category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சிவகங்கை கல்வி மாவட்டத்தில்புனித ஜஸ்டின் பள்ளி முதலிடம்
சிவகங்கை:எஸ்எஸ்எல்சி, தேர்வில் சிவகங்கை புனித ஜஸ்டின் மகளிர் பள்ளி மாணவி விகோகிலா, 492 மதிப்பெண் பெற்று, சிவகங்கை கல்வி மாவட்டத் தில் முதலிடம் பிடித்தார்பாட வாரியாக மதிப்பெண்: தமிழ் - 97, ஆங்கிலம் - 97, கணிதம் - 100, அறிவியல் - 99, சமூக அறிவியல் - 99 அவர் கூறுகையில்,""தந்தை வீரமணி மில் தொழிலாளி தாயின் அரவணைப்பில் படித்...
தமிழகம்
பத்தாம் வகுப்பு தேர்வில் முன்னேற்றம் தேர்ச்சி விகிதம் சதத்தை நெருங்கினர் மெட்ரிக், மாணவர்கள்
சிவகங்கைபத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில், சிவகங்கை மாவட்டம், கடந்த ஆண்டை விட ஏற்றம் கண்டுள்ளது எஸ்எஸ்எல்சி, யில் மூன்று சதவீதம்; மெட்ரிக், தேர்வில் இரண்டு சதவீதமும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது மாவட்டத்தில் 7,909 மாணவர்; 8, 597 மாணவிகள் எஸ்எஸ்எல்சி, தேர்வு எழுதினர் இதில் முறையே 7,150 பேர்; 7,940 பேர் தேர...
தமிழகம்
முயற்சியால் கிடைத்த வெற்றி: மாணவி பெருமிதம்
மதுரை: மெட்ரிக் தேர்வில் தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தில், மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.அஸ்மிதா, மாநில அளவில் மூன்றாம் இடம், அறிவியல் பாடத்தில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தார். இவர் பெற்ற மதிப்பெண்கள் 492. பிரெஞ்ச் 98, ஆங்கிலம் 96, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 99. அஸ்மிதா கூறியதாவது: மாநில அ...
தமிழகம்
அரசு பஸ்சில் தகராறு
நெற்குப்பை:நெற்குப்பை அருகே ஒழுகமங்கலத்தை சேர்ந்தவர்கள் பம்பையன் (34), பாலகிருஷ்ணன் (27) நேற்று முன்தினம் மாலை, பொன்னமராவதி- திருப்புத்தூர் அரசு பஸ்சில் சென்றனர் டிக் கட் எடுப்பதில், கண்டக்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டது டிரைவர் மலையாண்டி கண்டித் தார் டிரைவரை இருவரும் தாக்கினர் புகாரின்படி, இருவரையும் எஸ்ஐ, தங்கமணி கைது ச...
இந்தியா
ஜார்க்கண்டில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி?
புதுடில்லி : ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் இப்போதைக்கு எவ்வித அவசரமும் காட்டாததால், அங்கு சிறிது காலத்துக்காவது மீண்டும் ஜனாதிபதி ஆட்சி வரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரனுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., வாபஸ் பெற்ற நிலையில், சட்டசபையில் சோரன் தன் ஆட்சிப் பெரும்பான்மையை நிரூபிக்க ...
தமிழகம்
ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி முதலிடம்
சிவகங்கை: சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக், பள்ளி மாணவர் விஷியாம் கிருஷ்ணன், 483 மதிப்பெண் பெற்று, சிவகங்கை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார் இவர் வருவாய் மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்றார் மதிப்பெண் விபரம்: தமிழ் - 95, ஆங்கிலம் -91, கணிதம் -100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 97அவர் கூறுகையில், ""தந்தை தோட்டக்கலைத்து...
General
நேபாளியர்களுக்கு அடி, உதை
காத்மாண்டு : வடகிழக்கு மாநிலமான, மேகாலயாவில் நடந்த இனகலவரம் தொடர்பாக, உயிருக்கு பயந்து 200 நேபாளிகள் தங்கள் தாயகத்துக்கு திரும்பியுள்ளனர். மேகாலயாவின் கெய்காட், தன்குட்டா, வீராட் நகர், ஜாபா பகுதிகளில், 15 ஆயிரத்துக்கும் அதிகமான நேபாள மக்கள் வசிக்கின்றனர். மேகாலயாவிலுள்ள நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்க்கின்றனர். மேகால...
தமிழகம்
மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் : அவினாசி அருகே வினோதம்
அவினாசி : மழை பொழிய வேண்டி, அவினாசி அருகே குமாரபாளையத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது. குமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் இந்த வினோத திருமணத்தில், தண்டுக்காரன்பாளையம், அவிநாயிபுதூர், தாளக்கரை, தொட்டியனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். திருமணத்துக்காக இரு தவளைகள் தயாராக பிடித்து வைக்கப்பட்டிருந்த...
தமிழகம்
அரசு பாடத் திட்டத்தில் இரண்டாம் இடத்தில் 4 பேர்
கரூர்: அரசு பாடத் திட்டத்தில் இரண்டாம் இடத்தில், நான்கு பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர். சிவப்பிரியா: தமிழ் - 98, ஆங்கிலம் - 99, கணிதம்,  அறிவியல் - தலா 100, சமூக அறிவியல் - 97.  மேலும், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியலில், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் தந்தை ராம்குமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் நிற...
தமிழகம்
வடசென்னை அனல் மின் நிலைய திட்டப்பணிக்கு ரூ.2,475 கோடி கடன்: ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தின், வடசென்னை அனல் மின்நிலைய திட்டப் பணிகளுக்காக, ஊரக மின்மயமாக்கல் கழகம், 2,475 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் என்.டி.பி.சி., - பி.எச்.இ.எல்., - என்.எல்.சி.,யுடன் இணைந்து, செயல்படுத்தும் ஐந்து அனல் மின் உற்பத்தித் திட்டங்கள...
தமிழகம்
சோழன் மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களை மாம்பலம், தாம்பரத்தில் நிறுத்த கோரிக்கை
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரைக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மாம்பலம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, பொதுமக்கள் கூறுகின்றனர். சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும்...
தமிழகம்
ஒன்பது மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது
சென்னை: தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில், நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில், சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் கொளுத்துகிறது இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே தலைகாட்ட முடியாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.   மாலை நேரத்தில் பூங்கா மற்றும் கடலோரங்களில், பொதுமக்களின்...
தமிழகம்
இலவச வேட்டி, சேலை உற்பத்தி சரியான நேரத்தில் துவங்குமா?
ஈரோடு: இலவச வேட்டி, சேலை நூல் டெண்டர் காலதாமதமாக கோரப்பட்டதால், சரியான நேரத்தில் உற்பத்தி துவங்குமா என, விசைத்தறியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள 90க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர் கூ...
தமிழகம்
பொறியியல் கவுன்சிலிங் விண்ணப்பம் : இரண்டு லட்சத்தை தாண்டுகிறது
சென்னை: பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்கத் துவங்கி விட்டனர். நேற்று வரை 1,600 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 454 பொறியியல் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து எட்டா...
தமிழகம்
முஸ்லிம் மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பம்
சென்னை: சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல...
தமிழகம்
ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு
சென்னை: ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. ஐ.ஐ.டி.,க்கள் உட்பட 17 கல்வி மையங்களில் உள்ள, 9,509 இடங்களுக்கு, 13 ஆயிரத்து 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 1,476 பேர் (11.26 சதவீதம்) மட்டுமே மாணவியர். சென்னை, புவனேஸ்வர், மும்பை, டில்லி, காந்திநகர், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், கான்பூர்,...
தமிழகம்
முதல் பட்டதாரிக்கான கல்வி கட்டண சலுகையில் குழப்பம்: தெளிவில்லாத உத்தரவால் பெற்றோர் தவிப்பு
திண்டுக்கல்: குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கான கல்விக்கட்டண சலுகை குறித்த அரசு உத்தரவில் உள்ள குழப்பத்தால், சலுகை பெற முடியாமல் போய்விடுமோ என, பெற்றோர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு, மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் பி.எஸ்சி., வேதியியல் இரண்டாம் ஆண்டு ப...
தமிழகம்
மெட்ரிக்., இந்தி தேர்வில் மதுரை மாணவிகள் சாதனை
மதுரை: மதுரை சேத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுவாதி மிஸ்ரா, காஞ்சனா தேவி மெட்ரிக் இந்தி பாடத்தில், தலா 97 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்தனர். சுவாதி மிஸ்ரா பெற்ற மொத்த மதிப்பெண் 478. காஞ்சனாதேவி பெற்ற மொத்த மதிப்பெண் 474. சுவாதி மிஸ்ரா கூறும் போது, "டிவி' பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தேன்...
தமிழகம்
பிளஸ் 1ல் உங்களுக்கு ஏற்ற குரூப் எது?
பத்தாம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள், அடுத்து எந்த குரூப் எடுத்துப் படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர். இன்ஜினியரிங் படிக்க விரும்புவோர், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலுடன், உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க விரும்புகின்றனர். மருத்துவம் படிக்க விரும்புவோர், இயற்பியல், வேதியியல் தாவரவி...
தமிழகம்
சிறப்பாசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: உடற்கல்வி ஆசிரியர்கள் குழப்பம்
மதுரை: மதுரையில் நேற்று நடந்த சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சியில் ஏற்கனவே பணியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் பலருக்கும் அழைப்பு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் இசை, தையல், உடற்பயிற்சி போன்ற சிறப்பாசிரியர்கள் பணிநியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மதுரையில் 3 நாள் நடக்க உள...
தமிழகம்
ரூ. 5 லட்சம் நிதியுதவி
சென்னை: சத்திஸ்கரில் நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரரின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல்படையின் தலைமைக் காவலர் சுப்பி...
தமிழகம்
கொடைக்கானலில் நாய் கண்காட்சி
கொடைக்கானல்: கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, நாய் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடந்தது. கிரேடன், ஐரிசெட்டர், ஜெர்மன் ஷெப்பர்டு, பாக்ஷர் பொமேரியன் உட்பட 20 வகையான நாய்கள் பங்கேற்றன. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கனல் கிளப் கவுரவ செயலர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். முதல்பரிசை க...
தமிழகம்
ஜூன் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: பென்சில் உட்பட 25 பொருட்கள் பட்டுவாடா
பழநி: ஜூன் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது. கணக்கெடுப்பு விவரத்தை தினமும் தாலுகா அலுவலகத்தில் தர வேண்டும் என ஆலோசனை தரப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு-2011 பணி இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்டப் பணி வரும் ஜூன் 1ம் தேதியில் துவங்கி ஜூலை 15ல் முடிகிறது. இப்பணியில் ஈடுபடும் கணக்கெடுப்பாளர், மேற...
இந்தியா
இரண்டு நாளாக நடந்த ஏர்-இந்தியா ஊழியர் ஸ்டிரைக் வாபஸ்: விமான சர்வீஸ் ஸ்தம்பித்ததால் நிர்வாகம் அதிரடி
புதுடில்லி: இரண்டு நாட்களாக தொடர்ந்த ஏர்-இந்தியா விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்றிரவு வாபஸ் பெறப்பட்டது. இருந்தாலும், நேற்று அவர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தினால், உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் என, 76 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.  ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டனர். ஏர்-இந்தியா விமான நிறுவனத்தின் ...
இந்தியா
மும்பையில் 25 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் ரூ.4,058 கோடி விலைக்கு ஏலம் போனது
மும்பை: இந்தியாவின் ரியல் எஸ்டேட்டில் மிக அதிகபட்சத் தொகையாக, மும்பை பெருநகர நிர்வாகத்துக்குச் சொந்தமான 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புள்ள நிலம், நான்காயிரத்து 58 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மும்பை அருகிலுள்ள வடாலா என்ற இடத்தில் மும்பை பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையத்துக்குச் (எம்.எம்.ஆர்.டி.ஏ.,) சொந்தமாக...
இந்தியா
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் மந்தம்
புதுடில்லி: அமைச்சகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் அடிப்படையில் அவை நிறைவேற்றிய பணிகள் குறித்த அறிவிப்புகளின் படி, சாலைப் போக்குவரத்து அமைச்சகம், ஒருநாளில் வெறும் ஆறு கி.மீ., சாலைப் பணிகளை  மட்டுமே முடித்துள்ளது தெரியவந்துள்ளது. மத்திய அமைச்சகங்களுக்கு ஓராண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் அவை நிறைவேற்றிய பண...
தமிழகம்
மெட்ரிக்: சாதித்த மாணவிகள்
விருதுநகர்: மெட்ரிக் தேர்வில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் சிவகாசி, ஒய்.ஆர்.டி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஜி. அனுஷ்யா 486 மதிப்பெண் பெற்று முதலிடமும், ராஜபாளையம், பி.ஏ.சி.ஆர்., சின்மயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சி.சாரதா 485 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், இதே பள்ளி மாணவி ஜி.சொர்ணவள்ளி 484 மதிப்பெண் பெற்று மூன்றாம் இட...
இந்தியா
கணக்கெடுக்கச் சொல்லும் மாநகராட்சி: கண் சிவக்கும் பொறியியல் ஆசிரியர்கள்
தானே: தானே மாநகராட்சி, தேர்வு நேரம் நெருங்கி வரும் வேளையில் அங்குள்ள பொறியியல் கல்லூரி  ஆசிரியர்களை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபடும்படி சொன்னதால் அக்கல்லூரி, மாநகராட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த ஏப்ரல் 17ம் தேதி, தானே மாநகராட்சி, தானேயில் உள்ள பார்சுவநாதர் பொறியியல்...
தமிழகம்
கூலி உயர்வு பிரச்னை: மாஸ்டர் வீவர்ஸ் சங்கம் பேச்சுவார்த்தை
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டியில் விசைத்தறி கூலி உயர்வு தொடர்பாக மாஸ்டர் வீவர்ஸ் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். சத்திரப்பட்டியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை அழைக்கப்படாத மாஸ்டர் வீவர்ஸ் சங்கத்தினர், நேற்று மாலை சத்திரப்பட்டி பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்...
தமிழகம்
மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்கள்: அருப்புக்கோட்டையில் போட்டா போட்டி
விருதுநகர்: பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் விளாம்பட்டி, ஏ.வி.எம்., மேல்நிலைப்பள்ளி மாணவி மகேஸ்வரி 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். தளவாய்புரம், டி.என்.பி.எம்.எம்.எ.,பெண்கள் பள்ளி ஆர்.ஸ்ரீநிவேதா, ஏழாயிரம்பண்ணை என்.எம்.மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.கண்மணி ஆகியோர் 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்...
இந்தியா
காஷ்மீர் இளைஞருக்கு பிரதமர் பாராட்டு
புதுடில்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் காஷ்மீர் இளைஞர் ஷா பசலுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். காஷ்மீரைச் சேர்ந்த ஷா பசல் (26), ஸ்ரீநகரில் டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும், அவர் முதன் முறையாக கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியாயின. அதில்,...
தமிழகம்
ஆண்டு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சிக் கல்லூரிகளின் ஆண்டு விழா, தி.கலசலிங்கம் தலைமையில் நடந்தது. தனி அலுவலர் லட்சுமணன் வரவேற் றார். பி.எட்., கல்லூரி முதல்வர் ஆர்.பெருமாள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பேராசிரியை எம்.சுகுமாரி, கல்லூரி முதல்வர்கள் ஸ்ரீகு...
தமிழகம்
ரோடு சீரமைக்காததால் வாகனங்கள் செல்வதில் சிக்கல்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யிலிருந்து வன்னியம்பட்டி விலக்கு , இனாம் கரிசல் குளம், பெருமாள்தேவன் பட்டி, பிள்ளையார்குளம், பழைய சென்னாக்குளம் வழியாக ஆலங்குளம் செல்லும் ரோடு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் பழுதடைந்த நிலையில் கிடந்தது. இந்த ரோட்டை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. வன்னியம்பட்டி விலக்கிலிருந்து பழைய செ...
தமிழகம்
செங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதை பணி முடிவது எப்போது
ராஜபாளையம்: நிதி ஒதுக்கீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் செங்கோட்டை-புனலூர் இடையே அகல ரயில்பாதை பணிகள் முடிய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். விருதுநகர்-கொல்லம் வரை அகல ரயில்பாதைத் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்தது. அதன்படி விருதுநகர்-தென்காசி வரை அகல ரயில்பாதை பணி முடிக்க...
இந்தியா
கட்டாயம் பர்தா: உ.பி.,யில் உத்தரவு
முசாபர் நகர்: முஸ்லிம் பெண்கள், தாங்கள் பணிபுரியும் இடங்களில், கட்டாயம் பர்தா அணிய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆண்களும், பெண்களும் வேலைபார்க்கும் நிறுவனங்களில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று, சில முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, உத்திரப்பிரதேச மாநிலம் பரேலியில் "பத்வா...
தமிழகம்
சாதனைபத்தாம் வகுப்பில் மாணவிகள்... 125 பள்ளிகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி
விருதுநகர்:பத்தாம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல மாவட்ட அளவில் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 1விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 11,875 மாணவர்கள், 12,338 மாணவிகள் என மொத்தம் 24,213 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 11,294 மாணவர்கள், 12,048 மாணவிகள் சேர்த்து மொத்தம் 23,342 பேர் தேர்ச்சி ப...
தமிழகம்
குடிநீருக்காக 6 கி.மீ., நடக்கும் கிராம மக்கள்
நரிக்குடி: டி.வேலாங்குடி கிராம மக்கள் குடிநீருக்காக, ஆறு கி.மீ., தூரம் நடந்து சென்று அவதிப்பட்டு வருகின்றனர்.நரிக்குடி ஒன்றியம் டி.வேலாங்குடியில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. குடிநீருக்காக மூன்று ஆண்டுகளுக்கு முன், "போர்வெல்' போடப்பட்டு மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்க...
தமிழகம்
இடநெருக்கடியில் தவிக்கும் பத்திரப் பதிவு அலுவலகம்
காரியாபட்டி: இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் காரியாபட்டி பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காரியாபட்டி பகுதிக்கான பத்திரப்பதிவு அலுவலகம் திருச்சுழியில் இருந்தது. இதனால் காரியாபட்டி மற்றும் சுற்றுப்பகுதியிலிருந்து ஏராளமானோர் திருச்சுழிக்கு சென்று வந்தனர். அவர்களது நலன் கருதி, 4...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
சாத்தூர்:தமிழ்நாடு பளு தூக்கும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சங்க மாநில தலைவராக சிவகாசி நகராட்சி முன்னாள் தலைவர் அ. ஞானசேகரன் மூன்றாம் முறையாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத் தலைவராக சிவகாசி தொழிலதிபர் ஏ.பி.செல்வராஜன், துணைத்தலைவர்களாக சாத்தூர் ஆர்.கண...
தமிழகம்
சதுரகிரி மலை அடிவாரத்தில் தடுப்பணை தேவை குடிநீர் ஆதாரம் காக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையடிவாரத்தை சுற்றி உள்ள கிராம மக்களின் குடிநீர் ஆதாரத்தை காக்க, தாணிப்பாறை அருவி நீரை தடுப்பணை கட்டி தேக்க வேண்டும்.சதுரகிரி மலையில் பல இடங்களிலிருந்து உற்பத்தியாகி வரும் நீர், மலை அடிவாரமான தாணிப்பாறையில் ஒன்றாக இணைந்து அருவியாக விழுகிறது. மழைக்காலத்தில் பெய்யும் மழையை உள்வாங்கும் மலைத்தொடர...
தமிழகம்
கும்பாபிஷேகம்
அவனியாபுரம்: மதுரை சிந்தாமணியில் ஸ்ரீராதாகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தலைமை வகித்தார். மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பின், யாகசாலையை வலம் வந்து கும்பங்களில் இருந்த புனிதநீர் கோபுரத்திற்கு எடுத்துசெல்லப்பட்டு, 9.15 மணிக்கு கும்பாபிஷேகம்...
தமிழகம்
திருமண மண்டபம் சரிந்து கான்ட்ராக்டர் பலி? 5 பேர் படுகாயம்
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் தனியாமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் சரிந்தது. இதில் ஐந்து பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய கான்ட்ராக்டரை மீட்கும் பணி நடந்தது.தனியாமங்கலத்தில் உள்ளது மங்கள சுந்தரி அம்மன் கோயில். இதன் அருகில் ஊர் சார்பாக 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு அடுக்காக பெரிய திருமண மண்டபம...
தமிழகம்
காப்பீட்டுத் திட்ட அட்டை மக்கள் அவதி
டி.கல்லுப்பட்டி,: டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எ.தொட்டியப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அரசு காப்பீட்டு திட்டத்திற்கு போட்டோ எடுத்து, பல மாதங்களாகிறது. ஆனால் மக்களுக்கு இது வரை அட்டை வழங்க வில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் பலன் பெறுவது எப்படி என்ற குழப்பத்தில் தவித்து வருகின்றனர். இது குறித்து...
தமிழகம்
மாணவன் தற்கொலை
மதுரை: மதுரை நாராயணபுரத்தை சேர்ந்த நில விற்பனை புரோக்கர் பழனிச்சாமி மகன் அருண்குமார் (15). இவர் மதுரையில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவு வெளியானதில், அருண்குமார் தோல்வி அடைந்தார். மனமுடைந்த அவர் இரவு 7 மணிக்கு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் இரவு ...
தமிழகம்
கத்தி போடும் நிகழ்ச்சி
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் மீனாட்சிநகரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்திபோடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இக்கோயிலின் கரக மகா உற்சவ விழா கடந்த மே 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று வைகை ஆற்றில் இருந்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் மஞ்சள் ஆடையுடன் கத்தியால் உடலை வெட்டி க...
தமிழகம்
தொடர்ந்து 39 ஆண்டுகளாக 100 சதவீதம்
திருமங்கலம்: திருமங்கலம் பி.கே.என்., பெண்கள் பள்ளி தொடர்ந்து 39 ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் பெற்றுள்ளது.இந்த பள்ளியில் மொத்தம் 222 மாணவிகள் தேர்வெழுதினர். அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.
தமிழகம்
குத்துச்சண்டை
மதுரை,: பீகாரில் நடந்த தேசிய குத்துச்சண்டை போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவி டி.சிவதமிழ்ச்செல்வி வெள்ளி பதக்கம் வென்றார். இவர் மதுரை சோல்ஜர்ஸ் பாக்ஸிங் அகாடமியில் பயிற்சி பெற்றவர். இம்மாணவி, சமீபத்தில் ஈரோட்டில் நடந்த தேசிய போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றார். மாணவியை கலெக்டர் காமராஜ் பாராட்டினார்.
தமிழகம்
பாராட்டு விழா
மதுரை: ஆசிய வலு தூக்கும் போட்டியில் நான்கு தங்க பதக்கங்களை வென்ற திவ்யாவிற்கு மதுரையில் பாராட்டு விழா நடந்தது. கலெக்டர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராதாகிருஷ்ணன், நீதிபதி தேவதாஸ், வலு தூக்கும் சங்க மாவட்ட தலைவர் ராஜசேகரன் பங்கேற்றனர்.
தமிழகம்
ஆஸ்பத்திரி விளக்கம்
மதுரை,: கோவில்பட்டியை சேர்ந்தவர் பட்டுராஜன். ஏப்., 29ம் தேதி மதுரைக்கு காரில் சென்ற போது விபத்தில் சிக்கி இவர், தந்தை மும்மூர்த்தி பலியாயினர். இவர்களுக்கான பிரேத பரிசோதனை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. இவர் களது பிரேத பரிசோதனை சான்றிதழ் அளிக்க 800 ரூபாய் லஞ்சம் வாங்கிய மருந்தாளுனர் பிரபாகரனை லஞ்ச ஒழிப்பு போலீ...
தமிழகம்
பள்ளி மாணவி பலி
கொட்டாம்பட்டி,: கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ஐஸ்வர்யா(12). அங்குள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்தார். விளக் கில் மண்ணெண்ணெய் ஊற்றும்போது, கீழே சிந்தியதை கவனிக்காமல் விளக்கேற்றினார். தீ பிடித்து உடல் முழுதும் பரவியது. மதுரை அரசு மருத்துவ...
தமிழகம்
சாலை பணியாளர் பாலத்தில் விழுந்து பலி
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலத்தை சேர்ந்த தொத்தன் மகன் தவமணி (35). இவர் சாலைபணியாளராக உள்ளார். நேற்று முன்தினம் பகல் ஒரு மணியளவில் கரட்டுப்பட்டி நெடுஞ்சாலை வழியாக பெரியாறு பாசன கால் வாய் பாலத்தில் சென்றார். எதிரே வந்த வாகனங்களுக்கு ஒதுங்கியவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து, தலையில் காயமடைந்தார்.மதுரை அரசு...
தமிழகம்
தற்கொலை முயற்சி
மதுரை: மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(15). நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், வெற்றி பெற்றார். ஆனால் கூடுதல் மதிப்பெண் பெறாததால் மனமுடைந்து விஷம் அருந்தினார். முள்ளிபள்ளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி(15). தேர்வில் தோல்வி அடைந் ததால், இவரும் விஷம் குடித்தார்.இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்...
தமிழகம்
சுகாதார முகாம் துவக்கம்
அவனியாபுரம்: அவனியாபுரத்தில் ஒருங்கிணைந்த சுகாதார முகாமை நகராட்சி தலைவர்போஸ்முத்தையா துவக்கி வைத்தார். நிர்வாக அதிகாரி ஞானசேகரன், நகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். நகராட்சி மற்றும் தனியார் நிறுவன துப்புரவு பணியாளர்கள் 50பேர் வில்லாபுரத்தில் பணிகளை துவக் கினர். சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸை ...
தமிழகம்
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., தலைமையில் 21 எம்.பி.,க்கள் ஆய்வு செய்தனர்.பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் டி.ஆர். பாலு. இக்குழுவில் கைலாடி லால்பைர்வா, சாம்பால்ஜி, ருத்ரமாத்ரகா, உமாசங்கர்சிங், ஈஸ்வர்சிங், லலித்கி÷ஷார், ஓம்பிரகாஷ் மாத்தார், அபானிராய் உட்பட 21 எம்.பி.,க்க...
தமிழகம்
நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு : பார்வையாளர்கள் அவமதிப்பு
மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் நடந்து வரும் படப்பிடிப்பால், நுழைவுக்கட்டணம் செலுத்தி வரும் பார்வையாளர்கள், படப்பிடிப்பு குழுவினரால் அவமதிக்கப்பட்டனர்.கரண், சகானி நடிக்கும் "இரட்டை முகம்' படத்தின் பாடல்காட்சி படப்பிடிப்பு திருமலை நாயக்கர் மகாலில் நடக்கிறது. இதனால் மகாலுக்கு வரும் பார்வையாளர்கள் அவதிக்குள்ளாகின்றன...
தமிழகம்
ஒவ்வொரு வகை பள்ளியும் பெற்ற தேர்ச்சிவீதம்
பள்ளிகள் இந்த ஆண்டு தேர்ச்சி கடந்த ஆண்டு தேர்ச்சிஅரசு பள்ளிகள் 78.79 சதவீதம் 80.73 சதவீதம்மாநகராட்சி பள்ளிகள் 86.43 89.97கள்ளர் பள்ளிகள் 83.23 78.37ஆதிதிராவிடர் பள்ளிகள் 88.06 88.15உதவிபெறும் பள்ளிகள் 93.12 93.35சிறப்பு பள்ளிகள் 100.00 100.00சேவை இல்ல பள்ளிகள் 25.00 100.00மெட்ரிக் பள்ளிகள் 95.20 93.79ஆங்கிலோ இந்தியன் ப...
தமிழகம்
செம்மொழி மாநாடு பெயரில் வசூல் வேட்டை! சுகாதார அதிகாரிகள் மீது புகார்
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பெயரில் கோவையிலுள்ள ஓட்டல், பேக்கரி, மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் முறைகேடாக பண வசூலில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான...
தமிழகம்
நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் பட்டியல்
மதுரை: பத்தாம் வகுப்பில் மதுரை மாவட்டத்தில் 233 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் கீழ்காணும் 38 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றன.1. மாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி2. ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி3. பி. அம்மாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி4. பெருங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி5. பரவை அரசு மேல்நிலைப் பள்ளி...
தமிழகம்
தேரோட்டம்
மேலூர்: திருவாதவூர் திருமறைநாதர் கோயில் தேரோட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு நடந்தது. வைகாசி விழாவை முன்னிட்டு, நேற்று காலை 9.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பெரிய தேரில் திருமறைநாதர் பிரியாவிடை தேவியும், சிறிய தேரில் வேதநாயகி அம்பாளும் கோயிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளில் உலா வந்தனர். தேரோட்டத்தை மீனாட்சி அம்மன் கோயில் ...
தமிழகம்
மதுரை பாலங்களில் கலாசார ஓவியங்கள்
மதுரை: மதுரையில் உள்ள அனைத்து பாலங்களிலும் நோட்டீஸ், போஸ்டர் ஒட்டாமல் இருக்க, தடுப்பு சுவர்களில் கலை, கலாசார ஓவியங்கள் வரையும் பணி மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் நேற்று துவங்கியது.சென்னையில் உள்ள பாலங்களின் வெளிப்புற சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டாமல் இருக்க, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் அந்...
தமிழகம்
மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டைவிட தேர்ச்சி சதவீதம் குறைந்தது
மதுரை: மதுரை மாவட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை கலெக்டர் காமராஜ், முதன்மை கல்வி அதிகாரி ரஜனி ரத்தினமாலா ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.இந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வெழுதிய மாணவர்கள், மாவட்ட அளவில் 87.92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை(88.75சதவீதம்) விட 0.83 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது. மொத்தம் 233 பள்ளிக...
தமிழகம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி...அதிகரிப்பு: 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர் ஏராளம்
சென்னைசென்னை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 85.33 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சியில் 65 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 9,115 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். அதில் 85.35 சதவீத அளவிற்கு, 7,778 மாணவ, மாணவியர் தேர்ச்சி...
தமிழகம்
நூறு மதிப்பெண் மற்றும் தோல்வியடைந்த பாடங்கள்
மதுரை: மதுரை மாவட்டத்தில் நூறு சதவீத மதிப்பெண் கிடைத்த பாடங்களின் விபரம்:கணித பாடத்தில் இந்த ஆண்டு 108 பேர்தான் (கடந்த ஆண்டு 356 பேர்) நூறு சதவீத மதிப்பெண் பெற்றனர். இதேபோல அறிவியல் பாடத்தில் 64 பேரும் (கடந்த ஆண்டு 123 பேர்), சமூக அறிவியல் பாடத்தில் இந்த ஆண்டு 13 பேர் (கடந்த ஆண்டு ஒரே ஒருவர்தான்) நூறு சதவீத மதிப்பெண் ப...
தமிழகம்
கணிதத்தில் நூறு மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு
மதுரை: மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு கணிதப்பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட மிகவும் குறைவாக உள்ளது.கணிதத்தில் 2008ல் 473 பேரும், 2009 ல் 356 பேரும் முழுமதிப்பெண் பெற்றனர். இந்தாண்டு 108 பேர் மட்டுமே முழுமதிப்பெண் பெற்றனர். அதேபோல, அறிவியல் பாடத்திலும் கடந்தாண்டை (123 பேர்) விட, இ...
இந்தியா
திருமண கோஷ்டி வேன் விபத்து: 33 பேர் பலி; 24 பேர் படுகாயம்
ஐதராபாத்: ஆந்திராவில் திருமண கோஷ்டியினர் சென்ற வேன், லாரி மீது மோதியதில் 33 பேர் பலியாயினர்; 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஆந்திரா அடிலாபாத் மாவட்டம், ராம்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 80 பேர் கொண்ட குழுவினர், பின்னர் தங்களின் கிராமமான கோத்தூருக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்...
தமிழகம்
திருமண மண்டபம் சரிந்தது; கான்ட்ராக்டர் பலி?: 5 பேர் படுகாயம்
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் தனியாமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் சரிந்தது. இதில், ஐந்து பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய கான்ட்ராக்டரை மீட்கும் பணி நடந்தது. தனியாமங்கலத்தில் உள்ளது மங்கள சுந்தரி அம்மன் கோவில். இதன் அருகில் ஊர் சார்பாக 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு அடுக்காக பெரிய திருமண மண்ட...
தமிழகம்
கடலோர காவல்படை அதிகாரி மகளிடம் சில்மிஷம்: வாலிபருக்கு போலீஸ் வலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில், இந்திய கடலோர காவல்படை அதிகாரி மகளிடம் சில்மிஷம் செய்த வாலிபரை, போலீசார் தேடிவருகின்றனர். இந்திய கடலோர காவல்படையின், தூத்துக்குடி நிலைய கமாண்டன்ட் உதல்சிங். இவருடைய மகள் அனுப்மா சிங், தூத்துக்குடி ஸ்பிக் உர ஆலையில், வேலைக்கான பயிற்சி பெற்று வருகிறார். அனுப்மா சிங்குடன் பணிபுரியும், தூத்து...
தமிழகம்
கள்ளக்காதல்: அ.தி.மு.க., பிரமுகர் வெட்டிக் கொலை
கொளத்தூர்:கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான விரோதத்தில், அ.தி.மு.க., பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை கொளத்தூர் அவ்வை நகரைச் சேர்ந்த கங்காதரன் மகன் காமராஜ்(48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், 62 வது வட்ட அ.தி.மு.க., துணைச் செயலராக இருந்தார்.இவருக்கு திருமணம் ஆகவில்லை....
தமிழகம்
குளத்தில் மூழ்கி 3 பெண்கள் பலி
மணலி புதுநகர்:பிறந்த நாள் விழாவிற்கு சென்ற மூன்று பெண்கள் குளத்தில் குளித்த போது, சே சிக்கி நீரில் மூழ்கி பலியாயினர்.புதுவண்ணாரப் பேட்டை, தேசியன் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி; சலவைத் தொழிலாளி. இவரது மகள்கள் ரதிதேவி, மீனாட்சி(27). இவருக்கு சமீபத்தில் திருமண ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.மூத்த மகள் ரதிதேவி, மணலி புதுநகர் அடுத...
இந்தியா
கருட சேவையில் மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
புதுடில்லி; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், கருட சேவையின் போது மணவாள மாமுனிகளுக்கு சடாரி மரியாதை செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. சின்ன காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் (தேவராஜ சுவாமி கோவில்) உள்ளது. இங்கு ஆழ்வார்களுக்கும், ஆ...
தமிழகம்
பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்றபோலீசாரின் குழந்தைகளுக்கு பரிசு
பரங்கிமலை:பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போலீஸ்காரர்களின் குழந்தைகளுக்கு, புறநகர் கமிஷனர் ஜாங்கிட், பரிசு வழங்கினார்.சென்னை புறநகர் கமிஷனரகத்திற்கு உட்பட்ட தாம்பரம், அம்பத்தூர், மாதவரம் ஆகிய போலீஸ் மாவட்டங்களில் பணிபுரியும் போலீஸ்காரர்களின் குழந்தைகளில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவ...
தமிழகம்
சிறைக்கைதிகள் 10ம் வகுப்பில் தேர்ச்சி
செங்குன்றம்:சென்னை மத்திய சிறையில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி 17 கைதிகள் தேர்ச்சி அடைந்தனர்.தமிழக சிறைக் கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் வகையில், புழலில் உள்ள சென்னை மத்திய சிறையில் மையம் அமைக்கப்பட்டது. இதில் புழல் சிறையில் உள்ள ஒன்பது பேர்,வேலூர் சிறையைச் சேர்ந்த ஐந்து பேர், திருச்சியைச் சேர்ந்த மூன...
தமிழகம்
நிலக்கரி சாம்பல் குறித்த அறிவிப்பாணையை பின்பற்ற உத்தரவு
சென்னை: நிலக்கரி சாம்பல் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் மத்திய அரசின் அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டுமென, தமிழக மின் வாரியம் மற்றும் அனல் மின் நிலையங்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு, மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டது. அதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர்...
தமிழகம்
வரலாறு புவியியலில் 2ம் இடம் பெற்ற மாணவிக்கு ஆசிரியராக விருப்பம்
ஆவடி:எதிர்காலத்தில் ஆசிரியராகி, எனது அறிவை மற்றவர்களுக்கும்கற்றுக் கொடுப்பேன், '' என மெட்ரிக் தேர்வில் வரலாறு புவியியலில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்த மாணவி தெரிவித்தார்.ஆவடி, காமராஜர் நகர் ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி ஹாஜிரா பேகம் மெட்ரிக் பாடத் திட்டத்தில், வரலாறு புவியியலில் 100 மதி...
தமிழகம்
டெம்போ மோதி ஒருவர் பலி
காரமடை : காரமடை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வசிப்பவர் ஆறுச்சாமி(45). இவர் பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கிளையில் மெக்கானிக்காக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை நோக்கி வந்து கொண்டிருந்த போது காந்திநகர் அருகே இவர் மீது டெம்போ வேன் மோதியது. இதில் ஆறுச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். ...
தமிழகம்
ஸ்ரீமதி லட்சுமியம்மாள் பள்ளி சாதனை
பல்லாவரம்:குரோம்பேட்டை ஸ்ரீமதி லட்சுமியம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எல்.ரோகித் 500க்கு 479 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடத்தையும், சூரியமூர்த்தி 465 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாமிடமும், ஜி.திவ்யலட்சுமி 453 மதிப்பெண்கள் பெற்று, ...
தமிழகம்
மாவட்ட அளவில் மூன்றாமிடம் டாக்டராக மாணவர் விருப்பம்
ஏழுகிணறு:ஆர்வத்துடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்கிறார், மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற சென்னை மாணவர்.சென்னை ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர்கள் வெங்கடசுப்பய்யா, லட்சுமி. இவர்களது மகன் முரளி. இவரது தந்தை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் அரிசி கடையில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெ...
தமிழகம்
பத்தாம் வகுப்பு தேர்வில் 5 மாணவர்கள் சென்னை மாவட்ட அளவில் முதலிடம்
சென்னை:பத்தாம் வகுப்பு தேர்வில் 5 பேர் சென்னை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரு மாணவி இரண்டாம் இடத்தையும், இருவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மாணவர் லோகித் ரிஷி 491 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழில் 96, ஆங்கிலத்தில் 96, கணிதம், அறிவியலில்...
தமிழகம்
துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி86 சதவீத தேர்ச்சி
துரைப்பாக்கம்:ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 86 சதவீத மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஒக்கியம் துரைப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. காரம்பாக்கம், ஒக்கியம், மேட்டுக்குப்பம், கண்ணகிநகர், பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இங்கு படி...
தமிழகம்
சிறுமி மானபங்கம் வாலிபர் கைது
நாகர்கோவில்: ராஜாக்கமங்கலம் அருகே ஊமை சிறுமியை மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ராஜாக்கமங்கலத்தை அடுத்த பரமன்விளையை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 11 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். வாய்பேச இயலாத சிறுமியான அவள் பெற்றோர்களுடன் ஊரில் நடந்த திருவிழாவிற்கு நேற்று முன்தினம் இரவு ...
தமிழகம்
மலையாளம் படித்ததால் முதலிடத்தை இழந்த ஏழை மாணவன்
மார்த்தாண்டம்: மலையாளம் தாய் மொழியாக படித்ததால் 489 மார்க் பெற்ற நெட்டா பள்ளி மாணவன் குழித்துறை கல்வி மாவட்டத்தில் முதல் இடத்தை இழந்துள்ளார்.நெட்டா புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளி மாணவன் கார்த்திக். இவர் மலையாளத்தில் 93 மார்க்கும், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களிலும் தலா 99 மார்க்கும் பெற்றுள...
தமிழகம்
குமரி மாவட்டத்தில் மழை : அக்னிவெயில் தணிந்தது
அருமனை: அக்னிவெயில் சுட்டெரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கத்துக்கு மாறாக தொடர்மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொதுவாகவே ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் கொடுமை தாங்க முடியாது. மே மாதம் ஆரம்பித்துவிட்டால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கமும் சேர்ந்து பொதுமக்களை பாடாய்படுத்தி விடும். இது கடந்த...
தமிழகம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கேயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நேற்று வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சர்வதேச புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் ...
தமிழகம்
சோழிங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி 78 சதவீத தேர்ச்சி
சோழிங்கநல்லூர்:சோழிங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வில் 78 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி யாமினி 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பிடித்தார்.சோழங்கநல்லூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், அக்கரை, நீலாங்கரை, காரப்பாக்கம் உள்ளிட...
தமிழகம்
டாக்டராக விரும்பும் மாநில சாதனை மாணவி
திருவட்டார்,: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் திருவட்டார் அருணாச்சலம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆதிரா 96 மார்க் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் மலையாள பாடத்தில் 100க்கு 96 மார்க் பெற்று திருவட்டார் அருணாச்சலம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆதிரா மாநிலத்தில் இரண...
தமிழகம்
ஆனந்தகண்ணீரில் பெற்றோர் நெகிழ்ச்சி ஆட்டோ டிரைவர் மகள் சாதனை
பொதுவாக அதிகமாக தேர்வுகளில் சாதனை படைக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் உயர்ந்த அந்தஸ்தில் பணியாற்றுவோராக உள்ளனர். இவற்றில் விதிவிலக்காகவே சில ஏழை மாணவ, மாணவிகள் சாதனை படைத்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஜோசப் கான்வன்ட் மாணவி கோமதி சுசீந்திரம் அக்கரையை சேர்ந்தவர். ஏழை குடும்பத்தை சேர்ந்த ...
தமிழகம்
குபேரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
தாம்பரம்:சென்னை, வண்டலூர் அருகே அமைந்துள்ள ரத்னமங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் கோவிலில் பவுர்ணமி மற்றும் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, இன்று சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.மகாலட்சுமிக்கு பசுஞ் சாணத்தால் விளக் கேற்றி, குபேர லிங்கத் திற்கு கரும்பு சாற்றில் அபிஷேகமும், குருபகவானுக்கு கொண்டைக்கடலை நெய்வேத்தியம் செய்து, குருவின் அதி...
தமிழகம்
குமரி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து ஜோசப்கான்வென்ட் மாணவிகள் 3 பேர் சாதனை
நாகர்கோவில்: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் குமரி மாவட்டத்தில் 492 மதிப்பெண் பெற்ற ஜோசப் கான்வென்ட் பள்ளி மாணவிகள் மூன்று பேர் ஐ.ஏ.எஸ்., மற்றும் டாக்டர் ஆவதே தங்கள் லட்சியம் என்று தெரிவித்துள்ளனர்.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் நாகர்கோவில் ஜோசப் கான்வென்ட் பள்ளி மாணவிகள் மோனிஷா, சுகல்யாஸ்ரீ, கோமதி ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று...
தமிழகம்
தேர்வில் தோல்வி மாணவி தீக்குளிப்பு
ஆவடி:பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததாக கிடைத்த தகவலால், அரசு பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.சென்னை ஆவடி அடுத்த சேர்காடு சிங்காரத் திருநகரைச் சேர்ந்தவர் சசி என்கிற சிசிலி(15). இவர் சிறுமியாக இருக்கும் போதே, சசியின் அப்பா சூசைராஜ், அம்மா ஆகியோர் இறந்து விட்டனர்.ச சி, அத்தை வேளாங்கண்ணியின் வீட்டில் வளர்ந்...
தமிழகம்
பெற்றோரை இழந்த மாணவி வறுமையிலும் சாதித்தார்
சென்னை:தீ விபத்தில் தாய், தந்தையை சிறுவயதில் பறிகொடுத்த அரசு பள்ளி மாணவி அபிராமி, 10ம் வகுப்பு தேர்வில், 488 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமி. இவரது சிறுவயதிலேயே தாய், தந்தை தீ விபத்தில் பலியாகினர்.தாத்தா கிருஷ்ணன், பாட்டி பாப்பாத்தியி...
தமிழகம்
அலட்சியம் இன்றி படித்தால் லட்சியத்தை அடையலாம்: மாணவி மித்ரா பெருமிதம்
ராயபுரம்:மாநில அளவில் முதலிடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் சில மதிப்பெண் குறைவால், மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளேன் என்று ராயபுரம் மாணவி மித்ரா தெரிவித்தார்.சென்னை ராயபுரம் பாதாள விக்னேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராஜூ, சுகந்தி. இவர்களது மகள் மித்ரா. மாணவியின் தந்தை, அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி...
தமிழகம்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்பு: போலீஸ் உயரதிகாரிகள் 29ம் தேதி ஆலோசனை
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்பு ஏற்பாடு குறித்த போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 29ம் தேதி, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவையில் நடக்கிறது. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. இதில், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர...
தமிழகம்
பள்ளிக்கல்வி அமைச்சர் மாவட்டத்திற்கு முதலிடம்; உயர்கல்வி அமைச்சர் மாவட்டத்துக்கு கடைசியிடம்
எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சியில், விருதுநகர் மாவட்டம் அதிகபட்சமாக 96.41 சதவீதம் தேர்ச்சியைப் பெற்று முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. வழக்கம்போல், வடமாவட்டங்கள் மிகவும் பின் தங்கியுள்ளன. 73.86 சதவீதத்துடன், விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் விவரம் வருமாறு: 1. விருதுநகர் - 96....
தமிழகம்
குடிமகன்கள் கூடாரமான ஆலந்தூர் கிளை நூலகம்
ஆலந்தூர்:ஆலந்தூர் கிளை நூலகம், சரிவர திறக்கப்படாததால் குடிமகன்களின் கூடாராமாகவே மாறிவிட்டது. ஆலந்தூர் எம்.கே.என்., சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கீழ்தளத்தில், தமிழக அரசின் கிளை நூலகம் உள்ளது. இந்நூலகத்திற்கு தினமும் காலை, மாலையில் முதியவர்கள் நிறைய பேர் படிக்க வருகின்றனர். ஆனால், இந்நூலகத்தில் பல ஆண்டுகளாக நூ...
தமிழகம்
ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
சென்னை: வனப் பாதுகாவலர்களான ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பிறப்பித்துள்ள உத்தரவு: தலைமை வனப் பாதுகாவலரான (சமூகக் காடுகள்) நீலகண்டனுக்கு, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக (நிர்வாகம்) ...
தமிழகம்
சூறாவளியால் படகு, வலைகள் சேதம் மீனவ மக்களின் தொழில் கடும் பாதிப்பு
கும்மிடிப்பூண்டி:சூறாவளிக் காற்றால் ஏராளமான படகுகள், வலைகள் சேதமாகின. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் பெற்று தருவதாக உறுதியளித்தனர்.லைலா புயலின் எதிரொலியால் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் 19ம் தேதி சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் கும்மிடிப்பூண்டி...
தமிழகம்
ரத்ததான முகாம்
குன்னூர் : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, குன்னூர் நகர காங்கிரஸ் கமிட்டி, குன்னூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. குன்னூர் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், ராஜிவ்காந்தியின் உருவப்படத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் சீரங்க செட்டியார் மாலை அ...
தமிழகம்
திருமண வரவேற்பு விழா
உடன்குடி : இடையற்காடு பிரகாஷ் திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி கலந்து கொண்டார்.இடையற்காடு தங்கராஜ்-பார்வதிஅம்மாள் மகன் பிரகாஷ், சித்திரைப்பாண்டி-சமாதானம் மகள் சோபி திவ்யா திருமணம் நடந்தது. மாலை இடையற்காடு கிராமத்தில் நடந்த வரவேற்பு விழாவிற்கு மாநில காங்.செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். ...
தமிழகம்
தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரதிவிக்னேஸ்வரி மாவட்ட அளவில் இரண்டாம் இடம்
தூத்துக்குடி : பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரதிவிக்னேஸ்வரி 483 மார்க்குள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவர் தமிழ்-96, ஆங்கிலம்-90, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-98 மார்க்குகள் பெற்றுள்ளார். இவரது தந்தை சேதுராஜ் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழி...
தமிழகம்
விடுதிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் மற்றும் விடுதிகளில் குடிநீர் பிரச்னை நிலவி வந்ததால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் தெக்களூரில் இருந்து திருத்தணி மலைக்கோவில் வரை ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்க முடிவு செய்தனர். தெக்களூர் கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் புத...