category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.சி.முதல் மாணவிக்குஅதிமுக முன்னாள் அமைச்சர் பாராட்டு
திருநெல்வேலி:எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் மாநில முதலிடம் பெற்ற மாணவியை அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாராட்டினார்.எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மார்க் பெற்று மாநிலத்தில் முதல் ரேங்க் பெற்றார். இந்த மாணவியை அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாக...
தமிழகம்
குடிநீரை காய்ச்சி பருக அறிவுரை
சாத்தூர்: சாத்தூர் நகராட்சி கமிஷனர்(பொறுப்பு)கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: சாத்தூர் நகராட்சி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தம் செய்து வழங்கினாலும், அதை நன்றாக காய்ச்சி வடிகட்டிய பின் உபயோகிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழகம்
வழியனுப்பு விழா
விருதுநகர்: விருதுநகர் பசும்பொன் தேவர் ஆசிரியர்பயிற்சி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு மாணவர்கள், ஆசிரியர்களால் வழியனுப்பு விழா நடந்தது. பாளையம்பட்டி கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர் வாழ்த்தி பேசினார். நிர்வாக அலுவலர் ராசபாண்டியன் மாணவர்கள் தேர்வில் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற கேட்டுக் கொண் டார...
இந்தியா
அனில் அம்பானி திருப்பதியில் தரிசனம்
திருப்பதி : சகோதர சண்டை முடிவுக்கு வந்ததன் அடையாளமாக திருப்பதி வந்த அனில் அம்பானி, தன் சகோதரர் முகேஷ் அம்பானியின் ஆர்.ஐ.எல்., நிறுவனத்தின் விருந்தினர் விடுதியில் தங்கினார். சமீபத்தில் கிருஷ்ணா - கோதாவரி படுகையில் அமைந்துள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிமிடெட் (ஆர்.ஐ.எல்.,) நிறுவனம், அனில் அம்பானியின் நிற...
தமிழகம்
ரத்தவகை முகாம்
ராஜபாளையம்: ராஜபாளையம் ரோட்டரி சென்ட்ரல், சாய் ரத்த வங்கி மற்றும் மனித உரிமைகள் கழகம் சார்பில் ஏ.ராமலிங்காபுரத்தில் இலவச ரத்த வகை கண்டறியும் முகாம் நடந்தது. மனித உரிமைகள் கழக பொறுப்பாளர் வேணுகோபாலன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தார். ரோட்டரி சென்ட்ரல் தல...
தமிழகம்
சிவகாசி, திருத்தங்கல் பள்ளிகள் சாதனை
சிவகாசி: சிவகாசி கே.காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மெட்ரிக் மாணவி ஜெயநந்தினி, 482 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் கணிதம், அறிவியலில் தலா 100 பெற்றுள்ளார். விக்னேஷ்பாரதி 481 பெற்று இரண்டாவது இடத்தையும், சுகன்யா, கிருபா லட்சுமி 469 பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். 450 அ...
தமிழகம்
மரம் வளர்ப்பு சான்றிதழ் வழங்கல்
சிவகாசி: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் மரம் வளர்ப்பு சான்றிதழ் திட்டம் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவற்றை ஓராண்டுகள் பராமரிக்கப்பட்டு வருவதை பேராசிரியர்கள் உறுதி செய்தனர். இம்மாணவர்களுக்கு மரம் வளர்ப்புச் சான்றிதழ் வழங்கும் விழா கலெக்டர் சிஜி தாமஸ் தலைமை வகித்து சான்ற...
தமிழகம்
ரோடு மறியல்: விசைத்தறி தொழிலாளர்கள் 608 பேர் கைது
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டியில் கூலி உயர்வு கேட்டு மே 5 முதல் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தியதில் சில தொழிற் சங்கங்கத்தினர் உரிமையாளர்களுடன் உடன்பாடு மேற்கொண்டு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.சில தொழிற்சங்கத்தினர் போராட்டம் தொடரும் என அறிவித்தனர். மாஸ்டர் வீவர்...
தமிழகம்
தூத்துக்குடி, நெல்லையில்ராதாபுரம் திமுக., எம்.எல்.ஏ., பெயரை பயன்படுத்தி பணமோசடி:ஊனமுற்ற வாலிபர் கைது
தூத்துக்குடி, நெல்லையில்ராதாபுரம் திமுக., எம்.எல்.ஏ., பெயரை பயன்படுத்தி பணமோசடி:ஊனமுற்ற வாலிபர் கைதுல்வேலி, மே 31- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் திமுக எம்.எல்.ஏ., பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாக ஊனமுற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:நெல்லை டவுன், தென்காசி, செங்கோட்டை,...
தமிழகம்
ராஜபாளையத்தில் நாளை புலிகள் பற்றிய குறும்படம்
ராஜபாளையம்: வன உயிரின பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் சேகர் தத்தாரி தயாரித்துள்ள புலிகளை பற்றிய குறும்படம் ராஜபாளையத்தில் நாளை திரையிடப் படுகிறது. இந்தியாவின் தேசிய விலங்காகிய புலிகளின் எண்ணிக்கை 50 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. புலிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வன உயிரின பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர...
தமிழகம்
காரியாபட்டியில் அறிவிக்கப்படாத மின்தடையால் தொழில்கள் பாதிப்பு
காரியாபட்டி:காரியாபட்டியில் அறிவிக்கப்படாத மின்தடையால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. காரியா பட்டியில் சிறு தொழில்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு தொழில்கள் இயங்கி வருகின்றன. இத் தொழில்கள் அனைத்தும் மின்சாரத்தை நம்பியே உள்ளன. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மின் தடை என இருந்ததை தற்போது 2 மணி நேரமாக குறைத்து அரசு ...
தமிழகம்
ஜாதி சான்று கிடைப்பதில் சிக்கல்
ராஜபாளையம்:ஜாதி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், இரண்டாவது ஆண்டாக மேற்படிப்பில் சேர முடியாமல் மலைக்குறவர் இன மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலைக்குறவர் உள்ளிட்ட எஸ்.டி., பிரிவினருக்கு சான்றிதழ் வழங்குவதில் அரசு அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி, வேலை வாய்ப்புகளில் எளிதாக பயன்பெ...
இந்தியா
காளஹஸ்தி ராஜகோபுரத்தின் அடித்தளத்தில் புதையல் இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம்?
நகரி : காளஹஸ்தி கோவிலின் இடிந்துவிட்ட ராஜகோபுரத்தின் அடிப்பாகத்தில் தங்கப் புதையல் இருக்கலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது. தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஆண்ட விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், 1516ம் ஆண்டு நினைவுச் சின்னமாக காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வர சுவாமி கோவிலுக்கு பொலிவூட்டும் விதமாக, 136 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் கட்டப...
தமிழகம்
பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்
அரியலூர்: அரியலூரில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சி மற்றும் கண்டறியும் முகாம் நடந்தது.அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை டாக்டர் சிவக்குமார் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, அரியலூர் அரசு மருத்துவமனையில், பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் கர்ப்பபை புற்றுநோய் விழிப்புணர்ச்சி முகாம் ந...
தமிழகம்
சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் நேற்று தர்மபுரிக்கு வந்தது
தர்மபுரி: தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தர்மபுரி மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விநியோகம் செய்வதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழக...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் வளர்கல்வி பணியாளர்கள் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பாலக்கோடு ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் கலாபதி தலைமை வகித்தார். ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, விமலன், மொரப்பூர் ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனுசாமி முன்னிலை வகித்தனர். "அறிவொளி இயக்கம், தொடர...
தமிழகம்
மிளகாய் பொடி தூவி லாரி டிரைவரிடம் வழிப்பறி: நான்கு பேர் கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே மிளகாய் பொடி தூவி லாரி டிரைவரிடம் பணம், மொபைல்ஃபோன் பறித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த முகமது அலி மகன் முகமது கமால்(21). லாரி டிரைவர். கான்பூரை சேர்ந்த ராணுவ வீரர் வீட்டு பொருட்களை லாரியில் ஏற்றிகொண்டு கோவைக்கு சென்றார்.நேற்று அதிகாலை தர்மபுரி-பாப்பிர...
தமிழகம்
கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு
தர்மபுரி: தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்க தர்மபுரி மாவட்ட மூன்றாவது மாநாடு அரூரில் நடந்தது. மாவட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் ராஜலட்சுமி வரவேற்றார். பெருமாள் முன்னிலை வகித்தார். மாநாட்டையொட்டி தொழிலாளர்கள் பேரணி நடந்தது. முன்னாள் அமைச்சரும், பேரவை தலைவருமான குப்புசாமி...
தமிழகம்
கால்நடைகளுக்கு மலடு நீக்க முகாம்
தர்மபுரி: கம்பைநல்லூர் உபவடி நிலப்பகுதியில் தர்மபுரி ஒன்றியம் வெள்ளோலை கிராமத்தில் நீர் வள நிலவளத்திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு இலவச மலடு நீக்க மற்றும் சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.பஞ்சாயத்து தலைவி பெரியம்மாரி முகாமை துவக்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நீர...
தமிழகம்
இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. தொகுதி தலைவர் காமராசு தலைமை வகித்தார். பாராளுமன்ற தொகுதி துணை தலைவர் மனோஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாராளுமன்ற தொகுதி தலைவர் சீனிவாசன், பயிற்சியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். "மத்திய அரசின் சாதனை...
தமிழகம்
ஒன்றிய, நகர தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
காரிமங்கலம்: காரிமங்கலம் ராமாயி திருமண மண்டபத்தில் இன்று (மே 31) ஒன்றிய, நகர தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. ஒன்றிய அவைத்தலைவர் சிவாஜி தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் சீனிவாசன் வரவேற்கிறார். வடக்கு மாவட்ட பொருப்பாளர் எம்.எல்.ஏ., இன்பசேகரன், எம்.பி., தாமரைசெல்வன் ஆகியோர் பேசுகின்றனர். "முதல்வர் கருணாநிதி 87வத...
தமிழகம்
நீர்வள நிலவள திட்டத்தை விளக்க நடமாடும் கண்காட்சி வாகனம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தை பொது மக்களிடம் விளக்கும் வகையில் நடமாடும் கண்காட்சி வாகன பயணம் நடந்து வருகிறது. உலக வங்கியின் நிதி உதவி பெற்று தமிழகம் முழுவதும் நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் பல்வேறு கட்டங்களாக பணிகள் நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், இத்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக கம்பைந...
தமிழகம்
நிலத்தகராறில் அண்ணன் படுகொலை; தம்பி கைது
தர்மபுரி: கடத்தூர் அருகே சொத்து தகராறில் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார். கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். அவரது மகன்கள் ஆறுமுகம்(46). மணி(45). இருவர் நிலத்துக்கும் செல்வதற்காக பொதுப்பாதை உள்ளது. பாதை தொடர்பாக அண்ணன், தம்பிக்கு இடையே சண்டை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில்...
தமிழகம்
இளைஞர்களுக்கான தொழிற்திறன் பயிற்சி
தேனி: மாவட்ட மகளிர் திட்ட செயலாக்க பிரிவு சார்பில் இளைஞர்களுக்கு தொழில் வேலை வாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை குடும் பத்தை சேர்ந்த இருபாலருக்கும் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி, ஆட்டோ மெக்கானிக், நான்கு சக...
தமிழகம்
குடிநீர் இணைப்பு டெபாசிட் உயர்வு நகராட்சிக்கு த.மு.மு.க., கண்டனம்
கம்பம்: கம்பம் நகராட்சியில் குடிநீர் இணைப்பு டெபாசிட் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதற்கு த.மு.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கம்பம் நகர் த.மு.மு.க., சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : கம்பம் நகரில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெரியாறு அணைக்கு அருகில் இருந்து...
தமிழகம்
மதுரைவீரன் கோவில் திருவிழா
க.பரமத்தி: கோடந்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொக்குமடைப்பாளையம் கோட்டை மதுரை வீரன் கோவிலில் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி ஸ்வாமி சாட்டுதலுடன் விழா துவங்கியது. 25ம் தேதி பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வந்து ஸ்வாமிக்கு செலுத்தி வழிபாடு நட...
தமிழகம்
கோயில் கும்பாபிஷேகம்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியில் ஒக்கலிகர் உனுசுவார் குலத்தினருக்கு பாத்தியப்பட்ட மல்லையசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் விழா 7 நாள் நடந்தது. முதல் ஐந்து நாள் கணபதி பூஜை, அர்த்த ஜாம பூஜை, உச்சிகால பூஜை, சிலைகள் ஜலாபிஷேகம், அம்மன் பூஜை, கலச மண்டபத்தை புனிதப்படுத்துதல், கலசாபிஷேகம், சிலைகளுக்கு தெய்வசக்...
தமிழகம்
பிளஸ் டூ பதிவு
தேனி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு செய்ய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 15 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டு இருந்தன. மே 26 மாலை முதல் 29 வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 2,493 மாணவிகள் உட்பட 4,600 பேர் பிளஸ் டூ தேர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்(பொறுப்பு) பெரியசாமி...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாவட்ட அளவில் பி.ஏ.வி., பள்ளி சிறப்பிடம்
கரூர்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் கரூர் மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாமிடத்தை காக்காவாடி பி.ஏ.வித்யாபவன் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர்.மாணவி சிவப்பிரியா தமிழில் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 97 என மொத்தம் 494 மதிப்பெண் பெற்றார். மேலும், இவர் மாநில அளவிலும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்...
தமிழகம்
திருவிழா
தேவாரம்: தேவாரம் பால தண்டாயுதபாணி கோயில் வைகாசி திருவிழா நடந் தது. விஷாக நட்சத்திரத்தில் தீர்த்தம் எடுப்பதுடன் விழா துவங்கியது. மயில்காவடி, இளநீர் காவடி, தீர்த்தக் காவடி, பால்குடம் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவாரம் ஆய...
தமிழகம்
கரூர் மாவட்டத்தில் 18 பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.ஸி.,யில்100% தேர்ச்சி
கரூர்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் கரூர் மாவட்டம் 80.1 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டத்தில் ஐயாயிரத்து 836 மாணவர்கள் தேர்வு எழுதியதில் நாலாயிரத்து 530 பேர் தேர்வு பெற்று 77.6 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். ஐந்தாயிரத்து 745 மாணவிகள் தேர்வு எழுதியதில் நான்காயிரத்து 748 பேர் தேர்ச்சி பெற்று 82.6 சதவீதம் தேர்ச்சி பெற...
தமிழகம்
பெண்கள் முன்னணி முப்பெரும் விழா
குளித்தலை: குளித்தலையில் பெண்கள் முன்னணி சார்பில் முப்பெரும்விழா நடந்தது. குளித்தலை சுங்ககேட்டு, தோகமலை, குளித்தலை ஒன்றியம் சார்பில் கொடியேற்றுதல், நிதியளிப்பு, மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் டானியா தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஷீலா ராபர்ட், மாவட்ட பொறுப்பாளர்கள் ஜானி, மஞ்சுளா, பாக்கிய...
தமிழகம்
இளைஞர் நீதி குழும உறுப்பினர் தேர்வு
தேனி: இளைஞர் நீதி திருத்தப் பட்ட சட்டம் மற்றும் விதிகளின் படி அமைக்கப் பட்டுள்ள மாவட்ட இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் குழந்தைகள் நல குழுக்களுக்கு சமூக பணி உறுப்பினர் தேர்வு நடக்கிறது. தகுதியான சமூக பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு பெண் உட்பட உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட ...
தமிழகம்
ஜாமீன் விதி மீறிய லஞ்ச எஸ்.ஐ., மீண்டும் கைது செய்ய உத்தரவு
குளித்தலை: குளித்தலை அருகே லஞ்ச வழக்கில் சிக்கிய எஸ்.ஐ., நிபந்தனை ஜாமீன் விதிமுறையை கடைபிடிக்காததால், மீண்டும் கைது செய்து ஆஜர்படுத்த கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குளித்தலை அருகே தோகமலை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் சக்திவேல். கள்ளை கிராமத்தை சேர்ந்த தி.மு.க., கிளை செயலாளர் துரை மற்றும் அதே பகுதியை சே...
தமிழகம்
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கரூர் எம்.பி., பரிசு
கரூர்: கரூர் மாவட்ட அளவில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கரூர் எம்.பி., தம்பிதுரை, கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தகுதிவாரியாக பள்ளிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் முதல் மூன்று இடம்ப...
தமிழகம்
கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி மருதூர் பஞ்., மக்கள் குற்றச்சாட்டு
குளித்தலை: குளித்தலை அருகே மருதூர் டவுன் பஞ்சாயத்தில் சிமென்ட் சாலை அமைப்பதில் மெத்தனமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருதூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டு மருதூர் நான்கு மற்றும் ஐந்தாவது வார்டு பகுதியில் தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் துவங்கியது. சிமென்ட் சாலை அமைக்க மூன்று மாதம் முன்...
தமிழகம்
காலாவதியான பொருட்கள் அழிப்பு
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் காலாவதியான பொருட் கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலர் பாபுஜி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன், சுகாதார ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், சொக்கலிங்கம் ஆகியோர் ஓட்டல்கள், மளிகை கடைகள், மருத்துக் கடைகள், பழக் கடைகள், தேனீர் கடைக...
தமிழகம்
கரூர் லோக்சபா இளைஞர் காங்., நிர்வாகிகள் கூட்டம்
கரூர்: கரூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்தது.கரூர் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ், கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி தலைவர் முருகேசன், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி தலைவர் ராஜ்குமார், மணப்பாறை தொகுதி தலைவர் வருண் காந்தி, லோக்சபா தொகுதி பொதுச்செயலாளர் சரவணன், கருப்ப...
தமிழகம்
தேவாரம் பேரூராட்சி கூட்டம்
தேவாரம்: தேவாரம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம், தலைவர் பெருமாள் தலைமையில் நடந்தது. நிர்வாக அலுவலர் கணேசன், துணைத்தலைவர் மகாராசன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னுரிமை வழங்குவது, வார்டு பகுதியில் உள்ள பொது சுகாதார பிரச்னைகள் நிதி ஆதாரம் கிடைத்தவுடன் செயல் படுத்துவது, நான்க...
தமிழகம்
கலப்பு திருமண உதவி திட்டம் ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கல்
கரூர்: அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தில் 30 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு லட்சம் ரூபாய்க்கான நிதியுதவி வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் (பொ) முனிரத்தினம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற...
தமிழகம்
கம்பத்தில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவு துவங்க அனுமதி
கம்பம்: கம்பத்தில் குடிநீர் வாரியத்தின் பராமரிப்பு பிரிவு அலுவலகம் நாளை (ஜூன் முதல் தேதி) முதல் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக் குடிநீர் திட்டம், கேபிடி திட்டம் உள்ளிட்ட 10 குடிநீர் திட்டங்களை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, உதவி செயற்பொறியாளர் தலைமையிலான பராமரிப்பு பிரிவு அலுவலகம் ஒன்றை கம...
தமிழகம்
ஆசிரியருக்கான கையெழுத்து பயிற்சி
கரூர்: கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான கையெழுத்துப்பயிற்சி முகாம் நடந்தது. கோவை கிரீன் கார்டன் கையெழுத்து பயிற்சியாளர் செல்லப்பன், மல்லிகா மற்றும் குழுவினர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர். கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி செயலாளர் மனோகரன...
தமிழகம்
இந்து முன்னணி மாநாடு விளக்க ரத யாத்திரை
குளித்தலை: இந்து முன்னணி மாநில மாநாடு பிரச்சார ரதயாத்திரைக்கு, தோகமலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.குளித்தலை அருகே தோகமலையில் இந்து முன்னணி சார்பில் வரும் ஜூன் 20ம் தேதி கரூரில் நடக்கும் மாநில மாநாடு குறித்த பிரச்சார ரதயாத்திரை நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் ரதத்துக்கு வரவேற்பு அ...
தமிழகம்
கும்பாபிஷேகம்
தேவதானப்பட்டி: சில்வார்பட்டியில் பட்டியார் பங்காளிகளுக்கு சொந்தமான வேல்முருகன் கோயில் கும்பாபி ஷேகம் நடந்தது. முதல் நாள் புண்யாவாசனம், வாஸ்து சாந்தி, தொடர்ந்து கும்ப ஸ்தாபனம் உச்சிஷ்ட மகா கணபதி ஹோமத்துடன் துவங் கியது. யாகசாலை தோரண பூஜைகள், கோமாதா பூஜை நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது.குருக்கள் பாலசுப்பிரமணிய த...
தமிழகம்
மூணாறில் ரயில்வே முன்பதிவு மையம்
மூணாறு: மூணாறில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பயன் பெறும் வகையில் பழைய மூணாறில் உள்ள மாவட்ட சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தகவல் மைய வளாகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் டிக்கெட் முன்பதிவு மையம் கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்டது. மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்கும் வசதி செய்து கொடுக்காதது உட்பட பல்வேறு காரணங்களால...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாவட்ட அளவில் பி.ஏ.வி., பள்ளி சிறப்பிடம்
கரூர்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் கரூர் மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாமிடத்தை காக்காவாடி பி.ஏ.வித்யாபவன் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர். மாணவி சிவப்பிரியா தமிழில் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 97 என மொத்தம் 494 மதிப்பெண் பெற்றார். மேலும், இவர் மாநில அளவிலும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார...
தமிழகம்
அரசு பள்ளிகளில் வெள்ளியணை பள்ளி மாணவர் முதலிடம்
கரூர்: கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், நான்கு மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். வெள்ளியணை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் சுரேகா, தமிழில் 96, ஆங்கிலம் 92, கணிதம் 99, அறிவியல் 99, சமூக அறிவியல் 98 என மொத்தம் 484 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்டத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார். தென்னிலை அரசு ம...
தமிழகம்
தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
பெரியகுளம்: பெரியகுளத்தில் தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் சன்னாசி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மூக் கையா முன்னிலை வகித் தார். பொருளாளர் அருணாசேகர் வரவேற்றார். கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் கோபால், செல்லப்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் போ...
தமிழகம்
குளித்தலை யூனியன் பஞ்.,களில் வீட்டு வசதி திட்டம் கணக்கெடுப்பு
குளித்தலை: குளித்தலை யூனியனுக்கு உட்பட்ட 13 பஞ்சாயத்துகளில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் கணக்கு எடுப்பு பணி முடிக்கப்பட்டது. குளித்தலை யூனியனுக்கு உட்பட்ட 13 பஞ்சாயத்துக்களில் கலைஞர் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் குடிசை வீடு கணக்கு எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு அதற்கான மேலாய்வுப்பணிகளுக்கும் முழுமையாக முடிக்கப்பட்டதாக அற...
தமிழகம்
தபால் நிலையம் இழப்பீடு வழங்க உத்தரவு
தேனி: பெரியகுளம் மில் ரோட்டில் வசிப்பவர் முருகேசன். இவர் மின்வாரிய கணக்கராக பணியாற்றுகிறார். கடந்த 2009 மார்ச் 30ல் இவர் பெரியகுளம் தலைமை தபால் நிலையத் தில் சென்னையில் இருந்து திண்டுக்கல் வருவதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். டிக்கெட் முன்பதிவு நாள் அன்று சரியாக தனது மனைவி, மகளுடன் சென்னையில் ரயில் ஏறினார். டிக்...
தமிழகம்
ரோடு அமைக்க ஆய்வு
மூணாறு: மூணாறை கேரளாவின் பிற மாவட்டங்களுடனும், தமிழகத்துடனும் கொச்சி- மதுரை தேசிய நெடுஞ் சாலை இணைக்கிறது. கொச்சி முதல் நேரியமங்கலம் வரையிலும், போடி மெட்டு முதல் மதுரை வரையிலும் ரோடு சீராக உள்ளது. நேரியமங்கலம் முதல் போடி மெட்டு வரை ரோடு குறுகலாகவும், கடும் வளைவுகளுடன் உள்ளதால் ரோடு அமைக்க ஆய்வு பணி நடக்கிறது.
தமிழகம்
ஜான்போஸ்கோ பள்ளி மாணவிகள் சாதனை
ஓசூர்: ஓசூர் ஜான்போஸ்கோ பெண்கள் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ். எல்.சி., பொதுத்தேர்வில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவி நித்யா 486 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும் கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்றார். மாணவி வஸ்தி 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இர...
தமிழகம்
ஜா.க.நி., மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
போடி: போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளியில் உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் இரண் டாம் இடமும் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 703 பேரில் 679 பேர் தேர்ச்சி அடைந்து 97 சதவீதம் பெற்றுள்ளனர். மாணவர்கள் பூமாலை, க...
தமிழகம்
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது. அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் உத்திரகுமாரன் வெளியிட்ட அறிக்கை. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2010-11ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மற்றும் மிருதங்கம் ஆகிய வகுப்புக...
தமிழகம்
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
திருச்செந்தூர்:திருச்செந்தூரில் நேற்று கடல் உள்வாங்கிய போதும் பக்தர்கள் வழக்கம் போல் நீராடினர்.கடந்த 2004ம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட பல்வேறு காலநிலை மாற்றங்களால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடலானது கரையை விட்டு உள்வாங்குவதும், வெளியேறுவதும் அடிக்கடி நடக்கின்றது. இது போல் திருச்செந்தூரில் கடலானது சுனாமி ஏற்...
தமிழகம்
போடி- தேனி ரோட்டில் பாதிப்பு
போடி: நேற்று முன்தினம் இரவு 4 மணிக்கு பலத்த சூறைக் காற்று வீசியதில் போடி - தேனி செல்லும் தோப்புபட்டி மெயின்ரோட்டின் நடுவே பெரிய மரம் விழுந்தது. இரவு நேரம் என்பதால் மரத்தை அகற்ற முடியாமல் பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். அதிகாலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குமணன், போடி தாசில்தார் ராஜசேகர...
தமிழகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்அர்ச்சகர் பணியாளர் மோதல்:அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க க
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ச்சகரும், கோயில் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோயில் பணியாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.ருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அலுவலக உதவியாளராக இருப்பவர் நயின...
தமிழகம்
கிருஷ்ணகிரியில் மின்தடை நேரம் மாற்றம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கோட்டத்தில் மின் நிறுத்தம் செய்யும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கிருஷ்ணகிரி கோட்டத்துக்குட்பட்ட கிருஷ்ணகிரி, சூளகிரி துணை மின்நிலையம் மற்றும் வே. மாதேப்பள்ளி, சின்னக்கொத்தூர், ஆலப்பட்டி, ஒரப்பம், கா...
தமிழகம்
விஷ்ணு கோயில் விழா
போடி: கம்பம் மெட்டு அருகே உள்ள சென்னாகுளம் மகாவிஷ்ணு கோயிலில் மஹா உற்சவ திருவிழா நடந்தது. மகாவிஷ்ணுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள், அன்னதானம் நடந்தது. கம்பம் மெட்டு அருகே கருணாபுரத்திலிருந்து சென்னாகுளம் வரை பக்தர்கள் ஊர்வலமாக சென்று விஷ்ணுவின் அருளாசி பெற்றனர். ஆன்மீக சொற் பொழிவு, இரவு கச்சேரி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்...
தமிழகம்
வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி: தளி அடுத்த அஞ்செட்டி பஞ்சாயத்து ஓசதொட்டி பனையூர் கிராமத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குளம் சீரமைக்கும் பணிகளை கலெக்டர் சண்முகம் ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்கள் பனையூர் கிராமத்தில் இருந்து முனீஸ்வரன் கோவில் வரை 3 கிலோ மீட்டர் சாலை அமைக்க வேண்டும். அக்கா தங்கை ஏரிக்கு செல்லும் ஓடை...
தமிழகம்
தலைமை ஆசிரியர் கைது
தேனி: தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணி. இவர், போலீசாரை விமர் சித்தும், அரசை விமர்சித்தும் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய வழக்கில் அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இதே வழக்கில் இப்பள்ளி ஓவிய ஆசிரியர் முருவேல் கைது செய்யப் பட்டார்.
தமிழகம்
பெரியாறு அணையில் நாளை தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை
கூடலூர்: பெரியாறு அணை நீர்மட்டம் குறைவால் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் தேதி நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முதல் போக நெல் சாகுபடிக்காக பெரியாறு அணையில் இ...
தமிழகம்
விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதாகமாவட்டத்தில் 90 வழக்குகள் பதிவு
தூத்துக்குடி:போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதாக 8 சப்டிவிஷனில் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் 8 சப்டிவிஷன்ஸ் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதாக 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி டவுன் சப்டிவிஷனில் 50 வழக்குகளும், ரூரல் சப்டிவிஷனில...
தமிழகம்
வேதை அருகே மூலிகை கருத்தரங்கு பயிற்சி முகாம்
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கோடிமுத்து மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சி மைய தொண்டு நிறுவனம், வனத்துறை எம்.பி.சி.ஏ., ஆகியவை சார்பில் மூலிகை கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் நடந்தது. நாகை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன் தலைமை வகித்தார். மூலிகை உற்பத்தியாளர் சங்க ...
தமிழகம்
தூத்துக்குடி காரப்பேட்டை பள்ளி:98 சதவீதம் தேர்ச்சி
தூத்துக்குடி:தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியில் 288 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த பள்ளியில் மாணவர்கள் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் செபஸ்டின் ஆரோ...
தமிழகம்
மனைவி மீது கொதிநீர் ஊற்றிய கணவன் சிறையிலடைப்பு
வேதாரண்யம்: பணப்பிரச்னையில் மனைவி மீது கொதித்த தண்ணீரை ஊற்றி கொடுமைப்படுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர். வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (50). இவரது மனைவி கன்னியம்மாள் (40). இவர்களுக்கு கவிதா (19) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக கன்னியாம்மாள், உறவினர்கள் மற்றும் தெரிந...
தமிழகம்
இடி தாக்கி வாலிபர் பலி 8 பேருக்கு பார்வை பாதிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இடி தாக்கியதில் வாலிபர் பலியானார். 8 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. போளூர் மற்றும் அத்திமூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. போளூர் அடுத்த அத்திமூர் சம்பங்கிபுரத்தை சேர்ந்த சேகர்(37) என்பவர், தனது நண்பர்கள் 9 பே...
தமிழகம்
தூத்துக்குடியில் நேரு நினைவு நாள்
தூத்துக்குடி:நருவின் நினைவு நாளன்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட நேரு உருவப்படத்திற்கு மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சொக்கலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்டத் தலைவர் வேல்முருகன், செயலாளர் பாபு, மாநகர தலைவர் காமராஜ், துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர் கோமதிநாயகம், மாவட்ட இளைஞ...
தமிழகம்
வி.வேடபட்டி புனித பால்ஸ் பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகேயுள்ள வேடபட்டி புனித பால்ஸ் உயர்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பள்ளியில் 23 மாணவர்களும் 28 மாணவிகளும் மொத்தம் 51 பேர் தேர்வு எழுதினர். இதில் ஒரே ஒரு மாணவி தவிர மற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98 சதவீதம் தேர்ச்சியாகும். வளர்மதி என்ற மாணவி தம...
தமிழகம்
பனைமரம் விழுந்து மாணவன் சாவு
திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் பரத்(14). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு கொண்டு சென்றார். திடீரென வீசிய சூறாவளிக்காற்றால் சாலையோரம் இருந்த பனை மரம் கீழே விழுந்தது. இதில் சிக்கிய பரத், சம்பவ இடத்தில் இறந்தார்.
தமிழகம்
கோவில்பட்டியில் வேன் கவிழ்ந்து விபத்து :இருவர் காயம்
கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே ரெடிமேட் துணி தயாரிப்பு நிறுவன வேன் கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கோவில்பட்டி லாயல் மில் காலனியை சேர்ந்த பட்டு மகன் சுந்தர்ராஜ் (27). இவர் கோவில்பட்டி தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் ரெடிமேட் நிறுவன வாகனத்தில் டிரைவராக வேலை செய்து வரு...
தமிழகம்
தமிழிசை கலை விழா
நாமக்கல்: ராமகிருஷ்ண கான சபா, தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில், தமிழிசை மற்றும் கிராமிய நாட்டுப்புற கலை விழா நாமக்கல்லில் நடந்தது. கலைமுதுமணி ரெட்டிப்பட்டி வரதராஜன் குழுவினரின் மங்களை இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. ராமகிருஷ்ண கான சபா தலைவர் வக்கீல் வேல் தலைமை வகித்தார். செயலாளர் நாதமணி வரவேற்றார். தஞ்சாவூர் தெ...
தமிழகம்
கொலை மிரட்டல் விடுத்த வி.ஏ.ஓ., மீது வழக்கு
நாமக்கல்: வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.ஏ.ஓ., உள்பட 2 பேர் மீது பள்ளிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் அடுத்த பள்ளிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டியில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிகிறார். அவர் நண்பர் சண்முகம் என்பவருடன் சேர்ந்து லாரி தண்ணீர் வியாபாரம் செய்...
தமிழகம்
சமச்சீர் கல்வித்திட்ட பாடப்புத்தகம் வந்தாச்சு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான சமச்சீர் பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. ஒரு மாதத்துக்கு முன், 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும், 7ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பாடப் புத்தகங்கள் , தபால்துறை மூலம்...
தமிழகம்
குழந்தையுடன் மனைவி மாயம்: கணவன் புகார்
நாமக்கல்: குழந்தையுடன் மாயமான மனைவியை கண்டுப்பிடித்து தரும்படி கணவன் போலீஸில் புகார் செய்தார். நாமக்கல் அடுத்த எருமப்பட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த செல்வராஜ் (25) என்பவரது மனைவி கலைச்செல்வி (22). இவர்களுக்கு இந்துபிரியா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 26ம் தேதி மதியம் 3 மணிக்கு கலைச்செல்வி மகள் இந்துபிர...
தமிழகம்
கேடு இல்லா வேளாண்மை ஒரு நாள் கருத்தரங்கு
மோகனூர்: மோகனூர் கனரா வங்கி மற்றும் நதிநகர் உழவர் மன்றம் சார்பில், கேடு இல்லா வேளாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. வங்கி மேலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் நவலடி, நதி நகர் உழவர் மன்ற நிர்வாகிகள் அஜிதன், சுந்தரம், அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை டி ஸ்டேன்ஸ் நிறுவன மூத்த உதவி த...
தமிழகம்
மண் மாதிரி சேகரிப்பு முகாம்
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த எலச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட அகரம் மற்றும் சின்னமணலி கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் துரைசாமி மண் ஆய்வின் முக்கியதுவம் பற்றியும், வேளாண் அலுவலர் ராஜகோபால் உரச்செலவை குறைத்து மகசூலை அதிகரிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர். வேளாண் அலுவலர் க...
தமிழகம்
அரசு பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
நாமக்கல்: நாமக்கல் அடுத்த பொம்மம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி சவுந்தர்யா 479 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி வனிதா 466 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி சுதா 454 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். ...
தமிழகம்
காந்தி கல்வி நிலைய மாணவி மாவட்ட அளவில் 2ம் இடம்
ராசிபுரம்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலைய உயர்நிலைப்பள்ளி மாணவி தனுஸ்ரீ நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளைம் காந்தி கல்வி நிலைய மாணவி தனுஸ்ரீ 492 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் 2ம் இடம் பிடித்துள்ளார். மாணவி தனுஸ்ரீ தமிழில் ...
தமிழகம்
ராஜீவ்காந்தி நற்பணி மன்றம் திறப்பு விழா
தூத்துக்குடி:தூத்துக்குடி சட்டசபை தொகுதி காங்கிரஸ் தேசிய பேரவை சார்பாக ராஜீவ்காந்தி நற்பணி மன்றம் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு நற்பணி மன்ற தலைவர் அருள்வளன் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் அசன்ராவுத்தர், துரைராஜ், கருப்பசாமி, சிமியோன், பாஸ்கர், பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற ஆலோசகர் காந்தி வரவேற்றார். தூத்...
தமிழகம்
புனித அலாய்சியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி 99.6 சதவீதம் தேர்ச்சி
தூத்துக்குடி புனித அலாய்சியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 99.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அபிநயா, பவிஸ்ரீ இருவரும் 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், முருகேஸ்வரி 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், பிரீத்தி 480 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். மேலு...
தமிழகம்
அரசு பள்ளி வெற்றியாளர்களுக்கு மத்திய இணையமைச்சர் பாராட்டு
நாமக்கல்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ, மாணவியரை, மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் பாராட்டி பரிசு வழங்கினார். எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 219 பேர் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்தனர். குமாரபாளையம் அரசு மேல்நி...
தமிழகம்
பள்ளி மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே ஹாஸ்டலில் தங்கி படிப்பதை விரும்பாத பள்ளி மாணவன் ஒருவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ஜெயக்குமார்(17). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஹாஸ்டலில் தங்...
தமிழகம்
முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
சாயர்புரம்: சாயர்புரம் தூய மேரி மகளிர் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, அவர் முன்னதாக தொடக்கக் கல்வி பயின்ற பள்ளியின் சார்பில் பாராட்டப்பட்டார்.சாயர்புரம் தூய மேரி மகளிர் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவி ரஞ்சனி 472 மார்க்குகள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்....
தமிழகம்
அங்கன்வாடி கட்டட திறப்பு விழா
பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே அருளூர் - செம்பொன் குடியிருப்பில் அங்கன்வாடி கட்டிட திறப்புவிழா நடந்தது.விழாவிற்கு கருங்கடல் பஞ்.,தலைவர் தங்கசெல்வி அருள்ராஜ் தலைமை வகித்தார். ஆழ்வை யூனியன் சேர்மன் பார்த்திபன் முன்னிலை வகித்தார். விழாவில் சாத்தான்குளம் தொகு தி எம்.எல்.ஏ.,ராணிவெங்கடேசன் கலந்துகொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத...
தமிழகம்
பண்டாரபுரத்தில் ஐ.ஓ.பி.பாங்க் சுமாட் கார்டு அறிமுக விழா
பெரியதாழை: பண்டாரபுரம் கிராமத்தில் சாத்தான்குளம் ஐ.ஓ.பி.பாங்க் சார்பில் சுமாட் கார்டு அட்டை அறிமுக விழா நடந்தது.முதுநிலை மண்டல மேலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்து கார்டை அறிமுகப்படுத்தி பேசினார். இவ்விழாவிற்கு தூத்துக்குடி மண்டல முதன்மை மேலாளர் மணி முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் ஐ.ஓ.பி பாங்க் மேலாளர் கணேசன் வரவேற்ற...
தமிழகம்
ஆறுமுகநேரி அன்னம்மாள் மெட்ரிக்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி அன்னம்மாள் மெட்ரிக் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் பிரவீன் பாலாஜி 454 மார்க் எடுத்து முதலிடத்தையும், மாணவி வித்யாலட்சுமி 453 மார்க் பெற்று 2வது இடத்தையும், மாணவி ஜீனியோ 4...
தமிழகம்
பேய்க்குளம் லூக்கா ஆஸ்பத்திரியில் ஆண்டு விழா
பேய்க்குளம்:பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் ஆஸ்பத்திரியில் 57வது வருட விழா கொண்டாடப்பட்டது.பேய்க்குளத்தில் உள்ள புனித லூக்கா தொழுநோய் ஆஸ்பத்திரி டாக்டர் வேதபோதகம் என்பவரால் 1954ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் 57வது வருட விழா மற்றும் டாக்டர் வேதபோதகத்தின் 123வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தூத்துக்கு...
தமிழகம்
டூவீலர் மோதியதில் வயதான பெண் பலி
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதியதில் பெண் பலியானார். ஜெயங்கொண்டம் அருகே சின்னவளயத்தை சேர்ந்த பழனிசாமி மனைவி லட்சுமி(55). இவ ர் தனது மகன் முருகேசனுடன் அருகிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துவிட்டு மெயின்ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸல் டூவீலர் இரண்டு பேர் மீ...
தமிழகம்
வேளாண் கண்காட்சி கருத்தரங்கு
பெரம்பலூர்: பெரம்பலூரில் மாவட்ட வேளாண் மை துறை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலா ண் முகமை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தலை மை வகித்தார். பெர ம்பலூர் எம்.எல்.ஏ., ராஜ்குமார் முன்னிலை வகித்தார். வேளா ண்மை தொழில்நுட்ப மேலா ண்மை முகமை திட்ட இயக்குநர் ராதாகிருஷ்ணன் வரவேற்...
தமிழகம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி
கோவில்பட்டி: கோவில்பட்டியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான மூன்றாம்கட்ட பயிற்சி நடந்தது.நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2011 பணிகள் துவங்க உள்ளதால் முதல்கட்ட பணிகளான வீட்டுப்பட்டியல், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் வரும் ஜூன் முதல் தேதி துவங்கி ஜூலை 15ந்தேதி வரை நடக்க உள்ளது.இதற்கான ...
தமிழகம்
எலும்பு முறிவு, சிறுநீரக கல் அகற்றும் ஆப்ரேஷனுக்கு இலவச முகாம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அற்புதா மருத்துவமனை சார்பில் இலவச எலும்பு முறிவு மற்றும் சிறுநீரக கற்களுக்கான ஆப்ரேஷன் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. மருத்துவமனை வளாகத்தில் நடந்த முகாமை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் விஜயகுமார் துவக்கி வைத்தார். எலும்பு முறிவுக்கான ஆப்ரேஷன் சிகிச்சை, முதுகு தண்டுவட பிரச்சனைகள், பிறவியிலேயே ஏற்படும...
தமிழகம்
பிஷப் அசரியா பள்ளி96 சதவீத தேர்ச்சி
மெஞ்ஞானபுரம்:மெஞ்ஞானபுரம் அருகே உள்ள பிஷப் அசரியா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 96 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.தேர்வு எழுதிய 100 மாணவ, மாணவிகளில் 4 பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். பள்ளியில் சோபியா என்ற மாணவி 471 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், வனிதா என்ற மாணவி 467 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும...
தமிழகம்
பவுர்ணமி பூஜை
மெஞ்ஞானபுரம்:மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. காலை சிறப்பு ஆராதனையும், மதியம் அன்னதானமும், மாலை 108 விளக்கு பூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை நங்கைமொழி முருகன், கோபால் யாதவ், மனோன்மணி உட்பட கமிட்டியினர் செய்திருந்தனர்.
தமிழகம்
பெரம்பலூரில் 4 பேர் கைது 21 டூவீலர்கள் பறிமுதல்
பெரம்பலூர்: பெரம்பலூர் பகுதியில் டூ வீலர் திருட்டில் ஈடுபட்டு வந்த நான்கு திருடர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 டூ வீலர்கள் கைப்பற்றப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக டூ வீலர்கள் அதிகளவில் திருடப்பட்டு வந்தது. திருச்சி சரக டி.ஐ.ஜி., அமல்ராஜ் உத்த...
தமிழகம்
கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
கோவில்பட்டி:கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரியில் பேராசிரியர்களுக்கான ஒருவார கால பயிற்சி முகாம் நடந்தது.கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரி கணிப்பொறித்துறை சார்பில் புதுடெல்லி அகில இந்திய தொழில் நுட்ப கழகத்தின் நிதியுதவியுடன் பேராசிரியர்களுக்கான ஒருவார கால கற்பித்தல் திறன் மேம்படுத்தும் பயிற்சி முகாம் நடந்தது. இதற்கான ...
தமிழகம்
மனுநீதிநாள் முகாம்
கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் நடந்த மனுநீதி நாளில் 18 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.முகாமிற்கு கோவில்பட்டி ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதியோர் உதவித்தொகை 18 பேருக்கும், பட்டா மாறுதல் 17 பேருக்கும் வழங்கப்பட்டது. தாசில்தார் சு...
தமிழகம்
முத்தலாங்குறிச்சி கோயிலில்வரும் 2ம் தேதி மகா கும்பாபிஷேகம்:23 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது
செய்துங்கநல்லூர்:முத்தலாங்குறிச்சி நல்லாண்பிள்ளை பெற்றவள் என்ற குணவதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் தேதி நடக்கிறது.செய்துங்கநல்லூர் அருகே தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள முத்தலாங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள நல்லாண்பிள்ளை பெற்றவள் என்ற குணவதி கோயில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி ந...
தமிழகம்
மறவன்மடம் திமுக.,சமக.,வினர்அதிமுக.,வில் இணைப்பு
ஏரல்:- மறவன்மடத்தைச் சேர்ந்த சமக.,மற்றும் திமுக.,நிர்வாகிகள் பலர் மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ரமேஷ் முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தனர்.தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடம் சமக., தலைவர் பாஸ்கர், செயலாளர் ஆறுமுகராஜ், துணை செயலாளர் காசிவேல்ராஜ், பொருளாளர் உள்ளிட்ட சமக.,வினர் கூண்டோடு அக்கட்சியை விட்டு வெளியேறி அதிமுக.,ஜெ.,பேர...
தமிழகம்
நியமனம்
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக.,பொறுப்பாளராக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிடக்கழக பொறுப்பாளராக திருச்செந்தூரைச் சேர்ந்த செந்தில்குமாரை தேமுதிக.,தலைவர் விஜயகாந்த் நியமனம் செய்துள்ளார்.