category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பெண் தற்கொலை | திண்டுக்கல்: சீலப்பாடியை சேர்ந்த ஆவளி மனைவி சிவகாமி(32). உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்தார். இவரது வீட்டை ஒட்டிய பாதையில் சென்ற பாசஞ்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். எஸ்.ஐ., ராணி விசாரித்து வருகிறார். |
தமிழகம் | கஞ்சா வைத்திருந்தவர்கள் கைது | பழநி: பழநி அடிவாரம் போலீசார் எஸ்.ஐ., ஓம் பிரகாஷ் தலைமையில் ரோந்து சென்றனர். அடிவாரத்தைச் சேர்ந்த முருகன்(44), இவரது சகோ தரர் வாய்க்கால்சாமி(29) ஆகியோர், வரட்டாற்று பாலம் அருகே கஞ்சா வைத்திருந்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். |
தமிழகம் | வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ள தடுப்பணைக்கு: ரூ. 233 கோடி அனுமதி | திட்டக்குடி : வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ளத் தடுப்பணை அமைத்திட 233 கோடி ரூபாய் உலக வங்கி நிதியிலிருந்து அனுமதி பெறப்பட் டுள்ளதாக கண்காணிப்பு பொறி யாளர் நஞ்சன் தெரிவித்தார்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி மூலம் திட்டக்குடி, விருத் தாசலம் தாலுகாவை சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள்... |
தமிழகம் | வாகனங்கள் பறிமுதல் | பழநி: பழநி அருகே பாலசமுத்திரம் மந்தை குளத் தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டனர். தாசில்தார் மூர்த்தி தலைமையிலான வருவாய், போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்திற்குச் சென்றனர். மணல் திருட்டில் ஈடுபட்டோர், வாகனங்களை விட்டு தப்பியோடி விட்டனர். அங்கு இருந்த இரண்டு டிராக்டர்கள், ஒரு பொக்லைன் இயந்திரத்... |
தமிழகம் | கடலூர் மாவட்ட அரசுப் பணியாளர் பேரியக்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் | கடலூர் : அரசுப் பணியிடங்களில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட அரசு பணியாளர் பேரியக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.அரசுப் பணியாளர் பேரியக்கத்தின் மாவட்ட தலைவர் ராஜமச்சேந்திர சோழன் தலைமை தாங்கினார். செயலாளர் சரவண பெருமாள் முன்னிலை வகித்தார். இணை செயலா ளர் வீரக்குமார் வ... |
தமிழகம் | தென்மண்டல தடகள போட்டிக்கு இருவர் தேர்வு | திண்டுக்கல் : நாகர்கோவிலில் நடந்த மாநில ஜூனியர் தடகள போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்ற இருவர் வெற்றி பெற்றனர். பெண்களுக்கான 14 வயதிற் குட்பட்ட குண்டு எறிதல் போட்டியில் பல்குணி (சவுந்தரராஜா வித்யாலயா) 2வது இடத்தையும்,18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் எம்.எஸ்.பி., பள்ளி மாணவர் பிர... |
தமிழகம் | வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல் | கடலூர் : வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள் ளதை பயன்படுத்திக் கொண்டு பெயர் சேர்க்குமாறு அமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் 1.7.2010 அன்று வெளியிட் ட... |
தமிழகம் | வகுப்பு துவக்க விழா | திண்டுக்கல்: திண்டுக்கல் ஸ்ரீ சாய்பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. மாணவி திவ்ய விக்னேஷ் இறைவணக்கம் பாடினார். துணை முதல்வர் லாவன்யா வரவேற்றார். கல்லூரி செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார். தமிழ் பேராசிரியர் தங்கராஜ், நிர்வாக அலுவலர் பீட்டர... |
தமிழகம் | கல்வி வளர்ச்சி நாள் விழா | திண்டுக்கல்: சித்தையன்கோட்டை வித்ய சிக்ஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. முதல்வர் மனோஜ் தலைமை வகித்தார். துணை முதல்வர் பெலிக்ஸ் முன்னிலை வகித்தார். மாணவர்கள் ஜோதிராமலிங்கம், மகேஸ் வரி காமராஜர் குறித்து பேசினர். தீபன் பால்ராஜ் நன்றி கூறினார்.
* கள்ளிமந்தையத்தில் திருப்பதி அருள்நெறி மேல... |
தமிழகம் | ஜெ., தலைமையில் எம்.ஜி.ஆர்., ஆட்சி மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆசை | சேத்தியாத்தோப்பு : ஜெயலலிதா தலைமையில் எம்.ஜி.ஆர்., ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசினார்.கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை நிர்வாகிகள் தேர்வுக்கான ஆலோசனைக் கூட்டம் சேத்தியாத்தோப்பு கே.பி.டி. திருமண மகாலில் நடந்தது. மாவட்ட கழக செயலாளர் அருண்மொழித்த... |
தமிழகம் | ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் மனு | திட்டக்குடி : கருணை அடிப்படையில் கல்வித்துறையில் பணி நியமன ஆணையை வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப் பப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக ஓய்வு பெற்ற அலுவலர் கள் சங்கத்தின் திட்டக் குடி வட்டத்தலைவர் ராமசாமி முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக கல்வித்துறையில் கருணை அடிப்படையில் வேலை கோ... |
தமிழகம் | உலக மக்கள் தொகை தினவிழா | தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு மறவபட்டி குழந்தை இயேசு உயர்நிலை பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழா கொண்டாடப்பட்டது. மாணவ- மாணவி களுக்கு பேச்சு போட்டி நடந்தது.வெற்றி பெற்றவர் களுக்கு சிறப்பு பரிசு வழங்கப் பட்டது. பள்ளி நிர்வாகி ஏர்னஸ்ட் அந்தோணி, தலைமை ஆசிரியர் பெர்க்மான்ஸ்,வட்டார மருத்துவ அலுவலர் பகவதி,வட்டார விரிவாக்க கல்வி... |
இந்தியா | 4 நாள் குழந்தையின் உடல் உறுப்பு தானம் : அழியாப்புகழுடன் மண்ணை விட்டு சென்ற குழந்தை | ஐதராபாத் : நாட்டில் முதன் முறையாக, பிறந்து நான்கே நாட்களான குழந்தையின் கண் மற்றும் இதய வால்வுகள் தானம் செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தை சேர்ந்த ஹேமவதி மற்றும் கி÷ஷார் குமார் தம்பதியருக்கு, ஜூ லை 8ம் தேதி ஒரு பெண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தது. பிறந்து இரண்டு நாட்கள் வரை குழந்தைக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. மூன்றாம் ... |
தமிழகம் | ஆக்கிரமிப்புகள் அகற்றம் | குறிஞ்சிப்பாடி : வடலூர் பஸ் நிலையத்தில் நடை பாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.வடலூர் பஸ் நிலையத்தில் உள்ள நடை பாதைகளை கடை உரிமையாளர் கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை விரிவுபடுத்தி இருப்பதாகவும், இதனால் நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இதனைத்... |
தமிழகம் | போலீஸ் பணி ஆக. 8-ல் தேர்வு | திண்டுக்கல் : சீருடை தேர்வாணையம் மூலம் போலீஸ், தீயணை ப்பு துறை வீரர்களுக்காக எழுத்து தேர்வு ஆக. 8ல் நடக்கிறது.மாவட்ட அளவில் திண்டுக்கல்லில் தேர்வு மையங்கள் அமைக்கப் படுகின்றன. எம்.எஸ்.பி., மேல் நிலைபள்ளியில் மையம் அமைப்பதற்கான பணி யை முத்துச்சாமி எஸ்.பி., ஆய்வு செய்தார். |
தமிழகம் | மீன் பிடி தடை கால நிவாரண நிதியாக : மீனவர்களுக்கு ரூ.4.19 லட்சம் வழங்கல் | கிள்ளை : சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் மீன் பிடி தடை கால நிவாரண நிதியாக 524 குடும்பத்தினருக்கு 800 ரூ. வீதம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய் வழங் கப்பட்டது.கடலில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மீனவர்களுக்கு தடை கா... |
தமிழகம் | ஜூலை 30ல் குறைதீர் கூட்டம் | திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 30 (வெள்ளி) காலை 10 மணிக்கு நடை பெறும். ஜூன் 24ல் தரப்பட்ட மனுக்கள் மீது விவாதிக்கப் படும். இவ்வாறு கலெக்டர் வள்ளலார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். |
தமிழகம் | மூளைச்சாவில் இறந்தவரின் கண், இதயம், சிறுநீரகம் தானம் | வேலப்பன்சாவடி : டூவீலர் மோதி விபத்தில் சிக்கியவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், அவரது உடல் உறுப்புகள் நேற்று தானமாக கொடுக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் ஒண்டிகுடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன்(50). இவரது மனைவி ரேணு. இவர் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்ய... |
தமிழகம் | காட்டுமன்னார் கோவிலில் நாளை காஸ் நுகர்வோர் முகாம் | கடலூர் : காட்டுமன்னார்கோயிலில் காஸ் நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட் டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:காட்டுமன்னார்கோயில் தாலுகா அலுவலகத்தில் நாளை (24ம் தேதி) காலை 11 மணிக்கு டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமையில் காட்டுமன்னார்கோவில் வட்டத் திற்கான காஸ் நுகர்வோர் குற... |
தமிழகம் | தள்ளுபடியில் கம்ப்யூட்டர் விற்பனை | திண்டுக்கல் : திண்டுக்கல் டென்த் பிளானட் கம்ப்யூட்டர் ÷ஷாரூமில் ஆடி மாத சிறப்பு தள்ளுபடி விற் பனை துவங்கியுள்ளது. அனைத்து முன்னணி பிராண்டுகளான சோனி, தோஷிபா, ஏசர், டெல், எச்.பி., கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்களுக்கு சிறப்பு தள்ளுபடியும், எக் சேஞ்ச் சலுகையும் உண்டு. |
தமிழகம் | அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டி: 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் | கடலூர் : அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 30ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:கடலூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி வரும் 30ம் தேதி காலை 7 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.ஆண்... |
தமிழகம் | நியமனம் | கடலூர் : தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளர் சங்க மாநில இணை செயலாளராக கடலூர் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் மாவட்ட நிர்வாகிகளையும, முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். |
தமிழகம் | குப்பைக்குள் சிக்கித் தவிக்கும் கோயம்பேடு மார்க்கெட் | கோயம்பேடு : குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயலற்று போனதாலும், தனியார் நிறுவன வேலையாட்களின் மெத்தன போக்காலும், கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பைகள் மலைபோல் குவிகின்றன. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.சென்னை கோயம்பேடு மார்க்கெட், 295 ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழம் மற்றும்... |
தமிழகம் | செம்பாக்கம் - பல்லாவரம் இணைப்பு சாலைக்கு விமோசனம் | தாம்பரம் : செம்பாக்கம் - பல்லாவரம் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையில் 30 வருட போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையின் அனுமதி பெற்று துவக்கப்பட்ட சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் இச்சாலை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது.தாம்பரம் - வேளச்சேரி சாலையில் இருந்து செம்பாக்கம் சுரேந்தர் நக... |
தமிழகம் | போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் | பண்ருட்டி : பண்ருட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வடிவேல் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மோகன் குமார் வரவேற்றார். இதில் பண்ருட்டி டி.எஸ்.ப... |
தமிழகம் | டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் குடும்பத்தினருடன் மனித சங்கிலி | கடலூர் : தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் குடும்பத்துடன் மனித சங்கிலி போராட் டம் நடத்தினர். கடலூர் பெரியார் சிலையிலிருந்து புதுநகர... |
தமிழகம் | பொதுமக்களை அச்சுறுத்திய விஷவண்டுகள் அழிப்பு | பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பொதுமக் களை அச்சுறுத்தி வந்த விஷ வண்டுகளை தீயணைப்பு படையினர் அழித்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பால்வாதுண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் வீட்டு பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி இருந்தது. அதிலிருந்து வெளியேறிய வண்டுகள் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்ற... |
தமிழகம் | டெங்கு காய்ச்சல் கருத்தரங்கு | கடலூர் : கடலூரில் டெங்கு காய்ச்சல் குறித்த கருத்தரங்கு நடந்தது.கடலூர் புனித அன் னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் பிக் எப்.எம்., சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்த கருத்தரங்கு நடந்தது. எர்மின் இக்னேஷியஸ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., ஆசிரியை லில்லி கிறிஸ்டின் வரவேற்றார். என்.எஸ்.எஸ்., மா... |
தமிழகம் | போலீஸ் அவுட்போஸ்டுக்கு பூட்டு : கட்டபஞ்சாயத்து, திருட்டால் நோயாளிகள் தவிப்பு | ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் போலீஸ் அவுட்போஸ்ட் பூட்டியநிலையில் உள்ளதால், கட்டபஞ்சாயத்து செய்வோர் மோதல் , நோயாளிகளிடம் திருட்டு என பல்வேறு சம்பவங்கள் தொடர்கின்றன. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் கடந்த சில மாதங்களாக பூட்டியே உள்ளது. பாதுகாப்பு பணியிலும் போலீசார் இருப்பதி... |
தமிழகம் | குந்துகால் கடலில் இடித்த கட்டட குவியல்கள் பொலிவிழக்கும் விவேகானந்தர் மண்டபம் | பாம்பன் : இடித்த கட்டட குவியல்களை அகற்றாமல் கடலில் போட்டதால் , குந்துகால் விவேகானந்தர் நினைவு மணிமண்டம் பொலிவிழந்து வருவது சுற் றுலா பயணிகளை வேதனையடை செய்கிறது. சிக்காகோ சென்று சொற்பொழிவாற்றி இந்தியர்களுக்கு பெருமையை சேர்த்த சுவாமி விவேகானந்தர் , கப்பல் மார்க்கமாக பாம்பன் குந்துகால் வந்து சேர்ந்தார். அதன்பின் அவர் இந்த... |
தமிழகம் | ரூ.10 அபராதம் கொடுக்காத மாணவர்கள் வெளியேற்றம் | சாயல்குடி : சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் , 10ரூபாய் அபராதம் கொடுக்காததால் பள் ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் மாதிரி தேர்வு எழுத வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்தனர். தேர்வு எழுதிவிட்டு வகுப்பறைக்கு வரும் போது தமிழ் கட்டுரை நோட்டுகள் கிழிக்கப்பட்டு ... |
தமிழகம் | போலீசார் உத்தரவை மதிக்காத கட்டட தொழிலாளர்கள் | கீழக்கரை : கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கட்டட தொழிலாளர்கள் நிற்க போலீசார் தடை விதித்த நிலையிலும், மீண்டும் கும்பலாக நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,பள்ளி செல் லும் குழந்தைகள் சிரமமடைகின்றனர்.கீழக்கரையில் பிரதான சாலையாக உள்ள வள்ளல் சீதக்காதி சாலையில் காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை நூற்றுக்கணக்கான கட்டட ... |
தமிழகம் | ஊர் மக்களுடன் தகராறு: இருவர் கைது | பொங்கலூர் : பொங்கலூர் ஒன்றியம், வறக்குட்டைபாளையத்தில் ஊர் மக்களுடன் தகராறு செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.பொங்கலூர் ஒன்றியம், உகாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வறக்குட்டை பாளையத்தில் கோவில் கும் பாபிஷேகம் நடக்க உள்ளது. கோவில் யாக சாலைக்கு மண் எடுக்க ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி ... |
தமிழகம் | நகை கடையில் திருட்டு | முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே நேதாஜிநகரில் திலீப்குமார் என்பவர் நகை பட்டரை வைத்துள்ளார். இவரது கடையில் மர்ம நபர்கள் புகுந்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஏழு பவுன் நகைகளை திருடி சென்றனர். முதுகுளத்தூர் போலீசார் திருட்டு கும்பலை தேடி வருகின்றனர். |
தமிழகம் | சாலை பணியாளர்கள் கூட்டம் | சாயல்குடி : சாயல்குடியில் வட்டார சாலைப்பணியாளர்கள் கூட்டம் நடந்தது. 41 மாதகால பணி நீக்கத்தை பணிக்காலமாக அறிவித்து, அதற்கான பணத்தையும் தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார தலைவர் ராமசாமிதலைமை வகித்தார். செயலாளர்கள் திருப்பாண்டி, கணபதி முன்னிலை வகித்தனர். துணை செயலாளர்கள் கண்ணன், முத்துச்சாமி, துணைத்தலைவர்... |
தமிழகம் | மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது | அவிநாசி : மின் இணைப்புக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் அருகே பெருமாநல்லூர் - சந்தைக்கடை தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (63). இவர் பெருமாநல்லூரில் மூன்று கடைகளை கட்டிய பின், மே 19ம் தேதி மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தார். மின்வாரியத்துக்குச் செலுத... |
தமிழகம் | கட்டிய 5 ஆண்டில் இடிந்து விழுந்த தொகுப்பு வீடுகள் : தென்பொதுவக்குடி ஊராட்சியில் அவலம் | பரமக்குடி : தென்பொதுவக்குடி ஊராட்சியில் கட்டிய ஐந்து ஆண்டிகளிலே தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்ததால், பெரும்பாலோர் வீட்டை காலி செய்து மாற்று இடத்தில் குடிபெயர்ந்ததுள்ளனர் . பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட தென்பொதுவக்குடி ஊராட்சி தலைக்கால், தென்பொதுவக்குடி, ஆதிதிராவிடர் காலனி, கிறிஸ்டியன் குடியிருப்பு போன்ற பகுதிகளை உள்ள... |
தமிழகம் | உத்தரகோசமங்கை கோயில் : மண்டலாபிஷேக விழா | உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.இதை தொடர்ந்து 45 நாட்கள் பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று மண்டலாபிஷேகம் நடந்தது.மதுரை,ராமநாதபுரம்,பரமக்குடியிருந்து வந்த பரம்பரை ஸ்தானீகர்கள் நந்தி மண்டபத்தில் சுவாமிக்கு கும்பம் வைத்து பூஜைகள்,ஹோமங்கள் நடத்தினர்.பின் கலசத்தில் உள்ள புன... |
தமிழகம் | நிறுவனங்களில் பணியாற்ற நாளை நேரடி ஆட்கள் தேர்வு | ராமநாதபுரம் : கமுதி அருகே கேட்டைமேட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு பணிபுரிய நேரடி ஆட்கள் தேர்வு நாளை நடக்கிறது. மாவட்டத்தில் போகலூர், முதுகுளத்தூர், பரமக்குடி, கமுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஏழை குடும்பங் களை தேர்ந்தெடுத்து அவர்களின் வறுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் ஒர... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | ராமேஸ்வரம் ; ராமேஸ்வரத்தில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் சார்பில் இலங்கை கடற்படையின் அத்தமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம்நடந்தது. மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் சரவணன், மார்க்சிஸ்ட் தாலுகா தலைவர் கருணாகரன், ம.தி.மு.க.,மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் பேட்ரிக், பாம்பன் ... |
தமிழகம் | சஸ்பெண்ட் ஆசிரியருக்கு மீண்டும் பணி | ராமநாதபுரம் : சஸ்பெண்ட் செய்யப் பட்ட தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள் ளது. அழகன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் ராபர்ட் ஜெயராஜ். இவருக்கும் கல்வி துறைக்கும் இடையே பதவி உயர்வு தொடர்பாக சர்ச்சை எழும்பியது. இரண்டு கோஷ்டியாக செயல்பட்டு மோதல் சம்பவங்கள் நடந்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென... |
தமிழகம் | ஸ்டேஷன் மாஸ்டரால் தப்பிய சுற்றுலா பயணி | ராமேஸ்வரம் : மத்திய பிரதேசம் ஜபல்பூரிலிருந்து சில நாட்களுக்கு முன் ராமேஸ் வரத்திற்கு புறப்பட்ட சிறப்பு சுற்றுலா ரயிலில் , அதே ஊரை சேர்ந்த மதன்அகர்வால்(63) குடும்பத்துடன் வந்துள்ளார். நேற்று காலை 8.30 மணிக்கு மானாமதுரை வந்தடைந்த ரயில், அங்கிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி வந்தபோது மதன் அகர்வாலுக்கு நெஞ்சு வலி ஏற்... |
தமிழகம் | வீட்டில் "கைவரிசை' | கோத்தகிரி : கோத்தகிரியில், பூட்டியிருந்த வீட்டில், மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.கோத்தகிரி ராம்சந்த் ரைபிள் ரேஞ்ச் பகுதியை சேர்ந்தவர் விஜயன்; கிளப்ரோடு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்; இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பூட்டியிருந்து விஜயனின் வீட்டுக்குள், நேற்றுமுன்தினம்... |
தமிழகம் | கழிப்பறை வசதி இல்லை தொற்று நோயால் அச்சம் | கமுதி : கமுதி பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதியடைகின்றனர்.கமுதி பஸ்ஸ்டாண்டில் இலவச சிறுநீர் கழிக்கும் வசதி பேரூராட்சி நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுஇருந்தது.குறிப்பிட்ட காலத்தில் அக்கட்டடம் மராமத்து செய்யாமல் விடப்பட்டது.பஸ்ஸ்டாண்ட் உள்ளே செயல்பட்ட கட்டண கழிப்பறையும் சேதமடைந்தது . இதனால... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | ராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்து ம.தி.மு.க., சார்பில் ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். நகர் செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மண்டபம் ஒன்றிய செயலாளர் பேட்ரிக், மாவட்ட இளைஞரணி செயலாளர் குமரன... |
தமிழகம் | பண்ணையில் யானைகள் | குன்னூர் : குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நுழைந்த யானைகள், பயிர் நாற்றுகளை நாசம் செய்தன.குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் யானைகள், சமீபகாலமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உலா வரத்துவங்கியுள்ளன. சாலையில் உலா வரும் யானைகளை வனத்துக்குள் விரட்ட, வனத்துறையி... |
தமிழகம் | மன்றம் துவக்கம் | கோத்தகிரி : பார்டு வங்கி மற்றும் கோத்தகிரி சிண்டிகேட் வங்கி சார்பில், உழவர் மன்றம் துவக்கப்பட்டது. சிண்டிகேட் வங்கி ஊரக வளர்ச்சி அலுவலர் நித்தியானந்தன் வரவேற்றார். கிளை மேலாளர் ரங்கநாதன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ ஹெத்தையம்மன், மாதேஸ்வரா, பையங்கி, ஸ்ரீ கிருஷ்ணா உழ... |
தமிழகம் | பந்தலூர் தாலுகா போலீசார் மீது, மக்கள் அதிருப்தி | பந்தலூர் : பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், திருட்டு சம்பவங்கள் அதிகரித்தும், தேவாலா டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்காதது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட சுற்றுலா ஸ்தலங்களுக்கு, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகள் பெயர் பெற்றாலும், குற்ற நிகழ்வுகள் அதிகளவு அரங்கேறும் பகுதியாக உள்ளது பந்தலூ... |
தமிழகம் | உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் வரும் 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை | ஊட்டி : நீலகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களில் நான்கு வார்டுகளில், போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; மீதமுள்ள பதவியிடங்களுக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு, இடைத் தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டு, தேர்தல் ஆணைய... |
தமிழகம் | மருத்துவமனைக்கு "உயிர்' கொடுக்க ஆலோசனை | பந்தலூர் : பந்தலூர் அரசு மருத்துவமனையின் அவலம் குறித்து முறையிட, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.பந்தலூர் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் இல்லாததால், தாலுகா மருத்துவமனை பயனில்லாமல் உள்ளது. பந்தலூர் வட்டாரத்தில், அவசர சிகிச்சை தேவைப்படுவோர், கேரளா மாநில மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்... |
இந்தியா | சென்னை நிறுவனத்திடம் பெல்லாரி ஏர்போர்ட் | பெங்களூரு: பெல்லாரியில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை, சென்னை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும், என்று கர்நாடகா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கர்நாடகா அமைச்சரவை கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இக்கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் ஆச... |
தமிழகம் | ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் பரிதவிப்பு | திருப்புவனம் : திருப்புவனம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (தெற்கு) ஆசிரியர்கள் இன்றி, மாணவர்கள் பரிதவிக்கின்றனர். இங்கு 6, 7, 8ம் வகுப்பில் 60 மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ், ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர்கள் உள்ளனர்; கணிதம், அறிவியலுக்கு ஆசிரியர்கள் இல்லை.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு, காலி இடம் ஏற்பட... |
தமிழகம் | மாநில அணிக்கு மாணவிகள் தேர்வு | சிவகங்கை : மதுரையில், 19 வயதுக்கு உட்பட்ட, மாநில கூடைப்பந்து அணிக்கான தேர்வு நடந்தது. இதில் சிவகங்கை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முத்துலட்சுமி, கிருஷ்ணவேணி தேர்ச்சி பெற்றனர்; சென்னையில் நடக்கும் போட்டிகளில், மாநில அணி சார்பில் பங்கேற்பர். மாணவிகளை தாளாளர் மார்க்கரேட் சகாயமேரி, தலைமை ஆசிரியை பிரின்சிலி, ப... |
தமிழகம் | கிடப்பில் கனியன் பூங்குன்றனார் நினைவு மண்டபம் | திருப்புத்தூர் : திருப்புத்தூரில் புலவர் கனியன் பூங்குன்றனாருக்கு நினைவு மண்டபம் கட்டும் திட்டம் கிடப்பில் உள்ளதால், தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சங்க கால புலவர் கனியன் பூங்குன்றனார். இவரது புறநானூற்று பாடலான " யாதும் ஊரே யாவரும் கேர்' உலகளவில் பிரசித்தி பெற்றது. இவரது சொந்த ஊர் திருப்புத்தூர் அருகே மகிபாலன்ப... |
தமிழகம் | ஜந்தர் மந்தர் வினாடி-வினா "சட்டென்று' வந்தது பதில் | குன்னூர் : வினாடி -வினாப் போட்டியில், பள்ளி மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், துளிர், ஜந்தர் மந்தர் வினாடி-வினாப் போட்டி, குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவ... |
தமிழகம் | ரோட்டரி சங்க விழா | தேவகோட்டை : தேவகோட்டை ரோட் டரி சங்கம் சார்பில் நிர்வாகி ஷாஜகான் மற்றும் சேவுகன் அண்ணாமலை கல்லூரி துணை தலைவர் சேவுகன், மனைவி சாந்தி ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது.பேராசிரியர் முருகன் எழுதிய "மவுனத்தின் மொழி பெயர்ப்புக்கள்' என்ற நூல் வெளியிடப்பட்டது. தலைவர் அன்பரசு தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள், எதி... |
தமிழகம் | சீருடை வழங்கல் | தேவகோட்டை : தேவகோட்டை நண் பர்கள் நடையாளர் சங்கம் சார்பில், புளியால் அரசு உயர்நிலைப்பள்ளி, பெத்தாளாச்சி மேல்நிலைப்பள்ளி, என்.எஸ். எம்.வி.பி.எஸ்.பள்ளிகளில் இலவச சீருடை வழங்கப்பட்டது. தலைவர் குமரப்பன் தலைமை வகித்தார். செயலாளர் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார். பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்ற நகரத்த... |
தமிழகம் | ஆன்மிக சங்க கூட்டம் | காரைக்குடி : அனுமன் சக்தி ஜாக்ரன் சமிதி கூட்டம் காரைக்குடியில் நடந்தது.மண்டல செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். வரும் 28ம் தேதி மாவட்டத்திற்கு வரும் அகில இந்திய இணை செயலாளர் மிலின்த் பாண்டேவிற்கு வரவேற்பு அளிப்பது, வரும் 31, ஆக., 1ம் தேதி நடக்கவுள்ள இளைஞரணி முகாமில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட தலைவர... |
தமிழகம் | ஓட்டல்களில் உணவு விலை ஏறுமுகம் தயங்க வைக்கும் "பர்ஸ்' | காரைக்குடி : காரைக்குடி ஓட்டல்களில் சாப்பாடு விலை, நுகர்வோரை மலைக்க வைக்கிறது. நூறு ரூபாய் இருந்தால் மட்டுமே, ஒருவர் திருப்தியாக சாப்பிட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால், சாப்பாடு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்கின்றனர் ஓட்டல் உரிமையாளர்கள். காரைக்குடியில் 50 ஓட்டல்கள் உள்ளன. பெரிய ஓட்... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | கூடலூர் : சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, கூடலூரில் நடத்தப்பட்டது.ஊட்டி சமுதாய சேவா சங்கம் சார்பில், கூடலூர் நகராட்சி அலுவலகம் முன், சங்க நிர்வாகி மரியினி பேரணியை துவக்கி வைத்தார். விவசாய நிலங்களை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அரசு நிர்வாகத்தில் க... |
தமிழகம் | ரூ.17 லட்சத்தில் நிழற்குடை கோத்தகிரி பேரூராட்சி ஏற்பாடு | கோத்தகிரி : கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில், ரூ.17 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றது கோத்தகிரி பேரூராட்சி. தற்போது, மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நகரை மேம்படுத்த, பேரூராட்சி சார்பில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்ற... |
தமிழகம் | கிராம கோவில் பூஜாரிகள் பேரவை வரும் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் | ஊட்டி : கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம கோவில் பூஜாரிகள் பேரவையினர், வரும் 26ம் தேதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் நீலகிரி மாவட்ட அமைப்பாளர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் கோரிக்கைகளை, அரசுக்கு தார்மீக ரீதியில் தெரிவிக்க, மாநிலத... |
தமிழகம் | கவன ஈர்ப்பு பேரணி பணியாளர்கள் முடிவு | குன்னூர் : தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், குன்னூர் வி.பி., தெரு பழைய லாரி ஸ்டாண்டில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்; 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும்; கூட்டுறவு கடன் அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டு... |
தமிழகம் | 25ம் தேதி குருபூஜை | ஊட்டி : ஊட்டி தேவாங்கர் திருமண மண்டபத்தில், வரும் 25ம் தேதி குரு பூஜை நடத்தப்படுகிறது.பிற்பகல் 3.00 மணிக்கு நடத்தப்படும் குருபூஜையில், சதீஷ்குமார் தலைமை வகிக்கிறார். தர்ம ரக்ஷண சமிதி மாநில அமைப்பாளர் மணிகண்டன் பேசுகிறார். பக்தர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, கமிட்டியினர் மேற்... |
தமிழகம் | பள்ளி வளாகத்தில் இரவில் அரங்கேறும் அவலங்கள் | தேவதானப்பட்டி : சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன. தடுப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில்வார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கதிரப்பன் பட்டி, எருமலைநாயக்கன் பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களைச்... |
தமிழகம் | முதலுதவி பெட்டி திறப்பு | தேனி : தேனி ஆயுதப்படை வளாகத்தில் மட்டும் 250 போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. இரவு பகல் பணிக்கு சென்று வரும் போலீசார் மற்றும் டும்பத்தினர், பூச்சிகடி, வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற உபாதைகளால் அவதிப்படுகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சை பெற ஆறு கி.மீ., தூரம் தேனிக்கு வர வேண்டும். இந்த சிரமத்தை ஓரளவு குறைக்க சிறிய ரக உபாதைகள... |
இந்தியா | கர்நாடகாவில் பலத்த மழை | பெங்களூரு: பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை காணப்படுகிறது. சிர்சி, ஹூப்ளி-தார்வாட், ஹாசன், பாகல்கோட்டை, பதாமி, ஹாவேரி, ஷிமோகா, தீர்த்தஹள்ளி, கொப்பால், குடகு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ப... |
தமிழகம் | கரும்புள்ளி பட்டியலில் இருந்து நீக்க கிராம மக்கள் கோரிக்கை | கம்பம் : கரும்புள்ளி பட்டியலில் இருந்து தங்களது கிராமத்தின் பெயரை நீக்க வேண்டும் என போலீசார் நடத்திய குறைதீர் கூட்டத்தில் மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.ராயப்பன்பட்டி அருகே அணைப்பட்டி யில் போலீஸ் துறை சார்பில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமை வகித்தார். எஸ்.ஐ., ஞானசேகரன் முன்னிலை வகித்தார... |
தமிழகம் | தேனி போலீஸ் துறைக்கு விரைவில் இணையதளம் | தேனி : தேனி மாவட்ட போலீஸ் துறைக்கு தனி இணையதளம் தொடங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் மக்கள் கொடுக்கும் மனுக்கள், எஸ்.பி., டி.எஸ்.பி.,க்களிடம் கொடுக்கும் மனுக்கள், முதல்வர் தனிப்பிரிவில் இருந்து வரும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. இதற்காக மாவட்ட போலீஸ் ந... |
தமிழகம் | பெண்களுக்கு திருமண உதவி | தேனி : சமூக நலத்துறை சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2010-11 ம் நிதியாண்டிற்கு பொதுப்பிரிவின் கீழ் நான்கு கோடியே 95 லட்சம் ரூபாயும், சிறப்பு பிரிவின் கீழ் ஒரு கோடியே 24 லட்சத்து 25 ஆயிரம் உட்பட ஆறு கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு ... |
தமிழகம் | ஆண்டிபட்டி யில் தி.மு.க., வை தோற்கடிக்க அ.தி.மு.க., முடிவு | தேனி : ஆண்டிபட்டி தொகுதியில் தி.மு.க.,வில் யார் போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்ச் செல்வன் பேசினார். கடமலைகுண்டில் மத்திய அமைச்சர் அழகிரியை கண்டித்து ஜூலை 25 ல் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் நல்ல... |
தமிழகம் | கல் உடைக்க அனுமதி | தேனி : மாவட்டத்தில் கல்குவாரிகளில் கல் உடைக்கும் அனுமதி கேட்டு கலெக்டர் முத்துவீரனிடம், மகளிர் சுய உதவி குழுவினர் விண்ணப்பித்து இருந்தனர். இதை தொடர்ந்து மாவட்டத்தில், சொக்கதேவன்புரம் சிவகாமியம்மன் மகளிர் சங்கம், பிராதுகாரன்பட்டி செல்வவிநாயகர் மகளிர் சங்கம், டி.சுப்புலாபுரம் நாழிமலை மகளிர் சங்கம் ஆகியவற்றுக்கு அனுமதி அள... |
இந்தியா | அரவிந்தர் பொறியியல் கல்லூரியில் விருது வழங்கும் விழா | புதுச்சேரி : சேதராப்பட்டு அருகில் உள்ள அரவிந்தர் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு விருது வழங்கும் விழா நடந்தது.கல்லூரி தலைவர் நித்தியானந்தன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆண்டறிக்கை வாசித் தார். சிறப்பு விருந்தினரான புதுச்சேரி பொறியியல் கல்லூரி முதல்வர் பிருத்திவிராஜ், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்... |
இந்தியா | பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு | புதுச்சேரி : மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தவர் பலத்த அடிபட்டு இறந்தார். சேதராப்பட்டு மேட்டுத் தெருவில் வசித்தவர் பாலகிருஷ்ணன்(39). இவர் கடந்த 19ம் தேதி இரவு அங்குள்ள மெயின் ரோட் டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, கீழே விழுந்து விட்டார். பலத்த காயமடைந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ... |
இந்தியா | முத்தியால்பேட்டையில் அறிவோம் ஆன்மிகம் நிகழ்ச்சி | புதுச்சேரி : முத்தியால்பேட்டை சுபலட்சுமி திருமண நிலையத்தில் வரும் 25ம் தேதி 108வது அறிவோம் ஆன்மிகம் நிகழ்ச்சி நடக்கிறது.அன்று காலை 9 மணிக்கு வேத கோஷம், வேதவியாசர் பூஜை நடக்கிறது. காலை 9.15 மணிக்கு உலக நலன் கருதி 108 குத்து விளக்கு பூஜை, காலை 10 மணிக்கு சிறப்பு அறிவோம் ஆன்மிகம் நிகழ்ச்சி நடக்கிறது.லட்சுமிநாராயணன் எம்.எல... |
இந்தியா | பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கை 2ம் கட்ட கவுன்சிலிங் இன்று நடக்கிறது | காலாப்பட்டு : அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 46 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க் கைக்கான இரண்டாம் கட்ட கவுன் சிலிங் புதுச்சேரி பொறியியல் கல் லூரி வளாகத்தில் இன்று நடக்கிறது.அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க் கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங்,... |
இந்தியா | விருது வழங்கல் | புதுச்சேரி : சென்னையில் நடந்த விழாவில் கே.ஜி.இ., அன்டு ஆர்.ஆர்., ரியல் ஏஜன்சி உரிமையாளர்களுக்கு விருது வழங் கப்பட்டது.புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கே.ஜி.இ., அன்டு ஆர்.ஆர்., ரியல் ஏஜன்சி மனைப் பிரிவுகள் மூலமாக பல நகர்களை உருவாக்கப் பட்டு வருகிறது. சமீபத்தில் பாகூர் பரிக் கல்பட்டில் அதிர்ஷடம் நகர் மனைப்பிரிவு துவங்கியத... |
இந்தியா | புதுச்சேரி - கடலூர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் | புதுச்சேரி : நைனார்மண்டபம் நாக முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தையொட்டி கடலூர் சாலையில் இன்று போக்குவரத்தில் மாற் றம் செய்யப்பட் டுள்ளது. இது குறித்து போக்குவரத்து எஸ்.பி., பழனிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி - கடலூர் சாலை நைனார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் மற்றும் கொம் பாக்கம் வில்லியனூர்... |
இந்தியா | அறிவியல் ஆய்வறிக்கை தயாரிப்பு: ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் | காரைக்கால் : புதுச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் கல்வித் துறை சார்பில் அறிவியல் ஆய்வறிக்கை தயார் செய்யும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமில் அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒர... |
இந்தியா | ஓ.என்.ஜி.சி., சார்பில் ரூ.33 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல் | காரைக்கால் : காரைக்காலில் உள்ள ஓ.என். ஜி.சி., சார்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்காக 33 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.காரைக்கால் நிரவியில் மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என். ஜி.சி.) உள்ளது. அகில இந்திய அள வில் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் லாபத்தில் 2 சதவீதம் தொகை நலத் திட்ட உதவிகள் வழங்கவும்,... |
இந்தியா | மக்கள் தொகை நாள் விழா | புதுச்சேரி : நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில் உலக மக்கள்தொகை நாள் விழா கொண்டாடப்பட்டது.தமிழாசிரியர் சதீஷ் வரவேற்றார். தலைமையாசிரியர் பரமசிவ அய்யர் தலைமை தாங்கினார். பள் ளியில் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் குழுக்களையும், பள்ளிக்கான சுற்றுச்சூழல் விதிகளையும் ஆசிரியை புவனேஸ்வரி அறிமுகம் செய்து... |
தமிழகம் | மக்களின் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு எப்போது பஸ் வசதி இல்லாததால் கூரை மேல் பயணம் | சின்னமனூர் : ஹைவேவிஸ் மலைப்பகுதியில் போதுமான மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர். இவர்களின் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமலேயே உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடமாக கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ஹைவேவிஸ் மலைப்பகுதி. இதனை சுற்றி மேகமல... |
தமிழகம் | பெண்ணிடம் கொலுசு திருட்டு | பெரியகுளம் : பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த சிவசக்தி மனைவி வைரமணி (22). இவர், கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையன்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது இவரது மகளின் வெள்ளி கொலுசை, அல்லிநகரம் பட்டாளம் மன் கோயில் தெருவைச் சேர்ந்த நாகம்மாள் (55) திருடியுள்ளார். பக்தர்கள் நாகம்மாளை பிடித்து தென்கரை போலீசாரிடம் ... |
இந்தியா | பாம்பு கடித்து சிறுமி பலி | புதுச்சேரி : செங்கல் சூளை அருகே விளையாடிய சிறுமி பாம்பு கடித்து இறந்தார். வம்புபட்டு கிராமத்தில் வசிப்பவர் மோகன்; செங்கல் சூளை தொழிலாளி. இவரது மகள் அனிதா(4) நேற்று முன்தினம் காலை 6 மணியவில் சூளைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து விட்டது.உயிருக்கு ஆபத் தான நிலையில் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்... |
தமிழகம் | பள்ளி மாணவி கடத்தல் நான்கு பேர் மீது வழக்கு | பெரியகுளம் : பெரியகுளத்தில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கடத்திய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். பெரியகுளம் பட்டாளம்மன் கோயில்தெருவைச் சேர்ந்த குமார் மகள் சத்யா (16). இவர், பத்தாம்வகுப்பு படித்து வந்தார். சத்யாவின் தந்தை குமார் மற்றும் தாயார் ராணி கரகாட்டம் ஆடும் தொழில் செய்து வந்தனர்.... |
தமிழகம் | சட்டசபை தேர்தலை மிஞ்சிய நகராட்சி வார்டு இடைத்தேர்தல் | விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சி வார்டு இடைத்தேர்தல், சட்டசபை தேர்தலை மிஞ்சும் வகையில் இலவசங்களுடன் படு சூப்பராக அரங்கேறியது.விழுப்புரம் நகராட்சி 27வது வார்டு இடைத்தேர்தல் நேற்று நடந்தது. சுயேச்சை வேட்பாளர் சதீஷ்பாபு, தி.மு.க., வேட்பாளர் அருணாசலத்திற்கும் நேரடி போட்டி நிலவியது. முன்னதாக மாவட்டம் முழுவதும் நடந்த உள்ளாட்... |
இந்தியா | மின்சாரம் தாக்கி ஊழியர் பலி | புதுச்சேரி : மின்சாரம் தாக்கி பாப்ஸ்கோ ஊழியர் இறந்தார்.முதலியார்பேட்டை மொட்டை படையாட்சி தெருவில் வசித்தவர் கதிர்வேல்(28). பாப்ஸ்கோ ஊழியரான இவர், காலையில் குளித்துவிட்டு, ஈரத்துணியுடன் மின் விசிறியை ஆன் செய்துள்ளார். அப் போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. ஆபத்தான நிலையில் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழிய... |
தமிழகம் | தற்கொலை | தேனி : போடி பாரதிநகரை சேர்ந்தவர் முருகன் (33). இவருக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. இந்த ஏக்கம் காரணமாக மனம் உடைந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முருகன் மனைவி ரமாதேவி (28) கொடுத்த புகாரில் போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | டிரைவர்கள் மீது வழக்கு | தேனி : கம்பம் அரசு போக்குவரத்துக்கழக டெப்போ முன்பாக இருந்த மின் கம்பத்தில் பஸ் மோதியதில் மின்கம்பம் பலத்த சேதம் ஏற்பட்டது. மின்வாரிய உதவி பொறியாளர் அருள் கொடுத்த புகாரில் கம்பம் போலீசார் டிரைவர் அருண்ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனியில் ரோடு தடுப்புகளின் மீது பஸ் மோதியது. இது பற்றி நெடுஞ்சாலைத்துறை உதவிப்ப... |
இந்தியா | குளத்தில் இறந்து கிடந்தவர் யார் | புதுச்சேரி : குளத்தில் இறந்து கிடந்தவர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர். கிருமாம்பாக்கத்தில் வசித்தவர் ஜெகநாதன் (50). இவர் அப்பகுதியில் உள்ள கருமாதி கொட்டகை அருகே உள்ள சாவடி குளத்தில் இறந்து கிடந்தார். இவர் எப்படி இறந்தார் என தெரியவில்லை. கிருமாம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | நாளை கிரிக்கெட் அணி தேர்வு | தேனி : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறும் அணி தேர்வு நாளை மாலை 3 மணிக்கு ஸ்ரீரேணுகா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. 1996 செப்டம்பர் முதல் தேதிக்கு பின் பிறந்தவர்கள் கிரிக்கெட் சீருடையில் வயது சான்றிதழுடன் பங்கு பெற வே... |
இந்தியா | பெண்ணை தாக்கியவர் கைது | புதுச்சேரி : பெண்ணை செருப்பால் அடித்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மடுகரையை சேர்ந்தவர் கோமதீஸ்வரி (38). இவர் இரு தினங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள ஏரியில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சங்கர்(39) என்பவர் கோமதீஸ்வரியிடம் தகராறு செய்து அவரை செரு... |
இந்தியா | போலீஸ்-பொது மக்கள் நல்லுறவு கூட்டம் | புதுச்சேரி : பட்டாசுக் கடைகளில் சந்தேகப்படும்படியான புதிய நபர்கள் பட்டாசு வாங்கினால் தகவல் தெரிவிக்க வேண்டும் என எஸ்.பி., தெய்வசிகாமணி அறிவுறுத்தியுள்ளார்.அரியாங்குப்பத்தில் போலீசார் மற்றும் கிராமப்புற பொது மக்கள் இடையே நல்லுறவுக் கூட்டம் நடந்தது. தவளக் குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்... |
தமிழகம் | கலெக்டர் அலுவலக வளாகத்தில் கேரள "மர்ம கார்' | தேனி : கலெக்டர் அலுவலகத்தில் கேரள பதிவு எண் கொண்ட மர்ம கார் ஒன்று நின்று நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் கேண்டீன் செல்லும் பாதையில் அரசு வாகனங்கள் நிறுத்தப்படும் பகுதியில் மர்ம கார் ஒன்று இருபது நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருக்கிறது. சிகப்பு நிறத்திலான இந்த மாருதி சுசுகி காரில... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு | தேனி : உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று அமைதியாக நடந்தது. ஆண்டிபட்டி ஒன்றியம் மரிக்குண்டு சிற்றூராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. மொத்த ஓட்டுகள் 2542ல் 2,058 ஓட்டுகள் பதிவானது. ஆண்கள் 990, பெண்கள் 1068 பேர் ஓட்டளித்தனர். மொத்தம் 81 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது. தேனி ஒன்றியம் தாடிச்சேரி சிற்றூராட்சியில்... |
தமிழகம் | பள்ளியில் திருட்டு | தேனி : வீரபாண்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டர் உபகரணங்களை திருடிச் சென்று விட்டனர். தலைமை ஆசிரியர் ராயப்பன் கொடுத்த புகாரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். |
தமிழகம் | குளிக்க சென்ற பெண் மாயம் | சின்னமனூர் : குச்சனூரை சேர்ந்த முகமதுஸ்தபா மகள் பாத்திமாபீவி (25). இவருக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் ஆகிறது. இந்நிலையில் பெரியாற்றில் குளிக்கச் சென்ற பாத்திமாபீவி வீடு திரும்பவில்லை. இவர் காணாமல் போனது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | ரேஷன் அரிசி பறிமுதல் | கூடலூர் : லோயர்கேம்ப் போலீஸ் ஸ்டேஷன் அருகே சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து, போலீசார் ஜெயசீலன், ரவிராஜா ஆகியோர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மினி லாரி சென்றுகொண்டிருந்தது. இதனை நிறுத்தி சோதனை செய்த போது 20க்கும்மேற்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மினிலார... |
தமிழகம் | விழுப்புரம் ரயில் நிலைய பாதுகாப்பு: தென்மேற்கு ரயில்வே அதிகாரி ஆய்வு | விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.தென்மேற்கு ரயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சாதனங்கள் குறித்து நேற்று ஆய்வு செய்தனர். தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் ... |
தமிழகம் | வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு | விழுப்புரம் : அனுமதியின்றி மணல் எடுத்தவரை தடுத்த வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல் லூர் அடுத்த டி.எடையார் மலட்டாற்றில் அனுமதியின்றி இரவு நேரங்களில் மணல் எடுப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உளுந்தூர்பேட்டை வன அலுவலர் சுதாகர் தலைமையி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.