category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
வேட்பாளர்கள் சொத்துக்கள் ஆய்வு: ஓராண்டிற்குப்பின் வரித்துறை அதிரடி
புதுடில்லி: கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் கமிஷனிடம் அளித்த சொத்து மதிப்பு பட்டியலை, வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்யும்போது, தங்களின் சொத்து மதிப்பு, கடன், கையிரு...
இந்தியா
ராஜ்யசபா எம்.பி., தேர்தல்: மனு தாக்கல் இன்று துவக்கம்
சென்னை: தமிழகத்தில் காலியாகும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தலில், மனு தாக்கல் இன்று துவங்குகிறது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், புதிய எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான ...
தமிழகம்
மருத்துவம் பொறியியல் விண்ணப்பம் சமர்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை : பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. பொறியியல் படிப்பிற்கு கடந்த 3ம் தேதியிலிருந்தும், மருத்துவ படிப்புகளில் சேர கடந்த 17ம் தேதியி...
இந்தியா
இந்திய புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று அமெரிக்கா பயணம்
புதுடில்லி: மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லியிடம் விசாரிக்க நான்கு பேர் கொண்ட இந்திய குழுவினர் இன்று அமெரிக்கா செல்கின்றனர். கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதலில் நடத்தினர். இதில் 160பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந...
இந்தியா
அமைதியை பரப்புவதே லட்சியம்: தாக்குதலை கண்டு பயப்பட மாட்டேன் ; ரவிசங்கர் சிறப்பு பேட்டி
பெங்களூரு: வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார். கொலை செய்ய வந்தவன் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. "இச்சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது' என்று ரவிசங்கர் தெரிவித்தார்.பெங்களூரு கனகபுரா ரோட்டில், வாழும் கலையின் ஆசிரமம் உள்ளது. ...
இந்தியா
எனக்கு எதிரிகள் இல்லை : ரவிசங்கர் பேட்டி
பெங்களூரு : வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் : எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, என் மீது தாக்குதல் நடத்த மு‌யன்றவரை கண்டு அச்சமும் இல்லை என்றார். வன்முறையை தூண்ட நினைத்த விஷமியே இந்தக் காரியத்தை செய்துள்ளார். அவர் எனது ஆசிரமத்தில் ‌இணைய மனமாற அழைப்பு விடுக்கி‌றேன். என் மீத...
தமிழகம்
நெல்லையில் நர்சு கைது
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தாருகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (48). ராயகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிகிறார். இவர் அக்கம்பக்கத்து ஊர்களில் தான் ஒரு டாக்டர் எனக் கூறிக் கொண்டு வைத்தியம் பார்த்து வந்தார். இவர் மீது மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பரமேஸ்வ...
General
கர்நாடகா பஸ் விபத்து : ஜனாதிபதி இரங்கல்
ஷாங்காய் : கர்நாடகாவில் நடந்த பஸ் விபத்தில் 10 குழந்தைகள் உள்பட 30 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.ஆறு நாள் அரசு முறை ப‌யணமாக சீனா சென்ற ஜனாதிபதி இன்று இந்தியா திரும்புகிறார்.
இந்தியா
ரத்தோர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
சண்டிகர் : இளம் பெண் ருச்சிகா வழக்கில் கூடுதல் தண்டனை பெற்று கைதாகிய அரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர், ஜாமீன் மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தறது . ரத்தோர் புராலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செசன்ஸ் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரத்தோர் ஐகோர்ட்டி...
இந்தியா
தவறான ரயிலை தாக்கி விட்டோம் : நக்சல் ஆதரவு இயக்கம் அறிக்கை
புதுடில்லி : கடந்த 28ம் தேதியன்று மேற்குவங்க மாநிலம் ஜார்கிராமில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்டது. இதில் 140க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். தாக்குதலுக்கு நக்சல் ஆதரவு இயக்கமான பி.சி.பி.ஏ., ( போலீஸ் அராஜகத்துக்கு எதிரான மக்கள் குழு ) பொறுப்பேற்றது. தாக்குதல் குறித்து அந்த இயக்கத்தின் தலைவர் பபி மஹதோ ...
இந்தியா
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் குறைந்து 46.49 ஆக இருந்தது. இந்த மாதக் கடைசி நாளான இன்று இறக்குமதியாளர்கள் மத்தியில் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந...
இந்தியா
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிப்பு
புதுடில்லி : 2009 -2010 நிதி ஆண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2009 - 2010ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டு பருவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2008-2099ம் நிதி ஆண்டில் இதே பருவத்தில...
இந்தியா
ரவிசங்கர் விவகாரம் : எடியூரப்பாவுக்கு காட்காரி கடிதம்
புதுடில்லி : வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பா.ஜ., தலைவர் நிதின் காட்காரி ,கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ரவிசங்கருக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். எடியூரப்பாவை தொலை‌பேசியில் தொ...
இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக சஹாரா தேர்வு
புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் அணி ஸ்பான்சர்ஷிப்புக்காக பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் நடந்த ஏலத்தில் சஹாரா வெற்றி பெற்றது. இதனையடுத்து டிசம்பர் 31ம் தேதி 2013ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக சஹாரா தொடரும்.
தமிழகம்
தங்கம் விலை சற்று குறைந்தது
சென்னை : தங்கம் விலை சற்று குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 720க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 24 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 760க்கு விற்கப்படுகிறது.
தமிழகம்
திறப்பு விழா
மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் அண்ணாமலை இன்டர்நேஷனல் ஓட்டலை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்துவைத்தார். அருகில் இடமிருந்து அவரது மனைவி காந்தி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அமைச்சர் பெரியகருப்பன், உரிமையாளர் ஜெயராமன்.
தமிழகம்
ஆத்தூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் ரகளை
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால் கூட்டம் பாதியிலேயே நின்றது. ஆத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் இருக்கின்றன. இங்கு குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஆத்தூர் நகராட்சிக்கு 30 லட்சம் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலை...
தமிழகம்
உளுந்தூர்பேட்டையில் நகை அடகு கடையில் கொள்ளை
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் நகை அடகு கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. உளுந்தூர்பேட்டையில் கடை வீதியில் இருக்கும் பிரபல நகை அடகு கடையில் நேற்றிரவு பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து சென்று விசாரணையை துவக்கியுள்ளனர்.
இந்தியா
காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு : காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் கோஷ்டி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். காஷ்மீர் மாநிலம் டோடா மாவட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க கமாண்டராக இருந்தவன் சோட்டா பஷீர். இவனுக்கும் அதே அமைப்பைச் சேர்ந்த அப்துல் லத்தீபுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே துப்பாக்...
தமிழகம்
சென்னை வந்தார் துணை ஜனாதிபதி
சென்னை : துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி சென்னை வந்தார். தனி விமானம் மூலம் சென்னை வந்த அவரை துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மைதீன்கான், சுரேஷ்ராஜன், ஆகியோரும், டி.ஜி.பி., லத்திகா சரண், கமிஷனர் ராஜேந்திரன், பறநகர் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் வரவேற்றனர். அன...
General
மாம்பழம் அனுப்பியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் கிலானி
இஸ்லாமாபாத் : மாம்பழம் அனுப்பியதற்காக பிரதமர் மன்‌மோகன்சிங்குக்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானி நன்றி தெரிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு அல்போன்சா ரக மாம்பழங்கள், இந்திய பிரதமர் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட பிரதமர் கிலானி வெளியிட்ட செய்தியில் மாம்பழம் அனுப்பியதற்கு...
இந்தியா
நக்சல்களுக்கு எதிராக ராணுவம் : அரசு ஆராய்ந்து வருவதாக அந்தோணி பேட்டி
புனே : நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு எல்லா வகையிலும் அலசி ஆராய்ந்து வருவதாக மத்திய பாதுகாப்பு படை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த விஷயத்தில் அரசு இதுவரை இறுதி கட்ட முடிவை எடுக்கவில்லை என்றார்.அரசு இந்த விவகாரத்தில் எந்த முடிவு எடுத்தாலும் அதை‌ பாதுகாப்பு படை ...
தமிழகம்
கோவை கலெக்டர் அலுவலகத்தி்ல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணா
‌கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., திடீர் தர்ணா ‌போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. கோவை பேரூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வேலுமணி. இவரது தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை மாவட்ட நிர்வாகம் சரி செய்யாததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் தர்ணா ...
தமிழகம்
லஞ்சம் வாங்கிய செய்யூர் சர்வேயர் கைது
செய்யூர் : லஞ்சம் வாங்கிய செய்யூர் சர்வேயர் கைது செய்யப்பட்டார். ‌செய்யூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் சேகர் (48). இவர் செய்யூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வருகிறார். இவர் கேளம்பாக்கத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் நில அளவை செய்வதற்காக லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து குணசேகரன் லஞ்ச ஒழிப்பு போலீசில் ப...
இந்தியா
மேற்குவங்க ரயில் கவிழ்ப்புக்கு மாவோயிஸ்டு பின்னணி : சிதம்பரம்
புதுடில்லி : மேற்குவங்க மாநிலம் ஜார்கிராமில் கடந்த வெள்ளிக்கிழமை ( 28ம் தேதி) அன்று எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்ட சம்பவத்திற்கு மாவோயிஸ்டு பின்னணி இருக்கும் என மத்திய அரசு சந்தேகிப்பதாக மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். டில்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் இதை தெரிவித்தார். ரயில்கவிழ்ப்பு சம்ப...
தமிழகம்
சொத்து குவிப்பு வழக்கு: கு.ப.கி., உள்பட 8 பேர் விடுதலை
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபணத்திற்கு ஏற்றதாக ஆவணங்கள் இல்லை என ‌சென்னை தனி கோர்ட் தள்ளுபடி செய்தது.  அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வேளாண்துறை அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். 1996-ம் ஆண்டு வருமான வரி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை...
தமிழகம்
சொத்துகுவிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் விடுவிப்பு
சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் விடுவிக்கப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வேளாண் துறை அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். 1996ம் ஆண்டு வருமான வரி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் அவரது உதவியாளர் வீடுகளில் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின்...
தமிழகம்
தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட் கிளை இப்போதைக்கு இல்லை : மொய்லி
சென்னை : தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பதற்கான திட்டம் இப்‌போதைக்கு இல்லை என மத்திய சட்ட துறை அமைச்சர் வீரப்ப மொய்லலி தெரிவித்துள்ளார்.
இந்தியா
ஜார்கண்ட் அரசியல் சூழல் : பிரதான கட்சிகளுடன் கவர்னர் ஆலோசனை
ராஞ்சி : ஜார்கண்ட் மாநில முதல்வர் பதவியை சிபுசோரன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய அரசு அமைப் பது குறித்து பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இன்று அம்மாநில கவர்னர் எம்.ஏ.எச்.பாரூக் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகம்
தஞ்சையில் 375 பவுன் நகை கொள்ளை
தஞ்சாவூர் : பட்டுக்கோட்டை அருகே ரூபாய்.40 லட்சம் மதிப்புள்ள 375 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் க்சேத்ரிய கிராமின் பைனான்சியல் சர்வீஸ் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் நகைகடன் மற்றும் விவசாய கடன் ஆகியவை அளித்து வந்தது...
இந்தியா
ரயில் கவிழ்ப்பு சம்பவத்திற்கு சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை : மேற்கு வங்க அரசு
கோல்கட்டா : ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என மேற்கு வங்க மாநில அரசு கூறியுள்ளது.கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் நக்சலைட்களின் நாசவேலை காரணமாக ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 148 பேர் பலியான...
தமிழகம்
பள்ளி கட்டணத்தில் மாற்றமில்லை : நீதிபதி கோவிந்தராஜன்
சென்னை : பள்ளி கட்டணத்தில் மாற்றமில்லை என நீதிபதி கோவிந்தராஜன் கூறியுள்ளார். தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நிர்ணயித்த கட்டண விகிதத்தை தனியார் பள்ளிகள் ஏற்று கொள்ளவில்லை. கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. மேல்முறையீடு மனுவு...
இந்தியா
மத்திய அரசின் 2ம் ஆண்டு செயல்திட்ட அறிக்கை இன்று வெளியீடு
புதுடில்லி : மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2ம் ஆண்டு செயல்திட்ட அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. இந்த அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் வெளியிடுகின்றனர்.
தமிழகம்
முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்ததின விழா
சென்னை : முதல்வர் கருணாநிதி, தன் 87வது பிறந்த தினத்தையொட்டி, கட்சி தொண்டர்களை தி.மு.க., தலைமை அலுவலகத்தில் சந்தித்து, வாழ்த்து பெறுகிறார். வரும் 3ம் தேதி, முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள், தமிழகம் முழுவதும், சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3ம் தேதி காலை 9 மணிக்கு தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சித...
இந்தியா
உள்துறை அமைச்சகத்திடம் ஜார்கண்ட் கவர்னர் அறிக்கை
புதுடில்லி : ஜார்கண்ட் மாநில முதல்வர் பதவியில் இருந்து சிபுசோரன் நேற்று ராஜினாமா செய்தார். இதனைதொடர்ந்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து அம்மாநில கவர்னர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இந்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகததுக்கு தற்போது கிடைத்துள்ளது. இந்த அறிக்கை குறித்து நாளை மத்திய அமைச்சரவை ஆலோசனை நடத...
General
பயங்கரவாதிகளின் தாக்குதல் : பாக்., மைனாரிட்டிகள் புகார்
லாகூர் : பாகிஸ்தானில் மைனாரிட்டி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறுபான்மையினர் சங்கம் கோரியுள்ளது.பாகிஸ்தானில் அகமதிகள் எனப்படும் சிறுபான்மையினருக்கு சொந்தமான லாகூர் மசூதிகள் மீது, கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு மசூதிகளில் புகுந்து தலிபான் பயங்கரவாதிக...
தமிழகம்
சோதனை முறையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரை ரயில்கள் இயக்கம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரை நாளை முதல் சோதனை முறையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரை ரயில்கள் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று ரயில் நிர்வாகம் சோதனை முறையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வரை நாளை முதல் ரயில்கள் இயக்கப்படும் ...
General
கண்டியில் விசா மையம் :இந்திய தூதர் துவக்கினார்
கொழும்பு : இலங்கையின் கண்டி நகரில் இந்திய விசா வழங்கும் மையம்   திறக்கப்பட்டது. இலங்கையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இந்திய விசா வழங்கும் மையங்கள் ஏற்கனவே உள்ளன. கண்டியில், இந்திய விசா வழங்கும் மையத்தை இந்திய தூதர் அசோக் காந்தா  திறந்து வைத்தார். கண்டி மாகாண முதல்வர், கவர்னர் உள்ளிட்டவர்கள் இவ்விழாவில் கலந்து க...
இந்தியா
லலித் மோடிக்கு பி.சி.சி.ஐ., மீண்டும் நோட்டீஸ்
மும்பை : ஐ.பி.எல்., கமிஷனர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட லலித் மோடிக்கு பி.சி.சி.ஐ., நிதிமுறைகேடு தொடர்பாக 3வது நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா
தமிழக முதல்வரை ஆந்திர முதல்வர் சந்திக்கிறார்
ஐதராபாத் : தமிழக முதல்வர் கருணாநிதியை, ஆந்திர முதல்வர் ரோசய்யா 2ம் தேதி சென்னையில் சந்தித்து பேசுகிறார்.ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலிருந்து, 2ம் தேதி காலை திருப்பதி வரும் முதல்வர் ரோசய்யா திருமலை கோவிலுக்கு சென்று, வெங்கடேச பெருமாளை தரிசிக்கிறார்.பின்னர் சித்தூர் மாவட்டத்தில், அரசின் சார்பில் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்...
தமிழகம்
முதல்வரை சந்திக்க பா.ம.க., திட்டம்
சென்னை : முதல்வர் கருணாநிதியை பா.ம.க., தலைவர்கள் நாளை சந்தித்து பேசுகின்றனர். இதன் பின்னர் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
General
பாலியல் பலாத்காரம் :இந்திய இளைஞருக்கு சிறை தண்டனை
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் ஒன்பது வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த இந்திய இளைஞருக்கு, இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்தவர் முஜாகீத்-உர்-ரகுமான் (29). உயர் கல்வி படிப்பதற்காக கடந்த 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். மெல்போர்னில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். பகுதி நேரமாக பொக்ஸ்ட...
தமிழகம்
மேட்டூர் அருகே வேன் கவிழ்ந்து நெல்லை கலெக்டரின் சகோதரர் பலி
மேட்டூர் : மேட்டூர் அருகே வேன் பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில், இருவர் பலி; மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாநகராட்சி கமிஷனராக இருந்த ஜெயராமன், தற்போது திருநெல்வேலி கலெக்டராக உள்ளார். ஜெயராமன் தம்பி கோபால் (45). அவர் மனைவி மார்கரெட் சோபாதினி (44). இவர்களுக்கு நான்சி, சைனி பிரசன்னா (17), ப்ரின்சி எப்சிபா (15) என மூன்...
தமிழகம்
கடலோர காவல் படையினரின் சுவருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம் : கடலோர காவல்படையின் சுற்றுச்சுவரால், கடலில் நீர் கலப்பதில் சிக்கல் உள்ளதாக, கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சமத்துவபுரம் எதிரே இந்திய கடலோர காவல்படைக்கு புதிய குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டடத்தை பாதுகாக்கும் பொருட்டு, தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி ந...
தமிழகம்
போலீஸ் ஏட்டு கணவர் மீது பெண் போலீஸ் ஏட்டு புகார்
பட்டுக்கோட்டை : போலீஸ் ஏட்டு கணவர் மீது, மூன்றாவது மனைவியான போலீஸ் பெண் ஏட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு வழங்கியதுடன், பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கிரேடு ஒன் ஏட்டாக பணி புரிபவர் இளங்கோவன் (39). இவர் மன்னார்க...
தமிழகம்
5 கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபர் கடத்தல் : பட்டதாரி வாலிபர்கள் உட்பட ஆறு பேர் கைது
மதுராந்தகம் : திருச்சி தொழிலதிபரை ஐந்து கோடி ரூபாய் கேட்டு கடத்திய கும்பலைச் சேர்ந்த பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இக்கும்பல் பெண்கள் விஷயத்தில் பலகீனமானவர்களை மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருச்சி கே.கே.,நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ்(46). வேளாண்மை இணை இயக்குனராகப் பணிபுரிந்து விருப்ப ...
தமிழகம்
தீக்குளிக்க முயன்றவர்கள் கைது
திருப்பூர் : தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்ற, திருப்பூர் பாசி பாரெக்ஸ் டிரேடிங் நிறுவன முதலீட்டாளர்களை, போலீசார் கைது செய்தனர். நேற்று பகல் 12.30 மணிக்கு, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள், பாசி முதலீட்டாளர்கள் 48 பேர் வந்தனர். சிலர், பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்த மண்ணெண்ணெயை தங்கள் மேல் ஊற்றிக்கொண்டனர். அர...
தமிழகம்
நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர் கைது
தேனி : தேனி, கோவை, திருப்பூர் உட்பட ஐந்து மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் கண்ணன் (40). இவரது நண்பர் ஞானவேல் (40). இருவரும் கோவையில் 2007 ல் ஜி.ஜி.பி., மார்க்கெட்டிங் என்ற நிதி நிறுவனம் தொடங்...
தமிழகம்
நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர் கைது
தேனி : தேனி, கோவை, திருப்பூர் உட்பட ஐந்து மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் கண்ணன் (40). இவரது நண்பர் ஞானவேல் (40). இருவரும் கோவையில் 2007 ல் ஜி.ஜி.பி., மார்க்கெட்டிங் என்ற நிதி நிறுவனம் தொடங்...
இந்தியா
சொல்கிறார்கள்
பாட்டு எழுதும்பரோட்டா மாஸ்டர் ஜெயங்கொண்டான்: பெரம்பலூருக்குப் பக்கத்தில் ஏந்தல் இடையார்ங்கிற சிறிய கிராமம் தான் எங்க ஊர். அப்பா மாடா உழைக்கிற மனுஷன்; ஆனா குடி அவரைப் பிடிச்சு பேயாட்டம் ஆட்டிடுச்சு. இரண்டு அக்கா, இரண்டு அண்ணன், இவங் களைக் காப்பாத்த அம்மா கூலி வேலைக்குப் போக வேண்டிய நிலை.சினிமாவில் பாட்டு எழுதுற ஆசையில் ...
தமிழகம்
ஜெயலலிதாவுடன் இந்திய தேசிய லீக் கட்சியினர் சந்திப்பு
சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் முகமது சுலைமான், மாநில தலைவர் இனாயத்துல்லா, மாநில பொதுச் செயலர் ஜகருதீன் அகமத், துணைத் தலைவர்கள் நாகூர் ராஜா ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்தியா
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை
புதுடில்லி : எவரெஸ்ட் சிகரத்தில், பாஜ்பேயி (16) என்ற இந்திய சிறுவன் குறுகிய காலத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். டில்லியைச் சேர்ந்த அர்ஜுன் பாஜ்பேயி, அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், உத்தர்காசியில் உள்ள நேரு மலையேறும் பயிற்சி மையத்தில், மலையேறுவதற்கான அடிப்படை பயிற்சி பெற்றுள்ளார். இந்நிலையில்...
தமிழகம்
ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு அ.தி.மு.க.,வில் கடும் போட்டி
சென்னை:ராஜ்யசபாவுக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை ஓரிரு நாளில் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவிக்கவுள்ளார். ராஜ்யசபாவுக்கு தமிழகத்திலிருந்து ஆறு எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். தி.மு.க., சார்பில் கே.பி.ராமலிங்கம், தங்கவேல், செல்வகணபதி போட்டியிடுகின்றனர். இதற்கான அறி...
இந்தியா
சபரிமலையில் புதிய நந்தவனம் : ஓராண்டில் பூக்கத் துவங்கும்
சபரிமலை : சபரிமலையில் இருந்த நந்தவனம், நவீனமயமாக்கும் பணிகள் முடிந்தன. இங்கு பூக்கும் மலர்கள் இனி அய்யப்பனுக்கு பூஜைகள் நடத்த பயன்படுத்தப்படும். இதன் மூலம் சன்னிதானத்தில் மலர்களுக்கு இதுவரை இருந்து வந்த பற்றாக்குறை இனி இருக்காது. சபரிமலையில் மாளிகைப்புரத்தம்மன் சன்னிதியில் இருந்து பாண்டித்தாவளம் போகும் வழியில் சபரி நந்...
இந்தியா
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வரம்புக்குள் கொண்டு வர அரசு பரிசீலனை
புதுடில்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி,சி.சி.ஐ.,), சங்கங்கள் பதிவுச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வந்து அடக்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஐ.பி.எல்., விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து, பல்வேறு அமைப்புகளின் செயலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து அதிகமாக எழுந்திருக்கிறது....
தமிழகம்
வரச்சொல்லுங்க கலெக்டரை: எம்.எல்.,ஏ., ஆவேசம்
கோவை:குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வேலுமணி, கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டார்.பேரூர் தொகுதிக்கு உட்பட்ட(மதுக்கரை ஒன்றியம்) செட்டிபாளையம், ஒத்தக்கால் மண்டபம், எட்டிமடை, திருமலையம்பாளையம், மதுக்கரை பேரூராட்சிகள் மற்றும் பிச்சனூர், நாச்சிபாளையம், அரிசிபாளையம், மைலேறிபாளையம்,...
இந்தியா
பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு போராடும் இலாபட் : இவர், இப்படி...
கிராமப்புற பெண்களுக்கான மேம் பாட்டுக்காக அரை நூற்றாண்டுகளாக உழைத்து வருபவர் இலா பட். இவரது சேவையைப் பாராட்டி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜப்பான் நாட்டின் உயரிய, "நிவானோ அமைதி விருது' வழங்கப்பட்டது. ஆன்மிக வேட்கையுடன், காந்திய சிந்தனையுடன் உழைத்து வருவதற்காக, ஒரு கோடி ரூப...
இந்தியா
தமிழக முதல்வரை ஆந்திர முதல்வர் சந்திக்கிறார்
ஐதராபாத் : தமிழக முதல்வர் கருணாநிதியை, ஆந்திர முதல்வர் ரோசய்யா நாளை (2ம் தேதி) சென்னையில் சந்தித்து பேசுகிறார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலிருந்து, நாளை (2ம் தேதி) காலை திருப்பதி வரும் முதல்வர் ரோசய்யா திருமலை கோவிலுக்கு சென்று, வெங்கடேச பெருமாளை தரிசிக்கிறார். பின்னர் சித்தூர் மாவட்டத்தில், அரசின் சார்பில் பல இடங்களில்...
தமிழகம்
முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்ததின விழா
சென்னை:முதல்வர் கருணாநிதி, தன் 87வது பிறந்த தினத்தையொட்டி, கட்சி தொண்டர்களை தி.மு.க., தலைமை அலுவலகத்தில் சந்தித்து, வாழ்த்து பெறுகிறார்.வரும் 3ம் தேதி, முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள், தமிழகம் முழுவதும், சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3ம் தேதி காலை 9 மணிக்கு தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சித் த...
இந்தியா
வேத வாக்கா, பழைய பஞ்சாங்கமா? மூத்தவர்கள் பேச்சு இன்று எடுபடுமா
புதுடில்லி : கம்ப்யூட்டர் யுகத்தில் கலாசார மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள இளைய சமுதாயம், மூத்தவர்களின் அறிவுரையை பின்பற்ற விரும்புவதாக, தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கத்திய கலாசார தாக்கத்தால் நமது நாட்டின் பண்பாடு சீர்கேட்டு வருவது கண்டு சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுவதுண்டு. கல்வியறிவு, வேலை, கலாச...
தமிழகம்
9 ம் வகுப்பில் செய்முறை தேர்வு: நடப்பு ஆண்டில் அறிமுகம்
சிவகங்கை : இக்கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வு (பிராக்டிகல்) அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி உத்தரவு:வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளி ஆறு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி வழங்கப்படும். ஆசிரியர்கள் கற்பித்தல் உபகரணங்களை பய...
தமிழகம்
சலவைத்தொழிலாளி மகனின் சாதனைக்கு உதவிய அதிகாரிகள்
தூத்துக்குடி : கோவில்பட்டியில், குடும்ப வறுமைகாரணமாக 3ம் வகுப்பு படித்ததை பாதியில் நிறுத்திவிட்டு தீப்பெட்டி ஆலைக்கு வேலைக்குச் சென்ற மாணவர், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட அதிகாரிகளின் உதவியால் மீண்டும் பள்ளி படிப்பை தொடர்ந்து, தற்போது பிளஸ் 2வில் 1098 மதிப்பெண் பெற்றுள்ளார். கோவில்பட்டி, வள்ளுவர் நகர் சலவைத்தொழிலாள...
தமிழகம்
நூல் விலை கிலோவுக்கு ரூ.21 உயர்வு? திக்... திக்... மனதுடன் உற்பத்தியாளர்கள்
திருப்பூர் : இன்று வெளியாகும் நூல் விலை பட்டியலில், காட்டன் ஒசைரி நூல் விலை கிலோவுக்கு 21 ரூபாய் வரை உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால், பனியன் தொழில் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் அலறுகின்றனர். ஒவ்வொரு சீசன் துவக்கத்திலும், அதிகப்படியான ஆர்டர்களைக் கவர்ந்து, வர்த்தகத்தைப் பெருக்குவதில், பனியன் உற்பத்திய...
தமிழகம்
ஜெயலலிதாவுடன் இந்திய தேசிய லீக்கட்சியினர் சந்திப்பு
சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை நேற்று அவரது இல்லத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் முகமது சுலைமான், மாநில தலைவர் இனாயத்துல்லா, மாநில பொதுச் செயலர் ஜகருதீன் அகமத், துணைத் தலைவர்கள் நாகூர் ராஜா ஆகியோர் சந்தித்து பேசினர்.
தமிழகம்
கோவை - மேட்டுப்பாளையம் இடையே ஒரு மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை : கோவை - மேட்டுப்பாளையம் இடையே இன்று முதல் வரும் 30ம் தேதி வரை வாரத்தில் ஆறு நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவை - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ளது. இதனால், இந்நகரங்கள் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என, மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையொட...
தமிழகம்
இணையதளம் துவக்கம்
சென்னை:சவூதி அரேபியா ஜெயலலிதா பேரவைக்காக, உருவாக்கப்பட்ட இணையதளத்தை அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சவூதி அரேபியா ஜெயலலிதா பேரவைச் செயலர் மைதீன் மற்றும் நிர்வாகிகள் ஜான்பாட்ஷா, மனோகரன், நடராஜன், கமாலுதீன், பெரியதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.இணைய தளத்தை உருவாக்கிய பேரவை செயலர் மை...
தமிழகம்
போலீஸ் டி.ஜி.பி., பாலச்சந்திரன் பணி ஓய்வு
சென்னை : தமிழக காவல்துறை, பயிற்சி டி.ஜி.பி., பாலச்சந்திரன் நேற்று பணி ஓய்வு பெற்றார். தமிழக காவல் துறை பயிற்சி டி.ஜி.பி., பாலச்சந்திரன் மதுரையைச் சேர்ந்தவர். 1978ல் கூடுதல் எஸ்.பி.,யாக போலீஸ் துறைக்குள் நுழைந்த பாலச்சந்திரன், கடந்த 34 ஆண்டுகளாக தமிழக காவல்துறை, இந்திய அரசுப் பணிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு : சென்னையில் இன்று துவக்கம்
சென்னை : சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இன்று துவங்குகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, முதல்வர் கருணாநிதி வீடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி துவக்கப்படுகிறது. பொருளாதார பின்னணி, கல்வி, வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள், பிறப்பு, இறப்பு, எஸ்.சி., எஸ்.டி., மொழி, இனம், மதம், மாற்றுத் திறனுடையோர் எ...
தமிழகம்
கோடை விடுமுறை முடிந்ததால் ரயில்களில் பயணிகள் கூட்டம்
சென்னை : கோடை விடுமுறை முடிந்ததையொட்டி, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் நெருக்கடி அதிகமாக இருந்தது. கோடை விடுமுறையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த மார்ச் 15ம் தே...
தமிழகம்
தி.மு.க.,வில் சேர்கிறார் முத்துசாமி
ஈரோடு : தி.மு.க.,வில் இணைவது குறித்த இறுதி முடிவை, முன்னாள் அமைச்சர் முத்துசாமி நாளை வெளியிடுகிறார். அவரை தி.மு.க.,வுக்கு வரவேற்கும் வகையில், பெயர் வெளியிடாமல் டிஜிட்டல் பேனர் ஈரோட்டில் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வுக்கு வந்தாலும் முத்துசாமிக்கு பல பிரச்னைகள் காத்திருக்கின்றன. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முத்துசாமி, ...
தமிழகம்
கல்வி நிறுவனங்கள் அருகே சிகரெட் விற்பனை அமோகம்
மதுரை : கல்வி நிறுவனங்களுக்கு அருகில் பீடி, சிகரெட் விற்க சட்டம் தடை விதித்துள்ளது. இச்சட்டத்தை முறையாக அமல்படுத்தாததால், மாணவர்கள் தடையின்றி பீடி, சிகரெட் புகைக்கின்றனர். தொடர்ந்து இப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். புகையிலை தடுப்புச் சட்டம் (விதிகள்) 2008 ல் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், பொதுஇடங்களில் புகைப்...
தமிழகம்
ராஜ்யசபா தேர்தல் மனு தாக்கல் துவங்கியது: அ.தி.மு.க., உறுப்பினருக்கு ஓட்டுரிமை இல்லை
சென்னை:ராஜ்யசபா தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்று துவங்கியது. இத்தேர்தலில், அ.தி.மு.க., உறுப்பினர் சந்திரா, நியமன உறுப்பினர் நிகிலி ஆகியோருக்கு ஓட்டுரிமை கிடையாது என, சட்டசபை செயலர் தெரிவித்தார்.தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின் மனு தாக்கல் நேற்று துவங்கியது. சுயேச்சைகள் இரண்டு பேர் ந...
தமிழகம்
மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகள்
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் (பொறுப்பு) கு. சேதுராமன் வெளியிட்ட அறிக்கை பல்கலையில் பயிலும் திறந்தவெளி தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலை, சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டய படிப்புகளுக்கு, ஜூலை 3 முதல் 31 வரை, வாரத்தின் சனி, ஞாயிறுகளில் தேர்வுகள் நடக்கின்றன. தனித்தேர்வர்கள் விண...
தமிழகம்
நலிவுற்ற உற்பத்திப்பிரிவு தொழில்களுக்கு நிதியுதவி : தொழில் மையம் ஏற்பாடு
மதுரை : கடந்த சில ஆண்டுகளாக, உற்பத்தித் தொழிலில் நலிவுற்று மூடப்பட்ட நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி, சீரமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகளும், பாதிக்கப் பட்ட நிறுவனங்கள் நேரடியாக மாவட்ட தொழில் மையத்துக்கு விண்ணப்பிக் கலாம். கடந்த மூன்று ஆண்டுகளாக லாபமின்றி, மூடப்பட்ட நிறுவனங்கள், மூ...
தமிழகம்
புகையிலை எதிர்ப்பு ஊர்வலம்
திருநெல்வேலி : நெல்லையில் புகையிலை எதிர்ப்பு தின இறுதி ஊர்வலம் நடந்தது. புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நேற்று நெல்லையில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம், ட்ரூ தொண்டு நிறுவனம், சரணாலயம் ஆகியவற்றின் சார்பில் புகையிலை பொருட்களின் இறுதி ஊர்வலம் நடத்தப் பட்டது. இதில் 6 அடி நீள மாதிரி சிகரெட், புகையிலை பொருட்கள் பாடையில் ஊ...
தமிழகம்
ஒன்பதாம் வகுப்பில் செய்முறை தேர்வு : நடப்பு ஆண்டில் அறிமுகம்
சிவகங்கை : இக்கல்வி ஆண்டு முதல், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறைத் தேர்வு (பிராக்டிகல்) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி உத்தரவு: வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் ஆறு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி வழங்கப்படும். ஆசிரியர்கள் கற்ப...
இந்தியா
மத்திய அரசு மீது அடுக்கடுக்கானகுஜராத் முதல்வர் மோடி புகார்
சூரத்:பயங்கரவாதிகளாலும், நக்சலைட்களாலும் அப்பாவி மக்கள் பலியாகும் போது, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காமல், கூட்டம் போட்டு ஆலோசித்து கொண்டே இருக்கிறது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இது குறித்து நரேந்திர மோடி பேசியதாவது:அப்பாவி மக்கள் நக்சலைட்களாலும், பயங்கரவாதிகளா...
தமிழகம்
வாகன வரி உயர்வு : இன்று முதல் அமல்
விருதுநகர் : தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள வாகன வரி, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் வாகனங்களுக்கு புதிய வரி விதிப்பு பட்டியலை, அரசு அறிவித்துள்ளது. இந்த விகிதப்படி, இன்று முதல் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் வரிகள் வசூலிக்கப்பட உள்ளன. பத்து லட்சம் ரூபாய்க்குள் விலை உள்ள வாகனங்களுக்கு, வாகன மத...
தமிழகம்
ரயில்கள் தாமதம்
மதுரை : விழுப்புரத்தில் ரயில்வே பாதையில் உயர்மின் அழுத்த இணைப்பு அறுந்து விழுந்ததால், மதுரைக்கு ரயில்கள் தாமதமாக வந்தன. விழுப்புரத்தில் ரயில்வே பாதையில் நேற்று முன்தினம் உயர் மின் அழுத்த இணைப்பு திடீரென அறுந்து விழுந்தது. இதை சரிசெய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதனால், மதுரைக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு வர வேண்டிய கன்னியாகும...
தமிழகம்
பொன்முடி தந்தை மறைவு : அமைச்சர்கள் இரங்கல்
விழுப்புரம் : அமைச்சர் பொன்முடியின் தந்தை மறைவுக்கு, அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தனர். விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் தந்தை கந்தசாமி, உடல் நலக் குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, அமைச்சர் பொன்முடியை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர்கள் வெள்ளக்கோவில் ச...
தமிழகம்
அதிக இறால் வரத்து : மீனவர்கள் மகிழ்ச்சி
மண்டபம் : மீன்பிடி தடைக்காலம் முடிந்து, கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு, 80 கிலோ முதல் 150 கிலோ வரை இறால் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தடை காலம் முடிந்து, நேற்று முன்தினம் இரவு மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். திரும்பிய படகுகளுக்கு, தலா 100 கிலோ முதல் 150 கிலோ வரை இறால் கிடைத்தது. அதிக அளவ...
இந்தியா
தமிழக முதல்வரைஆந்திர முதல்வர் சந்திக்கிறார்
ஐதராபாத்:தமிழக முதல்வர் கருணாநிதியை, ஆந்திர முதல்வர் ரோசய்யா நாளை (2ம் தேதி) சென்னையில் சந்தித்து பேசுகிறார்.ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலிருந்து, நாளை (2ம் தேதி) காலை திருப்பதி வரும் முதல்வர் ரோசய்யா திருமலை கோவிலுக்கு சென்று, வெங்கடேச பெருமாளை தரிசிக்கிறார்.பின்னர் சித்தூர் மாவட்டத்தில், அரசின் சார்பில் பல இடங்களில் ஏற்...
தமிழகம்
காலாவதியான பொருட்கள் நீக்கம் : ரேஷன் பணியாளர் சங்கம் கோரிக்கை
திண்டுக்கல் : காலாவதியான மளிகைப் பொட்டலம், ஆட்டாவை ரேஷன் கடை இருப்பு, பொறுப்பு பதிவேடுகளிலிருந்து நீக்க வேண்டும் என, ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் டி.பால்ராஜ் கூறினார். அவர் கூறியதாவது: ஊதிய நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்படும் குழுவிற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும். அதுவரை, இடைக்கா...
தமிழகம்
காலை நேரத்தில் காற்று குறைவாக வீசுவதால் பெரும்பாலான இடங்களில் தொடரும் மின்தடை
மேட்டூர் : தென்மேற்கு பருவக் காற்று காலை நேரத்தில் குறைவாக வீசுவதால், காற்றாலை மின்உற்பத்தி குறைவாக இருப்பதால், அந்த சமயத்தில் மட்டும், பெரும்பாலான இடங்களில் இரண்டு மணிநேர மின்தடையை நடைமுறைப்படுத்தி, மின்பற்றாக்குறையை வாரியம் சமாளிக்கிறது. தமிழகத்தில் அனைத்து மின்உற்பத்தி அமைப்புகள் மூலம், 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின...
இந்தியா
ஜெகன் மோகன் ரெட்டியை நீக்குங்கள்:ரோசய்யா ஆதரவாளர்கள் வலியுறுத்தல்
மேலிடத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்படும் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை, கட்சியிலிருந்து நீக்கும் படி முதல்வர் ரோசய்யாவின் ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.கடந்த எட்டு மாதங்களுக்கு முன் ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதையடுத்து இவரது ம...
தமிழகம்
சீன உறவு வலுப்பட பிரதிபா விருப்பம்
பீஜிங்:சீனாவில் ஆறு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜனாதிபதி பிரதிபா நேற்று அங்கிருந்து புறப் பட்டார்.ஜனாதிபதி பிரதிபா, கடந்த 26ம் தேதி சீனாவுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தனது சுற்றுப் பயணத்தின்போது, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, பிரதமர் வென் ஜியாபோ மற்றும் அந்த நாட்டின் அமைச்சர்கள், தொழில் அதிபர்களை ...
தமிழகம்
பாலியல் பலாத்காரம்:இந்திய இளைஞருக்குசிறை தண்டனை
மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் ஒன்பது வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த இந்திய இளைஞருக்கு, இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இந்தியாவைச் சேர்ந்தவர் முஜாகீத்-உர்-ரகுமான் (29). உயர் கல்வி படிப்பதற்காக கடந்த 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். மெல்போர்னில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். பகுதி நேரமாக பொக்ஸ்டெல்...
இந்தியா
போலி ஆவணங்கள் காட்டி ரூ. 9 கோடி மோசடி
கோல்கட்டா : போலியான ஆவணங்களை காண்பித்து, கனரா வங்கியில் ஒன்பது கோடியே 14 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக, ஒரு தனியார் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் சி.பி.ஐ., போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், வடக்கு தினாஜ்பூரில் இயங்கி வரும் ராய்கஞ்ச் சால்வன்ட் ஆயில் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்க...
இந்தியா
ரயில் விபத்தில் சிக்கினார்களா : புதுமண தம்பதி கதி என்ன?
நாக்பூர் : தேனிலவுக்கு சென்று திரும்பியபோது, ரயில் விபத்தில் சிக்கி காணாமல் போன நாக்பூரை சேர்ந்த புதுமண தம்பதியின் கதி என்ன என்பது பற்றி இதுவரை தெரியாததால், குடும்பத்தினர் செய்வதறியாது கண்ணீருடன் காத்திருக்கின்றனர். நாக்பூரை சேர்ந்தவர் அமீத் கஜ்பியே; தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி அனிதா பள்ளி ஆ...
தமிழகம்
நிலத்தகராறில் முன்னாள் தலையாரி கொலை
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே நிலத்தகராறில் ஓய்வு பெற்ற தலையாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அடுத்த கொங்கராயகுறிச்சி ஓய்வு பெற்ற தலையாரி சீனி(60). இங்குள்ள இவரது அண்ணன் செல்லையா நிலத்தில், இதே ஊர் கூலித்தொழிலாளி லட்சுமணன்(38), கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிசைவீடு கட்டி தங்கியிருந்தார். அதை கா...
தமிழகம்
சூறாவளிக் காற்று : 10,000 வாழை சேதம்
சிவகாசி : சிவகாசி அருகே வீசிய சூறாவளிக்காற்றால் 10,000 வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தன. நடுவப்பட்டி, சாமிநத்தம், நாகலாபுரம், ஈஞ்சார், மாரனேரி, மங்கலம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக் கான ஏக்கரில் வாழை பயிரிடப் பட்டுள்ளது. இப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில் பத்து முதல் 15 நாளில் அறுவ...
தமிழகம்
புதிய குடியுரிமை விதிகள்: ஆஸி., செயலுக்கு எதிர்ப்பு
மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவின் புதிய குடியுரிமை விதிகளை எதிர்த்து, வெளிநாட்டு மாணவர்கள் கண்டனப் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு இணையாக ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் படிக்க, வெளிநாட்டு மாணவர்கள் விரும்புகின்றனர். இந்திய மாணவர்கள் ஒரு லட்சம் பேர் ஆஸ்திரேலியாவில் படிக்கின்றனர். குறைந்த கால டிப...
தமிழகம்
காஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே காஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலியானார். திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டணம், நவமணி மனைவி தங்கம் மாள்(65). குடிசை வீட்டில் வசித்துவந்த இவர், நேற்று மாலை 5 மணிக்கு காபி போட காஸ் அடுப்பை பற்ற வைத்தார். காஸ் கசிவு காரணமாக, சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. அதில், பலத்த தீக்காயமடை...
General
பயங்கரவாதிகளின் தாக்குதல்;பாக்., மைனாரிட்டிகள் புகார்
லாகூர்:பாகிஸ்தானில் மைனாரிட்டி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறுபான்மையினர் சங்கம் கோரியுள்ளது.பாகிஸ்தானில் அகமதிகள் எனப்படும் சிறுபான்மையினருக்கு சொந்தமான லாகூர் மசூதிகள் மீது, கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு மசூதிகளில் புகுந்து தலிபான் பயங்கரவாதிகள்...
General
கண்டியில் விசா மையம்:இந்திய தூதர் துவக்கினார்
கொழும்பு:இலங்கையின் கண்டி நகரில் இந்திய விசா வழங்கும் மையம் நேற்று திறக்கப்பட்டது.இலங்கையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இந்திய விசா வழங்கும் மையங்கள் ஏற்கனவே உள்ளன. கண்டியில், இந்திய விசா வழங்கும் மையத்தை இந்திய தூதர் அசோக் காந்தா நேற்று திறந்து வைத்தார். கண்டி மாகாண முதல்வர், கவர்னர் உள்ளிட்டவர்கள் இவ்விழாவில் ...
தமிழகம்
சொத்து குவிப்பு வழக்கில் மாஜி அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உட்பட 8 பேர் விடுதலை
சென்னை : கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட, வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர், நேற்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் விவசாய அமைச்சராக இருந்தவர் கு.ப. கிருஷ்ணன். அதன் பின், ...
தமிழகம்
பள்ளி தாளாளர் மீது பாலியல் புகார் : குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை : காஞ்சிபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, பள்ளியின் தாளாளர் மீதான புகாரை மாவட்ட அளவிலான குழு விசாரிக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் தாக்கல் செய்த மனுவில், "பள்ளியின் ...
தமிழகம்
கொடைக்கானல் ஏரியில் கட்டி வைக்கப்பட்ட படகுகள்
கொடைக்கானல் : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்க உள்ளதால் பயணிகளின் வருகையால் நிரம்பி வழிந்த கொடைக்கானல் நேற்று வெறிச் சோடி காணப்பட்டது.கொடைக்கானலுக்கு கடந்த இரண்டு மாதங்களாக பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.பிரையண்ட் பூங்காவில் சுமார் எட்டு லட்சம் பேர் பார்வையாளராக வந்து மலர் கண்காட்சியை ரசித்து சென்றுள்ளனர்.இதே ...
இந்தியா
முதல்வர் நிதிஷ் செயலர் ராஜ்யசபா எம்.பி.,யாகிறார்
பாட்னா:வரும் 17ம் தேதி நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில், பீகார் மாநிலத்தில் இருந்து ஆளும் கட்சி சார்பில், முதல்வர் நிதிஷ்குமாரின் முதன்மை செயலர் ராம் சந்திரா போட்டியிடுகிறார். பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜிவ் பிரதாப் ரூடி நிறுத்தப்பட்டுள்ளார்.ராஜ்யசபாவுக்கு, பீகார் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐந...
தமிழகம்
தற்கொலை செய்த கல்லூரி மாணவி : உருக்கமான கடிதத்தால் புது திருப்பம்
திருப்போரூர் : கேளம்பாக்கம் அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதி அறையில், தூக்கிட்டு இறந்து போன மாணவியின் அறையில் சிக்கிய உருக்கமான கடிதத்தால், அவ்வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். பிர்லா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். ...