category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
எல்லை தாண்டிய மீன்பிடி தொழில் அரசுகளின் அனுமதிக்காக ஏங்கும் மீனவர்கள்
முன்பெல்லாம் தமிழக மீனவர்கள், இலங்கையை ஒட்டிய கடற்பகுதிக்குள் மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது, அவர்களை சிங்கள மீனவர்களும், அந்நாட்டு கடற்படையினரும் விரட்டியடிக்கும் நிலை இருந்தது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாக இருந்தது.தமிழக மீனவர்கள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக நினைத்து சிங்கள மீனவர்களும், அந்நாட்டு கடற்படையினரும் இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அங்கு அமைதி திரும்பியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல் சமீபகாலமாக குறைந்து வருகிறது.சமீபத்தில் இலங்கை கடற்பகுதிக்கு உட்பட்ட கச்சத்தீவில் உள்ள தேவாலயத் திருவிழாவிற்கு தமிழக மீனவர்கள் குடும்பத்துடன் சென்று திரும்பிய நிகழ்வும் அரங்கேறியது. இதனால் தமிழக- இலங்கை மீனவர்களிடையே இருந்த காழ்ப்புணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.அதேசமயம், இந்திய கடற்பகுதிக்குள் இலங்கை மீனவர்கள் நுழையும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஆறு மாதத்தில், அத்துமீறி நுழைந்த 77 படகுகள் சிக்கின. அதிலிருந்த 399 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்."இலங்கை மீனவர்கள் சுதந்திரமாக இந்திய கடல் எல்லையில் சுற்றிவரும் நிலையில், தமிழக மீனவர்களையும் அதுபோல் அனுமதிக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. "இலங்கை - தமிழக மீனவர்கள் கட்டுப்பாடின்றி எந்த பகுதியில் வேண்டுமானாலும் மீன் பிடிக்க இரு நாட்டு அரசுகளும் அனுமதிக்க வேண்டும்' என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது."பயங்கரவாத பிரச்னையை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட எல்லை வரையறைகளை, இரு நாட்டு அரசுகளும் தளர்த்த வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இது தொடர்பான கூட்டம், சென்னை மயிலாப்பூரில் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் தமிழக மீனவ சங்கங்களின் நிர்வாகிகள் மட்டுமின்றி, இலங்கையின் மீனவ சங்க நிர்வாகிகள் மற்றும் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவிற்கு நெருக்கமான தொண்டு நிறுவனத்தினரும் பங்கேற்றுள்ளனர்."பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை எல்லை மீறியதாக கைது செய்து சிறையில் அடைப்பது, அந்த சமுதாயத்தை அவமதிக்கும் செயல்' என கருத்து தெரிவிக்கப்பட்டது.இது குறித்து, தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் பாரதி கூறியதாவது:கொரியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே பல ஆண்டு பகை இருந்து வருகிறது. இருந்தும், இரு நாட்டு மீனவர்களும், எல்லை பாகுபாடின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்தாலோ, அவர்கள் நமது கடற்பகுதிக்குள் நுழைந்தாலோ, இரு நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கிறது.படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு, உயிர் பிழைப்பதற்காகக் கூட அவர்கள் எல்லை கடந்திருக்கலாம். அதைப் பற்றி எல்லாம் இரு நாட்டு கடற்படையினரும் கவலைப்படாமல், கைது செய்து, கொடும் குற்றவாளிகள் போல் நடத்துகின்றனர்.அவர்களிடம் ஆயுதங்கள், கடத்தல் பொருட்கள் இருந்தால் மட்டுமே இனி கைது செய்யவேண்டும். வர்த்தக ரீதியாக மீன்பிடிக்கும் கப்பல்களை மட்டுமே, எல்லை பிரித்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். இது குறித்து இரு நாட்டு அரசுகளிடம்   கோரிக்கை வைக்க இரு நாட்டு மீனவ சங்கங்களின் நிர்வாகிகளும் கூடி பேசி முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு பாரதி கூறினார். - நமது சிறப்பு நிருபர் -
தமிழகம்
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளை முதல் விற்பனை
சென்னை : பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வழங்கப்படுகின்றன. இதற்காக ஒரு லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன.தமிழகத்தில் தற்போது ஆறு அரசு பொறியியல் கல்லூரிகள், மூன்று அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், 16 அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், 431 தனியார் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 456 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.சிறுபான்மை தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும், சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களும் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. தற்போதைய நிலையில் அரசு ஒதுக்கீட்டில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த ஆண்டும் புதிதாக பொறியியல் கல்லூரி துவங்க பலர் விண்ணப்பித்துள்ளதால், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும். கடந்த ஆண்டு பொதுப்பிரிவில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 115 பேர், பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் 5,216 பேர், வெளிமாநில மாணவர் பிரிவில் 4,933 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 பேர் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்திருந்தனர்.இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பங்கள் விற்பனை நாளை(3ம் தேதி) துவங்குகிறது. விண்ணப்பங்கள் வரும் 29ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும், ஜூன் 15ம் தேதி பிரத்யேக, "ரேண்டம்' எண் வழங்கப்படும். ஜூன் 18ம் தேதி, பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பொறியியல் கவுன்சிலிங், ஜூன் 28ம் தேதி துவங்கி ஜூலை 25ம் தேதி வரை நடைபெறும்.பொறியியல் கவுன்சிலிங் ஏற்பாடுகள் குறித்து, பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உதரியராஜ் கூறியதாவது:பொறியியல் படிப்பிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 58 மையங்களில் பொறியியல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் அதிக தூரம் அலையாத வகையில் இம்மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.விண்ணப்பங்கள் வழங்கப்படும் கல்லூரிகளின் முதல்வர்கள் கூட்டம், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், விண்ணப்பங்கள் வினியோகிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.சென்னை அண்ணா பல்கலைக் கழக தேர்வு மையம் தவிர, இதர மையங்களுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு விட்டன. சென்னையில் அண்ணா பல்கலைக் கழக தேர்வு மையம் தவிர, எம்.ஐ.டி., பாரதி மகளிர் கல்லூரி, வேப்பேரி பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை வழங்குவதற்காக, சென்னை அண்ணா பல்கலைக் கழக தேர்வு மையத்தில் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மே 10ம் தேதிக்கு பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கு 10 கவுன்டர்கள் அமைக்கப்படும்.மாணவர்கள் அதிக நேரம், நீண்ட வரிசையில் காத்திருக்காத வகையில் விண்ணப்பங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகள் தவிர தினசரி காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.இவ்வாறு ரைமண்ட் உதரியராஜ் கூறினார்.இந்த ஆண்டு முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், கால்நடை மருத்துவம், வேளாண்மை ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேரும், குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.இந்த ஆண்டு பொறியியல் விண்ணப்பத்துடன் வழங்கப்படும் விதிமுறைகள் புத்தகத்தில், குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்கள் கல்விக் கட்டண சலுகையை பெறுவதற்கான விதிமுறையும், அதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் மாதிரியும் இடம்பெற்றிருக்கும். மாணவர்கள் இந்த சான்றிதழ்களை பெற்று, சமர்ப்பித்து கல்விக் கட்டண சலுகையை பெறலாம்.
இந்தியா
கோடிகளைத் தொடரும் கேடிகள் : உரத்த சிந்தனை - அப்சல், சிந்தனையாளர்/ எழுத்தாளர்
கொஞ்ச நாளாகவே, பத்திரிகை செய்திகளில் சர்வ சாதாரணமாக கோடிக்கணக்கான ரூபாய் டீலிங்குகள் பற்றி சொல்லப்படுவது, தெருக்கோடியில் சிங்கிள் டீக்கே திண்டாடுகிற பாமரன்களை கொண்ட தேசத்திற்கு அதிர்ச்சி தான். முதலில் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதிக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றி விழா ஆண்டில் போடப்பட்ட, ரூபாய் நோட்டு மாலைகளில் பல கோடி ரூபாய் இருந்ததாகக் கூறப்பட்டது; அதற்கே நமக்கு தலை சுற்றியது. அடுத்தது, ஆந்திராவில், முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ராமாராவின், பேரன் நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு திருமண வரதட்சணையாக, 500 கோடி ரூபாய்க்கான சொத்து வழங்கப்படுவதாக வந்த செய்தி. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் புழங்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை பற்றி தகவல்கள் கசிந்ததும், சராசரி இந்தியன் செய்வதறியாமல் திக்பிரமை பிடித்து நிற்கிறான். எங்கிருந்து வந்தது இத்தனை கோடிகள்? இவை யாருடைய பணம்? இந்த நாடு ஏழை நாடா? சராசரி இந்தியன், வீட்டுக்கு வாடகை தர முடியாமல் தவிப்பதும், தன் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் திணறுவதும், தன் பெற்றோருக்கு நல்ல மருத்துவ வசதியை செய்து தர முடியாத இயலாமைக்கு வருந்துவதும், தண்ணீரின்றி, மின்சாரமின்றி, கொசுவை அடித்தே, இரவைக் கழித்து விடுவதுமாய் அப்பாவி மக்கள் பழகி விட்டனர். இருந்தாலும், சிலரிடம் மட்டுமே, இத்தனை கோடிகள் எப்படி புழங்குகிறது? ஐ.பி.எல்., கொச்சி அணியின் பங்குகளை தன்னுடைய காதலி சுனந்தா புஷ்கருக்கு பெற்றுத்தர, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் மீது குற்றம் சாட்டப் பட, அது அவர் பதவியையே பறித்தது. ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி மீதும் குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. அவரது உறவினர்களையே பினாமிகளாக்கி, சில அணிகளை அவர் கைப்பற்றியுள்ளாராம். அதற்காக அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட செல்ல, அதற்கு முன்பே ஒரு இளம் பெண் முக்கிய ஆவணங்களுடன் வெளியேறிவிட்டாராம். அந்த இளம் பெண், சாராய சாம்ராஜ்ய அதிபர் விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள். ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகள் போல் நடக்கும், இந்த சம்பவங்களை கவனிக்கும் போது, இது ஒரு ஜனநாயக நாடுதானா என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்படத்தான் செய்யும். தேர்தலுக்கு முன், சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கோடிக்கணக்கான ரூபாயை மீட்டு, சராசரி இந்தியனுக்கு உதவுவதாக கூறிய கட்சிகள், தற்போது நம் தேசத்திலேயே சர்வசாதாரணமாக உலவும் இந்த கோடிகளை பார்த்து, அந்த, "கேடி'கள் மவுனமாக இருப்பதற்கு என்ன அர்த்தம்? ஏதோ இருக்கு, என்னமோ நடக்குது, எல்லாருக்கும் கொள்ளையில் பங்கு இருக்கு என்று, இன்று, சாமான்ய இந்தியனுக்குப் புரிகிறது. இருந்தாலும் என்ன... அவன் இந்த நெருப்பு வெயிலில் பருப்பு வாங்க ரேஷன் கடையில் க்யூவில் நின்று கொண்டிருக்கிறான். கிரிக்கெட் ஆட்டமா, சூதாட்டமா? இதற்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மவுசு அல்லது மவுசு இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்? சினிமா உலகினர், தொழிலதிபர்கள், தொலைக்காட்சி சேனல்கள், அரசியல்வாதிகள் அனைவரும் சேர்ந்து, கிரிக்கெட்டை வைத்து மக்களை ஏன் முட்டாள்களாக்குகின்றனர். ஏற்கனவே மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, டில்லி, பஞ்சாப், கோல்கட்டா, ராஜஸ்தான் என்று எட்டு அணிகள் ஐ.பி.எல்.,லில் இருக்க, போதாக்குறைக்கு புதியதாக கொச்சி மற்றும் புனே அணியும் உருவாக்கப்பட்டது. இதில் கொச்சி அணி மட்டும் 1,533 கோடிக்கு, "ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வோல்ட்' என்ற நிறுவனத்தால் ஏலத்தில் எடுக்கப்பட்டது என்றால், மொத்தம் எத்தனை ஆயிரம் கோடிகள் இந்த கேடு கெட்ட ஆட்டத்தில் புழங்குகிறது என்று யோசித்து பாருங்கள். இந்த கொச்சி அணியின் பங்குகளில், தன் காதலி சுனந்தா புஷ்கருக்கு 70 கோடி ரூபாய்க்கான பங்கை, இலவசமாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூர் பெற்றுத் தந்தார் என்பது தான், ஐ.பி.எல்.,லின் தலைவர் லலித் மோடியின் குற்றச் சாட்டு. ஆனால், லலித் மோடி மட்டும் நேர்மையானவரா என்றால், அதுதான் இல்லை. அவர் அமெரிக்காவில் இருந்தபோதிலும், 400 கிராம் கோகைன் போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகவும், ஆள்கடத்தல் மற்றும் தாக்குதல் நடத்தியதற்காகவும், இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை அடைந்ததாக சொல்கின்றனர். இப்படிப்பட்ட ஒருவர், மிக உயர்ந்த பதவியில் இருப்பது, அப்பதவிக்கு கேடு என்று சொல்ல முடியாது; இப்படிப்பட்டவர்கள் தான், இன்று உயர் பீடங்களை அலங்கரிக்கின்றனர். இது இந்தியாவின் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மிகவும் பயங்கரமாகவும் இருக்கிறது. டில்லியில் காமன்வெல்த் போட்டிக்காக கட்டப்பட இருக்கும் மெட்ரோ பாலத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி, 400 குடும்பங்கள் துரத்தப்பட்டுள்ளன. அவர்கள், தங்கள் குடிசைகளையும் இழந்து தெருவில் அனாதைகளை போல், இன்று நாய்களை விட மோசமான நிலையில் வாழ்கின்றனர். அந்த 400 குடும்பங்களில், 300 குடும்பங்கள் தமிழர்கள். விரைவில் நடக்கவிருக்கும் காமன் வெல்த் போட்டிக்காக, டில்லியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆனால், ஏழ்மையை விரட்டுவதாக கூறி, ஆட்சியை பிடிக்கும் அரசியல்வாதிகள், ஏழைகளை விரட்டுவதுதான் தொடர்ந்து நடந்து வரும் அவலம். அதற்கேற்றாற் போல், தெற்கு டில்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே, நேரு விளையாட்டு அரங்குக்கு செல்லும் வகையில் மெட்ரோ ரயில் பாலம் கட்டப்படுகிறது. இந்தப் பகுதியில் 35 ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வரும் விளிம்பு நிலை மக்கள், இரவோடு இரவாக துரத்தப்பட்டுள்ளனர்; இது என்ன நியாயம்? இரண்டுமே விளையாட்டு தான். ஒரு விளையாட்டு, பணக்காரனை மேலும் கொழிக்கவும், செழிக்கவும் வைக்கிறது; இன்னொரு விளையாட்டு, ஏழைகளை, அவர்களுடைய குடிசைகளை விட்டு நடுத்தெருவுக்கு துரத்துகிறது. இங்கே, யாரும் மாற மாட்டார்கள். மறுபடியும் அவர்கள் ஓட்டு கேட்க வருவர். நாமும் மாறாமல், அவர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் வாங்கி, ஓட்டுப் போடுவோம். அரசியல்வாதிகளுக்கு ஒரு கோரிக்கை... யார், யாரோ, ஆயிரம் கோடிகளில் சம்பாதிக்க, உங்களுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்தும் எங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயா? ஆகவே, இனியாவது எங்களது ஓட்டுக்கான பணத்தை உயர்த்தி, ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரமாவது கொடுங்கள். ப்ளீஸ்... உங்களுக்கு ஐந்து வருஷம் சான்ஸ். எங்களுக்கோ ஐந்து வருஷத்திற்கு ஒருமுறைதான். இந்த முறை கூட கொஞ்சம் போட்டுப் கொடுங்க....
தமிழகம்
தமிழகத்தில் 45% குளங்கள் மாயம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சேலம்: தமிழகத்தில் உள்ள குளங்களின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் சீர்குலைவு, ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் 45 சதவீதம் குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள். தமிழகம் மலை மறைவு பிரதேசத்தில் உள்ளது. தமிழகத்தின் புவி மேல் பரப்பு 73 சதவீதத்துக்கும் அதிகமான பாறைகளை கொண்டதாகும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம். தமிழகத்தில் உள்ளூராட்சி அமைப்பு மற்றும் மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் நிலத்தடி நீரை சேமிக்க குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்ளூராட்சி அமைப்பின் கீழ் 16 ஆயிரத்து 477 சிறு குளங்களும், 3,936 நடுத்தர குளங்களும் மழையை நம்பியுள்ளது. மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் மழையை நம்பிய குளங்கள் ஐந்தாயிரத்து 276, நதி நீர் பெறும் குளங்கள் மூன்றாயிரத்து 627, தனியார் குளங்கள் ஒன்பதாயிரத்து 886 உள்ளது. கடந்த சில ஆண்டாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் ஆக்ரமிப்புகள் மற்றும் நிலப்பயன்பாட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நீர் பயன்பாட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குளங்களின் கட்டுமான அம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நீர் பிடி பகுதியின் வனப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் நகர்மயமாதல் உள்ளிட்டவற்றால் குளங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் 32 ஆயிரத்து 202 குளங்கள் இருந்தது. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது தெரிய வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் 15 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்ததோடு இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. இதுகுறித்து தமிழ்நாடு நதிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அண்ணாதுரை நமது நிருபரிடம் கூறியதாவது: கடந்த 2007-08 ம் ஆண்டு ஏரி, குளம் ஆகியவற்றை பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், 2009 ம் ஆக்கிரமிப்பு பகுதியில் 10 ஆண்டாக குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. எனவே, பெரும்பாலான ஏரி, குளங்கள் மாயமாகிவிட்டது. மதுரையில் 39 சதவீதமும், சென்னையில் 60 சதவீதம் குளங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சேலம் திருமணி முத்தாற்றை ஒட்டியிருந்த பகுதிகளில் ஒரு குளம் கூட இல்லை. குளம் நிறைந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் செய்பவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் பட்டா போட்டு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 45 சதவீதம் குளங்கள் தமிழகத்தில் மறைந்துவிட்டது தெரிய வந்துள்ளருது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் குளங்கள் அனைத்தும் மறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம்
தமிழக அணி ஆந்திரா பயணம்
சென்னை : தமிழக பால் பாட்மின்டன் சீனியர் அணி, ஆந்திராவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின், நந்திலால் என்ற இடத்தில் தேசிய அளவிலான பால் பாட்மின்டன் போட்டிகள் இன்று 2ம் தேதி தொடங்கி வரும் 6ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்த அணியின் காப்டன் மாரிமுத்து தலைமையில், பயிற்சியாளர் வைத்தியநாதன் உட்பட, சீனியர் பிரிவில், ஆண்கள் மற்றும் பெண்கள் என 20 பேர் நேற்று தனி பஸ் மூலம் ஆந்திராவிற்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களை, தமிழக பால் பாட்மின்டன் சங்கத்தின் செயலர் சீனிவாசன் மற்றும் துணைச் செயலர் எழிலரசன் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். கடந்த முறை சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த பால் பாட்மின்டன் போட்டியில் தமிழக அணி முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
ஆசிரியர் பயிற்சி கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வலியுறுத்தல்
மதுரை : பட்டப் படிப்பு மற்றும் தொழிற்படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளதைப் போல, ஆசிரியர் பயிற்சிக்கான கல்விக் கட்டணத்தையும் நிர்ணயித்தால், கல்விக்கடன் வழங்குவதில் முரண்பாடு இருக்காது.தொழிற்படிப்பை எடுத்துக் கொண்டால், பொறியியல் படிப்புக்கு ஒரு செமஸ்டருக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் 32 ஆயிரத்து 500 ரூபாய். இதுதவிர விடுதி கட்டணம், புத்தக கட்டணம், தேவைப்பட்டால் கம்ப்யூட்டர் வாங்குவதற்கு கடன் தரப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணத்திற்கு, "கொட்டேஷன்' வழங்கப்பட்டாலும், அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல், வங்கிகள் கடன் தருவதில்லை.பி.எட்., எனப்படும் ஓராண்டு கால ஆசிரியப் பயிற்சி, டி.டி.இ., எனப்படும் இரண்டாண்டு கால டிப்ளமோ ஆசிரியப் பயிற்சிக்கு, முறையான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. ஆசிரியப் பயிற்சிக்கு அரசு கட்டணம் 5,000 ரூபாய் என கூறப்பட்டுள்ளது. தனியார் கல்வியியல் கல்லூரிகளில் டியூஷன் கட்டணம், விடுதி கட்டணம், சீருடை, நன்கொடை அனைத்தும் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.ஆசிரியப் பயிற்சிக்கு விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். கல்லூரிக்கு அருகிலேயே வீடு இருந்தால் கூட, விடுதியில் தங்க வேண்டும். ஆனால், வங்கியில் கல்விக் கட்டணம், புத்தக கட்டணத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. கல்லூரியிலிருந்து வீடு இருக்கும் தூரத்தை கணக்கில் எடுத்து, தேவைப்பட்டால் மட்டுமே விடுதி கட்டணம் தருகிறது. அருகில் வீடு இருந்தால், விடுதி கட்டணம் தருவதில்லை. ஆக மொத்தத்தில் வெறும் 5,000 ரூபாய் மட்டுமே கடனாக கிடைக்கிறது.இது தெரியாமல், கல்விக்கடன் தருவதில்லை என ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தவர்கள் புலம்புகின்றனர். டிப்ளமோ ஆசிரியப் பயிற்சியின் நிலைமையும் இப்படித்தான் உள்ளது.பொறியியல் படிப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்டதைப் போல, ஆசிரியப் பயிற்சிக்கு அரசே கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தால் தான், வங்கிகள் தயக்கமின்றி கடன் தர முடியும். வரும் கல்வியாண்டிலாவது அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகம்
உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை * கதர் வாரியம் அறிவிப்பு
மதுரை : கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.,) மற்றும் வாரியத்தின் (கே.வி.ஐ.பி.,) கீழ் செயல்படும் கதர் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.கதர் துணி, பாலி வஸ்திரா போன்ற கைத்தறி தயாரிப்பு ரகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகள் தலா பத்து சதவீத தள்ளுபடியும், கே.வி.ஐ.சி., 10 சதவீத தள்ளுபடியும் வழங்கின. தற்போது, இந்த தள்ளுபடி சதவீதத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசு, கே.வி.ஐ.சி., யின் 20 சதவீத தள்ளுபடி, கதர், பாலி வஸ்திரா துணி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தொகையின் 20 சதவீதத்தை கதர் உற்பத்தி நிலையான நூற்பு, நெசவு உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கவேண்டும். ஒவ்வொரு தொழிலாளருக்கும், தனி வங்கிக்கணக்கு மூலம் இத்தொகை நேரடியாக வழங்கப்படும். அடுத்த 30 சதவீதத் தொகையை கதர் உற்பத்தியாளர்கள் உற்பத்தி, பயிற்சி, மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம். மீதியுள்ள 45 சதவீதம் கதர் விற்பனையாளர்களுக்கு கொடுக்கப்படும். இத்தொகையில் தங்களை விளம்பரப்படுத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கலாம். கடைகளை மேம்படுத்திக் கொள்ளலாம். கே.வி.ஐ.சி., கோட்ட இயக்குனர் எம்.டி. வாகோடே கூறுகையில்,"" கதர் உற்பத்தி யாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இதுவரை ஊக்கத்தொகை கிடைக்கவில்லை. இதனாலேயே தள்ளுபடியை மாற்றியுள்ளோம். இப்புதிய முறையின் மூலம் கதர் உற்பத்தியாளர், தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவருமே பயன்பெறுகின்றனர். மாநில அரசின் 10 சதவீத தள்ளுபடி குறித்து இதுவரை முடிவு செய்யப்படாததால், வாடிக்கையாளருக்கு அப்படியே தள்ளுபடியாக வழங்கப்படுகிறது,'' என்றார்.
தமிழகம்
போக்குவரத்து ஊழியரின் ஓய்வு நலநிதி ரத்தா
மதுரை : போக்குவரத்து ஊழியர்களுக்காக அ.தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஓய்வு நலநிதி திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 1992ம் ஆண்டு முதல் ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஊழியரிடமும் மாதந்தோறும் சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டது. அதே வகைக்காக அரசு சார்பில் 1000 ரூபாய் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு ஒரு நிதியாக உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாகும் நிதியில் இருந்து, ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு மாதம் தோறும் சிறிய தொகை ஓய்வு நலநிதியாக வழங்கப்படும். "எம்ப்ளாயீஸ் போஸ்ட் ரிட்டயர்மென்ட் பெனிபிட் ஸ்கீம்' எனப்படும் இத்திட்டத்தில் 1992ம் ஆண்டுக்குப்பின் ஐந்தாண்டுகள் கழித்து ஓய்வு பெறுவோருக்கு 450 ரூபாய், 2002ம் ஆண்டு ஓய்வு பெறுவோருக்கு 600 ரூபாய், 2007ம் ஆண்டு ஓய்வு பெறுவோருக்கு 750 ரூபாய் என ஐந்தாண்டுக்கு ஒருமுறை 150 ரூபாய் அதிகரித்து வழங்கப்படும். இந்த தொகையை 1992 முதல் இன்று வரை ஊழியர்கள் பெற்று வருகின்றனர். ஆனால் விரைவில் இத் திட்டத்தை நிறுத்தப் போவதாக ஊழியர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது. "இத்திட்டத்தில் தற்போது பயன்பெறுவோர் எத்தனை பேர், இன்றைய தினத்தில் அவர்களுக்குரிய தொகையை திருப்பி வழங்கினால் எவ்வளவு தொகை அரசுக்கு செலவாகும்' எனக் கேட்டு, போக்குவரத்து ஊழியர் களுக்கான பென்ஷன் டிரஸ்ட் அலுவலகத்தில் இருந்து அனைத்து போக்குவரத்துக் கழக அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தால் விரைவில் இத்திட்டத்தை ரத்து செய்யப் போகின்றனர்; அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்ததால் தி.மு.க., ஆட்சியில் இதற்கு முடிவு கட்ட உள்ளனர் என பேசி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, "அப்படி எதுவுமில்லை' என்றனர். தொழிற்சங்க நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, "தொழிற்தாவா சட்டப்படி ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட சலுகையை, நிர்வாகம் தன்னிச்சையாக நிறுத்த முடியாது' என்றனர்.
தமிழகம்
தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவது எப்போது
தூத்துக்குடி :  பல ஆண்டாக கிடப்பில் போட பட்டுள்ள, தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க, மத்திய அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டுமென தென்மாவட்ட மக்கள் எதிர் பார்த்துள்ளனர். இந்தியா - இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டம், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்டது. வாரம் மூன்று முறை தனியார் மூலம் அக்கப்பல் போக்குவரத்து இயக்கப்படும். அதில், தூத்துக் குடியில் இருந்து கொழும்புவிற்கு, ஆறு மணி நேரத்தில் சென்றுவிடலாம். ஒரு கப்பலில் 300 பேர் வரை பயணிக்கலாம். பயணக்கட்டணம், சென்னை - கொழும்பு விமானக்கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும் என, தனியார் மற்றும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். கப்பல் நிறுத்த தளம், கப்பலில் வந்து செல்லும் பயணிகள் அமர இருக்கைகள், தொலைதொடர்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தூத்துக்குடி துறைமுகத்தில், 2004ம் ஆண்டே ஏற்படுத் தப் பட்டுவிட்டன. ஆனால், இலங்கையில் ராணுவம்- விடுதலைப்புலிகளுக்கு இடையே நடந்துவந்த உள்நாட்டுப்போரால், பாதுகாப்பு கருதி இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு, அப்போது மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இக்கப்பல் போக்குவரத்தை உடனடியாக துவங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் பொதுமக்கள், வியாபாரிகள் மனிதச் சங்கிலிஉள்ளிட்டபல் வேறு போராட்டங் களை நடத்தினர்.மத்திய அரசிற்கு அறிக்கை: இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க அனுமதிக்க வேண்டுமென தூத்துக்குடி துறைமுக நிர்வாகம், மத்திய கப்பல்துறை அமைச்சகம் மூலமாக, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.  மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தால், உடனடியாக கப்பல் போக்குவரத்தை துவக்க துறைமுகம் தயாராகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பயணிகள் கப்பலை இயக்க தனியார் பலர், துறைமுக நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.துவங்குவது எப்போது: பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைந்துள்ள சூழ்நிலையில், சுற்றுலாப்பயணிகள், பக்தர்களின் நலன்கருதி தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க, மத்திய அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டுமென தமிழக தென்மாவட்ட மக்கள் எதிர் பார்த்துள்ளனர். கனவுத்திட்டமான, சேதுசமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது போல, இத்திட்டமும் ஆகிவிடக் கூடாது என்பதே தொழிலதிபர்கள், வியாபாரிகளின் ஆதங்கம்.
தமிழகம்
பூப்பல்லக்கில் எழுந்தருளினார் கள்ளழகர் மழையில் நனைந்தபடி பக்தர்கள் பரவசம் : மதுரையில் இருந்து விடை ப
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளத்தில் நடந்த பூப் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை பலத்த மழையில் நனைந்தபடி பக்தர்கள் தரிசித்தனர்.அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் ஏப்.28ம் தேதி வைகை ஆற்றில் இறங்கி அழகர் அருள்பாலித்தார். அன்று பகலில் பக்தர்களின் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடந்தது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். மறுநாள் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும் நடந்தது. ஏப்.30ம் தேதி பகலில் அங்கிருந்து புறப் பட்ட கள்ளழகர் இரவு தல்லாகுளம் வந்தார்.நேற்று அதிகாலை மூன்று மணிக்கு தல்லாகுளத்தில், மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிராம மக்களும் கலந்துகொண்டனர். அதிகாலை 1.30 மணி முதல் அந்தப் பகுதியில் மழை பெய்ய துவங்கியது. 3 மணிக்கு பூப்பல்லக்கு புறப்பட்டபோது மழையின் வேகமும் அதிகரித் தது. கொட்டிய மழையில் நனைந்தபடியே பக்தர்கள் அழகரை தரிசித்தனர். தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னதி முன் அழகருக்கு தீப ஆராதனை நடந்தது. பின் பெருமாள் கோயில் வரை உள்ள மண்டகபடிகளில் அழகர் எழுந்தருளினார். ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில், புதூர் வழியாக நேற்று மதுரையை கடந்து, அப்பன் திருப்பதியை அடைந்தார். இன்று அதிகாலை அங்கிருந்து புறப் பட்டு, காலை 9 மணிக்கு அழகர்கோயிலை அடைகிறார். 100 கிலோ பூக்களால் அலங்காரம்: கள்ளழகர் எழுந்தருளிய பூப் பல்லக்கை 45 கிலோ மல்லிகை, 15 கிலோ சம்பங்கி, 10 கிலோ கனகாம்பரம், 15 கிலோ செவ்வந்தி, 15 கிலோ கோழிக்கொண்டை உட் பட பல்வேறு பூக்களால் அலங்கரித்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் மூலம் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தமிழகம்
மலர்கள் பூத்துக் குலுங்கும் சிம்ஸ் பூங்கா
குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில், கோடை சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது; பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன; செயற்கை ஏரியில் கூடுதலாக படகு விடப்பட்டுள்ளதால், படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.கடந்த 1874ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த குன்னூர் சிம்ஸ் பூங்கா முற்றிலும் இயற்கை தன்மை வாய்ந்தது. இப்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட அரிய மர வகைகள் உள்ளன. கற்பூர வகை மரங்களில் மட்டும் 27 வகைகள் உள்ளன. கடந்த 1869ம் ஆண்டு நடப்பட்ட "யுஜிநாய்டஸ்' என்ற கற்பூர மரம் தான் மிகப்பழமையானது.கடந்த 1870க்கு பின், பல வகை மர வகைகள் நடப்பட்டுள்ளன. 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், எங்கும் காண கிடைக்காத ருத்ராட்சை மரம், காகித மரம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா, மரதாகை உட்பட பல வகை பழமை வாய்ந்த மரங்கள், பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்துகின்றன. பூத்துக் குலுங்கும் மலர்கள்:இயற்கை பூங்காவில், சுற்றுலாவினரைக் கவர ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள செயற்கை பூங்காக்களில், பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஏழு வண்ணங்களில் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, அனைத்தும் பூத்துள்ளன. இதில், வெள்ளை, சிவப்பு நிறத்தைக் கொண்ட இரு வண்ண ரோஜா, சுற்றுலாப் பயணிகளின் விழிகளை விரியச் செய்கிறது. 30 வகையைச் சேர்ந்த 75 ஆயிரம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பெருமளவு செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. செயற்கை ஏரியில் படகு சவாரி:பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஏரியில், படகு சவாரி விடப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டாக நான்கு படகுகள் விடப்பட்டிருந்தன. குட்டி ஏரியில் படகு மூலம் வட்டமடிக்க அதிகளவு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதால், கூடுதலாக மூன்று படகுகள் சேர்த்து ஏழு படகுகள் விடப்பட்டுள்ளன. தவிர, பூங்காவுக்கு வரும் குழந்தைகள், சிறுவர், சிறுமியரை குஷிப்படுத்த அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவில், பல புதிய விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பழக் கண்காட்சிக்கு தயார்:பூங்காவில் வரும் 22, 23 தேதிகளில் பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. குளிர் பிரதேச பழங்களான ஆப்பிள், பிளம்ஸ், பீச், பெர்சிமன், லக்கோட், செர்ரி மோயர் போன்றவையும், மித வெப்பநிலையில் வளரக்கூடிய துரியன், மங்குஸ்தான், லிச்சி, ரம்பூட்டான் போன்ற பழங்களும், மா, பலா, வாழை போன்ற முக்கனிகளும், மலைக் காய்கறிகளும் காட்சிக்காக வைக்கப்பட உள்ளன.
தமிழகம்
சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு வழிபாடு 18 அடி உயர சிலை நிறுவி 80 ஆண்டு நிறைவு
சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் உள்ள, 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமி சிலை நிறுவப்பட்டு, 80 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி இன்று (2ம் தேதி) ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடக்கிறது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமி பிரசித்தி பெற்றது. தாணுமாலய சுவாமி கோவில் மீது, ஆற்காடு நவாப் படையெடுத்த போது இக்கோவிலிலிருந்த ஆஞ்சநேய சுவாமி சிலை கோவில் ராஜகோபுரம் அருகே, மண்ணில் புதைந்து வைத்ததாக நம்பப்படுகிறது. கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்கள், சுவாமி சிலை புதைத்து வைத்திருந்த இடத்தில் விளையாடியபோது, சிலை வெளியே தெரிந்ததாக கூறப்படுகிறது. மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமி சிலை, வடக்கு பிரகாரத்திலுள்ள ராமபிரான் சன்னிதியின் நேர் எதிரே 80 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.ஆஞ்சநேய சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டால் மூலவரின் சாநித்யம் மறைக்கப்படும் என்பதால், ஆஞ்சநேயசுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இதன் காரணமாகவே, இக்கோவிலில் உள்ள மற்ற சன்னிதிகளில் மக்களின் விருப்பத்திற்கேற்ப தீபாராதனை காண்பிக்கப்படுவதில்லை. ஆஞ்சநேயசுவாமி சிலை பிரதிஷ்டை இல்லாததால், மக்களின் விருப்பத்திற்கேற்ப சுவாமிக்கு விருப்பமான நேர்ச்சைகள் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது. பிரதிஷ்டை செய்யவில்லை எனினும் அதிக சக்தி படைத்தவராக கருதப்படும் சுவாமிக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.மேலும் முழுவெள்ளி அங்கியும், ஒவ்வொரு மாதமும் மூலம் நட்சத்திரத்தில் சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. சுவாமி சிலை நிறுவப்பட்ட நாளான இன்று காலை 6.30 மணிக்கு சுவாமிக்கு ÷ஷாடச அபிஷேகம் நடக்கிறது. பால், தயிர், குங்குமம், களபம், இளநீர், சந்தனம், வாசனை திரவியங்கள், தேன் உட்பட 16 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. இன்று மூல நட்சத்திரம் என்பதால், சுவாமிக்கு மாலையில் முழு வெள்ளி அங்கி சார்த்தப்படுகிறது.
இந்தியா
இது உங்கள் இடம்
குட்டிச்சுவராக்கும் கிரிக்கெட், சினிமா...: எஸ்.குமரவேல், கோவையிலிருந்து எழுதுகிறார்: நம்மை, நம் நாட்டை குட்டிச் சுவராக்க சினிமா, கிரிக்கெட் இந்த இரண்டு மட்டும் போதும். உழைத்துக் களைத்த மனிதன், பொழுதுபோக்கிற்காக மேற்படி இரண்டில் கவனம் செலுத்த, வந்ததே வினை... இதில் பாதிக்கப்படுவது யார், பயன் பெறுபவர் யார்? கோடி, கோடியாய் புரளும் சினிமாவும் சரி, கிரிக்கெட்டும் சரி, தேச நலனிற்காக ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. மாறாக, பணக்காரர்கள் மீண்டும் கொழுத்த பணக்காரர்களாக வழி செய்து, சராசரி மனிதனின் பிழைப்பை கெடுக்கிறது. பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தின் போது, நம்மால் கோடீஸ்வரனான சினிமாக்காரர்களோ (விதிவிலக்கு விவேக் ஓபராய்) அல்லது கிரிக்கெட் வீரர்களோ, வலிய வந்து தங்கள் கோடியில் கொஞ்சம் கொடுத்து உதவியதுண்டா? அப்போது கூட கலை நிகழ்ச்சி நடத்தி, நம் பணத்தைத் தான் சுரண்டுகின்றனர். இந்த சினிமா மற்றும் கிரிக்கெட் டால், நாட்டிற்கு ஏதேனும் பலன் உண்டா என்றால், விடை, "பூஜ்யம்' தான். படிக்காத பாமரன் தான், வெறியனாக இருக்கிறானா, இல்லை... மெத் தப் படித்தவர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், மாணவர்கள் என, ஒட்டு மொத்த பேருமே, இந்த மாய வலையில் விழுந்து, வீணாய் போவது தான் கவலை. சிந்தித்துப் பார்த்தால், யாரோ கோடிகள் சம்பாதிக்க, நாம் நம் உழைப்பை மறந்து, பிழைப்பை கெடுத்து, வருமானத்தை இழந்து, நாட்டின் பொருளாதாரத்தை மறைமுகமாக சீரழித்துக் கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் போட்டிகளின் போது, 50 சதவீதம் உற்பத்தியை இழக்கும் தொழிற்சாலைகள், வழக்கமான பணிகளை மறந்து அல்லது விடுமுறை எடுத்து, தன் வேலையைச் செய்யாதவர்கள், தேர்வில் குறைவாய் மதிப் பெண் பெறும் மாணவர்கள், சண்டை போட்டுக் கொள்ளும் குடும்பங்கள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகும். சமுதாயத்தில் முற்றிப் போன புற்று நோய்களான சினிமா, கிரிக்கெட் இரண்டும், தனி மனிதனை அண்டாமல் இருக்க ஒரு யோசனை... குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக அனுமதித்தால் சினிமா, கிரிக்கெட் இரண்டையும் நுகரலாம் அல்லது விடுமுறை நாட்களில் மட்டும் செலவு செய்யாமல், இவைகளுக்கு நேரம் ஒதுக்கலாம். இல்லையென்றால், சினிமாக்காரன், கிரிக்கெட் காரன் போன்றவர்களின் ஒரு துளி வியர்வைக்கு நாம் ஒரு சவரன் தங்க காசு அளவுக்கு உழைத்து, உழைத்து கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டியது தான். பதவி விலகட்டும்! என்.ராகவன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: பஞ்சாங்கத்தின் அடிப்படையில், சமீபத்தில் பிறந்து இருப்பது விக்ருதி ஆண்டு. விக்ருதி என்றால், மாற்றங்கள் என அர்த்தம். குப்பைமேடு கோபுரமாகவும், கோபுரம் குப்பை மேடாகும் போன்ற மாற்றங்கள் நிகழுமாம். இந்த விக்ருதியின் திருவிளையாடல்களை கண்கூடாக பார்க்கும் வாய்ப்பு, எல்லாருக்கும் கிட்டியுள்ளது. குப்பைத் தொட்டியோ, காலாவதி மற்றும் போலி மருந்துகளால் கோபுரமாக காட்சி அளிக்கிறது; கோபுரமாக இருந்த, அடுக்கு மாடி குடியிருப்பு, "ஸ்லோ மோஷனில்' பூமியில் இறங்கி, குப்பையாக காட்சி அளிக்கிறது. இந்த அதிசயம், உலக செம்மொழி மாநாடு நடைபெற உள்ள, கோவையில் தான் நடைபெறுகிறது. முதலில், 48 குடியிருப்புகள் கொண்ட பிளாக்கில் தான், புதையல் அரங் கேற்றம். தொடர்ச்சியாக, சமீபத்து லேசான மழையால், 24 குடியிருப்பு கட்டடம், இரணியனின் கதாயுதத்தால், பிளந்த தூண் போன்று பிளந்து, தனது பாதாள யாத்திரையை தொடங்கி உள்ளது. இச்சம்பவத்தை ஆன்மிகவாதிகள், "அம்மன் குளத் தில் கட்டியதால் அம்மனின் சீற்றம்' என கருதுகின்றனர். எதிர்க்கட்சிகளோ, "கட்டிங் பர்சன்டேஜ்' என்ற கோணத்தில் பார்க்கின்றனர். ஆட்சியாளர்களோ, ஒப் பந்தக்காரர்களை கை காட்டுகின்றனர். ஒப்பந்தக்காரர்களோ, லோக்கல் பெரிசுகளை சாடுகின்றனர். எது எப்படி இருப்பினும், களங்கம், களங்கம் தான். களங்கத்திற்கு பரிகாரமாக, வாரியத்துறையின் அமைச்சர், தார்மீக பொறுப் பேற்று, பதவி விலகுவது தான் சிறந்த நாகரிகம். மதிக்கத்தெரியாதவர் யார்? ஆ.பட்டிலிங்கம், கோவையிலிருந்து எழுதுகிறார்: "எம்.ஜி.ஆரை மதிக்கத் தெரியாதவர் ஜெயலலிதா. அதனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைகிறேன்' என, அன்பு என்ற ஒருவர் கூறியதாக பத்திரிகையில் படித்தேன். அவர் அ.தி.மு.க.,வில் எப்போது இணைந்தார்; எம்.ஜி.ஆரை பார்த்து பழகியது உண்டா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அவர் இணைந்திருக்கிற தி.மு.க., தலைமை, எம்.ஜி.ஆரை எந்த அளவிற்கு மதித்தது என்ற, பழைய வரலாற்றுச் செய்தியை இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்... முன்பொரு சமயம், அண்ணாதுரைக்கு பிறகு, மதுரையில் தி.மு.க., மாநாடு நடந்தது. அதில், எம்.ஜி.ஆர்., பேசி முடித்தவுடன் கூட்டம் கலைய ஆரம்பித்தது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு சோதனைகள் பல ஆரம்பம் ஆனது. கடந்த அக்., 8, 1972ல், கட்சியின் பொருளாளர் என்ற முறையில், வரவு - செலவு கணக்கை கேட்டார். அதன் பலன், அக்., 10, 1972ல், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் திரைப்பட செல்வாக்கை குறைக்க, முதல்வர் மகன் மு.க.முத்து வை நடிகனாக்கி, எம்.ஜி.ஆர்., மன்றங்களை எல்லாம் முத்து மன்றங்களாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவரும், எம்.ஜி.ஆர்., பாணியிலேயே சில திரைப்படங்களில் நடித்தார். சில நாடகங்களில் கூட எம்.ஜி.ஆர்., வேடமிட்டே நடித்தார். இந்த முயற்சியில் அவர்களுக்கு தோல்வியே ஏற்பட்டது. அதன் பின், "தமிழர் - மலையாளி' என்ற துவேஷம் கிளப்பப்பட்டது. பின் நவ., 12, 1972ல், சட்டசபைக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., பேசும் போது, அவர் மைக் உடைக்கப்பட்டது. பிப்., 4, 1973ல் விருகம்பாக்கத்திலும், அதே மாதம் 25ம் தேதி, ஆவடியிலும் எம்.ஜி. ஆரை திட்டமிட்டு தாக்கினர். தெய்வாதீனமாக இருமுறையும் அவர் தப்பினார். எம்.ஜி.ஆரை, "என் இதயக்கனி' என்றார் அண்ணாதுரை. ஆனால், இவர் களோ, "அதை வண்டு துளைத்து விட்டது' என்றனர். அக்., 1972லிருந்து ஜன., 1976 வரை, எம்.ஜி.ஆர்., ஆதரவாளர்கள் மீது போடப் பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 20 ஆயிரம். அமெரிக்க மருத்துவ மனையில் எம்.ஜி.ஆர்., படுத்துக் கொண்டே இங்கே வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலானவுடன், "இது பெரிய போர்ஜரி; எம்.ஜி.ஆர்., ஒரு குழந்தையின் மனோ நிலையில் இருக்கிறார்' எனக் கூறி, தி.மு.க., பார்லிமென்ட் உறுப்பினர்கள், ஜனாதிபதியை சந்தித்தனர். எம்.ஜி.ஆரின் வேட்பு மனுவை எதிர்த்து, மகஜர் கொடுத்தனர். எம்.ஜி.ஆரை எதிர்த்து போட்டியிட்ட வல்லரசு என்பவரும், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இன்னும் பல செய்திகள் உள்ளன. எனவே, எம்.ஜி.ஆரை மதிக்கத் தெரியாதவர் ஜெயலலிதாவா அல்லது அவர் தற்போது இணைந்திருக்கும் கட்சியின் தலைமையா என்பதை நிர்ணயம் செய்ய, அவர் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். நல்ல வேளை விடவில்லை! அ.குணசேகரன், வக்கீல், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: பொதுவாக சிறைக்குள் செல்பவர்கள், திருந்தி நல்ல மனிதர் களாக வரவேண்டும் என்பது தான், நம் அனைவரின் விருப்பம். சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரக் கணக்குப் படி, இந்திய சிறைச்சாலைகளில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 357, கைதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், மொத்தம் சிறைச்சாலைகளின் கொள்ளளவு 2 லட்சத்து 29 ஆயிரத்து 874 பேர் தான். இப்படி இட நெருக்கடியுடன் தான், இந்திய சிறைச் சாலைகள் இருந்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சிறைச்சாலைகளில் இருந்து கொண்டே, குற்றவாளிகள் வெளி உலகுடன் தொடர்பு கொண்டு கொடியக் குற்றங்கள் அரங்கேற்றி வருகின்றனர். பெரும்பான்மையான கூலிப்படையினரின் குற்றங்கள், சிறைக்குள்ளேயே முடிவு செய்யப்படுகின்றன. கோவை குண்டு வெடிப்பு கைதிகள் சிறைக்குள் இருந்து கொண்டே, வெளி உலகை தொடர்பு கொண்டது, மதானியின் மனைவி சிறைக்கு மதானியை சந்திக்க சென்ற போது, பல மொபைல் போன்களுடன் கைது செய்யப்பட்டது நாம் அறிந்ததே. சிறைக்குள் கைதிகள், அவர்களின் வசதிக்கேற்ப சுகவாசிகளாக வாழ்ந்து வருவது வழக்கத்தில் இருக்கிறது. இது இப்படி இருக்க, பீகாரில் ஒரு மாவட்ட ஆட்சியரை கொலை செய்த வழக்கில் ஆனந்த் மோகன் என்ற குற்றவாளி, ஒரு சிறையிலிருந்து மறு சிறைச் சாலைக்கு மாற்றப்பட்ட போது, வழியில் ஒரு அரசியல்வாதி வீட்டில் தங்கி பேச்சு வார்த்தை செய்து சென்றதும்- பப்பு யாதவ் என்ற முன்னாள் கிரிமினல் எம்.பி., பீகாரில் சிறைக்குள் இருந்து கொண்டே கட்ட பஞ்சாயத்து செய்து வந்ததும், சுப்ரீம் கோர்ட் டில் பொது நலவழக்கு தொடரப்பட்டு, பின்னர் டில்லி, திகார் ஜெயிலுக்கு அவர் மாற்றப்பட்டதும் தெரிந்ததே! இப்படி தமிழகமாகட்டும், வேறு எந்த மாநிலமாகட்டும் சிறைச்சாலைகள் இன்னும் கைதிகளுக்கு சொர்க்க புரியாகத்தான் இருந்து வருகின்றன. இதில் படு அதிர்ச்சி தருவதாக, பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாக சொல்லப்பட்ட, நளினியிடமிருந்து தற்போது மொபைல்போன் கைப்பற்றப்பட்டதும், அதன்மூலம் அவர் வெளிநாடுகளுக்கு கடந்த நான்கு வருடங்களாக தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகச் சொல்லியுள்ளது, எந்தளவுக்கு சிறைக்குள் கொடியக் குற்றவாளிகளுக்குக் கூட எளிதாக மொபைல்போன் கிடைக்கிறது என்பதை காட்டுகிறது. "நளினி திருந்திவிட்டார்; அவரை விடுதலை செய்ய வேண்டும்' என விடுக்கப்பட்ட வேண்டுகோளை, நல்லவேளை தமிழக அரசு நிராகரித்துள்ளது சரியே. கொடியக் குற்றவாளிகள் முன்பிருந்த மாதிரி அந்தமான் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட் டால் தான், அவர்கள் மேலும், மேலும் குற்றங்கள் செய்வதை தடுத்து நிறுத்த முடியும். உடனடியாக, தமிழகம் முழுவதும் பணத்திற்காக விலை போகும் சிறைச் சாலை அதிகாரிகளை இனம் கண்டு, களை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அஞ்சும் மக்கள்! பா.மகாலட்சுமி, தி.நகர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "நடிகையை கற்பழிக்க முயன்றவருக்கு சிறை' என்ற செய்தி படித்தேன். இந்த வழக்கு 1997ம் ஆண்டு தொடரப்பட்டது. 13 ஆண்டுகளாக விசாரிக்கப் பட்டு, தற்போது தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு 18 மாத சிறை தண்டனையும், 1,500 ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது. ஏன் இந்த காலதாமதம்? இப்படி தான், நம் நாட் டில் வழக்குகள் மிகப் பெரிய அளவில் தேங்கியுள்ளன. பொதுவாக மக்கள், போலீசில் புகார் செய்து வழக்கு பதிவு செய்வதற்கு அஞ்சுகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் கோர்ட்டுகளின் தாமதம் தான். பல ஆண்டுகளுக்கு முன் வழக்கு போட்டவர்களுக்கே இன் னும் தீர்ப்பு வழங்காத நிலையில், தங்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம். குற்றங்கள் அதிகரிக்கவும் இது காரணமாக உள்ளது. நடைமுறை சிக்கலை முதலில் பாருங்கள்! பி.எஸ்.குமார், தூத்துக்குடியிலிருந்து எழுதுகிறார்: "தமிழக அரசு முத்திரையில் கோபுரச் சின்னம் இருப்பதால், அதை மாற்ற வேண்டும்' என, சட்டசபையில் விடுதலைச் சிறுத்தைகள் சட்டசபை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு வலுசேர்க்க அவர் கூறும் காரணங்கள் வேடிக் கையாகவும், விசித்திரமாகவும் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை மத உணர் வை விட, ஜாதி உணர்வே மேலோங்கி நிற்கிறது. ஜாதியால் ஏற்படும் குழப் பங்களே, பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ரவிக்குமார் சார்ந்துள்ள கட்சி, அவர்களின் சின்னத்தில், "ஜாதிய ஒழிப்பே மக்கள் விடுதலை' என்பதை வாசகமாக வைத் துள்ளது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஜாதி ஒழிப்பிலும் மதச்சார்பு அகற்றுவதிலும் எப்படி செயல்பட்டிருக்கிறது என்பது, அவருக்கு தெரியாதா? "அரசு அலுவலகங்களில் ஜாதி சார்ந்த தொழிற்சங் கங்கள் இருக்கக் கூடாது' என ரவிக்குமார் வலியுறுத்துவாரா? உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், நடைமுறை உண்மையை யோசிப்பது நல்லது. மதச்சார்பை எடுத்துக் கொண்டால், அது இறைவனைத் தேடும் வழி மட்டுமே. அதை யாரும் சார்ந்து வாழ்வதில்லை.சமீபத்தில், மும்மதங்களையும் சார்ந்த சகோதரர்கள் அனைவரும் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட, கொளுத்தும் கடும் வெயிலில் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு, நெடும் பயணம் சென்றனர்; பலர் வழியில் மயங்கியும் விழுந்தனர். எதற்காக? செந்தூர் எக்ஸ்பிரசை தினமும் இயக்குவதற்காக, மக்களுக்கு எது உடனடித் தேவை என்பதும், எது அவசியமில்லை என்பதையும் மக்களிடம் தானே கேட்க வேண்டும். ஒரு ரயிலை இயக்குவதற்கு ஒரு மாநிலத்தின், இரு மாவட்டத்தைச் சேர்ந்த மதம் சார்ந்த மக்கள், கொளுத்தும் வெயிலில் சுருண்டு விழுந்து நடைபயணம் செல்வது யாருக்கு அசிங்கம்? மதத்தை, மதச்சார்பை விட அரசு வெட்கித்தலைகுனிய வேண்டியது இதற்குத் தான். சர்டிபிகேட்டுகளை கிழிப்பாரா! கே.என்.ஜெயராஜ், மதுரையிலிருந்து எழுதுகிறார்: தர்மபுரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில், ஆசிரியை ஒருவர், தனக்கு திருத்துவதற்காக தரப்பட்ட 15 விடைத்தாள்களில் ஒன்றை கிழித்தெறிந்து குழப்பம் செய்து இருக்கிறார். இந்தச் செய்தியைப் படித்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந் தேன். மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, கடும் முயற்சி செய்து படிக்கின்றனர். இவருக்கு சம்பளம் பத்தவில்லை எனில், தன்னுடைய சர்டிபிகேட்டுகளை சுக்கு நூறாக கிழித்து, எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம். பதிலாக, மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருக்க வேண்டாம். மேற்படி ஆசிரியை மூன்று முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டவராம்; மனநிலை பாதிக்கப்பட்ட இவரை, எப்படி விடைத் தாள் திருத்த அதிகாரிகள் தேர்வு செய்தனர் என்பதும், இவர் எப்படி மற்ற 14 விடைத்தாள்களையும் நல்ல மனநிலையில் திருத்தி இருப் பார் என்பதும் கேள்விக்குறி. மேலும், இவர் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துகிறார்? இவரிடம் படித்த மாணவர்களின் கதி ஆராயப்பட வேண்டியதாக உள்ளது!
தமிழகம்
முதுமலையில் யானை சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கூடலூர் : ஒன்றரை மாத இடைவெளிக்கு பின் திறக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பகத்தை, நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், மார்ச் 12ல் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் இருந்த மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. அதனால், புலிகள் காப்பகம் மார்ச் 16ம் தேதி மூடப்பட்டது.கடந்த சில நாட்களாக பெய்யும் கோடை மழை காரணமாக, வறட்சியில் சிக்கிய புலிகள் காப்பகம் பசுமைக்கு மாறியது. நேற்று காலை முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு வனத்துறை வாகனங்கள், சுற்றுலாப் பயணிகளை வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்றன. முதல் வாகனத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கு வனச்சரகர்கள் சேகர், சந்திரசேகர், ஹாலன், நாகராஜ் ஆகியோர் இனிப்பு வழங்கி அனுப்பி வைத்தனர்.யானைகளில் சுற்றுலாப் பயணிகள் சவாரியும் நேற்று காலை துவங்கப்பட்டது. காலையில் மட்டும் 350 சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காலையிலே ஏராளமான சுற்றுலா வாகனங்கள் குவிந்ததால், தெப்பக்காடு பகுதியில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டது.
தமிழகம்
ஆறுகளை உருவாக்கி நாட்டை வளமாக்கும் மேற்கு தொடர்ச்சி மலை
தேனி : இந்தியாவில் பெரும்பாலான நதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே உருவாகின்றன. இவற்றில் உருவாகும் ஆறுகள் தான் நாட்டின் வளத்திற்கு முக்கிய காரணம். மேற்கு தொடர்ச்சி மலை குஜராத் மாநிலம் தப்தியில் துவங்கி தமிழகத்திலுள்ள கன்னியாகுமரி வரை கர்நாடகா, கேரளா என பரவியுள்ளது. இவற்றில் குஜராத் மாநிலத்தில் நர்மதா, தப்தி ஆகிய ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலை துவங்கும் இடத்தில் உருவாகுகின்றன. இவை குஜராத் மாநில வளத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இதையடுத்து கிருஷ்ணா, கோதாவரி ஆறுகள் மலையின் மத்திய பகுதியில் உருவாகி ஆந்திர மாநிலத்தை வளம் கொழிக்க செய்கின்றன. கர்நாடக மாநில பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் கபினி, தமிழக பகுதிக்கு காவிரியாக வந்து சேர்ந்து தஞ்சை, திருச்சி மாவட்டங்களை வளம்கொழிக்கசெய்கிறது. கேரள பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நெய்யாறு, அமராவதி ஆறாக தமிழகத்திற்குள் வருகிறது. இதே போல் கேரள பகுதியில் முல்லையாறு, பெரியாறு ஆகியவை மலைப்பகுதிகளில் ஓடிவந்து பெரியாறு அணையில் தேங்கி முல்லைப்பெரியாறாக தமிழகத்திற்கு ஓடி வருகிறது. இதை நம்பி தென்மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் உள்ளன. மேகமலை பகுதியில் இருந்து மூலவைகை ஆறு உருவாகி வைகை அணைக்கு வைகை ஆறாக வந்து சேர்கிறது. நாட்டின் முக்கிய நதிகள் அணைத்தும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே உருவாகின்றன. ஆற்றில் தண்ணீர் வளம் குன்றாமல் வர மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது அவசியம். இந்த பணியில் தான் கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தை பாதுகாத்து வரும் பெரியாறு பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை வனங்களை பாதுகாப்பது அவசியம். அங்குள்ள மரங்களை வெட்டாமல், வன விலங்குகள் அழியாமல் இருந்தால் நமக்கு தேவையான மழை கிடைக்கும். காடு வாழ்ந்தால், நம் ஒவ்வொருவரின் வீடும் வாழும்.
தமிழகம்
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் மீண்டும் இயக்கம்
குன்னூர் : நிலச்சரிவால் சிதிலமடைந்த குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதை சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, நேற்று முதல் ரயில் இயக்கம் துவங்கியது.நீலகிரியில் கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. மழையால், ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, ரயில் பாலங்களும் சேதமடைந்தன.சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, கடந்த ஜனவரி 5ம் தேதி குன்னூர் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து துவங்கியது. முழு வீச்சில் நடந்த மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதை சீரமைப்புப் பணியும் சமீபத்தில் நிறைவடைந்தது. சீரமைக்கப்பட்ட பாதையில் ரயில் போக்குவரத்து நேற்று துவங்கியது.குன்னூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம் 1 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு, 100 பயணிகளுடன் ரயில் இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷன் துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது:மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் பாதை சீரமைப்புப் பணிக்கு இதுவரை 11 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது; கூடுதலாக மூன்று கோடி ரூபாய் செலவழிக்க வேண்டிய அவசியம் உள்ளது.ஊட்டி மலை ரயில், யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய அந்தஸ்து பெற்றுள்ள நிலையில், அதன் சிறப்பை நிலைநாட்ட வேண்டிய அவசியம் உள்ளது. திருச்சி பொன்மலை பணிமனையில், தலா ஆறு கோடி ரூபாய் செலவில் நான்கு புதிய ரயில் இன்ஜின்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒரு இன்ஜின், வரும் டிசம்பர் மாதம் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்படும். அடுத்தடுத்த மூன்று மாதங்களில் மற்ற இன்ஜின்கள் இயக்கப்படும்.நீலகிரியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஊட்டி - குன்னூர் இடையே கூடுதல் ரயில் இயக்குவது, சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க இரவில் ரயில் இயக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். குன்னூரில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.குன்னூர் - மேட்டுப்பாளையம் இடைப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு, பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியை தனியாருக்கு கான்ட்ராக்ட் விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு தீபக் கிருஷன் கூறினார். 172 நாட்களுக்கு பின்... : மலை ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவை சரி செய்ததை அடுத்து, 172 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஊட்டி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சுந்தரராஜன் கூறியதாவது:நிலச்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7.10க்கு புறப்படும் ஊட்டி மலை ரயில், குன்னூருக்கு 10.20 மணிக்கு செல்லும். அங்கிருந்து 10.40க்கு புறப்பட்டு ஊட்டிக்கு 12 மணிக்கு போய் சேரும். ஊட்டியிலிருந்து மதியம் 3க்கு புறப்பட்டு குன்னூருக்கு 4.05 மணிக்கு வரும். குன்னூரிலிருந்து 4.15க்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மாலை 6.35 மணிக்கு வந்து சேரும். கட்டணம் விவரம்: மேட்டுப்பாளையம் - ஊட்டிக்கு முதல் வகுப்பு டிக்கெட் ரிசர்வேஷன் கட்டணம் சேர்த்து 142 ரூபாய், இரண்டாம் வகுப்பு கட்டணம் 23 ரூபாய். குன்னூருக்கு முதல் வகுப்பு கட்டணம் 127 ரூபாய், இரண்டாம் வகுப்பு 19 ரூபாய். ஜெனரல் பெட்டியில் (கம்பார்ட்மென்ட்டில்) பயணம் செய்ய, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 8 ரூபாயும், குன்னூருக்கு 4 ரூபாயும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகம்
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா? குறைந்த நீர் இருப்பால் விவசாயிகள் கவலை
மேட்டூர் : இருப்பு நீரை மளமளவென காலி செய்வதால், கர்நாடகா அணைகள் நிரம்ப காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதனால், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைக்க தாமதம் ஆகும்.ஆண்டு தோறும் ஜூன் 12ல் டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்திறக்கப்படும். குறுவைக்கு நீர் திறக்க மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியாகவும், நீர் இருப்பு 52 டி.எம்.சி.,யாகவும் இருக்க வேண்டும். வரும் ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் நீர்திறக்க வேண்டும். அணையில் தற்போது 34.895 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. குறுவைக்கு நீர் திறக்க இன்னமும் 18 டி.எம்.சி., நீர் தேவை. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்.அப்போது கர்நாடகா அணைகள் நிரம்பிய பின்பே, உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்படும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைத்த அடுத்த சில மணிநேரங்களில் கர்நாடகாவில் காவிரி மற்றும் துணையாறுகள் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கே.ஆர்.எஸ்., ஹேரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்து விடும். தென்மேற்கு பருவமழை எப்படியும் கைகொடுக்கும் என்பதால், மே மாத இறுதிக்குள் இருப்பு நீரை முழுஅளவில் பாசனத்திற்கு திறந்து விட்டு நான்கு அணைகளையும் கர்நாடகா காலி செய்து விடும். இருப்பு நீரை சாகுபடிக்கு பயன்படுத்திய நிலையில், பருவமழை துவங்கிய பின், அதிக அளவில் நீரை தேக்கி  வைத்து தொடர்ச்சியாக பாசனத்திற்கு நீர் வழங்க முடியும். அதன் பின்பே, மேட்டூர் அணைக்கு உபரி நீர் திறக்கப்படும்.பருவமழையை விட கர்நாடகா அணைகளையே நம்பி இருக்க வேண்டிய நிலை மேட்டூர் அணைக்கு உள்ளது. எனவே, கர்நாடகா அணைகளை போல மேட்டூர் அணையில் இருந்து இருப்பு நீரை முழுமையாக பாசனத்திற்கு திறக்க முடியாது. பருவமழை தீவிரம் குறைந்து விட்டால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைக்காது. நீரை நம்பி சாகுபடி செய்த பயிர்களும் பாதிக்கும். இது காவிரி நீரை நம்பியுள்ள தமிழக டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 114 டி.எம்.சி., தற்போது கால்வாய், ஏரி பாசனத்திற்கு தொடர்ச்சியாக நீர்திறக்கப்படுவதால், நான்கு அணைகளிலும் நீர் இருப்பு 34 டி.எம்.சி.,யாக குறைந்து விட்டது. மே மாதம் இறுதிக்குள் நீர் இருப்பு மேலும் குறைந்து விடும்.அந்த சமயத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். அப்போது கர்நாடகா அணைகள் முழு அளவில் நிரம்ப காலதாமதம் ஆகும். அவை முழு அளவில் நிரம்பிய பின்னரே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைக்கும் என்பதால், வரும் ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு நீர்திறப்பது சந்தேகமே.
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு 19 கேள்விகள்
தேனி : தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக, பத்தொன்பது கேள்விகளுடன் வீடியோ கான்பரசிங் நடந்தது.2011 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக வீட்டு பட்டியல், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிகள் நடைபெறயுள்ளன. இதற்காக கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பு துணை கலெக்டர்களிடம், ""கணக்கெடுப்பு பகுதிகளை பிரிப்பதற்கான பொறுப்பு பதிவேடு தயாரிப்பு பணி முடிந்து விட்டதா, இறுதி செய்யப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டு விட்டதா, பயிற்சி திட்டம் இறுதி செய்யப்பட்டு விட்டதா, பயிற்சிக்கு வராதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது போன்ற 19 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கூறியுள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பு துணை கலெக்டர்கள் இதற்கான பதில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம்
வேலூர் அகல ரயில் பாதை பணி இம்மாதம் முடியும் *முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி பேட்டி
விழுப்புரம் : விழுப்புரம்-வேலூர் அகல ரயில் பாதைப் பணி, இம்மாத இறுதியில் முடித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்விற்கு தயாராகும் என முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி ராமநாதன் தெரிவித்தார்.விழுப்புரம்-வேலூர் அகல ரயில் பாதைப் பணிகளை, தென்னக ரயில்வே முதன்மை நிர்வாக அதிகாரி ராமநாதன் நேற்று ஆய்வு செய்தார். விழுப்புரத்திலிருந்து, தனி ஆய்வு ரயில்  மூலம் வேலூர் அகலப் பாதையில் ஆய்வுப் பணியை மேற்கொண்டார். முதன்மை பொறியாளர் மிஸ்ரா, உதவி பொறியாளர் முகமது சாலையா உட்பட பலர் உடனிருந்தனர். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம்-வேலூர் இடையேயான, 160 கி.மீ.,தூரத்திற்கு அகலப் பாதையில் நிறைவாக நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்கிறோம். சி.ஆர்.எஸ்., ஆய்விற்காக சில அடிப்படை பணிகளை முடிக்க சுட்டிக் காட்டியிருந்தனர். அந்தப் பணிகள் எந்தளவிற்கு முடிந்துள்ளன என்பதையும், எர்த் ஒர்க், ஸ்டேஷன் பில்டிங் பணிகளையும் பார்க்கிறோம்.முதலில் ரயில் இயக்கத் தேவையான பணிகளை முடித்தல், ரயில் இயக்கிய பிறகு பிற பணிகளை முடிப்பது என, இரு பகுதியாக பிரித்து செய்து வருகிறோம். சிக்னல், லெவல் கிராசிங்குகளை ஆய்வு செய்கிறோம். இவை அனைத்தும் இம்மாத இறுதியில் முடிக்கப்படும். பின் சி.ஆர்.எஸ்., ஆய்வு செய்து அனுமதித்தவுடன் ரயில்கள் இயக்கப்படும்.அகல பாதை பணி 500 கோடி ரூபாயில் நடக்கிறது. இதில் காட்பாடி வேலூர் இடையே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தற்போது மின் பாதையில் ரயில் இயக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மின் பாதை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளது. இரண்டாண்டில் மின் பாதை தயாராகி விடும்.புதுச்சேரி மார்க்கத்தில் புதிய ரயில்கள் இயக்க செங்கல்பட்டு-விழுப்புரம் இரட்டை அகலப்பாதை முடிக்க வேண்டும். கூடுதலாக ஐந்து ரயில் விட்டாலே நெருக்கடியாகி விடுகிறது. இதனால், புதிய ரயில்கள் விடுவதில் சிக்கல் நீடிக்கிறது. நாட்டிலேயே 2 கோச் பேக்டரி தான் உள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தயாராவதும் தாமதமாகிறது. விழுப்புரம்-புதுச்சேரிக்கு மட்டும் ரயில்கள் விடலாம். அதற்கு எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால் முடியும். விழுப்புரம் -வேலூர் மார்க்கத்தில் பணிகள் முடிந்தால் அந்த மார்க்கத்தில் தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி ராமநாதன் கூறினார்.
தமிழகம்
அரசு வீடு கட்டும் திட்டம் ஆன் லைனில் விபரம் சேகரிப்பு
தேனி : அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தில், குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து ஆன் லைனில் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 29 முதல் ஏப்ரல் 30 வரை நடந்தன. வி.ஏ.ஓ, ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர். நேற்று நடந்த கிராமசபை கூட்டங்களில் வீட்டு பட்டியலுக்கான ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து வீட்டு பட்டியல் விபரங்களுக்கான 28 கேள்விகளை பூர்த்தி செய்து ஆன்லைனில் ஏற்றும் பணி துவங்கி உள்ளது. அதன் தொடர்ச்சியாக பயனாளிகளை அவர்களின் குடிசை வீட்டின் முன் நிறுத்தி புகைப்படம் எடுப்பது, உறுதி மொழி அளிக்கும் படிவத்தில் கையொப்பம் வாங்கும் பணிகள் நடக்கின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கிராமங்கள் மற்றும் குடிசை பகுதிகள் இருப்பதால் கணக்கெடுக்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.
தமிழகம்
அரசு வீடு கட்டும் திட்டம் ஆன் லைனில் விபரம் சேகரிப்பு
தேனி : அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தில், குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து ஆன் லைனில் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 29 முதல் ஏப்ரல் 30 வரை நடந்தன. வி.ஏ.ஓ, ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர். நேற்று நடந்த கிராமசபை கூட்டங்களில் வீட்டு பட்டியலுக்கான ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து வீட்டு பட்டியல் விபரங்களுக்கான 28 கேள்விகளை பூர்த்தி செய்து ஆன்லைனில் ஏற்றும் பணி துவங்கி உள்ளது. அதன் தொடர்ச்சியாக பயனாளிகளை அவர்களின் குடிசை வீட்டின் முன் நிறுத்தி புகைப்படம் எடுப்பது, உறுதி மொழி அளிக்கும் படிவத்தில் கையொப்பம் வாங்கும் பணிகள் நடக்கின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கிராமங்கள் மற்றும் குடிசை பகுதிகள் இருப்பதால் கணக்கெடுக்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம்
கேரளாவில் இலவச பல்பு
போடி : கேரளாவில் மின்வாரியமே மக்களுக்கு சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்கி வருகிறது.கேரளாவில் உருண்டை பல்புகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அதிகளவு மின்சாரம் செலவானது. மின் சிக்கனத்திற்காக கேரள அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு சி.எப்.எல். பல்புகளை வழங்கி வருகிறது. இந்த பல்புகளை பயன்படுத்துவதால் மின்சாரம் சேமிப்போடு, அதிக வெளிச்சமும் கிடைப்பதால், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகம்
சோத்துப்பாறை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு
பெரியகுளம் : கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் தேனி மாவட்டம், பெரியகுளம் சோத்துப்பாறை அணையில், ஒரே நாளில் நீர் மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 126 அடி. கடந்த மூன்று நாட்களாக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.நேற்று கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சோத்துப்பாறை அணைக்கு அதிக நீர் வந்தது. அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 60 அடியாக இருந்தது. மழையால் ஒரே நாளில் 10 அடி அதிகரித்து 70.52 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 92 கனஅடி நீர் வருகிறது. மழையளவு 75 மி.மீ.,
தமிழகம்
கலெக்டருக்கு நன்றி தெரிவித்ததால் கவுன்சிலருக்கு தொடரும் சோகம் * குடும்பத்துடன் படகில் வெளியேறினார்
ராமநாதபுரம் : கலெக்டருக்கு நன்றி தெரிவித்த, ஊராட்சி கவுன்சிலரை கடலுக்கு மீன்பிடிக்க கிராம மக்கள் அனுமதிக்காததால், அவர் குடும்பத்தாருடன் படகில் ஊரைவிட்டு வெளியேறினார்.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மோர்பண்ணையை சேர்ந்தவர் மீனவர் தங்கராஜ். கடலூர் ஊராட்சியின் கவுன்சிலராகவும், இந்திய கம்யூ., பொறுப்பிலும் உள்ளார். ராமநாதபுரத்தில் கலெக்டர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்த மீனவர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற இவர் , " எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கிய கலெக்டருக்கு நன்றி, தடையின்றி தினமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,' என, பேசினார்."ஊருக்கு நீர் பற்றாக்குறையாக வரும் நிலையில் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தது தவறு,' எனக்கூறி, தங்கராஜூவை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கிவைத்து அபராதம் விதித்தனர். இது குறித்து, கடந்த ஏப்., 12ல் ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்கராஜ் புகார் செய்தார். அதன் பின் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் சமரசத்தை தொடர்ந்து, கிராமத்தினர் அவர் மீதான தடையை நீக்கினர். இருப்பினும் அபராதத்தை செலுத்துமாறும், கிராமத்தின் தேவைகளை முறையிடவும் தடைவிதிக்கப்பட்டது. ஊராட்சி கவுன்சிலராக இருந்து கொண்டு, மக்களின் தேவைகளை முறையிடாமல் இருப்பது தவறு என்பதால், தன்னை பதவியிலிருந்து விடுவிக்குமாறு, கடந்த ஏப்., 19ல் கலெக்டர் ஹரிஹரனிடம் மனு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், தங்கராஜ் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடைவிதித்தனர். பிழைப்பு இல்லாததால் மனமுடைந்து மோர்பண்ணையை விட்டு வெளியேறிய அவர், குடும்பத்தாருடன் கடல்வழியாக படகில் திருப்பாலைக்குடி வந்து அங்கு குடியேறினார்.தங்கராஜ் கூறியதாவது:கலெக்டருக்கு நன்றி தெரிவித்த, ஒரு காரணத்துக்காக என்னை நோகடித்து விட்டனர். கலெக்டரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. அபராதத்தை செலுத்த, நான் தயாராக இருந்தும் எனக்கு இந்த நிலைமை. கிராமத்தை விட்டு வெளியேறி, குடும்பத்துடன் திருப்பாலைக்குடிக்கு படகில் வந்து சேர்ந்தோம். இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகம்
மத்திய சிறையில் தினமும் சிக்கும் மொபைல் போன் *தொடர் நடவடிக்கையால் கைதிகள் கிலி
மதுரை : மதுரை மத்திய சிறையில், அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தண்டனை கைதிகளிடம் இருந்து மொபைல் போன்கள் சிக்கின. தொடர் நடவடிக்கையால் கைதிகள் அச்சமடைந்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள நளினி பயன்படுத்திய, மொபைல் போனை சிறைக்காவலர்கள் கைப்பற்றி விசாரிக்கின்றனர். இதையடுத்து, சிறைத்துறை டி.ஜி.பி., நடராஜ் உத்தரவுப்படி, அனைத்து மத்திய மற்றும் கிளைச்சிறைகளில் காவலர்கள் சோதனை நடத்துகின்றனர்.மதுரை மத்திய சிறையில் நேற்று முன்தினம் சிறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. ஏழாவது தொகுதியில் இருக்கும், ஸ்டாலின் (எண்-6568, மண்டபம் கஞ்சா வழக்கு), மூன்றாம் தொகுதியில் இருக்கும், முத்துசேகரன் (எண்-4789,மதுரை ரயில்வே போலீஸ் வழக்கு ), மூன்றாம் தொகுதியில் முதலாவது பிளாக்கில் இருக்கும், சிலம்பரசன் (எண்-4175,மதுரை தெற்குவாசல் போலீஸ் வழக்கு), அதே பிளாக்கில் இருக்கும்,ராஜாமுகமது (எண்-5289, மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் வழக்கு) ஆகியோரிடம் நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்ச்செல்வன் புகார்படி, கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர். அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால் கைதிகள் அச்சத்தில் உள்ளனர்.கைதிளுக்கு கைமாறுவது எப்படி?:சிறை நுழைவு வாயிலில் "ஸ்கேனர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் முழுமையான சோதனைக்கு பின்,டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் வழியாக சிறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களது மொபைல்களை நுழைவு வாயில் வெளியில் உள்ள காவலரிடம் ஒப்படைத்து விட்டு, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் பெற முடியும். இதுபோன்ற கெடுபிடிகள் இருந்தும், கைதிகளுக்கு மொபைல் மற்றும் பீடி, சிகரெட், பாக்கு போன்றவை சிறைக்காவலர் சிலர் மூலம் கைமாறுவதாக புகார் எழுந்துள்ளது. "மாமூல்' வாழ்க்கையை விரும்பும் சிறைத்துறையின் சில கருப்பு ஆடுகளை களையெடுத்தால் மட்டுமே சிறைச்சாலை, அறச்சாலைகளாக மாறுவதுடன், சிறைத்துறையின் ஒட்டுமொத்த கவுரவம் காப்பாற்றப்படும்.
தமிழகம்
கோவையில் கள்ளநோட்டுகள் அதிகரிப்பு: உஷார்படுத்துகிறது போலீஸ்
அச்சு அசலாக அச்சிடப் பட்ட 1,000 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளின் புழக்கம் கோவை நகரில் அதிகரித்துள்ளது.வர்த்தகர்கள், பொதுமக்கள் உஷாராக இல்லாவிடில், கள்ளநோட்டுகள் ஏதாவது ஒரு வழியில் கைக்கு வந்து, நிதியிழப் புக்கு உள்ளாக நேரிடும் என, போலீசார் எச்சரித்துள் ளனர்.கள்ளநோட்டுகளில் இரு வகை உண்டு. ஒன்று, ஒரிஜினல் கரன்சி போன்றே அதிநவீன இயந்திரத்தில் அச்சடிக்கப்பட்டவை. மற் றொன்று, ஒரிஜினல் கரன்சி யின் கலர் ஜெராக்ஸ்.இதில், முதல் வகை கள்ளநோட்டு பெரும் பாலும் பாகிஸ்தானில் அந் நாட்டு உளவு நிறுவனங் களின் உதவியுடன் அச் சிடப்பட்டு, எல்லை வழியாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன; இதன் நோக்கம், இந்திய பொருளாதாரத்தை சீர் குலைக்க வேண்டும் என் பதே.பாகிஸ்தானில் இருந்து கடல், சாலை மார்க்கமாக கள்ளநோட்டுகளை கடத்தி வரும் ஏஜன்ட்கள், கேரளா வழியாக தமிழக சப்- ஏஜன்ட்களுக்கு சப்ளை செய்கின்றனர். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரிஜினல் இந்திய கரன்சிகளை பெறும் ஏஜன்ட்கள், அதற்கு ஈடாக இரண்டு லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை கைமாற்றுகின்றனர்.இதை வாங்கி வரும் சப்-ஏஜன்ட்கள், கூட்ட நெரிசல் மிகுந்த டாஸ்மாக் மதுக்கடை, துணிக்கடை மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும் போது செலுத்தி, புழக்கத்தில் விடுவதாக, புலனாய்வு ஏஜன்சிகள் தெரிவிக்கின்றன.மிகவும் "பிஸி'யான நேரத்தில், வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்கள் "அல்ட்ரா வயலட்' சாதனத்தை பயன்படுத்தி கள்ளநோட்டுகளை கண்டறிய தவறுகின்றனர். பின்னர் அவை, வாடிக்கையாளர் களுக்கு மறுபடியும் கைமாறி புழக்கத்துக்கு வந்துவிடுகின்றன.இது குறித்த விழிப் புணர்வு பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவன ஊழியர்களிடம் போதிய அளவில் இல்லாதது பெரும் குறை.தங்களது கைக்கு கள்ள நோட்டு வந்திருப்பது தெரிய வந்தாலும், அதன் மதிப்பை இழக்க மனம் ஒத்துழைக்காததால் கிழித்து அழிப்பதில்லை. மாறாக, மற்றவருக்கு எப்படியாவது கைமாற்றிவிடவே துணிகின்றனர்.இவ்வாறு கள்ளநோட்டுகளை கைமாற்றும் போது பிடிபட்டு, போலீசாரின் விசாரணைக்கு உள்ளானோரும் கோவையில் உள்ளனர். சமீபத்தில், நகரிலுள்ள "டாஸ்மாக்' மதுக் கடையில் 1,000 ரூபாய் கள்ள நோட்டை செலுத்திய நபர் ஊழியரிடம் பிடிபட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இது குறித்து விசாரித்த மாநகர போலீசார், கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலை பிடிக்க தீவிரமாக விசாரித்தனர். எனினும், அடுத்த கட்டத் துக்கு கூட விசாரணை நகரவில்லை; காரணம், சிக்கிய நபர் ஓர் அப்பாவி. "தனது கைக்கு கள்ளநோட்டு எப்படி வந்ததென்றே தெரியாது' என கைவிரித்து விட்டார்.ஆனால், மற்றொரு வழக்கில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இருவர் கைது செய்யப் பட்டனர். அவர்களோ, "கேரளாவில் இருந்து கள்ளநோட்டுகளை வாங்கி வந்தோம். சப்ளை செய்த ஏஜன்ட்கள் வேறு ஒரு நபர் மூலமாகவே அறிமுகமானார்.அவரை, எங்களுக்கு முன் கூட்டியே அறிமுகமில்லை. மொபைல் போன் நம்பரை கூட எங்களுக்கு தெரிவிக்கவில்லை' என கைவிரித்துவிட்டனர்.அந்த அளவுக்கு கள்ளநோட்டு கும்பல் மிகவும் முன்னெச்சரிக்கையாக செயல்படுகிறது.கள்ளநோட்டு தொடர் பாக மாநகர போலீசில் 20 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு விசாரணை நடக் கிறது.பெரும்பாலான வழக்குகள் வங்கி அதிகாரிகளால் புகார் அளிக்கப்பட்டவை; மற்றவை, தனி நபர்கள் அளித்த புகாரை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டவை.வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர் மூலமாக தங்களுக்கு வரும் கள்ளநோட்டுகளை கண்டுபிடித்து போலீசில் ஒப் படைத்து புகார் அளிக்கின் றனர்.எனினும், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஏஜன்ட்களை அடையாளம் கண்டு கைது செய் வதில், எண்ணற்ற நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக போலீசார் தெரிவிக் கின்றனர்.சி.பி.சி.ஐ.டி., கண்காணிப்பு: கள்ளநோட்டு புழக்கம் மற்றும் அது தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி., யும் விசாரிக்கிறது. ஓரிரு நோட்டுகள் மட்டுமே பிடிபடும் வழக்குகளை உள்ளூர் ஸ்டேஷன் போலீசார் விசாரிக்கின்றனர்.அதே வேளையில், "சீரியல் எண்கள்' தொடர்ச்சி யான முறையில் இருந்து, அதிக எண்ணிக்கையிலான கள்ளநோட்டு பிடிபட்டால், அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்படுகிறது.எனினும், கோவையில் இதுவரை "சீரியல் எண்' தொடர்ச்சியாக கொண்ட கள்ளநோட்டுகள் பெரிய அளவில் பிடிபடவில்லை.இது குறித்து, போலீசார் கூறியதாவது:கரன்சி நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விடும் குற்றம் பெரிய அளவில் நடப்பதில்லை.அதே வேளையில், மிக நேர்த்தியான முறையில், பாகிஸ்தானில் பிரின்ட் செய்யப்பட்ட 1,000 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள், அங்குமிங்குமாக புழக்கத்துக்கு வந்து பிடிபட்டுள்ளன.இது போன்ற நோட்டுகள் கைக்கு வந்தால், பொதுமக்கள் உடனடியாக போலீசில் ஒப்படைத்து புகார் அளிக்க முன்வர வேண்டும்.அதைவிடுத்து, "எப்படியாவது செலுத்தி, வேறு நபருக்கு கைமாற்றி விட்டுவிடலாம்' எனக்கருதி "செலுத்த' முற்படுவதும் குற்றம்.பொதுமக்களின் ஒத் துழைப்பு முழு அளவில் இருந்தால் மட்டுமே கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.இவ்வாறு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். -நமது நிருபர்-
தமிழகம்
விஷம் குடித்து பெண் போலீஸ் மயங்கி விழுந்தார் ரோட்டில்
கோவை : கோவையில் நடுரோட்டில் விஷம் குடித்து, தற்கொலை முயற்சியில் பெண் போலீசார் ஒருவர் ஈடுபட்டார்.சவுரிபாளையத்தை சேர்ந்த ஜனார்த்தனனின் மகள் சுகன்யா(28), கோவை மாநகர ஆயுதப்படையில் பணிபுரிகிறார். வெரைட்டி ஹால் ரோட்டிலுள்ள வங்கி ஒன்றில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்தார்.பக்கத்திலிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. சுகன்யா பேண்டு வாத்திய பிரிவில் இருந்த போது, ஒரு போலீசாரை காதலித்தாராம்; திருமணத்திற்கு மறுத்ததால், விஷம் குடித்து தற்கொலையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தமிழகம்
கிடா வெட்டி பரிகார பூஜை : மாநகராட்சியில் தொடரும் கூத்து
சேலம் :சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து நெருக்கடி எழுந்து வருவதால், கிடா வெட்டு மற்றும் பரிகார பூஜைகள் செய்வது அதிகரித்து வருகிறது.சேலம் மாநகராட்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த ரேகாபிரியதர்ஷினி மேயராக இருக்கிறார். கடந்த சில ஆண்டாக சேலம் மாநகராட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட தனிக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், திருமணி முத்தாறு இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணி உள்ளிட்ட மெகா பட்ஜெட் திட்டங்களை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.சேலம் மாநகராட்சி நிதி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், வார்டின் பல பகுதிகளில் சிறிய பணிகளை கூட உடனடியாக மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, ஓய்வூதிய கால பலன்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.சமீபகாலமாக சேலம் மாநகராட்சியில் குடிநீர் பிரச்னை மேயர், கமிஷனர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகிய ஒட்டுமொத்த தரப்பினருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.சேலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அடிமேல் அடி விழுந்ததால் அதிகாரிகள், பரிகார பூஜைகள் நடத்த முடிவு செய்தனர். இரண்டு வாரத்துக்கு முன் நள்ளிரவில் கிடா மற்றும் கோழி வெட்டி, திருஷ்டி பூசணிக்காயை உடைத்து, கற்பூரம் ஏற்றி பரிகார பூஜை செய்தனர். வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தம் மாநகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் தெளிக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி அலுவலகம் வந்த பொதுமக்கள், ரத்தத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் கிடா வெட்டுவதற்கு ஒரு மாதத்தக்கு முன், மாநகராட்சி அதிகாரிகள் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் பரிகார பூஜை செய்து, ஒரு கிடாவை வெட்டியுள்ளனர். வெட்டப்பட்ட கிடாவின் ரத்தத்தை சூரமங்கலம் மண்டல அலுவலகம் முன் தெளித்தனர். கிடாவெட்டு, பரிகார பூஜை ஆகியவற்றுக்கு ஊழியர்களிடம் பணம் வசூல் செய்வது பல்வேறு தரப்பினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம்
மத்திய படைவீரர் மர்மச்சாவு உறவினர்கள் ரோடு மறியல்
திருநெல்வேலி : மத்திய படை வீரர் இறந்ததால், அவரது உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த குமந்தாபுரத்தை சேர்ந்த முருகன் மகன் ஆதிசங்கர்(25). இவர் சட்டீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில்,(சி.ஐ.எஸ்.எப்) நான்கு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தார். அங்கு, பணியில் இருந்தபோது சில தினங்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலை சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட அவரது உடலை பார்த்த உறவினர்கள், "உடலில் காயம் இருக்கிறது, அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை, அவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, தென்காசி- மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் ஆதிசங்கர் தூக்குமாட்டியதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக கூறி, சமாதானப்படுத்திய பின், உறவினர்கள் உடலை பெற்று இறுதி சடங்குகளை நடத்தினர்.
தமிழகம்
பணம் வைத்து சூதாட்டம் : ரூ.5.5 லட்சம் பறிமுதல்
சென்னை : சென்னை தனியார் ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய 51 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 5.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையில்  தனியார் ஓட்டல் ஒன்றில், "பர்த்டே பார்ட்டி' நடத்துவதற்காக சவுக்கார்பேட்டையை சேர்ந்த நரேந்திரன் என்பவர் அனுமதி பெற்றார். நேற்று முன்தினம் மாலை பார்ட்டிக்காக சென்னை முழுவதிலும் இருந்து மார்வாடி தொழிலதிபர்கள் 50க்கும் மேற்பட்டவர் கூடினர். பார்ட்டியின் நடுவில் அனைவரும் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, தேனாம்பேட்டை போலீசிற்கு தகவல் சென்றது. போலீசார் ஓட்டலுக்கு வந்து சோதனையிட்டனர். இதில், 51 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுக் கட்டுக்கள், 5.5 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சூதாட்டம் நடந்துள்ள இந்த ஓட்டல் பிரபல நடிகருடையது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
மதுரை நகை வியாபாரியிடம்ரூ. 3 லட்சம் வெள்ளி அபேஸ்
திருநெல்வேலி :  மதுரை நகை வியாபாரியிடம் வெள்ளி கொலுசுகள் அபேஸ் செய்த நபர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுரையை சேர்ந்தவர் ரவீந்திரன்; நகை வியாபாரி. இவர் தங்க, வெள்ளி நகைகளை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று விற்பனை செய்வார். நேற்று முன்தினம் இரவு வெள்ளிக் கொலுசுகளை விற்பதற்காக நாங்குநேரி வந்தார். அங்கிருந்து பஸ்சில் திசையன்விளை செல்ல, பஸ்சில் ஏறி அமர்ந்ததும் கண்அயர்ந்தார். 10 நிமிடங்கள் கழித்து கண் விழித்தபோது, வெள்ளிக் கொலுசுகள் இருந்த பையை காணவில்லை. மீண்டும் நாங்குநேரி வந்து போலீசில் புகார் செய்தார். பையில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புடைய 12 கிலோ வெள்ளிக் கொலுசுகள் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்தனர்.
தமிழகம்
துபாய்க்கு ரேஷன் அரிசி கடத்தல் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி : குஜராத் நிறுவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்திய ஏழு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் இருந்து கடந்த மார்ச் 22ல் தூத்துக்குடி துறைமுகம் வந்த மக்காச்சோள மூட்டைகளை, குஜராத் செல்லும் சரக்கு கப்பலில் ஏற்றினர். 12 கன்டெய்னர்களில் இருந்த அந்த மூட்டைகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டபோது, அதில் மக்காச்சோளத்திற்கு பதில் 290 டன் அரிசி இருந்தது. உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனையிட்டபோது, அவை ரேஷன் அரிசி என, தெரியவந்தது. அவற்றை குஜராத் வழியே துபாய்க்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர். 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய 6,000 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக சாத்தூர் கஞ்சம்பட்டியை சேர்ந்த கோவில் மணி உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஏழு பேரை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.இதன்படி, அரிசி கடத்தலுக்கு துணைபோன ரேஷன்கடை ஊழியர்கள் கோவில்பட்டி ராஜாமணி(47), கழுகுமலை காளிராஜ் பாண்டியன், சாத்தூர் ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த மணி என்ற கோவில் மணி, முருகேச பாண்டியன்(43) ஆறுமுகம்(33) கணேஷ்ராஜன் (30) தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த ஜேம்ஸ்(32) ஆகிய ஏழு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகம்
உடலுக்கு வெளியே உறுப்புகள் இறந்து பிறந்த ஆண் குழந்தை
தூத்துக்குடி : உடலுக்குள் இருக்கவேண்டிய உறுப்புகள் உடலுக்கு வெளியே இருந்த அதிசய குழந்தை, இறந்தது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவலை சேர்ந்த முத்துராஜ் மனைவி நாகலட்சுமி(19). ஐந்து மாத கர்ப்பிணியான இவர் நேற்று கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேன் செய்து பார்த்தபோது இவரது வயிற்றில் இருந்த ஆண் குழந்தைக்கு உடலுக்குள் இருக்கவேண்டிய கல்லீரல், கணையம், குடல் ஆகியன உடலுக்கு வெளியே இருந்தது தெரியவந்தது. நேற்று குழந்தை பிறந்தது. உடலுக்குள் இருக்கவேண்டிய உறுப்புகள் வெளியே இருந்ததால், குழந்தை இறந்தே பிறந்தது. தாய் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தமிழகம்
பால் பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே தனியார் பால் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து 5 கி.மீ., தொலைவில் வெள்ளகேட் பகுதி ரயில்வே மேம்பாலம் அருகில் அமைந்துள்ளது ஹட் சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் நிறுவனத்தின் பால் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை.இங்கு, பால், தயிர், நெய், பால் பவுடர், பன் னீர் போன்ற பால் பொருட் கள்  தயாரிக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன், நெய், பால் பவுடர், பன்னீர் தயாரிப்பு நிறுத்தப் பட்டது. தற்போது, பால் மற்றும் தயிர் தயாரிப்பு மற்றும் நடந்து வருகிறது; 300 ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணிபுரிகின்றனர்.நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு திடீரென பால் பவுடர் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் வைக்கப்பட் டிருந்த கிடங்கில் தீப்பிடித்தது.சிறிது நேரத்தில் தீ மளமளவென கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. ஊழியர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடினர்.தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் கொடுத்தனர். காஞ்சிபுரம் உதவி கோட்ட தீயணைப்பு அலுவலர் ராமசாமி, நிலைய அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் இரண்டு தீயணைப்பு வண்டிகள், உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்பண்டைராஜ், ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தலா ஒரு தீயணைப்பு வண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., பிரேம் ஆனந்த் சின்கா, டி.எஸ்.பி., ராஜேந் திரன் தலைமையில் போலீசார்  சென்றனர்.தொழிற்சாலையில் தேவையான அளவு தண் ணீர் இருந்ததால், தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்காக வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படவில்லை. 50 தீயணைப்பு வீரர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், பாதுகாவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இரும்பு தகடுகள் பொருத்தப்பட்ட அறைக் குள் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அறைக்குள் தீயணைப்பு வீரர்களால் செல்ல முடியவில்லை. உடனடியாக ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு இரும்பு தகடுகள் பெயர்த் தெடுக்கப் பட்டன.அதன் வழியே தீயணைப்பு வீரர்கள் தண் ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.தீ எரிந்த கட்டடத்திலிருந்து அடுத்த கட்டடத் திற்கு பரவுவதற்கு முன் தீயை அணைத்ததால், பால் தயாரிப்பு கட்டடம் தீயிலிருந்து தப்பியது. மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் மின் சாரம் நிறுத்தப்பட்டது. புகை மண்டலம் அப்பகுதியை சூழ்ந்ததால், அப்பகுதி முழுவதும் இருள் மூழ்கி கிடந்தது. தீயணைப்பு வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தில் தீயணைப்பு வீரர்கள் பணிபுரிந்தனர்.இது குறித்து பாலுசெட் டிசத்திரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் கனகேசன் கூறும் போது, தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் நேற்று புகார் மனு கொடுத்துள்ளனர்.மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், சேத மதிப்பு இரண்டரை கோடி ரூபாய் என்றும் புகார் மனுவில் குறிப்பிட் டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றார்.
தமிழகம்
பரமக்குடி அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் பலி
பரமக்குடி : பரமக்குடி அருகே ரோட்டோர மரத்தில் கார் மோதியதில் பீகார் தம்பதியர், டிரைவர் என மூன்று பேர் பலியானர் .பீகார் மாநிலம் பகல்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மவாடியா(42), இவரது மனைவி சுனிதா(39) மகள் சினேகா(18) மகன் அயூப்(16) ஆகியோர் சுற்றுலாவாக தமிழகம் வந்தனர். வேலூர் பொற்கோயிலை தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து முகமது இஸ்மாயில்(36) என்பவரது இன்டிகா வாடகை காரில் ராமேஸ்வரம் வந்தனர். நேற்று தரிசனத்தை முடித்து விட்டு, காலை 6.30மணிக்கு பரமக்குடி அருகே கமுதக்குடி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் சென்றனர்.அப்போது கார் நிலை தடுமாறி ரோட்டோர மரத்தில் மோதியது. டிரைவர் சம்பவ இடத்தில் பலியானார். மற்ற நால்வரும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் ராஜேந்திரன்மவாடியா , சுனிதா இறந்தனர். பரமக்குடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
கூடுவாஞ்சேரி அருகே வாந்தி பேதி மாணவன் பலி; மருத்துவமனையில் 10 பேர் அனுமதி
கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அருகே வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர் இறந்தார்.மருத்துவமனையில்  பத்து பேர்  சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.கூடுவாஞ்சேரி அடுத்த காரனை புதுச்சேரி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நிதிஷ்நிர்மல்குமார்(15); பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவருக்கு நேற்று முன்தினம் இரவு வாந்தி, பேதி ஏற்பட்டது. நேற்று காலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார். இதே கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள்(52) கேசவலு மகள் ஜானகி(22) இளவரசன்(21) ஆறுமுகம் மகன்கள் கோகுல்(13) பாஸ்கர்(5) ஆறுமுகம்(25) பார்வதி(21) பத்மா(18) ஜனனி(17) மணிகண்டன்(6) ஆகியோர் வாந்தி, பேதியால் பார்க்கப்பட்டுள்ளனர். ஜானகி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தகவல் அறிந்து மருத்துவக் குழுவினர், கிராமத்தில் முகாமிட்டனர். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தனர். மக்களுக்கு காலரா தடுப்பு மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டது. செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., பத்மஜாதேவி நேரில் சென்று வாந்தி, பேதிக்கான காரணம் குறித்து விசாரித்தார்.
தமிழகம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் :தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
மணப்பாறை: பள்ளி விழாவில் மாணவிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாததால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள, செவலூர் ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா, நேற்று õலையில் நடந்தது.  போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, கல்வித்துறை அதிகாரிகள்  பங்கேற்றனர். விழா துவங்கியவுடன், தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒலிப்பெருக்கியை "ஆன்' செய்தனர். ஒலிபெருக்கி சரியாக இயங்காததால், பள்ளி மாணவிகள் எட்டு பேர், தமிழ்த்தாய் வாழ்த்து பாட, மேடைக்கு வந்தனர். துவக்கத்தில் நன்றாக பாடிய மாணவிகள், பாதிக்கு மேல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாமல் தவித்தனர்.மாணவிகள் பாடத் திணறியதை கண்ட அமைச்சர் நேரு, தானே தொடர்ந்து பாடலை பாடினார். அவருடன் விழாவுக்கு வந்திருந்த முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் பாடி முடித்தனர்.விழா முடிந்ததும் அமைச்சர் நேரு, பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்தார். அப்பள்ளி தலைமை ஆசிரியர் சிறிது காலத்துக்கு முன் இறந்து விட்டதால், பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்த, ராமகிருஷ்ணன் அமைச்சரிடம் சென்றார். அவரை அமைச்சர் நேரு, "தமிழ்த்தாய் வாழ்த்து கூட பாடத் தெரியாமல் மாணவிகள் உள்ளனர். ஆசிரியர்கள் என்ன தான் சொல்லித் தருகின்றனர்' என்று கூறி கடுமையாக திட்டினார்.அதன் பின் அமைச்சர் நேரு, திருச்சி கலெக்டர் சவுண்டையாவை மொபைல்போனில் தொடர்பு கொண்டு,"தமிழ்த்தாய் வாழ்த்து கூட மாணவர்களுக்கு சரியாக சொல்லித்தராமல் உள்ளனர். உடனடியாக, பள்ளித் தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுங்கள்' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
தமிழகம்
பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதல்: இரண்டு பேர் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பழுதாகி நின்ற லாரி மீது, அரசு விரைவு பஸ் மோதியதில், இருவர் பலியாகினர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னையிலிருந்து, ஓசூர் நோக்கி அரசு விரைவு பஸ் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. பஸ்சை அரக்கோணம் பானாவரத்தை சேர்ந்த டிரைவர் பூபதி (40) ஓட்டி வந்தார். பஸ் நேற்று அதிகாலை, 5 மணிக்கு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், நமாஸ்பாறை அருகே வந்த போது, சாலையோரம் பழுதாகி நின்ற இரும்பு பாரம் ஏற்றிய, லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. ராயக்கோட்டை மேம்பாலம் அருகே இறங்க, பஸ்சின் முன்புற படிக்கட்டில் நின்றிருந்த தளியை, அடுத்த சீவனப்பள்ளியை சேர்ந்த பூ வியாபாரி பையாரெட்டி (35), சென்னை சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் உடுமலைபேட்டையை சேர்ந்த விஜயன் (29) ஆகியோர், உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்கள்.காஞ்சிபுரத்தை அடுத்த ஏகாநாதபுரத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் கருணாகரன் (47), பொள்ளாச்சி வேல் முருகன் (30), தர்மபுரி மாவட்டம் தண்டுகாரம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (29), ஓசூரை பாகலூர் பிரதாப் (25) ஆகியோர் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த ஆறுமுகம், மேல்சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த மற்ற மூன்று பேரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.தேசிய நெடுஞ்சாலைகளில், நீண்ட தூரம் செல்லும் வாகனங்களை ஓட்டி வருவோர் ஓய்வு எடுக்க, வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், பெரும்பாலான லாரி டிரைவர்கள், அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தாமல், தேசிய நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தி ஓய்வு எடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்துக்களை கட்டுப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து போலீசார், சாலையோரம் நிறுத்தும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகளும் விபத்துக்களை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். தப்பினார் மேயர் : சேலம் கொண்டலாம்பட்டி பை-பாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த மேயரின் கார், முன்னால் சென்ற கார் மீது மோதியது. மேயர் ரேகா ப்ரியதர்ஷினி உயிர் தப்பி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.சேலம் பூலாவரியில் வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீடு உள்ளது. மேயர் ரேகா ப்ரியதர்ஷினி, தன் சீரங்கபாளையம் வீட்டிலிருந்து கார் மூலமாக, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திக்க நேற்று பகல் 11 மணிக்கு புறப்பட்டு சென்றார்.மாநகராட்சிக்கு சொந்தமான, "ஸ்கார்பியோ' காரை டிரைவர் பாஸ்கர் ஓட்டி சென்றார். மேயர் ரேகா ப்ரியதர்ஷினி காரின் முன்புறம் அமர்ந்து இருந்தார்.மேயர் காரின் முன் சென்ற லாரி டிரைவர், திடீரென "பிரேக்' போட்டார். லாரி பின்னால் சென்ற, "என்டோவர்' கார் டிரைவர் திடீரென நிறுத்தினார். அடுத்தடுத்து லாரியும், காரும் திடீரென நிறுத்தப்பட்டதால், மேயர் கார் டிரைவர் பாஸ்கரால், உடனடியாக காரை நிறுத்த முடியவில்லை.கட்டுப்பாட்டை இழந்த மேயர் கார், முன்னால் சென்று கொண்டிருந்த, "என்டோவர்' கார் மீது மோதியது. அதில் மேயரின் கார், பேனட் இடித்த வேகத்தில் நொறுங்கியது.முன்னால் அமர்ந்திருந்த மேயர் ரேகா ப்ரியதர்ஷினி உயிர் தப்பினார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.உடனடியாக, வேறு கார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த காரில் மேயர் ரேகா ப்ரியதர்ஷினி ஏறி, தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்ததை அடுத்து, அவர் வீடு திரும்பினார்.
தமிழகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
பழநி :  கொடைக்கானலில் இருந்து திரும்பிய வேன் ஒன்று 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.விழுப்புரத்தில் இருந்து ஒரு வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா முடிந்து கொடைக்கானலில் இருந்து திரும்பிய வேன் நேற்று இரவு 11.45 மணிக்கு சவரிக்காடு என்ற இடத்தில் மலைப்பகுதியில்மூன்றாவது வளைவில், கட்டுப்பாட்டை இழந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 16 பேர் காயமடைந்ததாக முதல் கட்ட தேடுதலில் தெரியவந்தது. போலீசார், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலைய வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி மிகவும் இருட்டாக இருந்ததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியா
மாதுரி குப்தாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
புதுடில்லி : பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட, இந்திய தூதரக பெண் அதிகாரி மாதுரி குப்தாவை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள, இந்திய தூதரகத்தில் பணிபுரிந்த மூத்த அதிகாரி மாதுரி குப்தா. இவருக்கு, பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த, ராணா என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பணத்துக்காகவும், காதலுக்காகவும், இந்தியாவிலிருந்து தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட, ரகசியமான விஷயங்கள் குறித்த தகவல்களை, பாகிஸ்தானுக்கு அளித்ததோடு, முக்கியமான ஆவணங்களையும் கொடுத்துள்ளார்.இதையடுத்து, டில்லிக்கு வரவழைக்கப்பட்ட அவர், கடந்த மாதம் 23ம் தேதி, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, போலீசாருக்கு எட்டு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நேற்று அவர் டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போலீசார் தரப்பில்,"மாதுரி குப்தாவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அவரது போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த கோர்ட், மாதுரி குப்தாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
இந்தியா
பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல்
கோழிக்கோடு : நான்காம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், ஆசிரியர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், புலியாவு என்ற இடத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த நான்காம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, ஆசிரியர் ஹரிதாஸ் என்பவர் மீது ஆறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.இந்த வழக்குகளை விசாரித்த கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:ஆசிரியர் சமுதாயத்தில் வகித்த நிலையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் ஏற்பட்ட மனஉளைச்சலையும் கருத்தில் கொண்டு, அவருக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அதன்படி, முதல் வழக்கில் ஆறு ஆண்டுகள், இரண்டு மற்றும் மூன்றாம் வழக்குகளில் தலா ஐந்து ஆண்டுகள், நான்காம் மற்றும் ஐந்தாம் வழக்குகளில் தலா ஆறு ஆண்டுகள், ஆறாவது வழக்கில் இரண்டு ஆண்டுகள் என்று அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.முதல் மூன்று வழக்குகளுக்கான தண்டனையை தொடர்ந்து அனுபவித்த பின், அடுத்த மூன்று வழக்குகளுக்கான தண்டனையைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகளுக்கு, தலா நான்காயிரம் ரூபாய் வழங்கும்படியும் கோர்ட் உத்தரவிட்டது.
தமிழகம்
குத்தகை பட்டா ஆலோசனை குழு ஏற்படுத்த கோரி வழக்கு * தலைமை செயலருக்கு நோட்டீஸ்
மதுரை : விவசாய நிலங்கள் குத்தகைதாரர்களுக்கு பட்டா வழங்குவது குறித்த ஆலோசனை குழுவை ஏற்படுத்த கோரிய வழக்கு குறித்து தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்த வக்கீல் பழனியாண்டி தாக்கல் செய்த பொது நல வழக்கு:1969ல் விவசாய நிலங்கள் குத்தகை பதிவு சட்டத்தின்படி குத்தகை பெற்ற விவசாயி ஒருவர், அதை பதிவு செய்ய தாசில்தாரை அணுகி மனு செய்து பட்டா பெற வேண்டும். 1971பின் பட்டா வழங்குவதை முறைப்படுத்த ஆலோசனை குழு ஏற்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதில் பழங்குடியினத்தை சேர்ந்த நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள் இடம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த ஆலோசனை குழுவும் அமைக்கப்படவில்லை. உடனடியாக அந்த குழுவை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் முத்தல்ராஜ் ஆஜரானார். நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே.வாசுகி கொண்ட பெஞ்ச், மனு குறித்து பதிலளிக்கும்படி தலைமை செயலாளர், வருவாய்த் துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தமிழகம்
சென்னை ஐகோர்ட் கோடை விடுமுறை
சென்னை : சென்னை ஐகோர்ட்டுக்கு, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 7ம் தேதி முதல் வழக்கம் போல் ஐகோர்ட் இயங்கும். விடுமுறை காலத்தில் 10 நாட்கள் கோர்ட்டுகள் இயங்கும்.மே 1ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை, ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை விசாரிக்க, வரும் 5, 6, 12, 13, 19, 20, 26, 27, ஜூன் 2, 3 ம் தேதிகளில் கோர்ட்டுகள் இயங்கும். 5, 6, 12, 13 ம் தேதிகளில் ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதிகள் வெங்கட்ராமன், சிவஞானம், கர்ணன் பணியாற்றுவர்.வரும் 19, 20, 26, 27 ம் தேதிகளில் நீதிபதிகள் தனபாலன், அரிபரந்தாமன், கிருபாகரன் பணியாற்றுவர். ஜூன் 2, 3 ம் தேதிகளில் நீதிபதிகள் பால் வசந்தகுமார், சி.டி.செல்வம், எம்.எம்.சுந்தரேஷ் பணியாற்றுவர். அவசர மனுக்களை 3, 4, 10, 11, 17, 18, 24, 25, 31 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் தாக்கல் செய்யலாம்.
தமிழகம்
இளைஞர் காங்., தலைவருக்கு இடைக்கால தடை
கோவை : கோவை லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவராகச் செயல்பட கல்யாண்குமாருக்கு, திருச்சி முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி, இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.தமிழக இளைஞர் காங்., நிர்வாகிகள் மற்றும் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் தேர்தல், கடந்த 11ம் தேதி திருச்சியில் நடந்தது. கோவை லோக்சபா தொகுதிக்குரிய தேர்தலில், சச்சிதானந்தகுமார் மற்றும் கல்யாண்குமார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். சச்சிதானந்தகுமார் 48 ஓட்டுகளும், கல்யாண்குமார் 46 ஓட்டுகளும் பெற்றனர். சச்சிதானந்தகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி பிரதிநிதிகள் 10 பேர் ஓட்டு போடவும், பிரதிநிதிகளாகச் செயல்படவும் கோவை முதன்மை சார்பு நீதிமன்றம், தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.இப்பிரதிநிதிகளை தேர்தலில் பங்கேற்க வைத்து, சச்சிதானந்தகுமார், கல்யாண்குமார் ஆகியோர் 51 ஓட்டுகள் சமமாக பெற்றதாக, தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். மேலும், கல்யாண்குமார் "டாஸ்' முறையில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு சச்சிதானந்தகுமார் ஆட்சேபனை தெரிவித்தார்; தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.இதை எதிர்த்து சச்சிதானந்தகுமார், திருச்சி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கல்யாண்குமார், கோவை லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவராகச் செயல்பட இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தார்.
தமிழகம்
நள்ளிரவு சரியாக 12 மணி சிக்கல்: ரயில்வே டிக்கெட்டில் குளறுபடி
திருநெல்வேலி : டிக்கெட் குளறுபடிக்காக ரயில்வே நிர்வாகம், 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.திருநெல்வேலி, ரஹ்மத் நகரை சேர்ந்தவர் ஜஹாங்கீர். அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், 2007 டிசம்பரில் தர்மபுரியிலிருந்து நெல்லைக்கு வர, மைசூர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். டிச., 2ம் தேதி இரவு 12 மணிக்கு, அந்த ரயில் தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து கிளம்பும். ரயில்வே நேரப்படி நள்ளிரவு 12 மணியை, 00.00 என டிக்கெட்டில் குறிப்பிடுவது வழக்கம். ஜஹாங்கீர், டிச., 2ம் தேதிக்கு டிக்கெட் எடுத்து, அன்றைய தினம் இரவு 12 மணிக்கு ரயிலில் ஏறினார். ஆனால், அவரது சீட்களில், வேறு பயணிகள் இருந்தனர். ரயில்வே டிக்கெட் பரிசோதகர், 00.00 என்பது டிச., 3ம் தேதிக்கு உரியதாகும். எனவே நான்கு பயணிகளுக்கான டிக்கெட்டிற்கு 2,184 ரூபாய் செலுத்தியாக வேண்டும் என கூறினார். ஜஹாங்கீர், அந்த கட்டணத்தை செலுத்தி குடும்பத்தினருடன் நெல்லை வந்து சேர்ந்தார். பின், நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெசிந்தா ஆகியோர் 00.00 என்பது 2ம் தேதியின் இறுதி நிமிடமாகும். 00.01 என துவங்கினால் தான் டிச., 3ம் தேதியை குறிக்கும் என கூறியதோடு, டிக்கெட் முன்பதிவு செய்தும், மன உளைச்சல் ஏற்பட்ட ஜஹாங்கீருக்கு நெல்லை ரயில்வே நிர்வாகம், 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும், டிக்கெட் தொகையும் வழங்கும்படியும் உத்தரவிட்டனர். மேல்முறையீடு: 00.00 என்பது முந்தைய தினமா, அடுத்த தினத்தின் துவக்கமா என பயணிகள் தெளிவுபடுத்துவதற்காக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, இந்தியா முழுவதுமே ரயில்வே துறையில், 23.59 என குறிப்பிட்டிருந்தால், இரவு 11.59 நிமிடத்தை குறிக்கும். 00.00 என்றாலே மறுநாள் துவங்கிவிட்டதாகத்தான் அர்த்தம். எனவே இந்த நடைமுறையை மாற்ற முடியாது. அந்த வழக்கு குறித்து, ரயில்வே துறையின் வணிகபிரிவினர், மேல்முறையீடு செய்வர் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
தமிழகம்
ஊராட்சி வரைபடத்திலிருந்து காலனியை நீக்கியதாக வழக்கு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
மதுரை : விருதுநகர் மாவட்டம் சுக்கிலாநத்தம் ஊராட்சி வரை படத்தில் இருந்து, அம்பேத்கர் காலனியை நீக்கியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து பதிலளிக்கும்படி, அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் சாமுவேல்ராஜ் தாக்கல் செய்த பொது நல வழக்கு: அருப்புக் கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுக்கிலாநத்தம் ஊராட்சியில் அம்பேத்கர்காலனி உள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் சொத்து வரியை ஊராட்சி நிர்வாகத்தில் செலுத்தி வந்தனர். 2007 முதல் வரியை வசூலிக்க ஊராட்சி நிர்வாகம் மறுத்து விட்டது. ஊராட்சி ஒன்றியத்தில் செலுத்தும்படி நிர்வாகம் தெரிவித்தது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் வரியை வசூலிக்க மறுத்து விட்டது. இதுகுறித்து கலெக்டரிடம் முறையிடப்பட்டது. அவரது உத்தரவின்படி தாசில்தார் விசாரித்தார். பின், ஊராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி செலுத்தலாம் என, அவர் உத்தரவிட்டார். ஆனால், ஊராட்சி நிர்வாகம் சொத்து வரி வசூலிக்க மறுத்து விட்டது.பின், ஊராட்சி வரைபடத்தில் இருந்து அம்பேத்கர்காலனியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். இதனால், இப்பகுதியினருக்கு ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வழங்க மறுக்கின்றனர். ஊராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இதற்கு காரணமான ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். இப்பகுதியினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் நிர்மலா ராணி ஆஜரானார்.நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே.வாசுகி கொண்ட பெஞ்ச், இவ்வழக்கு குறித்து பதிலளிக்கும்படி கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலாளர், இயக்குனர் மற்றும் விருதுநகர் கலெக்டருக்கு உத்தரவிட்டது.
தமிழகம்
கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு ரூ. 32 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு
தூத்துக்குடி : தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு 32 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க விரைவு கோர்ட் உத்தரவிட்டது.தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்தவர் அன்டோவிக்டோரியா. இவர் சிறிய கப்பல்கள் மூலம் தூத்துக்குடியிலிருந்து இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். கடந்த 99ம் ஆண்டு செப்., 11ல் அன்டோ விக்டோரியாவுக்கு சொந்தமான "மரியஆன்டோராஜ்' என்ற கப்பலில் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்றனர். மாலுமி உட்பட 12 தொழிலாளர்கள் இருந்தனர்.கப்பல் தூத்துக்குடியிலிருந்து 20 கடல் மைல் தூரம் சென்ற நிலையில் கடலில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டது. மாலுமி தனிஸ்லாஸ், தூத்துக்குடி துறைமுகத்தில் செயல்படும் அவசரகால மீட்பு மையத்திற்கு வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காப்பாற்றும்படியும் கூறினார்.ஆனால் துறைமுக நிர்வாகம் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் இறங்கவில்லை. கடலோர பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் மாலுமி தனிஸ்லாஸ்(57) மற்றும் ஊழியர்கள் அந்தோணி (58), ஜான்டோ (35), ரோலண்ட் (34), சுபிகர் (18), ராயன்பர்னான்டோ (21), அந்தோணி ராஜ் (42), ஜோசப் உட்பட 12 பேரும் கடலில் மூழ்கி இறந்தனர்.இறந்தவர்களில் ஜோசப் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. மற்ற 11 பேரின் உடல்கள் மீட்கப்படவில்லை. இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி 2வது விரைவு கோர்ட்டில், 2003 ஜூனில் நஷ்டஈடு கோரி 12 பேரின் குடும்பத்தினரும் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். 12 வழக்குகளிலும் தீர்ப்பளிக்கப்பட்டது. கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கும் தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் 32 லட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாயும், இதுவரை 7.5 சதவீத வட்டிம் வழங்கும்படி, நீதிபதி கிருஷ்ணவேணி தீர்ப்பளித்தார்.
தமிழகம்
தமிழக அரசு முத்திரையில் ஸ்ரீவி.,கோயில் ராஜகோபுரத்தை மாற்றும் எண்ணமில்லை:அமைச்சர் ஐ. பெரியசாமி பேச்சு
பழநி:அரசு முத்திரையில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தை மாற்றும் எண்ணம், தமிழக அரசிற்கு இல்லை என, அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.பழநியில் 2வது ரோப்கார் உட்பட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, சிறுவர் பூங்கா துவக்க விழா நடந்தது. விழாவில், அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில்,"தமிழக அரசு சின்னத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ராஜகோபுரத்தை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. பழநி வரும் பக்தர்களுக்கு பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்காக தனியார் நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாது. பக்தர்களுக்கு நகராட்சியே எல்லா வசதிகளும் செய்துதர முடியாது. மலைக்கோயில் நிர்வாகம் சார்பில் கூடுதல் நிதி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,"கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பல ஆண்டுகளாக பழுதாகி இருந்த 300 தேர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆயிரத்து 400 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தற்போதுள்ள ரோப்காரில் ஒருமணிநேரத்தில் 400 பக்தர்கள் மலைகோயில் செல்லலாம். 2வது ரோப்கார் பயன்பாட்டிற்கு வரும்போது ஒரு மணி நேரத்தில் 800 பேர் பயணம் செய்யலாம். ஓராண்டிற்குள் இப்பணி முடிவடையும். வேலூர் மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மன் கோயிலில் ரோப்கார் பணி துவக்க விழா மே 9ல் நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகம்
டாக்டர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்
குறிஞ்சிப்பாடி : டாக்டர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டுமென குறிஞ்சிப்பாடியில் நடந்த வளைகாப்பு மற்றும் மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.கடலூர் மாவட்டம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, கடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நலக்கல்வி, வளைகாப்பு மற்றும் மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழா குறிஞ்சிப்பாடியில் நடந்தது. குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சீனுவாசன் வரவேற்றார். கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் மீரா திட்ட விளக்கவுரையாற்றினார். அமைச்சர் பன்னீர் செல்வம் கர்ப்பிணி பெண் களுக்கு மகப்பேறு நிதிஉதவி வழங்கி பேசியதாவது: தி.மு.க., ஆட்சி வந்த பிறகுதான் மருத்துவத் துறை சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 6 ஆயிரத்து 947 டாக்டர்கள், 11 ஆயிரத்து 948 செவிலியர்கள், ஆயிரத்து 288 கிராமபுற செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,218 பொது ஊழியர்களும் நியமிக்கப்பட் டுள்ளனர். மக்கள் பயனடையும் வகையில் மருத்துவ துறை இயங்குகிறது. முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 20 லட்சத்து 11 ஆயிரத்து 500 கர்ப்பிணி பெண்களுக்கு ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப்பட் டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நலத்திட்டங்களே செயல்படுத்தப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர். அனைத்து டாக்டர்களும் பணி நேரத்தில் பணியில் இருப்பதுடன் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேச்சு: காங்கிரஸ் கட்சி மட்டுமே எல்லா நிலைகளிலும் மக்களை நோக்கி செல்கிறது. கட்சிக்கு உழைப்போருக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். உரிய பலன் கிடைக்கும். மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா பேச்சு: கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்காணிக்கும் வகையில் கரன்சி இயக்குனரகம் நிறுவப்படும். இது வெளிநாட்டினர் மூலம் கள்ள நோட்டுகள் இந்தியாவிற்குள் நுழைவதையும் கண்காணிக்கும். ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு குறியீடுகளை உறுதி செய்வதுடன், புதிய குறியீடுகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு, கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும். ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு :கோவையில் ம.தி.மு.க., தொழிற்சங்க கட்டடத்தை தி.மு.க.,வினர் மோசடி செய்து கைப்பற்றினர். அந்த கட்டடம் ம.தி.மு.க.,விற்கு தான் சொந்தம் என சாதகமான தீர்ப்பு, கோர்ட்டில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதை போல் மகிழ்ச்சியான, நமக்கு சாதகமான தீர்ப்புகள் நிறைய வர உள்ளன. மக்கள் மன்றத்தின் தீர்ப்பும் விரைவில் ம.தி.மு.க.,விற்கு சாதகமாக வரும். தமிழக வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் பேச்சு: குற்ற வழக்கு, சிவில் வழக்கு என பலவித வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. வக்கீல்கள் தாக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் அறிக்கை: மின்னணு ஓட்டுப் பதிவு என்பது கண்ணுக்கு தெரியாதது. மென்பொருளையும், இயந்திரத்தையும் நம்பி, குளறுபடிகள் செய்து, ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை விடுத்து, மேலை நாடுகளில் உள்ளது போல காகிதச் சீட்டு ஓட்டு முறையைக் கடைபிடித்து மக்களின் நம்பகத் தன்மையை தேர்தல் கமிஷன் பெற வேண்டும். அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில தலைவர் தினகரன் அறிக்கை: "குடி' மக்கள் ஒரு நாளை கூட வீணாக்காமல் குடிக்க வேண்டும், அதன் மூலம் வரும் வருவாய் முக்கியம் என்று தமிழக அரசு நினைப்பது வருத்தமளிக்கிறது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசா அல்லது வருவாய் ஒன்றே குறிக்கோளாக உள்ள தனியார் நிறுவனமா என தமிழக அரசை பார்த்து மக்கள் கேட்கின்றனர். காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., துணைத் தலைவர் காளன் பேச்சு: தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ஆண்டிற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது. இவை மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுவதில்லை; மாறாக இந்த பணம் முழுவதும் பல இலவச திட்டங்களுக்குத் தான் செலவழிக்கப்படுகிறது.
General
சிவப்பு சட்டைக்காரர் ஆக்கிரமிப்பு:தாய்லாந்து பிரதமர் ஆலோசனை
பாங்காக்:தாய்லாந்து தலைநகரை சிவப்பு சட்டைக்காரர்கள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ள விஷயத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் அபிஜித் வெஜ்ஜஜிவா, ராணுவ மையத்தில் ஆலோசனை நடத்தினார்.தாய்லாந்தில் இரண்டு ஆண்டுக்கு முன் பிரதமர் ஷினவத்ரே ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ராணுவத்தின் உதவியுடன் தற்போதைய பிரதமர் அபிஜித் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறி, ஷினவத்ரே ஆதரவாளர்கள் சிவப்பு சட்டை அணிந்து கடந்த மார்ச் மாதம் முதல் பாங்காக் நகர தெருக்களை ஆக்கிரமித்துள்ளனர். பார்லிமென்ட்டையும் முற்றுகையிட்டு இவர்கள் போராட்டம் நடத்தியதால், ஹெலிகாப்டர் மூலம் எம்.பி.,க்கள் தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.அரசுக்கு எதிராக சிவப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருபவர்கள், பாங்காக் சாலைகளை ஒரு மாதத்துக்கும் மேலாக ஆக்கிரமித்துள்ளனர். அரசு தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் இவர்கள் பாங்காக் நகரை விட்டு செல்லாமல் உள்ளனர்.இப்பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பிரதமர் அபிஜித் தலைமையில், ராணுவ தலைமையகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பார்லிமென்ட்டை கலைக்க கோரும் எதிர்க்கட்சியினரின் வற்புறுத்தல் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகம்
பாரம்பரிய கலையை எடுத்துக் கூறும் சுடு மண் குதிரை பொம்மைகள்
செஞ்சி :செஞ்சி அருகே அய்யனார் கோவிலில் 150 ஆண்டுகளுக்கு முன், காணிக்கையாக செலுத்திய சுடு மண் குதிரை பொம்மைகள் இன்றும் அழியாமல் தமிழகத்தின் பாரம்பரிய கலையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.தமிழகத்தில் புராதன நகரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியும் ஒன்று. செஞ்சியை சுற்றி பல பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன.  இதே போல் பழமையான அய்யனார் கோவில் செஞ்சியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் கொசப்பாளையம் கிராமத்தில் உள்ளது. கிராமத்தின் தென்மேற்கு திசையில் காரை - அத்தியூர் சாலையில் இருந்து பிரியும் மண்சாலையில் அரை கி.மீ., தூரம் சென்றால் மரம், செடிகளுக்கு மத்தியில் 40க்கும் மேற்பட்ட  சுடு மண் குதிரை சிலைகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.இங்குள்ள அய்யனார் கோவிலுக்கு செல்லும் பாதையின் இரண்டு பக்கமும் குதிரை பொம்மைகளை வைத்துள்ளனர். 5 முதல் 8 அடி உயரமும், 8 அடி அகலத்தில் குதிரை சிலைகள் உள்ளன. குதிரை பொம்மையின் மீது விரிப்புகள், சலங்கை, தோரணங்கள் வேலைப்பாடுகளுடன் செய்துள்ளனர்.இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,"சுற்றுப் பகுதியில் உள்ள பல குடும்பத்தினருக்கு இங்குள்ள அய்யனார் தான் குலதெய்வம். அய்யனார் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்த அவரின் வாகனமான குதிரை பொம்மைகளை காணிக்கையாக செலுத்துவது ஆரம்பத்தில் இருந்து உள்ளது. இங்குள்ள சுடு மண் குதிரை சிலைகளும் 150 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தி கடனுக்காக வைத்தவை' என்கின்றனர்.இங்குள்ள வயதானவர்கள் கூறும் தகவலில் இருந்து, மண் பொம்மைகளை வெளியில் செய்து எடுத்து வந்தால் உடைந்து விடும் என்பதால், பொம்மை செய்யும் கலைஞர்களை ( மண் பானை செய்யும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) கிராமத்திற்கு அழைத்து வந்து பல நாட்கள் தங்க வைத்து களிமண்ணால் பொம்மைகளை செய்து, சூளையிலிட்டு, வர்ணமடித்து கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தியது தெரிகிறது.இப்போது இது போன்ற பெரிய பொம்மைகளை செய்யும்  கலைஞர்கள் இல்லாமல் போனதால், சிறிய பொம்மைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த கோவிலில் சிறிய பொம்மைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையோடு இருந்த கலையையும், கலாசாரத்தையும் பறை சாற்றும் விதமாக கொசப்பாளையத்தில் உள்ள மண் குதிரை சிலைகள் உள்ளன.இது போன்ற பொம்மைகள் பல கோவில்களில் இருந்தாலும், ஒரே இடத்தில் 40க்கும் மேற்பட்ட பொம்மைகள் இருப்பது அரிதானது. இவற்றை சிதைவில் இருந்து காப்பாற்றி புதுப்பித்தால், அடுத்து வரும் தலைமுறையினரும் நமது பாரம்பரியத்தை அறிந்து கொள்ள வழி கிடைக்கும்.
General
இரவு 8 மணிக்கு மேல் சினிமாக்களுக்கு தடை
லாகூர்:பாகிஸ்தானில் இரவு 8 மணிக்கு மேல் திரையரங்குகளும், 7 மணிக்கு மேல் மார்க்கெட்டுகளும் இயங்கக்கூடாது என, அரசு தடை விதித்துள்ளது.பாகிஸ்தானில் கடும் மின்பற்றாக்குறை நிலவுவதால், இரவு 8 மணிக்கு மேல் திரையரங்குகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல ஷாப்பிங் மால்கள், சந்தைகள் உள்ளிட்டவை இரவு 7 மணிக்கு மேல் இயங்கக் கூடாது என, அரசு தடை போட்டுள்ளது.பாகிஸ்தானில் மொத்தம் 1,300 தியேட்டர்கள் இருந்தன. தற்போது, 200 தியேட்டர்கள் தான் உள்ளன. சமீபத்தில் தான் இந்திய திரைப்படங்களை வினியோகிக்க உரிமை வழங்கப்பட்டிருந்தது. அந்நாட்டில் கடும் மின்சார பற்றாக்குறை நிலவுவதை யொட்டி இரவு 8 மணிக்கு மேல் திரையரங்கம் இயங்கக் கூடாது, ஜெனரேட்டரை இயக்கியும் திரைப்படங்களை காட்டக்கூடாது என, அரசு தடை விதித்துள்ளது.இதனால், திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசின் இந்த உத்தரவு சினிமா உலகத்துக்கு சாவு மணி அடிப்பதாக உள்ளது என, திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.அரசின் உத்தரவை பின்பற்றப்போவதில்லை என, மார்க்கெட் மற்றும் மால்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் தற்போது கடும் வெயில் காணப்படுகிறது. பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து மாலையில் தான் வெளியே வருகின்றனர். அந்த சமயத்தில் கடையை மூட சொல்வதை ஏற்க முடியாது என, வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம்
360 டிகிரி கோணத்தில் கோயில்களின் முழுமையான தரிசனம்
தினம் தினம் புதுமைகளை புகுத்தி வாசகர்களுக்கு பல வசதிகளை அள்ளிக் கொடுத்து வரும் உங்கள் தினமலர் இணைய தளம் கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசித்து மகிழ புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆன்மிக இணைய தளங்களில் உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த பகுதி‌யை வாசகர்கள் குடும்பத்தோடு பார்த்து, கோயில்களுக்கு நேரில் சென்று சுற்றிப்பார்த்த இனிய அனுபவத்தை பெறலாம். மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய பகுதிகளை அறிமுகப்படுத்தி வாசகர்களை மகிழ்ச்சியடையச் செய்து வரும் தினமலர் இணைய தளம் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய பகுதியில் முதல் கட்டமாக 10 கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களை ‌நேரில் சென்று சுற்றிப்பார்த்த அனுபவத்தை தரும் வகையில் காட்சிகள் இடம்‌பெற்றுள்ளன. ஒவ்வொரு கோயிலின் சிறப்புகளையும், கோயிலில் இடம்பெற்றிருக்கும் சுவாமிகளின் சிறப்புகளையும் ஆடியோ மூலமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கோயிலில் எந்த கோபுரம் எந்த இடத்தில் இருக்கிறது, மூலவர் எந்த திசையை நோக்கி இருக்கிறது, அதன் சிறப்பு என்ன, எத்தனை பிரகாரங்கள் உள்ளன, பிரகாரங்களின் சிறப்பு என்ன, பிரகாரங்களில் உள்ள சிலைகள், மண்டபங்கள் என எல்லா தகவல்களையும் சுற்றுலா வழி‌காட்டியைப் போல ஆடியோ மூலம் தெரிவிக்கப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்ததும் நம் கண் எதிரே இருக்கும் சுவாமி சிலையில் ஆரம்பித்து பிரகாரங்களை சுற்றுவது, கோபுர தரிசனம், ‌கொடிமரம், மூலவர் அறை, உற்சவர் என அனைத்தையும் பார்க்கும் வசதி இந்த 360 டிகிரி கோணத்தின் மூலம் பார்த்து மகிழலாம். 360 டிகிரி கோணம் பகுதி மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைந்தால், நுழைவு வாயில்கள், ஆடி வீதிகள், அம்மன் சன்னதி, சிவன் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம், சுழலும் லிங்கம், பொற்றாமரை குளம் என முழு கோயிலையும் சுற்றிப்பார்த்து தரிசித்த அனுபவத்தைப் பெறலாம். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தால், பம்பா நதியில் தொடங்கி, 18 படிகள், கொடிமரம், கணபதி சன்னதி, சபரி பீடம், மஞ்சமாதா சன்னதி, கோயிலின் மேல் தோற்றம், வெளிப்புற தோற்றம் என சபரிமலைக்கே நேரில் சென்று வந்த ஆன்மிக அனுபவத்தை ‌பெறலாம். இதேபோல இந்த பகுதியில் இடம்‌பெற்றிருக்கும் அனைத்து கோயில்களையும் வாசகர்கள் முழுமையாக தரிசிக்கலாம். தினமலர் இணைய தளத்தில் ஆன்மிக பகுதியில் 18 விநாயகர் திருத்தலங்கள், 116 அம்மன் கோயில்கள், படல் பெற்ற 274 சிவாலயங்கள், 217 இதர சிவாலயங்கள், முருகனின் 71 கோயில்கள், 134 பெருமாள் கோயில்கள், 108 திவ்ய தேசங்கள், ஐயப்பனின் திவ்ய தரிசனம், 150 பரிகார கோயில்கள், 27 நட்சத்தி கோயில்கள், 25க்கும் மேற்பட்ட கோயில்களின் வீடியோ காட்சிகள், தல புராணங்கள், கோயில்களின் சிறப்புகள், 25,690 கோயில்களின் முகவரிகள், ஆண்டிற்கான பஞ்சாங்க குறிப்புகள், இறைவனை வழிபடும் முறை, விரதங்கள் இருப்பதற்கான வழிமுறைகள், ஹோமம் நடத்துவதற்கான காரணங்கள், பிறமாநில, வெளிநாட்டு கோயில்களும் அவற்றின் சிறப்பம்சங்களும், பக்திகதைகள் என ஏராளமான ஆன்மிக தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக 360 டிகிரி கோணத்தில் கோயில்களை தரிசிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசிக்கும் வசதி விரைவில் இடம்பெறவுள்ளது. வாசகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் தங்களது கோயில்கள் மற்றும் தங்களுக்கு தெரிந்த கோயில்கள் பற்றிய விவரங்களையும் புகைப்படங்களுடன் தினமலர்இணைய தளம் ஆன்மிக பகுதியில் இடம்பெறச் செய்யலாம். இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாசகர்கள் tஞுட்ணீடூஞு@ஞீடிணச்ட்ச்டூச்ணூ.டிண என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
ஜார்க்கண்டில் வளர்ச்சி இல்லை :இதுவரை 7 முதல்வர்கள்: இனி...
ராஞ்சி : ஜார்க்கண்டில் நிலையற்ற அரசியல் காரணங்களால், அடிக்கடி ஆட்சி மாறுவதால், வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதோடு, தொழில் துறையும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.கடந்த 2000ம் ஆண்டில் பீகாரில் இருந்து பிரிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவானது. இதுவரை இங்கு ஏழு முதல் வர்கள் பதவி வகித்து விட்டனர். பல முறை ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. கவர்னர்களும் அடிக்கடி மாற்றப்படுகின்றனர்.தற்போதும், வெட்டுத் தீர்மான விவகாரத்தில் சிபுசோரன் ஏற்படுத்திய குழப்பம் காரணமாக, ஜார்க்கண்டில் ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளது. சிபுசோரனுக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - பா.ஜ., கட்சிகளுக்கு இடையே பேச்சு நடந்து வருகிறது. அடிக்கடி நிகழும் ஆட்சி மாற்றங்களால், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் முடங்கி கிடப்பதாகவும், சாதாரண வேலைகள் கூட நடக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.ஜார்க்கண்ட் மாநில முன்னாள் டி.ஜி.பி., பிரசாத் கூறுகையில், "அடிக் கடி முதல்வர்கள் மாறுகின்றனர். ஆட்சி மாற்றமும் நடக்கிறது. இதனால், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளன. அதிகாரிகள், தங்கள் வேலைகளை சரிவர கவனிப்பது இல்லை' என்றார்.ராஞ்சி பல்கலை பொருளாதார பேராசிரியர் ரமேஷ் சரண் கூறுகையில், "அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதால், வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. இது மட்டுமல்லாமல், ஊழலும் அதிகரித்து விட்டது. அதிகாரிகள் வேலை செய்வது இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை பல முறை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து விட்டன. தற்போதுள்ள சூழ்நிலையில் மேலும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றார். ஜார்க்கண்ட் சிறு தொழில் துறை செயலர் யோகேந்திர குமார் ஓஜா கூறுகையில், "நிலையற்ற அரசியல் போக்கு நிலவுவதால் ஜார்க்கண்டில் தொழில் துறை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அதிகாரிகள் கோப்புகளில் கையெழுத்திடுவது இல்லை. தற்போது எங்களுக்கு நிலக்கரி அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால், இதற்கான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்' என்றார்.
இந்தியா
ஐ.பி.எல்., கிரிக்கெட்டால் வளருது ஒற்றுமை
உலகளவில் கால்பந்து விளையாட்டிற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்டது கிரிக்கெட். இங்கிலாந்து நாட்டினரால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் தற்போது உலகின் பல நாடுகளுக்கு சொந்தமாகிவிட்டது. தற்போது, கிரிக்கெட்டின் வெற்றி, தோல்வி என்பது நாட்டின் பகைமையை பாராட்டும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துவிட்டது.டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு கொண்டு வரப்பட்ட ஒரு நாள் போட்டிகளால் கிரிக்கெடின் ஆர்வம் சிறு குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை ஆக்கிரமித்துவிட்டது. ஆரம்பத்தில் விளையாட்டாகவே பார்க்கப்பட்ட கிரிக்கெட் சமீப காலமாக அதன் வெற்றி, தோல்வி என்பது அந்தந்த நாட்டின் கவுரம் குறித்த உணர்வாகிவிட்டது. விளையாட்டு வீரர்களுக்குள் விரோதம் வளரும் அளவிற்கு பகைமை வளர்ந்து விட்டது. இந்தியாவின் எதிரி நாடாக  பாகிஸ்தான், இலங்கை கருதப்படுகிறது. அதே நிலை கிரிக்கெட்டிலும் ஏற்பட்டுவிட்டது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. சமீப காலமாக கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். இதே மனநிலைக்கே ரசிகர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.இந்திய கிரிக்கெட்டு அணியோ அல்லது மற்ற நாட்டு அணிகளோ வேறு ஒரு நாட்டிற்கு சென்று டெஸ்ட், ஒருநாள் கொண்ட தொடர்களில் விளையாடும்போது, வீரர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அதன் காரணமாக பல வீரர்கள் அபராதம் கட்டும் நிலையில் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. சிலநேரங்களில் போட்டிகளில் விளையாட தடையும் ஏற்படுகிறது. இதே மனநிலைக்கு தள்ளப்படும் ரசிகர்களும் தனது நாட்டு அணியினர் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டால் மற்ற நாட்டு வீரர்கள் மீது கல் எறிவது, அழுகிய தாக்காளி, தண்ணீர் பாட்டில்களை வீசுவது என்ற எண்ணம் எழுந்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் அணிகளை பொறுத்தவரை பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, இந்திய அணிகளின் வீரர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. முன்பு மியான்தத், ஹைடன், சைமன்ஸ், வால்ஸ், மைக்கே ஸ்லேட்டர், மெக்ரத், கங்குலி, அரவிந்த் டிசில்வா போன்றவர்களிடம் ஆக்ரோஷம் காணப்பட்டது. அதே வரிசையில்  பாண்டிங், அப்ரிடி, தில்ஷான்,மலிங்கா, ஜகீர்கான்,ஹர்பஜன் சிங், யுவராஜ்சிங், ஸ்ரீசாந்த் ஆகியோரிடம் மோதல் போக்கு காணப்படுகிறது.இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.பி.எல்., என்ற 20-20 கிரிக்கெட் போட்டிகளால் வீரர்களிடம் மோதல் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல்.,போட்டிகளில் மற்ற நாட்டு வீரர்களையும் ஏலத்திற்கு எடுத்து ஒரே அணியில் ஈடுபடுத்துவதால் அந்த போட்டிகளில் வீக்கெட்களை வீழ்த்தும்போது, வெற்றி பெறும் போதும் மற்ற நாட்டு வீரர்கள் என்பதை மறந்து ஒரே அணியினர் என்ற எண்ணம் ஏற்பட்டு அன்பை பறிமாறிக் கொள்கின்றனர். ஒரு வீக்கெட் வீழ்த்திவிட்டாலோ அல்லது கேட்ச் பிடித்தாலோ ஒரு அணியிலும் உள்ள மற்ற நாட்டு வீரர்கள் உற்சாகமாக மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்ளும் அழகிற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.ஐ.பி.எல்., போட்டிகளில் ஊழல், "மேட்ச் பிக்சிங்' என ஒரு புறம் அவற்றை பிரச்சினைகள் நிலைத்தாலும் மற்றொரு புறம் ஒற்றுமை பறைசாற்றும் விதமாக அந்தப் போட்டிகள் அமைந்துவிடுகின்றன. இதன் காரணமாக வரும் சர்வதேச போட்டிகளில் வீரர்களிடம் மோதல் போக்கு சற்று குறை என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் எழுந்துள்ளது. -நமது சிறப்பு நிருபர்-
இந்தியா
அதிகரித்து கொண்டே போகும் உச்சபட்ச மின் தேவை
தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை 10 ஆயிரத்து 800 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளதால், பகலில் 3 மணி நேர மின்வெட்டு தவிர, பெரும்பாலான இடங்களில் முக்கிய நேரங்களில் குறிப்பிட்ட நேரம் மின்தடை  அமல்படுத்த வேண்டிய நிர்பந்தம் மின்வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் நீர்மின் உற்பத்தி நிலையம் மூலம் 21 சதவீதம், அனல்மின் நிலையம் மூலம் 29 சதவீதம், மத்திய மின் தொகுப்பில் இருந்து 28 சதவீதம், தனியார் மூலம் 12 சதவீதம், காஸ் மூலம் 5 சதவீதம் மற்ற அமைப்புகள் மூலம் 5 சதவீதம் என மொத்தம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தின் மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்ப மின் உற்பத்தி அதிகரிக்காததால், மின் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே வருகிறது.அதை சமாளிக்க கடந்த 2008ம் ஆண்டு  செப்டம்பர் முதல் மின்வாரியம், சென்னை தவிர பிற பகுதியில் தினமும் 2 மணி நேர மின்தடையை அமல்படுத்தியது. நடப்பாண்டில் கோடைகாலம் துவங்கிய நிலையில், காற்றாலை மற்றும் நீர்மின் உற்பத்தியும் குறைந்து விட்டது. கோடைமழையும் பொய்த்ததால் கடந்த பிப்., முதல் வெயிலின் தீவிரம் அதிகரித்தது.வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் "ஏசி'  ப்ரிட்ஜ், மின் விசிறி, ஏர்கூலர் ஆகியவற்றை அதிகம் பயன் படுத்த துவங்கியுள்ளனர்.  இரு மாதங்களாக தமிழகத்தின் மின்நுகர்வு அதிகரித்து கொண்டே வருகிறது. உற்பத்தியை விட மின் தேவை அதிகரித்ததால், ஏப்., 1ம் தேதி முதல் சென்னை தவிர பிற இடங்களில் தினமும் 3 மணி நேர மின்தடையை வாரியம் நடைமுறைபடுத்தியது.கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலான முக்கிய நேரத்தின் உச்சபட்ச மின்நுகர்வு 9,500 மெகாவாட் ஆக இருந்தது. ஆனால்,  பிப்., முதல் உச்சபட்ச மின்தேவை அதிகரித்து கொண்டே போவது மின்வாரியத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கடந்த பிப்ரவரி  இறுதியில் 10 ஆயிரம் மெகாவாட் ஆக இருந்த உச்சபட்ச மின்தேவை, சில நாட்களாக 10 ஆயிரத்து 800 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. அதிலும், சிலசமயம் மின்தேவை 11 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிப்பது வாரியத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.பகலில் முக்கிய நேரம் எனப்படும் காலை 6 மணி முதல் 10 மணி வரையில் கிராமப்புறங்களில் பம்ப்செட்களை விவசாயிகள் அதிக அளவில் இயக்குகின்றனர். அதுபோல மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்தில் வீடுகள், கடைகளில் மின்சாரம் அதிகம் பயன் படுத்தப்படுகிறது.ஒவ்வொரு துணை மின்நிலையங் களின் கட்டுப்பாட்டில் நான்கு முதல் எட்டு பீடர்கள் உள்ளன. இந்த பீடர்கள் மூலம் ஒவ்வொரு பகுதிக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.தற்போது  மின் தேவை 10 ஆயிரத்து 800 மெகாவாட் ஆக இருந்த நிலையில்,  மின் உற்பத்தி 9,050 மெகாவாட் ஆக மட்டுமே இருந்தது.சராசரியாக 1,600 முதல் 1,800 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்படுகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, 3 மணி நேர மின்தடை தவிர அதிக தேவை  ஏற்படும் போது மின்பற்றாக்குறை சமாளிக்க துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் ஏதாவது ஒரு பீடரில் இருந்து வினியோகம் செய்யும் மின் சாரத்தை நிறுத்தி விட்டு மற்ற பீடர்களுக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டிய நிலை வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.அதனால், 3 மணி நேர மின் தடை போக, சில இடங்களில் காலை 6 முதல் 10 மணி, மாலை 6 முதல் 10 மணி வரையிலான  நேரத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாக மின்தடை செய்யப்படுகிறது. இவ்வாறு எதிர்பாராத நேரத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மின் தடை செய்வது நுகர்வோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. -  நமது சிறப்பு நிருபர்
இந்தியா
ஆசாத் சிலைக்கு மாலை சர்ச்சையில் சிக்கினார் வருண்
அலகாபாத் : பா.ஜ., எம்.பி., வருண், சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர ஆசாத்தின் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது, செருப்பை கழற்றாமல் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக, பா.ஜ., எம்.பி., வருண் மீது கடந்தாண்டு உ.பி., போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற் காக அவர் கைது செய்யப்பட்டார். தற்போது வருணை மையமாக வைத்து, மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.உ.பி., மாநிலம் அலகாபாத்துக்கு நேற்று வந்த வருண், அங்கு, "பார்க்' ஒன்றில் இருந்த சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர ஆசாத்தின் சிலைக்கு மாலை அணிவித்தார். இது தொடர்பான காட்சிகள் ஒரு, "டிவி' சேனலில் ஒளிபரப்பானது.அப்போது, சிலைக்கு மாலை அணிவித்தபோது, காலில் உள்ள செருப்பை கழற்றாமல் வருண் சென்றது அதில் தெரிந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உ.பி., மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர் பகுகுணா கூறுகையில், "இதுபோன்ற செயல் மூலம், சுதந்திர போராட்ட தியாகியை வருண் அவமதித்து விட்டார்' என்றார்.உ.பி., மாநில பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான கேசரி நாத் திரிபாதி கூறுகையில், "கவனக் குறைவு காரணமாக இச்சம்பவம் நடந்து விட்டது. இதை காங்கிரஸ் அரசியலாக்கி ஆதாயம் தேடுகிறது' என்றார்.
இந்தியா
பயங்கரவாதி கசாப்பிற்கு மரண தண்டனை கிடைக்குமா?
மும்பை : மும்பைத் தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாப் மற்றும் அவனுக்கு உதவிய இரண்டு இந்திய சதிகாரர்களின் தலைவிதி என்ன என்பது, இன்று தெரியும். அவர்கள் குற்றவாளி என தீர்ப்பில் கூறப்பட்டால் அவர்களுக்கு  மரண தண்டனை விதிக்கப்படலாம். இந்தத் தீர்ப்பு முடிவு நாடு முழுவதும் பரபரப்பாக  எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, மும்பையில் பயங்கரவாதிகள் 10 பேர் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில், வெளிநாட்டவர்கள் 25 பேர் உட்பட 166 பேர் பலியாயினர்; 304 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில், அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைதானான். இவன், பாகிஸ்தானின் பரித்கோட்டைச் சேர்ந்தவன்.  தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு, தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களின் வரைபடத்தை தயாரித்து கொடுத்தது உட்பட பல உதவிகளைச் செய்த இந்தியாவைச் சேர்ந்த பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது என்ற இருவரும் கைதாகினர்.இவர்கள் மூன்று பேருக்கும் எதிரான மும்பை தாக்குதல் வழக்கு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.658 பேர் சாட்சியம்: கடந்த ஆண்டு மே மாதம் 8ம் தேதி துவங்கிய வழக்கு விசாரணை, மற்ற பயங்கரவாத வழக்குகளை விட வேகமாக நடந்தது. இதில், 658 பேர் சாட்சியம் அளித்தனர். மொத்தம் 271 வேலை நாட்களில் 3,192க்கும் மேற்பட்ட பக்கங்களில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. சிறப்பு கோர்ட் நீதிபதி தகிலியானி முன், சாட்சியம் அளித்தவர்களில் 30 பேர், கசாப் தான் தங்களை சுட்டான் என கூறினர்.இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் உஜ்வல் நிகாம், விசாரணையின் போது பறிமுதல் செய்யப்பட்ட 1,015 பொருட்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார். வழக்கிற்கு ஆதரவாக 1,691 ஆவணங்களையும் பதிவு செய்தார். "மும்பையில் லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தொடர்பு உண்டு' என குற்றம் சாட்டினார்.மேலும், இந்திய சட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவன அதிகாரிகளும், இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர். தொழில்நுட்ப ரீதியான சில விஷயங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், சி.எஸ்.டி., ரயில் நிலையம், டைம்ஸ் ஆப் இந்தியா கட்டடம், தாஜ், ஓபராய் ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டன. இது தவிர, கசாப் தொடர்பான வேறு சில படங்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், "அந்தப் புகைப்படங்களில் இருப்பது நானில்லை' என கசாப் கூறினான்.மும்பை ஆர்தர் ரோடு சிறையில், விசேஷமாக உருவாக்கப்பட்ட குண்டு துளைக்காத மற்றும் வெடிகுண்டால் சேதமடையாத அறையில் அடைக்கப்பட்டிருந்த கசாப், ஒவ்வொரு நாளும் சிறை வளாகத்தில் உள்ள கோர்ட்டிற்கு அழைத்து வரப்படும் போது, 10 முதல் 12 போலீசார் பாதுகாவலுடன் அழைத்து வரப்பட்டான்.  ஆனால், வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தான் கூறியவற்றை எல்லாம் மறுத்தான். தான் அப்பாவி என்றும், சிறுவன் என்றும் கூறி வழக்கை திசை திருப்ப முற்பட்டான். கசாப்பிற்கு எதிராக பிப்ரவரி 5ல், 11 ஆயிரம் பக்கம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில், கசாப்பிற்கு ஆதரவாக மூன்று வக்கீல்கள் ஆஜராயினர். முதலில் அஞ்சலி வாக்மேரே என்பவர் ஆஜரானார்.  இறுதியாக கே.பி.பவார் என்பவர் ஆஜரானார். "தன் கட்சிக்காரர் அஜ்மல் கசாப் அப்பாவி என்றும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னரே, சவுபாதி பகுதியில் இருந்து போலீசார் அவரை பிடித்துச் சென்றனர்' என்றும் கூறினார்.பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில், மிக வேகமாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை மார்ச் 31ம் தேதி முடிவுக்கு வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதி தகிலியானி, தீர்ப்பை வழங்குகிறார்.  நாடே எதிர்பார்க்கும் பரபரப்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். கசாப்பிற்கு ஆபரேஷன் : மும்பை: மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப், வயிற்று உபாதையால் அவதிப்பட்டு வருவதால், அவனுக்கு ஆபரேஷன் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக தீர்ப்பு வெளியான பின், ஆபரேஷன் நடக்கும்.இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கசாப்பினால், ஒரே நேரத்தில் முழுமையாக சாப்பிட முடியவில்லை. அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வருகிறான். குறைவாக சாப்பிட்டாலும், நிறைய வாந்தி எடுக்கிறான். அதனால், கசாப்பிற்கு ஆபரேஷன் நடக்கலாம். இருந்தாலும், எப்போது நடைபெறும் என்பதை தெரிவிக்க முடியாது,'' என்றார்.
General
நேபாளத்தில் காலவரையற்ற ஸ்டிரைக்: வர்த்தக நிறுவனங்கள் முடங்கின
காத்மாண்டு:நேபாளத்தில் அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின், மாவோயிஸ்ட்கள் ஆட்சி அமைத்தனர். ராணுவ தளபதியை நீக்கும் விவகாரத்தில் ஜனாதிபதி ராம்பரன் யாதவுக்கும், பிரதமராக இருந்த பிரசாந்தாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பிரசாந்தா பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.இதையடுத்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நேபாள காங்கிரஸ் உள்ளிட்ட 22 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. நேபாள பார்லிமென்டில் மாவோயிஸ்ட்கள் அதிகம் உள்ளனர். மன்னராட்சி காலத்தில் போராட்டம் நடத்திய மாவோயிஸ்ட்களை ராணுவத்தில் சேர்க்க வேண்டும், நேபாளத்தை சோஷலிச நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா முன்வைத்துள்ளார். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும், என அவர் தெரிவித்துள்ளார். இவரது அறிவிப்பை தொடர்ந்து பிரதமர் மாதவ்குமார் நேபாள அரசு, பதவி விலக வேண்டும் எனக் கோரி, மாவோயிஸ்ட்டுகள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்கியுள்ளனர். இதனால், தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சகஜவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் வன்முறையும் நடந்துள்ளது."நேபாள பொருளாதார நிலையை பாதிக்கும் இந்த வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்' என, தொழிலதிபர்களும், வர்த்தகர்களும் மாவோயிஸ்ட்களை கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், "எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும்' என, மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா தெரிவித்துள்ளார்.
General
பாகிஸ்தானின் அமெரிக்க தூதரகத்தில் தீ
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரகம் உள்ளது. பலத்த பாதுகாப்புகளுடன் இயங்கி வரும் இதில், நேற்று முதல் மாடியில் உள்ள முக்கிய ஆவணங்கள் உள்ள பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது.தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்டு நெல்சர் கூறுகையில், "இது ஒரு சிறிய தீ விபத்து தான். இதில் பயங்கரவாதத் தொடர்பு எதுவும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை' என்றார்.
இந்தியா
சொல்கிறார்கள்
என் படிப்பை முதலீடாக்கினேன்: ஐ.ஐ.டி., மாணவர் களுக்கான இலவச கோச்சிங் வகுப்பு எடுக்கும் ஆனந்த குமார்: என் பள்ளிக் காலம், வறுமை சூழ்ந்ததாகத் தான் இருந்தது. கேம் பிரிட்ஜில் இருந்து எல்லாம் எனக்கு கல்விக்கான வாய்ப்புகள் வந்த போது, கணித பட்டப் படிப்பை முடிக்கவே பொருளாதார ரீதியாக நான்  திணறிக் கொண்டிருந்தேன்.அந்தச் சூழ்நிலையில் தான், என் படிப்பையே முதலீடாக்கி, என் படிப்பிற்கான செலவுகளை சமாளித்தேன். அதாவது, பலருக்கும் டியூஷன் எடுத்து சம்பாதித்தேன். அப்போதுதான் திறமை இருந்தும் பணம், வழிகாட்டுதல் இல்லாததால், இனி இன்னொரு ஆனந்தகுமார் பாதிக்கப்படக் கூடாது என்று மனதில் ஒரு நெருப்பு பற்றிக் கொண்டது.ஐ.ஐ.டி., படிப்பு நம் மாணவ சமுதாயத்தின் ஆசை, கனவு, லட்சியம். ஆனால், நாட்டின் மிக முக்கிய, தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றான அதில் சேர்வதற்கு சரியான வழிகாட்டல்கள், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள் இல்லாததால் பலருக்கு அது கனவாகவே உள்ளது.மேல் தட்டு மாணவர்கள், பல ஆயிரங்கள் செலவழித்து, நுழைவுத் தேர்வுக் கான கோச்சிங் முடித்து, ஐ.ஐ.டி., வளாகம் நுழைகின்றனர். ஆனால், நடுத்தர, ஏழை மாணவர்களால் அது முடிவதில்லை. இந்த நிலையை மாற்றத்தான் ஏழு வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறேன்.நான் நடத்தி வரும், "ராமானுஜம் ஸ்கூல் ஆப் மேத்தமேட்டிக்ஸ் டியூஷன், கோச்சிங் சென்டர்'  மூலமாகவே, ஏழை மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., கோச்சிங் கொடுக்கிறேன். என் பயிற்சியும், அவர்களின் உழைப் பும் ஒரே புள்ளியில் வெற்றியோடு பயணிக்க, முதல் வருடமே 30 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்குள் வெற்றிகரமாக நுழைந் தனர்.இதுவரை 182 ஏழை மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் பட்டம் வாங்கியுள்ளனர். அவர்கள் தான் என் முயற்சிக்கு நம்பிக்கை நீர் ஊற்றிக் கொண்டே இருக்கின்றனர்.
இந்தியா
இது உங்கள் இடம்
கொக்கி போட்டு திருட்டு: யாரும் பேசவில்லை!நித்திலா செல்வராஜ், கோவையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் எங்கு சென்றாலும் மின்சார வெட்டு; இதற்கு முழுக்க அரசியல்வாதிகள் தான் காரணம். அரசியல்வாதிகள் தாங்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு, பகுதி அரசியல்வாதிகள் டிரான்ஸ்பார்மில் கொக்கி போட்டு மின்சாரம் திருடி, கூட்டங்கள் நடத்துகின்றனர்.இதனால், பல ஆயிரக்கணக்கான யூனிட் மின்சாரம், மின்சார வாரியத்திற்கு செலவாகிறது; இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. இதை பகுதி மின்சார வாரிய அதிகாரிகளும், காவல் துறையும், அரசியல்வாதிகளுக்கு பயந்து, கண்டு கொள்ளாமல், மெத்தன போக்கையே கடைபிடிக்கின்றனர்.இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒற்றுமையை கடைபிடிக்கின்றன. இதுபோன்ற திருட்டு மின்சாரத்தை தடுத்து நிறுத்தினால், பல லட்சங்கள் மின்சார வாரிய கணக்கில் கூடும்.  பார்லிமென்ட், சட்டசபையில் எதை எதைப் பற்றியோ உரையாடும் மக்கள் பிரதிநிதிகள், இவ்விஷயத்தில் மட்டும் ஒற்றுமையையே கடைபிடிக்கின்றனர். நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில் 234 உறுப்பினர்களில், ஒரு உறுப்பினர் கூட இதுபற்றி சட்டசபையில் பேசவில்லை.இதுமட்டுமன்றி, கோவில் திருவிழாக்களில் அமைச்சரோ, சட்டசபை, பார்லிமென்ட்  உறுப்பினர்களோ கலந்து கொண்டால், பயமின்றி பகுதி அரசியல்வாதிகள் அங்கும் தமது மின்சார திருட்டு கைவரிசையை காட்டுகின்றனர்.  தங்கள் கட்சியினருக்கு முறைபடி மின்சாரம் செலவு செய்து, யூனிட்டுக்கு இவ்வளவு தொகை என்று மக்கள் பிரதிநிதிகள், அந்தந்த பகுதி மின்சார வாரியத்திற்கு செலுத்தலாம். மின்சார திருட்டை தடை செய்ய, பகுதி காவலர்களுக்கு, அரசும், மின்சார வாரியமும் உத்தரவிட வேண்டும். தினமலர் முயற்சிக்கு வெற்றி!எஸ்.வைத்தியநாதன், அபிராமபுரம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: விழுப்புரம், மயிலாடுதுறை  அகல  ரயில்பாதை  அமைக்கும் பணிக்காக,   ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு,  நான்கு ஆண்டுகள் ஆயின.  விழுப்புரம் - மயிலாடுதுறை  பாதையில், தற்போது ரயில் விடப்பட்டிருக்கிறது.கடந்த நான்கு ஆண்டுகளாக  இப்பாதையில் ரயில்கள் ஓட, அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகள் குறைவு.  அவர்கள் தீவிரமாக முயன்றிருந்தால்,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இப்பாதையில் ரயில்கள் ஓடியிருக்கும்.தினமலர் நாளிதழ் மட்டுமே,  இந்த ரயில்  ஓடுவதற்கு தொடர்ந்து செய்தி வெளியிட்டு,  ரயில்வே தரப்பு செய்திகளையும் வெளியிட்டு வந்தது.  அதனால்,  இந்த ரயில் பாதைக்கு எப்போது விடிவு என்று காத்திருந்தவர்களுக்கு  தகவல்கள்  தெரிந்தன.தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் இந்தப் பாதையில்  அதிக கட்டணத்துடன் ஓடின;   அதற்கு அரசியல்வாதிகள் ஆசியும் காரணம்.தற்போது இப்பாதையில் ரயில்கள் ஓடத் துவங்கி விட்டன.  ஆனால், இப்பாதையில் அமைந்த குத்தாலம், ஆடுதுறை மற்றும் பாபநாசத்தில்  கம்பன் எக்ஸ்பிரஸ் உட்பட  ரயில்கள்  நின்று செல்ல வேண்டும். சென்னையில் இருந்து  பாஸ்ட் பாசஞ்சர்  ரயில் விட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இம்முயற்சியில், "தினமலர்'மேற்கொண்ட  பணிகளுக்கு பாராட்டு தல்கள். நீதியை விட உயர்ந்தவரா இவர்? வீ.சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் விவகாரம் கடந்த ஆறு, ஏழு மாதங்களாக இழுபறியாக இருப்பது நாடறிந்த விஷயம். திருவள்ளூர் மாவட்டத்தில் காவேரி ராஜபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம், 200 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அம்    மாவட்ட கலெக்டர் பழனிக் குமார், இரண்டு முறை சுப்ரீம் கோர்ட்டிற்கு அறிக்கை அளித்துள்ளார்.கலெக்டர் என்பவர், அந்த மாவட்டத்தின் பொறுப்பான உயர்ந்த அதிகாரி. அவரது அறிக்கையின் மேல் நடவடிக்கையாக,  நில அளவை செய்து தெரிவிக்கும்படி, இந்திய நில அளவைத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதைப் பற்றி சர்வே தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.கடந்த ஆறு, ஏழு மாதங்களாக தீர்ப்புகள் வழங்க முடியாத நிலையில் இருக்கிறார் தலைமை நீதிபதி தினகரன். அவரை  விடுமுறையில் போகச் சொல்லியும் போகவில்லை. சிக்கிம் மாநிலத்திற்கு மாற்றலாகி உத்தரவிட்டாலும் ஏற்றுக் கொள்ளவில்லை; செயல்படுத்தவும் இல்லை.ராஜ்யசபாவில் இவரது பேரில் கண்டனத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று கோரி, 70 எம்.பி.,க்கள் மனு கொடுத்ததன் பேரில் விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நீதித்துறையில் நியாயம் வழங்கும் பதவியில் இருப்பவரே, எந்த வழிக்கும் வராமல் அடம்பிடித்து, விடாப்பிடியாக பதவியில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் மூத்தவரான, நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் இந்த விஷயமாக நெஞ்சம் பொறுக்காமல் சமீபத்தில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார்..."நீதிபதி என்பவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்  அல்ல. அதற்கு உட்பட்டவர் தான். நீதிபதி பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாது என்ற போர்வையில், என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது என்ன நியாயம்?' என்று கூறியிருக்கிறார்.இக்கருத்து நியாயமாகத் தோன்றுகிறது! கற்காலமா அதற்கு முற்காலமா? டாக்டர் எம்.செல்வராஜ், மதுரையிலிருந்து எழுதுகிறார்: பதினைந்து ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மக்கள் நலனுக்காக வாசகங்களை வெளியிட்டது.அதில், "எய்ட்ஸ் குணப்படுத்த முடியாத கொடிய வியாதி; ஒருவனுக்கு ஒருத்தி எனும் கோட்பாடே நல்லறம்; உங்கள் மனைவியைத் தவிர, யாரிடமும் பாலியல் தொடர்பு வேண்டாம்...' என்பது போன்றவை அவை.ஆனால், தற்போது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் வெளியிட்ட வாசகம் அதிர்ச்சியளிக்கிறது; நல்ல உள்ளங்களை கவலை கொள்ள வைக்கிறது. மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் முன் உள்ள வாசகம்: "கவ லை பறந்தது, மகிழ்ச்சி பிறந்தது; பால்வினை நோய் எச்.ஐ.வி., - எய்ட்ஸ் தடுக்க, ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது அவசியம்...'மேற்கண்ட வாசகங்கள், திருடனை, "திருடாதே' என அறிவுறுத்துவதற்கு பதிலாக, திருடனை போலீசிடமிருந்து எப்படி தப்புவது என சொல்லித் தருவது போல் இல்லையா?எய்ட்ஸ் வைரஸ்களை வடிகட்ட, ஆணுறைகள்  சில நேரங்களில் தவறுகின்றன என, சில ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளன என்பது வேறு விஷயம்.இது ஒருபுறமிருக்க, அண்மையில் குஷ்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் திருமணத்திற்கு முன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வது தவறில்லை என்பது போல, கருத்து தெரிவித்தது பெரும் வருத்தத்தை தருகிறது.பண்பாட்டில் சீரிய பால் ஒழுக்கத்தில் நாம் எங்கே செல்கிறோம்? கற்காலத்தை நோக்கியா, இல்லை கற்காலத்திற்கும் முந்தைய காலத்திற்கா? வருந்துகின்றன நல் நெஞ்சங்கள்!
General
அமெரிக்காவில் 64 வங்கிகள் மூடல்
நியூயார்க்:அமெரிக்காவில் வங்கிகள் ஸ்திரத்தன்மை இழந்து மூடுவது அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் 64 வங்கிகள், பலமிழந்து செயல்படாமல் மூடப்பட்டிருக்கின்றன.உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை பாதிப்பு இன்னமும் தொடர்கிறது. இதில், அமெரிக்கா முதலில் பாதிப்பிற்கு உள்ளானதும், பெரிய வங்கிகள் மூடப்பட்டன.கிரெடிட் கார்டு கலாசாரத்தில் மூழ்கிய அமெரிக்காவில் பொருளாதார பாதிப்பு வந்ததும் முதலில் அடிவாங்கியது வங்கித் துறைகள் தான். அதை நிமிர்த்த ஒபாமா நிர்வாகம், லட்சக்கணக்கான கோடிகள் ஊக்குவிப்பை அள்ளி வழங்கின.இன்னமும் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்வதால், தனி நபர் வருமானம் சிறப்பாக இல்லை. தேசிய பொருளாதாரம் வலுப்படவில்லை. சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் சமாளிக்க முடியாமல் மூடப்படுகின்றன. வெஸ்டர்ன் பாங்க் ப்யூரிடோ ரிகோ, சி.எப்., பாங்க் கார்பரேஷன், ஆர்-ஜி பிரிமியர் பாங்க் ஆகியவை சமீபத்தில் மூடப்பட்டன.கடந்த மார்ச் மாதம் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டன. பிப்ரவரியில் 15 வங்கிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட போது மூடப்பட்ட வங்கிகள் எண்ணிக்கை 140. நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் 3.2 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதால் இனி அபாயம் அதிகம் வராது என்று கூறப்படுகிறது.
இந்தியா
பாலியல் புகாரால் கர்நாடக உணவு மந்திரி ராஜினாமா:சர்ச்சையை தவிர்க்க முதல்வர் அதிரடி முடிவு
பெங்களூரு:நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு வெளியானதையடுத்து, கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ஹர்தாலு ஹாலப்பா, தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக ஊராட்சித் தேர்தலை கட்சி சந்திக்க வேண்டியிருப்பதால், மேலும் சர்ச்சை வேண்டாம் என்ற கருத்தில் அமைச்சர் ராஜினாமா முடிவு வேகமாக எடுக்கப்பட்டது.கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளர். முதல்வரின் சொந்த மாவட்டமான ஷிமோகாவை சேர்ந்தவர். இவர், பாலியல் புகாரில் சிக்கியதாக, கன்னட நாளிதழ் ஒன்றில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை படித்தவுடன் ஹாலப்பா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் எடியூரப்பா அலுவலகத்திற்கு தகவலை அனுப்பி வைத்துள்ளார். பத்திரிகையில் வெளியான தகவல்:ஹாலப்பா அமைச்சராக இருந்த போது, ஷிமோகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு, நண்பரின் வீட்டிற்கு சென்றார். அங்கு, சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கியிருந்தார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மாத்திரை வாங்கி வருமாறும் தனது நண்பரிடம் கூறினார். நண்பரும் மாத்திரைகளை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது நண்பரின் மனைவி, ஆடைகள் கலைந்த நிலையில் அழுது கொண்டிருந்தார். இச்சம்பவம் நடந்தவுடன் நண்பரின் மனைவி, தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இந்த பாலியல் பலாத்கார விவகாரம் வெளிவந்தால், தனது பதவிக்கு ஆபத்து என்பதை அறிந்த அமைச்சர் ஹாலப்பா, இந்த விவகாரத்தை வெளியில் கூறாத வகையில் நண்பர் குடும்பத்தை மிரட்டி வைத்திருந்தார். இச்சம்பவம், கடந்த நவம்பரில் நடந்துள்ளது.இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஹாலப்பா விவகாரம், கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தினரும் ஆவேச அறிக்கை, பேட்டி வெளியிட்டுள்ளனர். ராஜினாமாவுக்கு பின், நிருபர்களிடம் ஹாலப்பா கூறுகையில், ""என் மீதான குற்றச்சாட் டுகள் ஆதாரமற்றவை, ஜோடிக்கப்பட்டவை. கட்சிக்கும், அரசுக்கும் எவ்வித சங்கடமும் வரக்கூடாது என்பதற்காக, அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தேன். முதல்வர் வெளியூரில் இருப்பதால் அவருடனும், கட்சித் தலைவர் ஈஸ்வரப்பாவுடனும் தொலைபேசியில் பேசி, ராஜினாமா முடிவு குறித்து தெரிவித்தேன். முதல்வர் எடியூரப்பா பெங்களூரு வந்தவுடன், அவரை சந்திப்பேன். இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. பல மாதங் களாக திட்டமிட்டு, சிருஷ்டிக்கப் பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர், உண்மை வெளிவரும். இதன் பின்னணியில், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. யார், யார் உள்ளனர் என்பதை தக்க நேரத்தில் தெரிவிப்பேன். பொது வாழ்க்கையில், ஆரம்பம் முதலே, நேர்மை, நெறிமுறைகளை பின்பற்றி வந்துள்ளேன்.குற்றச்சாட்டு குறித்து, பத்திரிகையில் செய்தியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். கிராம ஊராட்சி தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த என்னை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறது. ராஜினாமா செய்துள்ளதால் எனக்கு எவ்வித மன வருத்தமும் இல்லை. அரசியலில் தொடர எனக்கு வயது இன்னமும் இருக்கிறது. புகழுக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, ராஜினாமா செய்தேன். ராஜினாமா செய்யும்படி யாரும் வற்புறுத்தவில்லை. எனது சொந்த முடிவு. இதன் பின்னணியில், பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் உள்ளார். நான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கெடு விதித்திருந்தார். இவ்விஷயங்கள் குறித்தும் முதல்வர், கட்சித் தலைவருடன் ஆலோசிப்பேன்.இவ்வாறு ஹாலப்பா கூறினார். ஹாலப்பாவின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பா ஏற்றுக்கொண்டு, கவர்னருக்கு அனுப்பி வைத்தார். முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ""ஹாலப்பா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. பாரதிய ஜனதாவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் சதி செய்துள்ளனர். ஹாலப்பாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.அடுத்ததாக ஊராட்சி தேர்தல் வரும் நேரத்தில் சர்ச்சை ஏற்படுவதைத் தடுக்க முதல்வர் எடியூரப்பா, அமைச்சரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றார். ஹாலப்பா மீதான புகாரினால், முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ரேஸ் கோர்ஸ் ரோடு இல்லத்தின் முன், பெங்களூரு நகர இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்; 50 பேர் கைது செய்யப்பட்டனர். மொபைலில் படம் பிடித்தார் நண்பர்:அமைச்சர் ஹாலப்பாவின் நண்பர், ஷிமோகா வினோபா நகரில் வசிக்கிறார். பைனான்சியர் தொழில் செய்து வருகிறார். வினோபா நகர் வீட்டிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.அமைச்சர் ஹாலப்பா சம்பந்தமான விவகாரங்களை, அவரது நண்பரே மொபைலில் படம் பிடித்ததாகவும், 40 வினாடிகள் இந்த படம் ஓடுவதாகவும், ஹாலப்பா, தனது நண்பர் மனைவியின் காலில் விழுவதும், அதன் பின், தனது பேன்டை போடுவதாகவும், அந்த துணிகளுடன் ஹாலப்பா இருப்பது போன்றும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த துணிகள் தற்போது, "டி.என்.ஏ.,' டெஸ்டுக்கு அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் நவம்பர் 27ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் விரைவில் வெளியாகுமா என்ற பரபரப்பும் மக்களிடம் உருவாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, ஹாலப்பாவின் நண்பருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா
அதிக இடங்களில் திரிணமுல் போட்டி:காங்கிரஸ் கட்சியை மீறினார் மம்தா
கோல்கட்டா:கோல்கட்டா தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை நேற்று மம்தா வெளியிட்டார்.மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கட்டாவில் வரும் 30ம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் சி.பி.ஐ.,(எம்) தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் கூட்டணி அமைத் துப் போட்டியிடுகின்றன.இந்நிலையில் காங்கிரஸ் கேட்ட 51 சீட்களைத் தர மறுத்த மம்தா பானர்ஜி, 25 சீட்களை மட்டுமே அவர்களுக்கு கொடுத்துள்ளார். நேற்று, தேர்தலில் போட்டியிடும் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 141 பேரின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டு அவர் பேசியதாவது:இம்மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு யார் ஆக்சிஜன் கொடுக்கின்றனரோ அவர்களுக்கு ஒரு இஞ்ச் இடம் கூட தரமாட்டோம். முர்ஷிதாபாத் தேர்தலில் எங்களுக்கு ஒரு சீட் கூட காங்கிரஸ் தரவில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் அவர்களுக்கு 25 சீட்கள் தந்துள்ளோம்.இந்தத் தேர்தல் ஒரு போர் போன்றது.இவ்வாறு மம்தா தெரிவித்தார்.நேற்று முன்தினம், 88 சீட்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் அறிவித்தது. இத் தேர்தலில் கூட்டணி வியூகத்தில் ஒருபடி மேலே போய் மம்தா, வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.
இந்தியா
கேரளாவில் கூட்டணி கட்சி விலகலால் ஒரே எம்.எல்.ஏ.,வுக்கு அடித்தது சான்ஸ்
திருவனந்தபுரம்;ஆளும் இடதுசாரி கூட்டணியில் இருந்து விலகிய கேரள காங்கிரஸ் (ஜே) கட்சித் தலைவர் பி.ஜே.ஜோசப், தன் அமைச்சர் பதவியையும் துறந்தார். இதையடுத்து அக்கட்சி இரண்டாக பிளந்ததால், அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரே எம்.எல்.ஏ.,வுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் சான்ஸ் அடித்துள்ளது. மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி கூட்டணியில் கேரள காங்கிரஸ் (ஜே) கட்சி இடம் பெற்றிருந்தது. அக்கட்சியின் தலைவர் பி.ஜே. ஜோசப், பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித் தார்.ஆளும் கூட்டணி, அடுத் தாண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் மண்ணை கவ்வும் என கருதிய ஜோசப், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் கூட்டணியில் இருந்து தன் கட்சி விலகுவதாக அறிவித்தார்.அவர் அதை அறிவித்தவுடன் அக்கட்சி இரண்டாக பிளந்தது. அக்கட்சியைச் சேர்ந்த சிலர், பி.சி.தாமஸ் தலைமையில் ஒன்றாக இணைந்து, ஆளும் கூட்டணியை ஆதரித்தது. அக்கட்சியில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வும் கிடைத்தார். அவர் சுரேந்திரன் பிள்ளை.கேரள காங்கிரஸ் (ஜே) கட்சியில் இருந்து பி.ஜே.ஜோசப் உடன் முக்கிய தலைவர்கள் எல்லாம் சென்று விட்ட பிறகு இருக்கும் ஒரு சில தலைவர்களில் பி.சி.தாமசும், சுரேந்திரன் பிள்ளையும் அடங்குவர். புதிய அமைச்சர் பதவி குறித்து பி.சி.தாமஸ் கூறுகையில், "அடுத்த பொதுப்பணித் துறை அமைச்சராக சுரேந்திரன் பிள்ளை தான் நியமிக்கப்படுவார். இதுகுறித்து ஏற்கனவே முதல்வர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது' என்றார்.இதன் மூலம் ஜோசப் ராஜினாமா செய்த அமைச்சர் பதவிக்கு சுரேந்திரன் பிள்ளையை நியமிக்க முதல்வர் அச்சுதானந்தன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடித்து புதிய அமைச்சரவை அமைக்கப்படும்.அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் சுரேந்திரன் பிள்ளை அமைச்சராக்கப்படுகிறார். இதன் மூலம் கேரள காங்கிரஸ் (ஜே) கட்சித் தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் முதல்வர் அச்சுதானந்தன் தன் கூட்டணிக்குள்ளே தக்கவைத்துக் கொள்ள முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபிறகு அவர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.
இந்தியா
இடதுசாரிகள் இன்று முடிவு
புதுடில்லி:ஐ.பி.எல்., சர்ச்சை குறித்து, பார்லிமென்டுக்கு வெளியில் பிரதமர் கருத்து தெரிவித்த விவகாரத்தில், அவர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவது குறித்து, இடதுசாரி கட்சிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:ஐ.பி.எல்., அமைப்பில் நடந்த முறைகேடு குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் பார்லிமென்டில் விளக்கம் அளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இதுகுறித்து பார்லிமென்டில் விளக்கம் அளிக்காமல், சபைக்கு வெளியில் பிரதமர் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டது.இது, பார்லிமென்ட் விதிமுறைகளை மீறிய செயல். இதுகுறித்து பார்லிமென்டில் பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவதா, இல்லையா என, நாளை (இன்று) ஆலோசனை நடத்தவுள்ளோம். இதில் இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.
தமிழகம்
உச்சிப்புளி அருகே கடலில் பலத்த காற்று ராட்சத அலை தாக்கியதில் படகு உடைந்தது: 5 மணி நேரம் கடலில் தத்தள
உச்சிப்புளி:உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப் படகு, பலத்த காற்றால் ராட்சத அலையில் சிக்கி, இரண்டாக உடைந்தது. இதிலிருந்த மீன்பிடி வலை மற்றும் இன்ஜினை,கடல் அலை இழுத்துச் சென்றது.படகில் இருந்து கடலில் குதித்த மீனவர்கள் ஐந்து மணி நேரம் தத்தளித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் சாங்சன்(43). இவர் மூன்று நாட்களுக்கு முன்,10 மீனவர்களுடன் உச்சிப் புளி அருகே பிரப்பன் வலசை கடலில் மீன் பிடிக்க வந்தார். நேற்று முன்தினம் இரவு, நடுக் கடலில் நங்கூரமிட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை 1.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் காற்று வீசியது.இதைத் தொடர்ந்து அலையின் வேகம் அதிகரித்து படகை தாக்கியது. இதில்,படகு இரண்டாக உடைந்தது. இன்ஜின் மற்றும் மீன்பிடி வலையை கடல் அலை இழுத்துச் சென்றது.படகில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் குதித்தனர். இதில் எட்டு பேர், உடைந்த படகை பிடித்தபடி காலை 6.30 மணி வரை தத்தளித்தனர். இரண்டு மீனவர்கள் மட்டும் நீந்தி கரைக்கு வந்து, வேறு படகில் மற்ற மீனவர்களின் உதவியுடன் கயிற்றைக் கட்டி,உடைந்த படகு மற்றும் தத்தளித்த மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். படகின் உரிமையாளர் சாங்சன் கூறியதாவது:தொண்டி பகுதியில் மீன் பாடு சரியில் லாத தால், இந்த பகுதியில் திருக்கை மீன் பிடிக்க வந்தோம். வட்டிக்கு கடன் வாங்கி இன்ஜின் வாங்கினேன். பயங்கர காற்றில், நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களை அலை இழுத்துச் சென்று விட்டது என்றார்.
தமிழகம்
காலாவதி உணவுப் பொருள் விற்றவர் ஓட்டம் குடோன் ஊழியர்கள் மூன்று பேர் கைது
ராயபுரம்:காலாவதியான உணவுப்பொருட்களை குடோனில் வைத்து புதியதுபோல் விற்பனை செய்த திருச்செந்தூர் தொழிலதிபர் தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக கடை ஊழியர்கள் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.பெரிய நிறுவனங்களில் இருந்து காலாவதியான உணவுப்பொருட்களை ஏலம் எடுத்து அதை புதிதுபோல் சில்லறை கடைகளுக்கும், பல்பொருள் அங்காடிகளுக்கும் விற்பனை செய்து வந்த குடோன், பழைய வண்ணார பேட்டை ஜி.ஏ., சாலையில் இயங்கி வந்தது. உணவுப் பொருள் வழங்கல் துறை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்த தகவல் கிடைத்தது.கடந்த 30ம் தேதி அங்கு சென்ற அவர்கள், பல மணி நேரம் அதிரடி சோதனை நடத்தி குடோனுக்கு "சீல்' வைத்தார். இது குறித்து ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரிப்பதற்காக, குடோனை நடத்தி வந்த திருச்செந்தூரை சேர்ந்த துரைபாண்டியனை போலீசார் தேடினர். தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் வசித்துவந்த அவர், அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார். இவ்வழக்கில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், கடை ஊழியர்களான திருச்செந்தூரை சேர்ந்த ருத்திர பாண்டி(55) ஜெகன்(20) சுடலை ஈஸ்வரன் (22) ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்தனர். அவர்கள் மீது, உணவுப் பொருள் கலப்பட தடுப்பு சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மூன்று பேரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான துரைபாண்டியன், திருச்செந்தூர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். துரைபாண்டியன் கைது செய்யப்பட்ட பிறகு இவ்வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.
தமிழகம்
விபத்தில் சிக்கிய காரில் காலாவதியான மருந்துகள்
வடமதுரை:வடமதுரை அருகே லாரியுடன் மோதி கவிழ்ந்த காரில், ஏராளமான காலாவதியான மருந்துகள் இருந்தன.திருச்சி மாவட்டம் ஆலாம்பட்டியைச் சேர்ந்த இக்பாலின் அம்பாசிடர் காரை, டிரைவர் இளங்காகுறிச்சி சிவக்குமார்(22) திண்டுக்கலிற்கு ஓட்டி வந்தார். அங்கு சிறிது நேரம் இருந்த டிரைவர், மீண்டும் ஆலாம்பட்டிக்கு செல்ல திருச்சி ரோட்டில் காரை வேகமாக ஓட்டினார். வடமதுரை குளத்துக்கரை அருகே, முன்னால் சென்று டிப்பர் லாரியின் மீது கார் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சிவக்குமார் காயமடைந்தார்.விபத்திற்குள்ளான காரின் டிக்கியில் ஏராளமான காலாவதியான மருந்துகள், பழைய பில் புத்தகங்கள் இருந்தன. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டம்
சேலம்:பாலுக்கான கொள்முதல் விலை, மானிய விலையில் கால் நடை தீவனம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கை களை வலி யுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வரும் 17ம் தேதி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்."பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் கடந்த ஆண்டு பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, மின் துறை, பால்வளத்துறை அமைச் சர்களுடன் நடந்த பேச்சு வார்த்தை அடிப்படையில் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் துவங்கியது. தாங்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு தகுந்த விலை இல்லை என உற்பத்தியாளர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கினர்.அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றபோதும், விலை உயர்வு குறித்து எந்தவித பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் கடந்த 23ம் தேதி, சேலத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், பசும்பால், எருமைப்பால் லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும், கால்நடைகளுக்கான தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும், பால் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், பணியாளர்களுக்கான பணி வரன்முறை, பால் ஊற்றும் சங்கத்திலேயே சரியான முறையில் அளவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 17ம் தேதி, மாநிலம் முழுவதும் பால் நிறுத்தப் போராட்டம், கறவை மாடுகளை சாலையில் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்தனர். இதற்கிடையே, தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஆவின் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. பால் உற்பத்தியாளர் நலச் சங்கத் தலைவர் செங்கோட்டுவேல் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் பழனிசாமி, சட்ட ஆலோசகர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் கலைமதி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செங்கோட்டுவேல் கூறியதாவது:அரசு ஊழியர் களுக்கு இணையாக, ஆவின் பணியாளர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுவதில்லை. அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய், குறைந்தபட்சம் 500 ரூபாய் என்ற அளவில் வழங்குகின்றனர். அரசு ஊழியர்களுக்கு கொடுப்பது போல் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஆவின் நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஒரே சட்டத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தணிக்கையிலும், நிர்வாகத்திலும் ஒன்றியத்துக்கு ஒன்றியம் முரண்பாடு உள்ளது. தங்கள் விருப்பம் போல் அதிகாரிகள் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.இந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாத பட்சத்தில், மாநிலம் முழுவதும் உள்ள 17 ஆவின் ஒன்றியங்களில் உள்ள பணியாளர்கள், தொழிலாளர்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும் 18ம் தேதி காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவர். மேலும், ஒன்றியங்களில் இருந்து பால் வெளியில் செல்வதையும் அவர்கள் தடுப்பர். வருகிற 17ம் தேதி பால் உற்பத்தியாளர்கள் போராட்டமும், 18ம் தேதி ஆவின் பணியாளர்கள் போராட்டமும் நடக்கிறது.இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
தமிழகம்
மரங்களை பாதுகாப்பதில் சிக்கல் குறைந்த அளவு வன ஊழியர் காரணம்
ஓசூர்:வனத்துறையில் 50 சதவீதம் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிப்பதால், குறைந்தளவு ஊழியர்களைக் கொண்டு வன விலங்கு மற்றும் மரங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர், பெட்டமுகிலாளம், உரிகம், ஊடேதுர்க்கம், தளி மற்றும் ஜவளகிரி உள்ளிட்ட வனப்பகுதியில் யானை கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகள் முழுவதும் கர்நாடகா வனப் பகுதி களையொட்டி உள்ளதால், அங்குள்ள யானைகளும் தமிழக வனப்பகுதிகளுக்குள் இடம்பெயர்ந்து மலை கிராமங் களில் கூடுதல் அட்டகாசம் செய்கின்றன. கடந்த காலத்தில் வறண்ட காலத்தில் மட்டும் யானைகள் குடிநீருக்காகவும், உணவுக்காக வும் வனப்பகுதிகளை விட்டு மலைகிராமங்களை நோக்கி படையெடுக்கும்.தற்போது இரு ஆண்டு களாக வழக்கத்துக்கு மாறாக தேன்கனிக்கோட்டை,தளி சுற்றுவட்டார மலைகிராமங்களில் யானைகள் அடிக்கடி நுழைந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதோடு, வயல்களில் காவலுக்கு இருக்கும் விவசாயிகள், யானைகள் தாக்கி பலியாகி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் 11 விவசாயிகள் பலியாகியுள்ளனர். தேன்கனிக் கோட்டை மற்றும் தளி மலை கிராமங்களில் விவசாயிகள் பெரும்பாலும் ராகி,சோளம்,கம்பு,வாழை மற்றும் நெல் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் இரவு நேரத்தில் கும்பலாக வந்து, விவசாய நிலத்துக்குள் புகுந்து ஆயிரக் கணக்கான ஏக்கர் பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து சென்றன.விவசாயிகள் பட்டாசு வெடித்தும், நெருப்பு வைத்தும் யானைகளை விரட்டி வருகின்றனர். வனத்துறையினர் பாதிக்கப்பட்ட நிலத்தை கணக்கெடுத்து, அரசு நிவாரண உதவி பெற்றுத் தருவ தாக விவசாயிகளிடம் உறுதியளித்துள்ளனர்.வனத்துறையில் யானைகளை கண்காணித்து அவற்றை கிராமப் பகுதியில் வராமல் தடுக்க போதிய ஊழியர்கள் இல்லை. தற்போது, 50 சதவீதம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. வனத்துறை யினர் பெயரளவுக்கு வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். யானைகள் கிரா மங்களை நோக்கி படையெடுக்கும் போது மட்டும் சென்று, அவற்றை வனப் பகுதிகளுக்கு துரத்தி விடுகின்றனர். ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, வனப் பகுதியில் வன விலங்குகள்,மரங்களை பாதுகாப்பது கேள்விக் குறியாகியுள்ளது.வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல்கள் அடிக்கடி வனப்பகுதியில் விலங்கினங் களை வேட்டை யாடு வதும் தொடர்ந்து வருகிறது. வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி,வனத்தை பாதுகாக்க வேண்டும்.
தமிழகம்
வெடிகுண்டுக்கான மூலப் பொருளை கேரளாவிற்கு சப்ளை செய்தவர் கைது
வாழப்பாடி:வாழப்பாடி அருகே உரம் விற்பனை செய்ய உரிமம் பெற்று, வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ப்ரில்ட் அம்மோனியம் நைட்ரேட் பதுக்கி வைத்து, கேரளாவிற்கு சப்ளை செய்தவரை காரிப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத் தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெரியகவுண்டாபுரம் மந்தைமேடு பகுதியில் இருந்து மர்ம பொருள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக காரிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது.போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முரளிதரன், எஸ்.ஐ., வேதபிறவி மற்றும் போலீ சார் அப்பகுதி யில் சோதனை நடத்தினர்.விவசாயி பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான சேகோ பேக்டரி குடோனில் மகா டிரேடர்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் உரம் விற்பனை கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டை களை ஆய்வு செய்தனர். அப்போது, உர மூட்டைகளுக்கு இடையே வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த ப்ரில்ட் அம்மோனியம் நைட்ரேட் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.உரம் விற்பனை செய்ய அனுமதி பெற்று, வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த ப்ரில்ட் அம்மோனியம் நைட்ரேட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதை உர மூட்டைகளோடு பதுக்கி வைத்து, கேரளாவைச் சேர்ந்த மர்ம நபர்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, உர கிடங்கு உரிமையாளர் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த உடையம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரனை(37) போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ எடை ப்ரில்ட் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவரை சேலம் இரண்டாவது ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜெலட்டின் குச்சிகளுடன் சேர்த்து பயன்படுத்தினால் பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்ட வெடிபொருளான ப்ரில்ட் அம்மோனியம் நைட்ரேட்டை கேரளாவைச் சேர்ந்த மர்ம நபர்கள் அடிக்கடி மகேந்திரனிடம் இருந்து கொள்முதல் செய்து சென்றதாக தகவல் கிடைத்தது.பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
தமிழகம்
மாவோயிஸ்ட்களுக்கு கொரில்லா பயிற்சி தமிழகத்தை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
சென்னை:மாவோயிஸ்ட்களுக்கு கொரில்லா பயிற்சி அளித்த தமிழகத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற கஸ்டம்ஸ் அதிகாரி, குஜராத்தில் கைது செய்யப்பட்டார்.சத்திஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 76 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, குஜராத்தின் தென்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் குறித்து, சூரத் மற்றும் நவ்சாரி மாவட்ட போலீசின் சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் கடந்த வாரம் நடத்திய தேடுதல் வேட்டையில், அப்பகுதியில் தங்கியிருந்த விஸ்வநாத் வரதராஜன் ஐயர் என்ற ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.வரதராஜன் ஜயரிடம் நடத்திய விசாரணையில், 2000ம் ஆண்டு கேரள வனப்பகுதியில் குஜராத்தை சேர்ந்த நக்சல்கள் சிலருக்கு அவர், கொரில்லா போர் பயிற்சி அளித்தது தெரியவந்துள்ளது. இவர், மாவோயிஸ்ட் இயக்க மத்திய கமிட்டி உறுப்பினர்களில் முக்கியமானவர். தமிழகம் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர், சுங்கத்துறை அதிகாரியாக இருந்து வி.ஆர்.எஸ்., பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இவர் குறித்து சூரத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
கோவையில் மீண்டும் பன்றி காய்ச்சல் பீதி
கோவை:கோவையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் மதுநித்யா(28); பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 28ம் தேதி பொள்ளாச்சி வந்தார். அவருக்கு, பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி தெரிந்ததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று பரிசோதனை மேற்கொண்டதில், பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் தனி அறைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், ""பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருந்து, மாத்திரைகள் தேவையான அளவு இருப்பு இருப்பதால், தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தமிழகம்
ரயில்கள் தாமதம் பயணிகள் அவதி
சென்னை:ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள், ரயில்களுக்காக மணிக்கணக்கில் காத்திருந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டது.நேற்று அதிகாலை 3.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரவேண்டிய பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தாமதாக நேற்று மதியம் 1.10 மணிக்கு வந்தடைந்தது. நேற்று காலை 3.50 மணிக்கு வரவேண்டிய ஹவுரா மெயில் பகல் 12 மணிக்கு தாமதமாக வந்தடைந்தது. ஹவுராவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று முன்தினம் மாலை வரவேண்டிய ஹவுரா மெயில் தாமதமாக வந்தடைந்ததால், நேற்று சென்னை சென்ட்ரலிருந்து காலை 8.45 மணிக்கு இயக்க வேண்டிய ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றப்பட்டு மதியம் 1 மணிக்கு இயக்கப்பட்டது.இந்த ரயில்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதத்தால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் நேற்று மணிக்கணக்கில் காத்திருந்து அவதிக்குள்ளாயினர். தாமதமாக வரும் ரயிலின் பெட்டிகள் மீண்டும் அடுத்த ரயிலில் இணைக்கப்படுவதால், தாமதம் ஏற்படுகிறது.குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் பயணிகள், இணைப்பு ரயிலுக்காக காத்திருப்பவர்கள் குடும்பம் குடும்பமாக தங்கள் உடைமைகளுடன் பல மணி நேரம் காத்திருந்தனர்.
தமிழகம்
சுய உதவிக் குழுவிலும் போலி நாகர்கோவிலில் 4 பேர் கைது
நாகர்கோவில்: போலி சுய உதவிக்குழு நடத்தி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து நான்கு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையை சேர்ந்தவர்கள் மித்ரன், சுசீலா, ரத்னமணி, அசோகன். இவர்கள் பல இடங்களில் சுய உதவிக்குழுக்கள் நடத்தி வருகின்றனர். நாகர்கோவிலில் ஒரு கிளை துவங்கியுள்ளனர். இதில், 325 ரூபாய் செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால், மாதம் தோறும் 200 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் கிடைக்கும், என்று விளம்பரம் செய்தனர். இதை நம்பி, கடலோர கிராமங்களைச் சேர்ந்த பலர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். ஆனால், ஒரு மாதம் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால், உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள், அலுவலகத்தில் இருந்தவர்களை முற்றுகையிட்டனர்.தகவலறிந்து வந்த நேசமணி நகர் போலீசார், நான்கு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். கேரளாவில் 50 கோடி ரூபாயும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு கோடி ரூபாயும் மோசடி நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழகம்
அடகு கடை ஊழியர் கொலை கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகை அடகு கடையில், ஊழியரை கொன்று விட்டு கொள்ளையடித்து தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள குருவி கொண்டான்பட்டியில் நகை அடகு கடை நடத்தி வருபவர் வள்ளியப்பன். அவரது கடையில் ஓராண்டாக சிவகங்கையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (70) வேலை செய்து வந்தார். அவர் கடையிலேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ரவிச்சந்திரன் தங்கினார்.நேற்று காலை நீண்ட நேரமாகியும் அடகு கடை திறக்கப்படவில்லை. கடையினுள் இருந்த ரவிச்சந்திரன் வெளியே வராததால், அருகிலுள்ள கடைகளைச் சேர்ந்தவர்கள் சந்தேகமடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது, நகை கடை கதவு லேசாக திறந்து கிடப்பது தெரிந்தது. கடையினுள் சென்று பார்த்த சிலர், ரவிச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், நகைகளை கொள்ளையடிக்க வந்த கும்பல், கொள்ளையை தடுக்க முயன்ற ரவிச்சந்திரனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பியது தெரிந்தது. அடகு கடை உரிமையாளர் வள்ளியப்பன் நேரில் வந்து பார்வையிட்டு, கடை லாக்கரில் இருந்த 16 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் பத்திரமாக இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். லாக்கரில் இல்லாமல் வெளியில் வைத்த குறைந்த அளவிலான நகைகள் மட்டும் கொள்ளை போனது தெரிந்தது.புதுக்கோட்டை எஸ்.பி., மூர்த்தி நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.
தமிழகம்
போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல் ரவுடிகள் பெரும் அட்டகாசம்: மூவர் கைது
திட்டக்குடி:திட்டக்குடியில் குடிபோதையில் போலீஸ்காரரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேலவீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம்; பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக மெயின்ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். அப்போது அந்த ஓட்டலில் குடிபோதையில் வந்த ஆறு பேர், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர்.இதைத் தொடர்ந்து அவர்கள் வந்த இண்டிகா காரை அரியலூர் - திட்டக்குடி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சுக்கு வழி விடுமாறு போலீஸ்காரர் முருகானந்தம் கூறினார். ஆத்திரமடைந்த ஆறு பேரும் முருகானந்தத்திடம் தகராறு செய்து தாக்கினர். காரிலிருந்து வீச்சரிவாளை எடுத்து கொலை வெறியுடன் வெட்ட முயன்றனர். முருகானந்தத்தின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டனர். கும்பலை பார்த்ததும் ரவுடிகள் தப்பியோட முயன்றனர். அதில் மூன்று பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்ற மூன்று பேரும் காரில் தப்பிச் சென்றனர். டி.எஸ்.பி., இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.தொழுதூர் புதிய காலனியைச் சேர்ந்த பாக்யராஜ்(28) பிரபா என்ற பிரபாகரன்(24) லக்கூர் காலனி கார்த்தி என்ற கார்த்திகேயன் (23) என தெரிந்தது.போலீஸ்காரர் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் பாக்கியராஜ், பிரபாகரன், கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவான பெரம்பலூர் மாவட்டம் ஆடுதுறை விமல் என்ற விமல்ராஜ், பென்னகோணம் வாசு, முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.காருக்குள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்ததால் கூலிப்படையைச் சேர்ந்தவர்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: ஏரிக்கரையில் பிணம் வீச்சு:தொழில் போட்டி காரணமா என போலீஸ் விசாரணை
மடிப்பாக்கம்:பொதுப்பணித்துறை முன்னாள் கான்ட்ராக்டரும், தற்போதைய ரியல் எஸ்டேட் அதிபருமான ஒருவரை அடித்து கொலை செய்து, பிணத்தை கீழ்கட்டளை ஏரியில் தூக்கி வீசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு, தொழில் போட்டி அல்லது பொதுப்பணித்துறை கான்ட்ராக்ட் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.இது குறித்து போலீசார் கூறியதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் ஜெயகுமார்(40); பொதுப்பணித்துறை முன்னாள் கான்ட்ராக்டர். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராபர்ட் ஜெயகுமார், சென்னை எழும்பூர், பெருமாள் ரெட்டி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த ராபர்ட் ஜெயகுமாரை, அவரது நண்பர் பிரபு என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக நிலம் பார்க்க அழைத்துச் சென்றார். பின்னர், இரவு வெகு நேரமாகியும் ராபர்ட் வீடு திரும்பவில்லை. திவ்யா அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது; பிரபுவின் மொபைல் போனும் "சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது.பல இடங்களில் தேடியும் ராபர்ட் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த திவ்யா, எழும்பூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மாயமான ராபர்ட் ஜெயகுமாரை தேடி வந்தனர். இந்நிலையில், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள கீழ்கட்டளை ரெட்டை ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க நபர், உடலில் பலத்த காயங்களுடன் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எழும்பூர் போலீசார், திவ்யாவிற்கு தகவல் தெரிவித்தனர். திவ்யாவின் உறவினர் ஜெயபால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு வந்து பார்த்து, ஏரியில் மீட்கப்பட்டது ராபர்ட் ஜெயகுமாரின் உடல் தான் என்று அடையாளம் காட்டினார்.ராபர்ட் ஜெயகுமாரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற பிரபு தலைமறைவாகியுள்ளார். மடிப்பாக்கம் போலீசார், இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா அல்லது பொதுப்பணி துறையில் ராபர்ட் ஜெயகுமார் கான்ட்ராக்டராக இருந்துள்ளதால், அப்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
நின்ற லாரி மீது வேன் மோதல்: 3 பேர் பலி
சாத்தூர்:சாத்தூர் அருகே கோவில்பட்டி செல்லும் நான்கு வழிச்சாலையில் நின்ற லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், மூன்று பேர் பலியாயினர்.மதுரை ஆத்திகுளம் கோகுல் நகரைச் சேர்ந்தவர் சகோதரர்கள் பேச்சிமுத்து (60) சோமு (56). இவர்களின் சகோதரி ராஜேஸ்வரி(54) சோமு மனைவி முத்துலட்சுமி (43) ஆகியோர் நேற்று திருநெல்வேலி சக்கரைகுளம் அய்யனார் கோவிலில் சாமி கும்பிட வந்தனர். பின், மதுரைக்கு ஆம்னி வேனில் திரும்பி கொண்டிருந்தனர். வேனை பேச்சிமுத்து ஓட்டி வந்தார்.சாத்தூர் என்.வெங்கடேஷ்வரபுரம் அருகே நான்கு வழிச்சாலை பணி நடந்து வருகிறது. அவ்வழியாக வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணியளவில் வேகமாக வந்த வேன், நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.சம்பவ இடத்திலேயே சோமு, பேச்சிமுத்து, ராஜேஸ்வரி பலியாயினர். முத்துலட்சுமி படுகாயமடைந்து சாத்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சாத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ரயில்வே கேட்டில் டிராக்டர் சிக்கி நின்றது திருப்பதி ரயில் அரை மணி நேரம் தாமதம்
விக்கிரவாண்டி:ரயில்வே கேட்டில் கரும்பு டிராக்டர் டயர் வெடித்து நின்றதால், திருப்பதி செல்லும் பயணிகள் ரயில், முண்டியம்பாக்கத்தில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த அதனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம்; டிராக்டர் டிப்பரில் கரும்புலோடு ஏற்றிக்கொண்டு முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்தார். டிராக்டரை அதனூரைச் சேர்ந்த செல்வம் (35) ஓட்டி வந்தார். முண்டியம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள கொசப்பாளையம் ரயில்வே கேட் திறந்திருந்ததால் மாலை 4.30 மணிக்கு அந்த வழியே டிராக்டரை ஓட்டிச் சென்றார்.ரயில்வே கேட்டை கடந்து டிராக்டர் செல்லும் போது டயர் திடீரென வெடித்தது. இதனால், டிராக்டர் ரயில்வே டிராக்கை கடக்க முடியாமல் இரு ரயில் பாதைகளுக்கு நடுவே உள்ள காலி இடத்தில் நின்றது. பணியிலிருந்த கேட் மேன் ஜெகன்நாதன் டிராக்டர் நிற்பது குறித்து ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். இதே நேரத்தில் புதுச்சேரியிலிருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில்(எண் 104) முண்டியம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலை 4.40 மணிக்கு வந்தடைந்தது. சிக்னல் கிடைக்காததால் மேற்கொண்டு ரயில் புறப்பட முடியவில்லை.இதற்கிடையே டிப்பரில் மாற்று டயர் பொருத்தி டிராக்டரை அப்புறப்படுத்தினார். உடனடியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்கப்பட்டு, மாலை 5.10 மணிக்கு திருப்பதி பயணிகள் ரயில் அரை மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டது.சம்பவம் குறித்து டிராக்டர் டிரைவர் செல்வத்திடம் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
தமிழகம்
வாந்தி,பேதி மாணவன் பலி
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த காரனை புதுச்சேரி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நிதிஷ்நிர்மல்குமார்; பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவருக்கு இரவு வாந்தி, பேதி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார். இதே கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள், கேசவலு மகள் ஜானகி, இளவரசன், ஆறுமுகம் மகன்கள் கோகுல், பாஸ்கர், ஆறுமுகம், பார்வதி, பத்மா, ஜனனி, மணிகண்டன் ஆகியோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜானகி, செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். மற்றவர்கள் கூடுவாஞ் சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகம்
பழுதாகி நின்ற லாரி மீது பஸ் மோதி 2 பேர் பலி
கிருஷ்ணகிரி:சென்னையிலிருந்து, ஓசூருக்கு சென்ற அரசு விரைவு பஸ்சை அரக்கோணத்தை சேர்ந்த டிரைவர் பூபதி (40) ஓட்டி வந்தார். பஸ் நேற்று அதிகாலை, 5 மணிக்கு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், நமாஸ்பாறை அருகே வந்தபோது, சாலையோரம் பழுதாகி நின்ற இரும்பு பாரம் ஏற்றிய, லாரியின் பின்னால் மோதியது. பஸ்சின் முன்புற படிக்கட்டில் நின்றிருந்த சீவனப்பள்ளியை சேர்ந்த பூ வியாபாரி பையாரெட்டி (35), உடுமலையை சேர்ந்த விஜயன் (29) ஆகியோர் பலியாகினர். காஞ்சிபுரத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் கருணாகரன் (47), பொள்ளாச்சி வேல் முருகன் (30), தர்மபுரி மாவட்டம் தண்டுகாரம் பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (29), ஓசூர் பிரதாப் (25) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.
தமிழகம்
கிருஷ்ணா கால்வாய் தண்ணீர் கோககோலாவிற்கு சப்ளை
பொதுமக்கள் குடிநீருக்காவும், விவசாயிகளின் பாசன வசதிக்காகவும் அமைக் கப்பட்ட கிருஷ்ணா கால்வாய் தண்ணீரை, கோககோலா நிறுவனத்துக்கு சப்ளை செய்ய ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஆந்திரா குண்டூர் மாவட்டம் ஆத்மகூர் அருகே கோககோலா குளிர்பான தொழிற் சாலை உள்ளது. கடந்த 99ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனம் நிலத்தடி நீரை மட்டும் பயன்படுத்தி வந்தது. தற்போது இந்த நிறுவனத்துக்கு 21.50 லட்சம் லிட்டர் தண்ணீரை கிருஷ்ணா கால்வாய் மூலம் சப்ளை செய்ய ஆந்திர அரசு ஒப்பு கொண்டுள்ளது. 40 லட்சம் லிட்டர் தண்ணீர் 4,500 ரூபாய் என்ற அளவில் 10 ஆண்டுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் மேற் கொள்ளப் பட்டுள்ளது.ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொழில் துறை அமைச்சர் லட்சுமி நாராயணா குறிப்பிடுகையில், "கிருஷ்ணா கால்வாய் தண்ணீரில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் தான் கோககோலா நிறுவனத்துக்கு சப்ளை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்களின்பயன்பாட்டுக்கான தண்ணீரில் எந்த குறைவும் ஏற்படாது' என தெரிவித்துள்ளார்.அமைச்சரின் இந்த விளக்கத்தால் திருப்தியடையாத எதிர் கட்சிகள் மக்களின் உதவியுடன் போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளன. -நமது சிறப்பு நிருபர்-
தமிழகம்
மயக்கும் மொழி பேசி ஆண்களிடம் பணம் பறிப்பு சிறை சென்ற மோசடி ரேகா உட்பட 3 பேர் கைது
பள்ளிக்கரணை:மொபைல் போனில் ஆண்களிடம் ஆசைவார்த்தையில் பேசி, அவர்களை வீட்டிற்கு வரவழைத்து நகை, பணம் பறிக்கும் தாய், மகன் உள்ளிட்ட மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சோழிங்கநல்லூரை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன் அசோக்குமார்(34); தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் அசோக்குமார் மொபைல்போனுக்கு ஒரு "மிஸ்டு கால்' வந்தது. அந்த எண்ணுக்கு அசோக்குமார் போன் செய்து பேசினார். எதிர்முனையில் பேசிய ஒரு பெண், தன் பெயர் ரேகா (எ) சாவித்திரி என்று கூறி இனிமையாக பேசினார். இதனால் அசோக்குமார், மொபைல் போனில் தொடர்ந்து ரேகாவிடம் பேசி வந்தார். அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.கடந்த 27ம் தேதி ரேகா, அசோக்குமாரை வீட்டிற்கு வரவழைத்து, பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று அசோக்குமார் கூறியுள்ளார். ரேகா, அவரது தங்கை மகன் கோகுல் ஆகியோர் சேர்ந்து அசோக்குமாரிடம் இருந்து ஏ.டி.எம்., கார்டை பறித்துக் கொண்டனர். ரகசிய எண் தெரியாததால், அதில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை. இதையடுத்து, அசோக்குமாரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த இரண்டு மோதிரம், தங்கச் சங்கிலி மற்றும் லேப்-டாப் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும், இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிஉள்ளனர்.இது குறித்து அசோக்குமார், பள்ளிக்கரணை போலீசில் புகார் கொடுத்தார். புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவுப்படி, பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் பள்ளிக்கரணை, நாராயணபுரம், மாடவீதி தெரு தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி ரேகா(45), நாராயணபுரம், செங்கேணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதரன் மகன் கோகுல்(24) ஆகியோரை கைது செய்தனர்.விசாரணையில், வெற்றி நகர், பாஷியம் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன்(43) என்பவரிடம் பழகி, கடந்த அக்டோபர் மாதம் ரேகாவும் அவரது மகன் சதாசிவம்(26) ஆகியோர் சேர்ந்து செயின், மோதிரம் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரிய வந்தது. ரேகாவின் மகன் சதாசிவத்தை வடபழனி முருகன் கோவில் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். ரேகா, ஏற்கனவே நாராயணபுரத்தை சேர்ந்த விசு என்பவருடன் திருச்சி அருகே கரியாபட்டியில் போலீஸ் மற்றும் வக்கீல் உடையில் ஒரு வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், லேப்-டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்தியா
சுற்றுலா பயணிகளின் துன்புறுத்தலால் வாகனங்களை தாக்கிய காட்டு யானை
மூணாறு:மூணாறு அருகே மாட்டுப்பட்டி எக்கோ பாயின்ட் பகுதியில், சுற்றுலா பயணிகளின் துன்புறுத்தலால் மிரண்ட காட்டு யானை, 30க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது.பயணிகள் அலறியடித்து, ஓடி உயிர் தப்பினர். மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணைக்கரையோரங்களில், உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றி வந்தது. இது குறித்து "தினமலர்' இதழில் படத்துடன் செய்தி வெளியானது. நேற்று மாட்டுப்பட்டி எக்கோபாயின்ட் பகுதியில் காட்டுக்குள் நின்றிருந்த அந்த யானை மீது,போதையில் இருந்த சில சுற்றுலா பயணிகள் கற்களை வீசினர்.இதனால் மிரண்ட யானை, ரோட்டில் ஓடத் துவங்கியது.அப்போது எக்கோ பாயின்ட் பகுதியில் குவிந் திருந்த சுற்றுலா பயணிகளின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. ரோட்டில் ஓடிய யானை வாகனங்களை தாக்கி, தந்தத்தால் குத்தி தூக்கி, வீசியது. இதில் பஸ், மினிவேன், கார்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட வாகனங்களும், மூன்று கடைகளும் சேதமடைந்தன. இதை பார்த்த சுற்றுலா பயணி கள் அலறி அடித்து, ஓடி வாகனங்களுக்கு இடையேயும், கடைகளின் மறைவுகளிலும் ஒளிந்து கொண்டனர். ஒரு மணி நேரம் வாகனங்களை துவம்சம் செய்த பிறகு, யானை பாலார் செக்-போஸ்ட்டிற்கு அடுத்துள்ள காட்டிற்குள் சென்றது. உடனே சுற்றுலா பயணிகள் வேகமாக வாகனங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினர். அப் பகுதியே கலவர பூமி போல் காணப்பட்டது.மாலை 4 மணிக்கு மீண்டும் காட்டிற்குள் இருந்து வெளியே வந்த யானை,மாட்டுப்பட்டி அணை நீர் தேக்கப்பகுதி வழியாக நீந்தி மறு கரைக்கு சென்றது. மூணாறு எஸ்.ஐ., அணில்குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சுற்றுலா பயணிகள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
இந்தியா
இரண்டு மாவோயிஸ்டுகள் கைது:நக்சல்களை சமாளிக்க அதிநவீன ஆயுதம்
பரக்கேமுண்டி(ஒரிசா):ஒரிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில், இரண்டு மாவோயிஸ்டுகளை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து கணிசமான அளவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.ஒரிசா மாநிலம், கஜபதி மாவட்டம், அடாபா பகுதியிலுள்ள பல்லப்படு காட்டுப் பகுதியில், நக்சலைட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடிப் படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மனஸ் மஜ்ஹி என்ற லடன் மற்றும் கிபியோ பிரதான் ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 டெட்டனேட்டர்கள், அதிகமான, "பியூஸ்' ஒயர்கள், ஸ்டார்ட்டர்கள் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இருவரில் மஜ்ஹி, பல தாக்குதல் வழக்குகள், மொபைல்போன் கோபுரங்களைத் தகர்த்த வழக்குகள், பஸ்சை எரித்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி.பிரதான், மாவோயிஸ்டுகளுக்கு முக்கிய செய்திகளைக் கடத்தும் நபர். இவர்கள் இருவரும், மாவோயிஸ்டுகளின் பன்சதாரா பகுதியின் சி.பி.ஐ.,(எம்) கமிட்டியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். நக்சலைட் மற்றும் பயங்கரவாதிகளின் சவால்களை சந்திக்கும் வகையில், துணை ராணுவப் படையின் நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. துணை ராணுவப் படையினருக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு படையை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, துணை ராணுவப் படையின் வலிமையை மேலும் பலப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.குண்டு துளைக்காத உடைகள், அதி நவீன துப்பாக்கிகள், ஆயுத வசதியுடன் கூடிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 59 ஆயிரம் குண்டு துளைக்காத உடைகளை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்பிடங்களை அறிந்து கொள்ளும் ஜி.பி.எஸ்., கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.துணை ராணுவப் படையினருக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் கணிசமான தொகை செலவிடப் படவுள்ளது.இவ்வாறு உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா
அடுத்தவர் கணக்கிலிருந்து பணம் திருட்டு ஏ.டி.எம்.,மில் நூதனமாக திருடியவர் கைது
மும்பை:மும்பையில் வங்கி ஏ.டி.எம்., ஒன்றில் மற்றொரு நபரின் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டு, அவரது கணக்கிலிருந்து, நூதனமாக பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.மும்பையை சேர்ந்தவர் பங்கஜ் பிரமோத் வைத்யா. சமீபத்தில் அங்குள்ள வங்கி ஏ.டி. எம்.,க்கு பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கு பாதுகாவலர் யாரும் இல்லை. வைத்யா உள்ளே நுழைந்தபோது, அவருடன் மற்றொரு நபரும் நுழைந்தார். அப்போது வைத்யா, "நான் பணம் எடுத்து விட்டு வரும் வரை, வெளியில் இருங்கள். அதற்கு பின் நீங்கள்பணம் எடுக்கலாம்' என்றார்.அதற்கு அந்த நபர்,"நான் பணம் எடுப்பதற்காக வரவில் லை. ஏ.டி.எம்., செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக வங்கியால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பாளர். எனவே, நீங்கள் தயங்காமல் பணம் எடுக்கலாம்' என்றார். வைத்யா பணம் எடுக்கும் வரை, அவரின் அருகிலேயே அந்த நபரும் நின்று கொண்டிருந்தார். பணம் எடுத்து விட்டு வெளியில் சென்ற வைத்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வெளியில் செல்வது போல், பாவனை செய்து விட்டு, ஏ.டி.எம்., கண்ணாடி வழியாக, அந்த மர்ம நபரின் செயல்பாடுகளை கண்காணித்தார். அந்த நபர், வைத்யாவின் ரகசிய குறியீட்டு எண்களை பதிவு செய்து, அவரது கணக்கிலிருந்து 2,000 ரூபாய் பணம் எடுப்பதை கண்டுபிடித்தார். வேகமாக வெளியில் வந்த, அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தார். சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்தவர்களும், வைத்யாவின் உதவிக்கு வந்தனர். அந்த மர்ம நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், அந்த நபரின் பெயர் மிஸ்ரா என்பதும், நீண்ட நாளாக இதுபோல் நூதன கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ஒரு சில வங்கிகளின் ஏ.டி.எம்.,மில் பண பரிமாற்றம் முடிந்தபின், "மீண்டும் உங்கள் நடவடிக்கையை தொடர விரும்புகிறீர்களா?' என கேள்வி வரும். "ஆம்' என்ற பட்டனை அழுத்தினால், மீண்டும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்யும்படி அடுத்த கேள்வி வரும். வைத்யா பணம் எடுத்த ஏ.டி.எம்.,மிலும் இதுபோன்று தான் இருந்துள்ளது. வைத்யா பணம் எடுக்கும்போது, அவரின் அருகிலிருந்த மிஸ்ரா, ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டார். வைத்யா வெளியில் சென்றதும், "மீண்டும் நடவடிக்கையை தொடர விரும்புகிறீர்களா?' என்ற கேள்வி எழுந்ததும், "ஆம்' என்ற பட்டனை அழுத்தி, படு வேகமாக வைத்யாவின் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்து, பணம் எடுத்துள்ளார். இதுபோன்ற தொழில்நுட்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏ.டி.எம்.,களில், முதல் பண பரிமாற்றம் முடிந்த 30 விநாடிகள் வரை, அடுத்த பண பரிமாற்றத்துக்காக மீண்டும், "கார்டு' உபயோகிக்க வேண்டிய தேவை இல்லை. 30 விநாடிகளுக்குள் ரகசிய எண்ணை பதிவு செய்தால், அதிலிருந்து பணம் எடுத்து விட முடியும். வைத்யா விஷயத்திலும் இது தான் நடந்துள்ளது.ஆனால், அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களிலும், இந்த நூதன திருட்டை நடத்த முடியாது. பெரும்பாலான வங்கிகளில் ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும், மீண்டும் கார்டு உபயோகிக்க வேண்டும். ஒரு சில வங்கிகளில் உள்ள ஏ.டி.எம்.,களில் மட்டுமே, அடுத்த பண பரிமாற்றத்துக்கு கார்டு உபயோகிக்க வேண்டிய தேவை இருக்காது. இதுபோன்ற ஏ.டி.எம்.,களில் தான், இந்த நூதன கொள்ளை நடக்கிறது. இதுகுறித்து, அனைத்து வங்கி நிர்வாகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.இவ்வாறுபோலீசார் தெரிவித்தனர்.
தமிழகம்
கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு ரூ. 32 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு
தூத்துக்குடி:தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு 32 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க விரைவு கோர்ட் உத்தரவிட்டது.தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்தவர் அன்டோவிக்டோரியா. இவர் சிறிய கப்பல்கள் மூலம் தூத்துக்குடியிலிருந்து இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். 99 ம் ஆண்டு செப்., 11ல் அன்டோ விக்டோரியாவுக்கு சொந்தமான "மரியஆன்டோராஜ்' என்ற கப்பலில் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்றனர். மாலுமி உட்பட 12 தொழிலாளர்கள் இருந்தனர். கப்பல் தூத்துக்குடியிலிருந்து 20 கடல் மைல் தூரம் சென்ற நிலையில் கடலில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டது. மாலுமி தனிஸ்லாஸ், தூத்துக்குடி துறைமுகத்தில் செயல்படும் அவசரகால மீட்பு மையத்திற்கு வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காப்பாற்றும்படியும் கூறினார்.ஆனால் துறைமுக நிர்வாகம் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் இறங்கவில்லை. கடலோர பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் மாலுமி தனிஸ்லாஸ்(57) மற்றும் ஊழியர்கள் அந்தோணி (58), ஜான்டோ (35), ரோலண்ட் (34), சுபிகர் (18), ராயன்பர்னான்டோ (21), அந்தோணி ராஜ் (42), ஜோசப் உட்பட 12 பேரும் கடலில் மூழ்கி இறந்தனர்.இறந்தவர்களில் ஜோசப் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. மற்ற 11 பேரின் உடல்கள் மீட்கப்படவில்லை. இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி 2வது விரைவு கோர்ட்டில், 2003 ஜூனில் நஷ்டஈடு கோரி 12 பேரின் குடும்பத்தினரும் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். 12 வழக்குகளிலும் தீர்ப்பளிக்கப்பட்டது. கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத் திற்கும் தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் 32 லட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாயும், இதுவரை 7.5 சதவீத வட்டியுடன் வழங்கும்படி, நீதிபதி கிருஷ்ணவேணி தீர்ப்பளித்தார்.
இந்தியா
நிலம் கையகப்படுத்தும் போது இழப்பீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
புதுடில்லி: பொது நலத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படும் போது அந்த நிலத்துக்குரிய தொகையை நில உரிமையாளரிடம் மாநில அரசு உடனடியாக வழங்க வேண்டும், என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் ஹேமாவதி அணை கட்டுவதற்காக விவசாயிகளிடமிருந்து 146 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட 419 பேர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ரவீந்திரன், சுதந்திரகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது: பொதுநலத்துக்காக நிலத்தை கையகப்படுத்தும் போது குறிப்பாக ஏழை விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் போது அதற்குரிய இழப்பீட்டு தொகையை, மாநில அரசு உடனடியாக வழங்க வேண்டும். அவர்கள் கோர்ட்டுக்கு வந்து இழப்பீட்டு தொகையை கேட்கும் அளவுக்கு விடக்கூடாது. இதனால், அரசு துறை மீது மக்களுக்கு தவறான அபிப்பிராயம் ஏற்பட்டு விடும். விவசாய அல்லது தோட்டம் உள்ள நிலத்துக்கு ஏக்கருக்கு இரண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், வறண்ட நிலத்துக்கு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 400 ரூபாயும் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் இந்த மனு மீதான தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்தியா
நித்யானந்தா ஜாமீன் மனு இன்று விசாரணை
பெங்களூரு:சாமியார் நித்யானந்தாவின் ஜாமீன் மனு இன்று ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்யானந்தாவை, பெங்களூரு சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பல கட்டங்களுக்கு பின், ராம்நகர் மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சாமியார் நித்யானந்தாவை அழைத்து வந்த போது, அவரது சீடராக உள்ள பல்வேறு தொழிலதிபர்கள் ஒதுங்கியிருந்தபடி, நீதிமன்றத்திற்கு வெளியே, கார்களிலிருந்தவாறே பார்த்திருந்தனர். சில கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் தங்களை வெளிகாட்டி கொள்ளாமல் இருந்தனர்.தங்கள் பெயரை தெரிவிக்காமல் அவர்கள் கூறுகையில், ""சாமியார் நித்யானந்தா மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களில் உண்மையில்லை என்று நிரூபித்து வெளியே வருவார். அவர் வந்து எங்களை தொடர்ந்து வழி நடத்தி செல்வார்,'' என்றனர். பிடதியிலுள்ள ஆசிரமத்தில் இன்னமும் ஏராளமான பக்தர்கள் தங்கி தியானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்கின்றனர். ஆசிரமத்தில் உள்ள பெண்கள் பலரும், வழக்கம் போல் வெள்ளை நிற ஆடையில் உலா வருவதை பார்க்க முடிகிறது.சீனியர் சீடர்கள் காவி உடை தான் அணிகின்றனர். ஆசிரமத்தை விட்டு வெளியே வரும் சீடர்கள் மட்டும், தங்கள் பாதுகாப்பு கருதி சாதாரண உடையில் வருகின்றனர். ஆசிரமத்தின் நுழைவாயிலில், போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. சில சீடர்களும், ஆசிரம பாதுகாவலர்கள் மட்டுமே உள்ளனர். ஆசிரமத்தின் உட்பகுதியில் போலீஸ் வேன் நிறுத்தப்பட்டுள்ளது.ஆசிரமத்திற்கு வருபவர்களை நன்கு விசாரித்த பின்னரே உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர். பத்திரிகையாளர்களை அனுமதிப்பது இல்லை. சீடர்கள் இரவும் பகலும் கண்காணித்து வருகின்றனர். ஆசிரமத்தில் இருந்த 1,008 லிங்கங்களுக்கு, தினமும் பலவித பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. சாமியார் சிறைக்குள் அடைக்கப் பட்ட பின், இந்த லிங்கங்களுக்கு பூஜைகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், மைசூரில் சாமியார் நித்யானந்தாவிற்கு அடி கொடுப்பது போன்று தெரு நாடகங்கள் நடத்தி, மக்களிடம் விழிப்புணர்வு செய்தனர். இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, சாமியார் நித்யானந்தா தாக்கல் செய்த மனு, ராம்நகர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழகம்
களை கட்டியது கோடை சீசன் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ஊட்டி:கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க, ஊட்டி வந்துள்ள பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளால், கோடை சீசன் களை கட்டியுள்ளது.சமவெளிப்பகுதிகளில், கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடையின் கடுமையில் இருந்து தப்பிக்கவும், குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கவும், ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுவும், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மட்டும், தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊட்டி வருகின்றனர். மே தின விடுமுறையையொட்டி, நேற்று முன்தினம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், நேற்று 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் ஊட்டிக்கு வருகை தந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகையால், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா, தொட்டபெட்டா போன்ற சுற்றுலா மையங்கள் "களை' கட்டியிருந்தன. அனைத்து முக்கிய சாலைகள், சந்திப்புகளிலும், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இருந்தது. ஊட்டி நகரின் முறையற்ற ஒருவழிப்பாதை மாற்றம், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பாலம் பணி, கூடுதல் வாகனங்கள் போன்ற காரணங்களால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளியூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். ஓட்டல்களில் "ரூம்' கிடைக்காத காரணத்தால் பலரும், கூடலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் ஓட்டல்களை தேடிச் சென்றனர்.வரும் 8, 9ம் தேதிகளில் ஊட்டியில் ரோஜா கண்காட்சி, 14, 15, 16ம் தேதிகளில் மலர் கண்காட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
மலைக்கு திரும்பிய கள்ளழகரை மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்
அழகர்கோவில்:மதுரையில் இருந்து மலைக்கு திரும்பிய கள்ளழகரை, பக்தர்கள் திருஷ்டி சுற்றி வரவேற்றனர்.அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் திருவிழா ஏப். 24ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடந்தது. மே1ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளிய பின் மதுரையில் இருந்து அழகர்கோவிலுக்கு புறப்பட்ட கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் வழியனுப்பினர். அன்று முழுவதும் சர்வேயர்காலனி, கடச்சனேந்தல், சுந்தரரராஜன்பட்டியில் உள்ள ஏராளமான மண்டகபடிகளில் எழுந்தருளிய கள்ளழகர், இரவு அப்பன்திருப்பதியில் தங்கி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நேற்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி வழியாக காலை 10 மணிக்கு அழகர்கோயிலை வந்தடைந்தார். கோயில் முன்பு உள்ள 18ம் படி கருப்பண சுவாமி சன்னதியில் அழகருக்கு தீப ஆராதனைகள் நடந்தன. பின் கோயிலுக்கு வந்த கள்ளழகரை இருபக்கமும் நின்ற பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். மதுரையில் பல்வேறு அவதாரங்கள், அலங்காரங்களில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்கும் என 21 பக்தர்கள் பூசனிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றினர். பின் கோயிலுக்கு சென்ற அவருக்கு உடையவர் சன்னதியிலும், கோயில் முன் உள்ள கொடிமரம் முன்பும் தீப ஆராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாஜலம், துணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர்கள் செல்லையா, கோபால், ஜவஹர், கண்காணிப்பாளர் கிருஷ்ணபவானி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
பாரம்பரிய கலையை எடுத்துக் கூறும் சுடு மண் குதிரை பொம்மைகள்
செஞ்சி:செஞ்சி அருகே அய்யனார் கோவிலில் 150 ஆண்டுகளுக்கு முன், காணிக்கையாக செலுத்திய சுடு மண் குதிரை பொம்மைகள் இன்றும் அழியாமல் தமிழகத்தின் பாரம்பரிய கலையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.தமிழகத்தில் புராதன நகரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியும் ஒன்று. செஞ்சியை சுற்றி பல பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன. இதே போல் பழமையான அய்யனார் கோவில் செஞ்சியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் கொசப்பாளையம் கிராமத்தில் உள்ளது. கிராமத்தின் தென்மேற்கு திசையில் காரை - அத்தியூர் சாலையில் இருந்து பிரியும் மண்சாலையில் அரை கி.மீ., தூரம் சென்றால் மரம், செடிகளுக்கு மத்தியில் 40க்கும் மேற்பட்ட சுடு மண் குதிரை சிலைகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.இங்குள்ள அய்யனார் கோவிலுக்கு செல்லும் பாதையின் இரண்டு பக்கமும் குதிரை பொம்மைகளை வைத்துள்ளனர். 5 முதல் 8 அடி உயரமும், 8 அடி அகலத்தில் குதிரை சிலைகள் உள்ளன. குதிரை பொம்மையின் மீது விரிப்புகள், சலங்கை, தோரணங்கள் வேலைப்பாடுகளுடன் செய்துள்ளனர்.இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,"சுற்றுப் பகுதியில் உள்ள பல குடும்பத்தினருக்கு இங்குள்ள அய்யனார் தான் குலதெய்வம். அய்யனார் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்த அவரின் வாகனமான குதிரை பொம்மைகளை காணிக்கையாக செலுத்துவது ஆரம்பத்தில் இருந்து உள்ளது. இங்குள்ள சுடு மண் குதிரை சிலைகளும் 150 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தி கடனுக்காக வைத்தவை' என்கின்றனர்.இங்குள்ள வயதானவர்கள் கூறும் தகவலில் இருந்து, மண் பொம்மைகளை வெளியில் செய்து எடுத்து வந்தால் உடைந்து விடும் என்பதால், பொம்மை செய்யும் கலைஞர்களை ( மண் பானை செய்யும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) கிராமத்திற்கு அழைத்து வந்து பல நாட்கள் தங்க வைத்து களிமண்ணால் பொம்மைகளை செய்து, சூளையிலிட்டு, வர்ணமடித்து கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தியது தெரிகிறது. இப்போது இது போன்ற பெரிய பொம்மைகளை செய்யும் கலைஞர்கள் இல்லாமல் போனதால், சிறிய பொம்மைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த கோவிலில் சிறிய பொம்மைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையோடு இருந்த கலையையும், கலாசாரத்தையும் பறை சாற்றும் விதமாக கொசப்பாளையத்தில் உள்ள மண் குதிரை சிலைகள் உள்ளன.இது போன்ற பொம்மைகள் பல கோவில்களில் இருந்தாலும், ஒரே இடத்தில் 40க்கும் மேற்பட்ட பொம்மைகள் இருப்பது அரிதானது. இவற்றை சிதைவில் இருந்து காப்பாற்றி புதுப்பித்தால், அடுத்து வரும் தலைமுறையினரும் நமது பாரம்பரியத்தை அறிந்து கொள்ள வழி கிடைக்கும்.
தமிழகம்
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா? குறைந்த நீர் இருப்பால் விவசாயிகள் கவலை
மேட்டூர்:இருப்பு நீரை மளமளவென காலி செய்வதால், கர்நாடகா அணைகள் நிரம்ப காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதனால், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைக்க தாமதம் ஆகும்.ஆண்டு தோறும் ஜூன் 12ல் டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்திறக்கப்படும். குறுவைக்கு நீர் திறக்க மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியாகவும், நீர் இருப்பு 52 டி.எம்.சி.,யாகவும் இருக்க வேண்டும். வரும் ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் நீர்திறக்க வேண்டும். அணையில் தற்போது 34.895 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. குறுவைக்கு நீர் திறக்க இன்னமும் 18 டி.எம்.சி., நீர் தேவை. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்.அப்போது கர்நாடகா அணைகள் நிரம்பிய பின்பே, உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்படும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைத்த அடுத்த சில மணிநேரங்களில் கர்நாடகாவில் காவிரி மற்றும் துணையாறுகள் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கே.ஆர்.எஸ்., ஹேரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்து விடும். தென்மேற்கு பருவமழை எப்படியும் கைகொடுக்கும் என்பதால், மே மாத இறுதிக்குள் இருப்பு நீரை முழுஅளவில் பாசனத்திற்கு திறந்து விட்டு நான்கு அணைகளையும் கர்நாடகா காலி செய்து விடும். இருப்பு நீரை சாகுபடிக்கு பயன் படுத்திய நிலையில், பருவமழை துவங்கிய பின், அதிக அளவில் நீரை தேக்கி வைத்து தொடர்ச்சியாக பாசனத்திற்கு நீர் வழங்க முடியும். அதன் பின்பே, மேட்டூர் அணைக்கு உபரி நீர் திறக்கப்படும்.பருவமழையை விட கர்நாடகா அணைகளையே நம்பி இருக்க வேண்டிய நிலை மேட்டூர் அணைக்கு உள்ளது. எனவே, கர்நாடகா அணைகளை போல மேட்டூர் அணையில் இருந்து இருப்பு நீரை முழுமையாக பாசனத்திற்கு திறக்க முடியாது. பருவமழை தீவிரம் குறைந்து விட்டால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைக்காது. நீரை நம்பி சாகுபடி செய்த பயிர்களும் பாதிக்கும். இது காவிரி நீரை நம்பியுள்ள தமிழக டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 114 டி.எம்.சி., தற்போது கால்வாய், ஏரி பாசனத்திற்கு தொடர்ச்சியாக நீர்திறக்கப்படுவதால், 4அணைகளிலும் நீர் இருப்பு 34 டி.எம்.சி.,யாக குறைந்து விட்டது. மே மாதம் இறுதிக்குள் நீர் இருப்பு மேலும் குறைந்து விடும்.அந்த சமயத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். அப்போது கர்நாடகா அணைகள் முழு அளவில் நிரம்ப காலதாமதம் ஆகும். அவை முழு அளவில் நிரம்பிய பின்னரே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைக்கும் என்பதால், வரும் ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு நீர்திறப்பது சந்தேகமே.
தமிழகம்
குரூப் -1 தேர்வு : 93 ஆயிரம் பேர் எழுதினர்
சென்னை: உதவி கலெக்டர், டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்ளிட்ட 61 பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் -1 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.தமிழகம் முழுவதும் 33 மையங்களில் தேர்வு நடந்தது. 93 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். தேர்விற்கு வந்தவர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்குப் பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் செல்லமுத்து கூறும் போது, இந்த முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்னும் இரண்டு மாதத்தில் (ஜூலை) வெளியிடப்படும். இதில் தேர்வு பெறுவோர், அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் நடக்கும் இரண்டாம் கட்ட தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்,'' என்றார்.சிதம்பரத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 தேர்வில், பார்வையிழந்த இளைஞர் உட்பட 1,827 பேர் தேர்வு எழுதினர். சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில், பார்வையிழந்த சீர்காழி வள்ளுவக்குடியைச் சேர்ந்த வைத்தியநாதன் (29), தேர்வு எழுதினார். அவருக்கு உதவியாக காட்டுமன்னார்கோவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சண்முகம் நியமிக்கப்பட்டிருந்தார். ஆசிரியர் சண்முகம் கேள்வி மற்றும் தேர்வு செய்ய வேண்டிய பதில்களை படித்துக் கூற, வைத்தியநாதன் பதிலை தேர்வு செய்து கூறினார். அதை விடைத்தாளில் ஆசிரியர் மார்க் செய்தார்.மேலும், ஆசிரியர் கேள்வியை படிப்பது, வைத்தியநாதன் பதில் கூறுவது அனைத்தும் டேப் ரிக்கார்டர் மூலம் பதிவு செய்யப் பட்டது. சிதம்பரத்தில் கண் தெரியாத இருவர் தேர்வு எழுத ஹால்டிக்கெட் அனுப்பப் பட்டிருந்தது. அவர்களுக்கு உதவி செய்வதற்காக இரு ஆசிரியர்களும் தயார் செய்யப் பட்டிருந்தனர். ஆனால் அதில் ஒருவர் "ஆப்சென்ட்' ஆனதால் வைத்தியநாதன் மட்டும் தேர்வு எழுதினார். அதே போன்று ஆறுமுக நாவலார் பள்ளியில், ஊனமுற்ற ஒருவரும் தேர்வு எழுதினார்.
தமிழகம்
மஞ்சள் விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
ஆத்தூர்:ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில், குவிண்டால் 15 ஆயிரத்து 959 ரூபாய்க்கு விற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர், கச்சிராபாளையம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் அறுவடை பணி நடந்து வருகிறது. மஞ்சளை சுத்தம் செய்து, ஈரோடு, நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், சேலம் மாவட்டம் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், தனியார் மண்டிகளில் நடக்கும் மறைமுக டெண்டர் ஏலத்தில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.ஆத்தூர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி, ஒரு குவிண்டால் மஞ்சள் 10 ஆயிரத்து 789 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 13ம் தேதி ஒரு குவிண்டால் 12 ஆயிரத்து 899 ரூபாய், 20ம் தேதி ஒரு குவிண்டால் 14 ஆயிரத்து 669 ரூபாய், 27ம் தேதி ஒரு குவிண்டால் 13 ஆயிரத்து 320 ரூபாய் என்ற அளவில் விற்பனையானது.ஏப்., 3ம் தேதி ஒரு குவிண்டால் 13 ஆயிரத்து 529 ரூபாய், 10ம் தேதி ஒரு குவிண்டால் 13 ஆயிரத்து 677 ரூபாய், 17ம் தேதி ஒரு குவிண்டால் 13 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனையானது. 24ம் தேதி ஒரு குவிண்டால் 14 ஆயிரத்து 169 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் மே 1ம் தேதி இரவு நடந்த ஏலத்தில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 15 ஆயிரத்து 959 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 15 ஆயிரத்து 359 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 15 ஆயிரத்து 600 ரூபாய், குறைந்த பட்சமாக 15 ஆயிரத்து 159 ரூபாய், பனங்காலி மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 12 ஆயிரத்து 779 ரூபாய், குறைந்த பட்சமாக 11 ஆயிரத்து 550 ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும், 1,100 மூட்டைகள் கொண்ட 600 குவிண்டால் மஞ்சள், ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. தொடர்ந்து நடந்து வரும் மஞ்சள் ஏலத்தில், கடந்த வாரத்தைக் காட்டிலும் குவிண்டால் 1,800 ரூபாய் அளவிற்கு மஞ்சள் விலை அதிகரித்து இருந்தது. தங்கம் விலையை மிஞ்சும் வகையில் முதன்முறையாக குவிண்டால் மஞ்சள் 15 ஆயிரத்து 959 ரூபாய்க்கு விற்பனையானது, விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழகம்
வைகை அணை நீர்மட்டம் உயர்வு
மதுரை:தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால், வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1.61 அடி உயர்ந்தது.நேற்று முன்தினம் வைகை அணை நீர்மட்டம் 29.79 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 204 கன அடியாகவும் இருந்தது. நேற்று வினாடிக்கு 841 கன அடியாக அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 31.40 அடியாக உயர்ந்துள்ளது. பெரியாறு அணை நீர்மட்டமும் 109.90 அடியிலிருந்து 110 அடியாக அதிகரித்தது. நீர்வரத்து வினாடிக்கு 174 கன அடியிலிருந்து 185 ஆக அதிகரித்தது. மழையளவு(மி.மீ.): பெரியாறு 19, தேக்கடி 4.2, கூடலூர் 1.2, வீரபாண்டி 1, மஞ்சளாறு 1, மருதா நதி 20, சோத்துப்பாறை 12.