சிலை திருடிய கார் டிரைவர் கைது
சிவகாசி: சிவகாசியில் தொழில் அதிபர்  சுபாஸ்சந்திரபோஸ்க்கு  வீடு, ஆட்டோ மொபைல் கடை உள்ளது. இவைகளை வேலை ஆட்கள் மூலம் பராமரித்து வருகிறார். வீட்டின் நுழைவு அறையில் 28 கிலோ எடையிலான வெண்கலத்திலான கலைநயமிக்க  நடனமாடும் பெண் சிலை ஒன்று இருந்தது. இச் சிலையின் மதிப்பு ரூ. ஒரு லட்சம்.  கரிவலம்வந்த நல்லூரை சேர்ந்த முருகன்(35) சுப...
தமிழகம்
சுற்றுச்சூழலை வலியுறுத்தி பயணம் : கிராமவாசியின் முன்முயற்சி
மானாமதுரை : சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறார், நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த அன்பு சார்லஸ் (49). சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வந்த அவர் கூறியதாவது: கிராமத்தில் தந்தை விவசாயம் செய்து வந்தார். காவிரியில் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கும் போது கஷ்டத்தை அனுபவித்தோம். தண...
தமிழகம்
தகராறு: 3 பேர் கைது
சேத்தூர்: சேத்தூர் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(40). கிருஷ்ணாபுரத்தில் குமார் என்பவரது செங்கல்சூளையில் வேலை செய்கிறார். செங்கல்சூளைக்கான மண் அள்ளுவதில் மகாலிங்கத்திற்கும் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த கனகராஜ்(28), சோலைமலை(26), காளிதாஸ்(23) ஆகியோருக்கும் இடையே சில நாட்களாக தகராறு இருந்து வந்தது. ...
தமிழகம்
வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
பழநி : பள்ளி வேலை நாட்களில், தொடக்க,உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க 20 சதவீத எண்ணிக்கை அடிப்படையில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றியம் வாரிய...
தமிழகம்
தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை பெறாத குடும்பங்களே இல்லை
காரியாபட்டி : தி.மு.க.,ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை தமிழகத்தில் பெறாத குடும்பங்களே இல்லை என முன்னாள் அமைச்சர் செல்வகணபதி பேசினார்.காரியாபட்டியில் முதல் வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமை வகித்தார். தொழிலதிபர் மணிவாசகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லம் உட்பட...
தமிழகம்
கம்ப்யூட்டர் மையங்களில் சூதாட்டம் : நண்பர்கள் குழு மூலம் கண்காணிப்பு
திண்டுக்கல் : இளைஞர்கள் கம்ப்யூட்டர் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க போலீஸ் நண்பர்கள் குழு மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மையங்கள் சிலவற்றில் இளைஞர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மாநிலம் முழுவதும் சில மையங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.இதில் சூதாட்டத்தில...
தமிழகம்
மக்கள் குறை தீர்க்கும் முகாம்
தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே இளந்திரைகொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.சிவகாசி ஆர்.டி.ஓ., கொம்பையன் தலைமை வகித்தார். தாசில்தார் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். இளந்திரைகொண்டான் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி வரவேற்றார். 99 மனுக்கள் பெறப்பட்டன. 7 பேருக்கு முதியோர் உதவி...
தமிழகம்
உடனடித் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியீடு
சென்னை : பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியிடப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் என, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கடந்த மாதம் நடந்த உடனடித் தேர்வில் கலந்து கொண்டனர். விடைத்தாள்கள்...
தமிழகம்
வைப்பு நிதி விவரம் அறிய எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம்
சென்னை : ஊழியர்களின் வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக எஸ்.எம்.எஸ்., வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஊழியர்களின் வைப்பு நிதி நிறுவனம் எஸ்.எம்.எஸ்., மூலம் ஊழியர்கள், உறுப்பினர்கள், பென்ஷன் வாங்குபவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வசதியை உருவாக்கியுள்ளது. இந்த சேவை மூலம் பென்ஷன் கடன் விண்ணப்பம் மற்றும் செட்டில்...
தமிழகம்
8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து
சென்னை : தமிழகத்தில் எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1977ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எட்டு பேருக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்கள் தாங்கள் பணியாற்றி வரும் பதவிகளிலேயே, கூடுதல் தலைமைச் செயலராக பணிபுரிவர். தேவேந்திரநாத் சார...
இந்தியா
சபரிமலையில் இன்று நிறப்புத்தரி வைபவம்
சபரிமலை : சபரிமலையில் நிறப்புத்தரி வைபவம், இன்று அதிகாலை நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் நடை, ஆடி மாத பூஜைகளுக்காக 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மாத பூஜை முடிந்து, நேற்று முன்தினம் இரவு, கோவில் நடை அடைக்கப்பட்டது; நிறப்புத்தரி (புதிய நெல்களால் ...
இந்தியா
"நெட்'டிலிருந்து பாடங்களை "டவுண்லோடு' செய்வதால் குறைந்து வரும் மாணவர்களின் படைப்பாற்றல்
புதுடில்லி : மாணவர்கள் தங்களது ஹோம் ஒர்க்குகளை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதால், அவர்களின் படைப்பாற்றல் முற்றிலும் குறைந்து விடுவதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். கல்விக்கு இணையதளம் இன்றைய காலக்கட்டத்தில் பெரும் பங்காற்றுகிறது. அதே நேரத்தில், மாணவர்களை சோம்பேறிகளாகவும் ஆக்கி விடுகிறது. அவர்களி...
தமிழகம்
பாக்., ஆதரவு தீவிரவாதிகள் :ஹிலாரி எச்சரிக்கை
வாஷிங்டன்:பாகிஸ்தான் பின்னணியுடன் அமெரிக்கா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு பாதிக்கப்படும் என ஹிலாரி கிளின்டன் கண்டிப்புடன் கூறினார்.இது குறித்து பி.பி.சி., க்கு அளித்த பேட்டியில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கூறியதாவது: பாகிஸ்தானில் உள்ள பயங் கரவாதிகள் எப்போது வேண்டு...
இந்தியா
ரயில் பயணிகளுக்கு சிறந்த உணவு தர புதிய திட்டம் : பழைய நடைமுறையை நீக்கி அதிரடி
புதுடில்லி : ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி உட்பட அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகளுக்கு உணவு சப்ளை செய்யும் பொறுப்பை ஐ.ஆர். சி.டி.சி.,யிடமிருந்து பறிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தரமான, அதே சமயம் பயணிகள் அதிக அளவில் குறைகளின்றி பயன்படுத்தும் வகையில் சிறந்த உணவு வழங்கப்படும். பிளாட்பாரங்களில...
தமிழகம்
நீரினை பயன்படுத்துவோர் சங்கம் முடக்கம் நிர்வாகிகள் தேர்வு பெற்றும் செயல்படாத நிலை
விருதுநகர் : நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்வு பெற்றும் செயல்படாத நிலை உள்ளது.தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் கண்மாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. நபார்டு வங்கி, கண்மாய் பாசன விவசாயி, கண்மாய் பராமரிப்பு பணிகளில் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நீரின...
தமிழகம்
கோவை, திருப்பூரில் 5,800 மாற்றுத் திறனாளிகள்
கோவை : கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 18 வயதுக்கு உட்பட்ட 5,800 மாற்றுத் திறனாளிகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கோவை அனைவருக்கும் கல்வி இயக்கம்(எஸ்.எஸ்.ஏ) சார்பில் மாற்றுத் திறனாளிகளின் கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 18 வயது வரையுள்ள மாற்றுத் திறனாளி...
தமிழகம்
அரசு ஆஸ்பத்திரியில் காலியாகவுள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்பாததால் மக்கள் அவதி
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., அரசு ஆஸ்பத்திரியில் காலியாகவுள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்பாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.தினமும் வெளிநோயாளிகளாக 800க்கு அதிகமானோரும், உள் நோயாளிகளாக 110பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு எலும்பு முறிவு டாக்டர் இல்லாததால் விபத்தில் காயமடைபவர்களை முதலுதவி மட்டும் செய்து மது...
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
ராஜபாளையம் : பா.ம.க., 22வது ஆண்டு துவக்க விழாவையொட்டி ராஜபாளையத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. சோழராஜபட்டி தெரு, பஞ்சு மார்க்கெட் பகுதி, பொன்னகரம் பகுதிகளில் மாநில துணைப் பொதுச் செயலாளர் லட்சுமணன் மரக்கன்றுகள் நட்டார். நகர தலைவர் குருசாமி தலைமை வகித்தார். 3வது வார்டு தலைவர் ஆறுமுகம், நகர பொருளாளர் காளியம்மாள் முன்ன...
தமிழகம்
கோவை நகரின் வளர்ச்சிக்கு குழி பறிக்கும் கும்பல்: புது ரோட்டுக்கும் வேட்டு
செம்மொழி மாநாட் டுக்காக புதுப்பிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை தனிநபரின் சுய நலத்துக்காகத் தோண்ட வைத்துள்ளார் கவுன்சிலர்; அதற்காக கமிஷனர் பெயரையும் முறைகேடாக பயன்படுத்தியுள்ளார். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டையொட்டி திருச்சி ரோட்டில், பங்குச்சந்தையிலிருந்து சிந்தாமணிப்புதூர் வரையிலான ரோடு, 16 கோடி ரூபாய் மதிப்பில் அகலப...
இந்தியா
மாத பூஜை நடை திறப்பு: மேலும் சில நாட்கள் செயல்பட ஆலோசனை
சபரிமலை : மாத பூஜைகளுக்காக குறைந்த நாட்களே திறக்கப்படும் சபரிமலை கோவில் நடை, கூடுதலாக சில தினங்கள் திறக்க, ஆலோசனை நடந்து வருகிறது. ஒவ்வொரு மலையாள அல்லது தமிழ் மாத முதல் தேதிக்கு முதல் நாள், மாலை 5:30 மணிக்கு மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் நடை திறக்கப்படும். ஐந்து நாள் பூஜைகளுக்கு பின் அடைக்கப்படும். இத...
தமிழகம்
பாராட்டு விழா
விருதுநகர் : ஒய்ஸ்மென் சங்கம் சார்பில் விருதுநகரில் அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 26 மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைவர் ரூப்சிங் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் எம்.எஸ்.பி.கே.எஸ். நடராஜன், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். செயலாளர் சண்முகவேல் நன்றி க...
இந்தியா
ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி., வரி நாடு முழுவதும் அமலாகிறது
புதுடில்லி : அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலாகிற, ஜி.எஸ்.டி., என்ற பொருட்கள் மற்றும் சர்வீசஸ் வரிவிதிப்பு முறை அமலாக்கத்திற்கு, அனைத்து மாநிலங்களும் முதல்கட்டமாக ஆதரவளித்திருக்கின்றன. இதற்கான விசேஷ ஆலோசனைகளை, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் மேற்கொண்டார். இதில், மாநில அரசுகளின் அதிகாரம...
தமிழகம்
வி.ஏ.ஓ., பணிக்கு விண்ணப்பங்கள் தபால் அலுவலகங்களில் கிடைக்கும்
விருதுநகர் : வி.ஏ.ஓ., பணிக்கான விண்ணப்பங்கள் தபால் அலுவலகங்களில் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக பணியாளர் தேர்வாணைக்குழு சார்பில் வி.ஏ.ஓ., பணிக்கான விண்ணப் பங்கள் தபால் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.விருதுநகர் தலைமை தபால் அலுவலகத்தில் மட்டுமே விற் பனை செய்யப்பட்டு வந்த விண்ணப்பங் கள் மாவட்டம் மு...
இந்தியா
சுபிக்ஷா கணக்குகள் விசாரிக்க உத்தரவு
புதுடில்லி : மோசடி புகாரில் சிக்கியுள்ள சுபிக்ஷா நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை விசாரிக்குமாறு, பெரிய முறைகேடுகளை புலனாய்வு செய்யும் நிறுவனமான எஸ்.எப்.ஐ.ஓ.,விடம், மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இது குறித்து கம்பெனித்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2007ல் இந்நிறுவனத்தில் 23 சதவீத பங...
தமிழகம்
ரூ.66 லட்சம் பெறுமான திருட்டு பொருட்கள் மீட்பு; ஒப்படைப்பு
கோவை : கோவை போலீசாரால் மீட்கப் பட்ட ரூ.66.47 லட்சம் மதிப்புள்ள நகை, டூ வீலர், கார்களை சம்மந்தப்பட்ட உரிமையாளர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று ஒப்படைத்தார். கோவையில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, கொள்ளை, வீட்டுக்குள் புகுந்து திருட்டு என அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.வீடு, மருத்துவமனை, ஓட்...
தமிழகம்
சுகாதார சீர்கேடுகளில் சிக்கி தவிக்கும் சின்ன புளியம்பட்டி குடியிருப்பு
அருப்புக்கோட்டை நகராட்சி 1 வது வார்டை சேர்ந்த சின்ன புளியம்பட்டியில் சுமார் 16 தெருக்கள் உள்ளன. நகரின் ஒதுக்குபுறத்தில் இருக்கும் இந்த பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர். வராத குடிநீருக்கும், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில்  மக்கள் நகராட்சி வரியை கட்டி வருகின்றனர். எந்த வித வசதிகளும் செய்யப்படாததால் மக்கள் நொந்து போ...
தமிழகம்
பொதுச் சொத்துக்கு சேதம்; 8 பேர் கைது
மேட்டுப்பாளையம் :  பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த 2 பெண் கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் கரட்டுமேட்டை சேர்ந்த முன்னாள் சாராய வியாபாரி நாய்க்கார பழனிசாமியை, தாஜ்தீன் என்ற முன்னாள் சாராய வியாபாரி வெட்டிக் கொலை செய்தார். கடந்த 14ம் தேதியன்று மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன்பாக இந்த கொலை நடந்தத...
இந்தியா
காந்தி எழுதிய முக்கிய டைரிக்குறிப்பு பொதுமக்கள் பார்வைக்கு ஆவணமாகும்
புதுடில்லி : மகாத்மா காந்திஜி எழுதிய சிறிய டைரி, விரைவில் தேசிய ஆவண காப்பகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. மகாத்மா காந்திஜி, 1947, ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பயன்படுத்திய சிறிய டைரி, மீனா ஜெயின் என்பவரிடம் இருந்தது. காந்தி தேசிய மியூசியத்தின் முன்னாள் இயக்குனர் வர்ஷா தாஸ், மீனா ஜெயினின் நண்பர். எனவே, காந்த...
தமிழகம்
ஷேர் ஆட்டோ: ஆர்.டி.ஓ., விசாரணை
கோவை : மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பர்மிட்டுடன் வழங் கப்பட்ட ஷேர் ஆட்டோ, தனிநபருக்கு விற்கப்பட் டது குறித்து விசாரணை நடத்த துணை போக்குவரத்து கமிஷனர் உதயணன் உத்தரவிட்டுள்ளார்.நகரில் பஸ்கள் செல்லும் வழித்தடத்தில் 30 கி.மீ எல்லைக்குள், மக்கள் நெருக்கமுள்ள கூட்டநெரிசல் உள்ள பகுதிகளை தேர்வு செய்து ஷேர் ஆட்டோக்களை இயக்க போக்...
தமிழகம்
இந்திய மாணவர் மீது தாக்குதல் தட்டிக்கேட்டார் ஆங்கிலப்பெண்
மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் நிறவெறி கும்பல் நடத்திய தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து இந்தியர்கள் அவமானப்படுத்தப்படும் சம்பவம் நிகழ்கிறது.ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது, நிறவெறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளது.இந்தியர் மீதான நிறவெறி தாக்குதல் சம்பவங்கள் குறித்து, அந...
தமிழகம்
நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை!
சூலூர் : சூலூர் விமானப்படை தளத்துக்கு இடம் கையகப்படுத்தப்படுவதாக தாசில்தார் வெளியிட்ட அறிவிப்பு, விவசாயிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் தாசில்தார் அலுவலகத்திலிருந்து சூலூர் பகுதியில் உள்ள சூலூர் மற்றும் செலக்கரிச்சல் நில வருவாய் ஆய்வாளர்கள், காங்கயம்பாளையம், அப்பநாயக்கன் பட்டி, கலங்கல் மற்றும்...
தமிழகம்
ஷோரூமில் தீ விபத்து
சென்னை : கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பாட்டா நிறுவனத்தின் ஷோரூம் உள்ளது. அங்கு நேற்று மாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.தகவல் அறிந்து விரைந்த 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயைஅணைத்தனர். தீயைகட்டுக்குள் கொண்டு வருவதில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடினர்.இதில், கட...
தமிழகம்
தி.மு.க.,வை கண்டித்து ம.ம.க., ஆர்ப்பாட்டம்
கோவை : திருச்சியில் மனித நேய மக்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோவையில் நேற்று அக்கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சி 28 வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கும், மனிதநேய மக்கள் கட்சிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டது. கடும் போட்டி காரணமாக, மனிதநேய மக்கள் கட்சியின...
தமிழகம்
வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் பூச்சாட்டுடன் துவங்கியது விழா
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது.ஆடிக்குண்டம் விழாவை முன் னிட்டு, காப்புக் கட்டுவதற்காக அம்மன் ஆபரண அணிக் கூடையுடன் கோவில் தலைமை பூசாரி குமரேசனை அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் செய்யப்பட்டது. பின் இரவு 7.0...
தமிழகம்
ஜெலட்டின் வெடித்து இருவர் படுகாயம்
குறிச்சி : குழி தோண்டும்போது, ஜெலட்டின் வெடித்து இருவர் படுகாயமடைந்தனர். செட்டிபாளையத்தை அடுத்த பெரிய குயிலியில் ஜெகதீஸ் என்பவருக்கு சொந்தமான குவாரி உள்ளது. நேற்று முன் தினம், இதே பகுதியை சேர்ந்த பழனிசாமி(65), துரைசாமி(34) இருவரும் "டிரில்லிங்' செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஜெலட்டின் வெடித்து இருவரும் படுக...
தமிழகம்
வீடு புகுந்து திருடிய வழக்கில் இருவர் கைது: ரூ.5.5 லட்சம் நகை மீட்பு
பரங்கிமலை : மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதியில் வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.உள்ளகரம், கரியன் பொன்னன் தெருவை சேர்ந்தவர் ரகோத்தமன் (45). இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்....
தமிழகம்
மரத்தில் வேன் மோதி 15 பேர் காயம்
அன்னூர் :  அன்னூர் அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர புளியமரத்தில் மோதியது. இதில் 15 பேர் காயமடைந்தனர். அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையத்தில் பனியன் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் அன்னூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலிருந்து கம்பெனி வேன் மூலம் தொழிலாளர்கள் வேலைக்குச்...
தமிழகம்
மணலி நெடுஞ்சாலையில் 5 மணிநேரம் "டிராபிக் ஜாம்'
தண்டையார்பேட்டை : மணலி நெடுஞ்சாலையில், நேற்று காலை முதல் பிற்பகல் வரை 5 மணி நேரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் எரிபொருள் எடுத்து சென்ற டேங்கர் லாரிகள், பொதுமக்கள் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தத்தளித்தன.மணலி நெடுஞ்சாலையில் கொடுங்கையூர், எழில்நகர், கார்நேசன்நகர், கொருக்குபேட்டை, ஆர்.கே.,நகர், தண...
தமிழகம்
உறவினர் வீட்டில் கள்ளச்சாவி போட்டு20 சவரன் கொள்ளை: பெண் கைது
சென்னை : கள்ளச்சாவி போட்டு உறவினர் வீட்டைத் திறந்து, 20 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் ராபட்ராயன்; பெட்ரோல் பங்க் ஊழியர். இவர், ஒரு வாரத்திற்கு முன் காலை நேரத்தில், வீட்டைப் பூட்டிவிட்டு சர்ச்சிற்குச் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த ப...
தமிழகம்
ஏலச்சீட்டு நடத்தியவரின் உடல் கண்டெடுப்பு: போலீஸ் விசாரணை
மாதவரம்: ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தவர், அடித்து கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மாதவரம் பால் பண்ணை அடுத்த சின்னமாத்தூர், பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முருகேசன்(52). இவர், ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் க...
தமிழகம்
மியாட் மருத்துவமனையில் கருத்தரங்கு
சென்னை : இந்திய - ஜெர்மன் எலும்பு அறுவை சிகிச்சை கட்டமைப்பு சார்பில், மியாட் மருத்துவமனையில் எலும்பு அறுவை சிகிச்சை குறித்த மூன்று நாள் கருத்தரங்கு நடக்கிறது.சென்னை மியாட் மருத்துவமனையில், இந்திய - ஜெர்மன் எலும்பு அறுவை சிகிச்சை கட்டமைப்பு சார்பில், முதுகு தண்டுவடம், புண்கள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவ...
தமிழகம்
மாமல்லபுரம் புதிய பஸ் நிலையம்: டெண்டரை இறுதி செய்ய ஐகோர்ட் தடை
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில், புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான டெண்டரை இறுதி செய்ய, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.மாமல்லபுரம் சுற்றுலா சிற்ப வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:சிற்பக்கலைக்கு பெயர் பெற்றது மாமல்லபுரம். இங்கு தினசரி 5,000 சுற்றுலாப் பயணிகளும், விடுமுறை நாட்கள...
தமிழகம்
விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
குஜிலியம்பாறை : ஆர்.கோம்பை ஊராட்சி புங்கம்பாடி பகுதியில், தோட்டக்கலைத்துறை சார்பில் 20 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, துல் லிய பண்ணையம் அமைக் கப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான பயிற்சி முகாம், குஜிலியம் பாறையில் நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக் கு...
தமிழகம்
மேட்டுப்பாளையம் ரோட்டில் மெகா நெரிசல்
பெ.நா.பாளையம் : கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில், சாலை அகலப்படுத்தும் பணி, நேற்று துவங்கியது.மேட்டுப்பாளையம் ரோட்டை நான்கு வழிப்பாதையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்து, 49 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது. கோவை ப...
தமிழகம்
கொல்லப்பட்டி சமத்துவபுரம் ஆய்வு
வடமதுரை : வடமதுரை ஒன்றியத்திற்கான சமத்துவபுரம் அமைக்க மோர்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் பொன் னையா, திட்ட அலுவலர் அருண் மணி உள்ளிட்ட அதிகாரிகள் இடத்திற்கு ஒப்புதல் தந்த பின்னர், நில உரிமையாளரிடம் இருந்து நிலம் வாங்கி பத்திரப்பதிவு முடிக்கப் பட்டது. சமத்துவபுரத்த...
தமிழகம்
வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் தொடரும் மேற்கூரை பயணம்
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கும் மாணவர்களை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல் லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. காலை நேரத்தில் வேடந்...
தமிழகம்
குனியமுத்தூர் இடைத்தேர்தல்; 68% ஓட்டுப்பதிவு
குறிச்சி : குனியமுத்தூர் நகராட்சி 15வது வார்டு இடைத்தேர்தலில் 68 சதவீத ஓட்டுக்கள் பதிவாயின; காங்.,கட்சியினர் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து, 2 வேட்பாளர்களுக்கு ஓட்டுக் கேட்டனர்.குனியமுத்தூர் நகராட்சி 15வது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன், கடந்தாண்டு செப்டம்பரில் இறந்தார். இந்த வார்டுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்த...
தமிழகம்
செந்துறை ஊராட்சியில் குடிநீருக்கு தட்டுப்பாடு
செந்துறை : செந்துறை ஊராட்சியில் பழுதடைந்த குடிநீர் மோட்டார், உடைந்த குழாய்களை சரி செய்யாததால் குடிநீருக்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.செந்துறை ஊராட்சி குரும்பபட்டிகாலனியில் மின் மோட்டார் பழுதடைந்து 15 நாட்களாகியும் சரிசெய்யப்படவில்லை. இப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.  மேலும் செந்துற...
தமிழகம்
பருவமழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்படுள்ளது. தேவை அதிகரித்துள்ள நேரத்தில், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், செங்கல் விலை உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளான அர்த்தநாரிபாளையம், காளியாபுரம், ஆத்துப்பொள்ளாச்சி, ஆனைமலை உட்பட பல்வேறு பகுதி...
தமிழகம்
பாதாள சாக்கடை பணி எச்சரிக்கை அறிவிப்பு தேவை
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பாதாள சாக்கடைக்காக முக்கிய ரோடுகளில் பள் ளம் தோண்டுவது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.பாதாள சாக்கடை பணிக்காக தெருக்களில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தெருக்களில் இருந்து வெளியேறும் குழாய்களை இணைக்கும் வகையில் தாடிக்கொம்பு ரோடு, ஆர்.எம்.காலனி-நேருஜி நகர் ரோடுகளில் மெஷின் மூ...
தமிழகம்
வி.ஏ.ஓ., தேர்வு: இலவச பயிற்சி
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் அரசு தேர்வுகளை எதிர் கொள்வது பற்றி இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 1,2, 4,7 மற்றும் 8 தேர்வுக்கும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கும் இளைஞர்களை தயார் படுத்த பொள்ளாச்சியில் "இந்தியன் பப்ளிக் சர்வீஸ் அகாடமி' சார்பில் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அனைத்து அரசு தேர்வுக்க...
தமிழகம்
பள்ளியின் மேற்கூரை ஒழுகுவதால் மாணவர் படிக்க முடியாமல் தவிப்பு
வால்பாறை : வால்பாறை அருகே மழையினால் ஒழுகும் பள்ளியில் படிக்க முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி கடந்த 1963ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பள்ளியில் தற்போது 51 மாணவர்கள் படித்து வருகின்றனர்.தற்போது தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்துவரும் நிலையில் இந்தப்பள...
தமிழகம்
மழை நீர் வீணாவதை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டம்
நத்தம் : நத்தம் கரந்தன்மலை அய்யனார் அருவிமழை நீர் ஆக்கிரமிப்பு காரணமாக வீணாவதை தடுக்க ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் 32 லட்சம் ரூபாய் செலவில் தூர் வார கலெக்டர் வள்ளலார் உத்தவிட்டார். நத்தம் ஒன்றியத்தில் ந. புதுப்பட்டி, குட்டுப்பட்டி ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டப்பணிகளை கலெக் டர் வள்ளலார் ஆய்வு செய்தார...
தமிழகம்
இலவச யோகா பயிற்சி முகாம்
சின்னாளபட்டி : காந்திகிராமம் கஸ்தூரிபா ஆஸ்பத்திரியில் இலவச இயற்கை சிகிச்சை மற்றும் யோகா பயிற்சி முகாம் நடந்தது. இதில் நீராவி குளியல், மண் சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்குபஞ்சர்  உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப் பட்டன. இயற்கை உணவு முறை குறித்து ஆலோசனைகள் தரப்பட்டன. சர்க்கரை , ரத்த அழுத்தம்,மூட்டுவலி, முதுகுவலி உள் ளிட்ட பல்வ...
தமிழகம்
மாக்கினாம்பட்டியில் குளத்தினுள் படித்துறை!
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளத்தினுள் மக்கள் பயன்பாட்டிற்காக படித்துறை அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மாக்கினாம்பட்டி ஊராட்சியில் ரயில்வே லைன் அருகில் பழமையான குளம் உள்ளது. அந்த குளத்திற்கு பி.ஏ.பி., தண்ணீரை கொண்டு வந்து தேக்குவதற்கு வழித...
தமிழகம்
உயர்கல்வி வணிகமயமாகி உள்ளது : சென்னை பல்கலை துணைவேந்தர் ஆதங்கம்
காஞ்சிபுரம் : கடமையை முறையாக செய்தால் உங்கள் குறிக்கோள் நிச்சயம் வெற்றி பெறும் என மாணவர்களுக்கு, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் அறிவுரை வழங்கினார்.காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பவள விழாவையொட்டி கட்டப்பட்ட எம்.பி.ஏ., கட்டடம் திறப...
தமிழகம்
விழிப்புணர்வு கருத்தரங்கம்
வடமதுரை : அய்யலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை நாள் பேச்சுப்போட்டி, குடும்ப நல விழிப்புணர்வு கருத்தரங்கமும், கண்காட்சியும் நடந்தது. பேரூராட்சித் தலைவி சந்தானலட்சுமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் காமராஜ் முன்னிலை வகித்தார். வட்டார விரிவாக்க கல்வியாளர் பாலமோகனா வரவேற்றார். டாக்டர் கள் புவனேஸ்வரி, முருகேசது...
தமிழகம்
ஸ்ரீ சத்யசாய் 88வது பாகவத சப்தாஹம் துவங்கியது
தாம்பரம் : ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் (தமிழகம்), ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி பார்வதி நகர் சார்பில், ஸ்ரீசத்யசாய் 88வது பாகவத சப்தாஹம் பழைய பெருங்களத்தூரில் நேற்று துவங்கியது.ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் (தமிழகம் ) ஸ்ரீ சத்யசாயி சேவா சமிதி பார்வதி நகர், காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில், ஸ்ரீ சத்யசாய் 88வது பாகவ...
தமிழகம்
பல கோடி ரூபாய் நிலமோசடி: 4 பேர் கைது
பொன்னேரி : போலி பத்திரம் மற்றும் ஆவணங்கள் தயாரித்து, நிலங்கள் விற்பனை செய்து பல கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை போலீசார் கைது செய்தனர்மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் டி.ஆர். லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் கண்டெய்னர் யார்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் தேவதாஸ் ரெட்டி (55). இவர் அத்திப்பட்டு...
தமிழகம்
மின் இணைப்பு பெயர் மாற்ற என்னென்ன வேண்டும்? மின்வாரியம் அறிவிப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த நெகமம் கோட்டத்தில் இன்றும், நாளையும், (23, 24ம் தேதி) நடக்கும் மின்நுகர்வோர் பெயர் மாறுதல் சிறப்பு முகாமில் பங்கேற்பவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் பற்றி விபரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. நெகமம் மின்வாரிய அலுவலக கோட்ட அலுவலகத்தில் இன்றும்(23ம் தேதி) நாளையும்(24ம் தேதி) மின்நுகர்வோர்...
தமிழகம்
அனுமதி பெறாத ஆதரவற்றோர் இல்லம் மூடல்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மூடப்பட்டது. அங்கிருந்தவர்கள், அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர்.காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையில், வேலூர் சாலையில், வாடகை வீட்டில் சத்யஜோதி கருணை இல்லம் உள்ளது. இதை, கார்மேகம் என்பவர் நடத்தி வருகிறார். இ...
தமிழகம்
தார்ரோடு காணாத தாதநாயக்கன்பட்டி
திண்டுக்கல் ஒன்றியம்,பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக் குட்பட்ட செல்வி நகர், துரை நகர், பொதுப்பணித்துறை அலுவலர் காலனி, உத்தனம்பட்டி, சாமியார்குளம், தாதநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருக்கின்றனர். இவர்களுக்கு முக்கிய பிரச்னையே ரோடு தான்.பல ஆண்டுகளாக தார்ரோடு இப்பகுதியில் போடப்படாமல் உள்ளது...
தமிழகம்
தாளாளர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
திண்டுக்கல் : கொடைக்கானல் கோடை பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கொடைக்கானல் பப்ளிக் பள்ளி தாளாளராக இருப்பவர் பிரைட்(72). இவர் தனது அறையில் தங்கியிருந்த பூடான் நாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத் தார் என்ற குற்றச்சாட்டு காரணமாக கொடைக்கானல் போலீசார் இவர...
தமிழகம்
பொள்ளாச்சியில் இடைத்தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி இடைத்தேர்தலில் எவ்வித அசம்பாவிதமுமின்றி ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில், 80 சதவீத ஓட்டுகள் பதிவாயின.பொள்ளாச்சி தாலுகாவில், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், தெற்கு ஒன்றியம் வீரல்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கும், ஆனைமலை ஒன்றியம் ஜல்லி...
தமிழகம்
தபால் பட்டுவாடாஅஞ்சலகம் திறப்பு
தாம்பரம் : முகலிவாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக புதியதாக தபால் பட்டுவாடா அஞ்சலம் நேற்று திறக்கப்பட்டது.முகலிவாக்கத்தில் இதுவரை துணை தபால் அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால், போரூர் அலுவலகத்தில் இருந்தே இப்பகுதிகளுக்கு தபால் பட்டுவாடா வழங்கப்பட்டு வந்தது. இந்த துணை தபால் அலுவலகம் பட்டுவாடா அஞ்சலகமாக மாற்றப்பட்டு, புதி...
தமிழகம்
கலையம்புத்தூர் கைலாசநாதர் கோயில் பிரச்னை: கண்டு கொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகள்
பழநி : ஏ.கலையம்புத்தூர் கைலாசநாதர் கோயிலில், உரிய நேரத்தில் திறந்து வைத்து பூஜைகள் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநி அருகே ஏ.கலையம்புத்தூரில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு, பல ஏக்கர் சொத்துகள் உள்ளன. குத்தகை வரவினங்கள் இருந்த போதும், போதிய வருவாய் வருவதில்லை. சில மாதங்களாக உரிய பூஜைகள் நடத்தப்படாமல்,பெரும்பா...
தமிழகம்
அ.தி.மு.க., கூட்டத்தில் தி.மு.க.,வினர் மோதல் வழக்கு
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், தி.மு.க.,வினர் ரகளை செய்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி., ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தனர்.பொள்ளாச்சியில் கடந்த 2006, டிச. 10ம் தேதி திருவள்ளுவர் திடலில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்...
தமிழகம்
திறக்கப்படாத பள்ளி கட்டடம்: வராண்டாவில் படிக்கும் மாணவர்கள்
வாலாஜாபாத் : தேவரியம்பாக்கம் தொடக்கப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ள வகுப்பறையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.வாலாஜாபாத்திலிருந்து படப்பை செல்லும் சாலையில் 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது தேவரியம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், 1923 ல் இரண்டு மாணவர்களுடன் திண்ணை பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது...
தமிழகம்
வடமதுரை திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்றிரவு திருக்கல்யாணம் நடக்கிறது.இக்கோயில் ஆடித்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ என சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. வடமதுரை சி.ஏ.வி. காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குனர் இ.என்.பழனிச்சாமியின்...
தமிழகம்
குடிநீர் பிரச்னைக்காக 25ல் உண்ணாவிரதம்
பொள்ளாச்சி : சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால் வரும் 25ம் தேதி கவுன்சிலர்கள் உண்ணாவிரத போரட்டம் அறிவித்துள்ளனர். சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கார்த்திகேயன், கண்ணியம்மாள், ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:சூளேஸ்வரன்பட்டியில் உள்ள 15 வார்டுகளில் ...
தமிழகம்
நல்லெண்ண வங்கி விழா
திருவள்ளூர் : பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில், நூறு கோடி நிமிடங்கள் நல்ல எண்ணங்களின் வங்கி விழா, திருவள்ளூர் ஞான வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.வாழ்வில் வளம் பெற தேவையான நல்ல எண்ணங்களை வழிபடுத்துதல், எவ்வாறு கடைபிடிப்பது, கோபத்தை கட்டுப்படுத்துதல் எவ்வாறு என்பது குறித்து விளக்கப்பட்டது. இதில், பிர...
தமிழகம்
கொலை மிரட்டல் பெண் கைது
எரியோடு : கோவிலூரைச் சேர்ந்தவர் பாலுபாரதி. இவரது தோட்டத்தில் இதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி(55) அத்துமீறி ஆடு, மாடுகளை மேயவிட்டுள்ளார். இதனை தட்டி கேட்ட பாலுபாரதியை, லட்சுமி, அவரது மகன் வெற்றிவேந்தன் தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.  எரியோடு போலீசார் விசாரித்து லட்சுமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் காலியாக உள்ள சிவஞானபுரம் ஊராட்சி, வடமதுரை ஒன்றியம் கொசவபட்டி, வேடசந்தூர் ஒன்றியம் வெல் லம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது. சிவஞானபுரத்தில் 3 பேரும், கொசவபட்டியில் 5 பேரும், வெல்லம்பட்டியில் 4 பேரும், ஆத்தூர் செட்டியபட்டி ஊராட்சி வ...
தமிழகம்
நெல்லிக்குப்பத்தில்ஆடிப்பெருவிழா
திருப்போரூர் : நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில் 51வது ஆடிப்பெருவிழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாவது வாரம் ஆடிப்பெருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு 51வது ஆண்டு ஆடிப்பெருவிழ...
தமிழகம்
பாங்க் ஆப் பரோடா நிறுவன நாள் விழா
திண்டுக்கல் : திண்டுக்கல் பாங்க் ஆப் பரோடாவின் 103 வது நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவில் 3103 கிளைகளும், வெளிநாடுகளில் 78 கிளைகள் உட்பட மொத்தம் 3181 கிளை உள்ளன. அனைத்து கிளைகளும் ஆன் லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009-2010ம் ஆண்டில் 3058 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இன்சூரன்சில் அதிகம் கே...
தமிழகம்
நாளை வேலைவாய்ப்பு முகாம்
திருவள்ளூர் : திருவள்ளூர் வெங்க டேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நாளை பொறியியல் பட்டப் படிப்பு முடித்த மாணவர் களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் அடுத்த திருப்பாசூர் வெங்கடேஸ் வரா கல்லூரியில் நடை பெறும் இம்முகாமில் 6,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், 20க்கும் மேற் பட்ட தனியார் நிறுவனத் த...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், மேற்குரோட்டரி சங்கம், குயின்சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டியை நடத்துகின்றனர்.முடிவுகள்: மாணவர்களுக்கான முதலாவது அரையிறுதி போட்டியில் திண் டுக்கல் செயின்ட் மேரீஸ் மே.நி.ப., அணி நிலக்கோட்டை அரசு மே. நி.ப., அணியை 4:3 என்ற கோல்கணக்கில் வென...
தமிழகம்
சுமோ கார் திருட்டு: 4 பேர் கைது
திருவள்ளூர் : திருவள்ளூர் நகரில், வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த டாடா சுமோ காரை திருடிய நால்வரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் ஆயில்மில் அருகே வசிப்பவர் கிருஷ்ணன் மகன் நித்யானந்தம்(30). இவர் 10ம் தேதி இரவு 7 மணிக்கு, தனக்கு சொந்தமான டாடா சுமோ காரை, வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் ச...
தமிழகம்
மின்னல் தாக்கி ரூ.5 லட்சம் மின்சாதன பொருட்கள் சேதம்
திருத்தணி : திருவாலங்காட்டில் உள்ள தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் மீது மின்னல் தாக்கியதில் 300க்கும் மேற்பட்ட டெலிபோன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள "டிவி', கம்ப்யூட்டர் உட்பட பல்வேறு மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.திருவாலங்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெ...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல்பதிவான ஓட்டுகள் விவரம்
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு ஒன்றியம் எட்டாவது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.பள்ளிப்பட்டு ஒன்றியம் எட்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மது, கடந்த ஜனவரி மாதம் சாலை விபத்தில் இறந்தார். இப்பதவிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.இப்பதவிக்கு தி.மு.க., சார்பில் நரசிம்மனும், சுயேச்சையாக ஓய்வு பெற்ற போலீஸ் இன்...
தமிழகம்
திண்டுக்கல் நகைக் கடையில் போலீசார் விசாரணை
திண்டுக்கல் : திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் நகையை திருடிய பட்டிவீரன்பட்டியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.குற்றவாளியுடன் திண்டுக்கல் நகைக் கடைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந் தவர் பைனான்ஸ் ராஜா(32). இவர் பல திருட்டு வழக்கு களில் கைது செய்யப்பட்டு கடந்த 2 ஆண்ட...
தமிழகம்
திருட்டு வழக்கில் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் வடக்கு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவேக்குமார் (25). இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்து சி.டி., பிளையர்களை திருடியுள்ளார்.நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் கைது செய்தார்.