category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
குறிச்சிக்கோட்டை நான்கு ரோடு சந்திப்பு: ரூ.30 லட்சத்தில் மேம்பாட்டு பணி
உடுமலை : உடுமலை குறிச்சிக்கோட்டை நான்கு ரோடு சந்திப்பு மேம்பாடு செய்யும் பணிகள் 30லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.உடுமலையிலிருந்து மூணாறுக்கு குறிச்சிக்கோட்டை முக்கிய வழித்தடமாக உள்ளது. குறிச்சிக்கோட்டை நான்கு ரோடு சந்திப்பிலுள்ள ஆக்கிரமிப்புகளால், ரோடுகுறுகலாக இருந்தது. இதனால், அடிக்கடி இந்த ரோட்டில் போக்குவ...
தமிழகம்
ஒட்டன்சத்திரம் சந்தைக்கு மாடுகள் வருகை அதிகரிப்பு
ஒட்டன்சத்திரம்: வறட்சி காரணமாக ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தைக்கு ஏராளமான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் வாரந்தோறும் திங்களன்று மாட்டுச் சந்தை நடக்கிறது. மணப் பாறை, காங்கேயம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அதிக எண் ணிக்கையிலான மாடுகள் இங்கு விற்பனைக்கு வரும். உழவு மாடுகள், பசுமா...
தமிழகம்
வேன் கவிழ்ந்து 26 பேர் காயம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம்-பாச்சலூர் ரோட்டில் டெம்போ வேன் (407) தலைகுப்புற கவிழ்ந்ததில் 26 பேர் காயமடைந்தனர். பாச்சலூர்,பெரியூர் பகுதிகளை சேர்ந்த சிலர் பரப்பலாறு அணை பகுதியில் கிரிக்கெட் விளையாடிவிட்டு சொந்த ஊருக்கு டெம்போ வேன் ஒன்றில் திரும்பினர். பாச்சலூரைச் சேர்ந்த டிரைவர் கருப்புச் சாமி ஓட்டி வந்தார். ஒட்டன்சத்...
தமிழகம்
ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., பட்டப்பகலில் வெட்டி கொலை!
கும்மிடிப்பூண்டி : மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில், மர்ம நபர்களால் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ.,  பட்டபகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை வில்லிவாக்கம் அருகே தாதங்குப்பம் பஜனை கோயில் தெருவில் வசித்தவர் நீலகண்டன் (61). சென்னை சி.ஐ.டி., செக்யூரிட்டி பிரிவு எஸ்.ஐ.,யாக பணியாற்றி, மூன்று ஆண்டுகளுக...
தமிழகம்
வெளிமாநில மையங்களுக்கு இணையாக தமிழக மையங்களில் பட்டுக்கூடு கொள்முதல்
உடுமலை : வெளிமாநில மையங்களுக்கு இணையாக தமிழக கொள்முதல் மையங்களில் பட்டுக்கூடுக ளுக்கு விலை கிடைக்கிறது. இத னால், உற்பத்தியாளர்கள் வெளி மாநிலங்களுக்கு கூடுகளை விற் பனைக்காக கொண்டு செல்வது பல மடங்கு குறைந்துள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நாள்தோறும் சராசரி யாக ஒரு டன் பட்டுக்கூடுகள் உற் பத்தியாகின்றன. பட்டுக்க...
தமிழகம்
இரண்டாவது திருமணம் செய்த கணவரை கண்டித்து உண்ணாவிரதம்
திண்டுக்கல்: இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, முதல் மனைவி திண்டுக் கல் கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே சின்னழகுநாயக்கனூரைச் சேர்ந்த தங்கப்பாண்டி(32) மனைவி வீரம்மாள்(28). தனது தந்தை கந்தசாமி(68), தாய் முத்துலட...
தமிழகம்
தளி ரோடு ரயில்வே மேம்பாலம் பணி: மாற்றுப்பாதை அமைக்க கோரிக்கை
உடுமலை : அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், உடுமலை நகர கிளை கூட்டம் வட்டக்கிளை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நித்தியானந்தம் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பாபுராஜ், மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் இளைஞர் பெரு மன்றம் குறித்து விளக்கினர். இதில், தளி ரோடு ரயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை, மக்...
தமிழகம்
பாலாறு அணைக்கு நீர்வரத்து
பழநி: கொடைக்கானல் மலைபகுதியில் பெய்த மழையால் பாலாறு-பொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வரத்துள்ளது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 34 அடி(மொத்த உயரம் 65அடி). * குதிரையாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 48 அடி(மொத்த உயரம் 80 அடி).* வரதமாநதி அணையின் நேற்றைய நீர்மட்டம் 36 அடி(மொத்த உயரம் 67 அடி).
தமிழகம்
வறண்ட நிலையில் பஞ்சலிங்க அருவி: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
உடுமலை : போதிய மழையில்லாததால், பஞ்சலிங்க அருவி வறண்டு வெறும் பாறையாக காட்சியளிப்பதால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. மலை அடிவாரத்தில் சிவன், விஷ்னு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே குடிகொண்டுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலிலி...
தமிழகம்
5 மாதங்களில் 27 மி.மீ.,மழை
பழநி: பழநியில் கடந்த மே மாதத்தில் 10 மி.மீ., மழையும், ஜனவரி முதல் மே வரை மொத்தம் 27 மி.மீ., மழைபதிவாகியுள்ளது.அதே சமயம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை 47 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
தமிழகம்
காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முற்றுகை
உடுமலை : குடிநீர் கேட்டு உடுமலை நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். உடுமலை நகராட்சி 28 வது வார்டு பகுதியில் இரண்டு ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் என கூறி நேற்று காலை கால...
தமிழகம்
பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
வடமதுரை: வடமதுரை அருகே மூனாண்டிபட்டியை சேர்ந் தவர் மகாலிங்கம். இவரது மாமா வடமதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற டவுன் பஸ்சில் பயணித்து மூனாண்டிப்பட்டி ஸ்டாப் பில் பஸ் படிக் கட்டில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம்,முருகன் (40), மகாலிங்கம் மாமா உள்பட சிலர் பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்...
தமிழகம்
மணல் திருட்டு
பழநி: பழநியை சேர்ந்தவர் ராமசந்திரன். ஆண்டிபட்டி அருகே ஆற்றில் டிராக்டரில் மணல் திருடியுள்ளார். வி.ஏ.ஓ., நவமணி, டிராக் டரை நிறுத்தகூறியும், ராமச்சந்திரன் நிறுத்தாமல் தப்பியுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
அடையாளம் தெரியாத ஆண்பிணம்
பழநி: கணக்கன்பட்டி மூகாம் பிகை கோயில் அருகே அடையாளம் தெரியாத ஆண்பிணம் கிடந்தது. 35 வயது மதிக்கத்தக்க அவர் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. ஆயக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
வேலை வாய்ப்பு முகாம்
அம்பாத்துரை: அம்பாத்துரை அரவிந்தர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் தேவிகா வரவேற்றார். ஹைடெக் -அராய் நிறுவன துணை பொது மேலாளர் சங்கரவேலாயுதம், பயிற்சி மேம்பாடு மேலாளர் ராஜே ஸ்வரி, மனிதவள மேம் பாட்டு அலுவலர் கண் ணன் ஆகியோர் வேலை வாய்ப்பு முகாமில் பங் கேற்ற மாணவ, மாணவியரை தேர்வு செய்...
தமிழகம்
மக்கள் குறை தீர்க்கும் முகாம்
திருவள்ளூர் : பள்ளிப்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.வி.ஜி. புரம் கிராமத்தில் வரும் 16ம் தேதி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திருவள்ளூர் தனித் துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) இக்கிராமத் துக்கு நாளை (2ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் சார் பாக...
தமிழகம்
தோட்டனூத்து கிராமத்தில் நீர் வடிப்பகுதி காந்தி கிராம அறக்கட்டளை ஏற்பாடு
காந்திகிராமம்: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் தோட்டனூத்து ஊராட்சியில்,காந்திகிராம அறக்கட்டளை, நபார்டு பாங்க் நிதியுதவியுடன் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப் படுகிறது. காந்திகிராம அறக்கட் டளை மத்திய திட்ட கமிஷன் நிதியுதவியுடன் முழுமையான நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. திண்டுக்கல் ஊராட...
தமிழகம்
தீ மிதி திருவிழா
திருத்தணி : திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம், அத்திப்பட்டு கிராமங்களில், திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது. நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடந்தது. காலை 8 ...
தமிழகம்
ரயில்வே ஸ்டேஷனில் விற்கும் பொருட்களின் சுகாதாரம் கேள்விக்குறி
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில், அனுமதியற்ற உணவுப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. அதிகாரிகள் அலட்சியத்தால், பயணிகள் பாதிப்படையும் நிலை நீடிக்கிறது. திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு, தினமும் ஏராளமான ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கு பயணிகளுக்கு தேவையான சாப்பாடு, பிஸ்கட்,வாட்டர் பாட்டில் போன்ற உணவு...
தமிழகம்
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்: 3 தினங்களில் வழங்க ஏற்பாடு
திருவள்ளூர் : விண்ணப்பித்த மூன்று நாட்களில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காஞ்சிபுரம் மண்டல மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் உத்தரவுபடி வரும் 2010-11ம் ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகு...
தமிழகம்
பயிற்சி முகாம்
பழநி: பழநியில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்களுக் கான பயிற்சி முகாம் நடந்தது. தாசில்தார் குணசேகரன் தலைமை வகித்தார். தலைமை பயிற்றுனர் நந்திவர்மன், துணைதாசில் தார்கள் மாரியப்பன், புலிவேல் முன்னிலை வகித்தனர். கணக்கெடுப்பிற்கு தேவையான பை, ஆவணங்கள், பொருட்கள் வழங்கப்பட்டன.
தமிழகம்
திடீர் வாந்தி பேதி; மீனவ மக்கள் பீதி
பொன்னேரி : மீனவ கிராமத்தில் திடீர் வாந்தி, வயிற்றுபோக்கு, மயக்கம் ஏற் பட்டதால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் மீனவ மக்கள் பீதியடைந்துள்ளனர். பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் குப்பம் ஊராட்சியில் அமைந் துள்ளது பேட்டை, கள்ளிகுப்பம் மீனவ கிராமங்கள். இந்த கிராமங்கள் கடலுக்கும், ஏரிக்கும் இடையில் உள்ள மீனவப் பகுதி....
தமிழகம்
நலத்திட்ட உதவி வழங்கல்
ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்து திருமண உதவித்தொகை,முதியோர் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டாக் களை வழங்கினார். கொத்தப்புள்ளி ஊராட்சி தலைவர் கு.ஆறுமுகம், கவுன்சிலர் பெரியசாமி கலந்து கொண்டனர்.
தமிழகம்
ஜப்பானில் ஜவுளி கண்காட்சி: ஏ.இ.பி.சி., நடத்துகிறது
திருப்பூர் : ஜப்பானில் உள்ள ஜவுளி பயன்பாடுகளை தெரிந்து கொண்டு, வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,) சார்பிலான கண்காட்சி, ஜூலை 21 முதல் 23 வரை டோக்கியோவில் நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, திருப்பூரில் தொழில்நுட்ப கருத்தரங்கு வரும் 4ம் தேதி நடக்கிறது. இந்தியாவின் ஒட்ட...
தமிழகம்
சாணார்பட்டியில் பலத்த காற்றால் பயிர்கள் சேதம்
சாணார்பட்டி: சாணார்பட்டியில் பலத்த காற்றினால் மரங் கள், விவசாயப்பயிர்கள் பாதிக்கப்பட்டன. சாணார்பட்டி, கொசவப்பட்டி, கோணப்பட்டி, தவசிமடை, வடகாட்டுப் பட்டி, பரதேசிப்பட்டி, ராகலாபுரம், நத்தமாடிப்பட்டி, எமக்கலாபுரம், பண்ணப்பட்டி, பஞ்சம் பட்டி,வீரசின்னம்பட்டி, ஆவளிப்பட்டி, குரும்பப் பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மால...
தமிழகம்
பஸ் மோதி ஒருவர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னப் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார்(50).இவர் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் நடந்து செல்லும் போது தனியார் பஸ் மோதி இறந்தார்.
தமிழகம்
கோடை விடுமுறை முடிந்ததால் ரயில்களில் பயணிகள் கூட்டம்
சென்னை: கோடை விடுமுறை முடிந்ததையொட்டி, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் நெருக்கடி அதிகமாக இருந்தது. கோடை விடுமுறையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த மார்ச் 15ம் தேத...
தமிழகம்
வளர்ச்சி பணி விளக்க முகாம்
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார் பில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை திட்டப்பணிகளில் ஈடுபடுத்துதல், அவர் கள் மேற்கொள்ள வேண்டி பணிகள் குறித்த விளக்க முகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித் தார். வ...
தமிழகம்
பனியன் தொழிலில் பிரச்னை; மாணவர் சேர்க்கை குறைகிறது
திருப்பூர் : கடந்த ஓராண்டு காலமாக பனியன் தொழிலில் பாதிப்பு நிலவி வரும் சூழலில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், 70 சதவீத அளவுக்கு சேர்க்கை இருந்தால் போதும் என்ற எதிர் பார்ப்பில் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. திருப்பூர் தொழில் நகரம் என் பதால் வெளிமாவட்ட மக்கள் அதி கமா...
தமிழகம்
பேரி விலை உயர்வு
கொடைக்கானல்: பேரிக்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் வில்பட்டி, பெரும் பள்ளம், அட்டுவம்பட்டி, பள்ளங்கி ஆகிய பகுதிகளில் பேரிக்காய் விளைகின்றன. கடந்த ஆண்டு பூச்சி தாக்குதல், போதிய மழையின் மையால், கோடை சீசன் முடிவடையும் போதே பேரிக்காய் வரத்து குறைந்தது. இந்தாண்டு எதிர்பார்த்த தை வி...
தமிழகம்
மாநகராட்சிக்கு தே.மு.தி.க., கண்டனம்
திருப்பூர் : திருப்பூரில் பல இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது; மாநகராட்சியின் மெத்தன போக்கை கண்டித்து தே.மு.தி.க., கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகர தே.மு.தி.க., அலுவலகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், நகர செயலாளர் பழனிசாமி தலைமையில்...
தமிழகம்
சாதனை படைத்த பள்ளிகள்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பட்ஸ் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சத தேர்ச்சி பெற்றுள்ளது. வினோதா 474 மதிப் பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.அபிநயலட்சுமி 471 மார்க் பெற்று இரண்டாம் இடத் தையும், ஆர்த்தி 456 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற் று...
தமிழகம்
ஐ.ஐ.டி.டி., கல்லூரியில் அட்மிஷன் ஆரம்பம்
திருப்பூர் : ஐ.ஐ.டி.டி., கல்லூரியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பேஷன் மற்றும் மெர்ச்சன்டைசிங் துறை படிப்புகள், பகுதிநேர மற்றும் முழுநேரம் பயிலக் கூடிய டிப்ளமோ படிப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வி அடைந்த மாணவர்கள் முழு நேரம் ஓராண்டு டிப்ளமோ படிக்க, டிப்ளமோ இன் அப்பேர...
தமிழகம்
குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மனு
திருப்பூர் : நீர்வழிப் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நீரியல் பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்துள்ளனர். அதேசமயம், குடிசை மாற்று வாரியத்தில் தவணை முறையில் பணம் செலுத்தியவர்களுக்கும் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதால், அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி., சிவசாமி உட்பட அனைத்து ...
தமிழகம்
வாக்காளர் விபர பதிவு பணி ஜூன் 5க்குள் முடிக்க ஏற்பாடு
திண்டுக்கல்: வாக்காளர் விபரங்களை பதிவு செய்யும் பணியை, ஜூன் 5க்குள் முடிக்க கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.விடுபட்ட, புதிய வாக் காளர்களை சேர்க்க, அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன், போட்டோ மற்றும் வசிப்பிடத்திற்கான ஆவணங்கள் பெறப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் முழுமையாக ஆவணங்கள...
தமிழகம்
மாணவர்களுக்கு பாராட்டு
வடமதுரை: வடமதுரை கலைமகள் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் எஸ். எஸ்.எல்.சி., தேர்வெழுதிய 30 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு நூறு சதவிகித தேர்ச்சி பெற்றனர். தமிழ் வழியில் தேர்வெழுதிய 168 மாணவர்களில் 167 பேர் தேர்ச்சி பெற்றனர்.ஆங்கில வழியில் 476 மார்க் பெற்று சுஜித்ரா முதலிடத்தையும், 469 மார்க் பெற்று நாகராஜ் இரண...
தமிழகம்
கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு
கோயம்பேடு : வெயிலின் தாக்கம் தொடர்ந்து குறையாததால், காய்கறிகளின் உற்பத்தி பெருமளவில் குறைந் துள்ளது. இதனால் கோயம் பேடு மார்கெட்டிற்கு அதன் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க் கெட்டிற்கு ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து 80 சதவீதமும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து 20 சதவீதமும் காய்கறி...
தமிழகம்
தடம் மாறி இயக்கப்படும் அரசு பஸ்களால் அவதி
தாண்டிக்குடி: கீழ்மலை பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் சில வழித்தடம் மாற்றி இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொடைக்கானலுக்கு தாண்டிக்குடி மார்க்கமாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சீசன் துவங்கியுள்ள நிலையில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காலை 8 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்க...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று துவக்கம்
பல்லடம் : மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, பல்லடம் தாலுகாவில் இன்று துவங்குகிறது; 511 பேர் ஈடுபடுகின்றனர். பல்லடம் தாலுகாவில் உள்ள பல்லடம் ஒன்றியம், பொங்கலூர் ஒன்றியம் மற்றும் பல்லடம் நகரப் பகுதியில் இன்று வீட்டுப் பட்டி யல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக் கெடுக்கும் பணி இன்று துவங்கி, ஜூலை ...
தமிழகம்
வேடசந்தூரில் கோர்ட் ஸ்டாம்ப், பத்திரம் தட்டுப்பாடு
வேடசந்தூர்: வேடசந்தூரில் பத்திரம் மற்றும் ஸ்டாம்ப் கிடைக் காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. பல மாணவர்கள் மேல் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இதற்கு இருப்பிட, வருமான, ஜாதி சான்று தாலுகா அலுவலகத்தில் வாங்க வேண்டியுள்ளது. இதற் கான மனுவில் ஒட்டும் கோர...
தமிழகம்
ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு:நாளை துவக்கம்
தேனி: ஆசிரியர் கல்வி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பட்டய தேர்வுகள் நாளை துவங்குகின்றன. இதில் மாவட்டத்தில் 1,350 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் ஆசிரியர் கல்வி இரண்டாம் ஆண்டு பட்டய தேர்வுகள் ஜூன் 2ல் துவங்கி 9 வரை நடக்கின்றன. மாவட்டத் தில் மூன்று மையங்களில் நடக்கிறது. உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்...
தமிழகம்
உத்தமபாளையத்தில் நாளை மின் தடை
தேனி: கம்பம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கின் றன. இதனால் காலை 9 முதல் மாலை 5 மணி வரை கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், இந்திரா காலனி, காமையகவுண்டன் பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது. இதே போல் உத்தமபாளையம் துணை மின் நிலையத்திலும் நாளை பரமாரிப்பு பணிக...
தமிழகம்
வயிற்று போக்கால் மக்கள் பாதிப்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் வயிற்றுப்போக்கால் ஆறு பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களாக ஆண்டிபட்டி பகுதியில் வயிற்றுப் போக்கு பரவலாக உள்ளது. ஆண்டிபட்டி சீதாராம்தாஸ் நகரைச்சேர்ந்த வார்டு உறுப்பினர் முருகன்(38), மாரிமுத்து(40), பால்ராஜ் (35), மாலதி(30), சுகந்தி(19), ராஜா(29) ஆகியோர் ஆண்டிபட்டி அரச...
தமிழகம்
வங்கி சேவை துவக்க விழா
தேனி: பூமலைக்குண்டு கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மைத்ரி சொசைட்டி சார்பில் கிராம மக்கள் வங்கி சேவையினை பெறும் வகையில் வர்த்தக செய்தி தொடர்பு துவக்கவிழா நடந்தது. தேனி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் ஆனந்தகிருஷ் ணன் தலைமை வகித்தார். மைத்ரி சொசைட்டி செயலாளர் தீனதயாளன், ஊராட்சித்தலைவர் சந்திரசேகரன் ஆ...
தமிழகம்
பெண் மாயம்
கம்பம்: கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மனைவி அழகுமீனா(21). கணவனை விட்டு பிரிந்து வாழும் இவர், கம்பத்தில் உள்ள ஒரு ரெடிமேட் துணி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இரண்டு நாட்களாக காணாததால், அழகுமீனா வின் தந்தை கணேசன் கம்பம் வடக்கு போலீசில் கொடுத்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
வரியை குறைக்கக்கோரி அ.தி.மு.க., வெளிநடப்பு
அவிநாசி : வரியினங்களை குறைக்கக்கோரி, அவிநாசி பேரூராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அவிநாசி பேரூராட்சி சாதாரண கூட்டம், பேரூராட்சி தலைவி புஷ்பலதா தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் கதிரவமூர்த்தி, துணை தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர். கூட்ட விவாதம்: தங்கவேல் (தி.மு.க.,): சூளை அருகி...
தமிழகம்
முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த தின விழா
சென்னை : முதல்வர் கருணாநிதி, தன் 87வது பிறந்த தினத்தையொட்டி, கட்சி தொண்டர்களை தி.மு.க., தலைமை அலுவலகத்தில் சந்தித்து, வாழ்த்து பெறுகிறார். வரும் 3ம் தேதி, முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள், தமிழகம் முழுவதும், சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. 3ம் தேதி காலை 9 மணிக்கு தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சி...
தமிழகம்
பிளேக் மாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை காலை 9.10 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் நடக்கிறது. திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் அமைந்துள்ள விநாயகர், பிளேக் மாரியம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு, நாளை கும்பாபிஷேக விழா நடக்கிறது. ...
தமிழகம்
நீரில் மிதந்து முதல்வருக்கு வாழ்த்து
திருநின்றவூர் : திருநின்றவூர் பள்ளி மாணவர் நீரில் மிதந்தபடி, வினோதமான முறையில் முதல்வர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். திருநின்றவூர், தாசர்புரம் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜாஷ்வா எபிநேசர்; தனியார் பள்ளி உடற்கல்வி இயக்குனர். இவரது மனைவி சுகிர்தா ஜாஷ்வா; மண்ணடி ராஜகோபால் மேல்நிலைப் பள்ளியில் ஆ...
தமிழகம்
முறைகேடான குடிநீர் இணைப்புக்களை துண்டிக்க பெரியகுளம் நகராட்சி முடிவு
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக் களை துண்டிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சீத்தாலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அப்துல்சமது, கமிஷனர் (பொறுப்பு) மோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவாதம் வருமாறு: சந்தானம்: நகர்புற வேலைவாய...
தமிழகம்
இருவருக்கு தலா 15 மாத சிறை
திருப்பூர் : கும்பலாக சென்று கொள்ளையடிக்க திட்டமிட்ட இருவருக்கு, திருப்பூர் விரைவு நீதிமன்றம் எண் 5ல் தலா 15 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார், 2009ம் ஆண்டு, ஏப்., 18ம் தேதி நள்ளிரவு 2.00 மணிக்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். ரயில்வே ...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு சென்னையில் இன்று துவக்கம்
சென்னை : சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இன்று துவங்குகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, முதல்வர் கருணாநிதி வீடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி துவக்கப்படுகிறது.இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக் கெடுப்புப் பணி, முதல் குடிமகளான ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் குடும்ப விவரத்தைச் சேகரித்ததன் மூலம் து...
தமிழகம்
மது விற்றவர்கள் கைது
போடி: போடி குலாளர்பாளையம் தெருவைச் சேர்ந்தவர்கள் சடையன்(53), சுரேஷ் (30) இருவரும் போடி பஸ்ஸ்டாண்ட் முன் பாக டாஸ்மாக் மதுபாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்துகொண்டிருந்தனர். போடி டவுன் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.சி., : விவேகம் பள்ளி சாதனை
திருப்பூர் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி விக்னேஸ்வரி, தமிழில் 97; ஆங்கிலம் 97; கணிதம் 99; அறிவியல் 99; சமூக அறிவியல் 99 என 491 மதிப்பெண் பெற்று, வருவாய் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவியர் மைவிழி, அபிநயா, மாணவன் ஜெகன் ஆகியோர...
தமிழகம்
தகராறில் ஈடுபட்ட இருவர் கைது
போடி: போடி அருகே மீனாட்சிபுரம் வ.உ.சி., தெருவில் வசிப்பவர்கள் மொட் டைச்சாமி (31). இதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (25) என்பவரின் தங்கை சக்திப்பிரியா (16) வை தனது தம்பி சுப்பிரமணிக்கு பெண் கேட்டு ள்ளார். ராமலிங்கம் தர மறுத் துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மொட்டையசாமி ராமலிங்கத்துடன் தகராறு செய்துள்ளார். இருவரும் கொடுத்த பு...
தமிழகம்
தி.மு.க., கவுன்சிலர் கொலையில் மேலும் ஒருவர் கைது
சென்னை : கவுன்சிலர் சேரன் கொலையில் தொடர் புள்ள மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் சரணடைந்த நான்கு பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் விண்ணப்பித்துள்ளனர். சென்னை மாநகராட்சி 93வது வார்டு கவுன்சிலர் சேரன்(41). சில நாட்களுக்கு முன் ராயப்பேட்டையில் உள்ள, தனது அலுவலகத்திற்கு வெளியே நின்றபோது, 14 பேர் கொண்ட...
தமிழகம்
நிவாரண உதவி
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. விபத்தில் இறந்த குள்ளப்புரத்தை சேர்ந்த மீனவர் அப்பாஸ் க்கு மீனவர் நல வாரியம் மூலம் ரூபாய் ஒரு லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டது. அதற்கான காசோலையை அப்பாஸ் மø னவி நசீராவிடம் டி.ஆர். ஓ., பிருந்தாதேவி வழங்கினார். மீன் வளத்துறை உதவி இயக்குனர...
தமிழகம்
பஞ்சு மூடைகள் நாசம்
வருஷநாடு: வருஷநாடு அருகே தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன்(45). இவர், 300 பஞ்சு மூடைகளை விற்பனைக்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்றி உள்ளார். மின் கம்பியில் லாரியில் ஏற்றப்பட்ட பஞ்சு மூடைகள் உரசியதில் தீ பற்றி எரிந்தது. இதில் நூறு மூடைகள் முற்றிலும் எரிந்துபோயின. மயிலாடும்பாறை தீயணைப்பு அலுவலர்கள் தீயை அணைத்தனர்.
தமிழகம்
ஆக்கிரமிப்பு தகராறில் தாக்குதல்
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு ஈசப்பாறையில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு கருப்பையா(53), சுப்புராஜ்(35) ஆகியோர் குடிசை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். அந்த இடத்தில் புதிதாக குடிசை போட பேச்சி யம்மாள்(38), ஜெயப்பிரகாஷ்(40) ஆகியோர் வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் ஜெயப்பிரகாஷ் படுகாயம் அடைந்து தேனி மருத்து...
தமிழகம்
சேலையில் தீப்பிடித்ததில் பெண் பலி
மதுரவாயல் : சமையல் செய்தபோது, தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். மதுரவாயல் பகுதி நெற் குன்றம் பாலவிநாயகர் நகரில் வசிப்பவர் சம்பத் (35). இவரது மனைவி தேவயானி(30). இவர்கள் இருவரும் மீன் வியாபாரம் செய்து வருகின் றனர். நேற்று முன்தினம் மாலை, வீட்டில் தேவயானி சமையல் செய்தார். அப்...
தமிழகம்
பஸ் மீது தாக்குதல் ஒருவர் கைது
மயிலாடும்பாறை: கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் பிச்சைபாண்டி (32). இவர் தனியார் பஸ்சில் ஏறி படிக்கட்டில் நின்றிருந்தார். கண்டக்டர் முருகன் இவரை உள்ளே வருமாறு கூறியுள்ளார். இருவருக் கும் வாக்குவாதம் ஏற் பட்டது. ஆத்திரமடைந்த முருகன் பஸ் கண்ணாடியை அடித்து உடைத்தார். மயிலாடும்பாறை போலீசார் முருகனை கைது செய்தனர்.
தமிழகம்
விதிமீறும் வாகனங்களால் வதிப்படும் பொதுமக்கள்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் விதிமீறும் வாகனங்களால் பொதுமக்கள் அன்றாடம் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி மற் றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகரித்துள்ளது. மெயின் ரோட்டில் கடைகள் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களை கடைக்கு முன் நி...
தமிழகம்
விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பாதிப்பு
தேவாரம்: தேவாரம் பகுதியில் விவசாய கூலி தொழிலா ளர்கள் பற்றாக்குறை காரணமாக காய்கறி சாகுபடி பரப்பு குறைந்து விட்டது. தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், புலிக்குத்தி, சிந்தலைச்சேரி, அய்யம்பட்டி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காய்கறி சாகுபடி நடந்தது. இப்பகுதியில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய தேவாரத்தில் 40 கடைகள் உள்ள ...
தமிழகம்
பிளக்ஸ் போர்டுகளால் போக்குவரத்து இடையூறு
போடி: போடி மெயின் ரோட் டில் கட்சியினர் மற்றும் விழாக் களுக்காக வைக்கப் படும் மெகா சைஸ் பிளக்ஸ் போர்டுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. போடி மெயின் ரோட்டில் போக்குவரத் திற்கு இடையூராகவும், விபத்து ஏற்படும் வகையில் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் பிறந்த நாள் முதல் அனைத்த...
தமிழகம்
இரவில் மதுபானம் விற்ற பெண் கைது
அமைந்தகரை : டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்கி வைத்து, இரவு நேரங்களில் அதிக விலைக்கு விற்று வந்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர். டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகரை சேர்ந்த, ராஜன் மனைவி சாந்தி (45). நேற்று முன்தினம் அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலிருந்து, அதிகளவில் மதுபானம் வாங்கி ...
தமிழகம்
அரசு நிதி உதவி கிடைக்காததால் ஊராட்சி நிர்வாகங்கள் திணறல்
ஆண்டிபட்டி: அரசு மூலம் கிடைக்க வேண்டிய நிதிகள் கிடைக்காததால் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் குடிநீர் விநியோகம், பராமரிப்பு, பொது சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்ற மாநில அரசு மூலம் நிதி ஒதுக்கப்பட...
தமிழகம்
ஹைவேவிஸ் பகுதிக்கு பஸ் இயக்குவதில் போக்குவரத்து கழகம் அலட்சியம்! தனியார் பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்க
சின்னமனூர்: ஹைவேவிசிற்கு கடந்த 6 நாட்களாக அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் தற்போது சென்றுவரும் ஒரே தனியார் பஸ்சில் 150 பேர் வரையில் ஏறி மிகவும் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரோடு விளையாடும் போக்குவரத்து கழகத்தின் அலட்சிய போக்கினால் இந்த விபரீத நிலை தொடர்ந்து வருகிறது. சின்னமனூரிலிருந்து ...
தமிழகம்
மாநகர பஸ் மோதி விபத்து : அடையாளம் தெரியாதவர் பலி
தங்க சாலை : சாலையை கடந்த அடையாளம் தெரியாத நபர், மாநகர பஸ் மோதி உடல் நசுங்கி பலியானார்.பாரிமுனையில் இருந்து, செங்குன்றத்திற்கு நேற்று பகல் 1.30 மணிக்கு மாநகர பஸ் (தடம் எண்: 58எச்) சென்றது. தங்கசாலை சந்திப்பு அருகே சாலையை கடக்க முயன்ற, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது பஸ் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலே...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
தேனி: மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள் ளது. தகுதியானவர்கள் மே 31 முதல் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முத்து வீரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; மகளிர் திட்டம், தாட்கோ கடன் திட்டம், பாரத பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டம், மாற்று திறனாளிகள் கடன் வழங்கும் திட்டம், கூட்...
தமிழகம்
மொபைல் போனில் பேசியபடி வேலை பார்த்தவர் தவறி விழுந்து பலி
மதுரவாயல் : மொபைல் போனில் பேசியவாறே, கட்டட பணியில் ஈடுபட்ட கொத்தனார் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் தண்டபாணி(40); கொத்தனார். பத்தாண்டுகளாக சென்னையில் வசித்து வேலை பார்த்து வருகிறார். நெற்குன்றம் செல்லியம்மன் கோவில் நகர் ஆனித்தெருவில் உள்ள வீடு ஒன்றில் தங்கி, அந்த...
தமிழகம்
தென்னைநார் கழிவுகளால் விபத்துக்கள் அதிகரிப்பு
தேவாரம்: கோம்பை, சிக்கச்சியம்மன் மேடு பகுதியில் தென்னை நார் கழிவுகளை கொட்டி தீ வைப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் இரு சக்கர வாகன விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. கோம்பை சிக்கச்சிம் மன் மேடு பகுதியில் ஏராளமான வருவாய் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த இடத்தில் உத்தமபாளையம், கோம்பை, புதுப்பட்டி, கம்பம் பகுதியில் உள்ள கயி...
தமிழகம்
மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மேற்கு மாம்பலம் : மேற்கு மாம்பலம், மேட்டுப் பாளையம்  பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வரும் மின் வெட்டை கண்டித்து, ஏராளமான பெண்கள், குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கோடம்பாக்கம் சாலையில் இரண்டு மணிநேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேற்குமாம்பலம் அடுத்த மேட்டுப் பாளையத்தில் பெருமாள் கோவில் த...
தமிழகம்
பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி சிக்கினார்!
பரங்கிமலை : பல்லாவரம் பெண் கொலை வழக்கில் உறவினரான கொலையாளியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை பறிமுதல் செய்யப்பட்டது. ஜமீன் பல்லாவரம், பச்சையம்மன் நகர், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் முருகதாஸ்(35); இவர், கத்தாரில் கட்டட மேற் பார்வையாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி இந்திரா(31). ...
தமிழகம்
மணல் மேவிய ரோடுகளால் விபத்து அபாயம்
தேனி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை மேம்படுத்த உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இதை கண்டு கொள்வதே இல்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ரோட்டோர மணல் மேவிய பகுதிகளை கூட இவர்களால் முறையாக அகற்ற முடிவதில்லை. நகராட்சிதான் இதை செய்ய வேண்டும் என கை...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
பூந்தமல்லி : அய்யப்பன்தாங்கல் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், எஸ்.ஆர்.எம்., சிறப்பு மருத்துவமனை மற்றும் பல் மருத்துவ கல்லூரி இணைந்து நடத்திய இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம் பரணிபுத்தூரில் நேற்று முன்தினம் நடந்தது. அய்யப்பன் தாங்கல் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி முகாமை தொடங்கி வைத்தார்.இதில், சமூக சேவகர் டிராபிக் ராம...
தமிழகம்
ரவுடி கொலை வழக்கு: இருவர் கைது
புளியந்தோப்பு : ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். கன்னிகாபுரம் முத்து நகரை சேர்ந்தவர் ராஜூ(35); பிரபல ரவுடி. இவர் மீது  கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்ப...
தமிழகம்
செக்யூரிட்டி நிறுவன வசூல் பணம் மாயம்
சென்னை : சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, சிஸ்கோ தனியார் செக்யூரிட்டி நிறுவனம் உள்ளது. இந்நிறுவன பணியாளர் கள், சென்னை நகரின் பல பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிஸ்கோ செக்யூரிட்டி நிறுவனத்தின் பணப்பட்டுவாடா அதிகாரிகளான ஜெயசந்திரன், காளிதாஸ், டிரைவர் அப்துல் கபூர்(32) மற்றும்...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் பயனில்லை: சிதம்பரம் மகப்பேறு பிரிவில் பெண்கள் தவிப்பு
சிதம்பரம் : சிதம்பரம் அரசு மருத் துவமனையில் விலை உயர்ந்த ஜெனரேட்டர்கள் இருந்தும் பயன்படுத்தப்படாததால் மின்சாரம் இல் லாத நேரங்களில் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மகப்பேறு வார்டுகளில் காற்றுக்காக பச்சிளம் குழந்தைகளை வெளியில் கொண்டு வந்து வைத்திருக்கும் அவல நிலை உள்ளது. சிதம்பரத்தில் காமராஜ் அரசு மருத்துவமனையில...
தமிழகம்
சிவானந்த குருகுல மாணவர்கள் தேர்ச்சி
சென்னை : சிவானந்த குருகுல மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவானந்த குருகுல டாக்டர் மங்களம் உயர் நிலைப் பள்ளியில், கடந்த 2009-10ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்வில் 130 மாணவ, மாணவியர் கலந்து கொண்டதில், 120 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் அருள் பாண்டியன் 475 ம...
தமிழகம்
பழைய வண்டிப்பாளையம் கோவிலில் 4ம் தேதி தீ மிதி விழா
கடலூர் : கடலூர் அடுத்த பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் 4ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. கடலூர் அடுத்த பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி மகோற் சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பாரத கதா கலாட்சேபம் நடந்து வருகிறது. இன்று 1ம் தேதி ப...
தமிழகம்
ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை
சென்னை : மாதவரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து, பள்ளி முதல்வர் சிவராம் கிருஷ்ணா கூறுகையில், "மாணவன் ஆர்.ஆகாஷ் 455 மதிப் பெண்களுடன் பள்ளி முதலிடமும், மாணவி எஸ்.வைஷாலி 451 மதிப்பெண்களுடன் இரண் டாமிடமும், ஆர்.உஷா 450 மதிப்பெ...
தமிழகம்
ஹோலி பேமிலி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
தாம்பரம் : கீழ்கட்டளை ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி கீர்த்தனா 481 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், அனிதா ஜார்ஜ் 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், திவ்யா 476 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.தேர்வு எழுதிய 158 மாணவ, மாணவியர்களும்...
தமிழகம்
கந்தலாகிப்போன கானூர் சாலை: பொதுமக்கள் கடும் அவதி
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல் லும் கானூர் வழிச்சாலை கந்தலாகி போனதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்கு கானூர் மற்றும் பாளையங்கோட்டை வழி சாலை என இருசாலைகள் உள்ளன. இதில் கானூர் சாலை குமாரகுடியில் துவங்கி சாத்தாவிட்டம் கிராமம் வரை குண்டு...
தமிழகம்
வெலிங்டன் ஏரி வண்டல் மண்: விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை
விருத்தாசலம் : வெலிங்டன் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்கு இலவசமாக வழங்கக் கோரி விவசாய சங்க கூட்டமைப்பு முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விவசாய சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் கார்மாங் குடி வெங்கடேசன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: திட்டக்குடி வட்டம் இடைசெருவாய் கிராமத்தில் ...
தமிழகம்
திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி 64 சதவீதம் தேர்ச்சி
சேத்தியாத்தோப்பு : ஒரத்தூர் திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் 64 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 184 மாணவர்களில் 116 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் பள்ளி 64 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. 462 மதிப்பெண் பெற்று மாணவர் முருகவேல் பள்ளியில் முதலிடமும், உதயநிதி 459 மதிப்...
தமிழகம்
அனுமதியின்றி வெட்டப்படும் ஆடுகள் மாற்று இறைச்சிகளின் புழக்கத்தால் பீதிஉறக்கத்தில் அதிகாரிகள்
ராமநாதபுரம்: அனுமதியின்றி ஆடுகள் வெட்டப்படுவதால் , ஓட்டல்களில் மாற்று இறைச்சிகள் புழக்கத்தில் வருவது அதிகரித்து வருகிறது. வறண்ட மாவட்டமாக ராமநாதபுரம் இருந்த போதும், பணப்புழக்கத்தில் மாநகராட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு பணம்படைத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகர் பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் உதயம...
தமிழகம்
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
கடலூர் : கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளில் தலா 60 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 15 நாட்களாக உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப் பட்டது. அதேபோன்று தமிழ் நா...
தமிழகம்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: மாவட்டத்தில் இன்று துவங்குகிறது
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் இன்று துவங்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் 5 ஆயிரத்து 187 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். நாட்டின் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த பணி தமிழகத்தில் இன்று முதல் வரும் 15ம் தேதிவரை நடக்கிறது. இந்த கணக்கெடுப்பில் வழக்க...
தமிழகம்
புகைப்பழக்கம் ஆனந்தமாக இருந்தாலும் ஆபத்தில் முடியும்: இணை இயக்குனர் பேச்சு
கடலூர் : புகைப்பழக்கம் ஆரம்பத்தில் ஆனந்தமாக இருந்தாலும் பின்னர் ஆபத்தில் முடியும் என இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் பேசினார். உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி பிரஜா பிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா சார்பில் கடலூரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் ரவி தலைமை தாங்கினார். இணை இ...
தமிழகம்
மாவட்ட வர்த்தக சங்க கூட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தனபாலன் தலைமையில் நடந்தது செயலாளர் காசி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 2013 வரை மீண்டும் தலைவராக தனபாலன் தேர்வு செய்யப்பட்டார். இதர நிர்வாகிகள் விரைவில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கடைகளில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்...
தமிழகம்
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தீய எண்ணங்கள் வராது: டி.ஐ.ஜி., மாசானமுத்து பேச்சு
விருத்தாசலம் : உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் தீய எண்ணங்கள் வராது என விருத்தாசலத்தில் நடந்த விழாவில் டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரி அருகில் நமக்கு நாமே திட் டத்தின் கீழ் அரிமா சங்கத் துடன் இணைந்து கட்டப் பட்ட விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது. அரிமா மாவட்ட நிர்வாகி அகர்ச...
தமிழகம்
அடைக்கல மாதா தேர்பவனி
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே எட்டயதிடலில் புனித அடைக்கல மாதா ஆலய தேர்பவனி நடந்தது. மே 20ல் கொடியேற்றதுடன் துவங்கிய விழாவில் மண்டகபடி, சிறப்பு திருப்பலி நடந்தது. முக்கிய விழாவான தேர்பவனிபோது அலங்கார மிக்கேல், சம்மனசு அருளானந்தர், அடைக்கலமாதா வீதியுலா வந்தனர். பாதிரியார் வின்சென்ட் டி.ராஜன் சிறப்பு திருப்பலி நட...
தமிழகம்
புதுப்பிக்கப்பட்ட அவசர சிகிச்சை மையம் திறப்பு
கடலூர் : கடலூர் அரசு பொது மருத்துவமனையில் 6 லட்ச ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கலெக்டர் திறந்து வைத் தார்.கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவு கட்டடங் கள், பழுதடைந்த நிலையிலிருந்ததை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு நவீனப்படுத்த பொதுப்பணித் துறைக்கு சிபாரிசு செய்தார். அதன் ப...
தமிழகம்
கண்மாயில் திருட்டுதனமாக வெட்டப்படும் கருவேல மரம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் கண்மாயில் திருட்டுதனமாக கருவேல மரங்கள் வெட்டப்படுவதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூர் கண்மாய் 9.555 கி.மீ .,தூரம் பரப்பளவு கொண்டுள் ளது. இதனருகே செல்லும் ரகுநாத காவிரி ஆறும் முள்வேலி கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கண்மாயும், கால்வாயும் உருக்குலைந்து காட்சி தருகிறது. அரசு ...
தமிழகம்
புதுச்சேரி பதிவு பெற்ற வாகனங்கள் கடலூரில் வரி செலுத்த குவிந்தனர்
கடலூர் : புதுச்சேரி பதிவு வாகனங்களுக்கு சாலை வரி செலுத்த நேற்று கடைசி நாள் என்பதால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.சாலை வரி செலுத்தாத புதுச்சேரி மாநில பதிவு வாகனங்கள் கடலூர் மாவட்டத்தில் இயங்கின. வாகன தொகையில் 8 சதவீதத்தை சாலை வரியாக செலுத்த வேண்டும். இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ...
தமிழகம்
கோஷ்டி மோதல்: 43 பேர் மீது வழக்கு
இளஞ்செம்பூர்: இளஞ்செம்பூர் அருகே வீரம்பலில் கோஷ்டி மோதலில் இருதரப்பை சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டதில், நான்கு பேர் பலத்த காயமடைந்த நிலையில் 43 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரம்பலை சேர்ந்தவர் சாராள் (62), தனசிங் (32) இருதரப்பினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இப்பிரச்னை பூதாகரமாக வெடித்ததில் நேற்ற...
தமிழகம்
பதிவு கட்டணம் வாங்க மறுப்பு: சிதம்பரத்தில் திடீர் சாலை மறியல்
சிதம்பரம் : சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பதிவு கட்டணம் வாங்க மறுத்ததால் பணம் செலுத்த வந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் புதுச்சேரி வாகன பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு தமிழக பதிவு வேண்டும் என கடலூர் மாவட்டத்தில் போலீசார் கடுமையாக எச்சரித்தும், வ...
தமிழகம்
தொ.மு.ச.,- பா.தொ.ச., வேலை நிறுத்த நோட்டீஸ்
நெய்வேலி : என்.எல்.சி., நிர்வாகத்திடம் தொ.மு.ச.,வும், பா.தொ.ச.,வும் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளனர். புதிய ஊதிய மாற்று ஒப்பந்தப்படி 2007ம் ஆண்டு ஜனவரி முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்களும், 2010ம் ஆண்டு ஜனவரி முதல் தான் வழங்க முடியும் என என்.எல்.சி., நிர் வாகமும் கூறி வருகின்றனர். இந்த முரண்பாட்ட...
தமிழகம்
திருவாடானை பகுதியில் பீகார் மாநில இனைஞர்கள்
திருவாடானை: பீகார் மாநில இளை ஞர்களின் செயல்களால் திருவாடானை பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பீகார் மாநில இளைஞர்கள் திருவாடானை பகுதியில் தங்கியிருந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சென்ற ஆண்டு திருவாடானையில் தனியார் நூற்பாலை அருகில் தனியே சென்ற பெண் ந...
தமிழகம்
வாழை மரங்கள் நாசம்: விவசாயிகள் கவலை
விருத்தாசலம் : விஜயமாநகரம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை வீசிய சூறாவளி காற்றில் 30 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. இதில் விஜயமாநகரத்தில் மரங்கள், மின் கம்பங்கள் முற...