category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சிதம்பரம் மாரியம்மன்கோவில் கொடியேற்றம்
சிதம்பரம்:சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீ மிதி விழா கடந்த 23ம் தேதி கொடியோற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி நாளை தெருவடைச்சானும், ஆகஸ்ட் 1ம் தேதி தேர் வீதியுலாவும், இரவு காத்தவராய சுவாமி கழுவேறும் நடக்கிறது. 2ம் தேதி தீ மிதி உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி காலை 5 மணி முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால் காவ...
தமிழகம்
கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது.சேர்மன் கெய்க்வாட் பாபு தலைமை தாங்கி 90 கர்ப்பிணிகளுக்கு தலா 6,000 ரூபாய் வீதம் 5 லட் சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கினார். நிகழ்ச்சியில் இன்ஜினியர் புவனேஸ்வரி, மேற்பார் வையாளர் வாசு, எழுத்தர் பாபு, மேலாளர் சிவசங்கரன்...
தமிழகம்
தே.மு.தி.க., பழைய நிர்வாகிகள் புறக்கணிப்பு:கள்ளக்குறிச்சியில் கோஷ்டி பூசல்
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பகுதியிலுள்ள பழைய தே.மு. தி.க., நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக் கப் படுவதாக அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர். இதே நிலை நீடித்தால் கட்சியில் கோஷ்டி பூசல் உச்சக்கட் டத்தை எட்டும் நிலை உருவாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜயகாந்த் முதன் முதலில்...
இந்தியா
பளுதூக்குதல் அமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை
புதுடில்லி : பெண்கள் ஹாக்கியை தொடர்ந்து, இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பிலும் செக்ஸ் சர்ச்சை வெடித்துள்ளது. ஜூனியர் வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர் ரமேஷ் மல்கோத்ரா, செக்ஸ் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஒலிம்பிக் நட்சத்திரம் மல்லேஸ்வரி புகார் கூறினார். இதையடுத்து மல்கோத்ரா "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அடுத்து பொது செயலர் சகதேவ்...
தமிழகம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
திண்டிவனம்:திண்டிவனம் கிடங் கல்-2 பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதித்த குடும் பத்தினருக்கு அ.தி.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.தீ விபத்தில் பாதித்த 23 குடும்பங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய், வேஷ்டி, சேலை, பாத்திரங்கள், 25 கிலோ அரிசி ஆகியவற்றை அ.தி.மு.க., சார் பில் முன்னாள் அமைச்சர் சண்முகம் வழங்கினார். நகர ச...
தமிழகம்
திருக்கல்யாணம்
திருவெண்ணெய் நல்லூர்:திருவெண்ணெய் நல்லூர் அடுத்த சி.மெய்யூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.திருவெண்ணெய்நல் லூர் அடுத்த சி.மெய்யூர் அலமேலுமங்கை சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு அலங்கார திருமஞ்சனமும், சுதர்சனஹோமம் நடந்தது. தொடர்ந்து...
தமிழகம்
மடத்தில் புகுந்து நகைகளை கொள்ளையடிக்க முயற்சி : பெண் பணியாளர் கொலை; குற்றவாளியும் பலி
தாம்பரம் : சேலையூர் அகோபில மடத்தில் நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்த மர்ம நபர், பெண் பணியாளரை தாக்கி கிணற்றில் தள்ளி, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். அந்த நபரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். தாம்பரத்தை அடுத்த சேலையூர், ஆர்த்தி நகரில் அகோபில மடம் உள்ளது. இங்கு கடந்த ஏழு ஆண்டுகளாக சின்ன காஞ்சிபுரம், பிருந்த...
தமிழகம்
விலைவாசி உயர்வு பிரச்னை:கவர்னரிடம் கோரிக்கை மனு
விழுப்புரம்:இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலக் குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.நேற்று நடந்த இரண் டாம் நாள் கூட்டத் திற்கு மாநில செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சுசீலா முன்னிலை வகித்தார். இந்திய கம்யூ., மாநில துணைச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி, மாநில பொரு ள...
தமிழகம்
அரசு புற்றுநோய் மருத்துவமனை முன் பஸ் நிற்காததால் நோயாளிகள் அவதி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் மருத்துவமனை முன் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்லாததால் நோயாளிகள் அபே ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காரப்பேட்டை கிராமம். இங்கு அறிஞர் அண்ணா அரசு...
தமிழகம்
திண்டிவனத்தில் தீ விபத்து:15 வீடுகள் எரிந்து சாம்பல்
திண்டிவனம்:திண்டிவனத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 15 வீடுகள் எரிந்து சாம்பலானது. அமைச்சர் பொன்முடி நேரில் சென்று தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தங்கம் என்பவரது வீட்டில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தன...
தமிழகம்
வெட்ட வெளியில் வீணாகும்:ரிஷிவந்தியம் கோவில் தேர்
தியாகதுருகம்:ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 12.5 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட தேர் வெட்டவெளியில் நிறுத் தப்பட்டுள்ளது. இதனால் தேர் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கடந்த 2007ம் ஆண்டு திருவிழாவின் போது தேர் குடை சாய்ந்து சேதமடைந்தது. புதிதாக தேர் வடிவமைத்துத் தரக்...
தமிழகம்
எலவனாசூர்கோட்டைபள்ளியில் கண் சிகிச்சை
உளுந்தூர்பேட்டை:எலவனாசூர் கோட்டை வினாயகா மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.உளுந்தூர்பேட்டை சத்யசாயிசேவா சமிதி சார்பில் எலவனாசூர் கோட்டை வினாயகா மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் சாவித்திரி கலியமூர்த்தி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.கோவை சங்கரா கண் மருத்துவமனையை...
தமிழகம்
ஓட்டுச்சாவடி அளவிலானஅலுவலர்களுக்கு பயிற்சி
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் ஓட்டுச்சாவடி அளவிலான அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தது.கள்ளக்குறிச்சியில் வாக்காளர் பட்டியலில் 6,7,8,8ஏ படிவங்களை இறுதி படுத்துவது குறித்து ஓட்டுச் சாவடி அளவிலான அலுவ லர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தது. ஆர். டி.ஓ., நாக பூஷண ராஜூ, தாசில்தார் மணி, தேர்தல் துணை தாசில்தார் மணி க...
தமிழகம்
அரசு விடுதியில்மாணவர் சேர்க்கை
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நலதுறையின் கீழ் இயங்கும் விடுதிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு நடந்தது.உளுந்தூர்பேட்டையில்நடந்த தேர்வு கூட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். தொகுதி எம்.எல்.ஏ., திருநாவுக்கரசு, தேர்வு குழு உறுப்பினர்கள் செல்லையா...
தமிழகம்
சாய்பாபா கோவிலில் குரு பவுர்ணமி விழா
திருத்தணி : திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை சாய் நகரில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா கோவில். இக்கோவிலில் நேற்று குரு பவுர்ணமியை முன்னிட்டு காலை 5 மணிக்கு சுப்ரபாதம், காகட ஆர்த்தியும், சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து 15 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம்,...
தமிழகம்
ஒதியத்தூரில்மருத்துவ முகாம்
செஞ்சி:செஞ்சி ஒன்றியம் ஒதியத்தூரில் வருமுன் காப் போம் மருத்துவ முகாம் நடந்தது.ஒன்றிய சேர்மன் ரத்னா கணபதி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பரசி வரவேற்றார். ஊராட்சி தலைவர் ராணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி ஜெயபால் முன்னிலை வகித்தனர். மேல்மலையனூர் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வ...
தமிழகம்
டெம்போ கவிழ்ந்து மின் ஊழியர் பலி
கள்ளக்குறிச்சி:மினி டெம்போ கவிழ்ந்து விபத்தில் மின்வாரிய ஊழியர் இறந்தார். கல்வராயன் மலையிலிருந்து நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சி நோக்கி மினி டெம்போவை வேல்முருகன்(22) என்பவர் ஓட்டிச் சென்றார். மேல்பரிகம் அருகே மினி டெம்போ நிலைதடுமாறி திடீரென பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் பலத்த காயமடைந்த மின்வாரிய ஊழியர்கள் பச்சம...
தமிழகம்
தி.மு.க., நிர்வாகிகள் இன்று ஆலோசனை
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (26ம் தேதி) நடக்கிறது. விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு துவங்கும் ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் செஞ...
தமிழகம்
கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு
செஞ்சி:செஞ்சி வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற் றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் கிளை தேர் தல் சக்கராபுரம் நடுநிலைப் பள்ளியில் நடந் தது. வல்லம் வட்டார தலைவர் பச்சைவண்ணன், செயலாளர் காண்டீபன் ஆணையாளர்களாக இருந்து தேர்தலை நடத்தினர். மாவட்ட தலைவர் கதிர்வேல், செயலாளர் விசயன், பொருளாளர் ரங்கராஜன் முன்னிலை வகித்தனர். இதில் வட...
தமிழகம்
டிரான்ஸ்பார்மர்கள் துவக்கம்
விழுப்புரம்:விழுப்புரம் காகுப்பம் கிழக்கு பிரிவில் புதிய டிரான்ஸ்பார்மர்களை மின்துறை செயற்பொறியாளர் சந்திரன் துவக்கி வைத்தார்.விழுப்புரம் காகுப்பம் கிழக்கு பிரிவு பகுதி டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைகின்ற நேரங்களில், அப்பகுதியில் 200 வீடுகளுக்கு கடந்த சில மாதங் களாக குறைந்த மின்னழுத்தம் பிரச்னை இருந்து வந்தது. மின்துறை செயற...
தமிழகம்
பயணியிடம் பர்ஸ் திருடிய பெண் கைது
திருவள்ளூர் : பழவேற்காடு பூமிக்காரத் தெருவைச் சேர்ந்த தமிழ் என்பவரது மனைவி ஜெஸ்லின் (27). கவரப்பேட்டையில் உள்ள கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை வேலைக்கு சென்று மாலை பொன்னேரிக்கு பஸ்சில் வந்து இறங்கினார். பொன்னேரி பஸ் நிலையத்துக்கு பஸ் வந்ததும் இறங்கினார். அப்போது அவரது கைப்பையில் இருந்த பர்சை பெண...
இந்தியா
மோடியின் வலதுகரமான அமீத் ஷா கைது : விசாரணை ஆரம்பம்
ஆமதாபாத் :சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும் முதல்வர் மோடியின்  வலதுகரமாக விளங்கிய  அமீத் ஷா நேற்று கைது செய்யப்பட்டார். அவரை, நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இனி அவரிடம் விசாரணை துவங்கி விடும். குஜராத் மாநிலத்தில், 2005ம் ஆண்டில் சொராபுதீன் ஷேக் என்பவர் ...
தமிழகம்
குற்றவாளிகளை திருத்துகிறதா சிறைச்சாலைகள்?
தவறு செய்வதற்காகவே யாரும் பிறப்பதில்லை. சூழ்நிலைகள் தான் ஒருவரை குற்றவாளியாக்குகிறது. சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளும், குடும்ப பிரச்னைகளுமே பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாகின்றன. ஒரு மனிதன், தன் நிதானத்தை இழக்கும் போது தான் கொலைகள் நடக்கின்றன. அன்றாட வாழ்விற்கு வழியில்லாத போது திருட வேண்டும் என்ற எண்ணம் தோன்று...
இந்தியா
பார்லிமென்டில் மோதல் நிச்சயம் வெடிக்கும் : விலைவாசி பிரச்னை காரணம்
புதுடில்லி :   பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை கிளப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  அதனால் பெரிய  அளவில்  மோதல் வெடிக்கும். இது  நாளை முதல் பயங்கரமாக எதிரொலிக்கும். பா.ஜ.,வின் தாக்குதலை சமாளிக்கும் வகையில...
தமிழகம்
பா.ஜ., போராட்டம் தெடரும் : எச்.ராஜா
நாகர்கோவில் : தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்படுவதற்கான முதற்கட்ட எழுச்சி ஏற்பட்டு விட்டது என மாநில பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், நாகர்கோவிலில் குமரிமாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த போராட்டத்தில் கூறினார். குமரி மாவட்ட பா.ஜ., சார்பில் அணைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்ககோரி நாகர்கோவில் ஸ்டேடியம் முன் போராட்டம் ...
தமிழகம்
ஜெயபால் எம்.எல்.ஏ., மரணம் இன்று பொதுமக்கள் அஞ்சலி
நாகர்கோவில் : குளச்சல் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயபால் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்தார். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் பெருவிளையில் வைக்கப்பட்டு இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது. குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயபால் கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஜூன் 2ம் தேதி...
தமிழகம்
துரைமுருகன் உடல்நிலை நலம் விசாரித்தார் முதல்வர்
சென்னை :  உடல் நலக்குறைவு காரணமாக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று மாலை முதல்வர் கருணாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்க...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி: மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி., வரி) விதிப்பு திட்டத்தால், மாநில வரிவிதிப்புக்கு பாதிப்பு வரக்கூடாது. வரி சீர்திருத்த திட்டங்களால், மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல் உருவாகக் கூடாது. அதிக வரி திரட்டும் மாநிலங்களை இந்த ...
தமிழகம்
தூய பனிமய மாதா ஆலயத் திருவிழா : இன்று கொடியேற்றம்
தூத்துக்குடி : தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பவனி கோலாகலமாக நடந்தது. இன்று மதியம் பிஷப் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவிக்கும் விழா நடக்கிறது. முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள பனிமய மாதா கோ...
தமிழகம்
பாபநாசம், மணிமுத்தூறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கும் முன்பு விவசாயிகளிடம் ஆலோசனை
தூத்துக்குடி : பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் முன் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குழுவில் ஆலோசிக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. வேளாண்மை...
தமிழகம்
லயன்ஸ் கிளப் 324 பி4 மாவட்ட துணை ஆளுநர்கள் அமைச்சரவையினர் பதவி ஏற்பு
தூத்துக்குடி : தூத்துக்குடியில் லயன்ஸ் கிளப்பின் 324பி4 மாவட்ட துணை ஆளுநர்கள் மற்றும் மாவட்ட அமைச்சரவையினர் பதவி ஏற்பு விழா நடந்தது. விழாவில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ரெவின்யூ மாவட்டங்களை உள்ளடக்கியது ல...
தமிழகம்
ஊர் ஊராக தலைப்பிள்ளையை தேடிய அப்துல் கபூர் : போலீசில் சிக்கியது எப்படி?
மதுரை : மதுரையில் 15 மாத ஆண் குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த கொடூரன் அப்துல் கபூர், போலீசில் சிக்க காரணமாக இருந்தது, பள்ளிவாசலில் பதிவு செய்திருந்த மொபைல் போன் எண் என, தெரிய வந்துள்ளது. மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் செரின் பாத்திமா(24). கணவர் கவுஸ்பாட்ஷாவை இழந்த இவர், 15 மாத குழந்தை காதர் யூசுப்புடன், கோரிப்பாளையம...
தமிழகம்
தி.மு.க., பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல் : கொலை, ஆட்களை கடத்தி மிரட்டியது, வழிப்பறி, வெடிமருந்து தயாரித்தல் உட்பட 39 வழக்குகளில் சம்பந்தப்பட்ட தி.மு.க., பிரமுகரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள சொட்டமாயனூரை சேர்ந்தவர் ரவுடி வி.சி.ராஜேந்திரன்(45); தி.மு.க., உறுப்பினர். இவர் மீது இரண்டு கொலை வழக்...
தமிழகம்
கற்கும் பாரதம் திட்டம் துவக்கம்
கள்ளக்குறிச்சி:அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பெரு வங்கூரில் கற்கும் பாரதம் திட்டம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் தலைமை தங் கினார். மைய பொறுப்பா ளர் ரம்யா வரவேற்றார். வட்டார வளமைய மேற் பார்வையாளர் விஜயபாஸ் கர் மையத்தினை துவக்கி வைத்தார். கற்கும் பாரதம் திட்டம் குறித்து...
தமிழகம்
பவுர்ணமி வழிபாடு
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு நடந்தது.இக்கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு காலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராத னையும் நடந்தது. மாலை 7 மணிக்கு மங்களாம்பிகை "பராசக்தி' அலங்காரத்தில் கோவிலின் உட்பிரகாரத் தில் வலம் வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.வ...
தமிழகம்
பள்ளி மாணவ, மாணவிகளுக்குஎன்.சி.சி., பயிற்சி மிக முக்கியம்:லெப்டினன்ட் கர்னல்
கள்ளக்குறிச்சி:மாணவ, மாணவிகளுக்கு என்.சி.சி., பயிற்சி மிகவும் முக்கியம் என லெப்டினன்ட் கர்னல் அய்யப்பசாமி தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி ஏ.கே. டி., பள்ளியில் என்.சி.சி., துவக்க விழா நடந்தது. தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். டி. எஸ்.பி., ஆறுமுகம், செயலாளர் லட்சுமிப்பிரியா, நீலமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராகாந்தி...
தமிழகம்
நரபலியிட்ட குழந்தையின் உடல் தோண்டியெடுப்பு
கீழக்கரை : நரபலியிட்ட குழந்தையின் உடல் ஏர்வாடியில் அதிகாரிகளின் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது. அதே இடத்தில் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்க, அழைத்து வரப்பட்ட கொலையாளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஏர்வாடியில் கீழக்கரை டி.எஸ்.பி., ராதா கிருஷ்ணன், கடலாடி தாசில்தார் காளி...
தமிழகம்
அரசு பள்ளிகளில் கிராமக் கல்விக் குழுக் கூட்டம்
திருக்கோவிலூர்:முகையூர், திருக்கோவிலூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் கிராமக் கல்விக் குழு கூட்டம் நடந்தது.முகையூர் ஒன்றியம் டி. அத்திப் பாக்கம் ஆர்.சி., துவக்கப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு கல்விக் குழு தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வளவன், ஊராட்சி துணைத் தலைவர் பானு முன்னிலை வகி...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்குகண் பரிசோதனை முகாம்
செஞ்சி:செஞ்சி செயின்ட் மிக் கேல் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.பள்ளி முதல்வர் அருட்சகோதரி பிலோமினால் தலைமை தாங்கினார். அரிமா சங்க தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற வனத் துறை அலுவலர் சுப்ரமணியன் முகாமை துவக்கி வைத்தார். அரிமா சங்க நிர்வாகிகள் செல்...
தமிழகம்
டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் எடுத்து வந்த கார் பறிமுதல்: டிரைவர் கைது
தர்மபுரி : தர்மபுரியில் டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் எடுத்து வந்த காரை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். தர்மபுரி மதிக்கோன்பாளையம் போலீசார் நேற்று திருப்பத்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த அம்பாசிடர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் தலா 2,000 டெட்டனேட்டர் மற...
தமிழகம்
பஸ்சை முந்த முயன்றதால் விபத்து பயணி பரிதாப பலி; 10 பேர் காயம்
செஞ்சி : செஞ்சி அருகே அரசு பஸ் மீது மற்றொரு அரசு பஸ் மோதியதில்  ஒருவர் இறந்தார்; 10 பேர் காயமடைந்தனர்.  சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ் ஒன்று நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வந்து கொண்டிருந்தது. ராஜாம்புலியூர் கிராமம் அருகே பின்னால் வந்த ம...
தமிழகம்
வங்கிகளில் மீண்டும் கள்ளநோட்டு
மதுரை : மதுரையில் பல்வேறு வங்கிகளில் மீண்டும் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே, மதுரை வங்கிகளில் ரூ. 1,000, 500, 100 கள்ளநோட்டுகளை சிலர் புழக்கத்தில் விட்டுவருகின்றனர். சமீபத்தில்கூட, பெத்தானியாபுரத்தில் கள்ளநோட்டு தயாரித்த இளங்கோ, சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது ...
தமிழகம்
போலி சான்றிதழ் தயாரிப்பில் அதிகாரிகள் தொடர்பா? விசாரணை நடத்த போலீஸ் முடிவு
சென்னை : போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் கைதான கல்வி இயக்கக உதவியாளர் ஏகாம்பரத்தை விசாரணைக்காக போலீசார் காவலில் எடுக்கின்றனர். அதிகாரிகள், முக்கியப் புள்ளிகளுடனான தொடர்பு வெளிச்சத்துக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்களில் சிலர், போல...
தமிழகம்
போலி பாஸ்போர்ட் கேரள ஆசாமி கைது
கோவை : போலி பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து கோவை வந்த கேரள ஆசாமி கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், காசர்கோடு தெற்கில் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்முத்தலிப் மொய்தீன்; துபாயில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் ஷார்ஜா விமானத்தில் கோவை வந்தார். விமான நிலையத்தில் குடியுரிமைப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் குழுவினர்,...
தமிழகம்
மண் கடத்தலை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ.,வை தாக்கிய கவுன்சிலர்
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே வண்டல் மண் கடத்தலை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ.,வை தாக்கிய தி.மு.க., மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் அமிர்தலிங்கம் (29). வெண்பாவூர் மற்றும் வேப்பந்தட்டை கிராம வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலைய...
தமிழகம்
வேலை உறுதி திட்டம்:எம்.எல்.ஏ.,திடீர் ஆய்வு
சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை எம்.எல். ஏ., திடீர் ஆய்வு செய்தார்.சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தில் வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் நடந்து வருகிறது. அந்த வழியாக சென்ற எம்.எல்.ஏ., அப் பகுதியில் ஏரி தூர்வாரும் பணியை திடீரென ஆய்வு செய்தார். தொழிலாளி களிடம் குறைகளை கேட்டறிந்தார். அ...
தமிழகம்
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்
திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் கருணாநிதி நாளை திறந்து வைக்கிறார். திருவாரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழா, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளை நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி, அரசு மருத்துவக்கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்து, புதிய ...
தமிழகம்
வரி செலுத்தாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்:ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
தியாகதுருகம்:சாலை வரி செலுத்தாத வாகனங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய் யப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.உளுந்தூர்பேட்டை மோட்டார் வாகன ஆய் வாளர்கள் துரை, செல்வி ஆகியோர் தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம் பகுதியில் திடீர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது சாலை வரி செலுத் தாமல் ஓட்டி வந்த லோடு ஆட்டோக்...
தமிழகம்
டிரைவருக்கு மயக்க மருந்து கொடுத்து ரப்பர் சீட்களுடன் லாரி கடத்திய கும்பல்
உத்தமபாளையம் : சென்னைக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய ரப்பர் சீட் சரக்கை, டிரைவருக்கு மயக்க மருந்து கொடுத்து க.புதுப்பட்டிக்கு கடத்தி வந்த நான்கு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரவி (45). இவர், கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து ரப்பர் கூழை கொள்முத...
தமிழகம்
கருத்தரங்கம்
திண்டிவனம்:திண்டிவனம் ராஜாபாதர் தாகூர் மகளிர் கல்வியியல் கல்லூரியில் சமச்சீர் கல்வி குறித்த கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கிற்கு கல்லூரி நிறுவன சேர்மன் டாக்டர் ராஜாபாதர் தலைமை தாங் கினார். கல்லூரி முதல்வர் பிரபாவதி வரவேற்றார். ஆங்கிலத் துறை பேராசிரியர் சுப்ரமணியன், டீன் சாமுவேல் அகஸ்டின், கூடுதல் முதல்வர் வச்சலா, துணை ...
தமிழகம்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரை கைது செய்ய முயற்சி
ஆண்டிபட்டி :  ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டில் கடந்த வாரம் தி.மு.க., சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்தார். இதை கண்டித்து, நேற்று இரவு கடமலைக்குண்டில் அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகர்கள் எஸ்....
தமிழகம்
நகராட்சி இடைத் தேர்தலில் வெற்றி:தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சி 27வது வார்டு தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.விழுப்புரம் நகராட்சி 27வது வார்டு இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் அருணாச்சலம் வெற்றி பெற்றார். நகர தி.மு.க., அலுவலகத்தில் உள்ள அண்ணா துரை படத்திற்கு மாலையணிவித்து, பட்டாசு வெடித்து ...
தமிழகம்
ரத்தப் பரிசோதனை முகாம்
திண்டிவனம்:திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ரத்தப் பிரிவு பரிசோதனை முகாம் நடந்தது.திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கம் சார்பில் நடந்த முகாமிற்கு பள்ளி இயக்குனர் அரி நாராயணன் தலைமை தாங்கினார். கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவ,மாணவிகள் 300 பேர் ரத்த பிரிவு ப...
தமிழகம்
தேங்கிய கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அண்ணா நகர் கழிவு நீரால் தென்கீரனூர் சாலையில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அண்ணா நகரிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் பெரும்பங்கு சாக்கடை வசதியின்றி தென்கீரனூர் சாலைக்கு செல்கிறது. சாலை ஓரத்தில் வெட்டப்பட்ட சிறிய வாய்க்கால் வழியாக சென்று, வெளிய...
தமிழகம்
தே.மு.தி.க.,வினர்நிவாரண உதவி வழங்கல்
திருக்கோவிலூர்:வெடி விபத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத் திற்கு தே.மு.தி.க.,வினர் ஆறுதல் கூறினர்.திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த ராகவேந்திரன், செல்வம், சஞ்சய் ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்து ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர்.ஒன்றிய செயலாளர் எடையூர் பழனி, செயற...
தமிழகம்
கல்வித்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை : தமிழக அரசு உத்தரவு
போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம், பெரும் புயலை வீசி வரும் நிலையில், கல்வித்துறை ஊழியர்கள் மீது, தமிழக அரசு பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிளஸ் 2 போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம், தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கல்லூரிக் கல்வி இயக்கக ஊழியர் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் உதவி தலைமை ஆசிரியர்...
தமிழகம்
கல்வி உதவித்தொகை கேட்டு பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்: சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல, இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க கேட்டு, நாகர்கோவிலில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் மருத்துவப்படிப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை, இந்து மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்று, பா.ஜ., புகார...
தமிழகம்
கருத்தரங்கம்
மயிலம்:மயிலம் கலை அறிவி யல் கல்லூ ரியில் கணினி துறையின் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலர் குமார சிவ ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் லட்சரா மன் வரவேற்றார். புதுச் சேரி பல்கலைக் கழக கணினித் துறைப் பேராசி ரியர் சுனிதா சிறப்புரையாற் றினார். கல்லூரி பேரா சிரி யர்கள் அனுராதா, தமிழ் செல்வி, ஜனகுமாரி, கோகுல க...
தமிழகம்
ரவுடியை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டம்
கடலூர் : கடலூர் கோர்ட்டுக்கு வரும் குற்றவாளியை கொலை செய்யத் திரிந்த நான்கு பேரை கடலூர் சிறப்புப் படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து  துப்பாக்கி, வெடிகுண்டுகளை கைப்பற்றினர். கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வரும் கொலைக் குற்றவாளியை வெடிகுண்டு வீசி தாக்கி கொலை செய்யப்போவதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீசுக்க...
தமிழகம்
தி.மு.க., பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல் :கொலை, ஆட்களை கடத்தி மிரட்டியது, வழிப்பறி, வெடிமருந்து தயாரித்தல் உட்பட 39 வழக்குகளில் சம்பந்தப்பட்ட தி.மு.க., பிரமுகரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள சொட்டமாயனூரை சேர்ந்தவர் ரவுடி வி.சி.ராஜேந்திரன்(45); தி.மு.க., உறுப்பினர். இவர் மீது இரண்டு கொலை வழக்கு...
தமிழகம்
முன்னாள் படை வீரர்களுக்கு 30ம் தேதி குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம்:முன்னாள் படை வீரர் குறைகேட்பு கூட்டம் வரும் 30ம் தேதி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முன்னாள் படை வீரர்கள் குறைகேட்பு கூட்டம் வரும் 30ம் தேதி காலை 11.15 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. முன் னாள் படைவீரர்கள், விதவ...
தமிழகம்
மடத்தில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி
தாம்பரம் : சேலையூர் அகோபில மடத்தில் நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்த மர்ம நபர், பெண் பணியாளரை தாக்கி கிணற்றில் தள்ளி, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். அந்த நபரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். தாம்பரத்தை அடுத்த சேலையூர், ஆர்த்தி நகரில் அகோபில மடம் உள்ளது. இங்கு கடந்த ஏழு ஆண்டுகளாக சின்ன காஞ்சிபுரம், பிருந்த...
தமிழகம்
குபேரன் கோவிலில் 30ம் தேதி விளக்கு பூஜை
விழுப்புரம்:விழுப்புரம் திருநகர் லட்சுமி குபேரன் கோவிலில் வரும் 30ம் தேதி விளக்கு பூஜை நடக்கிறது. விழுப்புரம் திருநகர் லட்சுமி குபேரன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி கடந்த 23ம் தேதி காலை 5 மணிக்கு மகாலட்சுமி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மங்கள லட்சுமியாக சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து வரும் 3...
தமிழகம்
ஏழுமலை பாலிடெக்னிக்கில் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி
விழுப்புரம்:விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக்கில் தொழில் பேட்டை சங்கத் துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.விழுப்புரம் ஏழுமலை தொழில்நுட்ப கல்லூரியும், இந்தியாவின் தலை சிறந்த தொழிற் பேட்டைகளில் ஒன்றான சென்னை அம்பத்தூர் தொழிற் பேட்டை உற்பத்தியாளர் சங்கம், தொழில் நுட்ப மையம், ஏ.டி.சி., அறக் கட்டளை ஆகிய சார்பில் புரிந்துணர...
தமிழகம்
அடுத்தடுத்த விபத்தில் இருவர் பலி
திருப்புவனம் : திருப்புவனத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு விபத்தில் டூவீலரில் சென்ற இருவர் பலியாயினர்.  மதுரைசெல்லூர் அண்ணாமலை (40), ஜெயக்குமார் ஆகிய இருவரும் டூவிலரில் அல்லிநகரம் கோயிலில் சாமிகும்பிட்டுவிட்டு மதுரை நோக்கி சென்றனர். அதே போல், சிவகாசியிலிருந்து மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சாமிகும்பிட வேனில் வந...
தமிழகம்
ரெட்டணை பள்ளியில் விளையாட்டு விழா
திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.விளையாட்டு நிகழ்ச் சிக்கு பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி முதல் வர் அகிலா பழனியப்பன் வரவேற்றார். மாணவ, மாணவிகளின் அணி வகுப்பை ரெட்டணை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இளவரசன் துவக்கி வைத்தார். ஒலி...
தமிழகம்
திருக்கடையூர் கோவிலில் மாஜி அமைச்சர் பூஜை
மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பா.ம.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேலு, 70 வயது பூர்த்தியானதை அடுத்து, தனது மனைவி மல்லிகா மற்றும் குடும்பத்தினருடன்  நந்தி மண்டபத்தில் பீமரத சாந்தி ஹோமம் செய்தார். தொடர்ந்து வேலு அவரது குடும்பத்தினருடன் அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி ம...
தமிழகம்
வருமானவரித் துறையின் 150 வது ஆண்டு விழா
விழுப்புரம்:வருமான வரித்துறை சார்பில் 50வது ஆண்டு விழா விழுப்புரத் தில் நடந்தது. விழுப்புரத்தில் இந்த அலுவலகம் 32வது ஆண் டுகளாக செயல் படுகிறது. இந்நிலையில் 150வது ஆண்டு விழாவை முன் னிட்டு வருமான வரித் துறை நாள் விழா விழுப்புரம் அலுவலகத்தில் கொண் டாடப்பட்டது. விழாவிற்கு விழுப்புரம் வருமான வரித்துறை அலுவலர் கலைமணி தலைமை ...
இந்தியா
வங்கி ஏ.டி.எம்., இயந்திரம் லாரியில் ஏற்றி திருட்டு
சாஜன்பூர் : உத்தரப் பிரதேசத்தில் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாஜன்பூர், சதார் பஜாரில் கார்ப்பரேஷன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த  மையத்தில் இருந்த ஏ.டி.எம்., இயந்திரத்தை கொள்ளையர்கள் சிலர் திருடிச் சென்...
இந்தியா
தாவூத் கூட்டாளிகள் மோதல்: வெவ்வேறு சிறைகளில் அடைப்பு
மும்பை : நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு இடையில், மும்பை சிறையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக  மும்பை சிறைத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளான அபு சலிம் மற்றும் ...
தமிழகம்
மாணவர்களுக்கு தியான பயிற்சி
உளுந்தூர்பேட்டை:திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தலிங்க மடம் அரசு மேல் நிலை பள்ளியில் மாணவர் களுக்கு தியான பயிற்சி அளிக்கப்பட்டது.தலைமை ஆசிரியர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். மாணவர்க ளுக்கு மனதை ஒருநிலை படுத்தி, வலிமை பெற செய்தல், ஞாபக சக்தியை பெருக்குதல் குறித்...
தமிழகம்
குலதீபமங்கலத்தில் பல் சிகிச்சை முகாம்
திருக்கோவிலூர்:குலதீபமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் சிகிச்சை முகாம் நடந்தது. மணலூர்பேட்டை அரிமா சங்கம், திருக்கோவிலூர் வட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் இணைந்து நடத்திய முகாமிற்கு ஊராட்சி தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்த...
தமிழகம்
குரு பூர்ணிமா பூஜை
விழுப்புரம்:விழுப்புரம் ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி சேவா சமிதியின் குரு பூர்ணிமா பூஜை நடந்தது.விழுப்புரம் ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி சார்பில் கிழக்குப் பாண்டி ரோட்டிலுள்ள பாலாஜி அரங்கத்தில் குரு பூர்ணிமா பூஜை நடந்தது. இதில் மதுரை ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சீடர் பிரசன்னாமிர்த தலைமையில் குரு பூர்ணிமா பூஜை நடந...
தமிழகம்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
திண்டிவனம்:விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் திண்டிவனத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.திண்டிவனம் காந்தியார் திடலில் நடந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் மணி மாறன் முன்னிலை வகித்தார். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார்.மாநில மகளிரணி துணை செயலாளர் ...
தமிழகம்
திண்டிவனத்தில் விளையாட்டு விழா
திண்டிவனம்:திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜேந்திரம் தலைமை தாங்கினார். திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் தேசிய கொடியேற்றி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்தார்.ஆசிரியர் நாகராஜன் ஒலிம்பிக் கொடியையும்,ஆசிரியர் தாமோதரன் பள்ளிக் கொடியையு...
தமிழகம்
கலைஞர் காப்பீடு பயனாளிகள் சின்னசேலத்தில் தேர்வு முகாம்
சின்னசேலம்:சின்னசேலத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் தேர்வு நடந்தது.சின்னசேலம் செங் குந்தர் திருமண மண்டபத்தில் வாசவி கிளப், சேலம் சரவணா மருத்துவமனை இணைந்து கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தின்கீழ் பயனாளிகள் தேர்வு முகாம் நடத்தப் பட்டது. முகாமிற்கு வாசவி கிளப் சதீஷ் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதிசேஷன், தேர...
தமிழகம்
செழித்து வளர்ந்துள்ள கம்பு பயிர் தியாகதுருகம் விவசாயிகள் மகிழ்ச்சி
தியாகதுருகம்:தியாகதுருகம் பகுதியில் மானாவாரியில் பயிரிடப்பட்ட கம்பு பயிர் செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தியாகதுருகம் பகுதியில் 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. பாரம்பரியமாக ஆண்டுதோறும் ஜூன் மாத இறுதியில் பெய்யும் தென்மேற்கு பருவமழை ஈரத்தை பயன்படுத்தி கம்பு சாகுபடி...
தமிழகம்
விபத்தில் சிக்கியவர்கள் படும் துயரங்களைஎண்ணிப் பார்த்தால் விபத்துக்கள் குறையும்: டி.ஐ.ஜி.,
திண்டிவனம்:திருமணமான ஆணோ, பெண்ணோ விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்து படும் துயரங்களை பொதுமக்கள் எண்ணிப் பார்த்தால் விபத்துக்கள் குறையும் என விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,மாசானமுத்து பேசினார்.திண்டிவனத்தில் போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந் தது. நிகழ்ச்சிக்கு டவுன் டி.எஸ்.பி., செல்வ...
தமிழகம்
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., 70 இடங்களில் வெற்றி, காங்கிரசுக்கு கிடைத்தது12
சென்னை: தமிழகத்தில் பல்வேறு உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு கடந்த 22ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில், தி.மு.க., 70 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை காலியாக இருந்த 923 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், ஊரக உள்ளா...
தமிழகம்
பாளையகுஞ்சரம் கிராமத்தில்வலுவிழந்த தண்ணீர் தொட்டி
உளுந்தூர்பேட்டை:பாளையகுஞ்சரம் கிராமத்தில் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ள குடிநீர் தொட்டி பொதுமக் களை அச்சுறுத்தி வருகிறது.உளுந்தூர்பேட்டை அடுத்த பாளையகுஞ்சரம் கிராமத்தில் துவக்கப் பள்ளி அருகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் 300 குடும் பங்களுக்கு குடிநீர் விநியோகம் ந...
இந்தியா
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு:கல்வித் துறை கவனம் செலுத்துமா?
புதுச்சேரியில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தட்டுப்பாட்டால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டில் (2010-2011) முதன் முறையாக ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பிற்கு மட்டும் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது.புதிதாக அறிமுகம் செய்யப் பட்டுள்ள சமச்சீர் க...
இந்தியா
ரவுடிகளின் அச்சுறுத்தலால்முக்கிய இடங்களில் பாதுகாப்பு
புதுச்சேரி:புதுச்சேரியில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீஸ் நிலையம் உட்பட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு பேர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். வெடிகுண்டு கல...
இந்தியா
துறைமுகத்தில் மூழ்கிய டிரஜ்ஜர்
புதுச்சேரி:புதுச்சேரி அரசுக்கு சொந்தமான டிரஜ்ஜர் உப்பளம் துறைமுகத்தில் தண்ணீரில் மூழ்கி வீணாகிக் கொண்டுள்ளது.தேங்காய் திட்டு முகத்துவாரத்தை தூர் வாருவ தற்கு டிரஜ்ஜர் வாங்கப்பட்டு முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி நடந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் டிரஜ்ஜரில் பழுது ஏற்பட்டுள் ளது. இதனை பழுது நீக்க அரசு நிதி ஒதுக்...
இந்தியா
பேரவை அமைப்பவர்கள் மீது நடவடிக்கை:காங்., தலைவர் எச்சரிக்கை
புதுச்சேரி:காங்., கட்சியின் விதிமுறைகளை மீறி உள்நோக்கத்துடன் பேரவை அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்., தலைவர் ஏ.வி சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை திறப்பு விழா அடுத்த மாதம் நடை...
தமிழகம்
அரசு உத்தரவு அமல்படுத்தப்படாததால் 16 ஆயிரம் விவசாய பட்டதாரிகள் தவிப்பு
உத்தமபாளையம் : விவசாய பட்டதாரிகளை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிடப்பட்ட அரசாணை, முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். நான்கு வருட பி.எஸ்சி., விவசாயம் படித்த பட்டதாரிகளுக்கு விவசாயத்துறையில் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு வந்தது. 1999...
இந்தியா
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில்மண்டபம் கட்ட ரூ.10 லட்சம் நன்கொடை
காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் மண் டபம் கட்ட மைசூர் அவதூப தத்தாபீடம் சார்பில், 10 லட்சம் ரூபாய் நன் கொடை வழங்கப்பட்டது.காரைக்கால் திருநள்ளாரில் உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. பல்வேறு மாநில மக்கள் தினந்தோறும் காரைக்கால் வந்து நளன் தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானை தரிசித்துச் செல் கின்றனர்...
இந்தியா
மனைவியுடன் தகராறு : கணவன் தற்கொலை
புதுச்சேரி:மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் கணவர் தற் கொலை செய்து கொண்டார்.முருங்கப்பாக்கம் செந் தில்நகரில் வசித்தவர் விநாயகமூர்த்தி(25). கடந்த சில நாட்களுக்கு முன் மனைவி கோவிலுக்கு சென்று தாமதமாக வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விநாயகமூர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியா
சர்வ கட்சி ஆலோசனை தவிர்த்தார் மன்மோகன்
புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்காலக் கூட்டத் தொடர் குறித்து கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், தன் உடல்நிலை காரணமாக கலந்து கொள்ளவில்லை. நேற்று முன்தினம் நடந்த தேசிய மேம்பாட்டுக் கவுன்சிலின் (என்.டி.சி.,) முழுநாள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அதன் காரணமாக அவர் தளர்ச்...
தமிழகம்
அரசு டாக்டர் சிறப்பு தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தி ஆகஸ்ட் 27ல் உண்ணாவிரதம்
கரூர் : அரசு டாக்டர் சிறப்பு தேர்வு முடிவு வெளியிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், டி.என்.பி.எஸ்.சி.,யை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 27ம் தேதி, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,'' என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க செயலர் செந்தில் தெரிவித்தார். கரூரில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயற்கு...
தமிழகம்
ஆடிக்கிருத்திகை திருவிழா திருத்தணிக்கு சிறப்பு பஸ்கள்
காஞ்சிபுரம் : திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆடிக்கிருத்திகை திருவிழாவையொட்டி, விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 2ம் தேதியிலிருந்து 6ம் தேதி வரை திருத்தணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேடு, காஞ்சிபுரம், சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, சித்தூர், வ...
தமிழகம்
பழநி ரோப்கார் நேற்று முதல் மீண்டும் இயக்கம்
பழநி : பழநி கோவில் ரோப்காரில் ஆண்டு பராமரிப்பு பணி முடிந்ததால், நேற்று மீண்டும் இயங்கத் துவங்கியது. பழநி கோவில் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிகள் கடந்த 6ல் துவங்கியது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட 700 மீட்டர் நீளமுள்ள ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய இரும்பு கயிறு பொருத்தப்பட்டது. மேல் தளத்தில...
தமிழகம்
தனுஷ்கோடிக்கு ரயில் இயக்கப்படுமா? ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
ராமேஸ்வரம் : தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், ரயில் இயக்குவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும்,'' என, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே.கோயல் கூறினார். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகள் மற்றும் பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் செல்வதற்கு திறக்கப்படும் ஜெட்ஜர் தூக்கு பாலத்தின் திறனை ...
தமிழகம்
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை அணைகளில் நீர் மட்டம் உயர்வு
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பகல் நேரங்களிலேயே கடும் குளிர் வாட்டுகிறது; நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்ய துவங்கினாலும், கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. பகல் நேரங்களிலும் கடும் பனிமூட்...
தமிழகம்
பழநியில் ஆணழகன் போட்டி
பழநி : பழநியில் சீனியர் தென் மாவட்ட மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி நடந்தது. பழநி ஹெல்த் ஜிம் சார்பில் நடந்த இந்த போட்டியை, அக்ஷயா அகடமி குழுத் தலைவர் எம்.புரு÷ஷாத்தமன் துவக்கி வைத்தார். 150க்கும் மேற்பட்ட வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர். எட்டு உடல் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 55 கிலோ உடல் பிரிவில் துவங்கி 85 கிலோவ...
தமிழகம்
மதுரையில் மத்திய அரசு ஆய்வகம்
மதுரை : மதுரை மருத்துவக் கல்லூரியில், மத்திய அரசின் பங்களிப்போடு, மருத்துவ மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆய்வகம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் மிகப்பெரியதாக கருதப்படும் மதுரை மருத்துவக் கல்லூரியில், ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ்., முடித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியேறுகின்றனர். நோயாளிகளின் உடல்நல ப...
தமிழகம்
மனநலம் குன்றிய மகனுக்கு ரூ.5 லட்சம் பராமரிப்புத் தொகை
சென்னை : மனநலம் குன்றிய மகனுக்கு பராமரிப்புத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க, தந்தை ஒப்புக் கொண்டார். அதற்கான டி.டி.,யையும் குடும்ப நல கோர்ட்டில் வழங்கினார். சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்கள், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். சட்டப்படி, இருவரும் வ...
தமிழகம்
மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு இலவச திருமணம் நடத்த திட்டம்
பொள்ளாச்சி : பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், வரும் நவம்பர் மாதம் மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைப்பதென, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், திர...
இந்தியா
அன்னையர் சந்திப்பு
புதுச்சேரி:புதுச்சேரி சவராயலு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அன்னையர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.பள்ளித் தலைமை ஆசிரியை கோமதி தலைமை தாங்கினார். டாக்டர் அல்லி ராணி மாணவிகளுக்கு பருவ வயதில் ஏற்படும் உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள், அதனால் வரும் சிக்கல்கள், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார்.
தமிழகம்
கொத்தமல்லிக்கு விலை இல்லை : விவசாயிகள் வேதனை
உடுமலை : பல மாதங்களாகியும் கொத்தமல்லிக்கு உரிய விலை கிடைக்காததாலும், தொடர்ந்து விலை சரிந்து வருவதாலும், இருப்பு வைத்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். உடுமலை அடுத்த குடிமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பருவமழையை ஆதாரமாகக் கொண்டு மானாவாரியாக கொத்தமல்லி அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அறுவடை பணிகள் மேற்கொள்ளப...
இந்தியா
திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆதிவார பவுர்ணமி விழா
வில்லியனூர்:புதுச்சேரி அடுத்த வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆதிவார பவுர்ணமி விழா நேற்று கோலாகலமாக நடந்தது.புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலில் அமைந்துள்ள திருக்குளம் பிரம்ம தேவரால் உண்டாக்கப்பட்டதாக கருதப்படுவதால் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது....