category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பதவி உயர்வு தூத்துக்குடி கூட்டத்தில் வலியுறுத்தல்
தூத்துக்குடி : உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக மாற்ற வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டன. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் (ஏ.இ.ஓ) சங்க தூத்துக்குடி மாவட்ட கிளைக் கூட்டம் மாநில...
தமிழகம்
மாற்றுத்திறனாளிக்கு லேப்-டாப் வழங்கல்
கரூர்: கண்பார்வையற்ற கல்லூரி மாணவர் பூபதிக்கு, 38 ஆயிரம் மதிப்புள்ள, பார்வையற்றோர் பயன்படுத்தும் லேப்-டாப்பை கரூர் கலெக்டர் வழங்கினார். கம்ப்யூட்டரை பெற்ற மாணவர் பூபதி கூறியதாவது: நான் சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் இரண்டாமாண்டு ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். வெள்ளியணை கிராமத்தைச் சேர்ந்த நான் 2008-09ம் கல்வியாண்டில் ப்...
தமிழகம்
கரூரில் தெய்வத் திருமண விழா ஸ்ரீ மகா அபிஷேக குழு ஏற்பாடு
கரூர்: கரூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு சார்பில், ஸ்ரீ கல்யாண பசுபதீவஸ்வர ஸ்வாமி கோவிலில், தெய்வத் திருமண விழா ஆகஸ்ட் முதல் தேதி சிறப்பாக நடக்கிறது. ஜூலை 31 மாலை 4 மணிக்கு கணபதி வழிபாடு, கரூர் ஸ்ரீ பெருமாள் கோவிலுக்கு பெண் வீட்டு சீர் தட்டு அழைக்கப் புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு பெருமாள் கோவிலிலிருந்து, ஆயி...
தமிழகம்
டூவீலர் விபத்தில் ஒருவர் பரிதாப பலி
கும்பகோணம்: கும்பகோணம் பெரியதம்பிநகரை சேர்ந்த  சங்கரன்(42). இவர் கும்பகோணம் ஆயிகுளம் ரோட்டில் மருந்துகடை நடத்தி வந்தார்.இவர் கடந்த 16ம் தேதி இரவு 10 மணியளவில் மருந்துக்கடையை பூட்டிவிட்டு ஹோண்டா டூவீலரில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, நால்ரோடு அருகே டூவீலரில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடன் கும்பகோண...
தமிழகம்
கரூர் மாவட்டத்தில் 3 பஞ்., தலைவர் 2 கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல்
கரூர்: கரூர் மாவட்டத்தில் காலியாக இருந்த மூன்று பஞ்சாயத்து தலைவர்  மற்றும் இரண்டு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. அரவக்குறிச்சி பஞ்சாயத்து ஒன்றியம், சேந்தமங்கலம் மேற்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நஞ்சுண்டேஸ்வரர், ரவீந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு மொத்தமுள்ள 1,884 ஓட்டுகளில், 1,633 ...
தமிழகம்
பாபநாசம் அருகே புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை
பாபநாசம்: பாபநாசம் அருகே சீதாலெட்மிபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் தனலெட்சுமி (25). இவருக்கும் விருத்தாசலம் திட்டக்குடியை சேர்ந்த ஆசிரியர் வடிவேலுக்கும் ஒரு மாதம் முன் திருமணம் நடந்தது. இருவரும் திட்டக்குடியில் குடும்பம் நடத்தினர்.தனலெட்சுமி திட்டக்குடியில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார்...
தமிழகம்
தென்னிலை அருகே 150லிட்டர் பதுக்கல் டீஸல் அதிரடி பறிமுதல்
க.பரமத்தி: தென்னிலை அருகே ஹோட்டல்களில் பதுக்கி வைத்திருந்த 150 லிட்டர் டீஸலை மாவட்ட வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர். தென்னிலை அருகே அமிர்தபுரியில் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு உணவகங்கள்  உள்ளன.  இங்கு கரூரிலிருந்து திருப்பூர், கோவை  செல்லும் லாரிகளை நிறுத்தி, டிரைவர்கள் சாப்பிடுவர். அப்போது, லாரியிலுள்ள க...
தமிழகம்
குளித்தலை அருகே ஒருவர் தற்கொலை
குளித்தலை: குளித்தலை பெரியபாலம் பரிசல் துறை அருகேவுள்ள தோப்பிலுள்ள மரத்தில் நேற்று ஒருவர் தனது வேட்டியில் தூக்கிலிட்டு இறந்த நிலையில் தொங்கினார். தகவலறிந்த அப்பகுதி வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், குளித்தலை போலீஸார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், தற்கொலை செய்...
தமிழகம்
தமிழ் பல்கலையில் ஆட்சிமன்ற கூட்டம்
தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில் துணை வேந்தர் ராசேந்திரன் தலைமையில் ஆட்சிமன்றக்குழு கூட்டம் நடந்தது.தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் எழிலரசு, உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் குணசேகரன், உறுப்பினர் எம்.எல்.ஏ., துரைசந்திரசேகரன், வளர்தமிழ் புலத்தலைவர் ச...
தமிழகம்
கைத்தறி, விசைத்தறி தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர் நல வாரியத்தில், அனைத்து தொழிலாளரையும் உறுப்பினராக சேர்ப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., முனிரத்தினம் முன்னிலை வகித்தார். கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒன்பது புதிய நலவாரியங்களி...
தமிழகம்
மாஜி அலுவலர் சங்கம் தர்ணா போராட்டம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் காலை பத்து முதல் மதியம் ஒரு மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ருத்ராபதி தலைமை வகித்தார். மாவட்ட துணைத...
தமிழகம்
திருடர்கள் கைது
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டையில் 12 பவுன் திருட்டு நகைகளை வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். லாலாப்பேட்டை கடைவீதியில் நேற்றுமுன்தினம் இரவு சந்தேகத்துக்கு இடமான வகையில் இரண்டு பேர் சுற்றித்திரிந்தனர். அவர்கள் தங்களிடமிருந்த 12 பவுன் தங்க நகைகளை, விற்பதுக்கு முயற்சிப்பதை பார்த்த சிலர் லாலாப்பேட்டை போலீஸாருக்கு தக...
தமிழகம்
ஆர்.டி., மலையில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண் திட்ட விளக்கம்
குளித்தலை: தோகமலை பஞ்சாயத்து யூனியன், ஆர்.டி.மலை பஞ்சாயத்து அலுவலகத்தில், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்ட விளக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன், வேளாண் உதவி இயக்குனர் காதர் மொஹைதீன் முன்னிலை வகித்தனர். புழுதேரி சரஸ்வதி வேளாண் அறிவியல் மைய ஒருங்கிண...
தமிழகம்
மகளிர்குழு ஒரு நாள் கருத்தரங்கம்
கும்பகோணம்: கும்பகோணம் ஸ்டார் மனிதநேய சங்கத்தில் நகராட்சி பகுதி மகளிர் குழுக்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.கும்பகோணம் ஸ்டார் மனிதநேய சங்கத்தின் மேற்பார்வையில் கும்பகோணம் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பயனாளிகள் மற்றும் மகளிர் குழுவினருக்கான ஒரு நாள் கருத்தரங்கம் ஸ்டார் ஐ.டி.,...
தமிழகம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க காலக்கெடு நீட்டிப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: ஜூலை 1 முதல் 16ம் தேதி வரை பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளுதலுக்கான படிவம் 6, 7, 8 மற்றும் 8 "ஏ' படிவம் அளிக்க தேர்தல் கமிஷன் கால நிர்ணயம் செய்திருந்தது.தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்...
தமிழகம்
லாரி டிரைவர் தற்கொலை
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்  ரெங்கராஜ் (35). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வந்து இவரது மனைவி கமலாவிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு போதையில் கமலாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ரெங்கராஜை, இவரது மனைவி கமலா திட்டியுள்ளார். இதனால் ம...
தமிழகம்
மனிதச்சங்கிலி போராட்டம்
தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். எட்டு மணி நேர வேலை வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு, வாகனங்களில் வந்து வசூல் பணத்தை டாஸ்மாக் நிறுவனம் பெற்றுச் செல்ல வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையி...
தமிழகம்
பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
பெரம்பலூர்: திருச்சியில் ஆக., 24ம் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்பது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் இளவழகன் தலைமை வகித்து பேசியதாவது: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்பட...
தமிழகம்
தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் சென்னையை சேர்ந்த ஆப்செக்ட் பிரான்டர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் சார்பில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. கேம்பஸ் இன்டர்வியூவை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீலராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் ...
தமிழகம்
மாணவ, மாணவிகளுக்கு மூலிகை செடி வழங்கல்
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு எஸ்.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆயிரத்து 820 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூலிகை ஆராய்ச்சி அபிவிருத்தி அறக்கட்டளை சார்பில் மூலிகை செடிகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், உதவித்தலைமை ஆசிரியர் இளங்கோவன், சித்த மருத்துவர்கள் வெங்கடாசலம், சண்...
தமிழகம்
8ம் வகுப்பு மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல உத்தரவு
ஈரோடு: கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்.ஸி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மையின (முஸ்லிம்) பிரிவை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியரை மூன்று நாள் சுற்றுலா அழைத்து செல்ல, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்துடன் இணைந்து, சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்...
தமிழகம்
மேலப்பெருமழைக்கு உத்தமர் காந்தி விருது : மக்கள் ஒத்துழைப்புடன் பஞ்., தலைவர் சாதனை
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டை யூனியனைச் சேர்ந்த மேலப்பெருமழை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1,100 பேர் வசிக்கின்றனர். ராஜமாணிக்கம் 1996ல் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராக வென்றபோது, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ஒழித்தார். 2001ம் ஆண்டு...
தமிழகம்
மக்கள் சேவகர் விருது வழங்கல்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் தென்னக நண்பர்கள் கலை பண்பாட்டுக்கழகம் சார்பில் மக்களுக்கு சேவையாற்றி பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு மக்கள் சேவகர் விருது வழங்கும் விழா திருத்துறைப்பூண்டியில் நடந்தது. பண்பாட்டுக்கழக தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி  ராம்கியான் மற்றும...
தமிழகம்
தி.பூண்டி இடைத்தேர்தல் : பெண்கள் அதிக ஆர்வம்
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து 17வது வார்டு இடைத்தேர்தலில் 78 சதவீதம் ஓட்டு பதிவாகின. ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் ஓட்டளித்து உள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி யூனியனில் 12 பஞ்சாயத்தும், முத்துப்பேட்டை யூனியனில் 14 பஞ்சாயத்தும் அடங்கிய 17வது வார்டில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. ஆ...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் 26 தனி சிகிச்சை பிரிவு போர்டில் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் "ஷாக்'
நங்கவள்ளி: ஜலகண்டபுரம் அரசு தலைமை மருத்துவமனை போர்டில் 26 தனி சிகிச்சை பிரிவுகள் இருந்தபோதிலும், மருத்துவமனையில் அதுபோன்று எதுவும் இல்லாதது நோயாளிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜலகண்டபுரத்தில் சேலம்-மேட்டூர் மெயின்ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை போர்டில் விபத்து, அவசர சிகிச்சை பிரிவ...
தமிழகம்
ஏற்காட்டில் வாலிபர் மாயம்
சேலம்: ஏற்காட்டில் மாயமான வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். ஏற்காடு அருகே செம்மநத்தம் பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டி. அவரது மகன் மணிகண்டன்(18), அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வேலைக்கு சென்று வந்தார். ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், அவரை பெற்றோர் திட்டினர். கோபித்து கொண்ட மணிகண்டன் வீட்டை விட்...
தமிழகம்
ஆக., 6ல் சேலம் பார் அசோசியேஷன் தேர்தல்
சேலம்: சேலம் பார் அசோசியேஷன் தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. சேலம் பார் அசோசியேன் தலைவராக ராஜசேகரன், செயலாளராக விவேகானந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. 2010-12ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. தலைவராக சீனிவாசன், பொன்னுசாமி ஆகியோர் போட்டியிடுக...
தமிழகம்
காவிரியாற்றில் ஆகாய தாமரை ஆக்ரமிப்பு : வலைபோட முடியாமல் மீனவர்கள் அவதி
மேட்டூர்: மேட்டூர் அணை அடிவாரம் முதல் செக்கானூர் கதவணை தடுப்பு மின் உற்பத்தி நிலையம் வரை நான்கு கி.மீ., தூரம் காவிரியாற்றில் மீனவர்கள் பலர் இரவில் வலை போட்டு அதிகாலையில் வலையை எடுத்து, அதில் சிக்கியுள்ள மீன்களை பிடிப்பது வழக்கம். தவிர வலைவீசியும் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிப்பது உண்டு. தற்போது காவிரியாற்றில் ஆகாயதாமரை அ...
தமிழகம்
ஆடி பெருக்கு நாளில் கூடுதல் நீர் திறப்பு காவிரி கரையோர பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மேட்டூர்: ஆடிபெருக்கு அன்று டெல்டா மாவட்ட மக்கள் உறவினர்களுடன் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடுவர். ஆடிபெருக்கு பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட காவிரியாற்றில் கூடுதல் நீர்திறக்க வேண்டும் என்பது காவிரி கரையோர மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. காவிரி கரையோர மக்களின் பாரம்பரிய விழா ஆடிபெருக்கு எனப்படும் ஆடி18 பண்டிகையாகு...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மாணவர்களை பயன்படுத்தும் ஆசிரியர்
பனமரத்துப்பட்டி: வகுப்பை புறக்கணித்து விட்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியருடன் மாணவர்கள் ஜாலியாக ஊர் சுற்றுகின்றனர். தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. கணக்கெடுக்கும் பணியில் துவக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுப...
தமிழகம்
வரும் 27ம் தேதி இயற்கை மருத்துவ முகாம்
உடன்குடி : உடன்குடி அருகே குலசேகரன்பட்டணத்தில் வரும் 25ம் தேதி முதல் 7 நாள் வரை இயற்கை மருத்துவ முகாம் நடக்கிறது.குலசேகரன்பட்டணம் இயற்கை வாழ்வு நிலையத்தின் சார்பில் வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை 7 நாள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. முகாமில் இயற்கை உணவின் நன்மை குறித்து இயற்...
தமிழகம்
பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்: 27ல் முடிவெடுக்கிறது ஏ.ஐ.சி.டி.இ.,
சென்னை: தமிழக பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங் கள், புதிய பாடப் பிரிவுகள் குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., சென்னையில் வரும் 27ம் தேதி முடிவு எடுக்கிறது. ஏ.ஐ.சி.டி.இ.,யின் தென்மண்டல தலைவர் மன்னர் ஜவகர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரிகள் கூடுதல் இடங்கள், புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதி கேட்டு ஏ.ஐ.சி.டி.இ.,க்...
தமிழகம்
செட்டிகுளம் பஞ்., தலைவருக்கு பாராட்டு விழா
சாயர்புரம் : தமிழக அரசின் உத்தமர் காந்தி விருது பெற்றுள்ள திருப்பணிசெட்டிகுளம் பஞ்., தலைவர் சுயம்புலிங்கத்திற்கு பாராட்டு விழா நடந்தது.சிறந்த மற்றும் புதுமையான முயற்சிகளை செயல்படுத்தும் கிராம பஞ்.,களை தேர்ந்தெடுத்து அவற்றின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வகையில் உத்தமர்காந்தி விருது வழங்கப்படும் என்றும், இதற்காக ஆண்டுதோறும்...
தமிழகம்
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி : தூத்துக்குடியில், தூத்துக்குடி மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் நடந்தது.மாணவ, மாணவியரின் பேரணியை தூத்துக்குடி கலெக்டர் பிரகாஷ் ராஜாஜி பூங்காவிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்த விவர அட்டைகளை கையில...
தமிழகம்
காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி
உடன்குடி : மணப்பாடு பள்ளி பேச்சு போட்டியில் சுழற் கோப்பையை வென்றது. நாலுமாவடி காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 108 வது பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டிகளை எஸ்.ஜி.எஸ். ,நிறுவனம் நடத்தியது. இப்போட்டியில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 12ம் வகுப்பு மாணவி யுமேகா, 9ம் வகுப்பு மாணவர் பெர்னாட்ஷா ஆகியோர்...
தமிழகம்
கோவில்பட்டியில் தூய்மை விழிப்புணர்வு முகாம்
கோவில்பட்டி : கோவில்பட்டி அரசு பள்ளி மாணவிகள் சார்பில் ரயில் பயணிகள் தூய்மை விழிப்புணர்வு முகாம் நடந்தது.கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ். திட்டம் சார்பில் ரயில் பயணிகளுக்கான தூய்மை விழிப்புணர்வு முகாம் நடந்தது. தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மருத்துவத்துறை முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் ஆலோசனையில் நடந்த ...
தமிழகம்
உலக ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக ரத்த நன்கொடையாளர் தினம் 2010 சிறப்பிக்கும் பொருட்டு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கு நடந்தது.தூத்துக்குடி ராஜாஜி பூங்காவிலிருந்து பேரணியை தூத்துக்குடி மாவட்ட கலெக்...
தமிழகம்
ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்
தூத்துக்குடி : ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் சேது, ஏஐடியுசி.,மாவட்டச் செயலாளர் தமிழரசன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ரத்தினம், பலவேசம், காசிலிங்கம், நட்டார், உலகநாதன், மகாராஜன், கந்தம்மாள், குண...
தமிழகம்
கிராமங்களில் கருப்புகொடி ஏற்றும் போராட்டம்
கோவில்பட்டி:கோவில்பட்டியில் இளையரசனேந்தல் பிர்காவில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து ஐந்து நாட்கள் கிராமங்களில் கருப்புக்கொடியேற்றும் போராட்டம் நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தின் கடைசி எல்லையாகவும், கோவில்பட்டி நகருக்கு மிக அருகில் தூத்துக்குடி மாவட்டத்தின் துவக...
தமிழகம்
பொறுப்பேற்பு
தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மண்டல டி.எஸ்.பி.,யாக முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மண்டல டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தவர் மணிவண்ணன். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பணிமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ராமநாதபுரம் டவுன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த முருகேசன் ...
தமிழகம்
மருத்துவர் சமூக சங்க கூட்டம்
பெரியதாழை : தமிழக மேல்சபையில் மருத்துவர் சமூகத்திற்கு எம்.எல்.சி.பதவி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தின் தட்டார்மடம் கிளை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தட்டார்மடத்தில் சங்கத்தின் கிளை உறுப்பினர்கள் கூட்டம் தாலுகா தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடந்தது. கிளைத் தலைவர் சித்திரைவேல் முன்னி...
தமிழகம்
அன்பின்நகர் ரோட்டை சீரமைக்க கோரிக்கை
பெரியதாழை : தட்டார்மடம் அருகேயுள்ள அன்பின்நகர் கிராம இணைப்பு ரோட்டினை பழுதுபார்க்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக் கை மனு அனுப்பியுள்ளனர்.இந்த இணைப்பு ரோடு கடந்த மாதத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தார்ரோடாக மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 கிலோ மீட்டர் தூரமுள்ள ரோட்டின் இருபுறமும் உடை மரங்கள் வளர...
தமிழகம்
நிர்மல் புரஸ்கார் விருது மத்திய குழு ஆய்வு
செய்துங்கநல்லூர் : கருங்குளம் யூனியன் பஞ்.,களை மத்திய அரசு ஆய்வுக்குழு பார்வையிட்டது.சிறந்த கிராம பஞ்.,களுக்கு மத்திய அரசு நிர்மல் புரஸ்கார் என்ற விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதை ஜனாதிபதி கிராம பஞ்.,தலைவர்களுக்கு மத்தியஅரசு விழாவில் வழங்கி வருகிறார். இந்த விருதைப் பெற இந்த ஆண்டு கருங்குளம் யூனியனில் இரண்டு பஞ்.,...
தமிழகம்
தேசிய ஜுடோ சாம்பியன் போட்டி கேவிஎஸ்., பள்ளி சாதனை
தூத்துக்குடி : தேசிய ஜுடோ சேம்பியன்ஷிப் தேர்வு போட்டியில் தூத்துக்குடி கே.வி. எஸ்., பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.தேசிய ஜுடோ சாம்பிய ன்ஷிப்பிற்கான போட்டி கரூர் மாவட்டத்தி ல் உள்ள குளித்தலையில் நடந்தது. தேசிய அளவிலான போட்டியில் தூத்துக்குடி கேவிஎஸ்., பள்ளியைச் சேர்ந்த ஸ்டீபன் ஜேசுதாஸ் இரண்டாம் இடத்தை பெற்றார். பிரசாந்...
தமிழகம்
வேம்பார் இளைஞர் காங்.,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வேம்பாரில் இளைஞர் காங்., சார்பாக காமராஜரின்  பிறந்த நாள் விழா நடந்தது.முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் இளைஞர் காங்., தலைவர் குணசேகரன், துணைத் தலைவர் ஜெயந்தி, செயலாளர் ஆரோக்கியம், மாணவர் காங்....
தமிழகம்
கடம்பூர் நகர காங்.,
கடம்பூர் நகர காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு இளைஞர் காங்., கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். உடையார் பாண்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துரையப்பன் காங்., கொடி ஏற்றினார். அய்யலுசாமி பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார். மூக்கைய...
தமிழகம்
செந்தூரில் விழிப்புணர்வு பேரணி
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் ஸ்கேடு கல்வி நிறுவனம் இணை ந்து திருச்செந்தூரில் மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள் கல்வி அறிவு பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேரணி நடந்தது. திருச்செந்தூர்...
தமிழகம்
எட்டயபுரம் சிகேடி பள்ளி
எட்டயபுரம் சிகேடி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைவர் பாலகிரு ஷ்ணன் அறிவுறுத்தலில் மாணவர்களுக்கு ஓவிய மற்றும் பேச்சுப் போட்டிகள் நடந்தது. பள்ளி மாணவி ராம்பிரியா வரவேற்றார். இந்திய தேசிய காங்., தூத்துக்குடி மாவட்ட த்தின் தலைவரும், கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளருமான கத...
தமிழகம்
காமநாயக்கன்பட்டி அரசுப்பள்ளி
காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்லம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் மணித்துரை முன்னிலை வகித்தார். விழாவில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ...
தமிழகம்
தூத்துக்குடி பிஎம்சி பள்ளி
பி.எம்.சி மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பி.எம்.சி பள்ளிகளின் நிர்வாகி ஜோசப் ஜான் கென்னடி தலைமை வகித்து, காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். தலைமை ஆசிரியை செல்வசீலி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற நடனம், குறுநாடகம் போன்ற க...
தமிழகம்
விளாத்திகுளம், புதூரில் வரும் 27ம் தேதி மதிமுக., கொடிப்பயணம், பொதுக்கூட்டம்
விளாத்திகுளம் :  விளாத்திகுளம் மற்றும் புதூர் யூனியனில் மதிமுக., கொடிப்பயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். விளாத்திகுளம் யூனியன் மதிமுக., மற்றும் புதூர் யூ னியன் மதிமுக., சார்பில் ம திமுக., கொடிப்பயணம் ம ற்றும் பொதுக்கூட்டம் வரு ம் 27ம் தேதி நடக்கிறது. இதில் மதிமுக., ...
தமிழகம்
தினமலர் செய்தி எதிரொலி: முதியவர் உடல் அடையாளம் தெரிந்தது
கோவில்பட்டி : கோவில்பட்டியில் கார் மோதி இறந்தவரின் உறவினர்கள் தினமலர் செய்தியை பார்த்து கோவில்பட்டி போலீசா ரை தொடர்பு கொண்டு உடலை பெற்றுச் சென்றனர்.கோவில்பட்டி கூடுதல் பஸ் ஸ்டாண்ட் முன் பு கடந்த சில தினங்களுக்கு முன் மதுரை வண்டியூரைச் சேர்ந்த பூல்பா ண்டி என்பவர் ஓட்டி வந்த கார் மோதி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி...
தமிழகம்
பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்
நாசரேத் : நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.பள்ளி முதல்வர் வில்சன்டேனியல் தலைமை வகி த்து வரவேற்றார். தலைமை ஆசிரியர் தாஸ், பொருளா ளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ தில் 600க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
மான் சர்வோர் கண்காட்சி
தூத்துக்குடி : தூத்துக்குடியில் மான் சர்வோர் நிறுவனத்தின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.கண்காட்சியில் ரேமண்ட்ஸ் மற்றும் அரவிந்த் மில்லின் முக்கிய தயாரிப்புகளான ஆண்களுக்கு என்று தயாரி க்கப்பட்ட நூறு சதவீதம் காட்டன் சர்ட் அன்ட் பே ண்ட், எக்ஸ்போர்ட் டிக்ஜாக் சர்டிங்ஸ் மற்றும் ரெடிமேட் சர்ட், டவுசர், ஜீன்ஸ் கண்காட்சி...
தமிழகம்
விபத்து ஏற்படுத்திய வழக்கு ஒருவருக்கு 6 மாத சிறை
கோவில்பட்டி : கோவில்பட்டியில் கார் ஓட்டிச் சென்றபோது விபத்து ஏற்படுத்தியதாக ஒருவருக்கு கோவில்பட்டி கோர்ட் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.கோவில்பட்டி அருகேயுள்ள கீழஈரால் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா மகன் மாரியப்பன்(45). இவர் கடந்த 13.7.07 அன்று மாலையில் தனது மகன் கஜேந்திரனுடன் கீழஈரால் அரசு ஆஸ்பத்திரி அருகே...
தமிழகம்
நாசரேத் ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரம் குறைப்பு
நாசரேத் : நாசரேத் ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு நேரம் குறைப்பால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.நாசரேத் ரயில்வே ஸ்டேஷனில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 4 மணி வரையும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரையும் முன...
தமிழகம்
சுங்கம் அருகில் "சுரங்கம்'
கோவை: கோவையில் சாக்கடை குழி தோண்டியபோது சுரங்கம் போன்ற அமைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை சுங்கம் அருகில் பொக்லைன் கொண்டு கழிவுநீர் வெளியேற்ற பள்ளம் தோண்டும் பணி நேற்று நடந்தது. தோண்டிய இடத்தில், சுரங்கம் போன்ற பாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செங்கற்களால் அமைக்கப்பட்டிருந்த அந்த பாதை, ஒரு கோபுர வளைவு போன்ற...
தமிழகம்
புதுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண்மை மருந்தகம்
தூத்துக்குடி : புதுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.6லட்சம் செலவில் வே ளாண் மருந்தகம் மண் பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி சரக துணை ப்பதிவாளர் முத்துகிருஷ்ணன் சங்கத்தின் மண்பரிசோதனை கூடத் தை பார்வையிட்டு சங்கத்திற்கு வந்துள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து சங...
தமிழகம்
ரத்ததான முகாம்
உடன்குடி : கூத்தன்குழி பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.கூத்தன்குழி பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்.குழு, திருநெல்வேலி அரசு மருத்துவர் கல்லூரியின் இரத்த வங்கி குழு, திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவக் குழுவும் இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது. திருநெல்வேலி அரசு ரத்த...
தமிழகம்
பழைய நேரப்படி டவுன் பஸ்சை இயக்க வேண்டும்
தூத்துக்குடி :   தூத்துக்குடி புதிய துø றமுகம் வழியாக செல்லும் டவுன் பஸ்சினை பழைய நேரப்படி இயக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளருக்கு துறைமுக மேல்நிலைப்பள்ளி தலை மை ஆசிரியர் அனுப்பியுள் ள கோரிக்கை மனுவில் க...
தமிழகம்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்கியின் நிகர லாபத்தின் வளர்ச்சி 57.94 சதவீதம்
தூத்துக்குடி  :  தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்கின் நிகர லாபத்தின் வளர்ச்சி 57.94 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி நாகமால் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;30.6.2009 சென்ற காலாண்டு நிதிநிலைமை கணக்குகளுடன் ஒப்பிடும்போ...
தமிழகம்
ஹோலி கிராஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் ஆங்கிலமொழி கருத்தரங்கம்
சாயர்புரம் : வாகைக்குளம் அருகே உள்ள ஹோலி கிராஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆங்கிலத்தில் திறம்பட தொடர்பு கொள்வது எப்படி என்ற தலைப்பில் ஐந்து நாள் கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கிற்கு கல்லூரி நிர்வாக இயக்குநர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் வக்கீல் ராஜரத்தினம் முன்னில...
தமிழகம்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடி :    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.மாதந்தோறும் 500 ரூபாய் மருத்துவப்படி, மருத்துவ சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய், கம்யூட்டேசன் பிடித்தத்தை 12 ஆண்டுகளாக குறைத்தல், அரசாணை 371 அமுலாக்கம், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் போன்றவற்றின் விலையை குறைக்க வ...
தமிழகம்
ரத்தவகை கண்டறிதல் முகாம்
தூத்துக்குடி : கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் சார்பில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். முகாமை ரோட்டரி சங்கத் தலைவர் ரஜினிகாந்த் துவக்கி வைத்தார். ரோட்டரி சங்கச் செயலர் நாராயணசாமி மற்றும் ரோட்ராக்ட் தலைவர் ஆசியா ஃபாம்ஸ் பாபு முன்னிலை வ...
தமிழகம்
செந்தூர் தாலுகா ஆபிசை மீனவர்கள் முற்றுகை
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் பள்ளி நில பிரச்னையில் பங்கு தந்தையை விசாரணை செய்ய போலீசார் அழைத்து சென்றதால் ஆத்திரமடைந்த மீனவ மக்கள் தாலுகா ஆபிஸை முற்றுகையிட்டனர்.திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை மீனவ கிராமத்தில் நடுநிலைப்பள்ளிக்கு நான்கரை ஏக்கர் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒ...
தமிழகம்
இலவச நோட்டு புத்தம் வழங்கும் விழா
ஓட்டப்பிடாரம் : நாகலாபுரம் ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி செயலாளர் ராம்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். புதூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வேல்முருகன் மாணவ, மாணவிகளுக்கு இலவ...
தமிழகம்
சாத்தை.,யில் சாலைப் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணிநீக்க காலத்தில் உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும். கூட்டுறவு கடனுக்கான வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்திட வ...
தமிழகம்
மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் பிச்சையா தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். முந்தின கூட்டத்தின் நிகழ்வுகள் வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. நடக்க உள்ள 14வது மாவட்ட மாநாட்டுக்கான ஆண்டறிக்கை முன் வடிவு ஒப்புக் கொள்ளப்பட்டது. நடை...
தமிழகம்
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தேரியூர் அணிக்கு முதல் பரிசு
உடன்குடி : உடன்குடியில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற தேரியூர் அணிக்கு எஸ்.டி.ஆர்.விஜயசீலன் பரிசு வழங்கினார். முன்னாள் முதல்வர் காமராஜரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு உடன்குடி இளைஞர் காங்.,சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நான்கு நாட்கள் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து 32 அணிகள...
தமிழகம்
வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
பெரியதாழை : தட்டார்மடம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வே லைவாய்ப்பிற்கான வழிகாட்டும் பயிற்சி முகாம் நடந்தது.கல்லூரி செயலர்ஆனந்தா அமிர்தம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் நாகராஜன் வரவேற்றார். பாபநாசம் நீதிபதி ராமலிங்கம் கலந்து கொண்டார். நிர்வாகவியல் து றைத்தலைவர் மகேஷ்கு...
தமிழகம்
ஆறுமுகநேரி பகுதியில் முறையற்ற மின்தடையால் மக்கள் அவதி
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி பகுதியில் அறிவிக்கப்பட்ட மின்தடை நேரத்தை முறையாக கடைபிடிக்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என திருச்செந்தூர் வட்டார காங்.,தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து திருச்செந்தூர் வட்டார காங்.,தலைவர் தங்கமணி மின்வாரிய மாவட்ட கண்காணிப்பாளர், மற்றும் உ...
தமிழகம்
இருபெரும் விழா
உடன்குடி : பரமன்குறிச்சியில் இளைஞர் காங்., சார்பில் இருபெரும் விழா நடந்தது.பரமன்குறிச்சி பஞ்.,இளைஞர் காங்.,தலைவர் ரா ஜாசிங் ஏற்பாட்டில், முன்னாள் முதல்வர் காமராஜரின் 108வது பிறந்த நாள்விழா, காங்.,கட்சியில் 125 வது ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா பரமன்குறிச்சி மெயின் பஜாரில் நடந்தது. பரமன்குறிச்சி கிராம கமிட்டி காங்.,தலை...
தமிழகம்
சங்கரன்கோவிலில் இன்று தேரோட்டம்
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று(23ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது.தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் "சங்கரரும், நாராயணரும் ஓன்று' என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் பொருட்ட...
தமிழகம்
விளாத்திகுளத்தில் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
விளாத்திகுளம் : விளாத்திகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ.,(எம்.எல்.) கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.விளாத்திகுளம் ஒன்றிய சிபிஐ(எம்.எல்) கட்சிக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சண்முகப் பெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில் மா வட்ட செயலாளர் பொன்ராஜ் கலந்து கொண...
தமிழகம்
தொழிலாளி வீடு சூறை மூன்று பேர் கைது
திருநெல்வேலி : பேட்டையில் கடன் தகராறில் தொழிலாளி வீட்டை சூறையாடியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.பேட்டை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மிக்கேல்(50). இவர் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். அதே பகுதியை சேர்ந்த சமுத்திரப்பாண்டி(54), முருகன்(45), நரிக்குறவர் காலனியை சேர்ந்த சண்முகவேல்(50) சம்பவத்தன்று தன் வீட்ட...
தமிழகம்
புல்தோட்ட சுத்திகரிப்பு ஆலை இடமாற்றம்
தூத்துக்குடி : புல்தோட்டம் பகுதியில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறுஇடத்திற்கு மாற்ற உத்தரவிட்ட தமிழக அரசுக்கு மக்கள் பாதுகாப்பு இயக்கம் சா ர்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 20வது வார்டில் உள்ள புல்தோட்டத்தில் பாதாள சாக்கடை திட் ட கழிவு நீர் மற்றும் கழிவுகளை சுத்திகரிப்...
தமிழகம்
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரன்ட் அமைப்பினர் கைது
திருநெல்வேலி : நெல்லையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டனர்.கோயம்புத்தூரில் கடந்த 2006ம்ஆண்டு ஜூலை 22ம்தேதி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த உளவுத்துறை உதவிகமிஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்வது, பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ...
தமிழகம்
முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
திருநெல்வேலி : பாளை. அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.பாளை. ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் ஆழ்வார்(70). வாட்ச்மேன். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டும் பிரச்னை தீரவில்லை. மனமுடைந்த ஆழ்வார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ...
தமிழகம்
கோவில்பட்டியில் பைக் எரித்த வழக்கு 4 பேர் கைது போலீசார் தீவிர விசாரணை
கோவில்பட்டி:கோவில்பட்டியில் ஹோட்டலில் சாப்பிடச் சென்றவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை பெரிதாகியதில் மோட்டார்பைக் தீø வத்து கொளுத்தப்பட்டது. இதுகுறித்து மூன்று தரப்பிலிருந்து புகார் பெற்றுள்ள போலீசார் நான்கு பேரை கைது செய்ததுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி பாரதிநகர்...
தமிழகம்
பாளை.யில் கல்லூரி மாணவர்கள் மனிதச்சங்கிலி
திருநெல்வேலி : பாளை. சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி இயக்கம் நடத்தினர்.கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அப்துல்கரீம் தலைமை வகித்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் மீரான் முகைதீன் கொடியசைத்து துவக்கிவைத்தார். மாவட்ட செஞ்சுருள் கழக மேலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். கல்லூரி ...
தமிழகம்
கோவில்பட்டியில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் உண்ணாவிரதம்
கோவில்பட்டி:  கோவில்பட்டியில் போலீஸ் அதிகாரிகளை கண்டித்து வக்கீல் சங்கத்தினர் திடீர் உண்ணாவிரம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கோவில்பட்டியில் சிவி ல் வழக்கு சம்பந்தமாக செயல்பட்டு வரும் வக்கீல் மோகன்தாஸ் என்பவரது அலுவலகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு வக்கீல் அலுவலகத்தில் இரு ந்த அவரது உறவி...
தமிழகம்
ராதாபுரத்தில் காமராஜர், கக்கன் சிலைகள் நிதி திரட்ட காங்., நிர்வாகிகள் முடிவு
திருநெல்வேலி : ராதாபுரம் பஸ்ஸ்டாண்டில் காமராஜர், கக்கன் சிலைகளை அமைக்க நிதி திரட்ட காங்., முடிவு செய்துள்ளது.ராதாபுரம் பஸ்ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும், அங்கு காமராஜர், கக்கன் சிலைகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி  தியாகி சுடலைமுத்து நாடார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். நெல்லை மாவட்டத்தில் காங்., ஆலோசன...
தமிழகம்
கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி : கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி தாலுகா ஆபிஸ் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாள...
தமிழகம்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் எட்டாம் நாள் கொடைவிழா
ஏரல்  :  குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் எட்டாம் நாள் கொடைவிழா நடந்தது.புகழ்பெற்ற கோயிலான குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் கடந்த வாரம் ஆனி பெருந்திருவிழா நடந்தது. இதைத் தொடர்ந்து எட்டாம் நாள் கொடைவிழா நடந்தது. அன்று காலை நாதஸ்வர இன்னிசை கூட்டு வழிபாடு நடந்தது. மதியம்  சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்க தலைவர் முத்...
தமிழகம்
அரசியல் கட்சிகள் இன்று நெல்லை ஆற்றில் அஞ்சலி
திருநெல்வேலி : நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல்கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் இன்று (23ம்தேதி) அஞ்சலி செலுத்துவதையொட்டி போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 99ம்ஆண்டு ஜூலை 23ம்தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நெல்லையில் கலெக்ட...
தமிழகம்
பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி : நெல்லையில் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காலியிடங்களை நிரப்புவது, உதவியாளர் காலியிடங்களை குரூப் 2 மூலம் ஒரே முறையில் நியமிப்பது, கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்குவது, கருணை அடிப்படையில் நியமனம் பெற்றவர்களை பணிவரன்முறைப...
தமிழகம்
விவசாயம், நெசவு ஆசிரியர்கள் நியமிக்க தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் பள்ளிகளில் விவசாயம், நெசவு, மரவேலை பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில கவுரவத்தலைவர் சுவாமிநாதன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பிய மனு: மாநிலம் முழுவதும் ஓவியம், தையல்...
தமிழகம்
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஓட்டுகள் போடாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 18 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 66 பேர் போட்டியிட்டனர். ஏற்கனவே 22 பேர் போட்டியின்றி தே...
தமிழகம்
பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் திறன் மேம்பாடு பள்ளிகளில் இன்று கிராம கல்வி குழு தினம்
திருநெல்வேலி : பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் திறன் மேம்பாட்டை வெளிப்படுத்த பள்ளிகளில் இன்று (23ம் தேதி) கிராம கல்வி குழு தினம் கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் கிராம கல்வி குழு சீரிய முறையில் பணியாற்றி வருகிறது. மாணவர்களுக்கு தரமான கல்வி...
தமிழகம்
பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம் : இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பேட்டி
திருநெல்வேலி : அரசியலை சேவையாக கருதி இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரி வேந்தர் கூறினார்.இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பரவலாக செயல்பட்டு வந்த பாரி நற்பணி மன்றம் இந்திய ஜனநாயக கட்சியாக மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி...
தமிழகம்
சத்துணவு உதவியாளர், அங்கன்வாடி பணியாளர் இன சுழற்சி முறையில் நியமனம் செய்ய உத்தரவு
திருநெல்வேலி : சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன சுழற்சி முறையில் நியமனம் செய்யப்படுகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட மையங்களில் அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள்  மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணி இட...
தமிழகம்
பத்திரிக்கை, டிவி பணியாளர்களுக்கு கட்டண சலுகை : பாரதியார் பல்கலை.,யில் 2 பட்டங்கள்
திருநெல்வேலி : பாரதியார் தொலை தூர கல்வியில் பத்திரிக்கை, டிவி பணியாளர்ளுக்கு கல்வி கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 2 பட்டங்கள் பெறும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலைக் கழக தொலை தூர கல்வியில் 2010ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 15 பிரிவுகள் கொண்ட 2 ஆண்டு கால எம்.பி.ஏ படிப்...
தமிழகம்
வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை திட்டம் உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டுகோள்
திருநெல்வேலி : வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை திட்டத்தின் கீழ் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற்று வரும் பயனாளிகள் ஆண்டிற்கு ஒரு முறை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சுய உறுதிமொழி ஆவணத...
தமிழகம்
ஏழ்மையிலும் சாதனை படைத்த., பள்ளி மாணவர் இன்ஜினியரிங் சேர முடியாமல் பரிதவிப்பு
திருநெல்வேலி : ஏழ்மையிலும் சாதனை படைத்த பாளை பள்ளி மாணவர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் பாட பிரிவில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.பாளை சிவன் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் லட்சுமணன். புக் பைண்டிங் தொழில் செய்து வரும் இவர் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவசுப்பிரமணியன் பாளை...
தமிழகம்
ரூ.42.40 லட்சத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் கிருஷ்ணாபுரம் கோயிலில் நாளை திறப்பு விழா
திருநெல்வேலி : கிருஷ்ணாபுரம் கோயிலில் 42.40 லட்சத்தில் கட்டப்பட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா நாளை (24ம் தேதி) நடக்கிறது. இதில் சபாநாயகர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயிலில் 20 லட்சம் செலவில் 10 பக்தர்கள் தங்கும் அறைகள், 7.60 லட்சத்தில் மினி பஸ் நிறுத்துமிடம், தலா 4.80 லட்சத்தில...
தமிழகம்
எதிர்காலம் வேண்டுமென்றால் இந்திய ஜனநாயக கட்சிக்கு வாருங்கள் : நிறுவனத்தலைவர் அழைப்பு
திருநெல்வேலி : இளைஞர்கள், படித்தவர்கள், பெண்களுக்கு தான் இந்திய ஜனநாயக கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் பேசினார்.இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் பாளை.மார்க்கெட் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் ராஜன் தலைமை வகித்தார். அகில இந்த...
தமிழகம்
தம்பிதோப்பு ஸ்டாபில் அரசு பஸ்களை நிறுத்த கோரி பொதுமக்கள் மறியல்
களக்காடு : களக்காடு தம்பிதோப்பு ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நிற்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.களக்காடு, சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் தம்பிதோப்பு ஊர் அமைந்துள்ளது. இந்த வழியாக சென்ற அரசு பஸ்கள் தம்பிதோப்பு ஸ்டாப்பில்  நின்று செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக இந்த ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நிற்காமல் ...
தமிழகம்
விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் களக்காடு யூனியன் சேர்மன் கோரிக்கை
களக்காடு : களக்காடு யூனியன் பகுதியில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க மாவட்ட கலெக்டருக்கு யூனியன் சேர்மன் கோரிக்கை விடுத்துள்ளார்.களக்காடு யூனியன் சேர்மன் தமிழ்செல்வன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: களக்காடு யூனியனிற்குட்பட்ட  மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். இப்பகுதியில் ...
தமிழகம்
காதுகேளாதோர் பள்ளி அருகே மெயின்ரோட்டில் ஓடும் கழிவுநீர் : தொற்றுநோய் அபாயம்
திருநெல்வேலி : பாளை., காதுகேளாதோர் பள்ளி அருகே மெயின் ரோட்டில் சாக்கடை கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பாளை., திருவனந்தபுரம் ரோட்டில் காதுகேளாதோர் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகில் உள்ள மத்திய சிறைக் காவலர் குடியிருப்பில் மொத்தம் 36 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் உள்ள கழிவு நீர் ...
தமிழகம்
குற்றாலத்தில் சாரல் திருவிழா போட்டி வரும்25ம்தேதி துவக்கம்
திருநெல்வேலி : குற்றாலத்தில் சாரல் திருவிழா விளையாட்டு போட்டிகள் வரும் 25ம்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது.தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் சாரல் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா போட்டிகள் வரும் 25, 26, 30 மற்றும் 31ம்தேதிகளில் நடக்கிறது.ஆணழகன் ப...