category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஆத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி தீக்குளிப்பு
தலைவாசல்:தலைவாசல் அருகே குடும்ப தகராறில் கணவன், மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (26). அவரது மனைவி சத்யா (23)வுக்கும் இடையே இரு தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த மனைவி சத்யா, வீ...
இந்தியா
இது உங்கள் இடம்
பிறந்த வீட்டுப் பெருமையை...: அஸ்வினி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் உள்ள ஐ.மு., கூட்டணி அரசு, தன் சாதனைகளை, பட்டியல் போட்டு கூறுகிறது. இந்த ஒரு ஆண்டில் தனி மனிதனின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை. நம் நாட்டில் அரசு ஊழியர்களும், பெரிய நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை மிகக...
தமிழகம்
சொல்கிறார்கள்
புகை, மதுவை ஒழித்த புரட்சிப் பெண்: விழுப்புரம் மாவட்டம் பாலப்பட்டு கிராம தலைவி இந்திரா: என் கணவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் தந்த ஊக்கத்தால், ஊர் பஞ்சாயத்து தலைவியானேன். எங்கள் கிராமத்தை புகை, மது இல்லாத கிராமமாக மாற்ற, நான் எடுத்த பல முயற்சிகளின் பயனாக, இந்த ஊரில் யாரும் புகை பிடிப்பதில்லை; மது அருந்த...
தமிழகம்
கடலோர பாதுகாப்பிற்கு கூடுதல் இன்பார்மர்கள் நியமிக்க முடிவு
ராமநாதபுரம் : தடை காலம் முடிந்து, கடலுக்கு மீனவர்கள் செல்வதைத் தொடர்ந்து, பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கூடுதல் இன்பார்மர்கள் நியமிக்க கடலோர பாதுகாப்புப் படையினர் முடிவு செய்துள்ளனர். ஏப்., 15 முதல் மே மாதம் 30ம் தேதி வரை மீன் இனப்பெருக்கத்திற்காக 45 நாட்கள், கடலில் விசைப்படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது....
தமிழகம்
நேரம் தவறி சாப்பிடுவதால் உடல்நலம் கெடும் அபாயம் : ஓட்டல்களுக்கு நேரக்கட்டுப்பாடு வருமா?
ஆரோக்கியமான வாழ்விற்கு சரியான நேரத்தில் உணவு உண்பது அவசியம். பொதுவாக ஓட்டல்கள் மாலை 4 மணி வரை மதிய உணவை தருகின்றன. இரவு 1 மணி வரை இரவு உணவை தருகின்றன. ஓட்டல்கள் எப்போதும் திறந்திருப்பதால் பொதுமக்களும் கால நேரம் தெரியாமல் சாப்பிடுகின்றனர். இதனால் உடல் நலம் கெடுகிறது. சில நிபுணர்களின் அறிவுரை... மதுரை அப்போலோ மருத்துவமனை...
தமிழகம்
சாதனை படைத்த பள்ளிகள்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சத தேர்ச்சி பெற்றுள்ளது.  ஆர்.கீதா, ஜி.கீதா 475 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். வினோ கண்ணன் 470 மார்க் பெற்று இரண்டாம் இடத் தையும், ஆர். செல்வராஜ் 466 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்...
தமிழகம்
அங்கன்வாடியில் பரிசளிப்பு விழா
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அங்கன் வாடி மையங்களில் குழந்தைகளுக்கு திறன் மேம்படுத்துதல் போட்டி நடந்தது.  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. பேரூராட்சி தலைவர் வேல்முருகன் தலை மை வகித்தார். கவுன்சிலர்கள் பால்ரத்தினராஜ், மயில்தாய், கட் டாரி ஆகியோர் முன் னிலை வகித்தனர். திட்ட நல அலுவலர் இருளாயி வரவேற்றார்.  மேற் பா...
தமிழகம்
தி.மு.க., உறுப்பினர் கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் பெரியசாமி, அரசு கொறடா சக்கரபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசன்முகமது, துணை அமைப்பாளர் செந்தில்குமார், நகராட்சி தலைவர் நடராஜன், முன்னாள் தலைவர் பஷீர் அகம்மது, ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி உட்பட பலர் கலந...
தமிழகம்
ஸ்ரீ சாய் பரத் கல்லூரியில் இலவச கல்வி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத் தில் ஒவ்வொரு பள்ளியிலும், முதல் மார்க் பெறும் மாணவ,மாணவிகளுக்கு, திண்டுக்கல் ஸ்ரீ சாய் பரத் கலை,அறிவியல் கல்லூரியில் இலவச கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  திண்டுக்கல் -கரூர் ரோட்டில், எம்.வி.எம்., நகரில் இரண்டாவது ஆண் டாக இக்கல்லூரி செயல் பட்டு வருவதாகவும், அனைத்து பாடப்பிரிவுகளுக்கு...
தமிழகம்
நூறு சதவீத தேர்ச்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி மூன்று ஆண்டுகளாக, பத்தாம் வகுப்பு,பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.  அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர் ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கில வழி வகுப் புகளுக்கான சேர்க்கை நடக்கிறது.
தமிழகம்
கோயில் திருவிழா
பண்ணைக்காடு: பண்ணைக்காடு ராமசாமி கோயிலில் வைகாசித் திருவிழா நடந்தது. மூன்று நாள் நடந்த விழாவில் திருமஞ்சனம், கொடி அழைப்பை தொடர்ந்து கொடியேற்றம், நகர்வீதியில் மின் ரதத்தில் சுவாமி நகர் வலம் வருதல் உள்ளிட்டவை நடந்தன.தொடர்ந்து கலை நிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர் வாகத்தினர் செய்திருந்தனர்.
தமிழகம்
பழைய வத்தலக்குண்டு மகாபரமேஸ்வரி திருவிழா
வத்தலக்குண்டு: பழையவத்தலக்குண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. செவ்வாய் இரவு அம்மன் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்தார். முதல் நாளில் பொங்கல் படை த்து பக்தர்கள் வழிபட்டனர். கரும்பு தொட்டில் நேர்த்தி கடன் நடந்தது. இரண்டாம் நாள் மா விளக்கு, பால்குடம்,ஆயிரம் கண் பானை உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர்...
தமிழகம்
பழநி உழவர்சந்தையில் கட்டட பணி நிறுத்தம்
பழநி: பழநி உழவர்சந்தையில் கம்ப்யூட்டர் அறை கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. உழவர்சந்தை அலுவலகம் அருகே கம்ப்யூட்டர் அறை கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன் பணி துவங்கியது. அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டிய நிலையில் பணி நிறுத்தப் பட்டுள்ளது. தேவையான கற்கள், செங் கற்கள் பள்ளம் அருகே போடப்பட்டுள் ளது. பணி நடக்காததால்...
தமிழகம்
வாலிபருக்கு கத்திக்குத்து
அகரம்; அகரம் கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (24). இவரது உறவினரான ஹரிகரனின் தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கின் போது சுப்புராஜூக்கும், இதே ஊரைச் சேர்ந்த வேலுமணிக்கும் தகராறு ஏற்பட்டது.  முன் விரோதம் காரணமாக வேலுமணி நேற்று முன் தினம் கோட் டூர் ஆவரம்பட்டி மந்தையில் இருந்த சுப்...
தமிழகம்
அழகாபுரி அணையில் மீன் பிடிக்கும் பணி துவக்கம்
குஜிலியம்பாறை: வேடசந்தூர் அழகாபுரி அணையில், மீன் பிடிக்கும் பணி துவங்கியது. வேடசந்தூர் குடகனாறு அழகாபுரி அணையில், மீன் வளத்துறை சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் மருகார், கண் ணாடி கென்டை உள்ளிட்ட பத்து லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. மீன்கள் நன்கு வளர்ச்சியடைந் துள்ள நிலையில், மீன் பிடிக்கும் பணி துவங்காமல் இருந்தது. அ...
தமிழகம்
தாண்டிக்குடியில் மின்வெட்டு : கிராமங்கள் இருளில் மூழ்கின
தாண்டிக்குடி: மின்பாதையில் இடையூறுகள் அகற்றப்படாததால் கீழ்மலை கிராமங்கள் அடிக்கடி இருளில் மூழ்குகின்றன. கீழ்மலை பகுதிகளுக்கு கொடைக்கானல் துணை மின் நிலையம் மூலம் மின்சப்ளையளிக்கப்படுகிறது. தாண்டிக்குடி உதவி மின் நிலையம் மூலம் காமனூர், மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி. பட்டி, பாச்சலூர், பெரியூர் பகுதிகளுக்கு மின்சப...
தமிழகம்
கொடைக்கானலில் கோடை விழா நிறைவு
கொடைக்கானல்: கொடைக்கானலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட கோடை விழா நிறைவு பெற்றது. கலெக்டர் வள்ளலார் தலைமை வகித்தார். சுற்றுலா அலுவலர் குணசேகரன் வரவேற்றார்.  மீன்பிடி,சைக்கிள், கால் பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இமாம் ...
தமிழகம்
எவரெஸ்ட் சிகரம் ஏறிய வாலிபர் சென்னை வருகை
சென்னை: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழன் என்ற சாதனை படைத்த சென்னை வாலிபர், டில்லியில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கரன்; இவரது மகன் சந்தோஷ்குமார் (26); தனியார் நிறுவன ஊழியர். மலை ஏறும் ஆர்வம் கொண்ட சந்தோஷ்குமார், எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி மேற்கொண்டு வந...
தமிழகம்
தரைமட்டமாக்கப்பட்ட கருவறை பூட்டியே கிடப்பது மக்களுக்கு ஆகாது : கலெக்டரிடம் தீட்சிதர் புகார்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான சுப்ரமணியர் சன்னிதி, கும்பாபிஷேகம் செய்யப்போவதாகக் கூறி தரைமட்டமாக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகியும் கட்டப்படவில்லை. பூஜை கூட நடத்தாமல் கருவறை பூட்டியே கிடப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் ஆகாது என கடலூர் கலெக்டரிடம் தீட்சிதர் புகார் தெரிவித்துள்ளதால...
தமிழகம்
எலுமிச்சை மூடை ரூ. ஆயிரம் உயர்வு
திண்டுக்கல்: கடந்த மாதத்தை விட எலுமிச்சை பழம், மூடைக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.  சிறுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம், திண்டுக் கல்லிற்கு விற்பனைக்கு வருகிறது. புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில், இவை விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன.  இவற்றின் வரத்து வெகுவாக குறைந்தால், தரமான எலுமிச்ச...
தமிழகம்
தற்கொலை
திண்டுக்கல்: நத்தம் அருகே ஏலக்காபட்டியைச் சேர்ந்த மாதவன் மகன் மணிமாறன்(21). சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த இவர், மே 27ல் வீட்டில் யாரும் இல்லாத போது விஷமாத்திரை தின்றார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச் சை பலனின்றி இறந்தார்.
தமிழகம்
சுவர் இடிந்து ஒருவர் பலி
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் காளிமுத்து(31). இவர் குஜிலியம்பாறை-ஈசநத்தம் ரோட்டில் உள்ள தனியார் கட்டடத்தில், பழைய சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராத விதமாக, சுவர் மேலே விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய காளிமுத்து மூச்சு திணறி இறந் தார்.
தமிழகம்
தலைகுந்தா செக்போஸ்டில் விஜிலென்ஸ் ரெய்டு
ஊட்டி : நீலகிரி மாவட்டம் தலைகுந்தா செக்போஸ்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் கணக்கில் வராத ஏராளமான பணம் சிக்கியது. லஞ்சஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் நடந்த இந்த சோதனையில், சுமார் ரூ. 9,760 கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
தமிழகம்
முறையற்ற குடிநீர் குழாய்கள்: வினியோகத்தில் குளறுபடி
திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சியில், முறையற்ற குடிநீர் குழாய்கள் அதிகரித்துள்ளதால், வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இங்கு முறையான குடிநீர் இணைப்புகளுக்கு இணையாக, முறைகேடான குழாய்களும் உள்ளன. முறையான  இணைப்புகளில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. திருட்டு குழாய்களில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படு...
தமிழகம்
தாலுகா ஆபீசுக்கு விமோசனம்
சிவகங்கை: சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு, ஒரு கோடி 68 லட்ச ரூபாயில் புது கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையில் குணசேகரன் எம்.எல்.எ.,  ஆர்.டி.ஓ., பொன்னையா, பொதுப் பணி துறை செயற்பொறியாளர் ஜெகநாதன், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், தாசில்தார்கள் சண்முகம் பங்கேற்றனர். இங்கு, 13 ஆயிரத்து 500 சதுர அடியில், மூன்று தளங...
தமிழகம்
பொது குறை தீர் கூட்டம்
காரைக்குடி: காரைக்குடி அருகே பாலையூரில் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., அண்ணாத் துரை தலைமை வகித்தார். தாசில்தார் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.  இதில், 132 மனுக்களில்.  97 மனுக்கள் மீது  தீர்வு காணப்பட்டது. முதியோர் உதவி தொகை கோரி 32 மனுக்கள் பெறப்பட்டன. தனி தாசில்தார்கள் முருகேசன்,  ஜான்சிராணி பங் கேற்றனர்.
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
காரைக்குடி: புவி வெப்பமாவதை தவிர்க்க, மரக்கன்றுகள் நடுவதை வலியுறுத்தி, காரைக்குடியில் என்.சி.சி., மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். அழகப்பா உற்கல்வியியல் கல்லூரி முன், கர்னல் நஞ்சப்பா துவக்கி வைத்தார்.  ஸ்ரீராம் நகர், கோட்டையூர் வழியாக சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் முடிந்தது. மேற்பார்வையாளர் ஜெயக்குமார், முகாம் அதிகாரி ...
தமிழகம்
பொறியாளர் சங்க செயற்குழு கூட்டம்
காரைக்குடி: பொதுப்பணி துறை பொறியாளர், உதவி பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. துணை தலைவர் மலைச்சாமி தலைமை வகித்தார். இணை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.  மாநில பொது செயலாளர் ஆறுமுகம் பேசினார். சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும்; திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனராக, பொதுப்பணி துற...
தமிழகம்
காஸ் அடுப்பு வழங்கல்
காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியம் சிறுகபட்டி, பீர்கலைக்காட்டில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா டந்தது. சுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார். ஊராட்சி தலைவர் கருப்பாயி வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், தாசில்தார்கள் சிவப்பிரகாசம், முருகேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் உடையப்பன் பங்கேற்றனர்.
தமிழகம்
உணவு திருவிழா
காரைக்குடி: நேஷனல் கேட்டரிங் கல்லூரி, ராஜராஜன் பொறியியல் கல்லூரி சார்பில் காரைக்குடியில் உணவு திருவிழா நடந்தது. தொழில் வணிக கழக தலைவர் முத்துபழனிப்பன் தலைமை வகித்தார். தாளாளர் சையது வரவேற்றார்.  கம்பன் அறக்கட்டளை நிர்வாகி மெய்யப்பன், லயன்ஸ் சங்க தலைவர் கண்ணப்பன் முன்னிலை வகித்தனர்.   பேராசிரியர் மணி, தொழில் வணிக கழக செ...
தமிழகம்
வேன் மோதி ஒருவர் பலி
திருப்புத்தூர்: எஸ்.எஸ்.கோட்டை அருகே திட்டசெவல்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (50). சைக்கிள் வேலை பார்ப்பதற்காக எஸ்.எஸ்.கோட்டைக்கு சென்றார். அங்குள்ள மரத்தடியில்  முத்து, தவமணி, வீரனுடன் பேசி கொண்டிருந்த போது, மதியம் 1.20 மணிக்கு, சரக்கு வேன் மோதியது. கருப்பையா பலியானார். முத்து மதுரையிலும், மற்ற இருவர் திருப்புத்தூர் அர...
தமிழகம்
மண் திருடிய வாகனம் பறிமுதல்
காரைக்குடி: சாக்கோட்டை பகுதியில் சவடு மண் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு தாசில்தார்கள் சிவப்பிரகாசம், முருகேசன், துணை தாசில்தார் ஏகாம்பரம் தலைமையில் ஜெயங் கொண்டான், நாட்டுச்சேரி பகுதியில் சோதனை நடத்தினர்.  செங்கல் சூளைக்காக மண் திருடிய மூன்று டிராக்டர், பொக்லைன் இயந்திரம் பி...
தமிழகம்
அலுவலர்கள் பணிக்கு வராததால் தேனி கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை சரிசெய்ய நேற்று பணிநாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை அதிகாரிகள், அலுவலர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. கலெக்டரின் உத்தரவு காற்றில் பறந்தது. தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் மே 14 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட் டது. அதற்கு மாற்றாக மே...
தமிழகம்
ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு
தேனி:   தேனி பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள நாகர் ஹோட்டலில் கலெக் டர் முத்துவீரன் சோதனை நடத்திய போது நோயுற்ற ஆடு பறிமுதல் செய்யப் பட்டு கடைக்கு சீல் வைக்கப் பட்டது. ஆட்டை கால்நடை பராமரிப்பு நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததில் ஆடு சிகிச்சை பலனின்றி இறந்தது. இது குறித்து பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓட்டல் உரிமையாளர்...
தமிழகம்
வாலிபர்கள் மீது வழக்கு
பெரியகுளம்: பெரியகுளம், தாமரைக்குளம் பெரியார் தெருவை சேர்ந்த பெருமாள் மகள் சகுந்தலா(26). அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று மாலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணி, சத்தியமூர்த்தி ஆகியோர் சகுந்தலாவிற்கு பறக் கும் முத்தம் கொடுத்துள்ளனர். பின் மாலையில் அங்கு ...
தமிழகம்
தேக்குமரம் திருட்டு
தேனி: தேனி பொம்மையகவுண்டன்பட்டி டெலிபோன் நகரை சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன்(28). இவரது தோட்டம் சீனியங்குளம் பகுதியில் உள் ளது. தோட்டத்தில் இருந்த நான்கு தேக்கு மரங்களை இரவில் யாரோ வெட்டி திருடிச்சென்றனர். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகம்
ஓருவர் பலி
ஆண்டிபட்டி: பிச்சம்பட்டி சமத்துவபுரம் பகுதியைச்சேர்ந்தவர் செந்தில்குமார்(24). ஆசாரிபட்டியை சேர்ந்த கனகராஜ்(23), தெற்கு தெருவைச்சேர்ந்தவர் குபேந்திரன்(24) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பாலசமுத்திரம் சென்றனர். கனகராஜ் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென் றுள்ளார். ஹெல் மெட் அணியவில்லை. பாலசமுத்திரம் ரோடு  விவசாய பொறியியல் கட்டடம்...
தமிழகம்
பஸ்கள் மோதல்: 33 பேர் காயம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அரசு பஸ், தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 33 பேர் காயம் அடைந்தனர்.  தேனியில் இருந்து நேற்று முன்தினம் இரவு உசிலம்பட்டி வந்த அரசு பஸ்சும் மதுரையில் இருந்து தேனி சென்ற தனியார் பஸ்சும் எஸ்.எஸ் .புரம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. விபத்தில் பாலக் கோம் பையை சேர்ந்த சவுந்திரபாண்டி...
தமிழகம்
இருக்கன்குடி கோயில் இடம் யாருக்கு சொந்தம்: இரண்டு கிராம மக்களின் கருத்துகள் பதிவு
விருதுநகர்: சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் இடத்தை இரண்டு கிராம மக்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இரு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு அதிகாரிகள் பதிவு செய்தனர். சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் ஆடி மாத திருவிழாவிற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்...
தமிழகம்
பெண்ணை மொபைல் போனில் படம் எடுத்த பள்ளி செயலர் கைது
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மணிநகரம் 2வது தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (41). இவர் தனியார் பள்ளியில் செயலராக உள்ளார். நாச்சியார் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரமேஷ்பாபு மனைவி ஜெயமணி (36). இவர் லயன்ஸ் கிளப் மகளிர் பிரிவில் பொருளாளராக உள்ளார். இவர் மதுரை செல்வதற்காக அவர் வசிக்கும் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார். ...
தமிழகம்
உண்ணாவிரதம் வாபஸ்
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டியில் விசைத்தறி தொழிலாளர் கள் கூலி உயர்வு உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 5 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர்.  இதில்  அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டு பணிக்கு திரும்புவதாக அறிவித்தன. தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல் சத்தி...
தமிழகம்
உலக நுகர்வோர் தின விழா
சிவகாசி: சிவகாசி பவுல் ஆண்டனி பாரா மெடிக்கல் பெண்கள் கல்லூரியும், நுகர்வோர் பாதுகாப்பு சேவைமையமும் இணைந்து கல்லூரியில் நுகர்வோர் தின விழா நடத்தின. சிவகாசி ஆர்.டி.ஓ., கொம்பையன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ராணி வரவேற்றார். சேவை மைய தலைவர் சுப்பிரமணியன், விரிவுரையாளர்கள் சரவணகுமாரி, புனிதவதி பேசினர். களப்பணியாளர் கவ...
தமிழகம்
சிவகாசி பள்ளி சாதனை
சிவகாசி: சிவகாசி சுருதி வித்யோதயா ஐ.சி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி நான்கு பாடங்களில் கிரேடு 1 மதிப்பெண்  பெற்றும், குருபிரசாத் மூன்று பாடங்களிலும், ஸ்ரீராம், சில்பா தலா இரண்டு பாடங்களில் கிரேடு1 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை  தாளாளர்...
தமிழகம்
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவது எப்போது
நரிக்குடி: நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 900 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், விளையாட்டு உபகரணங்கள், ஆய்வகத்திலுள்ள வேதிப் பொருள்கள் உள்பட விலை உயர்ந்த பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி விசைத் தறி தொழிலாளர்கள், கூலி உயர்வு கேட்டு கடந்த 24 நாட்களாக வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி, சத்திரப்பட்டி மருத்துவதுணி உற்பத்தியாளர் சங்க கட்டடம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி தலைமை வகித்தார். மற்றும் பல க...
தமிழகம்
நோய் தடுப்பு நடவடிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., நகராட்சிகுட் பட்ட 33 வார்டுகளுக்கும் செண்பகதோப்பு பேயனாற்றிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.  இவ்வாறு வழங்கப்படும் குடிநீர் மூலம் மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் கலந்து வினியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு முழுமையான சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வழங்...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
சிவகாசி: சிவகாசி மாஸ்டர் பிரிண்டர்ஸ் சங்கத்தின் 2010 -2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆர்.பாபு சிதம்பரம், செயலாளராக ஏ.மாரிராஜன், பொருளாளராக ஏ.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவராக எஸ்.சேர்மராஜ், துணைச்செயலாளராக தர்மராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகம்
நலத்திட்ட உதவி வழங்கல்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிஜி தாமஸ், கணேசன் டி.ஆர்.ஓ, முன்னிலை வகித்தனர். 2.20 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கி னார்.
தமிழகம்
பயணிகளுக்கு செய்த உதவியை பஸ்களுக்கும் செய்தால் சுபம்: ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டின் மறுபக்கம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டில் பயணிகளுக்கு வசதியாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய நிலையில், பஸ்களுக்கு வசதியாக ஆக்கிரமித்துள்ள தள்ளுவண்டி கடைகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும். ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடுவதை பார்க்காத கண்கள் பாவம் செய்தவை. அந்த வகையில் புது பஸ்ஸ்டாண்டின் நிலை அந்தோ பரிதாபத்துக்குறியது....
தமிழகம்
பாலிதீன், பிளாஸ்டிக் பொருள் அழிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில்   பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கான தடையை அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதியில் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது மக்களிடம் குறைந்து வரும் நிலையில், ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ராமேஸ்வர...
தமிழகம்
திறக்கப்படாத ரேஷன் கடைகள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சில குறிப்பிட்ட நேரத்திற்கு திறப்பதில்லை. தாமதமாக திறந்து அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே அடைத்து விடுவது போன்ற நிலை இருந்ததால் ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தது. மாவட்ட உயர் அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து ராமேஸ்வரம் வட்ட ...
தமிழகம்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
சாயல்குடி:  சாயல்குடியை அடுத்த வாளம்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஞானகண்ணன் ஆர். டி. ஓ., தலைமையில் நடைபெற்றது. தாசில்தார்கள் காளிமுத்து, சமூகநல திட்ட தாசில்õர் சிவக்குமார், செவல்பட்டி ஊராட்சி தலைவர் முனியம்மாள் முன்னிலை வகித்தனர். ரெங்கராஜன்ஆர்.ஐ., , வட்ட வழங்கள் அதிகாரி பேச்சிமுத்து அயூப் வி.ஏ.ஓ.,மற்றும் பலர் ...
தமிழகம்
மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி
ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் டாக்டர் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய கிராம வள மையத்தில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த நிகழ்ச்சியை தங்கச்சிமடம் பாதிரியார் செங்கோல் வேதமாணிக்கம் துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் ஸ்ரீகிருபா, சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், சதக் இன...
தமிழகம்
அ.தி.மு.க.,வில் இருந்து முத்துசாமி நீக்கம்:ஜெ., அதிரடி
சென்னை:அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, கரூர் சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னாள் அமைச்சர் முத்துசாமி, தன்னை வளர்த்துவிட்ட கட்சிக்கு துரோகம் புரிந்து, சுயநலத்திற்காக தி.மு.க.,வில் போய் சேர திட்டமிட்டுள்ளார். மனக்கு...
தமிழகம்
பஸ் படிக்கட்டில் பயணித்தவர் பலி
பரமக்குடி: தஞ்சாவூர் திருவாடுதுறையை சேர்ந்தவர் முருகன்(35) . பரமக்குடி அடுத்த கச்சாத்தநல்லூரில் உள்ளமாமனார் இருளப்பன் வீட்டிற்கு, தனது குழந்தை காது குத்து விசேசத்திற்கு பாத்திரிக்கை கொடுக்க , தனியார் பஸ்சில் வந்துள் ளார். வளையனேந்தல் அருகில் வரும்போது படிக்கட்டில் பயணம் செய்ததால், நிலை தடுமாறி விழுந்தார். பரமக்குடி அரச...
தமிழகம்
முகாம் நிறைவு விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சீதிக்காதி விளையாட்டு அரங்கில் இருப்பிட பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. மண்டல உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத் முன் னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பால்சுதந்திரதாஸ் வரவேற்றார். பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் கவிதா சான்றிதழ்கள் வழங்கினார். கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீஸ்வரன், மாவட்ட ஹேண்...
தமிழகம்
ஏற்காடு கோடை விழாவில் குவிந்தனர் சுற்றுலா பயணிகள்
சேலம் : ஏற்காட்டில் நடந்து வரும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி, இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நேற்று, எட்டாயிரம் பேர் மலர் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 35வது கோடை விழா மலர் கண்காட்சி கடந்த 28ம் தேதி துவங்கியது. மலர் கண்காட்சியில், மிக்கி மவுஸ், நாட்டிய மங்கை, மயில், குதிரை போன்றவை மலர்க...
தமிழகம்
அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை:ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை கண்டித்து, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மருத்துவ அணித்தலைவர் மைத்ரேயன் எம்.பி., தலைமை தாங்கினார். அவர் பேசும்போது,"ஸ்பெக்ட்ரம் 3 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திரு...
தமிழகம்
2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,-பா.ம.க., கூட்டணி : முதல்வர் கருணாநிதி
சென்னை :  வரும் 2011ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., பா.ம.க., கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும், அதன் பின்னர் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.,வுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என்றும் மு‌தல்வர் கருணாநிதி கூறினார். கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பங்கேற்ற பா.ம.க., அக்கூட்டணியில் இருந்து...
தமிழகம்
முகம் கொடுத்து பேசவில்லையே...: முத்துசாமியின் ஆதங்கம்
அதிரடிக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத கட்சி அ.தி.மு.க., இக்கட்சியில் இருந்து பலரும் விலகியுள்ளனர். அப்படி விலகியர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பிய வரலாறும் உண்டு. ஆனால், இதுவரை விலகிச் செல்ல முயன்ற அதிருப்தியாளர்களுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை, முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு அ.தி.மு.க., தலைமை வழங்கி பரபரப்பை ஏற...
தமிழகம்
கோவில், கோவிலாக செல்லும் ஜெ.,: சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?
தி.மு.க., அரசின் ஆட்சிக் காலம், 2011ம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது. நான்காண்டு காலம் ஆட்சி முடிந்த நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்த ஆளுங்கட்சி தரப்பு தயாராக உள்ளதாகவும், செம்மொழி மாநாடு முடிந்ததும் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. அதற்கு முன்னதாக, மக்களை கவரும் வகையில், குடிசை வீடுகளுக்கு பதில...
இந்தியா
ஜெகன் மோகன் ரெட்டி கைது பல ரயில்கள் கால தாமதம்
ஐதராபாத் :ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டதையடுத்து பல ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட சில பாசஞ்சர் ரயில்கள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டன. செகந்திராபாத் - பல்லார்ஷா இடையே இயக்கப்படும் தெலுங்கானா எக்ஸ்பிரஸ் மற்றும் மஞ்சிர்யாலா எக்ஸ்பிரஸ் ரயில்கள், காஜிப்பேட்டை வரை இயக்க...
இந்தியா
ஐ.மு., கூட்டணி அரசின் கடந்த ஓராண்டு ஆட்சி : சாதனையா, வேதனையா?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று வெற்றிகரமாக ஓராண்டு முடிந்து விட்டது. பயங்கரவாத தாக்குதல், நக்சலைட் அட்டூழியம், விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை, எதிர்க்கட்சிகளின் போராட்டம், கூட்டணி கட்சிகளின் நெருக்கடி என்ற அனைத்து தடைகளையும் கடந்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது, மன்மோகன் ச...
தமிழகம்
சிக்கினான் திருடன் : ராஜபக்ஷேவுக்கு நன்றி தெரிவித்தார் காங்., எம்.எல்.ஏ.,
ராமநாதபுரம் : வீட்டில் பொருட்களைத் திருடிய திருடன் பிடிபட்டதற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு, காங்., எம்.எல்.ஏ., ஹசன் அலி நன்றி தெரிவித் துள்ளார். ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக காங்., கட்சியைச் சேர்ந்த ஹசன் அலி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன், கார் உட்பட பொருட்கள்...
தமிழகம்
துணை ஜனாதிபதிசென்னை வருகிறார்
சென்னை:இந்திய துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார்.டில்லியிலிருந்து நாளை மதியம், இந்திய விமான படை சிறப்பு விமானம் மூலம், சென்னை விமான நிலையம் வருகிறார். நேராக ராஜ்பவன் செல்லும் அமீது அன்சாரி, மாலை சென்னை பல்கலை.,யில் நடக்கும் விழாவில், முதல்வ...
இந்தியா
இழப்பீடு தர முன்வந்ததால் கற்பழிப்பு புகாரில் இருந்து விடுதலை?
புதுடில்லி : கற்பழிப்பு புகாரில் சிக்கிய டாக்டர், பாதிக்கப்பட்ட நர்சுக்கு 32 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முன்வந்ததால், அவர் மீதான கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது. காசியாபாத்தைச் சேர்ந்த பிரபல டாக்டர் பிரதீப் குப்தா. இவர் தன் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சை கற்பழித்தார். இதுதொடர்பாக, கா...
இந்தியா
ஐ.பி.எல்., அதிகாரமும் சூதாட்டமும்: உரத்த சிந்தனை, ஆர்.ரங்கராஜ் பாண்டே
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் விழுந்திருக்கின்றன. முதல் விக்கெட் உறுதியாகி விட்டது -சசி தரூர். அடுத்த விக்கெட், மூன்றாவது அம்பயரின் முடிவுக்காக காத்திருக்கிறது -லலித் மோடி. அது, "அவுட்' தானா இல்லையா என, நகத்தை கடித்தபடி, "டிவி' ஷோரூம் முன்னால் நிற்கும் ரசிகர்களைப் போல, ஆவலோடு காத்திருக்கிறது இந்தியா. மோடி என்ற பெயர் ...
இந்தியா
ராஜகோபுர இடிபாடுகளில் சிக்கி ஓட்டல் ஊழியர் பலி
நகரி : காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்தபோது, இடிபாடுகளில் சிக்கி ஓட்டல் தொழிலாளி ஒருவர் பலியானார். நெல்லூர் மாவட்டம் பெல்லகட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜா(40) என்பவர் காளஹஸ்தி ராஜகோபுரம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சமையலராக பணியாற்றி வந்தார். கடந்த 26 அன்று இரவு 8 மணிக்கு, ராஜகோபுரம் இடிந்து விழுவதற்கு முன் அவர் தனது கு...
தமிழகம்
மாற்றுத் திறனாளிகள் 72 பேருக்குஒரே நாளில் ஆசிரியர் பணி:முதல்வர் உத்தரவு
சென்னை:அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திய 72 மாற்றுத் திறனாளிகளை, ஒரே நாளில் பணி நியமனம் செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் 72 பேர், அரசு ஆரம்பப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி கேட்டு, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நட...
தமிழகம்
விபத்தில் ஏற்பட்ட ஊனத்திற்கு இழப்பீட்டு தொகை ஈடல்ல
புதுடில்லி : விபத்தில் பாதிக்கப்பட்டு, உடல் ஊனம் ஏற்பட்டவர்களுக்கு, இழப்பீட்டு தொகை எந்த விதத்திலும் ஈடாகாது என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர், விபத்தில் சிக்கியதால், இழப்பீடு கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 1.55 லட்ச ரூபாயை 7 சதவீத வட்டியுடன் தர வேண்டும் என...
தமிழகம்
ஐகோர்ட் உத்தரவை ஏற்க மறுப்பு : டி.ஜி.பி.,யிடம் புகார் மனு தாக்கல்
சென்னை : நடிகை ஸ்ரீபிரியாவின் கணவர் மீதான புகாரை பதிவு செய்து விசாரிக்குமாறு, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் நகல் அடங்கிய கடிதத்தை, காஞ்சிபுரம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வாங்க மறுப்பதாக, டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றுக்காடு கிராமத்தை சேர்ந்த ரஞ்சன் என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் ...
இந்தியா
108 அவசர ஊர்திக்கு வாகன வரி விலக்கு
ஐதராபாத் : மாநில அளவில், பொது மக்களின் அவசர உதவிக்கு சேவை புரிந்து வரும், 108 அவசர ஊர்திக்கு, ஆந்திர மாநில அரசு, வாகன வரி விலக்கு அளித்துள்ளது. இந்த ஆண்டு முதல், மூன்றாண்டு காலத்திற்கு, மாநிலத்திலுள்ள 108 அவசர ஊர்தி வாகனங்களுக்கு வரி செலுத்த தேவையில்லை. இந்த வரிவிலக்கு, 108 அவசர ஊர்தி வாகனங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட...
தமிழகம்
ஸ்ரீமுஷ்ணத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செ...
தமிழகம்
திருத்துறையூர் பள்ளி 83 சதவீதம் தேர்ச்சி
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் 83 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பத் தாம் வகுப்பு தேர்வு எழுதிய 169 மாணவ, மாணவிகளில் 140 பேர் தேர்ச்சி பெற்று 83 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். பள்ளி அளவில் மாணவன் பாரத் 500 மதிப்பெண்கள...
தமிழகம்
பத்திரக்கோட்டை பள்ளி 89 சதவீதம் தேர்ச்சி
நடுவீரப்பட்டு: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் பத்திரக்கோட்டை பள்ளி 89 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 183 பேர் தேர்வு எழுதினர். இதில் 122 மாணவ, மாணவிகள்  தேர்ச்சி பெற்றனர். மாணவி கெஜலட்சுமி 471 மதிப்பெண் பெற்று முதலிடமும், பாலசரஸ்வதி 458 பெற்று இரண்டாமிடத்தையும்,...
தமிழகம்
633 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் திட்டம்:முதல்வர் துவக்கி வைத்தார்
சென்னை:சென்னை நகரில், 633 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் அமைத்தல், சீரமைத்தல் திட்டப் பணிகளை, முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். இப்பணிகளை, மூன்று ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னை நகரில் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது, நகரின் பரவலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்...
இந்தியா
டி-ஷர்ட்டில் மராத்தி எழுத்துக்கள்: விரைவில் தமிழ், மலையாளம்
மும்பை : தேசபக்தியை வளர்க்கும் விதத்தில், ஆங்கில வாசகங்கள் பொறித்த டி-ஷர்ட்டுகளுக்குப் பதில், பிரபல மராத்தி மொழிக் கவிதைகள் பொறித்த டி-ஷர்ட்டுகளுக்கு, மகாராஷ்டிராவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. விரைவில் டி-ஷர்ட்டுகளில், தமிழும், மலையாளமும் இடம் பிடிக்க உள்ளன. இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருந்தாலும், பொது மொழி ஒன்றைத் ...
தமிழகம்
ரெட்டாக்குறிச்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம்
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த ரெட்டாக்குறிச்சி ஊராட்சியில் நீர்வள நிலவள திட்டம் (கோமுகி உபவடிநில பகுதி) மற்றும் மங்களூர் வட்டார கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால் நடைகளுக்கு மலடு நீக்க மருத்துவ முகாம் நடந்தது. விருத்தாசலம் கால் நடை உதவி இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் அய்யாசாமி, துணைத்தலைவர் ப...
தமிழகம்
குணமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
நெல்லிக்குப்பம்: குணமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த குணமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் விளக்கு பூஜை நடந்தது. காலை விநாயகர், பாலமுருகன், விஷ்ணு, துர்க்கை சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. மாலை நூற்றுக்கணக்கான பெண்கள் க...
தமிழகம்
நீதித்துறை ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்
கடலூர்: தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று கடலூர் செசன்ஸ் கோர்ட் வளாகத்தில் நடந்தது. முன்னாள் மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட் டத் தலைவர் குருநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவர்களாக ராஜா...
தமிழகம்
தம்பியை தாக்கிய அண்ணன் கைது
பரங்கிப்பேட்டை: தம்பியை பைப்பால் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர். புதுச்சத்திரம் அடுத்த சின்னாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (21). இவரது அண்ணன் காசிவிஸ்வநாதன். இருவருக்கும் சொத்து தகராறு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாண்டியன் தனது வீட்டு அருகே கைப்பம்பு போட பள்ளம் தோண்டினார். அப்போது அங்கு வந்த...
தமிழகம்
திடீர் தீ விபத்து: ரூ.10 ஆயிரம் சேதம்
திட்டக்குடி: திடீர் தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. திட்டக்குடி அடுத்த கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி அஞ்சலம். இவரது கூரை வீடு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மதனகோபால் தலைமையில் தீயணைப்பு படையினர் விர...
தமிழகம்
டிராக்டர் மோதி 4 பேர் காயம்
நடுவீரப்பட்டு; மினி லாரி மீது டிராக்டர் மோதியதில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் நடுவீரப்பட்டு சஞ்சீவிராயன் கோவில் கிராமத்தில் உள்ள தமது உறவினர் வீட்டு விசேஷத்தை முடித்துக் கொண்டு தனது உறவினர்களுடன் மினிலாரியில் கீழிருப்பு கிராமத்திற்கு ச...
தமிழகம்
கும்பாபிஷேகம்
கடலூர்: மேட்டுப்பாளையம் ஜி.ஆர்.கே., எஸ்டேட் ராசித் தோட்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடலூர் அடுத்த மேட் டுப்பாளையம் ராசித் தோட்டம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் கும் பாபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு நான் காம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு கடம்புறப்பாடாகி 10.10 மணிக...
தமிழகம்
ஆயுள் தண்டனை கைதி தலைமறைவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரைச் சேர்ந்த மாரி மகன் ரங்கநாதன்(42). இவருக்கு  கடந்த 2003ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண் டனை விதிக் கப்பட்டது. போலீசார் ரங் கநாதனை கைது செய்து கடலூர் மத் திய ...
தமிழகம்
ஓட்டல்களில் பயன்படுத்திய 121 சிலிண்டர்கள் பறிமுதல்
சிதம்பரம்: காஸ் சிலிண்டர் வினியோகத்தில் முறைகேடு நடப்பதாக வந்த புகார் களை தொடர்ந்து நேற்று மாவட்டத்தில் நடந்த அதிரடி சோதனையில் ஓட்டல் களில் பயன்படுத்திய 121 வீட்டு உபயோக சிலிண் டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் காஸ் ஏஜன்சிகள் வீட்டு உபயோக சிலிண்டர் வழங்குவதில் பல்வேறு முறைகேடு செய்வதாக தொடர் புகார்கள் வந்தன. ...
தமிழகம்
தங்கையை கடத்திய அண்ணன் சிக்கினார்
கடலூர்: தங்கையை கடத்திச் சென்ற அண்ணன் கேரளாவில்  பிடிபட்டார். கடலூர் பச்சையாங் குப்பத்தைச் சேர்ந்த மதிவாணன் மகள் அறிவுக்கரசி(24). எம்.பி.ஏ., படித்து வரும் இவர் கடந்த 27ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீசார், அறிவுக்கரசியின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசின...
தமிழகம்
வீடு, வீடாக மக்களை சந்திக்க பா.ஜ., செயற்குழுவில் யோசனை
அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத மதுரையில் கடந்த வாரம் பா.ஜ., மாநில செயற்குழு இரண்டு நாட்களாக கூடி பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தது. தேசிய அமைப்பு இணை செயலர் சதீஷ், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 260 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்...
தமிழகம்
மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படுமா?
மேட்டூர் : தென்மேற்கு பருவகாற்று சீசன் துவங்கியதாலும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில், மேட்டூர் அணையில் கூடுதல் நீர் இருப்பு உள்ளதாலும், ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படுமா? என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேட்டூர் அணை, மொத்த நீர் மட்டம் 120 அடி. நீர் இருப்பு 93.470 டி.எம்.சி., மேட்டூர் அணை நீரின்...
தமிழகம்
அரசு விரைவு பஸ் மோதி ஒருவர் பலி: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
ராமநத்தம்: ராமநத்தம் அருகே அடையாளம் தெரியாத அரசு விரைவு பஸ் மோதி ஒருவர் இறந்த சம்பவத்தை கண்டித்து நடந்த சாலை மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநத்தம் அடுத்த கல்லூரை சேர்ந்தவர் அய்யாகண்ணு (47). இவர் நேற்று மாலை டீ கடைக்கு செல்வதற்காக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க மு...
தமிழகம்
கடலூர் லட்சுமி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
கடலூர்: கடலூர் லட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள் ளது. கடலூர் துறைமுகம் சிவலிங்க முதலியார் தெருவில் உள்ள லட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில்  100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவர் கலைமணி 455 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ரகுராமன் 454 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்...
தமிழகம்
பதவிக்கு பணம்; தி.மு.க.,வினருடன் கூட்டு :தள்ளாட்டம் போடுகிறது திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க.,
திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க., புறநகர், மாநகர் என, கட்சி ரீதியாக இரு மாவட்டங்களாக செயல்பட்டு வருகின்றன. இதில், புறநகர் மாவட்டம் எப்போதும் அ.தி.மு.க.,வின் கோட்டையாக செயல்பட்டு வந்துள்ளது.மாநகர் தவிர, மாவட்டத்தின் மற்ற பகுதிகள் அனைத்தும் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், திருச்சி புறநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க....
தமிழகம்
பொறியியல் பயில்வதற்கு சலுகை: அமைச்சர் பொன்முடிக்கு பாராட்டு
செஞ்சி: செஞ்சி ஒன்றிய மற்றும் நகர தி.மு.க., செயற்குழு கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது.   கூட்டத்திற்கு நகர தலைவர் பார்சுதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், விஜயராக வன், மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் மஸ்தான் சிறப்புரை நிகழ்...
இந்தியா
சோனியாவின் வருகைக்கு எதிர்ப்பு: ஜம்முவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜம்மு:ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, ஒரு நாள் பயணமாக நேற்று காஷ்மீர் மாநிலம் சென்றார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹூரியத் மாநாட்டு அமைப்பினர் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.காங்கிரஸ் மற்றும் ஐக...
தமிழகம்
சித்தகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந் தது. விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.  ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள் பாலித்தார். அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று பகல் 12 மணிக்கு ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷே...
தமிழகம்
கோர்ட்டில் உத்தரவு பிறப்பித்த பிறகும் செஞ்சியில் தீராத போக்குவரத்து நெரிசல்
செஞ்சி: செஞ்சி காந்தி பஜாரில் நெரிசல் நேரத்தில் சரக்குகளை இறக்க கோர்ட் தடை விதித்தும், வழக்கம் போல் சரக்கு வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். பசுமைத்தாயக மாவட்ட அமைப்பாளர் வக்கீல் சக்திராஜன் செஞ்சியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு ...
தமிழகம்
பனப்பாக்கம் அய்யனாரப்பன் கோவிலில் நன்நீராட்டு விழா
செஞ்சி: பனப்பாக்கம் அய்யனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. செஞ்சி தாலுகா பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் தமிழ் முறைப்படி திருக்குட நன்நீராட்டு விழா நடந்தது. முன்னதாக கடந்த 26ம் தேதி காலை 6 மணிக்கு அய்ய னாரப்பன் சுவாமி கரிக்கோல ஊர்வலம் நடந்தது. கடந்த 27ம் தேதி காலை 8.30  மணிக்கு இரண்டாம் கால ...
தமிழகம்
ரயில்வே தொழிற் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் எஸ்.ஆர். எம்.யு., சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் மண்டல செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார்.  இதில் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள குறைபாடு களை நீக்க வேண்டும். ஊதியக்குழு பயன்களை உடனே வழங்க வேண்டும். காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். தொழிலாளர்களின...
General
குடியேற்ற விதிமுறைகளை இறுக்கியது ஹாங்காங்
ஹாங்காங்:கடந்த 2009, நவம்பரில் குடியேற்ற விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்ட பின், ஹாங்காங் அரசு, தன் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மீது கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்து வருகிறது.ஹாங்காங்கில், இப்போது 6,400 பேர் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாகக் கணக்கெடுக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோ...
தமிழகம்
பணி உயர்வு வழங்க வேண்டும்: ஊர் புற நூலகர்கள் கோரிக்கை
திண்டிவனம்: ஊர் புற நூலகர்களுக்கு பணி உயர்வு வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஊர் புற நூலகர்கள் சார்பில் திண்டிவனம், வானூர் தாலுகாக்களை சேர்ந்த ஊர் புற நூலகர்கள் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: மாவட்டம் முழுவதும் கடந்த 2005 ஆண்டு 680 பேர் ஊர் புற நூலகர்களாக பணியமர்த...