category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
லோடு ஆட்டோ கவிழ்ந்து 2 பெண்கள் பலி
தொண்டி : தொண்டி அருகே செங்காலன்வயலை சேர்ந்த 31 பெண்கள், மூன்று ஆண்கள் என 34 பேர், 100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்ற, லோடு ஆட்டோவில் விலக்கனேந்தல் சென்றனர். வேலை முடிந்து, மதியம் 1.30 மணியளவில் அதே ஆட்டோவில் வீடு திரும்பினர். கிழக்கு கடற்கரை ரோட்டில் சென்ற ஆட்டோ, பி.வி. பட்டினம் அருகே நிலை தடுமாறி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பாண்டியம்மாள் (35) பலியானார். காயம் அடைந்த மற்ற அனைவரும் தொண்டி மற்றும் ராமநாதபுரம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புஷ்பம் (55) இறந்தார். டிரைவர் முகமதுஉசேனை (26), தொண்டி இன்ஸ்பெக்டர் வரதராஜன் கைது செய்தார்.
தமிழகம்
லஞ்ச வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் இருவர் கைது
அமைந்தகரை: துப்புரவு பணியாளர்களிடம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் இருவரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். சென்னை அமைந்தகரை, செனாய் நகர், 67 வது வார்டு பகுதியிலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில், துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்கள், ரிஜிஸ்டரில் கையெழுத்திட வேண்டும். ரிஜிஸ்டரை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்ளும் மாநகராட்சி ஊழியர்கள், "ஆப்சென்ட்' போட்டு விடுவதாக பணியாளர்களை மிரட்டினர். இப்பிரச்னையிலிருந்து தப்பிக்க, மாதம் 200 முதல் 300 ரூபாய் வரை லஞ்சம் கேட்டனர். இத்தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பொன்னுச்சாமியின் கவனத்திற்கு சென்றது. இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, இமானுவேல் ஞானசேகர், அசோகன், ரஞ்சித்சிங் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. செனாய் நகரிலுள்ள மாநகராட்சி அலுவலகம் அருகே, நேற்று காலை 6 மணிக்கு தனிப்படை போலீசார் பதுங்கியிருந்தனர். மாநகராட்சி அலுவலக மேஸ்திரி நாதன் (53), மாநகராட்சி களப்பணியாளர் கரா வெங்கய்யா (56) ஆகிய இருவரும் ஊழியர்களிடமிருந்து, பணத்தை மிரட்டி வசூலித்து கொண்டிருந்தனர். தனிப்படை போலீசார் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் வசூலித்த லஞ்சம் தொகை 12 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.
தமிழகம்
தனியே வாழ்ந்த தம்பதியர் : மனம் வெறுத்து தற்கொலை
கரூர் : தனியே வாழ்ந்த வயதான தம்பதியர், மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்டனர். கரூர் அருகே சுக்காலியூரை சேர்ந்தவர் ராசப்பன்(70). இவரது மனைவி சின்னம்மாள்(65). இவர்களுடைய ஒரே மகன் துரைசாமி, மூன்றாண்டுக்கு முன் மாரடைப்பால் இறந்தார். ராசப்பனும், சின்னம்மாளும் சுக்காலியூரில் வசித்து வந்தனர். மருமகள் சாந்தி, அவ்வப்போது வந்து கவனித்துக் கொள்வார். தாங்கள் தனிமைப்பட்டுப் போனதாக மனம் வருந்திய நிலையில் இருந்த தம்பதியர், நேற்று முன்தினம் இரவு, தென்னை மரத்துக்குப் பயன்படுத்தும் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.
தமிழகம்
கை விலங்குடன் கைதி தப்பி ஓட்டம்
நாகர்கோவில் : பூதப்பாண்டி அருகே ஆண்டித்தோப்பை சேர்ந்தவர் சுந்தரேசன் (30). இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. 2007-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த அவரை, பூதப்பாண்டி போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கை நடத்தும் கொற்றிகோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டார். அதிகாலையில் சிறுநீர் கழிக்க போலீசாருடன் சென்ற அவர், கை விலங்குடன் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியா
மும்பை ரயில் டிரைவர்கள் ஸ்டிரைக் எதிரொலி : மார்க்சிஸ்ட், திரிணமுல் எம்.பி.,க்கள் அமளி
மும்பை புறநகர் ரயில் ஸ்டிரைக் குறித்த பிரச்னை, பார்லிமென்டின் அவை நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்து. இதனால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. இப்பிரச்னை தொடர்பான விவாதத்தின் போது மார்க்சிஸ்ட் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கு இடையில் வாய்வார்த்தைகள் முற்றி இரு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் ஒருவரையொருவர் அடிக்க பாய்ந்ததால் அவையே அதிர்ச்சியடைந்தது.மும்பையில் ஓடும் மின்சார ரயில்களின் டிரைவர்கள் (இவர்கள் மோட்டர் மென் என்றழைக்கப்படுகின்றனர்) தங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங் கினர். இதனால் அந்நகரமே ஸ்தம்பித்துப்போய் உள்ளது. இப்பிரச்னை, பார்லிமென்டிலும் நேற்று எதிரொலித்தது.அவை கூடியதும் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள முயன்றார். ஆனால் கேள்விநேரத்தை ரத்து செய்ய வேண்டுமென சிவசேனா எம்.பி., ஆனந்த்கீதே வலியுறுத்தினார். இதை சபாநாயகர் மறுக்கவே அவையில் அமளி கிளம்பியது. சிவசேனா எம்.பி.,க்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கை அருகே வந்து கோஷங்கள் போட ஆரம்பித்தவுடன் வேறு வழியின்றி அவை ஒருமணி நேரம் ஒத்திவைக்கப் பட்டது.பின்னர் அவை கூடியபோது, மும்பை ரயில் ஸ்டிரைக் பிரச்னை குறித்து பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.ஆனந்த்கீதே பேசும்போது, "1974ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய ரயில்வே ஸ்டிரைக் இது. ரயில் டிரைவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர்.மொத்தம் 65 லட்சம் பயணிகள் மும்பையில் நாள் ஒன்றுக்கு ரயில்களில் பயணிக்கின்றனர். அவர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கான ஊதியத்தைத்தான் கேட்கின்றனர். எனவே அதை அளிக்க அரசு முன்வரவேண்டும்' என்றார்.அதேபோல காங்கிரஸ் எம்.பி.,யான சஞ்சய் நிருபம், டிரைவர்கள் ஸ்டிரைக்கை ஆதரித்தார். பா.ஜ.,வைச் சேர்ந்த கோபிநாத் முண்டே, மார்க்சிஸ்ட் தரப்பில் பாசுதேவ் ஆச்சார்யா ஆகியோரும் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பேசிய குருதாஸ் தாஸ் குப்தா, "டிரைவர்கள் மீது எஸ்மா சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சட்டம் மிகவும் கொடூரமான சட்டம்' என்றார். இவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் பேசுகையில், "இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.எம்.பி.,க்களின் உணர்வுகள் கோல்கட்டாவில் உள்ள ரயில்வே அமைச்சர் மம்தாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளிக்கிறேன்' என்றார்.ஆனால், இம்முக்கிய பிரச்னையின் போது அமைச்சர் கோல்கட்டாவில் இருப்பதை பலரும் விமர்சித்தனர்.அதன்பிறகும் மார்க்சிஸ்ட் எம்.பி.,யான பாசுதேவ் ஆச்சார்யா எழுந்து ஏதோ பேச ஆரம்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சுதிப் பண்டோபாத்யா பேசினார். பாசுதேவ் ஆச்சார்யாவைப் பார்த்து வாயை மூடு என்று அவர் கூறியவுடன் மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் ஆத்திரமடைந்தனர். ராமச்சந்திர கோனே என்ற எம்.பி., மிகவும் கோபமடைந்து சுதிப்பை நோக்கி போக, திரிணமுல் எம்.பி.,க்களும் பதிலுக்கு எகிற அவை பரபரப்பு அடைந்தது.இரு தரப்பும் வெகுவாக முறுக்கிக் கொண்டு ஆவேசமாக வசை பாடினர். ஒருவரையொருவர் அடிக்கப்பாயும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் இடையில் இருந்த முலாயம், லாலு மற்றும் பிற கட்சி எம்.பி.,க்கள் சுவர் போல நின்றனர்.இதனால் இரு தரப்புக்கும் இடையில் நடக்கவிருந்த கைகலப்பு தவிர்க்கப்பட்டது. அவையின் நிலைமை மோசமடைவதை பார்த்த சபாநாயகர், மதியம் வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.மதியம் அவை கூடியதும், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மன்னிப்பு கேட்கவேண்டுமென மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் வாதிட்டனர். இதனால் மாலை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் மீரா குமார் ஒரு சமயத்தில், "அமைச்சர் மம்தா கோல்கட்டாவில் இருப்பதால் அவருக்கு பதிலாக மற்றொரு அமைச்சர் கருத்தைத் தெரிவிக்கலாம்' என்றார். முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பேசும் போது, "மம்தாவுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த விஷயத்திற்கு தீர்வு காண்பார், ஆகவே ரயில் டிரைவர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற வேண்டும்' என்றார்.இந்த ஆவேச விவாதத்தில், பங்கேற்று அதிக ஆவேசப்பட்ட பண்டோபாத்தியா என்ற திரிணமுல் எம்.பி., அப்படியே சீட்டில் அமர்ந்தபோது அவருக்கு உடனடியாக தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்தினர். ராஜ்யசபா: ராஜ்யசபாவிலும் இதே பிரச்னை கடுமையாக எதிரொலித்தது. ஜீரோ நேரத்தின்போது பா.ஜ., சிவசேனா எம்.பி.,க்கள் கடுமையாக இப்பிரச்னையை கிளப்பி கூச்சல் எழுப்பினர். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் எழுந்து, எம்.பி.,க்களின் உணர்வுகளை ரயில்வே அமைச்சரிடம் தெரிவித்து உரிய முறையில் தீர்வுகாண அரசு தயாராகவே உள்ளது என்று வாக்குறுதி அளித்தார். - நமது டில்லி நிருபர் -
தமிழகம்
குருவாயூரில் நாளை சண்டிகா ஹோமம்
குருவாயூர் : நாளையும், நாளை மறுநாளும் குருவாயூரில் சண்டிகா ஹோமம் நடத்தப்படுகிறது. இது கொல்லூரு மூகாம்பிகா கோவில் தலைமை அர்ச்சகர் தலைமையில் நடக்கிறது. குருவாயூரில் நாளை, நாளை மறுதினம் ஆகிய இரு நாட்கள் பிராமணர் சமுதாயத்தின் சார்பில், சண்டிகா ஹோமம் நடத்தப்படுகிறது. அங்குள்ள தெக்கே சமூக மடத்தில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், கொல்லூரு மூகாம்பிகை கோவில் தலைமை அர்ச்சகர் நரசிம்ம அடிகா முன்னிலை வகிக்கிறார். இத்தகவல்களை பிராமண சமூக செயலர் ஜி.கே.பிரகாஷ், ஆர். நாராயணன் ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழகம்
கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு : துவக்கி வைக்கிறார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்
சென்னை : கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைக்கிறார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில், வரும் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டை 23ம் தேதி காலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்து, தமிழக முதல்வர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள விருதை, பின்லாந்து நாட்டு அறிஞர் அஸ்கோபர்பலோவிற்கு வழங்குகிறார். மாநாட்டு பாடலை, முதல்வர் கருணாநிதி எழுத, அதற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவில், மாநாட்டு மலர் வெளியிடப்படுகிறது. மாநாட்டில் 47 நாடுகளில் இருந்து 7,000 தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள், தமிழ் படைப்புகள் வெளியிடப்படுகின்றன. இதில் 25 சதவீதம் வெளிநாட்டு அறிஞர்களின் படைப்புகளாகும். மாநாட்டை ஒட்டி கருத்தரங்குகள், ஆய்வரங்கம், உரையரங்கம், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், இலக்கியவாதிகள், கலை பிரமுகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மாநாட்டின் நிறைவு நாளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கென ஏற்கனவே கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் தமிழின் தொன்மையையும், சிறப்பையும் பறைசாற்றும் வகையில் இயல், இசை, நாடகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அத்துடன் பல்வேறு இலக்கிய, கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. அத்துடன் அலங்கார ஊர்தி ஊர்வலம், செம்மொழி தமிழ் கண்காட்சி, இணைய கருத்தரங்குகள், இணைய கண்காட்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் 2,500 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கோவையின் இதயப்பகுதியில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை போற்றும் வகையில், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரங்கள் அடங்கிய பூங்கா அமைக்கப்படுகிறது. மாநாட்டை ஒட்டி, கோவை நகரில் உள்கட்டமைப்பு மேம்பாடு செய்யப்பட்டுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம்
சிறு பனியன் உற்பத்தியாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சி
திருப்பூர் : நூல் விலை பெயரளவிற்கு குறைக்கப்பட்டிருந்தாலும், உற்பத்தி கட்டணத்தை குறைக்க வேண்டுமென, வெளிமாநில வர்த்தக பிரதிநிதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நூல் விலை ஏற்றத்தால், பாதிக்கப்பட்டுள்ள சிறுபனியன் உற்பத்தியாளர்கள் புதிய கோரிக்கையால் திகில் அடைந்துள்ளனர். திருப்பூர் பகுதியில், ஆயிரக்கணக்கான சிறு பனியன் உற்பத்தியாளர்கள் உள்ளனர். "பாபாசூட்', "கட்-ஸ்லீவ்',"லேடீஸ் டாப்',"டீ-சர்ட்', "ரிப்-நெக்', "பேண்ட்டீஸ்',"பர்முடாஸ்', உள்ளிட்ட ஆடைகள் தயாரித்து, வெளி மாநிலம், வெளியூர் ஜவுளி சந்தைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சிறுபனியன் மற்றும் இரண்டாம்தர ஆடைகளாக இருந்தாலும், அனைத்து வகையான மூலப்பொருட்களையும் பயன்படுத்தியாக வேண்டும். நூல் விலை ஏற்றத்தால் உற்பத்தி கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. "பேண்ட்டீஸ்' மற்றும் ஜட்டி தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் "எலாஸ்டிக்' விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பேக்கிங் மூலப்பொருட்கள் 15 சதவீதம் அளவிற்கும், கார்டன் அட்டைப்பெட்டி விலை 30 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. சாயக்கூலி உயர்வும் ஏற்கனவே அமலாகிவிட்டது. தையல் வேலைக்கு பயன்படுத்தும் நூல் விலையும் உயர்ந்துள்ளது. சாதாரணமாக 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட நூல்கோன், 75 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் விலை உயர்வால், சரக்கு வாகன வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு மூலப்பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால், உற்பத்தி செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், 10 சதவீத உற்பத்தி கட்டண உயர்வால், உற்பத்தி செலவுகளை முழுவதுமாக சமாளிக்க முடியாது. இருப்பினும், நஷ்டத்தை கணிசமாக குறைக்க முடியும். சலுகைகளை பறித்துள்ளதால், நூல் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என, உற்பத்தியாளர்கள் காத்திருந்தனர். கிலோவுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே குறைந்ததால், அனைவருமே ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும், வரும் மாதங்களில் விலை குறைய வாய்ப்பு இருக்குமா என்ற சிந்தனையில் சிக்கியுள்ளனர். நூல்விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருப்பது, இந்தியா முழுவதும் பரவியது. "நூல்விலை உயர்ந்ததால் உற்பத்தி கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது விலை குறைந்துள்ளதால், உற்பத்தி கட்டணத்தையும் குறைக்க வேண்டும்' என, வடமாநில வர்த்தக பிரதிநிதிகள் போர்க்கொடி தூக்கியிருப்பது, இங்குள்ள சிறுபனியன் உற்பத்தியாளர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. செகண்ட்ஸ் காலர் சர்ட் மற்றும் உள்ளாடைகள் சிறுதொழில் முனைவோர் சங்க (சிஸ்மா) பொதுசெயலாளர் பாபுஜி கூறியதாவது: சில மாதங்களில் கிலோவுக்கு 40 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்தது. பல்வேறு நடவடிக்கைக்கு பின், கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைந்துள்ளது; 30ம் நம்பர் நூலுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டது அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. நூல் விலை பெயரளவிற்கு குறைந்திருந்தாலும், நடைமுறைக்கு வர எவ்வளவு நாளாகும் என்பது தெரியாது. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, நூல் விலை குறைவதை தடுக்கவும் வாய்ப்பு உள்ளது. இதைக்காட்டிலும் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், கொல்கத்தா, உத்திரப்பிரதேசம், மும்பை, குஜராத் மாநில பார்ட்டிகள் சமீபத்தில் உயர்த்தப்பட்ட உற்பத்தி கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என்று நச்சரிக்கின்றனர். கடந்த மாதத்தில் தான் ஆர்டர்கள் உறுதிசெய்யப்பட்டு, உற்பத்தி துவங்கியுள்ளது. இந்நிலையில், புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது மேலும் சிரமத்தை அதிகரிக்கும். எனவே, இங்குள்ள தொழில்நிலை, உற்பத்தி செலவு, மூலப்பொருள் விலை உயர்வு உள்ளிட்ட விவரங்களை விளக்கி, அனைத்து பார்ட்டிகளுக்கும், விளக்க கடிதங்கள் அவசரமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழகம்
வாரணாசி - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் : சென்னை எழும்பூரில் துவங்கியது நேரடி இணைப்பு
சென்னை : புனித தலங்களான காசியையும், ராமேஸ்வரத்தையும் ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கும் வகையில் வாராணாசி - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் நேற்று முதல் எழும்பூரிலிருந்து விழுப்புரம் - மயிலாடுதுறை - திருச்சி - காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் போக்குவரத்து குறித்த அறிவிப்புகள் மக்களிடம் முழுவதுமாக சென்றடையாததால் இந்த ரயிலில் நேற்று எழும்பூரிலிருந்து மொத்தத்தில் 200 பேர் மட்டுமே பயணம் செய்தனர். வாரணாசி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாரணாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி முடிந்த பிறகு, இவ்வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, நேற்று முதல் சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வாரணாசி எக்ஸ்பிரஸ் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் (எண் :4260) வாரணாசியிலிருந்து (காசி) ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு செவ்வாய் கிழமை காலை 10.40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு விழுப்புரத்திற்கும், மாலை 3.03 மணிக்கு சிதம்பரத்திற்கும், மாலை 3.38 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சென்றடையும். அங்கிருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மாலை 4.48 மணிக்கு தஞ்சை சென்றடையும். அங்கிருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 6.05 மணிக்கும், காரைக்குடிக்கு இரவு 8.38 மணிக்கும் சென்றடையும். இந்த ரயில் மறுநாள் அதிகாலை 1.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்திலிருந்து புதன்கிழமைகளில் இயக்கப்படும் ரயில் (எண்.4259) இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வாரணாசி சென்றடையும். கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி ரயில்வே மூலம் விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பில் வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயில் மே மாதம் 2ம் தேதியிலிருந்து வாரணாசியிலிருந்து, ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இந்த ரயில் போக்குவரத்து குறித்து அறிவிப்பு ஏதும் இல்லை. எழும்பூர் ரயில் நிலையத்திலும் பயணிகளுக்கு தெரியும் வகையில் விளம்பர போர்டுகள் எதுவும் எழுதி வைக்கப்படவில்லை. இந்த ரயில் எழும்பூரிலிருந்து, ராமேஸ்வரத்திற்கு திட்டமிட்ட தேதியில் நீட்டிக்கப்படுமா என்றும் பயணிகள் குழம்பினர். இந்நிலையால், சென்னை எழும்பூரிலிருந்து நீட்டிக்கப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகமானோர் பயணம் செய்ய வரவில்லை. இந்த ரயிலில் பெட்டிகளில் "வாரணாசி - எழும்பூர்' என்று மட்டுமே பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. ராமேஸ்வரம் செல்வதாக எந்த பெட்டியிலும் எழுதி வைக்கப்படவில்லை. ரயில் இன்ஜின் பகுதியிலும் எந்த போர்டும் வைக்கப்படவில்லை. இந்நிலையால் நேற்று இந்த ரயில், பிளாட்பாரத்தில் நின்றிருந்த போதும் எங்கு செல்கிறது என்று தெரியாமல் பல பயணிகள், மற்ற பயணிகளிடம் விசாரித்தே இந்த ரயிலில் ஏறிப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்த ரயிலில் எழும்பூரிலிருந்து நேற்று மொத்தத்தில் 200 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.
தமிழகம்
முதல்வருக்கு காங்., பாராட்டு
சென்னை:திட்டக் கமிஷனிடம் இருந்து, தமிழகத்திற்கு 20 ஆயிரத்து 68 கோடி ரூபாய் பெற்றுள்ள முதல்வருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதர்சனம் பாராட்டு தெரிவித்தார்.சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் பேசும்போது, "தமிழக திட்டங்களுக்காக 20 ஆயிரத்து 68 கோடி ரூபாயை, திட்டக் கமிஷனிடம் இருந்து, வாதாடி முதல்வர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டை விட இது 2,600 கோடி ரூபாய் அதிகம்."இதற்கு அனுமதியளித்த பிரதமர், சோனியா, திட்டக்குழு துணைத் தலைவருக்கு நன்றியும், முதல்வருக்கு பாராட்டையும் தெரிவிக்கிறேன். தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால், 180 கோடி ரூபாயை மத்திய அரசு ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளது' என்றார்.
தமிழகம்
ஹஜ் விண்ணப்பம் தேதி நீட்டிப்பு
சென்னை : இந்த ஆண்டு ஹஜ் செல்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தேதி, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக ஹஜ் கமிட்டியின் உறுப்பினர் செயலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹஜ் 2010க்கான தற்காலிக விண்ணப்பங் களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை ஏப்ரல் 30ல் இருந்து மே 15 வரை, மத்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள முஸ்லிம் விண்ணப்பதாரர்கள், தேவையான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, பூர்த்தி செய்த விண்ணப்பங் களை, தமிழக மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள், ரோசி டவர், மூன்றாவது தளம், மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை), சென்னை-34 என்ற முகவரியில் இயங்கி வரும் ஹஜ் அலுவலகத்துக்கு வரும் 15ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். ஹஜ் நடைமுறைகளை இணையதளங்கள் மூலமும் அறிந்து கொள்ளலாம்.
தமிழகம்
பொறியியல் படிப்பிற்கு இரண்டு நாளில் 89 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை
சென்னை : பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு முதல் இரண்டு நாட்களில், 89 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் விற்பனையை, நேற்று முன்தினம் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் மன்னர் ஜவகர் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 58 மையங்களில் வழங்கப்படுகின்றன. முதல் நாளில் 63 ஆயிரத்து 800 பேர் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை பெற்றனர். நேற்றும், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை பெற மாணவர்கள் ஆர்வம் காட்டினர். நேற்று 24 ஆயிரத்து 803 விண்ணப் பங்கள் விற்பனையாகின. பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய முதல் இரண்டு நாட்களில், மொத்தம் 88 ஆயிரத்து 603 விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன.
தமிழகம்
நீல, பச்சை ரோஜா விலை ரூ.10
இடைப்பாடி : சேலம் மாவட்டம் இடைப்பாடியில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வண்ண ரோஜாக்கள், பெண்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. பூக்களில் மக்களின் மனதை கவர்ந்தது ரோஜா தான். இளம்பெண்கள் விரும்பி தலைக்கு சூடுவது ரோஜா பூக்களைத் தான். காதலர்கள் தங்களின் காதலிக்கு பரிசாக முதலில் கொடுப்பது ரோஜாவையே. மக்கள் மனதை கொள்ளை கொண்ட ரோஜாக்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ரோஸ், ஆரஞ்சு ஆகிய வண்ணங்களில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியால் பல வண்ணங்களில் ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வண்ண மலர்கள் தற்போது இடைப்பாடி பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமான கலர்களில் உள்ள பூக்களின் விலை இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை உள்ளது. புதிதாக வந்துள்ள நீல, பச்சை கலர் ரோஜாக்கள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. விலை சற்று கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை. தாங்கள் அணியும் புடவை கலருக்கு மேட்சான கலராக உள்ளதே என்று பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்து வாங்கிச் செல்கின்றனர்.
தமிழகம்
மத்திய பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை : பொது நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பம் வினியோகம்
திருவாரூர் : திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் மத்திய பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, துணைவேந்தர் சஞ்சய் தெரிவித்துள்ளார். திருவாரூர் மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் சஞ்சய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு முதல் துவக்கப்பட்டு, முதுகலை எம்.ஏ., ஆங்கிலம் வகுப்புகள் மட்டும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று பயின்று வருகின்றனர். மத்திய பல்கலைக் கழகங்களில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்கு 2010 -11ம் ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடை பெறும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், கர்நாடகா, காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 3ம் தேதி முதல் 27ம் தேதி வரை வினியோகம் செய்யப்படுகிறது. பொது நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் வெப்சைட் (www.cucet.ac.in
தமிழகம்
பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு
கூடலூர் : நீர்பிடிப்பு பகுதியில், பெய்து வரும் மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இரண்டு மாதங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடுமையான வெப்பம் காரணமாக நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து 108.4 அடிவரை சென்றது. இதனால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்த போதிலும் , நிலத்தில் நீர் உறிஞ்சப்பட்டு நீர்வரத்து மிகக்குறைவாகவே இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.20 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 185 க.அடி ஆக இருந்தது. குடிநீருக்கு மட்டும் தமிழகப்பகுதிக்கு 20 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 948 மில்லியன் க.அடியாக உள்ளது.
தமிழகம்
வறட்சியால் திராட்சை உற்பத்தி பாதிப்பு
தர்மபுரி : கடும் வறட்சி காரணமாக பச்சை திராட்சை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கடந்த காலங்களில் அதிகளவில் பச்சை திராட்சை சாகுபடி செய்யப்பட்டது. இங்கு உற்பத்தியாகும் திராட்சைகள், உள்ளூர் விற்பனைக்கு போக, ஆந்திர மாநிலம் ஐதராபாத், கேளர மாநிலம் கொச்சின், கர்நாடக மாநிலத்தில் உள்ள மது தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. பத்தாண்டாக இவ்விரு மாவட்டங்களிலும் திராட்சை சாகுபடி பரபரப்பு ஆண்டுக்கு, ஆண்டு குறைய துவங்கியதோடு, அதிக அளவில் "சீட்லெஸ்' பச்சை திராட்சைகள் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வரத்துவங்கியது. பச்சை திராட்சைக்கு கடந்த காலங்களில் சந்தையில் இருந்த வரவேற்பு குறைந்தது. இருப்பினும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட உள்ளூர் விற்பனை சந்தையை மையமாக வைத்து பல விவசாயிகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தாண்டு ஏப்ரலில் திராட்சை அறுவடை சீசன் துவங்கிய நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக திராட்சை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திராட்சை கொடிக்கு, நடவு செய்த ஒன்றரை ஆண்டுகளில் இருந்து, காய் அறுவடைக்கு ஆண்டுதோறும் இரு முறை நடக்கும். இதில், கோடை விற்பனை காலங்களான ஏப்., மே மாதங்கள் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரையில் அறுவடை கிடைக்கும். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, அரூர் ஆகிய தாலுகா பகுதியில் அதிக அளவில் பச்சை திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு கடந்த பிப்ரவரியில் இருந்து கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்ட நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. வறட்சியால் திராட்சை கொடிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல், திராட்சை காய்கள் வெயிலுக்கு கொடிகளில் பழுத்து விரைவில் உதிர்ந்து விடுகின்றது. திராட்சை உற்பத்தி 80 சதவீதம் பாதிப்படைந்துள்ளதால், தர்மபுரி பாலக்கோடு விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். பச்சை திராட்சை சாகுபடியில் இருந்த பல விவசாயிகள் பன்னீர் திராட்சைக்கு மாற முடிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டங்களில் இருந்து பன்னீர் திராட்சை கொடி நாற்றுக்களை வாங்கி வந்து நடவு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
தமிழகம்
கத்திச்சண்டை விளையாட்டிற்கு சென்னையில் சிறப்பு பயிற்சி
திண்டுக்கல் : கத்திச்சண்டை உள்பட ஏழு விளையாட்டுகளுக்கான ஆறு வார பயிற்சி, சென்னையில் மே 17ல் துவங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால், கத்திச்சண்டை, ஹாக்கி, டென்னிஸ் விளையாட்டுகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆறு வாரங்களுக்கு நடைபெறும் இப்பயிற்சியில், 25 முதல் 40 வயதிற்குட்பட்டோர், பங்கேற்கலாம். பிளஸ் 2 முடித்து, இரண்டு ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களும், உடற்கல்வியில் பட்டம் பெற்று(பி.பி.எட்., எம்.பி.எட்.,) இரண்டு ஆண்டுகள் பல்கலை., அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உடற்கல்வி ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பயிற்சிக்கான கட்டணம் ஏழாயிரத்து 500.தேர்வாகும் நபர்களுக்கு, இக்கட்டணத்தில் ஐந்தாயிரம் ரூபாயை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செலுத்தும். எஞ்சிய இரண்டாயிரத்து 500 ரூபாயை மட்டும் விண்ணப்பதாரர்கள் செலுத்தி பயிற்சி பெறலாம். இப்பயிற்சி வகுப்புகள் மே 17ல் துவங்கி, ஜூன் 30 வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை, அனைத்து மாவட்ட விளையாட்டு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 250 ரூபாய்க்கான (பதிவுக்கட்டணம்) டி.டி.,யுடன் அனுப்ப வேண்டும். மே 10 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
தமிழகம்
தமிழகத்தில் 200 பள்ளிகள் தரம் உயர்வு : கட்டமைப்புக்கு ரூ.114 கோடி ஒதுக்கீடு
விருதுநகர் : அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 200 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டு, கட்டமைப்பு வசதிக்காக 114 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டம் இந்த கல்வியாண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள இடைநிற்றல் மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு இடைநிலைக்கல்வி வழங்க, இத்திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 200 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது, மக்கள் பங்களிப்பு தொகையாக அரசுக்கு ஒரு லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பள்ளிகளுக்கு, இத்தொகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளுக்கு தலா 57.12 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகையில் புதிய வகுப்பறை, நூலகம், ஆய்வுக்கூடம், கம்ப்யூட்டர் மையம் கட்டப்பட உள்ளன. இப்பணிகளை பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு செயல்படுத்தும். பட்டதாரி ஆசிரியர்கள்: நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சிலிங் மூலம் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், மற்றும் அறிவியலுக்கு இரண்டு ஆசிரியர்கள், சமூக அறிவியல், கம்ப்யூட்டர் ஆசிரியர், சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் என ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
இந்தியா
மம்தா மீது புகார்: காங்., பதில்
புதுடில்லி:மும்பை ரயில் ஸ்டிரைக் விவகாரத்தில், அமைச்சர் மம்தா பானர்ஜி சரியாகவே செயல்பட்டுள்ளார் என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.மும்பை புறநகர் ரயில் களின் டிரைவர்கள் ஸ்டிரைக் விவகாரம் நேற்று பார்லியில் எதிரொலித்தது. ஸ்டிரைக் நடைபெறும் காலகட்டத்தில் துறை அமைச்சர் மம்தா பானர்ஜி லோக்சபாவுக்கு வராதது குறித்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து காங்., செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், "ரயில் டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட விவகாரத்தை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சரியாகவே கையாண்டுள்ளார். அவரது செயல்பாடு எங்களுக்கு திருப்தி தரும் விதத்தில் உள்ளது. அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டது' என்றார்.
General
பார்லிமென்ட் வந்தார் பொன்சேகா
கொழும்பு:இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ராணுவ கோர்ட்டில் தனக்கு எதிரான விசாரணையின் போது நேற்று நேரில் ஆஜராகவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி பொன்சேகாவுக்கு ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ராணுவ பணியில் இருந்தபோது சட்ட விரோத ஆயுத பேரம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ராணுவ கோர்ட்டில் நடக்கிறது. நேற்றும் விசாரணை நடந்தது. ஆனால், சரத் பொன்சேகா கோர்ட்டில் ஆஜராகவில்லை. தற்போது அவர் எம்.பி.,யாக உள்ளதால், பார்லிமென்டுக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்து. இதனால், வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து விளக்கம் அளிக்கும்படி பொன்சேகாவுக்கு ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொன்சேகா வக்கீல் கூறுகையில்,"பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யாவிடம், கடிதம் வாயிலாக அனுமதி கோரப்பட்டது. பொன்சேகா மீதான வழக்கை விசாரிக்கும் ராணுவ கோர்ட்டுக்கு, முறையான அலுவலகம் எதுவும் இல்லை. இதனால், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நேரடியாக கோர்ட்டில் அனுமதி கேட்க முடியவில்லை' என்றார்.
General
நியூயார்க்கில் கார் குண்டு வைத்த பாகிஸ்தானியர் கைது
நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் தியேட்டர்கள் மற்றும் கடைகள் அதிகம் உள்ளன. வார இறுதி நாள் என்பதால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கார் குண்டை வெடிக்க செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.கடந்த 1ம் தேதி இங்குள்ள தியேட்டர் அருகே கார் ஒன்று அனாதையாக நின்றுக் கொண்டிருந்தது. இந்த காரில் இருந்து புகை வந்ததால் உஷாரடைந்த போலீசார், உள்ளே குண்டு இருப்பதை கண்டுபிடித்து செயலிழக்க செய்தனர்.இந்த காரின் உரிமையாளரை தேடிய போது மூன்று வாரங்களுக்கு முன் பாகிஸ்தானியர் ஒருவர் இந்த நிசான் காரை வாங்கியது தெரிந்தது. கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த படங்களை போலீசார் பார்த்த போது, பைசல் ஷன்சாத் என்ற நபர் இங்கு காரை நிறுத்தியது தெரிந்தது. உடனடியாக அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதற்குள் ஷன்சாத், துபாய் விமானத்தில் தப்பிக்க விமான நிலையத்துக்கு அவசரமாக சென்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.ஷன்சாத்(30) பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். சமீபத்தில் அவர் பாகிஸ்தான் சென்று திரும்பியுள்ளார். அமெரிக்க மக்களை கொல்லும் நோக்கில் அவர் காரில் குண்டு வைத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மான்ஹாட்டன் கோர்ட்டில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். பாக்., ஒத்துழைப்பு: பாகிஸ்தானில் பிறந்த ஷன்சாத்திற்கு தலிபான் தொடர்பு இருக்கிறதா அல்லது மற்ற விவரங்கள் தேவைப்பட்டால், அதைத் தர தயார் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இஸ்லாமாபாத்தில் நேற்று தெரிவித்தார்.பயங்கரவாதத்தை ஒழிக்கும் போரில் அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படும் நாடு என்பதால், தாங்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தரத்தயார் என்று அறிவித்தார்.
General
உலகின் மூத்த பெண் மரணம்
டோக்கியோ:உலகின் மூத்த வயதுக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்த ஜப்பானைச் சேர்ந்த பெண்மணியான காமா சினேன் மரணமடைந்தார்.ஜப்பான், ஒகினாவா பகுதியைச் சேர்ந்தவர் காமா சினேன்; இவருக்கு வயது 114 ஆண்டுகள் 357 நாட்கள் என கின்னஸ் புத்தகம் தெரிவித்துள்ளது. இந்த தள்ளாத வயதில், அதுவும் சர்க்கர நாற்காலியில் அமர்ந்து காலத்தை கழித்த சினேனுக்கு எதிலுமே வெறுப்பு இன்றி, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இருந்தது. இயற்கை அழகை ரசிப்பது, வாழ்க்கையை விருப்பு வெறுப்பின்றி அப்படியே ஏற்றுக் கொள்ளும் தன்மை அவரிடம் காணப்பட்ட அரிய குணங்கள். வெளிப்புற உலகையும் மிகவும் நேசித்து வந்தவர், கடந்த 2ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து, உலகின் மிகவும் வயதானவர் என்ற இடத்தில் தற்போது ஜப்பானைச் சேர்ந்த சியானோ ஹசேகாவா என்பவர் இடம்பிடித்து உள்ளார். இவருக்கு 113 வயது ஆகிறது. இவர் தான் ஜப்பானின் தற்போதைய மூத்த மனிதர்.உலகிலேயே ஜப்பானில் தான் மனிதர்களது சராசரி வாழ்நாள் அதிகரித்து உள்ளது. காமா சினேன் வாழ்ந்து வந்த ஒகினாவாவில் நிலவிய இதமான சீதோஷ்ண நிலை மற்றும் அவரது உணவுப் பழக்கம் தான் அவர் 114 ஆண்டுகள் வரை வாழ காரணம் என, ஜப்பானியர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். காமா சினேனுக்கு முன், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெர்ட்ருட் பெயினஸ் என்ற பெண் தான் உலகின் மிகவும் மூத்த மனிதர் என்ற பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
General
ஷாங்காய் சர்வதேச கண்காட்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள்
ஷாங்காய்:சீனாவின், ஷாங்காய் நகரில் நடக்க உள்ள சர்வதேச பொருட் கண்காட்சிக்கு பார்வையாளர்களை ஈர்க்க, பாலிவுட் நட்சத்திரங்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.சீனாவின் முக்கிய வர்த்தக நகரான ஷாங்காயில்,சர்வதேச பொருட் கண்காட்சி நடக்க உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய, முற்றிலும் மூங்கிலால் கட்டப்படும் கூரையின் கீழ் இக்கண்காட்சி நடக்கிறது.கண்காட்சியில், இந்தியா சார்பில் பிரமாண்ட அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய வர்த்தக மேம்பாட்டுக் கழக தலைவர் சுபாஷ் பானி, இது குறித்து கூறியதாவது:கண்காட்சியில், பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். நடிகை பிரியங்கா சோப்ரா, சீனாவில் நன்கு அறிமுகம் ஆனவர். சீன நிறுவனம் ஒன்று, அவரை கண்காட்சிக்கு வருமாறு அழைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மனைவி டோனா, 12 பேர் அடங்கிய குழுவாக, சீன கண்காட்சியில், ஒடிசி நடனம் ஆடுகிறார். இந்நிகழ்ச்சி, வரும் 11ந் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது. சீனாவில், ஆசியா ஸ்கொயரில் நடக்கும் இரண்டு நிகழ்ச்சிகளிலும், டோனா பங்கேற்கிறார். ஒரே நேரத்தில் 18 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரங்கில் 40 பேர் கொண்ட குழுவினர் இந்தி பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இங்கு அமைந்துள்ள இந்திய அரங்கம், முற்றிலும் இயற்கையான பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு, பசுமை அரங்கம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்திய அரங்கின் ஒரு பகுதியில், பாலிவுட் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு சுபாஷ் பானி கூறினார்.
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் பேச்சு: கோதுமை, நெல் போன்ற உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. அதனால், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு ஒரு வருடம் வரை உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா பேச்சு: தற்போதுள்ள உள்துறை அமைச்சகத்தை மூன்று அமைச்சகங்களாகப் பிரிக்க வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஒரு அமைச்சகத்தையும், போலீஸ் மற்றும் பார்லிமென்டிற்கு தனி அமைச்சகத்தையும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்னைகளைக் கவனிக்க, தனி அமைச்சகத்தையும் உருவாக்க வேண்டும். உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி பேச்சு: மாநில அரசு, எந்த சந்தர்ப்பத்திலும் கிரிமினல் குற்றவாளிகளுடன் சமரசம் செய்து கொள்ளாது. எதிர்க்கட்சிகள், கிரிமினல் குற்றவாளிகளுடன் சேர்ந்து கொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி வருகின்றன. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி : காப்பீட்டுத் திட்டம், கலர், "டிவி' என்று மாநில அரசு தன் கட்சியின் பெயர் தெரியும் வகையில், நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஏதோ மாநில அரசு தான் எல்லா நலத் திட்ட உதவிகளையும் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆந்திர முதல்வர் ரோசய்யா பேட்டி: மாநிலங்களிடையே உள்ள நதிநீர் பிரச்னை, புதிதாக ஏற்பட்டது அல்ல; நீண்டகாலமாக இருப்பது தான்.  இதில், மத்திய அரசை குறை கூற எதுவும் இல்லை. ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் பேச்சு: அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அது நிறைவேறாத கனவு என்றும் சொல்ல முடியாது. அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்திற்கு, என் பதவிக் காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறேன். மறுமலர்ச்சி வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குபேந்திர குணபாலன் அறிக்கை: பார்லிமென்ட் மறந்த கட்சியாக பா.ம.க., ஆன பின், ராமதாஸ், வன்னியர் சமுதாயம் நினைவு வந்து வன்னியர் இட ஒதுக்கீடு என்ற ஆயுதத்தை எடுத்துள்ளார். இது, "வன்னியர் இனத்தை பாதுகாக்கவா அல்லது வன்னியர்களை வழக்குகளில் சிக்க வைக்கவா' என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ரெஜிஸ் குமார் அறிக்கை: வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்திய மண்ணில் அனுமதிப்பது தேச நலன்களுக்கு விரோதமானது. ஏற்கனவே, கல்வி வியாபாரத்தால், ஏழை மக்களுக்கு உயர்கல்வி கனவாக உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு, பல்கலைக் கழகங்கள் கல்வி வியாபாரத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
இந்தியா
சொல்கிறார்கள்
கல்லூரிப் பாடம் வாழ்க்கைக்கு  பயன்படுகிறது : சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோதவாடி என்ற குக்கிராமம் தான் என் சொந்த ஊர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், படித்தேன். பின் பிளஸ் 2 வரை தமிழ் மொழி வழிக் கல்வியிலேயே பயின் றேன். இன்று என் சிந்தனைகளுக்கு தாய் மொழிக் கல்வியே காரணம். இருந்தாலும் ஆங்கிலத்தை ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற தீராத வேட்கை, எனக்குள் எப்போதும் இருந்தது. அதானல் கல்லூரி வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங் களை நான் ஆங்கிலம் கற்கச் செலவிட்டேன்.தமிழில் இரண்டு அல்லது மூன்று செய்தித் தாள்களைப் படித்துவிட்டு, பின் இந்தி, ஆங்கில நாளிதழ்களில் வரும் செய்திகளைப் பார்த்து பின் இரண்டையும் ஒப்புமைப்படுத்திக் கொள்வேன்.கல்லூரியில் படிக் கும் போது எப்போதும் புத்தகமும் கையுமாகத் தான் இருந் தேன். ஏன் எனில், படிப்பது  எனக்கு மிகப் பிடித்தமான விஷயம். பெரும் பாலும், நூலகத்தில் இருப்பேன். என் பேராசிரியர் பழனிச் சாமி எனக்கு எப்போதும் உதவியாக இருப்பார்.கல்லூரிப் பாடங்களில் விருப்பப்பாடம் என்றிருக்கும்  ராடர் பற்றி எல்லாரும் படிப் பர். ஆனால், அது குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின், ராடர் பற்றி படிக்க ஆர்வமில்லை. மைக்ரோ டெக்னாலஜியை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். ஐந்து பேர் இருந்தால் தான் அதைப் படிக்க முடியும் என்றனர்; நண்பர் கள் இணைத்து சேர்ந் தேன். எங்களால் சொல்லித் தர முடியாது என்றனர்."நானே சொல்லித் தருகிறேன்' என்று, சக மாணவர்களுக்கு வகுப்பெடுத்தேன். விருப்பப் பாடத்தை நானே உருவாக்கிப் படிப்பதற்கு என் தேடல் தான் காரணம். இப்படி பல விஷயங்களை, என் கல்லூரிக்காலம் எனக்கு கற்றுக் கொடுத் தது. அது தான் இன்று என் வாழ்க்கைக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியா
இது உங்கள் இடம்
வேறு என்ன செய்வர்?வி.சுந்தரவரதன், எஸ்.பி., (ஓய்வு), வளசரவாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் டெண்டர் விண்ணப்பம் அளிக்க வந்த கான்ட்ராக்டரை, அரசியல் கட்சி பகுதி செயலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓட ஓட விரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கான்ட்ராக்ட் எடுப்பதில் ஏற்பட்ட போட்டா போட்டியால் இம்மோதல் நடந்திருக்கும்.போலீசார் முன் நடந்த இந்த தாக்குதலை, தடுக்க முடியாமல் அவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். தாக்கப்பட் டவருக்கு கண், மூக்கு, முகம் உள் ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.சில ஆண்டுகளாக ஆளும் கட்சி அரசியல்வாதிகளே, அரசாங்கம், நகராட்சி மற்றும் அனைத்து டெண்டர்களை எடுத்து, கட்டட வேலை செய்கின்றனர். ஆளும் கட்சி என்பதால், அவர்கள் தரமான கட்டட பொருட்களை உபயோகிக்கின்றனரா என்று இன்ஜினியர்கள் கவனிக்க முடியாமல் தத்தளிக்கின்றனர். அரசு பணிகள் முழுமையாக முடிவதற்கு முன்பே, இம்மாதிரிப் பணிகள், கோவையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள் போல், பைசா நகர சாய்ந்த கோபுரம் போல்,  எந்நேரமும் தரையில் விழுந்து முத்தமிட பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.உண்மையான தொழில் ரீதியான கான்ட்ராக்டர்களிடம் இப்பணியை ஒப்படைத்தால், கட்டடம், ரோடு போடும் போதே அரசு இன்ஜினியர் தக்க மேற்பார்வையிட்டு, தரமான கட்டடங்கள் உருவாக்கலாம். ஏழைகள் வரிப்பணத்தில் அரசு கட்டடங்கள் உருவாகின்றன என்பதை, அரசியல் கட்சிகள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.ஆகவே, கான்ட்ராக்ட் எடுப்பதில் நடந்த மோதலின் போது, காவலர்கள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வி எழ நியாயமில்லை.சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள், காவல் நிலையத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவமும்; சுப்ரீம் கோர்ட் நீதிபதி, முதல்வர், காவல்துறை உயர் அதிகாரிகள் முன், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, வக்கீல்கள் மோதலில் ஈடுபட்ட போது, அனைத்து அதிகாரிகளும் கைகட்டி நின்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சம்பவங்கள் உள்ளன.ஆகவே, திருச்சி போலீஸ்காரர்கள் மனதில், பச்சை பசு மரத்தில் அடித்த ஆணி போல் இச்சம்பவங்கள் மனதில் நின்றதால், செயலற்று நின்றனர் என்றே கருதலாம். வேறு நாடானால் கல்லடி உண்டு! ரா.தங்கசாமி, அகஸ்தியர் பட்டி அஞ்சல், நெல்லையிலிருந்து எழுதுகிறார்: சுப்ரீம் கோர்ட் தனக்குள்ள "விசேஷ' அதிகாரத்தை பயன்படுத்தி, கைது செய்துள்ள கேதன் தேசாய் மீதுள்ள குற்றச் சாட்டுகள் அனைத் தையும் விசாரணை செய்ய, தனி விசாரணைக் குழுவை நியமித்து கண்காணிக்க வேண்டும்.நிச்சயமாக கேதன் தேசாய், அளவுக்கதிகமான தங்க நகைகளை, கடைக்கு சென்று வாங்கி இருக்கவே முடியாது. மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் பெற பலர் கொடுத்த நகைகள் தான் அவை.போலியான ஆவணங்கள் மூலம், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது; அங்கீகாரம் பெறுவதற்கான தேதி முடிந்த பின்னரும், பல மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கேட்டு பெற்று, 25 முதல் 35 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்று, முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது; மக்களின் உயிர்களோடு விளையாடியது என இவை அனைத்தும் மன்னிக்கவே முடியாத குற்றங்கள். வேறு நாடாக இருந்தால் கல்லெறிதான் கிடைக்கும்.நம் நாட்டிலுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டப் படி, இத்தகைய குற்றச் செயல்களுக்கு தூக்கு தண் டனை கிடையாது. எனவே, நம் சட்டத்தின் ஓட்டை, உடைசல், சந்து, பொந்துகளில் நுழைந்து குற்றச்செயல் புரிந்தவர்கள்,  தப்பிக்கவோ அல்லது வழக்கை 15 முதல் 20 ஆண்டுகள் வரை இழுத்தடிக்கவோ முடியும்.இவ்வளவு பெரிய ஊழல் புரையோடிய பிறகும், சந்தி சிரித்த பிறகும், மருத்துவத்துறையை கையாளும் அரசியல்வாதிகளும், மற்றவர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பதை பார்த்தால், ஏதோ மர்மம் புதைந்து கிடப்பதை காண முடிகிறது.எனவே, குற்றச் செயலின் தன்மையும், உயிர் காக்கும் மருத்துவத்துறையின் வருங்கால நன்மையையும், நாட்டின் மானத்தையும் கருத்தில் கொண்டு, இந்திய அரசியலமைப்பின், "காவலனாக' உள்ள சுப்ரீம் கோர்ட், சி.பி.ஐ., நீதிமன்றத்திலுள்ள வழக்கை தானாகவே கேட்டுப் பெற்று, முழு விசாரணையையும் தன் கண்காணிப்பில் கொண்டு வரலாம்."விரைவு நீதிமன்றம்' அமைத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே தண்டிக்க வேண்டும். நாடு முன்னேற நேர்மையான, திறமையான, நடுநிலையான அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே தேவை. நினைவில்லையோ?ஆர்.வி.நாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில், ஆளும் - எதிர்க்கட்சிகளின் விவாதம் அனல் பறந்தாலும், எதிர்க் கட்சியினர் ஒன்றை மறந்து விட்டனர்...  பொதுமக்களோடு பயணித்த கக்கன் ஜியை போல்  யாருமே இன்று இல்லை; இருந்திருந்தால், லோக்சபா தேர்தல் நேரத்தில், ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் அனைத்து பஸ்களிலும் ஒரே கட்டணம் வசூலித்து, அதற்கடுத்த நாட்களில் ஏற் றிய கட்டணம் இன்று வரை குறைக்கப்படவில்லையே, என, ஏன் கேட்கவில்லை? உண்மையான சுதந்திரம்! கே.சரோஜா, சரவணப்பட்டி, கோவையிலிருந்து எழுதுகிறார்: கருத்து சொல்லும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் ஆகிய மூன்றும், நமது அரசியல் சாசனம், மக்களுக்கு வழங்கி உள்ள அடிப்படை உரிமைகள்.இதில் அரசு தலையிட்டால், அது அதிகார துஷ்பிரயோகம், அராஜகம். தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி. அதை தி.மு.க., உறுப்பினர்கள், வாங்கிப் படிக்க வேண்டியது கட்டாயம்; கட்சி கட்டுப்பாடு. அதேபோல, நமது எம்.ஜி.ஆர்., என்ற நாளிதழ் அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வமான நாளேடு. ஒருவர் அ.தி.மு.க.,வில் சேர விரும்பினால், அந்த பத்திரிகைக்கு சந்தா கட்ட வேண்டும்.பல தொலைக்காட்சி சேனல்கள் இருந்தாலும், பெரும்பாலும் அவை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சொந்தமானவை. அவற்றால் நடுநிலை வகிக்க முடியாது. சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறை, ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்ட சம்பவம் போன்றவற்றை, அந்த சேனல்கள் படம் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளன; அவை அழிக்க முடியாத சாட்சியங்கள்.சில பத்திரிகைகள் மட்டுமே, அரசியல் குறைபாடுகளை மக்களிடம் கொண்டு செல்கின்றன. இதனால், பத்திரிகைகளும் கூட பயமுறுத்தப்படுகின்றன. அதையும் மீறி, பத்திரிகைகள் பல விவரங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது, தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.எமர்ஜென்சி காலத்தில், பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை இருந்தது. அப்போது பல பத்திரிகைகள், அரசால் தடுக்கப்பட்ட செய்திகளுக்கு பதில், வெற்றிடமாக வெளியிடுவது அல்லது கருப்பு நிறத்தை அச்சடிப்பது போன்ற முறைகளைப் பின்பற்றின."பத்திரிகையை பார்த்துதான், பிரபாகரனின் தாயார் திருப்பி அனுப்பப்பட்டார் என தெரிந்து கொண்டேன்' என்று முதல்வர் கருணாநிதியே கூறுகிறார். இன்று பத்திரிகைகள் மட்டுமே, ஜனநாயகத்தின் குரலாக இருந்து வருகின்றன.
தமிழகம்
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் ரத்தா ?
மதுரை : இலவச சைக்கிள் பெற்ற மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப் பட்டுள்ளதா என அரசு கேள்வி கேட்டுள்ளதால், பாஸ் வழங்குவதை ரத்து செய்வது குறித்து போக்குவரத்து கழகங்கள் ஆலோசித்து வருகின்றன. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.  இதற்கான ஈட்டுத்தொகையை அரசிடம் போக்குவரத்து கழகங்கள் பெற்றுக் கொள்கின்றன. ஆனால் 2006-07, 2008-09ம் ஆண்டிற்கான தொகை தரப்படாமல் நிலுவையில் உள்ளது. இத்தொகையை பரிசீலிக்கும் பைலில், நிதித் துறை சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் போக்குவரத்து தலைமை அலுவலகம், அனைத்து கோட்ட அலுவலகங்களுக்கும் நேற்று மாலை இமெயில் மூலம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், இலவச சைக்கிள் வாங்கிய மாணவர்களுக்கும் பாஸ் வழங்கப்பட்டுள்ளதா, புதிய தடங்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட தடங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளதா, அதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டதா என கேட்கப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், எச்சரிக்கை கருதி, மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து போக்குவரத்து கழகங்கள் ஆலோசித்து வருகின்றன.
General
கார் வெடிகுண்டு சதி ஆசாமி ஷசாத்: பாக்., தொடர்பை ஒப்புக் கொண்டான்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்த ஷசாத், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளான். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 1ம் தேதி, இங்குள்ள தியேட்டர் அருகே கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. இந்த காரில் இருந்து புகை வந்ததால் உஷாரடைந்த போலீசார், உள்ளே குண்டு இருப்பதை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர். இந்த காரின் உரிமையாளரை தேடிய போது மூன்று வாரங்களுக்கு முன், பாகிஸ்தானியர் ஒருவர் இந்த நிசான் காரை வாங்கியது தெரிந்தது. கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த படங்களை போலீசார் பார்த்த போது, பைசல் ஷசாத் என்ற நபர் இங்கு காரை நிறுத்தியது தெரிந்தது. உடனடியாக அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதற்குள் ஷசாத், துபாய் விமானத்தில் தப்பிக்க விமான நிலையத்துக்கு அவசரமாக சென்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஷசாத்(30) பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவன். இவருடைய தந்தை பாகிஸ்தான் விமானப்படை துணைத் தளபதியாக இருந்தவர். பாகிஸ்தானின் வாசிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாத பயிற்சி பெற்றதையும், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்ததையும் எப்.பி.ஐ., அதிகாரிகளிடம் ஷசாத் ஒப்புக்கொண்டுள்ளான். அமெரிக்க மக்களை கொல்லும் நோக்கில் அவன் காரில் குண்டு வைத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மன்ஹாட்டன் கோர்ட்டில் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 7 பேர் கைது: அமெரிக்காவில் கைதான ஷசாத்திடம் விசாரணை நடைபெற்று வரும் வேலையில், அவருடன் தொடர்புடைய ஏழு பேர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். "டைம் சதுக்கத்தில் குண்டு வைத்த ஷசாத் தன்னிச்சையாக செயல்பட்டிருக்க முடியாது; அவருக்கு பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது' என, அமெரிக்க எம்.பி., பீட்டர் கிங் தெரிவித்துள்ளார். "சர்வதேச அளவில் பின்னப்பட்ட சதி வலை தான், டைம்ஸ் சதுக்க குண்டுக்கு வழிவகுத்துள்ளது' என, மற்றொரு எம்.பி., ஸ்டீவ் இஸ்ரேல் தெரிவித்துள்ளார். அமெரிக்க புலனாய்வு வல்லுனர் லிசா கர்டிஸ் குறிப்பிடுகையில், "ஷசாத் பாகிஸ்தானில் ஐந்து மாதம் தங்கி பயங்கரவாத பயிற்சி பெற்றுள்ளான். டேவிட் கோல்மேன் ஹெட்லியைத் தொடர்ந்து ஷசாத்தும் பாகிஸ்தானை சேர்ந்தவனாக உள்ளான். எனவே, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.
தமிழகம்
தமிழகத்தில் மேலவை அமைய 18 மாதங்களாகும்
தமிழகத்தில் மேலவை அமைக் கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துவிட்டது. சட்ட அமைச்சர் மொய்லி, ராஜ்யசபாவில், மேலவை அமைவதற்கான  மசோதாவை நேற்று அறிமுகம் செய்தார் . பின்பு சபையால்  நிறைவேற்றப்பட்டது .இன்றோ, நாளையோ லோக்சபாவிலும் அரசால் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர் பல்வேறு சம்பிரதாய நடவடிக்கைகள் முடிந்து மேலவை அமைந்து செயல்பட ஒண்ணரை ஆண்டுகளாகும் என்று கூறப்படுகிறது.மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழகத்தில் மேலவை அமைப்பது குறித்து விவாதித்து இறுதியில் ஒப்புதல் அளிக்கப் பட்டது.முன்னதாக இதுகுறித்து பேசும்போது அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன் ஆகிய இருவரும் தமிழகத்தில் மேலவை அமைவதற்கு ஆதரித்து பேசினர். இருப்பினும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி மட்டும் சில விஷயங்களை குறிப்பிட்டு பேசியதாக தெரிகிறது."மாநில அரசை அந்தந்த மாநில கட்சிகள் தான் ஆளுகின்றன. மேலவையை கொண்டு வருவதும் பின் னர் அதை நீக்குவதும் என அவரவர் விருப்பம்போல செயல்படுகின்றன. தங்களது அரசியல் திட்டத்திற்காக இதுபோன்று செயல்படுகின்றன."எனவே, நினைத்தால் மேலவை அமைப்பது; நினைத்தால் நீக்குவது என்ற நிலையை மாற்ற வேண்டும். இதற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்' என்று தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மேலவை அமைவதற்கான முடிவுக்கு பார்லிமென்டின் ஒப்புதலையும் பெற வேண்டும். அதனடிப்படையில், சட்ட அமைச்சர்  மொய்லி இதற்கான மசோதாவை ராஜ்யசபாவில் நேற்று அறிமுகம் செய்தார்.அறிமுக நிலையிலேயே  அ.தி. மு.க., எம்.பி., மைத்ரேயன்  எதிர்த்து பேசுகையில், "நாடு முழுவதும் உள்ள 28  மாநிலங்களில்  ஆறு மாநிலங்களில் மட்டுமே மேலவை இருக் கிறது. நாங்கள் இதை எதிர்க்கிறோம்' என்றார்.  பின்பு மசோதா ராஜ்யசபாவில்  நிறைவேற்றப்பட்டது.பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. எனவே, தமிழக மேலவை குறித்த சட்ட மசோதா இன்றோ அல்லதுநாளையோ  லோக்சபாவில் வைக்கப் பட்டு நிறைவேற்றப்படலாம் என்று உறுதியாக தெரிகிறது. நமது டில்லி நிருபர்
தமிழகம்
சிறையில் ஆன்மிக புத்தகம்படிக்கிறார் நித்யானந்தா
பெங்களூரு :சி.ஐ.டி., போலீசாரின் எட்டு நாள் போலீஸ் காவலுக்கு பின், சாமியார் நித்யானந்தா, சிறையில் ஜெபமாலையுடன், தியானம், பூஜைகள் செய்தபடி காலம் கழித்து வருகிறார்.நித்யானந்தாவும், அவருடன் கைது செய்யப்பட்ட சீடர் நித்ய பக்தானந்தாவும் ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளனர். நித்யானந்தா, பெரும்பாலான நேரங்களை ஆன் மிக புத்தகங்கள் படிப்பதிலேயே செலவு செய்கிறார். பின், தியானம், தவத்தில் மூழ்கிவிடுகிறார்.நித்யானந்தாவுக்கு சேவை செய்வதிலேயே அதிக நேரத்தை பக்தானந்தா செலவிடுகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம், புத்தகத்தில் மூழ்கிவிடுகிறார்.20க்கு 20 என்ற அளவுள்ள அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியே வர விருப்பம் தெரிவிக்காத நித்யானந்தா, எந்த நேரமும் தரை விரிப்பு மீது அமர்ந்து, தியானத்தில் ஈடுபட் டுள்ளார்.நித்யானந்தா உடல் நிலையில் போலீசார் கூடுதல் அக்கறை மேற்கொண்டுள்ளனர். ராம் நகர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், நித்யா னந்தாவை அடிக்கடி பரிசோதித்து வருகின் றனர். ரத்த அழுத்தத்தை சோதித்து வரும் டாக்டர்கள், நித்யானந்தா ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.தினமும் ஆங்கில பத்திரிகைகளை படிக் கிறார். அவரது அறையின் முன், 24 மணி நேரமும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் காவலில் உள்ளார்.சிறைச்சாலையில் உள்ள மற்ற விசாரணை கைதிகள், நித்யானந்தாவை பார்ப்பதில் ஆர்வ மாக உள்ளனர். ஆனால், நித்யானந்தாவின் அறைக்கு அருகில் சிறைச்சாலை அதிகாரிகள் தவிர, வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்தியா
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறுத்தகாங்கிரஸ், பா.ஜ., எம்.பி.,க்கள் மனு
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் காங்கிரஸ், பா.ஜ., எம்.பி.,க்கள் மனு அளித்தனர்.பிரதமர் மன்மோகன் சிங்கை பார்லிமென்டில் உள்ள அவரது அலுவலகத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் நேற்று சந்தித்தனர்.திரும நாராயணன் என்ற காங்கிரஸ் எம்.பி., மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த அனந்தகுமார் தலைமையில் இரு கட்சிகளின் எம்.பி.,க்களும் பிரதமரிடம் மனு அளித்தனர்.அதில், "தமிழக அரசு 400 கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கலில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையாக நிறைவேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தமிழக, கர்நாடக மாநில எல்லைகள் இன்னும் இப்பகுதியில் நிர்ணயம் செய்யப்படவில்லை."சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் என்பதே இன்னும் இரு மாநிலங்களுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பகுதி. மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டில் மத்திய நீர்வளக்கமிஷன் பரிந்துரையின்படி, 1.4 டி.எம்.சி., அளவு தண்ணீர் தான் எடுக்க வேண்டுமென்று உள்ளது."ஆனால் தமிழகமோ கூடுதலாக 2.4 டி.எம்.சி., தண்ணீர் வரை உறிஞ்சுகிறது. பிற பாசன திட்டங்களுக்கும் பயன்படுத்துகிறது. எனவே, பிரதமர் உடனடியாக தலையிட்டு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.மனுவைப் பெற்றுக் கொண்ட பிரதமர், உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.   நமது டில்லி நிருபர் -
இந்தியா
ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் மோதல்
ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்துவது குறித்து மத்திய அமைச்சரவையில் காரசாரமான கருத்து மோதல்கள் எழுந்தன. பெரும்பாலான அமைச்சர்கள், ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு என்பது அவசியம் என வலியுறுத்தினர். இதனால், மீண்டும் மற்றுமொரு முறை கூடி பேச பிரதமர் முடிவெடுத்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் டில்லியில் நடைபெற்றது. அதில், ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போது, நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரமும் எடுத்தாக வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. பா.ஜ., உட்பட பல்வேறு கட்சிகளும் இதை ஆதரிக்கின்றன. ஆனால், தற்போது துவக்கப்பட்ட  மக்கள் தொகை கணக்கில் இதை சேர்க்க முடியாது என்ற கருத்தை ஏற்கனவே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து அறிக்கையை உள்துறை அமைச்சர் சிதம்பரம் சமர்ப்பித்தார். அதில், "ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பை நடத்துவதில் சிரமம் உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து மற்றொரு மாநிலம் வந்துள்ளவர்கள், தங்களது ஜாதியை குறிப்பிடுவதில் சிக்கல் உள்ளது. பீகாரில் இருந்து தமிழகம் வந்து தங்கி வேலை செய்வோர், தங்களை தமிழகத்தில் எந்த ஜாதி என்று குறிப்பிட முடியும். தவிர, பிற்படுத்தப்பட்டோர் யார் யார் என்பதை முடிவு செய்ய பிற்படுத்தப்பட்டோர் நலக்கமிஷன் போன்றவை உள்ளன. இருப்பினும், இவ்விஷயத்தில் முறையான வழிகாட்டுதலை மத்திய அமைச்சரவை வழங்கிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. அமைச்சர் மொய்லியும், ராஜாவும் மட்டுமே ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று வாதிட்டனர். மொய்லி பேசும் போது, "இந்த கணக்கெடுப்பு அரசாங்கத்திற்கு மிகவும் தேவை. யார் யார் எந்த வகுப்புகளின் கீழ் உள்ளனர் என்பது தெரிந்துவிடும். பிற்படுத்தப்பட்ட மக்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலேயே நீடிக்கச் செய்வதா அல்லது அவர்கள் முன்னேறியவுடன் முற்படுத்தப்பட்ட வகுப்புக்கு மாற்றுவதா என்றெல்லாம் முடிவெடுக்க வேண்டுமெனில், இந்த கணக்கெடுப்பு அவசியம் தேவை' என்றார். அமைச்சர் ராஜா பேசும் போது, "உள்துறை அமைச்சரின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. யாரெல்லாம் கிறிஸ்துவராக, இஸ்லாமியராக, பவுத்தராக, பார்சியாக இல்லையோ அவர்கள் எல்லாமே இந்து தான் என்கிறது இந்து மத சட்டம். அப்படியானால், ஒருவர் இந்துவாக பிறந்து விட்டாலே அவருக்கு ஜாதி வந்து விடுகிறது. ஜாதியே இல்லையென்று ஆகிவிடாத நிலையில், அதை அரசாங்கம் குறிப்பெடுத்து தான் ஆக வேண்டும். ஜாதி இல்லை என்பது ஒரு மாயை தானே தவிர அது தான் நிஜம் என்பது அல்ல.தவிர, எந்தெந்த ஜாதிகள் பிற்பட்ட வகுப்பில் வருகின்றன என்பது போன்ற வேலைகளை செய்வது தான் பிற்பட்டோர் நலக்கமிஷன் போன்றவற்றின் வேலை. இந்த ஜாதிகளை இந்த வகுப்புக்குள் கொண்டு வருவது என்பது அரசியல் ரீதியிலான முடிவு. இதற்கும், ஜாதி கணக்கெடுப்புக்கும் சம்பந்தம் இல்லை. தற்போது எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஒரு வீட்டில் கார் உள்ளதா, பாத்ரூம் உள்ளதா என்றெல்லாம் கேட்கப்படுகிறது. இவை மாறக்கூடியவை. மாறாதது ஜாதி மட்டும் தான்.இதை கணக்கெடுப்பது, மற்றவற்றைக் காட்டிலும் அவசியம். இட ஒதுக்கீட்டுக்கும், ஜாதி கணக்கெடுப்பிற்கும் சம்பந்தம் இல்லை' என்றார். ஜெய்பால் ரெட்டி பேசும் போது, "உள்துறை அமைச்சர் தந்துள்ள அறிக்கை மிகவும் தொழில்நுட்பத்துடன் உள்ளது. நடைமுறையை பிரதிபலிக்கவில்லை' என்றார். அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் ஜாதி வாரியான கணக்கெடுப்பை ஆதரித்துப் பேசினர். அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் பவன்குமார் பன்சால் ஆகிய இருவர் மட்டுமே எதிர்த்துப் பேசியதாக தெரிகிறது. கூட்டத்தின் முடிவில் பேசிய பிரதமர், இவ்விஷயம் குறித்து இன்னும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. எனவே, இதற்கென மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நேற்று அமைச்சர் பரூக் அப்துல்லா  தன் பேட்டியில், "அமைச்சரவையில் பெரிய அளவில் காரசார விவாதம் இல்லை. இத்தடவை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி பேசியதை விட, அடுத்த தடவை என்னவெல்லாம் செய்யலாம் என்ற கருத்து எழுந்தது' என்று சமாளித்தார் . -நமது டில்லி நிருபர்-
General
ஆறுமுக தொண்டமான் மந்திரி: இலங்கை மந்திரி சபை விஸ்தரிப்பு
கொழும்பு: இலங்கை அமைச்சரவை நேற்று விரிவாக்கப்பட்டது. ஆறுமுக தொண்டமான் உள்ளிட்ட நான்கு பேர் கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த மாதம் 23ம் தேதி 37 காபினட் அமைச்சர்களும், 39 துணை அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் நேற்று மேலும் நான்கு பேர் காபினட் அமைச்சர்களாகவும், ஆறு பேர் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். எதிர்க்கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சிக்கு வந்த திசநாயகேவுக்கு கல்வி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆறுமுக தொண்டமானுக்கு கால்நடைத் துறையும் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் இலங்கை அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. அதிபர் ராஜபக்சேவின் கடந்த ஆட்சியிலும் 109 அமைச்சர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
General
பொன்சேகா உண்ணாவிரதம்
கொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும் தற்போதைய எம்.பி.,யுமான சரத் பொன்சேகா, பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க படாததால் உண்ணாவிரத போராட்டம் துவக்கியுள்ளார். இலங்கை ராணுவ தளபதியாக இருந்த பொன்சேகா, அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் அவர் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை அரசை கவிழ்க்க சதி செய்தது மற்றும் புலிகளுடன் சண்டை நடந்த போது வெளிநாட்டில் ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடு செய்தது உள்ளிட்ட இரண்டு வழக்குகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்குகள், இரண்டு ராணுவ கோர்ட்டுகளில் நடைபெற்று வருகின்றன. சரத் பொன்சேகா தற்போது ராணுவ காவலில் உள்ளார். நேற்று இரண்டாவது வழக்கு தொடர்பாக பொன்சேகா, கோர்ட்டில் ஆஜரானார். பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சிறை வைக்கப்பட்டுள்ள கடற்படை தலைமையகத்திலேயே அவர் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார்.
இந்தியா
எம்.பி.,க்களின் சர்ச்சை பேச்சால் சபைகள் ஒத்திவைப்பு: மம்தா கட்சி எம்.பி.,க்கு சபாநாயகர் கண்டனம்
புதுடில்லி: திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால், நேற்று லோக்சபாவும், ராஜ்ய சபாவும் பல முறை ஒத்தி வைக்கப்பட்டன. திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சுதிப் பந்தோபாத்யாயாவுக்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார். மும்பையில் ரயில் பணியாளர்கள் நடத்திய ஸ்டிரைக் விவகாரம், நேற்று முன்தினம் லோக்சபாவில் எதிரொலித்தது. அப்போது, "வேலை நிறுத்தத்தை தடுக்கத் தவறிய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, உடனடியாக சபைக்கு வந்து பதிலளிக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கட்சியைச் பாசுதேவ் ஆச்சார்யா கோரிக்கை விடுத்தார்.  உடன், திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சுதிப் பந்தோபாத்யாயா, ஆச்சார்யாவைப் பார்த்து ஏதோ கூற, சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. திரிணமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி எம்.பி.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. "திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., பந்தோபாத்யாயா மன்னிப்பு கேட்க வேண்டும்' என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், சபை நடவடிக்கைகள் முடங்கின. பின்னர் இது தொடர்பாக பேசிய பந்தோபாத்யாயா, ""இந்த விவகாரத்தில் சபாநாயகர் என்ன உத்தரவிட்டாலும், அதை ஏற்க தயாராக இருக்கிறேன்; தகாத வார்த்தைகள் எதையும் நான் பேசவில்லை. நான் தகாத வார்த்தைகளை பேசியிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால், சபையில் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்,'' என்றார். இந்நிலையில், நேற்று காலை லோக்சபா கூடியதும், இந்த விவகாரம் எழுந்தது. "தகாத வார்த்தைகள் கூறிய, சுதிப் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்' என, இடதுசாரி எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். இதற்கு அவர் பதிலாக, "நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க முடியாது' என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால், சபை இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின் சபை கூடியபோது சபாநாயகர் மீரா குமார், ""சுதிப் பந்தோபாத்யாயா பயன்படுத்திய வார்த்தையும், அவர் நடந்து கொண்ட விதமும், இந்த சபையின் உறுப்பினர் செய்யக் கூடியது அல்லது இது போன்ற நடவடிக்கைகளை நான் ஏற்க மாட்டேன். இது போன்ற சூழ்நிலை மீண்டும் ஒரு முறை உருவாக, வேறு எந்த உறுப்பினரும் இடம் தர மாட்டார்கள் என நம்புகிறேன். அவர் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்,'' என்றார். அவைத் தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி, ""இதுபோன்ற நிகழ்வுகள் இனி ஒரு முறை நடக்கக்கூடாது. கோபம் தலைக்கேறும் போது, நம்மை நாமே இழந்து விடுகிறோம். நானே பல முறை இந்த சபையில் மன்னிப்பு கேட்டுள்ளேன். சபாநாயகர் கண்டனம் தெரிவித்து விட்டதால், பந்தோபாத்யாயா விவகாரத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்,'' என்றார். இதையடுத்து, பிரச்னையை கைவிடும்படியும், "மறப்போம்; மன்னிப்போம்' கொள்கையை பின்பற்றும்படியும் பாசுதேவ் ஆச்சார்யாவை, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், முலாயம் சிங், லாலு பிரசாத் யாதவ், குருதாஸ் தாஸ் குப்தா, அர்ஜுன் சரண் சேத்தி மற்றும் பல உறுப்பினர்கள் வேண்டினர். உடன், பிரச்னை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக ஆச்சார்யா அறிவித்தார். மதியம் 2 மணிக்கு மேல் சபை சுமூகமாக நடக்கத் துவங்கியது. ஆனாலும், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. லாலு மோதல்: ஆச்சார்யா விவகாரம் முடிந்து சபை சுமூகமாக நடந்த போது, ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக் கெடுப்பு தொடர்பாக பேசிய பா.ஜ., அனந்தகுமார், ""வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடிபெயர்வோர் தங்களை இந்திய குடிமக்களாக பதிவு செய்து கொள் கின்றனர். அவர்களால் உள்நாட்டில் குழப்பம் உண்டாகிறது,'' என்றார். அப்போது, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு ஏதோ கூற முற்பட, "நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா அல்லது பாகிஸ்தானில் அல்லது வங்கதேசத்தில் இருக்கிறீர்களா?' என, அனந்தகுமார் காட்டமாகக் கூறினார். உடன் லாலு, ""நீங்கள் அடிக்கடி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் பற்றியே பேசுகிறீர்கள்; பின்தங்கிய வகுப்பினர் பிரச்னை பற்றி பேசுவதில்லை,'' என்றார். இதனால், லாலு - அனந்தகுமார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடன், சபை 45 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோது, லாலு கட்சியைச் சேர்ந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், சபையின் மையத்திற்கு சென்று, "லாலுவைப் பற்றி விமர்சித்த அனந்தகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.லோக்சபா முட்டுக்கட்டை தொடர்ச்சி. உடன், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சரத் யாதவ், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் ஆகியோரும், "லாலுவுக்கு எதிராக தகாத வார்த்தைகள் கூறப்பட்டிருந்தால், அது துரதிருஷ்டமானது' என்றனர். அப்போது சபையை நடத்திக் கொண்டிருந்த தம்பிதுரை, ""தகாத கருத்துக்கள் கூறப்பட்டிருந்தால், அது சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும்,'' என்றார். சபாநாயகரின் இந்த அறிவிப்பில் திருப்தி அடையாத ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள், லாலுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதில், உற்சாகமடைந்த லாலு எழுந்து நின்று, "வாயை மூடு, வாயை மூடு' என, அனந்தகுமாரை நோக்கி கத்தினார். லாலு கட்சியைச் சேர்ந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங்கும் சபையின் மையத்திற்கு சென்று, "பா.ஜ., தலைவர் மன்னிப்பு கேட்கும் வரை சபையை நடத்த விட மாட்டோம்' என்றார். ஆனால், அனந்தகுமாரோ, "மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை' என்றார். உடன், சபாநாயகர் இருக்கையில் இருந்த  தம்பிதுரை, சபை நடவடிக்கைகளை ஒரு மணி நேரத்திற்கு ஒத்தி வைத்தார். மீண்டும் சபை கூடிய போது அமளி தொடரவே, சபை நடவடிக்கைகள் நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டன. மணிசங்கர் பேச்சு: ராஜ்ய சபாவிலும் இரண்டு நாட்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிசங்கர் அய்யர், பா.ஜ., தலைவர் அருண் ஜெட்லி பற்றி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக அமளி ஏற்பட்டது. உடன், ராஜ்ய சபா தலைவர் ரகுமான் கான், ""உறுப்பினர் ஒருவரை யாராவது புண்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்பதில் தவறில்லை' என்றார். இதையடுத்து, மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்டார். இருந்தாலும், இந்த விவகாரத்தால், ராஜ்ய சபாவும் நேற்று இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தியா
லோக்சபா தேர்தலில் முறைகேடு: 3 ஆண்டுகளுக்கு போட்டியிட தடை?
புதுடில்லி: கேரளாவில் மூவாற்றுப்புழா லோக்சபா தொகுதியிலிருந்து கேரள காங்கிரஸ்(ஜெ) சார்பில் எம்.பி.,யாக தாமஸ் போட்டியிட்டு வென்றது செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து அவரை மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ, ஓட்டு போடவோ கூடாது என தடை விதிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன், ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது. கேரள மாநிலம் மூவாற்றுப்புழா தொகுதியில் 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கேரள காங்கிரஸ்(ஜெ) கட்சி சார்பில் பி.சி.தாமஸ் என்பவரும், இடதுசாரி முன்னணி சார்பில் பி.எம்.இஸ்மாயில் என்பவரும் போட்டியிட்டனர். இதில் மிக குறைந்த ஓட்டு (529 ஓட்டுகள்) வித்தியாசத்தில் தாமஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அவர் மதரீதியாக ஓட்டு சேகரித்தும், வேறு சில தேர்தல் முறைகேடுகளிலும் ஈடுபட்டார் என இஸ்மாயில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், பி.சி.தாமஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டும் ஆமோதித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து தேர்தல் கமிஷன் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பி.சி.தாமஸ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ, ஓட்டு போடவோ தடை விதிக்க வேண்டுமென ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஜனாதிபதி, தேர்தல் கமிஷனின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அவர் இனிவரும் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ, ஓட்டு போடவோ முடியாது. பொதுவாக தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றால் ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்பதுதான் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளில் ஒன்று. ஆனால் பி.சி.தாமஸின் தேர்தல் முறைகேடு குறித்து கமிஷன் ஆய்வு செய்து அதில் முறைகேடு அதிகளவில் இல்லாததால் மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருப்பதாக கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா
பணிக்கொடை வரம்பு இனி ரூ.10 லட்சம்
புதுடில்லி: பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையை  தற்போதுள்ள 3.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் என உயர்த்த, பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தத் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கொடை திருத்த மசோதா நேற்று ராஜ்ய சபாவில் நிறை வேற்றப்பட்டது. இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே  கூறியதாவது: கடந்த 2006ல் ஆறாவது சம்பளக் கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அதிகரிக்கப்பட்டுள்ள பணிக்கொடையை பின் தேதியிட்டு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பணியாளர்களுக்கு நிறைய செய்ய வேண்டுமென எங்களுக்கும் விருப்பம் தான். ஆனால், வேலை கொடுப்பவருக்கு  அத்தகையதொரு  பெரிய தொகையை தரும் திறன் இருக்க வேண்டும். சிறுதொழில் நிறுவனங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எல்லாருக்கும் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  கார்கே  கூறினார். பணிக்கொடைக்கு கடந்த 1997ல் விதிக்கப்பட்ட  உச்ச வரம்பை நீக்க வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த உயர்வு  அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத் தலைவரும், மூத்த காங்., உறுப்பினருமான சஞ்சீவ ரெட்டி கூறுகையில், பணிக்கொடையை பின்தேதியிட்டு வழங்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ராஜ்ய சபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.
General
கார் வெடிகுண்டு சதி ஆசாமி ஷசாத் பாக்., தொடர்பை ஒப்புக் கொண்டான்
நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்த ஷசாத், பாகிஸ் தானில் பயிற்சி பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளான்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 1ம் தேதி, இங்குள்ள தியேட்டர் அருகே கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. இந்த காரில் இருந்து புகை வந்ததால் உஷாரடைந்த போலீசார், உள்ளே குண்டு இருப்பதை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர். இந்த காரின் உரிமையாளரை தேடிய போது மூன்று வாரங்களுக்கு முன், பாகிஸ்தானியர் ஒருவர் இந்த நிசான் காரை வாங்கியது தெரிந்தது. கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த படங்களை போலீசார் பார்த்த போது, பைசல் ஷசாத் என்ற நபர் இங்கு காரை நிறுத்தியது தெரிந் தது.உடனடியாக அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதற்குள் ஷசாத், துபாய் விமானத்தில் தப்பிக்க விமான நிலையத்துக்கு அவசரமாக சென்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.ஷசாத்(30) பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவன். இவருடைய தந்தை பாகிஸ்தான் விமானப்படை துணைத் தளபதியாக இருந்தவர். பாகிஸ்தானின் வாசிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாத பயிற்சி பெற்றதையும், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்ததையும் எப்.பி.ஐ., அதிகாரிகளிடம் ஷசாத் ஒப்புக்கொண்டுள்ளான்.அமெரிக்க மக்களை கொல்லும் நோக்கில் அவன் காரில் குண்டு வைத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மன்ஹாட்டன் கோர்ட்டில் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 7 பேர் கைது: அமெரிக்காவில் கைதான ஷசாத்திடம் விசாரணை நடைபெற்று வரும் வேலையில், அவருடன் தொடர்புடைய ஏழு பேர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட் டுள்ளனர்."டைம்ஸ் சதுக்கத்தில் குண்டு வைத்த ஷசாத் தன்னிச்சையாக செயல்பட்டிருக்க முடியாது; அவருக்கு பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது' என, அமெரிக்க எம்.பி., பீட்டர் கிங் தெரிவித்துள்ளார்."சர்வதேச அளவில் பின்னப்பட்ட சதி வலை தான், டைம்ஸ் சதுக்க குண்டுக்கு வழிவகுத்துள்ளது' என, மற்றொரு எம்.பி., ஸ்டீவ் இஸ்ரேல் தெரிவித்துள்ளார். அமெரிக்க புலனாய்வு வல்லுனர் லிசா கர்டிஸ் குறிப்பிடுகையில், "ஷசாத் பாகிஸ்தானில் ஐந்து மாதம் தங்கி பயங்கரவாத பயிற்சி பெற்றுள்ளான். டேவிட் கோல்மேன் ஹெட்லியைத் தொடர்ந்து ஷசாத்தும் பாகிஸ்தானை சேர்ந்தவனாக உள்ளான். எனவே, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.
தமிழகம்
கோவை பஞ்சாலை கட்டடம்: சபையில் அ.தி.மு.க., காரசாரம்
சென்னை: கோவை பஞ்சாலை தொழிற்சங்க கட்டடம் தொடர்பான விவகாரம், சட்டசபையில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது. கோவையில் உள்ள கோவை, ஈரோடு மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் சங்க கட்டடத்தின் நிர்வாகம் தொடர்பாக, தி.மு.க., - ம.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து, சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொடுத்தனர். "கோர்ட்டில் நிலுவையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க முடியாது' என, விதிகள் 65 மற்றும் 92ஐ சுட்டிக்காட்டி சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார். அ.தி.மு.க., மற்றும் ம.தி.மு.க., உறுப்பினர்கள் எழுந்து கோஷம் எழுப்பினர். "எனது முடிவை அறிவித்து விட்டேன்' என சபாநாயகர் தீர்மானமாகக் கூறினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைக்கவே, "வழக்கு தொடர்பாக பேசக்கூடாது' என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கினார். அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பேசியதாவது: கோவை முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் அளித்த தீர்ப்புடன், மே 1ம் தேதி கோவை போலீஸ் கமிஷனரை சந்தித்த ம.தி.மு.க., தொழிற் சங்கத்தினர், கட்டடத்தை சட்டப்படி மீட்டுத்தர மனு கொடுத்தனர். அடுத்த இரண்டு நாட்களில், கட்டடத்தை மீட்பது பற்றி தங்கள் கட்சி அலுவலகத்தில் ம.தி.மு.க.,வினர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, புகார் கொடுத்தவர்களான ம.தி.மு.க.,வினரையே போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை, தொழிலாளர்கள் மீதும், தொழிற்சங்கத்தின் மீதும் சம்மட்டி கொண்டு அடிக்கும் செயலாகும். தி.மு.க.,வினரிடமிருந்து கட்டடத்தை மீட்டு, ம.தி.மு.க.,வினரிடம் வழங்கி, அவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறும்படி போலீசாருக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார். இவை தவிர, கோர்ட் தீர்ப்புகள் தொடர்பாக அவர் பேசியவை அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். அவருக்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறிய கருத்துக்களும் நீக்கப்பட்டன. தங்களுக்கும் பேச அனுமதி வேண்டும் என்ற ம.தி.மு.க.,வினரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ""உங்களுக்காகத் தான் அவர் பேசிவிட்டாரே,'' என சபாநாயகர் விளக்கினார். அதைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கை மீதான தங்கள் பதிலுரைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இந்தியா
ஐகோர்ட்டுக்குள் விஸ்கி பாட்டில்கள் : வக்கீலின் செயலால் நீதிபதிகள் அதிர்ச்சி
புதுடில்லி : டில்லி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, வக்கீல் ஒருவர் விஸ்கி பாட்டில்களை நீதிபதிகளிடம் தூக்கிக் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். கோர்ட் என்றாலே, அங்கு உணர்ச்சிகரமான சம்பவங்களும், இறுக்கமான நிகழ்வுகளும் தான் நடக்கும் என, பலரும் நினைக்கின்றனர். ஒரு சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக, வேடிக்கையான சம்பவங்களும், அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடப்பது உண்டு. அப்படி ஒரு நிகழ்வு, சமீபத்தில் டில்லி ஐகோர்ட்டில் நடந்தது. விஸ்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான வழக்கு, டில்லி ஐகோர்ட்டில் நடந்தது. இதில், ஒரு நிறுவனத்தினர், தங்களது பாட்டில்களில் ஒட்டப்பட்டது போன்ற லேபிள்கள், மற்றொரு நிறுவனத்தின் பாட் டில்களிலும் ஒட்டப் பட்டுள்ளதாகவும், இதனால், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைவதாகவும் குற்றம் சாட்டினர். இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், முக்தா குப்தா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வக்கீல்களும், தங்களின் வாதங்களை விறுவிறுப்பாக எடுத்து வைத்தனர். அப்போது, வழக்கு தொடர்ந்த விஸ்கி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், திடீரென இரண்டு விஸ்கி பாட்டில்களை எடுத்து, நீதிபதிகள் முன் உயர்த்தி பிடித்தார். அந்த இரண்டு பாட்டில்களில், முழுவதுமாக மது நிரப்பப்பட்டு இருந்தது. அவர், "இதோ பாருங்கள். எங்கள் கட்சிக்காரரின் நிறுவன லேபிள்கள் போலவே, மற்றொரு நிறுவனமும் லேபிள் தயாரித்து பாட்டிலில் ஒட்டியுள்ளனர்' என்றார். கோர்ட்டுக்குள் மது பாட்டில்களை பார்த்த நீதிபதிகள், ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். நீதிபதி குப்தா, தனது கைகளால், கண்களை மூடிக் கொண்டார். நீதிபதி லோகுர் கூறுகையில், "என்ன இது? மது பாட்டில்களை கோர்ட்டுக்கு கொண்டு வர, யார் உங்களுக்கு அனுமதி அளித்தது? லேபிள்களை தான் நாங்கள் பார்க்க விரும்புகிறோமே தவிர, மது அடங்கிய பாட்டில்களை அல்ல. உடனடியாக, அதை மறைத்து வையுங்கள்' என்றார். இதையடுத்து அந்த வக்கீல், மது பாட்டில்களை மறைவாக வைத்தார். இதற்கு பின், விசாரணை தொடர்ந்து நடந்தது. கோர்ட்டுக்குள் மது பாட்டில்களை கொண்டு வந்து, அவற்றை நீதிபதிகள் முன் காட்டிய சம்பவம், டில்லி ஐகோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் தடை : மே.வங்கத்தில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்
மிட்னாபூர் : மேற்கு வங்க மாநிலத்தில் 200 கிராமங்களில் மக்கள் கணக்கெடுப்பு பணியை தடுத்து வருகின்றனர் மாவோயிஸ்டுகள். நாடு முழுவதும் மக்கள் கணக்கெடுப்பு பணி, கடந்த மாதம் துவங்கியது. ஒவ்வொரு நபரின் விவரங்கள் இந்த பணியின் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பதை மாவோயிஸ்டுகள் குறிக்கோளாய் கொண்டுள்ளனர். குறிப்பாக சென்சஸ் பணியை இடையூறு செய்வதில் அவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் லால்கார் பகுதியில் 200 கிராமங்கள் உள்ளன. சென்சஸ் எடுக்க வருபவர்களிடம் எந்த தகவலையும் கூறக்கூடாது என, மாவோயிஸ்டுகள் கிராம மக்களை எச்சரித்துள்ளனர். நக்சலைட் அமைப்பை சேர்ந்த அஜித் மகதோ குறிப்பிடுகையில், "அரசு எங்களை இந்த நாட்டு குடிமக்களாகவே கருதவில்லை. இப்போது எடுக்கப்படும் கணக்கெடுப் பெல்லாம், இந்த பகுதியில் எவ்வளவு போலீசை அனுப்பி எங்களை கொல்லலாம் என்பதற்காக தான். எனவே, தான் சென்சஸ் பணியை தடுக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார். கோவர்தன் சிங் என்ற விவசாயி குறிப்பிடுகையில், "ஆயுதம் ஏந்தி குழுவாக வந்த நக்சலைட்கள், சென்சஸ் எடுக்க வருபவர்களிடம் தகவலை சொன்னால், கொன்று விடுவதாக மிரட்டிச் சென்றுள்ளனர்' என்றார். லால்கார் பகுதியில் உள்ள 200 கிராமங்களில் கணக்கெடுக்க ஆரம்ப பள்ளிகளை சேர்ந்த 300 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பள்ளி ஆசிரியர்கள் இதே கிராமங்களை சேர்ந்தவர்கள் தான். எனவே, இவர்கள் கணக்கெடுப்பது கிராம மக்களுக்கு நன்றாக தெரியும். சென்சஸ் எடுக்கச் சென்றாலே மாவோயிஸ்கள் தங்களை தாக்கக்கூடும் என, ஆசிரியர்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்தியா
கவனக்குறைவால் சக போலீஸ்காரர் பரிதாப சாவு
மும்பை : துப்பாக்கியை சுத்தம் செய்தபோது எதிர்பாராமல் வெடித்ததில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். மும்பை, புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்தவர் ஷியாம்ராவ் பத்வி. நேற்று வழக்கம் போல் தனது பணியில் ஈடுபட்டிருந்தார். இதே போலீஸ் நிலையத்தில் அதிவிரைவு படையில் பணியாற்றி வருபவர் சேகர் டிக்கி. நேற்று இவர், தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதிலிருந்து எதிர்பாராமல் வெளிப்பட்ட தோட்டா, ஷியாம்ராவின் கழுத்து மற்றும் தோள்பட்டைக்கு இடையே பாய்ந்து சென்று துளைத்ததில் அவர் பலியானார். கவனக்குறைவாக இருந்ததாக சேகர் டிக்கி கைது செய்யப்பட்டார்.
இந்தியா
பர்தா அணிந்த பெண் மீது சந்தேகம் : விமானத்தை தரையிறக்கி சோதனை
கோல்கட்டா : விமானத்தில் பர்தா அணிந்து வந்த பெண், ஆண் போன்ற உருவம் கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த விமான ஓட்டிகள், விமானத்தை கோல்கட்டாவில் அவசரமாக தரையிறக்கினர். டில்லியில் இருந்து 123 பயணிகளுடன் புறப்பட்ட "ஸ்பைஸ் ஜெட்' விமானம் வங்கதேச தலைநகர் தாகாவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் ரஷ்யாவை சேர்ந்த இரண்டு பேர் பயணித்தனர். இதில் ஒருவர் பர்தா அணிந்திருந்தார். ஆனால், பர்தா அணிந்திருந்தவர் உயரமாகவும், உடல் பருத்தும், ஆண் போன்று தோற்றமளித்தார். இதனால், சந்தேகமடைந்த சக பயணிகள், விமான ஊழியர்களிடம் இது குறித்து தெரியப்படுத்தினர். விமான ஊழியர்கள் பர்தா அணிந்தவரிடம் சென்று முகத்தை காட்டும் படி வற்புறுத்தினர். ஆனால், அந்த பெண், பர்தாவை கழற்ற மறுத்து விட்டார். இதனால், அந்த நபர் பயங்கரவாதியாக இருக்கலாம், என்ற சந்தேகத்தில் விமான பைலட்டுகள் அவசரமாக தரையிறக்கினர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இந்த விமானத்தை சூழ்ந்து கொண்டு ரஷ்ய ஜோடியை விமானத்திலிருந்து கீழே இறக்கி தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். ஆணை போன்று காட்சியளித்தவர் உண்மையிலேயே பெண் தான் என்பது தெரிய வந்தது.
தமிழகம்
முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய மேம்பாலங்கள்: 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட
சென்னை: சென்னையில் புதிய சட்டசபையில் இருந்து பட்டுலாஸ் சந்திப்பு வரையிலும், அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை மாம்பலம் கால்வாய் வரையிலும் 500 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்கள் கட்டப்படும் என அமைச்சர் அறிவித்தார். நெடுஞ்சாலைத் துறைக்கான மானியத்தின் மீது சட்டசபையில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்: சென்னை ராஜிவ் காந்தி சாலை, மத்திய கைலாஷில் துவங்கி சிறுசேரி வரை 20 கி.மீ., நீளம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஐந்து சந்திப்புகளில், சாலை மேம்பாலங்கள் கட்டப்படும். திருவான்மியூர் - தரமணி, எஸ்.ஆர்.பி., டூல்ஸ் - தரமணி, பெருங்குடி சாலை, துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலை, சோளிங்கநல்லூர் சாலையின் சந்திப்புகளில் இந்த மேம்பாலங்கள் கட்டப்படும். தமிழ்நாடு சாலை போக்குவரத்துக் கழகத்தின் பராமரிப்பில் உள்ள இ.சி.ஆர்., இரு வழிச்சாலையை, மாமல்லபுரம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரி வரையிலான மீதமுள்ள சாலையில், வளைவுகளை மாற்றி அமைத்து, விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தில், 500 கோடி ரூபாய் செலவில், அண்ணா சாலையில், புதுசட்டசபை வளாகத்துக்கும், அண்ணா சாலைக்கும் இடையே துவங்கி, பட்டுலாஸ் சாலை வரை 2 கி.மீ., நீளத்துக்கும், அண்ணா அறிவாலயம் முதல் சைதாப்பேட்டை மாம்பலம் கால்வாய் வரை 3 கி.மீ., நீளத்துக்கும் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இச்சாலையில் செயல்படுத்தப்பட உள்ளதால், இந்த மேம்பாலங்களுக்கான தாங்கு தூண்கள் நடப்பாண்டில் முடிக்கப்படும். இம்மேம்பாலங்களுக்கான மேல் தூண்கள் மற்றும் தளங்கள், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும். சென்னை பெருநகர பகுதிகளில் 545 கி.மீ., சாலைப் பணிகள், பாலப் பணிகள் 412 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளன. 22 கோடி ரூபாயில் பள்ளிக்கரணை நான்கு சாலை சந்திப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வியாசர்பாடியில் 81 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட, டெண்டர் விடப்பட்டு, ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளன. மூலக்கடையில் 50 கோடி ரூபாய் செலவில் பாலம் அமைக்கும் பணி ஆய்வில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
தமிழகம்
அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: அ.தி.மு.க.,வினர் அமளி
சென்னை: சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.,வினர் அமளியில் ஈடுபட்டனர். அமைச்சரின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பின், அமைதி திரும்பியது. சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறைக்கான மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பதிலளிக்கும் போது நடந்த சம்பவம் வருமாறு: அமைச்சர் சாமிநாதன்: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மொத்தம் ஏழு பாலங்கள் கட்ட 168 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இந்த அரசு, 2,247 கோடி ரூபாயில் 104 பாலங்கள் அமைக்க அனுமதி பெற்றுள்ளது. கடந்த அரசு, 120 கோடி ரூபாயில் ஒன்பது ரயில்வே மேம்பாலங்கள் கட்டியது. இந்த அரசு, 22 ரயில்வே மேம்பாலங்களை 228 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணியை மேற்கொண்டது. மதுரை எல்லீஸ் நகர், செல்லூர் மேம்பாலப் பணிகள், கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம்: 22 ரயில்வே மேம்பாலங்களில், 2006ல் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் அனுமதித்து அரசாணை பிறப்பித்த மேம்பாலங்கள் எத்தனை? கட்டி முடித்த பாலங்கள் எத்தனை? சாமிநாதன்: கடந்த 2000ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி தான் இதில் 21 பாலங்கள் அமைக்க உத்தரவிட்டார். (இவ்வாறு கூறிய அமைச்சர், ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு அ.தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்). ஓ.பன்னீர்செல்வம்: 2006ம் ஆண்டுக்கு பின் ஏதாவது பாலம் கட்ட அரசாணை போட்டு, கட்டி முடித்தீர்களா? சாமிநாதன்: ரயில்வே பாலம் கட்ட வேண்டுமானால், அந்த வழியாக கடக்கும் வாகனங்களில் எண்ணிக்கை மற்றும் அவ்வழியாக செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, குறிப்பிட்ட அளவு இருந்தால் தான், மத்திய அரசு அனுமதிக்கும். இந்த அரசு 104 பாலங்கள் கட்ட அனுமதி பெற்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வம்: ஆனால், 2006ல் 410 கோடி, 2007ல் 887 கோடி என கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,248 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வெறும் 150 கோடி ரூபாயை தான் இத்துறை செலவழித்துள்ளது. இதில் இருந்து இத்துறையின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறியலாம். சாமிநாதன்: 2000ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி அறிவித்த பாலங்களை, உங்கள் ஆட்சியில் கட்டியிருந்தால் நாங்கள் புதிய பாலங்களை கட்டி இருப்போம். இந்த அரசு அமைந்த பின், துறையை கண்டுபிடிக்கவே ஒரு வருஷம் ஆனது. 22 மேம்பாலங்களில், உங்கள் ஆட்சியில் அறிவித்தது ஒன்று மட்டும் தான். (அ.தி.மு.க.,வினர் எழுந்து நின்று கூச்சலிட்டபடி இருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் பேசுவதற்கு அனுமதி கேட்டபடி இருந்தார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும், தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் பதிலளித்தபடி இருந்தார். அமைச்சர் துரைமுருகன் கேட்டுக் கொண்டதால், ஓ.பன்னீர்செல்வம் பற்றி சாமிநாதன் கூறிய கருத்து சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து சபையில் அமைதி திரும்பியது). ஓ.பன்னீர்செல்வம்: ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தினால் தான் சாதனை. நெடுஞ்சாலைத் துறைக்கு 2006ம் ஆண்டு, 2,366 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 1,432 கோடி மட்டும் செலவழித்துவிட்டு, மீதம் 934 கோடி ரூபாயை சரண்டர் செய்தனர். நான்கு ஆண்டுகளாக இது தான் நடந்துள்ளது. கடந்த ஆண்டு 539.51 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 255 கோடியே 44 லட்சம் தான் செலவழிக்கப்பட்டது. செலவழிக்கப்பட்ட தொகையை விட கூடுதலான 284 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒதுக்கிய நிதியை முறையாக செலவழிக்காத ஒரே துறை நெடுஞ்சாலைத் துறை தான். 2004 லோக்சபா தேர்தல் அறிக்கையில், அனைத்து ரயில்வே கடவுகளையும் அகற்றி, சுரங்கப்பாதை அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 2,624 ரயில்வே கடவுகள் உள்ளன. இதில், எத்தனை பாதைகள் போட்டீர்கள். அமைச்சர் சாமிநாதன்: கடந்த ஆட்சியிலும் நெடுஞ்சாலைத் துறைக்கு 7,399 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், 6,066 கோடி தான் செலவழிக்கப்பட்டது. ரயில்வே கடவுகளில் பாலங்கள் அமைக்க ஒப்புதல் கேட்டு அனுப்பிய பட்டியலுக்கு தான், 104 பாலங்கள் அமைக்க அனுமதி கிடைத்தது. 1990ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில் 226 ரயில்வே மேம்பாலங்கள் தான் இருந்தன. தற்போது இந்த அரசு 104 மேம்பாலங்கள் கட்ட அனுமதி பெற்றுள்ளது.
தமிழகம்
கார் மீது அரசு பஸ் மோதி பெண் உள்பட 3 பேர் பலி
திருநெல்வேலி : நெல்லை அருகே, கார் மீது அரசு பஸ் மோதியதில், பெண் உள்பட மூன்று பேர் பலியாகினர். திருநெல்வேலி மாவட்டம் கடையம், அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் வரதராஜன் (71). தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் கிளார்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் வெங்கட்ராகவன் (38). பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில், இன்ஜினியராக பணியாற்றுகிறார். மனைவி ஹேமலதா, மகள் ஸ்ரீநிதி ஆகியோரை விடுமுறையில் சொந்த ஊருக்கு அழைத்து வந்திருந்தார். இவர்களது குலதெய்வ கோயில் விருதுநகர் அருகே உள்ளது. இவர்கள், கோயில் வழிபாட்டிற்காக குடும்பத்தினருடன், கடையத்திலிருந்து வாடகை காரில் விருதுநகர் சென்று திரும்பினர். காரை கடையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஓட்டினார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் கார், கங்கைகொண்டான் அருகில் வந்தபோது, தெற்கு செழியநல்லூரிலிருந்து வேகமாக வந்த அரசு டவுன் பஸ், திடீரென தவறான வழியில் மதுரை-நெல்லை நான்குவழிச் சாலைக்குள் புகுந்தது. இதனால் காரும், பஸ்சும் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில், வரதராஜன், வெங்கட்ராகவனின் மனைவி ஹேமலதா (33), கார் டிரைவர் கோபாலகிருஷ்ணன் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வெங்கட்ராகவன், அவரது மகள் ஸ்ரீநிதி மீனாட்சி (12), தாயார் கவுசல்யா (67) ஆகியோர் படுகாயங்களுடன் நெல்லை ஐகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு பஸ் டிரைவர் தெற்கு செழியநல்லூர் சுடலை முத்துவை (33) கங்கை கொண்டான் போலீசார் கைது செய்தனர்.
தமிழகம்
பத்திர பதிவு அலுவலகத்தில் சோதனை: ரூ .22 ஆயிரம் பறிமுதல்
திருநெல்வேலி : தென்காசி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.22 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் பத்திர பதிவு அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் புரள்வது குறித்து புகார்கள் வருகின்றன. தென்காசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலையில் நெல்லை மாவட்ட லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி.,மனோகரகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் எஸ்கால் உள்ளிட்டபோலீசார் திடீர் சோதனை நடத்தினர். சார் பதிவாளர் கஸ்தூரி, இளநிலை உதவியாளர் பீர்முகம்மது, அலுவலக உதவியாளர் காதர்மைதீன் ஆகியோர் இருந்தனர். கூடுதல் பணிக்காக அதிகாரிகளே பணியமர்த்திக்கொண்ட மூன்று வெளிநபர்களும் பணியில் இருந்தனர். சோதனையில் 22 ஆயிரத்து 565 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதற்கு அதிகாரிகளால் கணக்கு காண்பிக்க முடியவில்லை. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 6 பேர் மீதும் துறைவாரியான நடவடிக்கை பரிந்துரைக்கும் வகையில் வழக்குபதிவு செய்தனர்.
தமிழகம்
கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு
சென்னை : கால்சென்டர் பெண் ஊழியர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மயக்க ஊசி போட்டு கற்பழிக்கப்பட்டதாக வந்த புகாரில் உள்ள உண்மை நிலையை அறிய போலீசார் தங்கள் விசாரணையை துவக்கியுள்ளனர். மருத்துவமனையில் அப்பெண், சோதனைக்கு மறுத்து வருவதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமான்னார் கோவில் விடியல் குடி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் பெயர் ஸ்ரீ கலா (21- பெயர் மாற்றப்பட்டுள்ளது). கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சென்னையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்தார். தரமணியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். கடந்த 20ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற ஸ்ரீகலா, தன்னை கனடா அனுப்புவதற்கு வேலை பார்க்கும் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரை கனடாவிற்கு வழியனுப்ப கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீகலாவுடன் சென்னை வந்தனர். அன்று காலை 9 மணியளவில் தரமணில் உள்ள ஸ்ரீ கலா பணியாற்றும் நிறுவனம் முன்பு காரில் வந்திறங்கினர். ஸ்ரீ கலா மட்டும் உள்ளே சென்று சொல்லிவிட்டு வந்து விடுவதாக கூறி சென்றார். வெகு நேரமாகியும் வராததால், ராஜேந்திரன் தனது மகளை தொடர்பு கொண்டார். விரைவில் வருவதாக கூறி அவர் துண்டித்தார். பின்பு தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் பதட்டத்தில் இருந்த ராஜேந்திரனுக்கு மாலை 5:30 மணியளவில் போன் வந்தது. அதில் பேசியவர், ஸ்ரீ கலாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி துண்டித்தார். தொடர்ந்து பல மருத்துவமனைகளில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இரவு 7:30 மணியளவில் ஸ்ரீ கலாவே தனது தந்தையை தொடர்பு கொண்டு, தான் சி.ஐ.டி., நகர் பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்ற பெற்றோர், மயங்கிய நிலையில் இருந்ததாக ஸ்ரீ கலாவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து இருதினங்களுக்கு முன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, ஸ்ரீ கலாவை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் காரில் ஏற்றி, மயக்க ஊசி போட்டு கற்பழித்ததாக அவரது பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. அந்த பெண்ணை விசாரிக்க போலீசார் பல முறை முயன்றும் சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரீ கலா பணியாற்றிய நிறுவனத்தினர் இந்த பெண் இங்கு பணியாற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஸ்ரீ கலா கற்பழிக்கப்பட்டாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ கலா குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்தாண்டில் சிதம்பரத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிதம்பரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மேலும் போலீசார் ஸ்ரீ கலா, பெற்றோரை ஏமாற்றுவதற்காக பொய் நாடகம் ஆடுகிறாரா? ஸ்ரீ கலா அந்த நிறுவனத்திற்குள் செல்வதாக கூறி எங்கு சென்றார்? உண்மையில் அவர் அங்கு வேலை பார்த்தாரா? அவருக்கு இங்கு காதலன், ஆண் நண்பர்கள் உண்டா? என்ற கேள்விகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
நகைக்காக பெண் கொலை: ஆட்டோ டிரைவர் கைது
திருநெல்வேலி : நெல்லை அருகே நகைக்காக இளம்பெண்ணை கொன்ற ஆட்டோ டிரைவர் ஆறு மாதங்களுக்கு பிறகு கைதானார். திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை அடுத்துள்ள கோதைசேரியை சேர்ந்த சுப்பையா மனைவி பாலசரஸ்வதி(28). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி கோதைசேரியில் இருந்து தளபதி சமுத்திரத்தில் உள்ள தமது தாயார் வீட்டிற்கு சென்றார். இரவில் தாயார் வீடு போய் சேரவில்லை. வீட்டுக்கும் திரும்பவில்லை. கோதைசேரி அருகே ஆலங்குளம் மேலக்கரையில் அவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். போலீசார் விசாரித்தனர். கழுத்தில் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. யாரோ நகைகளுக்காக அவரை கொலை செய்தது தெரியவந்தது. ஆறு மாதங்களாக துப்பு துலங்காமல் இருந்த வழக்கில் நேற்று துப்பு துலங்கியது. எஸ்.பி.,ஆஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான தனிப்படையினரது விசாரணையில், ஒரு ஆட்டோவில் பால சரஸ்வதி சென்றதை சிலர் பார்த்த தகவல் கிடைத்தது. விசாரணையில் ஏர்வாடியில் ஆட்டோ ஓட்டும் கண்ணன்(35) என்பவர்தான், தளபதிசமுத்திரத்திற்கு அழைத்துசெல்வதாக கூறி காட்டுப்பாதையில் அழைத்துச்சென்று கழுத்தை நெறித்து கொலை செய்ததும், நகைகளை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. கண்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மூன்றரை பவுன் மற்றும் கவரிங் நகைகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகம்
கோவில்பட்டி ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை
தூத்துக்குடி : கோவில்பட்டி ஓட்டல்களில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் சோதனை நடத்தினர். கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் விஜயராகவன் உத்தரவுப்படி, சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று எட்டயபுரம் ரோடு, பசுவந்தனை ரோடு, மெயின்ரோடு பகுதி ஓட்டல்களில் சோதனை நடத்தினர். குளிர்பானக்கடையில் சோதனை நடத்தி தயாரிப்பு தேதி, முடிவு தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேயிலை, சேமியா, கடலைமாவு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
தமிழகம்
வனத்துறை ஜீப்பை பந்தாடிய யானை
பெ.நா.பாளையம் : ஆனைக்கட்டி மலைப்பாதையில் சென்ற வனத்துறை ஜீப்பை, காட்டு யானை முட்டித் தள்ளியது. யானைக்கு பயந்து, ஜீப்பை டிரைவர் சாதுர்யமாக 200 அடி பின்னோக்கி செலுத்தியதால், ஜீப்பில் இருந்த விஞ்ஞானி உள்ளிட்ட பலர் உயிர் தப்பினர். மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை, தென்னங்கன்றுகளை அழித்து, சேதப்படுத்தும் யானைகளின் வரவை கட்டுப்படுத்த சூரிய மின்வேலி, அகழிகளை வனத்துறையினர் அமைத்தனர். ஆனாலும், காட்டு யானைகள் கிராமத்தை நோக்கி வருவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது கோடை காலம் என்பதால் விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. பயிர்கள் இல்லாததால் கடந்த இரண்டு மாதங்களாக காட்டு விலங்குகள் கிராமங்களை நோக்கி வருவது குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 4.00 மணிக்கு கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட துணை வனப்பாதுகாவலர் உலகநாதன், விஞ்ஞானி குணசேகரன்,ரேஞ்சர்கள் ராஜாமணி, ரங்கசாமி, வாட்சர் வெள்ளிங்கிரி ஆகியோர் ஆனைக்கட்டியில் ஜீப்பில் மலைப்பாதை வழியாக கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். ஜீப்பை டிரைவர் ரவி ஓட்டி வந்தார். சேம்புக்கரை அருகே வந்தபோது, எதிரே காட்டு யானை தனது குட்டியுடன் நடந்து வந்தது. ஜீப்பை கண்டதும் ஆக்ரோஷத்துடன் வேகமாக முன்னோக்கி வந்தது. ஜீப்பில் இருந்தவர்கள் அலறினர். ஆத்திரத்துடன் வந்த காட்டு யானை, ஜீப்பின் முன்பக்கம் மீது மோதி தள்ளியது. அதில், ஜீப்பின் முன்பக்கம் சேதமானது. யானை தொடர்ந்து முன்னேறி வந்ததால், ஜீப் டிரைவர் ரவி வண்டியை வேகமாக பின்னோக்கி செலுத்தினார். சுமார் 200 அடி தொடர்ந்து ஜீப் வேகமாக பின்னோக்கி சென்றதால், காட்டு யானையால் ஜீப்பை தொடர முடியவில்லை. ஜீப் வெகுதூரம் சென்று மறைந்தது கண்டு நிம்மதி அடைந்த தாய் யானை, தனது குட்டியை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்தது. அதன்பிறகே, ஜீப்பில் சென்ற அனைவரும், நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.
தமிழகம்
கார் மீது லாரி மோதி ஆறு பேர் பலி
கரூர் : கரூர் அருகே, கார் மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர் உட்பட, ஆறு பேர் உடல் நசுங்கி பலியாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (38). மனிதநேய மக்கள் கட்சி நீலகிரி மாவட்ட செயலர். இவருடன், ஊட்டி நகர செயலர் சையது சாதிக் (37), நிர்வாகிகள் அப்துல் கனி (42), யாசான் (22), மஸ்தீன் (32), சபியுல்லா (32) ஆகியோர், நேற்று முன்தினம், ஹூண்டாய் சான்ட்ரோ காரில், ஊட்டியிலிருந்து திருச்சி சென்றனர். பின், மீண்டும் ஊர் திரும்பும்போது, நேற்று காலை 10.30 மணியளவில், மயிலம்பட்டியிலிருந்து பாளையம் செல்லும் சாலையில், சரசம்பட்டி என்ற இடத்தில் வந்த போது, பாளையத்திலிருந்து அரியலூருக்கு ஜல்லிச் ஏற்றி சென்ற, டாரஸ் லாரி நேருக்கு நேராக மோதியது. இதில், பல அடிதூரம் இழுத்து செல்லப்பட்ட கார், அப்பளம் போல் நொறுங்கியதுடன், சாலையோர பள்ளத்தில் தள்ளப்பட்டது. நிலைதடுமாறிய லாரியும் கவிழ்ந்தது. லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு படையினர், காருக்குள் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
கார் தீப்பிடித்து எரிந்ததால் நாகையில் பரபரப்பு
நாகப்பட்டினம் : நடுரோட்டில் வந்து கொண்டிருந்த கார், திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் பழைய டவுன் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (54). உரக்கடை உரிமையாளர். இவர் தனது மாருதி 800 (பிஒய்.01 ஹெச்-4648) காரில், மனைவி திலகம் (52), மைத்துனர் சுப்ரமணியன் (59),மகன் தினேஷ் (24),மகள் திவ்யா (19) ஆகியோருடன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்க, நேற்று அதிகாலை வந்தார். திருமணம் முடிந்து மதியம் 2.30 மணிக்கு, வேளாங்கண்ணி செல்வதற்காக குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார். காரை தினகரன் ஓட்டினார். மதியம் 3.30 மணிக்கு நாகை, காடம்பாடி பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது, காரில் இன்ஜின் பகுதியிலிருந்து, திடீரென்று கரும்புகையுடன் தீப்பிழம்பு கிளம்பியதால் காரை நிறுத்தி, பயணம் செய்தவர்கள் வெளியேறினர். தினகரனுக்கு மட்டும் காலில் தீக்காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் காரில் வந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் திடீரென்று பிடித்த தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
அரசு பஸ் டிரைவரின் துண்டான விரல் 30 நிமிடத்தில் இணைப்பு
உடுமலை : உடுமலை அருகே அரசு பஸ் டிரைவரின் துண்டிக்கப்பட்ட விரல், 30 நிமிடத்தில் மீண்டும் தையல் போட்டு இணைக்கப்பட்டது. உடுமலை அடுத்த கொமரலிங்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (27), கடந்த 3ம் தேதி, தனியார் பஸ்சில் சென்றபோது கண்டக்டருடன் தகராறு ஏற்பட்டது. அதே பஸ்சில் பயணித்த அரசு பஸ் டிரைவர், பாப்பான்குளத்தைச் சேர்ந்த அன்புரோஸ் (33), ஆறுமுகத்தை கண்டித்து அவரை தாக்கினார். அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடன், வழித்தட எண் "9 சி' அரசு பஸ்சை ஓட்டி வந்த அன்புரோசை, ஆறுமுகம், அவரது அண்ணன் பாலன் (34) இருவரும், கொமரலிங்கத்தில் நேற்று முன்தினம் மறித்தனர். பஸ்சில் இருந்த டிரைவர் அன்புரோசை வெளியே இழுத்துப்போட்டு, அவரின் வலது கை ஆள்காட்டி விரலை கடித்து குதறினார், ஆறுமுகம். இதில் டிரைவரின் கை விரல் துண்டாகி, தொங்கியது. அருகில் இருந்தவர்கள், டிரைவர் அன்புரோசுக்கு கொமரலிங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதல் உதவி சிகிச்சை அளித்து, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொங்கிக்கொண்டிருந்த டிரைவரின் விரல், மீண்டும் அதே இடத்தில் இணைக்கும் வகையில், தையல் போடப்பட்டது. கடிபட்டு துண்டான விரல், அரை மணி நேரத்துக்குள், மீண்டும் அதே இடத்தில் இணைக்கப்பட்டு விட்டது. இதற்கிடையில் இச்சம்பவம் அறிந்த அரசு பஸ் டிரைவர்கள் தங்களது வாகனங்களை ரோட்டில் நிறுத்தி தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். அங்கு வந்த குமரலிங்கம் எஸ்.ஐ., அன்னம் மற்றும் போலீசார், டிரைவரை தாக்கிய ஆறுமுகம், அவரது அண்ணன் பாலனை கைது செய்தனர். இருவர் மீதும், "அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்கியது' ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜே.எம்., 2- மாஜிஸ்திரேட் முன்னிலையில் நேற்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தமிழகம்
வாலிபர் கொலை உடல் எரிப்பு
தூத்துக்குடி : திருச்செந்தூர், பூச்சிக்காடு - நாலுமாவடி இடைப்பட்ட குதிரைமொழி தேரி அருகே வனத்துறைக்கு சொந்தமான கானம் காட்டுப்பகுதியில், 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து வனஊழியர் முருகானந்தம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த உடலை திருச்செந்தூர் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வாலிபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
கள்ளக்காதலை கண்டித்தவர் கொலை
திருப்புவனம் : திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள செங்கல் சேம்பரில் திருநெல்வேலி, பரைப்பாடியை சேர்ந்த லிங்கம் (42), இவரது அண்ணன் மாடசாமி, இவரது மனைவி ராணி ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இதில் மாடசாமி மனைவி ராணிக்கும், கீழடி மூக்கன் மகன் செல்லமணிக்கும் தொடர்பு ஏற்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் லிங்கம் ராணியை கண்டித்து உள்ளார். ஆத்திரமடைந்த ராணி, செல்லமணி இருவரும் அரிவாளால் லிங்கத்தை வெட்டியதில் அவர் இறந்தார். மானாமதுரை டி.எஸ்.பி., சுப்பிரமணி யன், இன்ஸ் பெக்டர் சங்கர் விசாரித்து வருகின் றனர். ராணி, செல்லமணி யை தேடி வருகின்றனர்.
தமிழகம்
டிஜிட்டல் பேனரை அகற்றியபோது விபரீதம் : மின்சாரம் தாக்கி இரு மாணவர்கள் பலி
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சிப் பள்ளி விளம்பரப் பலகைகளை அகற்றிய இரண்டு மாணவர்கள், மின்சாரம் தாக்கி இறந்தனர்; மற்றொரு மாணவர் காயமடைந்தார். பயிற்சிப் பள்ளி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவர் குப்பன்; இவரது மகன் பரந்தாமன்(28). இவர் செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஒரு தனியார் காம்ப்ளக்ஸ் முதல் மாடியில் கடந்த வருடம் சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங் அண்டு ஓட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சிப் பள்ளியை துவக்கினார். இங்கு ஷிப்ட் முறையில் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் பாரதபுரம் ஆலன்சாலையைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சண்முகம்(20). திருக்கழுக்குன்றம் அடுத்த ஆயர்பாடியைச் சேர்ந்த பிரபாகர் மகன் மதன்குமார்(20). செங்கல்பட்டு அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் கேசவன்(16). மூன்று பேரும் பயிற்சிப் பள்ளியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ இன் கேட்டரிங் அண்டு ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தனர். தற்போது தேர்வுகள் நடந்து வருகின்றன. நேற்று காலை இவர்களுடன் சேர்ந்து 14 பேர் தேர்வு எழுதினர். பகல் 12 மணிக்கு தேர்வு முடிந்து வீட்டிற்கு சென்றனர். மதன்குமாரும், கேசவனும் வகுப்பறையில் அமர்ந்து படித்தனர். பயிற்சிப் பள்ளியின் விளம்பரப் பலகை(டிஜிட்டல் பேனர்) கிழிந்திருந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய பேனர் வைப்பதற்காக வீட்டிற்கு சென்ற சண்முகம் பகல் 2 மணிக்கு பள்ளிக்கு திரும்பினார். பேனரை கழற்றி முதல் மாடியில் வைத்தார். பின் அதை மொட்டைமாடியில் தூக்கி வைப்பதற்காக படித்துக் கொண்டிருந்த மதன்குமார், கேசவன் ஆகியோரை அழைத்தார். அவர்களும் வந்தனர். மதன்குமார், சண்முகம் ஆகியோர் மொட்டைமாடிக்குச் சென்று முதல் மாடியிலிருந்த பேனரை மேலே தூக்கினர். அப்போது பேனரை சுற்றி பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகடு அருகில் சென்ற மின் ஒயர் மீது மோதியது. அதை பிடித்துக் கொண்டிருந்த மதன்குமார், சண்முகம் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இருவரும் அலறியபடி பேனரை விட்டனர். பேனர் அருகிலிருந்த கடை மீது விழுந்தது. மின்சாரம் தாக்கிய இருவரும் மொட்டைமாடி தடுப்பு சுவரில் தொங்கினர். முதல் மாடியில் நின்ற கேசவன் சத்தம் கேட்டு மொட்டைமாடிக்கு ஓடினார். சுவரில் தொங்கிக் கொண்டிருந்த இருவரையும் தொட்டார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அவர் காயத்துடன் உயிர் தப்பினார். இதை கண்டு சாலையின் சென்றவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினர். பின் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார், பயிற்சிப் பள்ளி உரிமையாளர் பரந்தாமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ஒரு கோடி ரூபாய் கஞ்சா அழிப்பு : மூவர் கைது
கோவை : ஆலாந்துறை பூச்சிமலை உச்சியில், ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 3,500 கிலோ கஞ்சா செடிகளை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தீ வைத்து அழித்தனர். இது தொடர்பாக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். கோவை, ஆலாந்துறை மலைப்பகுதியில் இருந்து, கோவை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியைக் கண்காணித்த போலீசார், நாதேகவுண்டம்பாளையத்தை ஒட்டியுள்ள பூச்சிமலை உச்சியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். நேற்று அதிகாலை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., ராமசாமி தலைமையிலான குழுவினர், பூச்சிமலையில் அதிரடி ரெய்டு நடத்தினர். போலீசார் வருவதை அறிந்த கஞ்சா வியாபாரிகள், அங்கிருந்து தப்பி, கேரளா பகுதிக்குள் மறைந்தனர். ஆனாலும், போலீசார் சுற்றி வளைத்ததில், 30 கிலோ கஞ்சாவுடன் புதருக்குள் மறைந்திருந்த தோகை (53) சுந்தரதேவன் (43) ராஜேஷ் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், மூவரும் தேனிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது. போலீசார் அப்பகுதியை சோதனையிட்டு, ஒரு ஏக்கர் பரப்பில் பயிர் செய்திருந்த 3,500 கிலோ பச்சை கஞ்சா செடியை கண்டுபிடித்து அழித்தனர். அழிக்கப்பட்ட கஞ்சா செடிகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய். தப்பியோடிய கஞ்சா வியாபாரிகளை போலீசார் தேடுகின்றனர்.
இந்தியா
இரண்டாம் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது: கோர்ட் அதிரடி தீர்ப்பு
மும்பை : இந்து திருமண சட்டப்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் தரவேண்டிய அவசியம் இல்லை என, மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மும்பையைச் சேர்ந்த ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, 1987ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் அவரது கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், மும்பை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்த ரேகா, தான் கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டதாகவும், தனக்கு ஜீவனாம்சம் பெற்றுத் தரவேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை, குடும்ப நல கோர்ட் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, மும்பை ஐகோர்ட்டில் ரேகா அப்பீல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி தேஷ்பாண்டே மற்றும் சவுந்தர்பால்தோடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வது இந்து திருமண சட்டப்படி குற்றம். கணவனால் கைவிடப்பட்டு, அந்தக் கணவன் வேறொரு பெண்ணுடன் வாழும் பட்சத்தில், முதல் மனைவி ஜீவனாம்சம் கோரலாம். ஆனால், ரேகாவின் விவகாரத்தில் துவக்கம் முதலே முரண்பாடுகள் உள்ளன. தனது கணவனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார் என்று தெரிந்தும், ரேகா திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு ஜீவனாம்சம் பெற தகுதியில்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இந்தியா
சேமிப்பு கணக்கு மோசடி : தபால் அதிகாரிக்கு சிறை
புதுடில்லி : தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் மோசடி செய்த தபால் துறை அதிகாரிக்கு சி.பி.ஐ., கோர்ட் ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள காந்திநகர் தபால் அலுவலகத்தில் சேமிப்பு நிதி பிரிவின் அதிகாரியாக இருந்தவர் பஷீர் அகமது பட். தபால் சேமிப்பில் போடப்படும் பணத்தை பஷீர் அகமதுவும், ரவீந்திரகுமார் மற்றும் உஜ்கார் சிங் தல்வாரும் சேர்ந்து போலி கையெழுத்து போட்டு ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வரை சுருட்டியுள்ளனர். இந்த விஷயம் தெரிந்ததால் சி.பி.ஐ., 1998ல் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ.,கோர்ட், பஷீர் அகமது பட்டுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
தமிழகம்
கார்பைடு உப தொழில் துவங்க அழைப்பு
சென்னை: சிவகங்கையில் கார்பைடு தொழில் பூங்கா அமைக்க முடியாததற்கான காரணத்தை விளக்கிய துணை முதல்வர், அங்கு கார்பைடு உப தொழில் துவங்க, தொழில் முனைவோர் முன்வரலாம் என்று தெரிவித்தார். நெடுஞ்சாலைத் துறைக்கான மானியத்தின் மீது சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: குணசேகரன் - இந்திய கம்யூனிஸ்ட் : எந்த சாலையிலும் அகலத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், தரத்தில் வேறுபாடு கூடாது. தேசிய நெடுஞ்சாலையை விட, மாநில நெடுஞ்சாலையில் தரம் குறைவாக உள்ளது. அதைவிட உள்ளாட்சி சாலைப் பணிகள் தரம் குறைவாக உள்ளது. இதற்கு கடைநிலையில் டெண்டர் விலை நிர்ணயம் செய்வது தான் காரணம். மற்ற சாலையை விட 37 சதவீதம் விலை குறைவாக டெண்டர் போடப்படுகிறது. அப்படிப்பட்ட சாலையில் எப்படி தரம் இருக்கும். தமிழகத்தில் சாலை விபத்து சாவுகள் அதிகரித்துள்ளன.  சிவகங்கையில் கார்பைடு தொழில் பூங்கா பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தேன். இந்த ஆண்டும் இல்லை. துணை முதல்வர் ஸ்டாலின் : சிவகங்கையில் கிராபைடு தொழிற்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக விருப்பம் கேட்டு உலகளவிலான டெண்டர் விடப்பட்டது. டெண்டரில் எட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் ஐந்து தேர்வு செய்யப்பட்டு, கருத்துரு ஆவணம் வழங்கப்பட்டது. இதில் ஒருவர் மட்டுமே பங்கேற்றார். அதில், அந்த நிறுவனம் ஒரு டன் தாது 500 ரூபாய் என விலை குறிப்பிட்டிருந்தது. தமிழக கனிமவளத் துறை நிர்ணயித்த தொகையான டன்னுக்கு 3,000 என்பதை விட குறைவாக இருந்ததால், இத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனினும், கிராபைடு உப தொழில் துவங்க தொழில்முனைவோரை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தொழில் முனைவோரிடம் இருந்து விருப்பங்கள் கேட்கப்பட்டுள்ளன.
இந்தியா
திருமலையில் பச்சிளங் குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு மாற்று வழியில் துரித தரிசனம்
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க கைக்குழந்தையுடன் செல்லும் பெற்றோர்கள், துரிதமாக சாமி தரிசனத்திற்கு செல்லும் மாற்று ஏற்பாட்டை தேவஸ்தானம் செயல்படுத்தியுள்ளது. இதற்குமுன் பச்சிளங் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், வயது முதிர்ந்தோர், ஊனமுற்ற பக்தர்களுக்கும் திருமலை கோவிலில் முன் வாசல் வழியாக சாமி தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென, கன்னியாகுமரியில் நடந்த சீனிவாச கல்யாண உற்சவத்தின்போது, தேவஸ்தான போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தற்போது, இதில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருமலையில் சுபதம் என்ற இடத்தில் இலவச தரிசன பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும் நேரத்தில் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்களையும், 300 ரூபாய் துரித தரிசன கியூ செல்லும் வழியாக சாமி தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம்
தினமலர் செய்தி எதிரொலி : முதியவருக்கு புதுவாழ்வு
மதுரை : மதுரையில் பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்த முதியவர், தினமலர் செய்தி எதிரொலியாக புதுவாழ்வு பெற்றார்.மதுரை தெற்குவாசலை சேர்ந்த கந்தசாமியை (84) ஒரே மகன் மாரியப்பனும் கைவிட, முதியோர் இல்லமும் வெளியே துரத்த, வேறு வழியின்றி பிளாட்பாரத்தில் வசித்து வந்தார். இதுகுறித்து, நேற்று தினமலர் இதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மதுரை பசுமலை முதியோர் இன்ப இல்லம், அவரை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. நேற்று காலை 8 மணிக்கு, இன்ப இல்லத்திற்கு சொந்தமான ஆட்டோவில் அவர், பசுமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பொறுப்பாளர் ஜஸ்டினா, வார்டன் செல்வி கூறுகையில்,"தினமலர் செய்தி பற்றி இலங்கையிலுள்ள நிறுவனர் ஞானவரத்திற்கு தகவல் தெரிவித்தோம். அவர் கந்தசாமியை, இங்கு அழைத்து பராமரிக்குமாறு கூறினார். எங்கள் இல்லத்தில், ஆதரவற்றோர் 50 பேர் உள்ளனர். கட்டணம் இல்லை. இவரையும் நாங்கள் நல்லமுறையில் பராமரித்துக் கொள்வோம்,' என்றனர். கந்தசாமி கூறுகையில்,""தினமலர் செய்தியால் எனக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது. மிக்க நன்றி,'' என்றார் நெகிழ்ச்சியுடன். திலகர்திடல் போலீஸ் உதவிக் கமிஷனர் கணேசன்,""கந்தசாமியின் மகன் மாரியப்பன் திருப்பதியில் வசிக்கும் இடம் பற்றி விசாரிக்கிறோம். தந்தையை தன்னுடன் சேர்த்துக் கொள்ளுமாறு அவரிடம் எச்சரிக்கை செய்வோம்,'' என்றார். இன்ப இல்லத்தை 0452-237 1311 ல் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம்
சாலை, பாலப் பணிகளுக்கு ரூ.4,049 கோடி ஒதுக்கீடு
சென்னை: சாலைகள் மற்றும் பாலப் பணிகளுக்கு நடப்பாண்டில் 4,049 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள்: தேசிய நெடுஞ்சாலை 47ல், கோவை புதூரில் துவங்கி, பேரூர், வீரகேரளம், வடவள்ளி, சோயம்பாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலை 67ல் துடியலூரில் இணையும் வகையில், 26 கி.மீ., நீளத்துக்கு 284 கோடி ரூபாயில், புறவழிச்சாலை, நான்கு வழித் தடச் சாலையாக அமைக்கப்படும். இதுதவிர, 19 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மாநகராட்சி எல்லைக்குள் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் சாலைகளின் மொத்த அகலத்துக்கும், வடிகால் பாவு தளங்களுடன் கூடிய சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும். கட்டடங்கள் அதிகமுள்ள பகுதிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். பாரம்பரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்படும்.  சாலை மற்றும் பாலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கு 4,049 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 5,000 கி.மீ., சாலைகளை அகலப்படுத்தவும், மேம்படுத்தவும், 5,000 கி.மீ., சாலைகளை பராமரிக்கவும் வழிவகை செய்யப்படும். பாலப் பணிகளுக்காக இதில், 1,171 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை, ஏற்கனவே நடந்து வரும் 273 பாலங்கள் மற்றும் புதிதாக எடுக்கவுள்ள 96 பாலங்களுக்கும் செலவழிக்கப்படும். ராமேஸ்வரம், அக்னி தீர்த்தம் என்ற சுற்றுலா தலத்தில் பயணிகளை கவரும் வகையில், புதிதாக படகு போக்குவரத்து தனியார் மூலம் நடத்த கடல்சார் வாரியம் அனுமதித்துள்ளது. தோணித்துறை போன்ற கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின் படகு போக்குவரத்து துவக்கப்படும்.
தமிழகம்
சட்டசபையில் இன்று...
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், எரிசக்தித் துறைக்கான மானியக் கோரிக்கையின் மீது விவாதம் நடக்கிறது. விவாதத்துக்கு அமைச்சர் பதிலளிக்கிறார்.
தமிழகம்
ஜெனரேட்டர் வாங்கினால் மானியம்
மதுரை : சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் செய்யும் நிறுவனங்கள் மின்வெட்டை சமாளிக்க, ஜெனரேட்டர் வாங்கினால், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. தொடர் மின்வெட்டால் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் தொழில் நிறுவனங்கள், ஜெனரேட்டர் வாங்குவதற்கு 25 சதவீத மானியம் தரப்படுகிறது. அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் பெறலாம். இதற்கு 125 கேவிஏ திறனுக்குள் ஜெனரேட்டர் வாங்க வேண்டும். அதற்கு மேற்பட்ட கேவிஏ திறன் ஜெனரேட்டர் வாங்கியிருந்தாலும், மானிய வரம்பு உயராது. கடந்த ஆறு மாதத்துக்குள் ஜெனரேட்டர் வாங்கியிருந்தாலும், அந்தந்த மாவட்ட தொழில் மையங்களை அணுகி, மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழகம்
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பம் : ஒரு லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டியது
சென்னை : பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை துவங்கிய மூன்று நாட்களில், ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முதல் மூன்று நாட்களில், விற்பனையான விண்ணப்பங்களை விட, 14 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்ப விற்பனை கடந்த 3ம் தேதி துவங்கியது. விண்ணப்ப விற்பனை துவங்கிய முதல் நாளில் மட்டும் 63 ஆயிரத்து 800 பேரும், இரண்டாம் நாளில் 25 ஆயிரத்து 369 பேரும் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். மூன்றாம் நாளான நேற்றும் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஆர்வமாக பெற்றுச் சென்றனர். நேற்று 34 ஆயிரத்து 894 பேர் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இந்த ஆண்டு, விண்ணப்ப விற்பனை துவங்கி, மூன்று நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 63 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு முதல் மூன்று நாட்களில் விற்பனையான விண்ணப்பங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் மூன்று நாட்களில் 14 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு : செக்-போஸ்ட் அமைத்து 24 மணி நேரம் கண்காணிப்பு
ஓசூர் : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு கன்னட அமைப்பினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், கர்நாடகாவையொட்டி உள்ள காவிரியாற்று மலைகிராமங்களில் கூடுதல் செக்-போஸ்ட் அமைத்து 24 மணி நேரம் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை துவங்கி உள்ளது. கர்நாடக அரசும், கன்னட அமைப்புகளும் தொடர்ந்து ஒகேனக்கல் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் கன்னட ரஷ்ன வேதிகா அமைப்பினர், "ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் பட்சத்தில், கர்நாடகாவில் தமிழ் சேனல்களை ஒளிபரப்ப விட மாட்டோம். தமிழகத்தில் இருந்து கர்நாடகா வரும் பஸ்களை தடுத்து நிறுத்துவோம்' என, அறிவித்தனர். கன்னட அமைப்புகளால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எந்தநேரத்திலும் ஆபத்து வரலாம் என தமிழக அரசு அஞ்சுகிறது. அதனால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் முடியும் வரை தமிழக, கர்நாடக எல்லையோர கிராமங்களில் வெளியாட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் டி.ஐ.ஜி., வெங்கட்ராமன், நேற்று, தமிழக - கர்நாடக எல்லையோர மலைகிராமங்களில்ல திடீர் ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் இருந்து பில்லிகுண்டு வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்ராம்பாளையம் வழியாக அஞ்செட்டி வரை கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். அஞ்செட்டி, தக்கட்டி, நாட்ராம்பாளையம் உள்ளிட்ட 10 மலை கிராமங்களில் டி.ஐ.ஜி., வெங்கட்ராமன், அப்பகுதியில் உள்ள கிராம விழிப்புணர்வு குழுவினரிடம் கலந்துரையாடினார். அவர், "கர்நாடகாவையொட்டி காவிரியாற்று படுக்கையோரம் உள்ள மலைகிராமங்களில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், சந்தேகப்படும் வெளியாட்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக தகவல் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார். வனப்பகுதி வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில், கூடுதல் செக்-போஸ்ட் அமைத்து 24 மணி நேரம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, போலீசாருக்கு உத்தரவிட்டார்.
தமிழகம்
கொடைக்கானலில் சீசன் துவங்கியது : பனி சூழ்ந்த பில்லர் ராக்கில் பயணிகள்
கொடைக்கானல் : கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், சர்வதேச சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு, தற்போது பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் கருகிய மரங்கள், சில நாட்களாக பகலில் பெய்யும் மழையால் துளிர்விட துவங்கியுள்ளது. வார விடுமுறை நாட்களை போலவே, தற்போது எல்லா நாட்களிலும் கொடைக்கானலில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. வழக்கம்போல ஓட்டல்களில், செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி, இரட்டிப்பு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது. வரும் நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகம்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று திருவந்திபுரம் வருகை
கடலூர் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினருடன் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை 9 மணிக்கு வருகிறார். இதற்காக அவர் காலை 7 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் கடலூர் வழியாக திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி., மகேஷ்வரன், கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், நரசிம்ம பட்டாச்சாரியாருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வெங்கடகிருஷ்ண பட்டாச்சாரியார், இன்ஸ்பெக்டர்கள் சுந்தர வடிவேலு, சுரேஷ் கண்ணன் (தனிப்பிரிவு), சப்-இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவேல், ஆனந்தபாபு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
தமிழகம்
நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம் : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரிஅம்பாளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடக்கிறது. ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனத்தின் போது ஆயிரங்கால் மண்டபத்திலும், நடராஜர் வீற்றிருக்கும் சித்சபையின் எதிரில் கனக சபையில் நான்கு முறையும் நடக்கிறது. சித்திரை மாதத்தில் நடக்கும் மகா அபிஷேகம் நேற்று நடந்தது. மகா அபிஷேகத்தையொட்டி, உலக நன்மை வேண்டி கோவில் நடன பந்தலில், நேற்று அதிகாலை முதல் மகா ருத்ரயாகம் நடந்தது. சபா கல்யாசபாபதி தீட்சதர் தலைமையில் 121 தீட்சதர்கள் 1,333 ஆவர்த்திகள் சொல்லி ருத்ர பாராயணம் செய்தனர். தொடர்ந்து காலை 8 மணியளவில் சித்சபையிலிருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கனகசபையில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் நடந்த ருத்ர ஹோமத்தில் 13 பேர் ஹோமம் செய்தனர்.மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு குடம், குடமாக பால், தயிர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், பூ ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
தமிழகம்
பழநி உண்டியல் வசூல் ரூ.86 லட்சத்தை தாண்டியது
பழநி : பழநி கோவில் உண்டியல் வசூல் 86 லட்ச ரூபாயை தாண்டியது. பழநி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. அதில், ரொக்கம் 86 லட்சத்து ஓராயிரம் ரூபாய், தங்கம் 886 கிராம். வெள்ளி 7,265 கிராம். வெளிநாட்டு கரன்சிகள் 82. தங்க வேல், காவடி, செயின், மோதிரம், திருமாங்கல்யம், வெள்ளிக் காவடி, பாதம், வேல், குண்டு உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. பரிவட்டங்கள், பித்தளையாலான பொருட்கள், ஏலக்காய் மாலையும் செலுத்தப்பட்டிருந்தன. உண்டியலில் 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் எண்ணும் பணி இன்றும் நடைபெறுகிறது.
தமிழகம்
ரூ. 30 லட்சத்தில் சேக்கிழார் மணிமண்டபம் : குன்றத்தூரில் பிரம்மாண்டமாக அமைகிறது
குன்றத்தூர்: பெருமைக்குரிய தமிழ் புலவர் சேக்கிழார் பிறந்த, சென்னை அருகே உள்ள குன்றத்தூரில், 30 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. செம்மொழி மாநாடு முடிந்த கையோடு திறப்பு விழா காண உள்ள இந்த மணிமண்டபத்துடன், நூலகமும், சேக்கிழார் பெயரில் தியான மண்டபமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேக்கிழார் மிகச்சிறந்த தமிழ் இலக்கிய புலவர். சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் 12ம் நூற்றாண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் அருள் மொழித் தேவர். இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதன்மை மந்திரியாக இருந்த சேக்கிழார் பின், சிதம்பரத்திற்கு சென்று, 63 அடியார்களை பற்றிய திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணத்தை எழுதினார். சிதம்பரத்தில் அவர் பெரிய புராணத்தை எழுத துவங்கிய போது, இறைவனே, "உலகெலாம்,' என்று அடியெடுத்துக் கொடுத்ததாக வரலாறு. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் பெரிய புராணத்தை அரங்கேற்றினார். தொண்டர் சீர் பரவுவார், உத்தம சோழ பல்லவர் போன்ற சிறப்பு பெயர்களும் இவருக்கு உண்டு. குலோத்துங்க சோழனுக்கு தமிழ் இலக்கியத்தில் உள்ள இதிகாசம், காப்பியம், காவியம் உள்ளிட்ட சிறந்த நூல்களை சேக்கிழார் அறிமுகப்படுத்தினார். சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் திருமுறையாக போற்றப்படுகிறது. இதன்பின், 63 நாயன்மார்களின் பக்தியால் கவரப்பட்ட சேக்கிழார், தானும் அவ்வழியையே பின்பற்றி சிவனடி சேர்ந்தார். சேக்கிழார் வசித்த குன்றத்தூர் இல்லத்தை, இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக பராமரித்து வருகிறது. கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள நிலையில், சேக்கிழாருக்கு அவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. குன்றத்தூர், நாகேஸ்வரர் கோவிலுக்கு அருகே ரம்மியமான இடத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமான மணிமண்டபம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. மணிமண்டபத்திற்குள் சேக்கிழார் சிலை நிறுவப்படுகிறது. மணிமண்டபம் முழுவதும் மார்பிள் கற்கள் பதிக்கப்படுகின்றன. சுவர்களில் கலைநயமிக்க ஓவியங்கள், சிற்பங்கள் அமைகின்றன. அடுத்த இரண்டு மாதத்தில் இதற்கான பணிகள் முழுவதும் நிறைவடையும். இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "செம்மொழி மாநாடு முடிந்த கையோடு சேக்கிழார் மணிமண்டபம் திறக்கப்படும். மண்டப கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மணிமண்டபம் அமைந்துள்ள இடத்தில் சேக்கிழார் பெயரில் நூலகமும், தியான பீடமும் அமைக்கப்படும்,' என்றார்.
தமிழகம்
கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு
விருதுநகர் : தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு, 10 சதவீத கூலி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்கள், அரசின் இலவச வேட்டி, சேலை, மாணவர்களுக்கான சீருடைகளை நெசவு செய்து வந்தனர். கூட்டுறவு சங்கங்களுக்கு, "கோ- ஆப்டெக்ஸ்' வழங்கும், "ஆர்டர்'களுக்கும் துணிகளை உற்பத்தி செய்து வழங்கி வந்தனர். தங்களுக்கு கூலி உயர்வு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, நெசவாளர்களின் அடிப்படை கூலியில் 10 சதவீதம் உயர்த்தியும், மே 1ம் தேதியிலிருந்து வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு நெசவாளர் தினமும் ஒரு சேலை நெசவு செய்தால் 62 ரூபாய் கூலி கிடைக்கும். கூலி உயர்வால் 68 ரூபாய் 20 காசு கிடைக்கும். கூலி உயர்வு காரணமாக நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர். ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கும்பகோணம், கோவை உட்பட பல மாவட்டங்களில் உள்ள 2.34 லட்சம் பேர் பயன் பெறுவர்.
தமிழகம்
சமச்சீர் கல்வி சமூக அறிவியல் பாடத்திட்டம் தயாரிப்பு
தேனி : சமச்சீர் கல்வி திட்டத்தில், சமூக அறிவியல் பாடத்திட்டம் தயாரிப்பதற்கான மூன்றாம் கட்ட பணிமனை நடைபெற உள்ளது. சமச்சீர் கல்வி திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் பரீட்சார்த்த முறையில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பில் நடை முறைப்படுத்தப்பட உள்ளன. மற்ற வகுப்புகளுக்கு அதற்கு அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வி இயக்ககத்தால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பாடங்களுக்கும் வரைவு பாடநூல் எழுதும் பணி நடந்து வருகிறது. மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கான புதிய சமூக அறிவியல் வரைவு பாடநூல் எழுதுவதற்கான முதல் பணிமனை கடந்த ஏப்., 9 ல் நடந்தது. பாடத்திட்டம், பாடநூல் அமைப்பு, பாடப்பொருள், எழுதும் நடை, புத்தக வடிவமைப்பு குறித்து முடிவு செய்வதற்கான இரண்டாம் கட்ட பணிமனை ஏப்., 27 முதல் 29 வரை நடந்தது. மூன்றாம் கட்ட பணி மனை மே 10 ல் துவங்கி 20 வரை நடக்கிறது. மூன்றாம் வகுப்பு சமூக அறிவில் பாட ஆசிரியர்களுக்கு மே 10-13 வரை, நான்காம் வகுப்பிற்கு 14-15 வரை, ஐந்தாம் வகுப்பிற்கு 17-20 வரை பணி மனை நடக்கிறது. இதில் புதிய சமூக அறிவியல் பாடநூல் தயாரித்து வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை சமச்சீர் கல்வி பாடநூல் தயாரிப்பு குழு பொறுப்பு அலுவலர் கண்ணப்பன் பிறப்பித்துள்ளார்.
தமிழகம்
கருங்கல்லில் இங்க் பேனா : நாமக்கல் சிற்பி சாதனை
நாமக்கல்:ரெட்டிப்பட்டியை சேர்ந்த சிற்பி ஒருவர் ஒரே கல்லில் பேனா வடிவமைத்து, அதில், இங்க் நிரப்பி எழுதியும் வருகிறார்.நாமக்கல் ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சிற்பி ஜெகதீசன். இவர் கல்லில் பல்வேறு வடிவங்களை வடித்து சாதனை படைத்துள்ளார். முதலில் ஒரே கல்லில் ஆறு கன்னிகள் கொண்ட கற்சங்கிலி வடிவமைத்தார். பின், ஒரே கல்லில் 42 கன்னிகள் கொண்ட கற்சங்கிலியும், நகரும் கல்தேர் போன்றவற்றை வடிவமைத்தார்.அடுத்த கட்டமாக, கருங்கல்லில் பேனா வடிவமைத்து, அதில் எழுதி வருகிறார். இதுகுறித்து சிற்பி ஜெகதீசன் கூறியதாவது:நானும், எனது சகோதரரும் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சிற்பத்தொழிலுக்கு புதிய பரிமாணம் கொடுக்கும் வகையில், பல்வேறு புதிய சிற்பங்களை வடிவமைக்கிறோம். கல்லால் ஆன கற்சங்கிலி, நகரும் தேர் போன்றவற்றை வடிவமைத்தோம்.தற்போது கல்லால் ஆனா பேனா செய்துள்ளோம். அந்த பேனா 150 கிராம் எடை கொண்டது. பேனா முள், கழுத்து, இங்க் நிரப்பும் பகுதி, மூடி என ஒவ்வொன்றும் தனித்தனி கல்லால் செய்யப்பட்டது. ஒரு கிலோ எடை கொண்ட கல் 150 கிராம் போனாவாகி உள்ளது.மற்ற பேனாவைப் போல், இதில் இங்க் நிரப்பி எழுதமுடிகிறது. ஒரே நாளில் இந்த பேனா வடிவமைக்கப்பட்டது. பேனாவில் முள்ளுக்கு இங்க் வருவதற்காக உலியால் கீரப்பட்டுள்ளது. மற்றப் பேனாவைப் போல் இதில் அற்புதமாக எழுத முடிகிறது, என்றனர்.
இந்தியா
கோட்சே முதல் கசாப் வரை...
தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேக்கு, 1949ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1949 நவம்பர் 15ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார். இதன்பின் இரு குழந்தைகளை கடத்திக் கொன்ற, குல்ஜீத்சிங் என்ற ரங்கா மற்றும் ஜஸ்பீர்சிங் என்ற பில்லாவுக்கு 1982ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணைக்குப் பின், இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது. ரங்கா, பில்லாவால் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெயரில் தற்போது வீரதீர செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்பின் ஜோஷி - அப்யங்கர் கொலை வழக்கில், புனேயில் உள்ள புகழ்பெற்ற அபினவ் கலா மகாவித்யாலயாவில் படித்த நான்கு மாணவர்கள் குற்றவாளிகள் என, கண்டறியப்பட்டது. இவர்கள், 1976 - 1977ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 10 பேரை கொலை செய்திருப்பது தெரிந்தது. ராஜேந்திர ஜாக்கல், திலீப் தியானோபா சுதார், சாந்தாராம் கன்கோஜி ஜக்தப் மற்றும் முனாவர் ஹாருண் ஷா என்ற அந்த நான்கு பேருக்கும் 1983 நவம்பர் 27ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா கொலை வழக்கில், கேகர் சிங் மற்றும் சத்வந்த்சிங் என்ற இருவருக்கு 1989 ஜனவரி 6ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1995 ஆகஸ்ட் 27ல், பல படுகொலைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ சங்கர், சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான். இதன்பின் 14 வயது சிறுமி ஹீதல் பரேக்கை கற்பழித்துக் கொன்ற வழக்கில், தனஞ்செய் சட்டர்ஜி என்பவன், 2004 ஆகஸ்ட் 14ல் தூக்கிலிடப்பட்டான். இந்த வரிசையில் கசாப்பும் சேர உள்ளான். நேரில் சாட்சி அளித்த அமெரிக்க புலனாய்வு நிறுவன அதிகாரிகள்: மும்பைத் தாக்குதல் வழக்கில், இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடந்திராத பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த வழக்கில் இதுவரை எந்த வழக்கிலும் நிகழ்ந்திராத ஒன்றாக, அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர். பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கருவிகளைப் பற்றிய விவரங்களை தெரிவித்ததோடு, தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களையும், இந்திய விசாரணை அதிகாரிகளோடு சேர்ந்து ஆய்வு செய்தனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ்., என, அழைக்கப்படும் கருவி பற்றியும், தாக்குதலின் போது, அதைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் உள்ள தங்களின் தலைவர்களுடன் அவர்கள் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்து பேசினர் என்ற விவரங்களையும் கோர்ட்டிற்கு தெரிவித்தனர். மேலும், நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில், முதல்முதலாக பயங்கரவாதி ஒருவன் பிடிபட்டது மும்பைத் தாக்குதலின் போதுதான். கடந்த 1993ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த நிலையில், அதுபோன்று இழுத்தடிக்காமல் இந்த வழக்கு ஓராண்டிற்குள் முடிவுக்கு வந்துள்ளது. மேலும், பயங்கரவாதி கசாப் அடைக்கப்பட்டிருந்த ஆர்தர் ரோடு சிறையைச் சுற்றிலும், இந்தோ - திபெத் எல்லைப் போலீஸ் படையினர் தீவிர காவலில் ஈடுபட்டிருந்தனர். இந்த துணை ராணுவப் படையினர், இதுபோன்ற காவல் பணியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. இப்படி பல வகையிலும் மும்பைத் தாக்குதல் வழக்கு மாறுபட்டதாகவே இருந்தது. நேர்மைக்கு பெயர் பெற்ற தகிலியானி: மும்பைத் தாக்குதல் வழக்கை விசாரித்து, பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்கு மரண தண்டனை விதித்த நீதிபதி மதன் லட்சுமண்தாஸ் தகிலியானி, கிரிமினல் மற்றும் சிவில் சட்டங்களில் புலமை பெற்றவர். மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த "சிந்தி' இனத்தவரான அவர், தனது 23 ஆண்டு கால நீதித்துறை பணியில் கடுமையானவர் மற்றும் நேர்மையானவர் என, பெயர் எடுத்தவர். கிரிமினல் மற்றும் சிவில் சட்டங்களில் அவர் பெற்ற கணிசமான அனுபவம், மும்பைத் தாக்குதல் வழக்கு விசாரணையின் போது, அவருக்கு பெருமளவு உதவியது. கசாப்பிற்காக வக்கீல் ஒருவரை நியமிக்க நேரிட்ட போதும், கசாப் தன்னை மைனர் எனக்கூறி வழக்கை திசை திருப்ப முற்பட்ட போதும், கோர்ட்டில் அவன் குற்றத்தை ஒப்புக் கொண்ட போதும், தந்திரமாக செயல்பட்டு அனைத்தையும் சமாளித்தார். மும்பையில், குல்சன் குமார் கொலை வழக்கு போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை அவர் விசாரித்திருந்தாலும், மும்பைத் தாக்குதல் வழக்கு மூலமாகதான் அவர் பிரபலம் அடைந்தார். கடந்த 1987ல் மும்பை பாந்த்ரா கோர்ட்டில், பெருநகர மாஜிஸ்திரேட்டாக முதன் முதலாக தன் நீதிபதி பணியைத் துவக்கினார். அதன்பின், கூடுதல் செஷன்ஸ் நீதிபதியானார். 2000ம் ஆண்டில் மும்பை சிவில் மற்றும் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியானார். அதற்கு முன்னதாக, ஐகோர்ட் பதிவாளராக (ஆய்வுப் பிரிவு) பணியாற்றினார். 2009ம் ஆண்டில் மும்பைத் தாக்குதல் வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மும்பைத் தாக்குதல் வழக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின், தினமும் ஆர்தர் ரோடு சிறைக்கு விஜயம் செய்து, சிறப்பு கோர்ட் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு முடுக்கி விட்டார். தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் அக்கறை கொண்ட தகிலியானி, தினமும் ஆன்-லைனில் வெளிநாட்டு பத்திரிகைகளைப் படிப்பார். பல மொழிகளைப் பேசக்கூடிய அவர், உருதிலும் கொஞ்சம், கொஞ்சம் பேசுவார். திட்டமிட்டும், விரைவாகவும் தன் பணிகளைச் செய்ததால், குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இதனால், சில நேரங்களில் எதிர்தரப்பு வக்கீல்களின் கோபத்திற்கும் அவர் ஆளாக நேரிட்டது. தகிலியானி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதால், மும்பைத் தாக்குதல் வழக்கு விசாரணை விரைவில் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பை கேட்டு அழுதான் கசாப்: ஐந்து பிரிவுகளின் கீழ், தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டதும் விம்மி அழுதான் கசாப். மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியென, அறிவிக்கப்பட்ட கசாப்பிற்கு நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. தண்டனை விபரங்களை நீதிபதி தகிலியானி அறிவித்த போது, "தனக்கு தண்ணீர் வேண்டும்' என, கசாப் கேட்டான். பின்னர் தீர்ப்பை கேட்டதும் விம்மி அழுதான். தண்டனை விபரங் களை வாசித்து முடித்ததும், கசாப்பிடம் இந்தியில் சில விபரங்களை நீதிபதி கூறினார். அதில், "ஐந்து பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது என்றும், நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?' என்றும் வினவினார். உடன் எதையும் சொல்ல விரும்பவில்லை என, கசாப் கூறினான். பின்னர் அவனை சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு: அகில இந்திய முஸ்லிம் "பெர்சனல்' சட்ட வாரிய துணை தலைவர் கல்பே சாதிக் கூறுகையில், "ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்த கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான். அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களை, பல முறை தூக்கிலிட வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கருணை காட்ட முடியாது என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது' என்றார். முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் காலித் ரசீத் பிராஞ்சிமகிலி கூறுகையில், "இந்திய நலனுக்கு விரோதமாக செயல்படுவோருக்கு, இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் நபர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றார். மரண தண்டனை எப்போது நிறைவேறும்: மும்பைத் தாக்குதல் வழக்கில் கசாப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அந்த தண்டனையை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நபர்களில் கசாப் 30வது நபர். சிறப்பு கோர்ட் நீதிபதி தகிலியானி நேற்று மரண தண்டனையை அறிவித்தது, இந்த வழக்கில் முதல் கட்ட நடவடிக்கையே. இந்த தண்டனைக்கு, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகள் பிரிவு 366ன் கீழ், மும்பை ஐகோர்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே நேரத்தில், கசாப் தரப்பிலும் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படலாம். அப்படி அப்பீல் செய்யப்பட்டால், வழக்கின் அனைத்து சாட்சிகளும் மீண்டும் விசாரிக்கப்படுவர். பின்னர் தான் தண்டனையை அப்படியே உறுதி செய்யலாமா அல்லது குறைக்கலாமா என்பதை மும்பை ஐகோர்ட் முடிவு செய்யும். கசாப்பிற்கான மரண தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தாலும், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பு உண்டு. அப்படி அப்பீல் செய்யப்பட்டால், முந்தைய தீர்ப்புகள் உட்பட அனைத்து அம்சங்களையும் சுப்ரீம் கோர்ட் தீவிரமாக பரிசீலித்து தீர்ப்பு வழங்கும். சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்தால், அரசியல் சட்டத்தின் 72வது பிரிவின் கீழ், ஜனாதிபதியிடம், கசாப் கருணை மனு அளிக்கலாம். கருணை மனு நிராகரிக்கப்பட்டால் மட்டுமே தண்டனையை நிறைவேற்ற முடியும். தற்போது, ஜனாதிபதியிடம் மரண தண்டனை கைதிகள் 29 பேர் தாக்கல் செய்துள்ள கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதில், பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல், சந்தன வீரப்பனின் கூட்டாளிகள் சிமோன், ஞானபிரகாஷ், மாதய்யா, ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற முருகன், சாந்தன் மற்றும் அறிவு ஆகியோர் தாக்கல் செய்த கருணை மனுக்களும் உள்ளன. இவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுத்த பின்னரே, கசாப் மனு மீது முடிவு எடுக்கப்படலாம். இதையெல்லாம், பார்க்கும் போது, கசாப்பிற்கு இப்போது மரண தண்டனை நிறைவேற்றப்படாது. பல ஆண்டுகளாகலாம். தாமதமின்றி தூக்கை நிறைவேற்ற வேண்டும்: கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை, மும்பை தாக்குதல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றிய சர்மா என்பவர், மும்பை தாக்குதல் சம்பவத்தில் பலியானார். அவரின் மனைவி ராகினி கூறுகையில்,"கசாபுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை நிம்மதி அளிக்கிறது. ஆனால், இதன்மூலம் எனக்கு ஏற்பட்ட சோகம் தீர்ந்து விடாது. அந்த வலி எப்போதுமே என்னுடன் இருக்கும்' என்றார். மும்பை தாக்குதலில் சப் -இன்ஸ்பெக்டர் துகாராம் ஓம்பலும் பலியானார். அவரின் மகள் விசாலி கூறுகையில், "கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. என் தந்தையின் தியாகத்துக்கு பலன் கிடைத்து விட்டது. எந்தவித தாமதமும் இல்லாமல் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என்றார். மும்பை தாக்குதலில் பலியான தேசிய பாதுகாப்பு படை வீரர் சந்தீப்பின் தந்தை உன்னி கிருஷ்ணன் கூறுகையில், "தாக்குதல் சம்பவத்தின்போது ஒரே விநாடியில், துப்பாக்கியில் இருந்து வெளியான தோட்டா, எங்களின் எதிர்காலத்தை சீரழித்து விட்டது. ஆனால், இந்த கொடிய குற்றத்தை செய்த பயங்கரவாதிக்கான தண்டனையை அறிவிப்பதற்கு 17 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது' என்றார். கசாப் வேறு சிறைக்கு மாற்றப்படுவானா: "கசாப்பை மும்பையில் வைத்திருப்பதா, வேறு இடத்துக்கு மாற்றுவதா என்பது குறித்து, இன்று முடிவு செய்யப்படும்' என, மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பாட்டீல் கூறினார். மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கூறுகையில்,"மும்பைத் தாக்குதல் வழக்கில் தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். இனிமேல் கசாப்பை மும்பையில் தொடர்ந்து வைத்திருப்பதா, அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதா என்பது குறித்து நாளை (இன்று) முடிவு செய்யப்படும்' என்றார். முதல் முறையாகமும்பைத் தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணையில், இதற்குமுன் எந்த வழக்கிலும் நடந்திராத சில சம்பவங்கள் நடந்துள்ளன. முதலாவதாக, அமெரிக்க உளவுத் துறையான எப்.பி.ஐ., அதிகாரிகள், இந்த வழக்கில் நேரடியாக வந்து கோர்ட்டில் முக்கிய சாட்சியம் அளித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்ட கருவிகளை ஆய்வு செய்து, அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்ற உறுதியான தகவலை எப்.பி.ஐ., அதிகாரிகள்தான் உறுதி செய்தனர். இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு விசாரணைகளில் இந்த வழக்கு தான், மிகக் குறுகிய காலத்தில் முடிந்தது. கடந்த 1993ல் நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு பத்தாண்டுகளுக்கு மேல் நடந்தது. பாக்., கருத்து: பாக்., வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் கூறியதாவது: கசாபுக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள, சட்ட நிபுணர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளோம். மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலை பாகிஸ்தான் எப்போதும் கண்டிக்கும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. கசாப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு, பாகிஸ்தானுக்கான எச்சரிக்கை என, இந்திய தரப்பில் சிலர் கூறியது குறித்து கேட்கப்படுகிறது. இந்த நேரத்தில், இரு தரப்பு உறவை பாதிக்கும் வகையிலான எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அப்துல் பாசித் கூறினார். அமெரிக்கா கருத்து: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர் கூறுகையில்,"இந்த வழக்கில் அமெரிக்கா சார்பில் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. இது இந்தியாவில் நடந்த வழக்கு. இந்திய சட்டமுறை இதில் பின்பற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் உறுதியான, சரியான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம்' என்றார். மேல் முறையீடு எப்போது? "கசாபுடன் பேசிய பின், தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்' என, கசாபுக்காக ஆஜரான வக்கீல் பவார் கூறியுள்ளார். அஜ்மல் கசாபுக்காக கோர்ட்டில் ஆஜரான வக்கீல் பவார் கூறியதாவது: கசாபுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விமர் சிக்க விரும்பவில்லை. இந்த தீர்ப்பில் கசாபுக்கு விருப்பம் இல்லையெனில், இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவருக்கு உரிமை உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கசாபுடன் பேசிய பின், முடிவு எடுக்கப்படும். கசாபுக்காக இந்த வழக்கில் முடிந்த அளவு வாதாடி னேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை, எனக்கு ஏற்பட்ட தோல்வியாகக் கருத முடியாது. நான் ஒரு வக்கீல். வழக்கில் வெற்றியும், தோல்வியும் சகஜம். இதை தெரு சண்டையைப் போல் கருதக்கூடாது. இவ்வாறு பவார் கூறினார். வரலாற்றில் பல புதுமை: மும்பைத் தாக்குதல் வழக்கில், இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடந்திராத பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த வழக்கில் இதுவரை எந்த வழக்கிலும் நிகழ்ந்திராத ஒன்றாக, அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர். நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில், முதல்முதலாக பயங்கரவாதி ஒருவன் பிடிபட்டது மும்பைத் தாக்குதலின் போதுதான். கடந்த 1993ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த நிலையில், அதுபோன்று இழுத்தடிக்காமல் இந்த வழக்கு ஓராண்டிற்குள் முடிவுக்கு வந்துள்ளது. மேலும், பயங்கரவாதி கசாப் அடைக்கப்பட்டிருந்த ஆர்தர் ரோடு சிறையைச் சுற்றிலும், இந்தோ - திபெத் எல்லைப் போலீஸ் படையினர் தீவிர காவலில் ஈடுபட்டிருந்தனர். இந்த துணை ராணுவப் படையினர், இதுபோன்ற காவல் பணியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. இப்படி பல வகையிலும் மும்பைத் தாக்குதல் வழக்கு மாறுபட்டதாகவே இருந்தது.
இந்தியா
பார்லியை நேற்றும் கலக்கியது ஸ்பெக்ட்ரம்: அ.தி.மு.க - தி.மு.க., எம்.பி.,க்கள் வாக்குவாதம்
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு குறித்த பிரச்னையால், பார்லிமென்டின் இரு அவைகளும் நேற்றும் கலகலத்தன. இந்த விவகாரத்தை விசாரிக்க பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென்றும், பிரதமரே அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ரகளை பண்ணவே, பதிலடி யாக தி.மு.க., எம்.பி.,க் கள் தங்களது எதிர்ப்பை காட்ட முற்படவே வேறு வழியின்றி இரு அவைகளுமே சிறிது நேரம் ஒத்திவைக்க நேர்ந்தன. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பிரச்னை கடந்த மூன்று நாட்களாக பார்லிமென்டில் எதிரொலித்தபடி இருந்தது. ராஜ்யசபா நேற்று கூடியதும் அவைத் தலைவர் அன்சாரி கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள முற்பட்டார். அப்போது, அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மைத்ரேயன் தலைமையில் எழுந்து ஸ்பெக்ட்ரம் பிரச்னை குறித்து பேச அனுமதிக்க வேண்டுமென கோரியும் அமைச்சர் ராஜாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியும் இருந்தனர். இதனால் கேள்வி நேரத்தை நடத்த முடியாமல் 10 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப் பட்டது. பின்னர் அவை கூடியபோதும், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் இதே பிரச் னையை கிளப்பவே அன் சாரி கோபமடைந்தார். கேள்வி நேரம் பாதிக்கப் படுவதை தன்னால் ஏற்க முடியாது என்று கூறி தன் அதிருப்தியை தெரிவித்தார். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்படாத நிலையில், வேறு வழியின்றி, அ.தி.மு.க., எம்.பி.,க்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதேபோல், லோக்சபாவிலும் இப்பிரச்னை கிளப்பப்பட்டது. ஸ்பெக்ட்ரம் பிரச்னை குறித்து பேச அனுமதிக்க வேண்டுமென தொடர்ந்து அ.தி.மு.க., எம்.பி.,க்கள் வலியுறுத்தியபடி இருந்ததால், தம்பிதுரைக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஜீரோ நேரத்தின் போது இந்த வாய்ப்பை சபாநாயகர் மீரா குமார் வழங்கினார். தம்பிதுரை எழுந்து பேச ஆரம்பித்தபோது, ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளது ஸ்பெக்ட்ரம் 2 ஜி பிரச்னை என்று கூறியபடி தொடரவே, தி.மு.க., எம்.பி.,க்கள் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்தனர். டி.ஆர்.பாலு தலைமையில் இளங்கோவன், விஜ யன் கடுமையாக எதிர்த் தனர். தம்பிதுரை பேசியதை எதிர்த்து ஒழுங்குப் பிரச்னை கொண்டு வருவதாக பாலு கூறவே, பிரச்னை பெரிதானது. அ.தி.மு.க., எம்.பி., செம்மலை எழுந்து, இன்னும் தம்பிதுரை பேசவே ஆரம் பிக்கவில்லை அதற்குள் என்ன தவறாக பேசிவிட்டார் என்று கேட்டார். இதனால், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே வாக்குவாதம் நடந்தது. தம்பிதுரையை பேச விடாமல் பாலு தடுப்பதை பார்த்த பா.ஜ., எம்.பி.,க்கள் சுஷ்மா சுவராஜும், யஷ்வந்த் சின்காவும் எழுந்து, "அ.தி. மு.க., எம்.பி.,க்களின் பேச்சு உரிமையை பாலு தடுக்கப்பார்க்கிறார்; இது நியாயம் அல்ல' என்றனர். இதற்கிடையில் தம்பிதுரை பேசும்போது, "ஸ்பெக்ட்ரம் பிரச்னை குறித்து விசாரிக்க பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்க வேண்டும். 2 ஜி ஏலத்தில் விடப்பட்ட விவகாரம் முழுக்க விசாரிக்க வேண்டும். இப்பிரச்னை குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரித்து அறிக்கை தந்துள்ளது. சி.பி.ஐ.,யும் விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ., விசாரணையின் உண்மையான நிலை என்ன என்பதை அவைக்கு பிரதமர் தெரிவிக்க வேண்டும்' என்றார். முழுவதும் கூச்சல் குழப்பமாகி ஒரே அமளியாக இருந்தது. வேறு வழியின்றி மதியம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.                                                                                                 - நமது டில்லி நிருபர் -
General
தலிபானுடன் பயங்கரவாதி ஷசாத் தொடர்பு: மிரள வைக்கும் தகவல்கள் அம்பலம்
நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்த ஷசாத், பாகிஸ் தானில் உள்ள பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எப்.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிக் கின்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக் கத்தில் கடந்த 1ம் தேதி, கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. இந்த காரில் இருந்து புகை வந்ததால் உஷாரடைந்த போலீசார், உள்ளே குண்டு இருப்பதை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர். கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த படங்களை போலீசார் பார்த்த போது, பைசல் ஷசாத் என்ற நபர் இங்கு காரை நிறுத்தியது தெரிந்தது. உடனடியாக அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதற்குள் ஷசாத், துபாய் விமானத்தில் தப்பிக்க விமான நிலையத்துக்கு அவசரமாகச் சென்றான். அவனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஷசாத்(30) பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந் தவன். இவருடைய தந்தை பாகிஸ்தான் விமானப்படை துணைத் தளபதியாக இருந்தவர். பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்றதையும், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்ததையும் எப்.பி.ஐ., அதிகாரிகளிடம் ஷசாத் ஒப்புக் கொண்டுள்ளான். அமெரிக்க மக்களை கொல்லும் நோக்கில் அவன் காரில் குண்டு வைத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மன் ஹாட்டன் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஐந்து மாதங் களுக்கு மேல் ஷசாத் தங்கியிருந்துள்ளான். அந்த காலகட்டத்தில் அவன் என்ன செய் தான், யாரையெல்லாம் சந்தித் தான் என்பது குறித்து அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். டைம் சதுக்கத்தில் வைக்கப் பட்ட குண்டுக்கு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு பொறுப் பேற்றது. ஆனால், அமெரிக்கா முதலில் இதை மறுத்தது. ஷசாத், பாகிஸ்தான் சென்ற போது தலிபான் அமைப்பின் முக்கிய தளபதி கோரி ஹூசைன் என்பவரை சந்தித்துப் பேசியுள்ளான். அதன் பிறகு, ஜெய்ஷ் -இ- முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ரெகான் என்பவரையும் ஷசாத் சந்தித்துள்ளான். இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்தே சென் றுள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த பாகிஸ்தான் போலீசார், கராச்சியில் முகமது ரெகானை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். எனவே, இந்த நடவடிக்கைகளையெல்லாம் பார்க்கும் போது ஷசாத்துக்கும், பாகிஸ் தான் பயங்கரவாத அமைப் புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வருகிறது என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அமெரிக்க நெருக்கடியின் பேரில், ஷசாத்துடன் சம்பந்தப் பட்டதாகக் கருதப்பட்ட ஏழு பேர், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. குண்டு பீதி: நியூயார்க்கில் ராபர்ட் கென்னடி பாலம் அருகே லாரி ஒன்று நேற்று தனியாக நின்றிருந்தது. இதனால் உஷாரடைந்த போலீசார், பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து விட்டு, வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று அந்த லாரியை பரிசோதித்தனர். ஆனால், அந்த லாரியில் வெடிகுண்டு ஏதும் இல்லையென பின்னர் தெரிய வந்தது. அதேபோல, நியூயார்க்கை நடுங்க வைத்த ஷசாத் எப்படி விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டான் என்ற கேள்விக்கும் விடை கிடைத் திருக்கிறது. ஷசாத் பெயரில் பயணம் செய்யும் எவரையும் விமானங் களில் அனுமதிக்கக்கூடாது; அப்படியிருந்தால், அதை சரி பார்த்து அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், எமிரேட்ஸ் விமானத்தில் புதிதாக டிக்கெட் வாங்கி சாமர்த்தியமாக நியூயார்க்கில் அவன் நுழைந்தான். ஆகவே, இனி "விமானத்தில் பறக்க தடை' உத்தரவு பிறப் பிக்கப்பட்டால், அதை அதிக கவனமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விமான அதிகாரிகளுக்கு கட்டளையிடப்பட் டிருக்கிறது.
தமிழகம்
நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்
ஈரோடு: தலைவலி நோயை பயன்படுத்தி கட்டாய மதம் மாற்றம் செய்த பெண், திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்ததாகவும், கிறிஸ்துவ அமைப்பினர் சிலர் கட்டாய மதம் மாற்றம் செய்வதாக கருங்கல்பாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகேந்திரன்(35), ஆயில் மில் தொழிலாளி. அவரது மனைவி சுமதி(28). அவர்களுக்கு ஆனந்தகுமார் (12), பொற்கொடி(10) என இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி சில ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள "புது சிருஷ்டி சபை' என்ற கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் சிலர், கமலா நகர் பகுதி மக்களிடம் மதம் மாறச் சொல்லி பிரசங்கம் செய்துள்ளனர். சுமதி தலைவலியால் அவதிப்படுவதை அறிந்த நிர்வாகிகள், அவரை சந்தித்தனர். "சபைக்கு வந்து "ஜெபம்' செய்தால் உங்கள் நோய் குணமாகி விடும்' என, கூறியுள்ளனர். சுமதியும் கச்சேரி வீதியில் உள்ள சபைக்கு சில வாரங்களாக சென்று ஜெபம் செய்துள்ளார். அமைப்பு நிர்வாகிகள், பல்வேறு இடங்களில் நடக்கும் ஜெப கூட்டத்துக்கு சுமதியை அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெப கூட்டத்துக்காக சுமதி, தன் குழந்தைகள் மற்றும் உறவினர் பெண் ஒருவருடன் சென்றுள்ளார். ஜெபக்கூட்டத்தில் இருந்த சுமதிக்கு நேற்று முன்தினம் காலை திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பாதிரியார், சுமதியின் தலையில் கை வைத்து ஜெபம் செய்து, "சிறிது நேரத்தில் சரியாகி விடும்' என, கூறியுள்ளார். ஆனால், சுமதி திடீரென இறந்து விட்டார். மாத்திரை சாப்பிட அனுமதிக்காமல், ஜெபம் செய்ததால் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்துள்ளார். சுமதியுடன் சென்ற உறவினர் பெண் கூறியதாவது: சுமதிக்கு அடிக்கடி தலைவலி வரும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தினசரி மாத்திரை சாப்பிட்டு வருகிறார். புது சிருஷ்டி சபையை சேர்ந்த நிர்வாகிகள், "சுமதிக்கு நோய் சரியாகி விடும்' என கூறி கட்டாய மதம் மாற்றினர். அதைத்தொடர்ந்து ஜெப கூட்டங்களில் சுமதி கலந்து கொண்டார். திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்தில் கலந்து கொள்ள சுமதி மற்றும் அவரது குழந்தைகளுடன் சென்றிருந்தேன். நேற்று (நேற்று முன்தினம்) காலை ஜெப கூட்டம் நடந்தபோது, சுமதிக்கு தலைவலி ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள பாதிரியாரிடம் கூறினேன். அவர், "சுமதிக்கு "பேய்' பிடித்துள்ளது. ஜெபம் செய்தால் போய்விடும்' எனக் கூறி, சுமதி தலையில் கை வைத்து ஜெபித்து விட்டு சென்றார். சிறிது நேரத்தில் சுமதிக்கு அதிகளவில் வலி ஏற்பட்டது. "மாத்திரை கொடுக்கலாம்' என, பாதிரியாரிடம் கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். தலைவலி அதிகமாகி மயங்கி விட்டார். ஜெப கூட்ட நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலம் எங்களை அனுப்பி வைத்தனர். வரும் வழியில் சுமதி இறந்து விட்டார். ஆம்புலன்ஸில் ஜெப கூட்டத்தை சேர்ந்த மூன்று பேர் வந்தனர். வெப்படை அருகே இருவரும், ஈரோட்டில் ஒருவரும் இறங்கி விட்டனர். நாங்கள் மட்டுமே வீட்டுக்கு வந்தோம். மாத்திரை சாப்பிட அனுமதித்திருந்தால் சுமதி இறந்திருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினர். கமலா நகரை சேர்ந்த மக்கள் கூறுகையில், ""கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த சிலர் தினசரி வந்து, கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர். மதம் மாறினால் பல நன்மை ஏற்படும் என பிரசங்கம் செய்கின்றனர்,'' என்றனர். சுமதியின் உறவினர்கள் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றனர். சுமதி சந்தேக மரணமடைந்ததாக நேற்று மாலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு அருகே சொட்டையம்பாளையத்தில் ஏப்ரல் 25ம் தேதி தாசில்தார் உள்பட ஆறு பேர் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த மக்கள் ஆறு பேரை சிறை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கருங்கல்பாளையத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம்
போலீஸ் குறைகளை தீர்ப்பாரா முதல்வர்?
மதுரை:தமிழக சட்டசபையில், போலீஸ் மானியக் கோரிக்கை குறித்த விவாதம் இன்று நடக்கிறது. இதற்கு, வரும் 10ம் தேதி முதல்வர் கருணாநிதி பதிலளிக்கிறார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வரும் போலீஸ் துறையில் தீர்க்கப்படாத குறைகள் ஏராளம். அதற்கு துறை அமைச்சர் என்ற முறையில், மானிய கோரிக்கை குறித்த விவாதங்களுக்கு, முதல்வர் கருணாநிதி பதிலளித்து தீர்வு காண்பார் என போலீசார் நம்புகின்றனர். முதல்வரின் கவனத்திற்கு:அனைத்து ஆயுதப்படை மைதானத்திலும், கழிவறை வசதியுடன் போலீஸ் ஓய்வு அறைகள் அமைக்க வேண்டும். வெளியூரில் இருந்து வரும் போலீசாருக்கு சலுகை விலையில் உணவு கேன்டீன் ஏற்படுத்த வேண்டும்.ஏட்டுக்கும், எஸ்.ஐ.,க்கும், "கிரேடு பே' வித்தியாசம், முன்பு ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 3,000 ரூபாயாக உயர்ந்துவிட்டது. ஒருநபர் கமிஷன் பரிந்துரைத்தபடி, ஏட்டுகளுக்கு 2,400லிருந்து 3,200 ரூபாயாக உயர்த்த வேண்டும். இடநெருக்கடியில் உள்ள மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை, அழகர்கோவில் ரோட்டிற்கு இடமாற்றும் கோப்புகள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்த ஆண்டிலாவது அதை இடமாற்ற வேண்டும்.அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வருவதற்கு முன், குறிப்பிட்ட மருத்துவமனையில் போலீசாரும், அவர்களது குடும்பமும் சிகிச்சை பெற்றால், அந்த செலவை அரசு ஏற்றது. ஐந்தாண்டுகளாக இந்த செலவு தரப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.ஆயுதப்படை, சிறப்பு பட்டாலியன் படை மற்றும் நகரங்களில் உள்ள பாழடைந்த போலீஸ் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, நவீன குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும். பழுதடைந்த வீடுகளை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.கடந்தாண்டு மானியக் கோரிக்கையின்போது, போலீசிற்கு, "மெடல் அலவன்ஸ்' 50லிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்ட தொகை இதுவரை தரப்படவில்லை. "விடுமுறையில் பணியாற்றுவதற்கான இ.டி.ஆர்., தொகை இரட்டிப்பாக்கப்படும்' என்ற அறிவிப்பு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. தற்போது போலீசார் நேரம், காலமில்லாமல் உழைப்பதால், மன அழுத்தம் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். விடுமுறை எடுப்பதும் சிரமம். இதைத் தவிர்க்க, மூன்று ஷிப்ட முறையை அறிமுகப்படுத்தினால் மட்டுமே போலீசாரை காப்பாற்ற முடியும்.விடுமுறை நாட்கள் பொருந்தாத போலீஸ் துறையில், கூடுதல் நேர ஊதியப்படியாக நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையை 500 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
தமிழகம்
இது உங்கள் இடம்
எது மனித உரிமை? சி.ஜெயக்குமார், ஓ.மேட்டுப்பட்டி, சாத்தூரிலிருந்து எழுதுகிறார்: ஊர் கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தலைமை காவலர் (நாகரத்தினம்) அரிவாளால் வெட்டப்பட்டு இறந்தார். இறந்த 36 மணி நேரத்திற்குள், வெட்டிய ரவுடியை காவல்துறை கண்டுபிடித்து, என்கவுன்டரில் சுட்டுத் தள்ளியது. இதில், விஷயம் என்னவென்றால், ரவுடியை சுட்டுக் கொன்ற அன்று விசாரணைக்கு ஊர் மக்கள் சிலர் சென்றோம். அதில் நானும் ஒருவன். அப்போது மனித உரிமை கழகத்தில் இருந்து, அதன் பொறுப்பில் உள்ள சிலர், "ரவுடி குமாரை சுட்டுக் கொன்றது, மனித உரிமை மீறிய செயல்' என்ற கோணத்தில் கருத்துக் களை சேகரிக்க வந்துள்ளனர். இதன் விவரத்தை அறியாமல் இருந்த என்னிடம், "ரவுடி குமாரை சுட்டுக் கொன்றது, பற்றி கருத்து கூறுங்கள்...' என்றனர். நானும், "ஒரு மனிதனின் உயிரை பறிப்பதற்கு ஒரு தனிப்பட்ட நபருக்கோ, அமைப்பிற்கோ, ஏன் நீங்கள் நம்புகிற கடவுளுக்கோ உரிமை இல்லை...' என்றேன். மனித உரிமை அமைப்பினருக்கோ மிக்க சந்தோஷம். நான் ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்டேன். "காவலருடைய உயிர் மட்டும் உயிரில்லையா, அவர் உயிரை எடுப்பதற்கு ரவுடி குமாருக்கு என்ன உரிமை உள்ளது?' என்றேன். தொடர்ந்து, "ரவுடியை சுட்டுத் தள்ளியதற்கு உங்கள் அமைப்பு தீவிரமாக எதிர்ப்பு காட்டுகிறதே, அதே நேரத்தில், காவலரை போட்டுத் தள்ளிய ரவுடி குமாருக்கு மட்டும் எதிர்ப்பை நீங்கள் காட்டவில்லையே ஏன்? ரவுடியின் உயிரை விடவா காவலரின் உயிர் மதிப்பு குறைந்து விட்டது. "ரவுடியை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தால், உடனடியாக ஜாமீனில் வெளியே வந்துவிடுவான். சாட்சிகள் இல்லாததால், நீதிமன்றமும் விடுதலை செய்துவிடும்; இல்லை என்றால், பத்து வருடம் சிறை. "மீண்டும் ஒரு காவலரையோ அல் லது பொதுமக்களையோ அவன் அரிவாள், பதம் பார்க்க கிளம்பிவிடும். எனவே, தவறுகள் குறைய தண்டனைகள் அதிகரிக்க வேண்டும்; அவையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தவறுகள் குறைந்த செழித்த சமுதாயத்தில் மனிதன் உரிமையோடு வாழ முடியும்' என்றேன். இக்கருத்தை அவர்கள் முழுவதும் ஆதரிக்கவில்லை. மனித உரிமை அமைப்பினர், மனிதனே இல்லாத இந்த மிருகத்திற்கு (ரவுடி) போராடுவதா? இறந்துபோன காவலருடைய மனைவி, குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழித்த இந்த (ரவுடி) மிருகத்திற்கு துணை போகும் இந்த அமைப்புகள், சற்று சிந்தித்து செயல்பட்டால் நல்லது. ரூ.50 கோடி போதாதா? எ.ராமசாமி, கோவையிலிருந்து எழுதுகிறார்: இந்தியாவில் சமீபத்தில் பிடிபட்ட கொள்ளைக்காரன் கேதன் தேசாய், அர்ஷத் மேத்தாவையும், பூலான் தேவியையும் மிஞ்சிவிட்டான். அட, எப்படித்தான் சொகுசாக வாழ்ந்தாலும், ஒரு கோடிக்கு ஒரு வீடு. வாழ்நாள் பூராவும் படுத்து கொண்டே சாப்பிட, 50 கோடி ரூபாய். இதற்கு மேல் என்ன வேண்டும்? ஆனால், கொள்ளைக்காரன் வீட்டில் எடுத்த புதையலோ பயங்கரமாக இருக்கிறது. ஒரு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்க, 50 கோடி ரூபாய் லஞ்சமாம். ஆனால், சாதாரண குடிமகன் தன் பிள்ளையை மருத்துவ கல்லூரியில் சேர்க்க, ஒரு சீட்டிற்கு 30 முதல் 60 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் என்ற, உயரிய பதவியில் ஏன் ஒருவரையே பல வருடங்கள் விட்டு வைக்க வேண்டும். இது அரசுக்கு தெரியாதா? புலனாய்வு துறை, லஞ்ச ஒழிப்பு துறை எல்லாம் தூங்கி கொண்டா இருந்தது? அட... குழியில் தள்ளும் போது அரைஞாண் கயிற்றை கூட அறுத்து எடுத்து விட்டுத்தானே புதைக்கின்றனர். அரசு உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இது கூடவா தெரியாது. தெரிந் தால் என்ன? இது இந்தியா தானே. இன்னும் எத்தனை கேதன் தேசாய்கள் இருக்கின் றனரோ... ஆண்டவனுக்கே வெளிச்சம். சோற்றில் பூசணிக்காய்! இள.புகழேந்தி, போத்தனூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: "தி.மு.க., ஆட்சி பொறுப் பேற்ற பிறகு, பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை' என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு. இதை அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்களும் நம்பலாம். ஏனென்றால், இவர்கள் காரில் போகிறவர்கள்; பஸ்சில் பயணம் செய்கிறவர்கள் அல்ல. ஆனால், ஆறு கோடி அப்பாவித் தமிழர்களில் ஒருவர் கூட, இதை நம்ப மாட்டார்கள். ஏனென்றால், தினமும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணம் செய்கிறவர்கள். ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிராக பஸ்சுக்காக நிற்பேன். அப்போது மஞ்சள் போர்டு மாட்டிய பஸ் வரும். நான் ஏறப் போவேன். அங்கிருக்கும் சென்னைவாசிகள், "சார், இதில் ஏறாதீர்கள்; கட்டணம் அதிகம். பின்னாலேயே வெள்ளை நிற போர்டு மாட்டிய பஸ் வரும்; அதில் கட்டணம் குறைவு. கொஞ் சம் வெயிட் பண்ணுங்கள்' என்பர். சென்னை சிட்டி பஸ் போக்குவரத்து முற்றிலுமாக அரசு கட்டுப்பாட்டில் இருக் கும்போதே இந்த நிலைமை. கோவையில் தனியார் பஸ்களும் ஓடுகின்றன. அவை உண்மையிலேயே அரசின் சொகுசு பஸ்களை விட, சொகுசாக இருக்கின் றன. சில பஸ்களில், "டிவி' கூட உண்டு; ஆனால், கட்டணம் குறைவு. வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டு, சொகுசு, தாழ்தள, மிதவை பஸ் என்று பெயரை மாற்றி, வேறு வேறு கட்டணம் வசூலிக்கும் அமைச்சர், "கட்டணம் உயர்த்தப்படவில்லை...' என்று சட்டசபையில் கூறுவது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானது. ஜெயலலிதா தெரிந்து கொள்ள வேண்டும்! கே.கயல்விழி, கவுண்டம் பாளையம், கோவையிலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதாவும், கருணாநிதியும் எதிரிகள்; எலியும், பூனையும் போன்றவர்கள். யார் பதவியில் இருக்கின்றனரோ, அவர் பூனை, மற்றவர் எலி. இதைத்தான் வள்ளுவர் பெருமான், "இகல்' என்று குறிப்பிடுகிறார். பிறப்பொக் கும் என்பது பொருந்தாது. அது உண்மையானால், மனிதர்கள் ஏன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர்? மொழி, மதம், ஜாதி மற்றும் நிறத்தினாலும் மனிதர்கள் எப்போதும் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டே இருக் கின்றனர். அரசியல்வாதிகள் மணலை, மலை ஆக்குவர்; மலையை மணல் ஆக்குவர். ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு போட்டனர். அப்படி போட்டவர்கள் எல்லாம் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்களா? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தி.மு.க., குடும்பத்தினர் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு போடவும், ஜெயலலிதா முதல்வர் ஆனால் மட்டும் போதாது; மத்திய அரசின் தயவும், பாதுகாப்பும் வேண்டும். இப்போது கூட ஆ.ராசா மீது, ஸ்பெக்ட்ரம் குற்றச் சாட்டை பார்லிமென்டில் எழுப்பியபோது, அ.தி.மு.க.,வுக்கு பக்கபலமாக இருந்து குரல் கொடுத்தவர்கள் பா.ஜ.,வினர் தான். தற்போது பா.ஜ.,வுக்கு தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சி அதுதான். இன்று அதற்கு 161 எம்.பி.,க்கள் இருக்கின்றனர். இது, 261 ஆக மாற, வாய்ப்பு இருக்கிறது. இதை உணர்ந்து ஜெயலலிதா, அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்தியா
காசிரங்கா பூங்காவில் புலிகள் எண்ணிக்கை உலகிலேயே முதலிடம்
கவுகாத்தி: உலகிலேயே, புலிகள் அதிக எண்ணிக்கையில்  வசிக்கும் பகுதியாக அசாமில் உள்ள காசிரங்கா வனவிலங்கு பூங்கா அடையாளம் காணப்பட்டுள்ளது. அசாம் வனத் துறையினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆராநாயக் என்பவரும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகிலேயே புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதி எது  என்பதை அறிந்து கொள்வதற்காக ஆய்வு மேற்கொண் டோம்.  காசிரங்காவில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அடர்த்தியாக உள்ளது என்பதை அறிவதற்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டோம். பூங்காவில் 144 ச.கி.மீ., பரப்பளவில் நடமாடும் விலங்குகள் பற்றிய எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக, ஆங்காங்கே ரகசியமாக கேமராக்கள் பொருத் தப்பட்டன.  இதில்,100 ச.கி.மீ., பரப்பளவில் 32 புலிகள்  வசிப்பது தெரியவந்தது. இதன் மூலம், உலகிலேயே புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதி கசிரங்கா பூங்கா தான் என்பது தெரியவந்தது.  இந்த 32 புலிகளில் ஒன்று குட்டி. 50 நாட்கள் இந்த கேமரா கண்காணிப்பு நடந்தது.  இந்தியாவில் உள்ள மற்ற வனவிலங்கு பூங்காக்களில் 100 ச.கி.மீ., பரப்பளவில் சராசரியாக மூன்றில் இருந்து 12 புலிகள் தான் வசிக்கின்றன.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: மனித நேய அகடமியில் 43 பேர் வெற்றி
சென்னை: ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர், முதல் 25 இடங்களுக்குள் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் 30 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், முதலிடம் பெற்ற 25 பேரில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர். சைதை துரைசாமி மனித நேய ஐ.ஏ.எஸ்., அகடமியில் படித்த 43 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் தேர்வாகிய 875 பேரில், 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்கள். தேர்வின் முக்கிய அம்சங்கள்: இந்திய சிவில் பணிகள் தேர்வுக்கு மொத்தம் நான்கு லட்சத்து 9,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 91 பேர் முதல் கட்ட தேர்வு எழுதினர். இதில், 12 ஆயிரத்து 26 பேர் முக்கிய எழுத்து தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இதில் 2,432 பேர் கடந்த மார்ச் - ஏப்ரலில் நடத்தப்பட்ட ஆளுமைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 195 பெண்கள் உட்பட 875 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.  ஸ்ரீநகரில் மருத்துவ பட்டம் பெற்ற டாக்டர் ஷாபேசல் முதலிடம் பிடித்தார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். டில்லியைச் சேர்ந்த பொறியாளர் பிரகாஷ் ராஜ் புரோகித் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இது இவரது இரண்டாவது முயற்சி. பெண்களில், டில்லியைச் சேர்ந்த எம்.ஏ., பட்டதாரி இவா சகாய் முதலிடம் பெற்றுள்ளார். இது இவரின் முதல் முயற்சி. முதலிடம் பெற்ற 25 பேரில், 10 பேர் பெண்கள். முதல் 25 இடம் பெற்றவர்களில் 15 பேர் டில்லியைச் சேர்ந்தவர்கள். சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து தலா இரண்டு பேரும், அலகாபாத், சண்டிகர், கட்டாக், ஐதராபாத்தில் இருந்து தலா ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் பணிகளுக்கான நியமனத்திற்கு தேர்வு பெற்றுள்ள 875 பேரில் 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்கள்; இதில் ஐந்து பேர் பார்வையற்றவர்கள். மனித நேய ஐ.ஏ.எஸ்., கல்வியக மாணவர்கள் சாதனை: சென்னையில் சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம் இயங்கி வருகிறது. 2006ம் ஆண்டு முதல் செயல்படும் இந்த கல்வியகத்தில் இதுவரை ஏராளமானோர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்கு பயிற்சி பெற்ற 42 பேர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2009 -10ம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வில் இங்கு பயிற்சி பெற்ற 83 பேர் பங்கு பெற்றனர். இதில் 32 மாணவர்களும், 11 மாணவியர் என 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் இந்திய அளவில் லலிதா 12வது இடமும், முதன் முறையாக தேர்வெழுதிய சண்முகப் பிரியா 36வது இடமும், சிவகுமார் 38வது இடமும், நிவாஸ் 45 வது இடமும், வினோத்பிரியா 62வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சிவகுமார் ரயில்வேயிலும், நிவாஸ் டி.எஸ்.பி.,யாகவும், வினோத்பிரியா வங்கியிலும் பணிபுரிகின்றனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமித் குல்வானி போலே என்பவரும், கேரளாவைச் சேர்ந்த சரண் ஜோஸ் என்பவரும் மனித நேய கல்வியகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை மனித நேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி, பயிற்சி இயக்குனர் வாவூசி, ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஆகியோர் பாராட்டினர். இதே போல் சென்னை கணேஷ் ஐ.ஏ.எஸ்., அகடமியில் பயிற்சி பெற்ற 52 பேர் நேர்முகத் தேர்விற்கு சென்று 31 பேர் அதில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் விருதுநகர் மாவட்டம் புதுக்கோட்டையை அடுத்த செவலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் திருப்பூரில் சாதாரண நிலையில் பணி புரிந்து தன் சுய முயற்சியால் தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அரசு மையத்தில் 49 பேர் தேர்வு: சென்னை அண்ணாநகரில் இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அரசு  சார்பாக நடத்தப்படும் இப்பயிற்சி மையத்தில் விண்ணப்பம் செய்த ஆயிரக்கணக்கான மாணவர்களில், தேர்வு எழுதி அதில் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 300 பேர் மட்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களில் 200 பேருக்கு, பயிற்சி மையத்திலேயே தங்கும் இடம் மற்றும் உணவு அரசின் சார்பில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்திலிருந்து, இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் 49 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கனகவள்ளி(இந்திய அளவில் 15வது ரேங்க்) நிவாஸ்(45வது ரேங்க்) வினோத் பிரியா(62வது இடம்) விக்ரமன்(இந்திய அளவில் 84வது ரேங்க்) பெற்றனர். தேர்வான கனகவள்ளி கூறியதாவது: எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி. அப்பா முத்துக்குமார் ஓய்வு தலைமை ஆசிரியர். அம்மா விமலா குடும்பத்தலைவி. வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். குரூப்-1 பிரிவில் தேர்வாகி, திருச்சியில் உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறேன். சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத் துறையில் உதவியாளராகவும், வணிகவரித்துறையில் உதவி வணிகவரி அலுவலராக சென்னையில் பணி புரிந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளாக மூன்று முறை நேர்முகத் தேர்வு வரை சென்று திரும்பினேன். நான்காவது முறையாக பங்கேற்ற கடைசி வாய்ப்பில் வெற்றி பெற்றேன். எனக்கு வரும் 23ம் தேதி நாகர்கோவில் திருமணம் நடக்கிறது. எனது கணவர் தனேஷ், பொறியியல் பட்டதாரி. எனது வெற்றிக்கு காரணம், எனது அக்கா மற்றும் குடும்பத்தினர் தான். அண்ணாநகர் பயிற்சி மையத்தில் நேர்முகத்தேர்வுக்கான ஒத்திகையில் சீனியர் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். அது தான் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற உதவியாக இருந்தது. இவ்வாறு கனகவள்ளி கூறினார். நிவாஸ் கூறியதாவது: எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவன் நகர்.  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளேன். மூன்று ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளேன். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, சென்னை வண்டலூரில் டி.எஸ்.பி., யாக கடந்த ஆறு மாதமாக பயிற்சி பெற்று வருகிறேன். அப்பா ஜனார்த்தனன், அம்மா ஜெயலட்சுமி அரசு பணியில் ஓய்வு பெற்றவர்கள். மனைவி பபிதா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இவ்வாறு நிவாஸ் கூறினார்.
தமிழகம்
கொஞ்சமாக நூல் விலை குறைந்தாலும் 30ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு : குளிர் கால ஆடை தயாரிப்பில்
திருப்பூர்: நூல் விலை சிறிது குறைந்திருந்தாலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் 30ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 25ம் நம்பர் நூலை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை நீடிப்பதால் குளிர்கால ஆடை உற்பத்தியில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் பனியன் உற்பத்திக்கு தேவையான, காட்டன் ஒசைரி நூல், மதுரை, திண்டுக்கல், வேடசந்தூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய பருத்திக் கழகத்தின் தவறான கொள்கையால் ஒட்டுமொத்த பனியன் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இதனால், நூற்பாலைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசின் பிரதிநிதிகள் நூல் விலையை குறைக்க வலியுறுத்தினர். நிர்பந்தத்தை ஏற்ற நூற்பாலைகளும் மே முதல் கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைப்பதாக உறுதி அளித்தன. இதில், 30ம் நம்பர் நூலை தவிர, அனைத்து "கவுன்ட்'களுக்கும் ஐந்து ரூபாய் விலை குறைப்பு செய்யப்பட்டது. பனியன் உற்பத்தியில் காட்டன் ஒசைரி 30ம் நம்பர் நூல்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும். தற்போது, இந்த நூலுக்கு கிலோவுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேவையான அளவுக்கு நூல் வழங்கப்படுவதில்லை. எனவே, அவசர தேவைக்கு 25ம் நெம்பர் நூலை வாங்கி பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், உற்பத்தி செலவு மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டிப்) தலைவர் மணி கூறியதாவது: ஒரு கிலோ 30ம் நம்பர் நூல் இருந்தால், ஐந்து ஆடைகள் தயாரிக்கலாம். 25ம் நம்பர் நூலில் நான்கு ஆடைகள் மட்டுமே தயாரிக்க முடியும். நூல் விலை குறைக்கப்பட்ட தகவல் வெளியானதும் 30 ம் நம்பர் நூல் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது. தேவையான அளவு நூலை வழங்கினால், விலை மேலும் குறைந்துவிடும் என்பதால், நூல் உற்பத்தி குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது. குளிர்கால ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் போது, 1.50 கிலோ நூலுக்கு இரண்டு ஆடைகளை மட்டுமே தயாரிக்க முடியும். தடிமனான ஆடைகள் வேண்டியிருப்பதால், நூலின் தேவையும் தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளன. குளிர்கால ஆடைகளை தயாரிக்க நூல் அதிகம் தேவை. தட்டுப்பாடு ஏற்படும் போது, விலை உயர மீண்டும் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டுகளில், தினமும் 20 கோடி ரூபாய் அளவுக்கு நூல் விற்கப்பட்டது; தற்போதும் அதே தொகைக்கு விற்கப்பட்டாலும், நூல் அளவில் 30 சதவீதம் குறைந்திருக்கும். நூல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடைவிதிப்பது ஒன்றுதான் தீர்வாக அமையும். இவ்வாறு, மணி தெரிவித்தார்.
தமிழகம்
சிங்கப்பூர் குழு வருகை
சென்னை:புதிய சட்டசபை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் தலைமையிலான குழுவினர், சட்டசபை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டனர்.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் யாங் பூன் இயோ, அவரது மனைவி ஜெனிபர் இயோ, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் கோபிநாத் பிள்ளை, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் கெல்வின் யூ, துணைத் தூதர் அஜித் சிங், தெற்காசிய மற்றும் துணை சகாரா ஆப்ரிக்கா இயக்ககத்தின் இயக்குனர் பிரேம்ஜித் சதாசிவன் மற்றும் சிங்கப்பூர் குழுவினர், முதல்வர் கருணாநிதியை, புதிய சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்வர் அறையில் சந்தித்துப் பேசினர். தலைமைச் செயலர் ஸ்ரீபதி உடனிருந்தார். இதன்பின், இவர்கள் சட்டசபை நிகழ்ச்சியை பார்வையிட வந்தனர். அவர்களை, சபாநாயகர் ஆவுடையப்பன் வரவேற்றார். நிகழ்ச்சிகளை சிறிது நேரம் பார்வையிட்ட பின், சிங்கப்பூர் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகம்
தமிழகம் முழுவதும் அனல் காற்று வீச்சு: சென்னையில் செஞ்சுரி அடித்தது வெயில்
சென்னை: இந்த கோடையில்,  சென்னை மீனம்பாக்கத்தில் முதன்முதலாக 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. கடும் வெயிலால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் தவியாய் தவித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீசிய அனல் காற்றால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தமிழகத்தில் சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. வாடிப்பட்டி, சமயபுரம், ஒரத்தநாடு, கரம்பக்குடி ஆகிய இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் துவங்கினாலும், வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று பகலில் அனல் காற்றுடன் வீசிய வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், மக்கள் வெளியே தலைகாட்ட அச்சப்பட்டனர். அதிகபட்சமாக, வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட் அளவு பதிவாகியது. இந்த ஆண்டு கோடையில்,  சென்னை மீனம்பாக்கத்தில் முதன் முதலாக 101 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியது. நுங்கம்பாக்கத்தில் 99.32 டிகிரி வெயில் அடித்தது. பாளையங்கோட்டை 103.28, மதுரை 103, சேலம் 102.74, திருச்சி 102, சென்னை மீனம்பாக்கம் 101.11, கடலூர் 101,  புதுச்சேரி 98.78, நாகப்பட்டினம் 98.6, கோவை 97.88, கன்னியாகுமரி 97, தூத்துக்குடி 95, வால்பாறை 85, கொடைக்கானல் 71.96 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது,"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் வெயில் அளவும் அதிகரித்து வருகிறது.  இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில், வெயில் 100 டிகிரியை தொடும்,' என்றார்.
தமிழகம்
மருத்துவ காப்பீடு திட்டத்தில் மேலும் 6 மருத்துவமனைகள்
சென்னை: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, மேலும் ஆறு மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கான, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை, "ஸ்டார் ஹெல்த்' காப்பீடு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனைகளின் பட்டியலில், மேலும் ஆறு மருத்துவமனைகள் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை அடையாறு, "வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ்', சைதாப்பேட்டை ஆர்.ஜி.ஸ்டோன் யூராலாஜிகல் மருத்துவமனை, திருச்சி ராமகிருஷ்ணா நர்சிங் ஹோம், திருச்சி பன்னீர் நர்சிங் ஹோம், கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., ஹாஸ்பிடல்ஸ், தூத்துக்குடி ஏ.வி.எம். ஹாஸ்பிடல்ஸ் ஆகிய மருத்துவமனைகள், இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு மருத்துவமனையிலும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சைகளை, அரசு ஊழியர்கள் பெற முடியும்.
தமிழகம்
பள்ளி சீருடைகளின் விலை 10 சதவீதம் உயர்வு: தையல் கூலியும் உயர்ந்தது
மதுரை: மதுரையில் பள்ளி சீருடை துணிகளின் விலை வாரத்திற்கு வாரம் மாறுபடுகிறது. உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால், இந்தாண்டு 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. சில கடைகளில் தையல் கூலியும் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிள்ளைகளுக்கு சீருடை வாங்க, இப்போதே பெற்றோர் துணிக்கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். வாரம் முழுவதும் சீருடை அணிய வேண்டும் என்பதால், ஒரு மாணவருக்கு குறைந்தது மூன்று "செட்' துணி வாங்குகின்றனர்.  அடிக்கடி சலவை செய்வதால், துணி நைந்து போகாமல் இருக்க, 67 சதவீதம் பாலிஸ்டர், 33 சதவீதம் காட்டன் கலந்த "டெரி காட்டன்' துணி வகையைதான் பெரும்பாலான பள்ளிகள், சிபாரிசு செய்கின்றன. முழுமையான காட்டன் துணி நாளடைவில் "டல்'லாகி விடும் என்பதே இதற்கு காரணம். மதுரையில் சீருடை துணிகள் விற்கும் கடை ஒன்றின் பொறுப்பாளர் அக்பர் கூறியதாவது : நூல் விலை மற்றும் போக்குவரத்து செலவு உயர்வு போன்ற காரணங்களால், சீருடை துணியின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் விலை மாறுபடுகிறது. தற்போது ஒரு மீட்டர் சட்டை துணி 35 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையும், பேண்ட் துணி 65 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும் விற்கிறோம் என்றார். மதுரையில் இருபது ஆண்டுகளாக சீருடை தைத்து கொடுக்கும் டெய்லர் வினோத் கூறியதாவது : இப்போது பல பள்ளிகள் நேரடியாக சீருடை துணிகளை மாணவர்களுக்கு விற்பதோடு, அவர்களே தைத்து கொடுக்கிறார்கள். இதனால் சில ஆண்டுகளாக எங்களுக்கு பெற்றோர் "ஆர்டர்' கொடுப்பதில்லை.  ஒரு மீட்டர் கேன்வாஸ் துணி 10 ஆண்டுகளுக்கு முன் 32 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது 55 ரூபாய்க்கும், நூல் கண்டு 1.60 ரூபாயிலிருந்து 3.15 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. லேபர் கூலி சட்டை ஒன்றுக்கு 12 ரூபாய், பேன்ட்டிற்கு 25 ரூபாய். தற்போது முறையே 25 ரூபாய், பேன்ட்டிற்கு 50 ரூபாய் தரவேண்டியுள்ளது. பட்டன் பாக்கெட்(1000 எண்ணிக்கை) 60 ரூபாயிலிருந்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், கடை வாடகையும் உயர்ந்துள்ளதால் வேறு வழியில்லாமல், தற்போது சீருடை சட்டைக்கு 60 ரூபாய், பேன்ட்டிற்கு 140 ரூபாய் வாங்குகிறோம் என்றார்.
தமிழகம்
புதிய பாஸ்போர்ட் அலுவலகம் திருநெல்வேலியில் அமைகிறது
மதுரை: பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்போர் காத்திருப்பதைத் தவிர்க்க, திருநெல்வேலியில் புதிய அலுவலகத்தை திறக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு ஒரே பாஸ்போர்ட் அலுவலகம், மதுரையில் செயல்படுகிறது. ஒன்பது மாவட்ட மக்களைகவனிக்க வேண்டி இருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்ப சேகரிப்பு மையங்கள் செயல்பட்ட பிறகும் இந்நிலை  நீடிக்கிறது. இதற்கிடையில், மதுரை அலுவலகத்தின் வேலை பளுவை குறைக்கும் பொருட்டும், நீண்ட நேரம் விண்ணப்பதாரர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதன்படி, மதுரையில் மற்றொரு அலுவலகத்தையும், திருநெல்வேலியில் ஒரு பாஸ்போர்ட் அலுவலகத்தையும் டி.சி.எஸ்., நிறுவனம் நடத்தும். புதிய விண்ணப்பங்களை பெறுவது, சரி பார்ப்பது ஆகிய பணிகளை இந்த அலுவலகம் செய்யும். அதன் பிறகு விண்ணப்பங்கள், மதுரை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அங்கு பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மதுரை பாஸ்போர்ட் அலுவலர் ஜோஸ் கே.மாத்யூ கூறும்போது, ""விண்ணப்பதாரர்கள், நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும், இங்கு வந்து வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது'" என்றார். அடுத்த ஆண்டு முதல் புதிய அலுவலகங்கள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம்
பட்டதாரி இல்லாத குடும்பத்துக்கு அரசு உதவி: பெற்றோர் குழப்பம்
மதுரை: தமிழக அரசு சமீபத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்களுக்கு இலவச உயர்கல்விக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தற்போது வினியோகிக்கப்படும் பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்தின் 26ம் பக்கத்திலும் அதற்கென தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.உங்கள் குடும்பத்தில்வேறு யாரும் பட்டதாரிகள் இல்லையா என கேட்டு, அதில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார் கையெழுத்து பெற்று வரும்படி தெரிவித்து உள்ளனர். பல பெற்றோரிடையே புதிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது. உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும்  மாணவர் பட்டதாரியாக இல்லாத நிலையில், அவரது குடும்பத்தில் தந்தை அல்லது தாய் அல்லது சகோதரரில் சிலர் திறந்தநிலை பல்கலையில் பி.ஏ., எம்.ஏ., படித்துள்ளனர். தற்போது திறந்தநிலை பல்கலையில் பெற்ற பட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் பணியில் உள்ள சிலர் திரிசங்கு நிலையில் கூட உள்ளனர். அப்படி இருக்கும் போது, உயர்கல்விக்குச் செல்வோரின் குடும்பத்துக்கு இந்த தகுதி பொருந்துமா, இல்லையா என பெற்றோரும், மாணவரும், சான்றிதழ் அளிக்கும் அலுவலர்களும் கூட குழப்பத்தில் உள்ளனர்.  உயர்கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "சுப்ரீம் கோர்ட் உத்தரவே திறந்நிலை பல்கலையின் பட்டம் செல்லாது என்பதுதான். அது எல்லா வகையிலும் பொருந்தும் என்பதால், அங்கு பட்டம் பெற்றவர்களின் வாரிசுகளை இது பாதிக்காது' என்றனர்.
தமிழகம்
கவர்னரின் ஊட்டி வருகை ரத்து
ஊட்டி: தமிழக கவர்னரின் ஊட்டி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வரும் 12ம் தேதி ஊட்டிக்கு வருவதாகவும், அப்போது மலர் கண்காட்சியை திறந்து வைப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று, கவர்னரின் ஊட்டி வருகை திடீரென ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதனால், மலர் கண்காட்சியை மத்திய அமைச்சர் ராஜா, வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், கதர்வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம்
விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெற மே 15 கடைசி
விருதுநகர்: விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே 15க்குள் கொடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. விடுபட்ட, புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. களப்பணியாளர்கள், சேகரித்த முகவரியுடன் அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை வீடு தேடி அதிகாரிகள் வழங்கினர். இந்த விண்ணப்பங்களை நிரப்பி, இரண்டு கலர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, இருப்பிட சான்றாக வீட்டு வரி ரசீது, வங்கி கணக்கு புத்தகம், காஸ் சிலிண்டர் பில், மின் இணைப்பு பில் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகல் இணைத்து வழங்க வேண்டும். புதிய வாக்காளர் எனில் வயது சான்று நகல் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை பெற திரும்பவும் வீடு தேடி வரும் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஏப்., 30 என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. நிரப்பிய விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களுக்கு, தேர்தல் கமிஷன் கால அவகாசம் வழங்கி உள்ளது. இதன்படி மே 15க்குள் அனைத்து விண்ணப்பங்களையும் பெற, அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம்
சூழலுக்கு ஏற்ப பள்ளி நேரம் மாற்றம்: கல்வித்துறை உத்தரவு
சிவகங்கை: வரும் கல்வி ஆண்டு முதல், அந்தந்த பகுதியின் சூழலுக்கு ஏற்ப, பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி கொள்ளலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.  பள்ளிகள், காலை 9.30 மணிக்கு துவங்கி, மாலை 4.30 மணிக்கு நிறைவடைகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இந்த நடைமுறையை பின்பற்றுமாறு, அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், நெரிசல் குறைந்தபாடில்லை. இதனால், மற்ற பயணிகளும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். கருத்து கேட்பு: இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களிடம், அரசு கருத்து கேட்டது. "மாணவர்கள் கூட்ட நெரிசல் இன்றி செல்ல, அந்தந்த பகுதியின் சூழலுக்கு ஏற்ப பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்,' என, கல்வி அலுவலர்கள், தெரிவித்தனர். இதை கல்வித்துறை ஏற்று கொண்டுள்ளது. உத்தரவு: பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, அனுப்பிய சுற்றறிக்கையில், ""அந்தந்த பகுதியின் சூழலுக்கு ஏற்ப, பள்ளி வேலை நேரத்தை மாற்றி கொள்ளலாம். இதுகுறித்து தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு, கலெக்டரின் அனுமதியோடு மாற்றி அமைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் வழிகாட்டி விதிமுறைகள்
விருதுநகர்: முறையான விண்ணப்பங்கள் இல்லாமல், கலந்தாய்வில் ஆசிரியர்கள் மாறுதல்கள் குறித்து பரிசீலனை செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங் நடக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டி விதிமுறைகளை, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: ஆசிரியர்கள் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடாது என்ற விதிமுறை இல்லை. ஒரு ஆசிரியரை மாற்றுவதற்கு, காரணம் ஏதுமின்றி, அடுத்த ஆசிரியரை மாற்றக்கூடாது. புகார்களின் அடிப்படையில் மாறுதல் வழங்க, முதலில் நிர்வாக மாறுதல் வழங்க வேண்டும். புகார் குறித்து பதிவு செய்ய வேண்டும். முதன்மை கல்வி அதிகாரி அறிக்கையின்படி தான் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை, இயக்குனர் மாறுதல் செய்ய வேண்டும். இதற்கு பின்னர் கலந்தாய்வு குறிப்பிட்ட நாளில் நடத்தப்படும். கலந்தாய்வு நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்னதாக, முதன்மை, தொடக்க கல்வி அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் குறித்து தகவல் வெளியிட வேண்டும். முறையான விண்ணப்பங்கள் இல்லாமல் கலந்தாய்வில் மாறுதல்கள் குறித்து பரிசீலனை செய்யக்கூடாது. சுப்ரீம் கோர்ட் இடைக்கால தீர்ப்பாணைப்படி மாநில சீனியாரிட்டியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கிடையாது. கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் பணிபுரியும் இடத்தில், ஒரு கல்வி ஆண்டு முழுமையாக பணிபுரிந்திருக்க வேண்டும். புகார் அடிப்படையில், நிர்வாக காரணங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு மீண்டும் அதேயிடத்தில் பணி வழங்கக்கூடாது. மலை பகுதிகளில் சுழற்சி முறை கடைபிடிக்க வேண்டும். மனமொத்த மாறுதல்களுக்கு, கவுன்சிலிங் நடக்கும் முன்பே மாறுதல் ஆணை வழங்க வேண்டும். இதிலும், ஏற்கனவே பணிபுரிந்த இடத்திற்கு மீண்டும் மாறுதல் தரக்கூடாது. உபரி ஆசிரியர் பணி நிரவல் செய்த பின்பே, கவுன்சிலிங் நடத்த வேண்டும். தொடக்கப்பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில் இடைநிலைக் கல்வி ஆசிரியர் பணியிடங்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக நிரப்பப்பட்டு வருகிறது. இதில் இடை நிலை ஆசிரியர்கள், மேற்படி இடங்களுக்கு பொது மாறுதல் பெற இயலாது. இவ்வாறு அந்த விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
கோவில்பட்டியில் இன்று ஹாக்கி போட்டி துவக்கம்
தூத்துக்குடி:  கோவில்பட்டி கே.ஆர்., கல்வி நிறுவனங்கள் சார்பில், லட்சுமி அம்மாள் நினைவு இரண்டாம் ஆண்டு அகில இந்திய ஹாக்கி போட்டிகள், இன்று துவங்கி மே 16 வரை நடக்கின்றது. டில்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, தமிழ்நாடு போலீஸ், ரயில்வே, கோவில்பட்டி லட்சுமி அம்மாள், கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட 23 அணிகள் கலந்து கொள்கின்றன. லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில், தினமும் மதியம் 2.30 மற்றும் 3.30 மணிக்கு போட்டிகள் நடக்கின்றன. இன்றைய துவக்க போட்டியில் கோவில்பட்டி ராஜிவ்காந்தி லட்சுமி அம்மாள் அணி, கேரள அணி மோதுகின்றன. ஏற்பாடுகளை, கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் மாரிமுத்து, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜீவானந்தம், கே.ஆர்., கலைக்கல்லூரி முதல்வர் கோபால், உடற்கல்வி இயக்குநர்கள்,நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தமிழகம்
சார்பதிவாளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை
புதுச்சேரி: புதுச்சேரி வீட்டு வசதி வாரிய முறைகேடு குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகளிடம் நேற்று விசாரணை நடத்தினர். புதுச்சேரி வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட அதிக மதிப்புள்ள குடியிருப்புகள், குறைவான விலைக்கு விற்பனை செய்து மோசடி நடப்பதாக, சென்னை சி.பி.ஐ.,க்கு புகார்கள் சென்றன. சி.பி.ஐ., அதிகாரிகள், கடந்த பிப்ரவரியில், நெல்லித்தோப்பில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு வந்து சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். முறைகேடு தொடர்பாக வீட்டு வசதி வாரிய செயலர் குப்புசாமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். சி.பி.ஐ., இன்ஸ்பெக்டர் அருளானந்தம் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவினர் கடந்த 4ம் தேதி புதுச்சேரிக்கு வந்து, வீட்டு வசதி வாரிய செயலர் குப்புசாமி உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் வரவழைத்து, விசாரணை நடத்தினர். மேலும், சார்பதிவாளர் அலுவலகம், திட்ட அலுவலகங்களுக்கு நேற்று முன்தினம் சென்று, புகார் குறித்த ஆவணங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சி.பி.ஐ., அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்றும் சென்று, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
இந்தியா
பல்கலை விடைத்தாள் மோசடி வழக்கு: திருவாரூர் டாக்டர் அதிரடி கைது
காலாப்பட்டு: புதுச்சேரி பல்கலைக் கழக விடைத்தாள் மோசடி தொடர்பாக திருவாரூரை சேர்ந்த டாக்டரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புதுச்சேரி பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஏழு மருத்துவக் கல்லூரிகள், 16 பொறியியல் கல்லூரிகள் உட்பட 80 கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டு வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு பல்கலைக் கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தபோது, லஞ்சம் தந்து மதிப்பெண் பட்டியலை திருத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், பல்கலைக்கழக ஊழியர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விசாரணை பெயரளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 2007ம் ஆண்டு மீண்டும் மருத்துவம், பொறியியல் விடைத்தாள்களில் திருத்தம் செய்து, கூடுதலாக மதிப்பெண் போட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. பல்கலைக்கழக ஊழியர் கன்னியப்பன், மேற்பார்வையாளர் அரிதாஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முறைகேடு நடந்த விடைத்தாள்கள் ரத்து செய்யப்பட்டு, பல்கலைக்கழக ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே விடைத்தாள் மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பல்கலைக்கழக ஊழியரான பெரிய காலாப்பட்டை சேர்ந்த ஜெயராமன் மர்மமான முறையில் காலாப்பட்டு மத்திய சிறை அருகில் இறந்து கிடந்தார். விடைத்தாள் மோசடி, ஜெயராமன் கொலை ஆகிய இரண்டு வழக்குகளும் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டு, சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விடைத்தாள் மோசடி தொடர்பாக மூன்றாம் கட்ட விசாரணை நடந்து வந்தது. தற்போது பல்கலைக்கழக தேர்வுத் துறையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ., அதிகாரிகள், பல்கலைக்கழக உயரதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்குரிய விடைத்தாள்களை தூசி தட்டி சரிபார்த்த போது, மருத்துவத்தில் தோல்வியடைந்த விடைத்தாள்களுக்கு முறைகேடாக மதிப்பெண் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், விடைத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக திருவாரூரைச் சேர்ந்த டாக்டர் சண்முகம் என்பவரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து, சிறப்பு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட சண்முகத்தின் மகன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்  மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். நான்கு பாடங்களில் அவர் தோல்வி அடைந்ததால் அவரை தேர்ச்சி பெற வைக்க சண்முகம் லட்சக்கணக்கான பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளது சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இந்த மோசடியில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், கடந்த  2005ம் ஆண்டு வரையுள்ள விடைத்தாள்களை தூசி தட்டி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
தமிழகம்
துன்புறுத்திய கூட்டத்தை துரத்தியடித்தது காட்டு யானை: உடுமலை அருகே சம்பவம்
உடுமலை: உடுமலை - மூணாறு ரோடு, வனப்பகுதியில் ரோட்டை கடந்த காட்டு யானைகளில் ஒன்று, சுற்றுலா பயணிகளின் துன்புறுத்தலால் ஆவேசம் அடைந்து, வாகனங்களை துரத்தியது. பீதியடைந்த சுற்றுலா பயணிகள், வாகனங்களை கிளப்பிக் கொண்டு, தப்பிச் சென்றனர். திருப்பூர், உடுமலை - மூணாறு  சாலையில், ஒன்பதாறு வனத்துறை செக்போஸ்டிலிருந்து, வனப்பகுதி துவங்குகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகத்தை பிரிக்கும் சாலையாகவும் இது உள்ளது. கோடை சீசன் என்பதால், இந்த ரோட்டில் மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வனத்தில் நிலவும் வறட்சி காரணமாக, குடிநீர் மற்றும்  உணவுத் தேவைக்காக, விலங்குகள், அமராவதி அணையை நோக்கி படையெடுக்கின்றன. அவ்வாறு செல்லும் விலங்குகளை, வாகனங்களில் செல்வோரில் சிலர், சீண்டிப் பார்க்கின்றனர்.  யானைகள்  கடந்து செல்லும்போது, ஹாரன் அடித்தல், சவுண்ட் சிஸ்டத்தின் ஒலி அளவை அதிகரிப்பது, கூச்சல் போடுதல் போன்ற செயல்களை செய்கின்றனர். அதனால், யானைகள் மிரண்டு, வாகனங்களை துரத்துவது தொடர்கதையாக உள்ளது. வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்தும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டும் பலனில்லை. நேற்று முன்தினம் மாலை, யானைக் கூட்டம் ஒன்று, ரோட்டைக் கடந்து சென்றது. மரத்தின் இலைகளை சாப்பிட்ட யானைகள், மண்ணை அள்ளி, உடம்பு முழுவதும் இறைத்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் ரோட்டில் சென்ற கேரளா பதிவு எண் கொண்ட ஜீப், கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆர்வக் கோளாறு காரணமாக, யானைகளின் அருகில் சென்றனர். சிலர், யானைகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். அதனால் ஆவேசமடைந்த யானைகளில் ஒன்று, பிளிறியபடி வாகனங்களை துரத்தியது. பயந்து போன வாகன ஓட்டிகள், அவசரம் அவசரமாக வாகனங்களை கிளப்பிக் கொண்டு தப்பினர். காட்டு யானை, 30 மீட்டர் தூரம் வரை விடாமல் துரத்தியது. ஒரே நேரத்தில் வாகனங்கள் கிளம்பியதால் ஏற்பட்ட சத்தம், யானைக் கூட்டத்தை மேலும் ஆக்ரோஷம் அடைய வைத்தது. யானைகள் அங்குமிங்குமாக, ரோட்டில் சுற்றி வந்தன. பயந்து  வாகன ஓட்டிகள், அந்த வழியில் செல்லாமல், வாகனங்களை நிறுத்திக் கொண்டனர். யானைகள் அமைதியாகி, காட்டுக்குள் சென்ற பிறகே, வாகனங்கள் சென்றன. வனத்துறை விழிக்குமா : உடுமலை - மூணாறு வனப்பகுதி ரோட்டில் அதிகளவு வாகனங்கள் வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் சென்று, வருகின்றன. இரவு முழுவதும் இந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில் சிக்கி பல விலங்குகள் பலியாகின்றன. எனவே, வனத்துறையினர் இந்த ரோட்டில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். இதே ரோட்டில், கேரளா பகுதியில் செல்வதை போல், பகலில் செக்போஸ்டிற்கு வரும் வாகனங்கள் குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், அனுப்பி வைக்கலாம். வனப்பகுதிக்குள் செல்லும் வாகனங்கள், சத்தம் எழுப்பாமல் செல்லவும், வாகனங்களில் இருந்து இறங்குவதையும் தடை செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகள் போர்வையில், போதை ஏற்றுவதற்காக பலர், வனப்பகுதியை, "பார்' ஆக மாற்றி வருகின்றனர். "குடி'மகன்கள், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப், பைகளை வனப்பகுதிக்குள் வீசி வருகின்றனர். அதை கண்காணித்தும், தக்க தடுப்பு நடவடிக்கையை வனத்துறை எடுக்க வேண்டும்.
தமிழகம்
மதுரையில் ஆந்திரா சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மோதல் : ஒருவர் இறப்பு
மதுரை: மதுரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில், பஸ் நிறுத்தியது தொடர்பாக, ஆந்திரா சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் ஒருவருக்கொருவரை தாக்கிக் கொண்டனர். இதில் மாரடைப்பு ஏற்பட்டு, கடை ஊழியர் ஒருவர் இறந்தார். ஆந்திர மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரிகுமார். கப்பற்படையில் பணியாற்றுகிறார். குடும்பத்தினர், உறவினர்கள் 27 பேருடன், மே 3 முதல் தமிழகத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வந்தனர். இவர்களது பஸ், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஸ்டாண்டில், "நாவல்டி' பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையை மறைத்து நிறுத்தப்பட்டது. நேற்று காலை, பஸ்சை எடுக்குமாறு, கடை ஊழியர்கள் கூற, இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். கடையில் இருந்த பொருட்களை எடுத்து சுற்றுலா பயணிகளும், பதிலுக்கு கடை ஊழியர்களும் தாக்கினர். இதில் ஒரு வயது குழந்தை உட்பட ஐந்து சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். அப்போது, கடை ஊழியர் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம்(58) என்பவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்தது தெரியவந்தது. "சுற்றுலா பயணிகள் தாக்கியதால்தான் இறந்தார்' என கடை ஊழியர்கள் திடீர்நகர் போலீசில் புகார் செய்தனர். இருதரப்பினரிடமும் உதவி கமிஷனர் கணேசன் விசாரித்தார். முத்துராமலிங்கத்தின் மகன் முத்துராஜ், "என் தந்தை, இதய நோயாளி; ஏற்கனவே இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர். மூன்றாவதாக மாரடைப்பு ஏற்பட்டதால் தான் இறந்தார்' என்றார். இதைதொடர்ந்து, "எதிர்பாராத சாவு' (இ.பி.கோ. 174) என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளை தாக்கி, காயப்படுத்திய கடை ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது. பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா? இடநெருக்கடிமிக்க ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து, ஆம்னி பஸ்களும், சுற்றுலா பஸ்களும் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால், டவுன் பஸ்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. நேற்று நடந்த தாக்குதல் சம்பவத்தை போல் இனியும் நடக்காமல் இருக்க, தேவையான நடவடிக்கைகளை, போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் எடுக்க வேண்டும். போலீஸ் உதவி கமிஷனர் கணேசனிடம் கேட்டபோது, ""பஸ் ஸ்டாண்டில் இதுபோன்று பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், இடநெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணவும் தனிக்குழு ஒன்று ஏற்படுத்தப்படும். ஆம்னி பஸ்களை மாட்டுத் தாவணிக்கு இடமாற்றவும், கடைகளை ஒழுங்குப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.