category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பொள்ளாச்சியில் மறியலில் ஈடுபட்ட மதிமுக.,வினர் கைது
பொள்ளாச்சி : முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து பொள்ளாச்சி-கேரள எல்லைப் பகுதியில் மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு  இடங்களில் மறியல் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1500...
தமிழகம்
இன்றுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம்
சென்னை : கடந்த 3 வாரங்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் முடிவடைகிறது. மே 4ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைவது மக்கள் மனதில் மிகுந்த ஆறுதலை அளித்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 104 பாரன்கீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
General
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: லியாண்டர் ஜோடி வெற்றி
பாரீஸ் : பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் ஆண்கள் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முரே, அர்ஜெண்டினா வீரர் செலாவை 6-2, 6-7,(5) 6-3, 6-2 என்ற செட்டில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க வீரர் ஆன்டி ரோட்டிக் 6-3, 5-7, 6-4, 6-2 என்ற செட்டுகளில் சுலோவாக்கியா வீரர் காவ்சிக்கை வென்று 3-வது சுற்றுக்க...
இந்தியா
மம்தாவிற்கு லாலு கண்டனம்
புதுடில்லி : மேற்கு வங்காளம் ரயில் விபத்திற்கு மாவோயிஸ்டுகள் சதியே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதற்கு ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவர் லாலு பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மாநில அரசு மீது பழியை போட்டு மம்தா பொறுப்பை தட்டிக் கழிக்கிறார் எனவும், தண்டவாளங்களை பாத...
இந்தியா
உணவு பணவீக்கம் 16.32 சதவீதமாக சரிவு
புதுடில்லி : மே 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் 16.32 சதவீதமாக சரிவடைந்து உள்ளது. கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த உணவு பணவீக்கம் தற்போது சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இது கடந்த வாரத்தை விட 0.26 சதவீதம் குறைவாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை ரூ.2 சதவீதமும், தானியங்கள் மற்றும்...
தமிழகம்
விழுப்புரத்தில் குடிபோதையில் இருந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள நாகலூரில் குடிபோதையில் இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் இருந்த தலைமை ஆசிரியர் தம்பிதுரையை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டது. தம்பிதுரை குடிபோதையில் இருந்ததை கண்ட பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்தனர். மேலும் ப்ளஸ் 2 மாணவர்களும் சான்ற...
இந்தியா
ரயில் கவிழ்ப்பின் பின்னணியில் அரசு அதிகாரிகள் : புத்ததேவ் குற்றச்சாட்டு
கோல்கட்டா : மேற்கு வங்கம் ரயில் கவிழ்ப்பு சம்பவத்தினச் பின்னணியில் ரயில்வேத்துறை அதிகாரிகளுக்கு உடந்தை இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியார் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அப்பாவி மக்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரி...
தமிழகம்
தாராபுரம் அருகே ஜீப்-லாரி மோதல்: 6 பேர் பலி
தாராபுரம் : தாராபுரம் சங்கரம்பாளையம் பிரிவில் குன்னத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஜீப்பும், ஈரோட்டில் இருந்து வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீப்பில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியி...
இந்தியா
நம்பர்-1 இடத்தை இழக்கிறார் தோனி
மும்பை : ஐ.சி.சி., ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் தோனி 819 புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹுசே 811 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். இருவருக்கும் இடையே 8 புள்ளிகளே வித்தியாசம் உள்ளன. இந்நிலையில் ஜிம்பாப்வேயில் இன்று துவங்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்கவி...
இந்தியா
தெலுங்கானாவிற்கு செல்ல முயன்ற ஜெகன் மோகன் கைது
ஐதராபாத் : தடையை மீறி தெலுங்கானாவிற்கு செல்ல முயன்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். பதற்றமான சூழலில் தெங்கானாவிற்கு சென்று தந்தையின் மறைவு கேட்டு துயரமுற்ற மக்களுக்கு ஆறுதல் தெரிக்க சென்றதை எதிர்த்து ஆந்திர அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது க...
தமிழகம்
கோவையில் வைகோ கைது
கோவை : முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து மதிமுக சார்பில் தமிழகத்தின் பல இடங்களிலும் இன்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் கேரளா செல்லும் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மதிமுக கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வை...
இந்தியா
ரயில் விபத்துக்கு நாசவேலையே காரணம்: சிதம்பரம்
புதுடில்லி : மேற்கு வங்காளத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் கவிழ்ந்ததற்கு நக்சலைட்டுகளின் நாசவேலையே காரணம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்பவ இடத்துக்கு 132 பேர் கொண்ட தேசிய பேரழிவு மீட்பு படை உடனடியாக அனுப்பப்பட்டு உள்ளது. மீட்பு பணிகளை விரைவாக செய்யவ...
General
இந்திய அதிகாரிகளுக்கு விசா மறுப்பு : கனடா வருத்தம்
ஒட்டாவா : ஓய்வுபெற்ற இந்திய அதிகாரிகளுக்கு விசா மறுக்கப்பட்டதற்கு கனடா அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இத்தகவலை கனடா அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு படையை விமர்சித்த அதிகாரிகளுக்கு கனடா விசா மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது
சென்னை : கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலையில் இன்று சரிவு ஏற்பட்டது. இன்று காலை நிலவரப்படி தங்கம், சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.13 ஆயிரத்து 760 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.1,720 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.30 ஆயிரத்து 205 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.32.30 ஆகவும் உள்ளது.
இந்தியா
ஜிஎஸ்பிஎல் காலாண்டு லாபம் இரு மடங்காக உயர்வு
மும்பை : குஜராத் ஸ்டேட் பெட்ரோநெட் லிமிடெட் நிறுவனம் தனது காலாண்டு நிகர லாபம் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த 4வது காலாண்டில் ஜிஎஸ்பிஎல் நிறுவனத்தின் நிகர லாபம் இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.107.8 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே க...
இந்தியா
மாவோயிஸ்டுகள் ஆதிக்க பகுதியில் ரயில்கள் நிறுத்தம்
புதுடில்லி : மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து மாவோயிஸ்டு ஆதிக்க பகுதிகளில் இரவு நேர பயணிகள் ரயில்களை நிறுத்த ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இது குறித்து ரயில்வே உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ஒரிசா, பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களிலும் இரவு நேர ரயில்களை நிறுத்தி விடுவது க...
General
தெற்கு பசிபிக் கடலில் சுனாமி எச்சரிக்கை
போர்ட்விலா : தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள வனட்டு தீவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள வனட்டு மற்றும் சாலமன் தீவுகளுக்கு அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் செல...
இந்தியா
ரயில் விபத்து பகுதியில் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிப்பு
ஜர்கிராம் : மேற்கு வங்காளத்தில் ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த ஜெலாட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது மோப்ப நாய்கள் வரவழைக்...
General
லாகூர் மசூதியில் குண்டுவெடிப்பு
லாகூர் : பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டு வெடித்துள்ளது. மசூதிக்குள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக சென்றிருந்த 1500-2000 பேரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக  பிடித்து  வைத்துள்ளனர். மசூதியைச் சுற்றி போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் பயங்கரவா...
General
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : இவானோவிச் தோல்வி
பாரீஸ் : பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் முன்னாள் சாம்பியன் இவானோவிச் படுதோல்வி அடைந்துள்ளார். இவர் 6-4,6-0 என்ற செட் கணக்கில் கிளைவனோவாவிடம் தோல்வி அடைந்தார்.
தமிழகம்
மாமல்லபுரத்தில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
மாமல்லபுரம் : கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கப்பட்டியில் விஏஓ.,வாக பணியாற்றி வருபவர் கன்னியப்பன்(56). இவர் இதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் பட்டா தொடர்பாக சர்வே எண்ணில் திருத்தம் செய்வது தொடர்பாக ரூ.2000 லஞ்சம் வாங்கி உள்ளார். இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் கன்னியப்பனை இன்று காலை கைது செய்துள்ளனர்...
தமிழகம்
தூத்துக்குடியில் புதுமாப்பிள்ளை கொலை : 2 பேருக்கு ஆயுள்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் புதுமாப்பிள்ளையை வெட்டி கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள கே.தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முத்துகருப்பசாமி (எ) ராஜபெருமாள். இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் பல ஆண்டுகளாக நிலத் தகராறு இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட முன்விர...
தமிழகம்
போத்தனூரில் ஏட்டு மகள் கடத்தல்
போத்தனூரில் : போத்தனூரில் ரயில்வே ஏட்டு மகள் உமாமகேஸ்வரி(24), தனது சகோதரி திராவிட மணியுடன் ஜெராக்ஸ் எடுப்பதற்காக நேற்று மாலை கடைக்கு சென்றுள்ளார். அப்போது காரில் வந்த 7 பேர் கும்பல் உமாமகேஸ்வரியை கடத்திச் சென்றது. இவர்களில் மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்(28) மற்றும் ஆசிரியர் வசந்தகுமார் உள்ளிட்டோரும் அடங்குவர். இவர்கள...
General
பாக்., மசூதியில் நுழைந்த பயங்கரவாதிகள்; 2 ஆயிரம் பேர் பிணைக்கைதிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மசூதிக்குள் நுழைந்து சுமார் 2 ஆயிரம் பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். துப்பாக்கி சூடும் நடந்தது. பல இடங்களில் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்ததால் பலர் பயங்கரவாதிகளிடம் சிக்கினர். ...
தமிழகம்
மதுரை வங்கி மேனேஜர் குடும்பத்தில் மேலும் 2 பேர் பலி
ஆத்தூர் : ஆத்தூர் அருகே கார் விபத்தில் பலியான மதுரை சென்ட்ரல் வங்கி மேனேஜர் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 2 பேர் இன்று பலியாகி உள்ளனர். மதுரை வங்கி மேனேஜர் மதனகோபால், தனது குடும்பத்தாருடன் ஈரோட்டில் உள்ள தனது உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பும் போது எதிரே வந்த லாரி மோதி பலியானார். மதனகோபாலும், அவரது மாம...
General
சீனாவில் ஹோண்டா பணியாளர்கள் ஸ்டிரைக்
பீஜிங் : உலகின் 2வது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவன பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‌வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சீனாவின் முக்கியமான 4 ஹோண்டா தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஊதிய உயர்வு, அடிப்டை தேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பணியாளர்கள் முன் வைத்துள்ளனர...
இந்தியா
சோனியா நாளை ஜம்மு பயணம்
ஸ்ரீநகர் : ஒருநாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா நாளை ஜம்மு பகுதிக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது, கட்சி அலுவலக கட்டிடம் ஒன்றையும் அவர் திறந்து வைக்க உள்ளார். மேலும் அங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியிலுள் அவர் கலந்து கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்களையும் சந்தித்து கட்சி அலுவல்கள் குற...
General
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிப்போம்: ஒபாமா
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறுகையில், கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந் தேதி, அமெரிக்கா மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு தலீபான்கள் அடைக்கலம் கொடுத்ததால், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று தாக்குதல் நடத்தின. அல் ...
இந்தியா
ஜெகன் மோகன் கைது :ஆந்திராவில் கலவரம்
ஐதராபாத் : தெலுங்கானாவிற்கு தடையை மீறி பயணம் மேற்கொள்ள முயன்ற ஜெகன் மோகன் ரெட்டி இன்று கைது செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக ஜெகன் மோகன் ஆதரவாளர்கள் வாரங்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர்.. இதனால் ஐதராபாத்-வாரங்கல் இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
ராஜ்யசபா தேர்தலில் போட்டி இல்லை: ஜெயாபச்சன்
புதுடில்லி : சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் ஜெயாபச்சன் மீண்டும் போட்டியிடுவார் என்று சமாஜ்வாடி கட்சி அறிவித்திருந்தது. ஆனால், எனது குடும்பத்தினர் நான் போட்டியிடுவதை விரும்பவில்லை. எனவே தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஜெயாபச்சன் அறிவித்து உள்ளார்.
தமிழகம்
மதுரையில் கொட்டித்தீர்த்தது மழை: கடும் வெப்பத்திற்கு குட்பை
மதுரை: அக்கினி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மதுரையில் இன்று மாலையில் 4. 45 மணி அளவில் நல்ல மழை பெய்தது. பலத்த காற்றும் பருமனுள்ள துளியும் கொண்டதாக மழை இருந்தது , வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் குறைந்து, குளிர்ச்சியை உணர்ந்தனர், வெப்பத்திற்கு குட்பை சொன்ன மதுரை மக்கள்.
தமிழகம்
சமச்சீர் கல்வி பாடத்தில் உசிலம்பட்டி மாணவி
சிவகங்கை : கல்பனா சாவ்லா விருதுபெற்ற உசிலம்பட்டி மாணவி ராஜலட்சுமி, சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான புத்தகங்கள், மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தில், இம்மாணவியின் சாதனை ...
இந்தியா
360 டிகிரி கோணத்தில் கோயில்களின் முழுமையான தரிசனம்
தினம் தினம் புதுமைகளை புகுத்தி வாசகர்களுக்கு பல வசதிகளை அள்ளிக் கொடுத்து வரும் உங்கள் தினமலர் இணைய தளம் கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசித்து மகிழ புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆன்மிக இணைய தளங்களில் உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த பகுதி‌யை வாசகர்கள் குடும்பத்தோடு பார்த்து, கோயில்கள...
தமிழகம்
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தி.மு.க., கவுன்சிலர் கைது
தூத்துக்குடி : தூத்துக்குடியில், அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று அரசு பஸ் புறப்பட்டது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி அருகே அந்த பஸ் சென்றபோது, மாநகராட்சி 45வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் செல்வம் (எ) செல்வராஜ்(40), நடுரோட்டி...
தமிழகம்
எம்.எல்.ஏ., வீட்டில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது
சென்னை : காங்., எம்.எல்.ஏ., வீட்டில் நள்ளிரவில் கைவரிசை காட்டி, காரைக் கடத்திச் சென்ற கும்பலில் ஒருவர் சிக்கினார். கார் மற்றும் கொள்ளை போன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொருவர், கோர்ட்டில் சரணடைந்தார். ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ஹசன்அலியின் சென்னை வீட்டில் கடந்த 25ம் தேதி நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள், பீ...
தமிழகம்
இளம்பெண் கடத்தல் : பெற்றோர் புகார்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகள் சுசித்திராதேவி(21). கேணிக்கரை அருகே கம்யூட்டர் சென்டரில் பணியாற்றி வந்தார். திடீரென காணாமல் போன நிலையில், சத்திரக்குடி அருகே கவிதைகுடியை சேர்ந்த உதயகுமார் என்பவர், சுசித்திராவை கடத்தி சென்றதாக அவரது தாய் சரவணதேவி கேணிக்கரை போலிசில் புகார் செய்தார். போலீ...
தமிழகம்
தொழில் அதிபர்கள் மாநாடு
சென்னை: மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா விரும்புவதாக, தென் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைத்தூதர் ரகுமான் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற தொழில் அதிபர்கள் மாநாட்டில் அவர் மேலும் பேசுகையில், சென்னை, கோவைக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய நகரங்களில் உள்ள தொழில்...
தமிழகம்
பட்டமளிப்பு விழா
கோவை: இன்றைய உலகில் பல சவால்கள் உள்ளன. இவற்றைச் சமாளிக்க புதிய கண்டுபிடிப்புகளும் அணுகுமுறையும் தேவை. வானிலை மாற்றம் மட்டும் ஒரு அச்சுறுத்தல் இல்லை; கடல்நீர் அமிலத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் சமாளிக்க புதிய அறிவியல் தேவை என்று கோவை பிஎஸ்ஜி தொழில்நுட...
தமிழகம்
விவசாய பல்கலைக்கழகத்தில் இதிய இணைய தளம்
கோவை: தமிழ்நா‌ட்டில் சுமார் 80 லட்சம் விவசாய நில உரிமையாளர்கள் இருப்பதால் ஒ‌வ்வொருவரையும் சந்தித்து ஆலோசனை கூற விவசாயத்துறை ஊழியர்களால் இயலாது. எனவேதான் இ-வேளாண்மை திட்டத்தை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் துவக்கி உள்ளது என்று கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் புதிய இணையதளத்தை துணை வேந்தர் பி.முருகேச பூபதி துவக்கி வைத்துப்...
தமிழகம்
திருமணம் நிச்சயிக்கப்பட்டவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள்
தூத்துக்குடி : நிலத்தகராறில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளையை வெட்டிக் கொலை செய்த இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி, கே.தங்கம்மாள்புரம் அரிச்சந்திரன் மகன் முத்துகருப்பசாமி (எ) ராஜபெருமாள்(21). இவரது குடும்பத்திற்கும், அதே ஊர் ஆறுமுகம் குடும்பத்திற்கும் ...
General
அமெரிக்க தொழில்நுட்பத்துறை உயர் அதிகாரியாக இந்தியர் நியமனம்
வாஷிங்டன் : அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷேமேந்திர பால் நியமிக்கப்படவுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஷேமேந்திர பால். இவரது பெற்றோர் கடந்த 1950களில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். பால், அமெரிக்க அரசின் பட்ஜெட் மேலாண்மைத் துறையின் தல...
தமிழகம்
அரசு கண்காட்சியில் திருட்டு
நாகர்கோவில் : கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சியில் சாமி சிலைகள் திருட்டு போனது. கோடை விடுமுறை சீசனை ஒட்டி கன்னியாகுமரியில் பூம்புகார் சார்பில் கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த கண்காட்சியை பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் ...
தமிழகம்
தனுஷ்கோடியில் பிரார்த்தனை மண்டபம் அகற்றம்
ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபத்தை, போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். தனுஷ்கோடியில் கட்டப்பட்ட குறிப்பிட்ட மதத்தின் பிரார்த்தனை மண்டபத்தை , ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் பார்வையிட்டு, கட்டடம் கட்டிய ஜோஸ்வா என்பவரிடம் விசாரணை செய்தார். இன்று காலை 10 மணிக...
தமிழகம்
மேட்டூரில் மின்னல் தாக்கி ஒருவர் பலி
மேட்டூர் : மேட்டூரில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் பலியானார். சேலம் மாவட்டம் மேட்டூர் சேத்துக்குளியைச் சேர்ந்தவர் தேவராஜன் (50). இவரும் மேலும் இருவரும் மேட்டூர் அணையில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். மீன் பிடித்து விட்டு வெள்ளக்கரட்டூர் என்ற இடத்தினருகே வந்த போது, மூவர் மீதும் மின்னல் தாக்கியது. இதில் தேவராஜன் சம்பவ இடத...
தமிழகம்
கரை ஒதுங்கிய சேதுசமுத்திர திட்ட ஆய்வு மிதவை கருவி
ராமேஸ்வரம் : சேதுசமுத்திர திட்ட மாற்று வழி ஆய்வு பணி கடல் மிதவை கருவி காற்றில் கரை ஒதுங்கியது. சேதுசமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்தை மாற்று வழித்தடத்தில் செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு, கடந்த பிப்ரவரி முதல் துவங்கியது. இதற்காக ஒன்பது இடங்களில் கடலில் மிதக்கும் ஆய்வுக்கருவிகள் நிறுவப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ...
தமிழகம்
மன்னார் வளைகுடா பூங்காவுக்கு மீனவர்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் தேசிய பூங்கா திட்டத்துக்கு ,இரு மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மன்னார் வளைகுடா பெற்றுள்ளதால், இதற்கு கடந்த 1986ல் "தேசிய பூங்கா' அந்தஸ்து தரப்பட்டது. தற்போது இலங்கையில் உள்நாட்டு போர், நிறைவு பெற்று, ...
தமிழகம்
பழநியில் லாட்டரி விற்பனை ஜோர் : பணத்தை தொலைக்கும் பக்தர்கள்
பழநி : பழநியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளது. பக்தர்கள் பணத்தை தொலைப்பது தொடர்கிறது. பழநி வரும் பக்தர்களை குறி வைத்து பஸ்ஸ்டாண்ட், அடிவாரம், ஆர்.எப். ரோடு, காந்திரோடு ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகிறது. புறநகர்களை பொறுத்தவரை பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, கீரனூ...
தமிழகம்
இந்திய ஜனநாயக கட்சி முதல் தேசிய மாநாடு
திருச்சி: இந்திய ஜனநாயக கட்சி முதல் தேசிய மாநாடு, இன்று திருச்சியில் நடக்கிறது.இந்திய ஜனநாயக கட்சி கடந்த மாதம் 28ம் தேதி துவக்கப்பட்டது. அக்கட்சியின் முதல் தேசிய மாநாடு, இன்று காலை 7.30 மணிக்கு இன்னிசையுடன் துவங்குகிறது. 8 மணிக்கு கட்சி நிறுவனர் பாரி வேந்தர் கொடியேற்றுகிறார்.மாநாட்டை சென்னை தொழிலதிபர் பாண்டுரங்கன் துவக...
தமிழகம்
முல்லைப் பெரியாறு அணை பிரச்னை ஐந்து மணி நேர மறியலுக்கு பின் வைகோ கைது
குறிச்சி:முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளா அரசு புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி, கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று கைது செய்யப் பட்டார். ஐந்து மணி நேரம் நடந்த இந்த மறியல் போராட்டத்தில், வைகோவுடன் 1,702 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவத...
இந்தியா
எம்.பி., பதவி வேண்டாம்: மறுத்தார் ஜெயா பச்சன்
புதுடில்லி:சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட, ஜெயா பச்சன் மறுத்துவிட்டார்.பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன். தற்போது சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்ய சபா எம்.பி.,யாக உள்ளார். வரும் ஜூலை மாதத்துடன் இவரது ராஜ்ய சபா எம்.பி., பதவிக் காலம் முடிகிறது. சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செய...
இந்தியா
மன்மோகனுடன் தொலைபேசியில் ஒபாமா பேச்சு
புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நேற்று தொலைபேசியில் பேசினர். அப்போது, அடுத்த மாதம் 3ம் தேதி இரு நாடுகள் இடையே நடைபெற உள்ள செயல்திட்ட ரீதியான பேச்சுவார்த்தைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அத்துடன் பிராந்திய மற்றும் உலக அளவிலான பிரச்னைகள் குறித்தும் பேசினர். மங்களூரு விமான விப...
இந்தியா
குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 100 பேர் பலி !
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் ரயில் பாதையை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்ததால், ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. தடம் புரண்ட பெட்டிகளின் மீது, அந்த வழியாக வந்த சரக்கு ரயில் பாய்ந்ததால் 106 பயணிகள் பலியாயினர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாவோயிஸ்டுகள் அட்டகாசம் நீடிப்பதால், மத்திய அரசு கவலை அடைந்துள...
இந்தியா
இது 65வது தாக்குதல், இழப்பு ரூ.500 கோடி
புதுடில்லி:கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரயில்வேயை குறிவைத்து 65 தாக்குதல்களை நக்சலைட்கள் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:சமீபகாலமாக, நக்சலைட்கள் ரயில்வே துறையை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், ரயில்வேக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரயில்வே துறை...
இந்தியா
ஆந்திராவில் வெடித்தது வன்முறை: ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன் கைது
காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியும் கேட்காமல், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று யாத்திரை துவக்கியதால், பெரிய அளவில் வன்முறை வெடித்தது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்களும், தெலுங் கானா ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்தவர்களும் மோதிக் கொண்டனர். இதனால், முன்னெச்சரிக்கை ந...
இந்தியா
புகையிலை பொருள் உறைகள் மீது விரைவில் புதிய எச்சரிக்கை படம்
புதுடில்லி : புகையிலை பொருட்களின் உறையின் மீது, வரும் டிசம்பரில் இருந்து புதிய எச்சரிக்கை படங்கள் அச்சிடப்படவுள்ளன. இது மிகவும் தாமதமான நடவடிக்கை என, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நலக்கேடு குறித்து எச்சரிக்கும் வகையில், அவற்றி...
தமிழகம்
பந்தாவில் ஈடுபட்ட பதிவாளர்கள் : பரிவு காட்டிய பாதுகாப்பு போலீசார்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு பதிவு முகாமில் பதிவு செய்யும் அதிகாரிகள் அரட்டை அடித்து பந்தா காட்டிக்கொண்டிருந்த நேரத்தில், பாதுகாப்புக்கு வந்த போலீசார் மாணவர்களுக்கு உதவினர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மாணவர்கள் அதற்கான சான்றிதழை பெற்று வருகின்றனர். பெறப்படும் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகங்க...
தமிழகம்
அடிக்கடி தீ பிடிப்பதால் மக்கள் அதிருப்தி : சாலைமறியல் கன்னிகாபுரத்தில் 100 குடிசைகள் சாம்பல்
புளியந்தோப்பு : கன்னிகாபுரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 100 குடிசைகள், ஒரு ஆட்டோ, 10 டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசமானது. இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், அதிருப்தியடைந்த மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.சென்னை கன்னிகாபுரம், அம்பேத்கர் கல்லூரி சாலையில் மூர்த்திங்கர் நகர...
General
இந்தியா அதிர்ச்சி தோல்வி : ஜிம்பாப்வே அபார ஆட்டம்: ரோகித் சதம் வீண்
புலவாயோ : முத்தரப்பு தொடரை இந்திய அணி படுமோசமாக துவக்கியுள்ளது. நேற்று நடந்த லீக் போட்டியில் பவுலர்கள் சொதப்ப, ஜிம்பாப்வேயிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. ரோகித் சர்மாவின் சதம் வீணானது. இந்தியா, ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நேற்று ...
தமிழகம்
200 பேருக்கும் மேல் காலரா பாதிப்பு
தண்டையார்பேட்டை : சென்னையில் 200க்கும் மேற்பட்டோர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் களால் தண்டையார் பேட் டை தொற்றுநோய் மருத்துவமனையில் உள்ள பெட் கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.கோடை மழையால் சென்னை சாலைகளில் தேங்கிய தண்ணீர், பம்புகள் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் கலந்தது. ...
தமிழகம்
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் காது கேளாதோருக்கு 1 சதவீதம்: ஐகோர்ட்
சென்னை : இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், காது கேளாதோருக்கு 1 சதவீத இடம் ஒதுக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிவகாசி அருகில் உள்ள சாச்சியாபுரத்தைச் சேர்ந்த பிரியங்கா என்பவர் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் பட்டயப் படிப்பில் நான் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. அதற்கான சான்றிதழை பெற்ற...
இந்தியா
சிவசேனாவுடன் நெருங்குகிறதா ராஜ் கட்சி? தொண்டர்கள் நடவடிக்கைகளில் மாற்றம்
மும்பை:சிவசேனா-நவநிர்மாண் சேனா கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையே இன்னும் விரோத மனப்பான்மை இருந்தாலும், இந்த கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, மகாராஷ்டிர அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ராஜ் தாக்...
தமிழகம்
தி.மு.க., கவுன்சிலர் கொலையில் நால்வர் சரண்
சென்னை : தி.மு.க., கவுன்சிலர் கொலையில் தொடர்புடைய நான்கு வாலிபர்கள் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரணடைந்தனர்.திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேரன் (44); மாநகராட்சி கவுன்சிலர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த மர்மக் கும்பல், சேரனை வெட்டிச் சாய்த்தது. துணை கமிஷனர் பெரி...
தமிழகம்
புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளிசென்னை மாவட்டத்தில் முதலிடம்
சென்னை : மந்தைவெளிப்பாக்கம் மாதா சர்ச் சாலையில் உள்ள புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.தேர்வு எழுதிய 310 மாணவியரில் 309 மாணவியர் தேர்ச்சி பெற்று, 99.7 சதவீத வெற்றி எனும் சாதனையை பள்ளிக்கு பெற்றுத் தந்துள் ளனர்.ஆர்.ரஷித்தா ரினோஷா 491 மதிப்பெண்க...
தமிழகம்
காலாவதி மருந்து விவகாரம்: அதிகாரி கடித நடவடிக்கைக்கு தடை
சென்னை : காலாவதியான மருந்து விற்பனை வழக்கில், மூன்று நிறுவனங்கள் விளக்கம் அளிப்பது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அனுப்பிய கடிதம் தொடர்பான நடவடிக்கைக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. மீனா ஹெல்த் கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தாக்கல் செய்த மனு: சென்னை சின்மயாநகரில் வசந...
தமிழகம்
வேலை வாய்ப்பு முகாம்
சென்னை : ஏ.ஐ.இ.எம்.ஏ., தொழிற்நுட்ப மையம் சார்பில், இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.அம்பத்தூர் தொழிற் பேட்டை, முதல் குறுக்கு தெருவில் நடக்கும் முகாமில், டிப்ளமோ, ஐ.டி.ஐ., துறையை சார்ந்த மாணவர்களை தகுதிக்கு ஏற்ப ஆட்டோமொபைல் மற்றும் பொறியியல் துறையில் வேலையில் அமர்த்தப்படுவர்.இறுதி ஆண்ட...
தமிழகம்
ஜீப்பும் லாரியும் நேருக்கு நேர் மோதல் ஏழு பேர் பலி; 12 பேர் காயம்
தாராபுரம் : தாராபுரம் அருகே, மில் வேலைக்கு கூலியாட்களை அழைத்து வந்த ஜீப்பும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஏழு பேர் பலியாயினர்; 12 பேர் காயமடைந்தனர். ஆத்தூர் அருகே நடந்த விபத்தில் மேலும் இருவர் பலியாயினர். தேனியை சேர்ந்த புரோக்கர் ராசய்யா (65), நேற்று முன்தினம் மதுரை, தேனி, உசிலம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த தொழ...
General
உள்ளூரில் வளர்க்கப்படும் பயங்கரவாதிகள்:முதலில் களையெடுக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்:அமெரிக்காவில் வளர்ந்து குடியுரிமை பெற்றவர்கள், பயங்கரவாதத்தில் ஈடுபட்டு சதிகளில் ஈடுபடுவதை தடுக்க தற்போது அமெரிக்கா அதிக கவனம் செலுத்துகிறது. அதற்கான புதிய யுக்திகள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்படும்."உள்ளூரில் வளர்ந்த பயங்கரவாதிகள்' இப்போது முதலில் கண்டறியப்பட்டு களையெடுக்கப்பட வேண்டியவர்கள் என்று, முன்னாள்...
தமிழகம்
டான்செட் நுழைவுத்தேர்வு இன்று துவக்கம்
திண்டுக்கல்: தொழில்நுட்பக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி. ஏ., உள்ளிட்ட முதுநிலை பட்ட படிப்புகளில் சேர்வதற்கு, அண்ணா பல்கலை., சார்பில் மாநில அளவிலான பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரியில் இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று நடைபெறும் தேர்வில் 933 பேரும், நாளை 492 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர...
தமிழகம்
ஆஸி.,யில் படிக்கஆர்வம் குறைகிறது
மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் படிக்க விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் விசா வழங்கும் முறையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அழகுக்கலை, சமையல்கலை போன்ற குறைந்த கால படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்குரிய விசா வழங்க முடியாது, என ஆஸ்திரேலி...
தமிழகம்
ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக வெளிநாடுகளுக்கு மான்கள் கடத்தல்?
ராமநாதபுரம் : வழக்கத்துக்கு மாறாக ராமநாதபுரத்தில்மான்கள் உலா வருவது அதிகரித்து வருவதால், இம்மாவட்ட கடல்வழி கடத்தல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கடலோர பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் வசிக்கும் மான்கள் உலா வருவது அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன், கடலில் தத்தளித்த மான் ஒன்றை...
General
தொழில்நுட்பத்துறை உயர் அதிகாரி இந்தியர் பால்
வாஷிங்டன்:அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷேமேந்திர பால் நியமிக்கப்படவுள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஷேமேந்திர பால். இவரது பெற்றோர் கடந்த 1950களில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். பால், அமெரிக்க அரசின் பட்ஜெட் மேலாண்மைத் துறையின் தலைமை...
தமிழகம்
மதுரையில் மழையுடன் ஆரம்பித்து மழையுடன் முடிந்த அக்னி நட்சத்திரம்
மதுரை : மதுரையில் மழையுடன் ஆரம்பித்து, மழையுடன் முடிந்தது, அக்னி நட்சத்திரம். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம், கடந்த 4ல் துவங்கியது. ஏற்கனவே, பிப்ரவரி முதல் வெயிலின் கொடுமையை அனுபவித்த மதுரை மக்கள், "அக்னி நட்சத்திரத்தின் போது என்ன ஆகுமோ' என பயந்தனர். நல்ல வேளையாக, அக்னி நட்சத்திரம் துவங்கிய போதே, மழை பெய்தது. அதன் பிறகு,...
தமிழகம்
கொத்தமல்லி கிலோ ரூ. 120
பழநி:பழநி உழவர்சந்தையில் ஒரு கிலோ கொத்தமல்லி ரூ. 120க்கு விற்றது. சுற்றுவட்டார பகுதியில் மழையில்லாததால் விளைச்சல் இல்லை. கடந்த சில நாட்களாக வரத்தும் குறைவாக இருந்தது. கடந்த வாரம் கிலோ ரூ. 90க்கு விற்ற கொத்தமல்லி நேற்று ரூ.120க்கு விற்றது. பிற காய்கறிகளின் விலைவிபரம் (ரூ. ஒரு கிலோவிற்குரியது): கத்தரி-6, தக்காளி-30, வெண்...
தமிழகம்
ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னேரி : தமிழக ரேஷன் அரிசி சென்னை புறநகர் பகுதிகளிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரயில்கள் மூலம் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க பொன்னேரி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் போலீசார் பொன்னேரி ரயில் நிலைய பகுதியில் சோதனையிட் டனர்.அங்கு ஆந்திர மாநி...
தமிழகம்
தொழிலாளி தற்கொலை
பழநி: பழநிபெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குருசாமி(40). கூலி தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
தப்பிய கைதி கோர்ட்டில் சரண்
பொன்னேரி : மதுரை கோர்ட்டிற்கு கொண்டு செல்லும்போது, போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிய கைதி பொன் னேரி கோர்ட்டில் சரணடைந்தார்.கன்னியாகுமரி மாவட்டம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ்(29). இவர் சென்னை கே.கே. நகர், நுங்கம் பாக்கம், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய காவல் நிலையங்களிலும், மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி பகுதி போலீஸ...
தமிழகம்
வீட்டில் திருட முயன்றவர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
பொன்னேரி : திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க பொன்னேரி போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில், போலீசார் பொன்னேரி அடுத்த என்.ஜி.ஓ., நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகப் படும் வகையில், அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.விசா...
தமிழகம்
ரூ.2,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
மாமல்லபுரம் : பட்டாவில் சர்வே எண்ணை திருத்த, இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சதுரங்கப்பட்டினத்தில் உள்ள மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(40). கிராம நத்தம் வகை நிலத்தில் வசித்து வருகிறார். அந்த நிலத்திற்கு பட்டா பெற்றார். அதில் சர்வே எண் தவறாக குறிப்பி...
தமிழகம்
கும்பாபிஷேக விழா
ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் எல்லைப் பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன் கோயில்கள் கடந்த மே 24ல் முதற்கட்ட யாக பூஜை துவங்கியது. 25ல் இரண்டாம் கட்ட யாக பூஜையும், 26ல் அதிகாலையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு அன்னதானமும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. தி.மு.க மாணவரணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன், வட்டார ...
தமிழகம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வீதியுலாவில் மோதல் : சுவாமி பாதி வழியில் திரும்பியதால் பரபரப்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், சேஷ வாகனம் வீதியுலா பாதியில் முடிந்தது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 25ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பெருமாள் காலை மற்றும் மாலை வெவ்வேறு வாகனங்களில், வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறத...
தமிழகம்
மதுராந்தகம் ஏரியில்பிணம் மீட்பு
மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரியில், 40 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார்.இவர் குறித்த விவரம் தெரியவில்லை. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் பஞ்சமூர்த்தி மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
ஆனூர் கந்தசாமி கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
செங்கல்பட்டு : வைகாசி விசாகத்தையொட்டி, ஆனூர் கந்தசுவாமி கோவிலில் 108 பால் குட அபிஷேகம் கோலாகலமாக நடந்தது.செங்கல்பட்டு அடுத்த ஆனூரில் அழகிய குமரன் என அழைக்கப்படும் கந்தசுவாமி கோவில் அமைந் துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, முதல் வைகாசி விசாகத...
தமிழகம்
நிதியுதவி வழங்கும் விழா
ஸ்ரீ பெரும்புதூர் : தனிநபர் கழிப்பிடம் கட்ட பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது.படப்பை ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, ஒன்றியக் குழுத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாடம்பாக்கம் ஊராட் சிக் குட்பட்ட 60 பயனாளிகளுக்கு, தலா 2200 ரூபாய்க் கான காசோலையை மனோகரன் வழங்கினார். முழு சுகாதார ஒருங் கிணைப்பாளர் ரம...
தமிழகம்
அறங்காவலர்கள் பதவியேற்பு
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அறங்காவலர்களாக சொக்கலிங்கம், கோபால், மாரியப்பன், ராமசாமி, செல்வி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராஜன் முன்னிலையில் அறங்காவலர்கள் பதவியேற்றனர். பின்னர் நடந்த குழுத்தலைவருக்கான தேர்தலில் சொக்கலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா
சொல்கிறார்கள்
கல்வியை விட வாழ்க்கை தான் உண்மையை கற்பிக்கும்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ் வார்: என் மூத்த அண்ணன்கள் நிறைய படித்ததால், கடைக்குட்டியான என்னை, நிலங்களை பார்க்க தனக்கு உதவியாக இருக்கும்படி, என் அப்பா கூறினார். நிலங்களை பராமரிக்க மறுத்து, நான் படிக்க நினைத்த படிப்பு வேளாண்மைக் கல்வி. அடிப்படையில் விஞ்ஞானம் படிக்க வேண்டு...
தமிழகம்
மகாசுவாமிகளின் 117வது ஜெயந்தி விழா காஞ்சி சங்கரமடத்தில் கோலாகலம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கரமடத்தில் மகாசுவாமி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 117வது ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.விழாவையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக சங்கரமடத்தில் காலை வேதபாராயணம் மற்றும் ஜெபம் நடந்தது.மாலை இசை நிகழ்ச்சி நடந்தது. ஜெயந்தி விழாவான நேற்று காலை 7 மணியிலிருந்து பகல் 12.30 மணி வரை ஜெபம், ருத்ர பா...
தமிழகம்
குடிநீர் ஆதாரங்களை பராமரிப்பதில் அலட்சியம் : நகராட்சி தூர் வாராததால் தூர்ந்து அழியும் குளங்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அதிக பரப்பளவுள்ள குளங்கள் இருந்தபோதும், மழைநீரை தேக்கி வைக்க வழியின்றி வீணாகிறது. தனியார் ஆக்கிரமிப்புகளால், இவற்றின் பரப்பளவு குறைந்து தொழிற்சாலை கழிவுகள் நிரம்பியுள்ளன. போக்கு காட்டும் பருவமழை, அதிக வெப்பம், கழிவுகளால் நீர் மாசுபடுதல் போன்றவற்றால், திண்டுக்கல்லில் நிலத்தடி நீர்மட்டம் வெகு...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்புசிறப்பு மையங்கள் அமைப்பு
திண்டுக்கல்: மக்கள் தொகை கணக் கெடுப்பு குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்க, தாலுகா வாரியாக சிறப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத் தில் வீட்டுப்பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஜூன் 1 முதல் துவங்குகிறது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக...
தமிழகம்
வடமதுரையில் மாநில கூடைப்பந்து இறுதி சுற்றில் சென்னை அணிகள்
வடமதுரை:வடமதுரையில் காவேரிம்மாள் கூடைப்பந்து கழகமும், திண்டுக்கல் பி.எஸ். என்.ஏ., பொறியியல் கல் லூரியும் இணைந்து நடத்தும் மாநில கூடைப் பந்து போட்டியில் இறுதி சுற்றிற்கு சென் னையை சேர்ந்த சத்தியாபாமா பல் கலை., இந்தியன் பாங்க் , ஐ.சி.எப்., கோபாலபுரம் அணிகள் தகுதி பெற்றன. கடந்த 25ம் தேதி வடமதுரை அரசு மேல்நிலைப் பள்ளி மைதா...
தமிழகம்
பூ விலை சரிவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத் தில் போதிய மழை இல்லாததால், அனைத்து வகை பூக்களின் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. முகூர்த்தம், பண்டிகை இல்லாததால், பல வாரங் களாக பூக்களின் விலை குறைவாக இருந்தது. முகூர்த்தத்தை முன் னிட்டு திண்டுக்கல்லில் பூக்களின் விலை, இரண்டு நாட்களுக்கு முன் கணிசமான அளவில் அதிகரித்தது. ஒரு கிலோ மல்லி...
தமிழகம்
பழநியில் லாட்டரி விற்பனை ஜோர் பணத்தை தொலைக்கும் பக்தர்கள்
பழநி: பழநியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளது. பக்தர்கள் பணத்தை தொலைப்பது தொடர்கிறது. பழநி வரும் பக்தர்களை குறி வைத்து பஸ்ஸ்டாண்ட், அடிவாரம், ஆர்.எப். ரோடு, காந்திரோடு ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகிறது. புறநகர்களை பொறுத்தவரை பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, கீரனூர...
General
ஆஸி.,யில் படிக்க விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை சரிவு
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் படிக்க விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விசா வழங்கும் முறையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அழகுக்கலை, சமையல்கலை போன்ற குறைந்த கால படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்குரிய விசா வழங்க முடியாது, என ஆஸ்திர...
தமிழகம்
வித்யா பார்த்தி பள்ளி சாதனை
திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி வித்யாபார்த்தி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 263 பேரும் தேர்ச்சி பெற்றனர். கணித பாடத்தில் விஷ்ணு ஸ்ரீ, மதுபாலா, அறிவியல் பாடத்தில் சீனிவாசன், லியோனார்டு ஆகியோர் நூறு மார்க் பெற்றனர். தமிழில் சீனிவாசன், சத்யஜோதி, சிவப்பிரகாஷ், ஆங்கிலத்தில் சீனிவாசன், லியோனார்டு, தர...
இந்தியா
தொலைதூரக் கல்வி இயக்குனர் நீக்கம் : பாலியல் புகார் எதிரொலி
காலாப்பட்டு : பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குனர் பாஸ்கரன், அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கேரளா வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர் பேராசிரியர் பாஸ்கரன். இவர், "டெபுடேஷன்' அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகத்த...
தமிழகம்
பழநி சங்கர் பொன்னர் பள்ளி ஒன்பது ஆண்டுகளாக சாதனை
பழநி: பழநி தும்மலப்பட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 97 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் பவித்ரா, சாருமதி, மாணவர் பானுசந்தர் 478 மார்க் எடுத்து பள்ளியில் முதல் இடம் பெற்றனர். சத்யா 477 மார்க்குடன், இரண்டாமிடமும், அகிலா 476 மார்க்குடன், மூன்றாவது இடத்தையும...
தமிழகம்
கரூர் வைஸ்யா பாங்க் தரைதளத்திற்கு மாற்றம்
திண்டுக்கல்: திண்டுக்கல் கரூர் வைஸ்யா பாங்க், தரை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாங்க் சேர்மன் ஆதிஜனார்த்தனன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் பி.டி.குப்புசாமி முன்னிலை வகித்தார். மதுரை மண்டல அலுவலக மேலாளர் சங்கரவடிவேல் வரவேற்றார். சண்முகவேல் மில்ஸ் குரூப் நிர்வாக இயக்குநர் பி.எஸ். வேலுச்சாமி துவக்கி வைத்த...
தமிழகம்
மிஷின் வெடித்து ஒருவர் பலி
திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே விருவீட்டைச் சேர்ந்தவர் ரவி(40). மே 26ல் விவசாய மருந்து தெளிக்கும் மிஷினை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெட்ரோல் கேன் பகுதியில் தீப்பிடித்ததால், வெடித்துச் சிதறி ரவிக்கு காயம் ஏற்பட்டது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச் சை பலனின்றி இறந்தார். விருவீடு...
தமிழகம்
தீக்குளித்த வாலிபர் பலி
திண்டுக்கல்: கொடைரோடு அருகே ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்தவர் முருகன்(40). இடம் விற்பனை செய்வது தொடர்பாக, இவருக்கும், இவரது தந்தை தங்கராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முருகன், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். திண்டுக்கல் அரசு ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். அம்...
இந்தியா
மினிக்காய் தீவில் போலீசிடம் சிக்கியது சோமாலியா நாட்டு கொள்ளையர்களா?
கொச்சி : சோமாலியா நாட்டைச் சேர்ந்த மூன்று பேர், லட்சத்தீவு அருகே மினிக்காய் தீவில் அபயம் தேடி தஞ்சம் புகுந்தனர். அவர்களை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். கேரள மாநிலத்தை ஒட்டி அரபிக்கடலில், லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகள் உள்ளன. இதில், மினிக்காய் தீவில் இருந்து 26ம் தேதி மாலை மீனவர்கள், மீன் பிடிப்பதற்காக படகில் ...
தமிழகம்
காளஹஸ்தி கோபுரம் இடிந்ததால் மக்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு
திருவண்ணாமலை : காளஹஸ்தி சிவன் கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததால், குடும்பத்தில் பாதிப்பு ஏற்படும் என்று பரவிய தகவலையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட மக்கள், வீடுகளில் நெய்விளக்கு ஏற்றினர். காளஹஸ்தி சிவன் கோவிலில், திருமண தடையுள்ளவர்களுக்கு ராகு, கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜை நடத்தப்படுவது வழக்கம். இக்கோவிலின் ராஜகோபுரம், ந...