category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வராத அமைச்சர் பெயரில் கல்வெட்டு | திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) எலைப் தர்மராவ், அமைச்சர் ஐ. பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர். அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பார் என அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருந்தது. நகரில் பல இடங்களில் தி.மு.க., சார்பில் ... |
தமிழகம் | குழந்தைகள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம்: புதுச்சேரியில் ஒரு பெண் கைது; குழந்தைகள் மீட்பு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய கும்பலிடமிருந்து, மேலும் நான்கு குழந்தைகளை தனிப்படை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக, புதுச்சேரி மனித உரிமை கழக தலைவியை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து, மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய தனலட்சுமி (35) மற்றும் கடத்... |
இந்தியா | சவால்களை சந்திக்க மீரா குமார் திட்டம் | புதுடில்லி:லோக்சபா சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்று, நேற்றுடன் ஓராண்டு முடிந்தது. கேள்வி நேரத்தை மாற்றுவது உட்பட அனைத்துப் பிரச்னைகளிலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் செயல்பட விரும்புவதாக அவர் கூறினார்.லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகராக கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி மீராகுமார் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் ... |
இந்தியா | மேலவை தேர்தல்:மாயாவதி வெற்றி | லக்னோ:உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, சட்ட மேலவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.சட்ட மேலவையில் மாயாவதி உட்பட 13 எம்.எல்.சி.,க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 6ம் தேதியுடன் முடிகிறது. இதனால், புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில், முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரு... |
தமிழகம் | குமரியில் மீட்கப்பட்ட 5 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு | திருநெல்வேலி: குமரியில் அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்திய கிறிஸ்துவ போதகர் தப்பியோடி விட்டார். அதிகாரிகள் மீட்டு வந்த குழந்தைகளில் ஐந்துபேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே நல்லூரில் கிறிஸ்துவ போதகர் டைட்டஸ் துரைசிங்(38). அரசு அனுமதியின்றி சிறுவர் காப்பகம் நடத்தியுள்ளார். ... |
தமிழகம் | காலாவதியான பொருட்கள் விற்பனை சார்பதிவாளர் மீது நடவடிக்கை | திண்டுக்கல்: ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலாவதியான ரவை, மைதா, கோதுமை மாவு, மளிகை பொருட்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும் என விற்பனையாளர்க... |
தமிழகம் | கணக்கெடுப்பில் இரு வகை படிவங்கள் ஆசிரியர்களை குழப்பும் அறிவிப்புகள் | திண்டுக்கல்: மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்புகள், ஆசிரியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழகம் முழுவதும் ஜூன் 1 முதல் வீடுகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. முன்னதாகஇதற்காக கணக்கெடுப்பாளர்கள் (பள்ளி ஆசிரியர்கள்), மேற்பார்வையாளர் களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
முடிவில் வ... |
தமிழகம் | தொல்லியல் துறை ஆய்வில் தாமதம் திண்டுக்கல்லில் கட்டட ரகசியம் நீடிப்பு | திண்டுக்கல்: திண்டுக்கல் பாதாள சாக்கடை பணியின் போது, பழங்கால கட்டட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு கருத்துகள் நிலவியபோதும், தொல்லியல் துறை ஆய்விற்கு வராததால் உண்மை நிலை தெரிவதில் தாமதம் நீடிக்கிறது. திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது, நேற்று முன்தினம் பேகம்பூரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால க... |
இந்தியா | பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 உயரும் : இன்னும் மூன்று நாளில் அறிவிக்க அரசு திட்டம் | புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7ம் தேதி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கிரீத் பரேக் கமிட்டி, "பெட்ரோல், டீசல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை கைவிட வேண்டும். சமையல் எரிவா... |
இந்தியா | மொபைல் பயன்படுத்தினால் ஆபத்து வருமா? | புதுடில்லி : தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தினால், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால், அதற்கு ஆதரவாக சரியான கருத்துகளை விஞ்ஞானிகளால் இன்னமும் முடிவு செய்ய இயலவில்லை.
கடந்த 2009ம் ஆண்டு முடிவில் உலகம் முழுவதும், 46 லட்சம் மொப... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் அறிக்கை: பயங்கரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடு குறித்து, மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் பயங்கரவாதத்தை ஒடுக்க, நிலையான கொள்கையில்லை. பயங்கரவாதத்தை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபா... |
தமிழகம் | காலை வாரியது காற்று: 5 நாளில் காலாவதியானது மின்வெட்டு தளர்வு | தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி வேகமான வீழ்ச்சியைச் சந்தித்ததால், மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காற்றை நம்பி மின்வெட்டை தளர்த்துவதாக அறிவித்த மின்வாரியம், காற்று காலை வாரியதால் சிக்கலில் ஆழ்ந்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் கடும் மின்பற்றாக்குறை காரணமாக மாவட்டங்களில் மூன்று மணி நேரமும், உயர் அழுத்த ம... |
தமிழகம் | மாணவர்களிடம் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க புது முயற்சி | சென்னை: எந்த நட்சத்திரக்காரர் எந்த மரத்தை வளர்த்தால், எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற ரீதியில், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மரம் வளர்க்கும் விழிப்புணர்வில், தனியார் கல்லூரி நிர்வாகம் இறங்கியுள்ளது. நட்சத்திரங்கள் மற்றும் நவகிரகங்களுக்கு உகந்த மரம் மற்றும் செடிகளை கொண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.எந்தவொரு திட்டத்தையும... |
தமிழகம் | பாகிஸ்தான் ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா | கராச்சி:பாகிஸ்தானின் ரிசர்வ் வங்கி கவர்னர் சலீம் ராஜா, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் ரிசர்வ் வங்கியை, "சென்ட்ரல் வங்கி' என்றழைப்பர். அதன் கவர்னராக, 2008ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் சலீம் ராஜா. இவர், சொந்த காரணங்களால், தன் பதவியை ரா... |
தமிழகம் | இந்திய அணிக்கு மீண்டும் அவமானம் : ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது | ஹராரே : முத்தரப்பு தொடரில் இந்திய அணி அனுபவம்இல்லாத ஜிம்பாப்வே அணியிடம் மீண்டும் தோல்வி அடைந்து, பெரும் அவமானத்தை சந்தித்தது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதால் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஜிம்பாப்வேயில் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று ஹராரேயில் நடந்த இரண்டாவது சுற்று லீக் போட... |
தமிழகம் | காரைக்குடியில் ஜமாபந்தி | காரைக்குடி: காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாய கணக்கு முடித்தல்) டி.ஆர்.ஓ., சிவஞானம் தலைமையில் நடந்தது. தாசில்தார்கள் சிவப்பிரகாசம், முருகேசன் முன் னிலை வகித்தனர். சாக் கோட்டை பிர்கா அளவில் நடந்த ஆய்வில், தாசில் தார் மகேந் திரன், தேர்தல் உதவியாளர் ஏகாம்பரம் பங் கேற்றனர். வரும் 8 ம் தேதி பள்ளத்தூர்... |
தமிழகம் | இயந்திர பழுதால் தத்தளித்த படகு: கடலோர காவல்படையினர் மீட்பு | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் துறை முகத்திலிருந்து நேற்று முன்தினம் மீன்துறையின் அனுமதி பெற்று 600 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள், வழக்கம் போல் நேற்று காலை கரை திரும்பினர். படகிற்கு அதிகபட்சமாக 75 கிலோ வரை இறால் மீன்பாடு இருந்த நிலையில் ,கிலோ ஒன்றுக்கு 450 ரூபாய் வரை விலைபோனது. இதனிடையே, ராமேஸ்... |
தமிழகம் | மாநில ஹாக்கி போட்டி | காரைக்குடி: அழகப்பர் நினைவு மாநில ஹாக்கி போட்டிகள் காரைக்குடியில் இன்று துவங்குகின்றன. அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில், வரும் 6 ம் தேதி வரை நடக்கிறது. பல மாநிலங்களிலிருந்து 12 அணிகள் பங்கேற்கின்றன. முதல் பரிசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 7,000, மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் வழங்கப்படும். மாவட்ட அமெச்சூர் ஹாக்கி கழகத்தின... |
தமிழகம் | தோட்டத்தில் இறந்த புள்ளிமான் | தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சங்கரலிங்கபுரத்தில், சிவஞானபுரம் செல்லும் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில், ஆண் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது. கழுகுமலை, குருமலை காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடிவந்த அந்த மான், உடல்நலக்குறைபாடால் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்... |
தமிழகம் | மண்டபத்தில் கைவரிசை: குழந்தையிடம் நகை பறிப்பு | வண்ணாரபேட்டை: திருமண மண்டபத்தில், குழந்தையிடம் கைவரிசை காட்டிய மர்மநபர் ஒன்றரை சவரன் செயினை பறித்துச் சென்றார்.சென்னை கொண்டிதோப்பை சேர்ந்தவர் பச்சையப்பன்(30). இவரது மனைவி சுமதி(27). இவர்களுக்கு பத்மபிரியா(3), தர்ஷன்(2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.தனது நண்பர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில், கலந்து கொள்வதற்காக நேற்று முன்தின... |
தமிழகம் | தொழிலாளி பலி | திருநெல்வேலி: நெல்லை அருகே, மண் சரிந்து தொழிலாளி பலியானார்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்துள்ள கங்கனான்குளம், பட்டன்காடு குளத்தில் நேற்று காலையில் சிலர் செங்கற் சூளைக்காகமண் தோண்டிக் கொண்டிருந்தனர். பள்ளத்திற்குள் நின்றபடி ஒருவர் மண் அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது மேலிருந்து மண்கட்டி சரிந்து விழுந்ததில் அவர... |
தமிழகம் | பெண் சிசு கொலை: தாய்க்கு வலை | சேலம்: தொப்புள் கொடி ஈரம் காயும் முன்னே, பெண் சிசுவை வீசி கொலை செய்த கொடூர தாயை, போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் பெண் சிசு கொலையில், சேலம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. பெண் சிசு கொலையை கட்டுப்படுத்த, தொட்டில் குழந்தை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தும், சில இடங்களில் பெண் சிசு கொலை தொடர்கிறது.
சேலம் மாவட்டம், ச... |
தமிழகம் | குழந்தை திருமணம்: பெற்றோர் கைது | தர்மபுரி: திருமண வயது நிரம்பாத பெண்ணுக்கு, திருமணம் நடத்திய பெற்றோரை, போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள, பல்வேறு கிராமங்களில், குழந்தை திருமணங்கள் அடிக்கடி நடக்கிறது. வருவாய் துறை, உள்ளாட்சி துறை, போலீசார் ஆகிய துறைகள் சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்புகளையும் மீறி, சில இடங்களில், குழந்தை திருமணங... |
தமிழகம் | இளம்பெண் மர்ம மரணம் மாதர் சங்கம் மனு | புதுக்கடை : கருங்கல் அருகே ஒளிப்பாறையில் மர்மமான முறையில் இறந்த இளம்பெண் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு ஜனநாயக மாதர் சங்கம் உட்பட நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்.டி.ஓ., விடம் புகார் கொடுத்தனர்.
திருவிதாங்கோடு அருகே முகமாத்தூரை சேர்ந்தவர் ரங்கம்மாள்(65). இவருடைய கணவர் இறந்து 16 ஆண்டுகள் ஆகிறது. அதன... |
தமிழகம் | சென்னை இன்ஜினியர் புதுச்சேரியில் தற்கொலை | சென்னை : சென்னை இன்ஜினியர், புதுச்சேரியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40); இன்ஜினியர். இவர், மலேசியாவில் ஓட்டல் ஒன்றில் பங்குதாரராக இருந்தார். சென்னையில் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட செந்தில்குமார், கடந்த 30ம் தேதி புதுச்சேரி செஞ்சி சாலையில் உள்ள லா... |
தமிழகம் | பெண்ணிடம் புகார் வாங்க மறுத்த நான்கு ஸ்டேஷன் போலீசாருக்கு சிக்கல் | சென்னை : பஸ்சில் நகையை பறிகொடுத்த பெண்ணின் புகாரை வாங்க மறுத்து, 8 மணி நேரம் அலைக்கழித்த போலீசார் மீது நடவடிக்கை பாய்கிறது.வேளச்சேரி, காமராஜர் நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி செல்வி (29). கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வேளச்சேரியில் இருந்து, பாரிமுனை செல்லும் தடம் எண் 21எல் பஸ்சில், ஐஸ் ஹவுசில்... |
தமிழகம் | அடையாளம் தெரியாத பெண் கொலை செய்து தீயிட்டு எரிப்பு | கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில், இளம்பெண்ணை கொலை செய்து எரித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே உள்ளது துராபள்ளம் கிராமம். அங்குள்ள மண் ஏரியை ஒட்டி, அதே கிராமத்தை சேர்ந்த வினாயகமூர்த்தி என்பவரது நிலம் உள்ளது. அவரது நிலத்தின் ஒரு மூலையில், பன ஓலைகள் கொண்டு எரித்து... |
தமிழகம் | தற்காலிக டிரைவர்கள் தீக்குளிக்க முயற்சி | சென்னை : பணி நிரந்தரம் செய்யக் கோரி, தற்காலிக டிரைவர்கள் சென்னை மாநகராட்சியில் தீக்குளிக்க முயற்சித்தனர்.சென்னை மாநகராட்சியில், கடந்த 1996ம் ஆண்டு ஸ்டாலின் மேயராக இருந்த போது நியமிக்கப்பட்ட டிரைவர்கள் 28 பேர் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணி நிரந்தரம் செய்யக்கோரி, டிரைவர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.இந்நிலையி... |
தமிழகம் | சைதாப்பேட்டை கொலை: ஐந்து பேர் கோர்ட்டில் சரண் | பாரிமுனை : சைதாப்பேட்டை ரவுடி கொலை வழக்கில் தொடர் புடைய ஐந்து பேர் நேற்று ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரணடைந்தனர்.சென்னை சைதாப்பேட் டை தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த ராமச் சந்திரன் மகன் ஜெய் கணேஷ்(31).கடந்தாண்டு நடந்த, ரியல் எஸ்டேட் புரோக்கர் சேகர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான இவர், வீடுகளுக்கு தண்ணீர் கேன் களை விற்... |
தமிழகம் | 200 கிராம் தங்கத்துடன் தொழிலாளி ஓட்டம் | யானைக்கவுனி : நகை செய்ய, முதலாளி கொடுத்த, 200 கிராம் தங்கத்துடன், தலைமறைவான தொழிலாளியை, யானைக்கவுனி போலீசார், தேடி வருகின்றனர்.சென்னை சவுகார்பேட்டை, வால்டாக்ஸ் சாலையை சேர்ந்தவர், சுசீல்தாஸ் (50). அதேபகுதியில், நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் வேலை பார்த்தவர், கோல்கட்டாவை சேர்ந்தவர் தினேஷ் (25).கடந்த சில நாட்களுக்கு... |
தமிழகம் | முதியவர் படுகொலை | சென்னை : தனிமையில் வசித்து வந்த முதியவர், வயிறு அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது.குரோம்பேட்டை ராதா நகர் மெயின் ரோடு அடுக்குமாடி குடியிருப் பில் வசித்து வந்தவர் தண்டபாணி சாஸ்திரிகள்(70). இவரது மனைவி சுப்புலட்சுமி. ஓய்வு பெற்ற தாசில்தாராக இருந்த அவர், கடந்த எட்டு மாதத் தி... |
தமிழகம் | அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் கல்லீரல் மாற்று சிகிச்சை : மறுவாழ்வு பெற்றார் புற்றுநோயால் பாதிக் | சென்னை : தனியார் மருத்துவமனைகளில், 30 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்படும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், அரசு மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் செய்து, தனியார் நிறுவன செக்யூரிட்டிக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள், மறுவாழ்வு அளித்துள்ளனர்.
சென்னை, அம்பத்தூர் எஸ்டேட்டில் வசிப்பவர், ... |
இந்தியா | இரவு ரயில்கள் ஒரிசாவில் ரத்து | புவனேஸ்வர் : ஒரிசாவில், மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டள்ளன. இது குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, காரக்பூர் - ரூர்கேலா மற்றும் காரக்பூர் -... |
தமிழகம் | வீட்டில் 16 பவுன் திருட்டு | சிவகங்கை: சிவகங்கை சீனிவாசன்நகரை சேர்ந்தவர் பாண்டி (30). இவர், குடும்பத்தினருடன், கடந்த 27 ம் தேதி, வெளியூர் சென்றார். சம்பவத்தன்று வீட்டிற்குவந்த போது, பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடு போயிருந்தது. அதே தெருவில் வசிக்கும், மேரி (40), மகன் பெர்க்மான்ஸ் (20), மகள் புனிதா (14) மீது சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். ப... |
தமிழகம் | சாலை நடுவில் வாணவேடிக்கை: காஞ்சியில் மக்கள் சாலை மறியல் | காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை வரவேற்பதற்காக சாலையில் போக்குவரத்தை நிறுத்தி வாணவேடிக்கை நடத்தப்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் காமராஜர் வீதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. இச்சாலையில் அமைந்துள்ள திரு... |
தமிழகம் | டூவீலர் மோதி மூதாட்டி பலி | இளையான்குடி: சலைக்கிராமம் அருகே சொக்கபட்டியை சேர்ந்தவர் சீதையம்மாள் (60). கடந்த 2 ம் தேதி காலை 11 மணிக்கு சூராணத்திற்கு நடந்து சென்றார். டூவீலர் மோதி நிற்காமல் சென்றது. காயமடைந்த அவர், மதுரை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சாலைக்கிராமம் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | பெண் பலி ஆர்.டி.ஓ., விசாரணை | எஸ்.வி.,மங்கலம்: மாதவராயன்பட்டியை சேர்ந்தவர் படைத்தலைவன் (30), மனைவி முத்துமீனாள் (23). இரண்டரை ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்த படைத்தலைவன், கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார். கடந்த 1ம் தேதி இரவு 9.30 மணிக்கு, காஸ் அடுப்பில் கசிவு ஏற்பட்டு, முத்துமீனாள் சேலையில் தீப்பிடித்தது. காயம... |
தமிழகம் | கல்விக்குழு கூட்டம் | காரைக்குடி: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சாக்கோட்டை வட்டார வள மையத்தில் கல்விக் குழு கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மேற்பாவையாளர் பாலாஜி வரவேற்றார். புளியங்குடியிருப்பு, விளாரிக்காடு நடுநிலைப்பள்ளிகளில் மூன்று வகுப்பறை கட்டுவது, பள்ளி செல்லா குழந்தைகள் உள்ள பகுதியில் இண... |
தமிழகம் | காசோலையை திருடி வங்கியில் பணம் எடுத்த மூவர் கைது | ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலையில் வங்கிக் காசோலையை திருடி, 18 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வங்கியில் இருந்து எடுத்த தொழிற்சாலை ஊழியர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஈசாப் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை உள்ளது. இங்கு வெல்டிங்கிற்கு பயன்படுத்த... |
தமிழகம் | தபால் துறை குறைதீர் கூட்டம் | காரைக்குடி: தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீகிருஷ்ணபெருமாள் கூறியதாவது:வரும் 8ம் தேதி காலை 10 மணிக்கு, முதியோர் உதவி தொகை பற்றிய குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது. காரைக்குடி சுப்பிரமணியபுரம் ஒன்பதாவது வீதி தெற்கில் உள்ள கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் குறைகளை தெரிவிக்கலாம் என்றார். |
தமிழகம் | மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவன் சாதனை | ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தை சேர்ந்தவன் காமராஜ். சிறு வயதிலிருந்தே மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி பள்ளியில் 12 வயதில் சேர்க்கப் பட்டான். அங்கு தொடர்ந்து பயிற்சி பெற்றதன் பலனாக, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டத... |
தமிழகம் | மான் வேட்டையாடுவோர் மீது குண்டர் சட்டம் | சிவகங்கை: வனப்பகுதியில் மான் களை வேட்டையாடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் பனங்குடி, பாகனேரி, செம்பனூர், கல்லல், மதகுபட்டி, மண்மலை வனப்பகுதிகளில் மான்கள் வாழ் கின்றன. கோடை தாக்கத்தால் வனத்தில் உள்ள குட்டைகளின் நீர் வறண்டதால், குடிநீர் தேடி மான்கள் வெளியே வருகின்றன. இதில், சாலையை க... |
தமிழகம் | நுகர்வோர் மன்றத்தினர் கவனத்திற்கு | சிவகங்கை: அரசின் மாநில நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், நான்கு மண்டல, 52 மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நுகர்வோர் மன்றம் நடத்தும் ஆர்வலர்கள், பள்ளி மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு www.consumer.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் என, செய... |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கல் | நாட்டரசன்கோட்டை: எஸ்.வி.வி.சாலா தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கப் பட்டன. நாகப்பன், ராஜகுமாரி வழங்கினர். தலைமை ஆசிரியர் கார்த்திகைராணி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். |
தமிழகம் | திண்டுக்கலில் கட்டட ரகசியம் நீடிப்பு: தொல்லியல் துறை ஆய்வு எப்போது? | திண்டுக்கல்: தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ளாததால், திண்டுக்கல் பாதாள சாக்கடை பணியின் போது, கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கட்டட அமைப்பின் உண்மை நிலை தெரிவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
திண்டுக்கலில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது, நேற்று முன்தினம் பேகம்பூரில் தோண்டப்பட்ட பள்ளத்தில், பழங்கால கட்டட அமைப்பு தென்பட்... |
தமிழகம் | செயல்படாத சிக்னல் | சிவகங்கை: சிவகங்கை கோர்ட் வாசலில் போக்குவரத்து சிக்னல் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைக்கப் பட்டது. ஆனால், இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. பள்ளிகள், கோர்ட், பத்திரப்பதிவு அலுவலகம் என, அதிக போக்குவரத்து உள்ள பகுதி இது. மூன்று ரோடுகள் சந்திக்கும் இங்கு, சிக்னலை விரைவில் செயல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. |
தமிழகம் | கும்பாபிஷேகம் | மானாமதுரை: சிறுகுடி பாப்பான்குளம் காளிஅம்மன்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. கணபதி யாகத்திற்கு பின், பிரதிஷ்டைசெய்யப்பட்ட செல்வ விநாயகருக்கு அபிஷேகங்கள் நடந்தன.சம்பத் குருக்கள் தலைமையில் கடம் புறப்பட்டு, பிறகு புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. பூஜாரி ஆறுமுகம், ஊராட்சி... |
தமிழகம் | அடிப்படை வசதிகள் இல்லாத தாம்பரம் தாசில்தார் அலுவலகம் | தாம்பரம் : தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் கழிப்பிடம், குடிநீர், இருக்கை போன்ற வசதி இல்லாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எப்பொழுதும் பூட்டியே கிடக்கும் கழிப்பிடத்தை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, திறந்துவிட வேண்டும்.தாம்பரம் தாசில்தார் அலுவலகத்திற்கு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஜாதி சான்று, வருமான சான்... |
தமிழகம் | பள்ளிகளில் கல்வி விழிப்புணர்வு வாரம் : அனைவருக்கும் கல்வி இயக்க இயக்குனர் உத்தரவு | உத்திரமேரூர்: பள்ளிகளில் கல்வி விழிப்புணர்வு வாரம் கொண்டாடும்படி மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள் ளார்.அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் வெங்கடேசன், மாவட்ட திட்ட ஒருங் கிணைப்பாளர் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் கிராம ... |
தமிழகம் | பராமரிப்பு இல்லாத நெடுஞ்சாலைகள் | சிவகங்கை: சிவகங்கை நெடுஞ்சாலைகளை சீரமைக்க வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை- திருப்புத்தூர்; தொண்டி, மானாமதுரை நெடுஞ்சாலைகள் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்துள்ளன. ரோடு முழுவதும் பள்ளங்களாக காட்சி தருகின்றன. இரவில் பள்ளம் தெரியாமல், வாகனங்கள் தடுமாறும் நிலை உள்ளது.
இது குறித்து வர்த்தக சங்க தலைவர் கருணாநி... |
தமிழகம் | சாலை நடுவில் வாணவேடிக்கை காஞ்சியில் மக்கள் சாலை மறியல் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழக நிர் வாகிகளை வரவேற்பதற்காக சாலையில் போக்கு வரத்தை நிறுத்தி வாணவேடிக்கை நடத்தப் பட்டது.ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் காமராஜர் வீதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. இச்சாலையில் அமைந் துள்ள த... |
தமிழகம் | மானிய வட்டியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் : 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்து ஒருவர் கூட | காஞ்சிபுரம் : தமிழகத்தில் மானிய வட்டியில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் பெற 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் தெரிவித்தார்.காஞ்சிபுரத்தில் ... |
தமிழகம் | உழவர் வயல்வெளி பள்ளி நிறைவு விழா | செங்கல்பட்டு : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையம் செம்மைநெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் உழவர்களுக்கான வயல்வெளிப் பள்ளி திட்டத்தை திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள தாழம்பேடு கிராம வயல்வெளியில் நடத்தியது.
தாழம்பேடு கிராமத்தைச் ச... |
தமிழகம் | குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த குரங்கு: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே குடிநீர் தொட்டியில் குரங்கு இறந்து கிடந்தது.காஞ்சிபுரத்திலிருந்து7 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஐயங்கார் குளம் ஊராட்சி. ஐயங்கார்குளம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.காலனிப் பகுதிக்கு குடிநீர் வ... |
தமிழகம் | அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் கல்லீரல் மாற்று சிகிச்சை | சென்னை: தனியார் மருத்துவமனைகளில், 30 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்படும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், அரசு மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் செய்து, தனியார் நிறுவன செக்யூரிட்டிக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள், மறுவாழ்வு அளித்துள்ளனர்.
சென்னை, அம்பத்தூர் எஸ்டேட்டில் வசிப்பவர், ... |
தமிழகம் | கோவில் குருக்கள் உட்பட நான்கு பேர் சிக்கினர் : சங்கு மோசடியில் ஈடுபட முயன்றனர் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் சங்கு மோசடியில் ஈடுபட சங்கு உரிமையாளரை வற் புறுத்திய கோவில் குருக்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் அடுத்த தூசி மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(42). இவரிடம் ஐந்து கிலோ எடை கொண்ட மிகப் பெரிய வலம்புரி சங்கு உள்ளது. அவரது தந்தை வாங்கியது.இச்சங்கை கிராமத்தில் உள்ள... |
தமிழகம் | செங்கல்பட்டில் 8 வயதுசிறுவன் மீட்பு | மாமல்லபுரம் : செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு, வழி தவறி வந்த சிறுவனை ரயில்வே போலீசார் மீட்டனர்.செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், கடந்த 27ம் தேதி ஒரு சிறுவன் தனியாக சுற்றிக் கொண் டிருந்தான்.அச்சிறுவனை செங்கல் பட்டு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பிடித்து, சைல்டுலைன் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் வெங்கட்ரெட்டியிடம் ஒப்பட... |
தமிழகம் | அரைக்காசு அம்மன் கோவில் கும்பாபிஷேகம் | தாம்பரம் : சென்னை, வண்டலூர் அருகே, ரத்தினமங்கலத்திலுள்ள, அரைகாசு அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று சிறப்பாக நடந்தது.வண்டலூரை அடுத் துள்ள, ரத்னமங்கலத்திலுள்ள, லஷ்மி குபேரர் கோவிலை அடுத்து, அரைக் காசு அம்மன் சன்னிதி அமைந்துள்ளது.பக்தர்கள் ஏராளமாக வரும், இக்கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று சிறப்பாக நடந்தது.அரைக்காசு அம்மன... |
இந்தியா | திருப்பதியில் சிதம்பரம் சாமி தரிசனம் | திருப்பதி: திருப்பதி, திருமலை வெங்கடாஜலபதி கோவிலில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், சாமி தரிசனம் செய்தார். நேற்று முன்தினம், இரவு திருமலை சென்ற சிதம்பரம், நேற்று காலை நடந்த சுப்ரபாதம் நிகழ்ச்சியில், பங்கேற்றார். பின், வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு, டில்லி புறப்பட்டு சென்றார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், ம... |
இந்தியா | இந்திய பெண்களில் 1.5 சதவீதம் பேர் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் | புதுடில்லி: இந்திய பெண்களில், சராசரியாக 1.5 சதவீதம் பேர், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என, ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய அளவில், 11 சதவீதம் பெண்கள் புகை, குட்கா, பான் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வை, "டாடா மெமோரியல் மருத்துவ மனை'யை சேர்ந்த டாக்டர்கள்... |
தமிழகம் | முறையற்ற மீன்பிடித் தொழிலால் வரும் 2050ம் ஆண்டிற்குள் மீன்கள் முற்றிலுமாக அழிந்து போகும் | தூத்துக்குடி : முறையற்ற மீன்பிடித் தொழிலால் வரும் 2050ம் ஆண்டிற்குள் கடற்பகுதியில் மீன்கள் முற்றிலுமாக அழிந்து போகும் நிலை ஏற்படும் என்று தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜ் தூத்துக்குடியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் தெரிவித்தார்.
தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழ... |
தமிழகம் | தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா : ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க செயின் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கோலாகலமாக நடந்தது. ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க செயின், மோதிரங்களை இளைஞரணி மாவட்ட நிர்வாகி ஜெகன் வழங்கினார்.
தூத்துக்குடியில் முதல்வரின் பிறந்த நாள் வயதை குறிக்கும் வகையில் 87 கிலோ எடையுள்ள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர்... |
இந்தியா | தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரானார் நீதிபதி பாலகிருஷ்ணன் | புதுடில்லி: தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற மூன்று வாரத்தில் இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 65 வயதாகும் பாலகிருஷ்ணன், வரும் திங்கள்கிழமை இந்த புதிய பொறுப்பை ஏற்கிறார். ஐந்து ஆண்டு காலத்திற்க... |
தமிழகம் | அனுமதியின்றி வெட்டப்படும் ஆடுகள் மாற்று இறைச்சிகளின் புழக்கத்தால் பீதி: உறக்கத்தில் அதிகாரிகள் | ராமநாதபுரம்: அனுமதியின்றி ஆடுகள் வெட்டப்படுவதால் , ஓட்டல்களில் மாற்று இறைச்சிகள் புழக்கத்தில் வருவது அதிகரித்து வருகிறது. வறண்ட மாவட்டமாக ராமநாதபுரம் இருந்த போதும், பணப்புழக்கத்தில் மாநகராட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு பணம்படைத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகர் பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் உதயம... |
இந்தியா | நூற்று ஐம்பது இளம் பேராசிரியர்களுக்கு ஐ.ஐ.டி., வாரிய குழுவில் இடம்: மத்திய அரசு புதிய திட்டம் | புதுடில்லி: கல்வித் துறையில் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.,க்களில் பணியாற்றும் இளம் பேராசிரியர்களில், 150 பேரை தேர்வு செய்து, அவர்களை நிர்வாக வாரியத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசியலுக்கு அடுத... |
தமிழகம் | கட்டட ஆய்வாளர் இல்லை ; பணிகள் தொய்வு | கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் கட்டட ஆய்வாளர் பணியிடம் நிரப்படாததால், கட்டட பணிகள் தொய்வு ஏற்பட்டு மக்கள் அவதியடைகின்றனர். தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்த கீழக்கரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நீண்ட காலமாக கட்டட ஆய்வாளர... |
தமிழகம் | வங்கியாளர்கள் கூட்டம் | ராமநாதபுரம்: மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி தலைமை மண்டல மேலாளர் திருநாவுக்கரசு, நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் கண்ணபிரான், முன்னோடி வங்கி மேலாளர் சடகோபால் உட்பட பலரும் பங்கேற்றனர். |
தமிழகம் | விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் | பேரம்பாக்கம் : பொய்யா விநாயகர் கோவில், கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர்.பேரம்பாக்கம் அடுத்த, பிள்ளையார்குப்பம் கிராமத்தில், பொய்யா விநாயகர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், மாரியம்மன், கன்னியம்மன் கோவில்களும் உள்ளது.சிதிலமடைந்து கிடந்த, இக்கோவில்கள் புதுப் பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந... |
தமிழகம் | அடைக்கல மாதா தேர்பவனி | ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே எட்டயதிடலில் புனித அடைக்கல மாதா ஆலய தேர்பவனி நடந்தது. மே 20ல் கொடியேற்றதுடன் துவங்கிய விழாவில் மண்டகபடி, சிறப்பு திருப்பலி நடந்தது. முக்கிய விழாவான தேர்பவனிபோது அலங்கார மிக்கேல், சம்மனசு அருளானந்தர், அடைக்கலமாதா வீதியுலா வந்தனர். பாதிரியார் வின்சென்ட் டி.ராஜன் சிறப்பு திருப் பலி ந... |
இந்தியா | காளஹஸ்தி கோவிலில் சுரங்கம் | நகரி: காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுடன் இணைந்துள்ள, பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் வளாகத்தில், சுரங்கப்பாதை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரதராஜசுவாமி கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணி 2 மாதங்களாக நடந்து வருகிறது. இக்கோவிலில் சுவாமியின் விக்ரகத்தை உயரமான இடத்தில் வைக்க, கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நேற்... |
தமிழகம் | சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா | திருப்போரூர் : மத்திய அரசின், சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும், ஐ.சி.டி.எஸ்., தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், கேளம் பாக்கத்தில், சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு பிரசாரம் மற்றும், மோட்டார் சைக்கிள், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டுகள் வழங்கும் விழா நடந்தது.காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன் தலைமை தாங்கி, 40 இளைஞர் களுக்கு,... |
தமிழகம் | நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் | ராமநாதபுரம்: நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம் அதன் தலைவர் ஆடிட்டர் சுந்தராஜன் தலைமையில் நடந்தது. விவேகானந்தன், நாராயணன் முன்னிலை வகித்தனர். ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் வாரணாசி விரைவு ரயிலை ராமேஸ்வரம், பரமக்குடியில் நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் வரும் ரயில்களும் ஸ்டேஷன்களில் நிறுத்துமாறு வரைமுறைப்படுத்த வேண்டும்.... |
தமிழகம் | வி.ஏ.ஓ.,வை தாக்கியதாக ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ.,மீது வழக்குப்பதிவு | ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.,மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஞ்சாலங்குறிச்சி வி.ஏ.ஓ.,வை தாக்கி, ஆவணங்களை சேதப்படுத்தியதாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; ஓட்டப்பிடாரம் அருகே முப்பிலிவெட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் ஆறுமகநயின... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி மாடுகள் பலி | சாயல்குடி: சாயல்குடி அடுத்த மலட்டாறு விலக்கில் மின் சாரம் தாக்கி இரண்டு பசு மாடுகள் உள்பட மூன்று மாடுகள் இறந்தன. சாயல்குடி அடுத்த கடுகுசந்தை சத்திரத்தை சேர்ந்த இளந்தரியன்(48), ராமர்(25) என்பவர்களின் இரண்டு பசு மாடுகள் உள்பட மூன்று மாடுகள் காலையில் மலட்டாறு ஒப்பிலான் விலக்கில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, மின் கேபிள... |
தமிழகம் | அடையாளம் தெரியாத பெண்கொலை செய்து தீயிட்டு எரிப்பு | கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டியில், இளம்பெண்ணை கொலை செய்து எரித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே உள்ளது துராபள்ளம் கிராமம். அங்குள்ள மண் ஏரியை ஒட்டி, அதே கிராமத்தை சேர்ந்த வினாயகமூர்த்தி என்பவரது நிலம் உள்ளது. அவரது நிலத்தின் ஒரு மூலையில், பன ஓலைகள் கொண்டு எரித்து... |
தமிழகம் | கிழக்கு கடற்கரை ரோட்டில் நடந்த விபத்துகளில் 5 பேர் பலி | தொண்டி: தொண்டி கிழக்குகடற்கரை ரோட்டில் மே மாதம் நடந்த விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தொண்டி கிழக்கு கடற்கரை ரோட்டில் தினசரி ஒரு விபத்து என்ற விகிதத்தில் நடந்து வருகிறது. மே மாதம் எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, தொண்டி ஆகிய போலீஸ்ஸ்டேஷனில் 12 விபத்துகள் பதிவு செய்யபட்டது. இதில் ஐந்துபேர் உயிழந்துள்ளனர்.
போலீச... |
இந்தியா | ஒரே நாளில் திருமலையில் 600 ஜோடிகளுக்கு திருமணம் | நகரி: திருமலையில், ஒரே நாளில், 600 ஜோடிகளுக்கும் மேற்பட்ட, புதுமண தம்பதிகள், திருமணம் செய்து கொண்டனர். திருப்பதி வெங்கடேச பெருமாளின், பிறந்த நட்சத்திரமான திருவோணம், வைகாசி மாதம், பஞ்சமி தினம் கடக லக்னத்தில், காலை 7 மணி முதல், 10:30 மணிக்குள், 400 தம்பதிகள் திருமலையிலுள்ள, புரோகிதர் சங்கத்தில், நேற்று முன்தினம், திருமணம... |
தமிழகம் | சாத்தை.,யில் குப்பைகளை கொட்ட தனி இடம் : தாசில்தார் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி | சாத்தான்குளம் : சாத்தான்குளம் கருமேனி ஆற்றில் குப்பை கொட்டுவதால் மாசுபடுகிறது. மேலும் இடுகாட்டிற்குச் செல்லும் பாதை முழுவதும் குப்பை மேடாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் என்ற தினமலர் செய்தி எதிரொலியாக குப்பைகொட்டும் இடத்தை தாசில்தார் தேர்வு செய்தார்.
சாத்தான்குளம் டவுன் பஞ்.,சில் சேரும் குப்பைகளை பிரித்து எடுத... |
தமிழகம் | ஏ.டி.எம்., மைய காவலாளி கொலை பத்து தனிப்படை விசாரணை | திருப்போரூர் : கேளம்பாக்கம் அருகே ஏ.டி.எம்., காவலாளியைக் கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளன.கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் கிராமத் தில் உள்ள தகவல் தொழில்நுட்ப சாலையில், ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. இம்மையத்தில் நேற... |
தமிழகம் | கூட்டாம்புளி வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம் : பொதுமக்கள் அவதி | தூத்துக்குடி :கூட்டாம்புளி வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் பல நிறுத்தப்பட்டு விட்டதால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயக்கப்பட்டு வந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாளில் கூட்டாம்புளி கிராம... |
தமிழகம் | ஜாத்திரை திருவிழா | பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜுப்பேட்டை கிரா மத்தில், கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா நடந்தது.முதல் நாள் காலை எல்லையம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.மறுநாள் அதிகாலை 4 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்டு வண்ணங் களால் அலங்கரிக்க... |
தமிழகம் | மாற்று திறனாளிகளுக்கு பைக் உதவி | ராமநாதபுரம்: மாற்று திறனாளிகள் நான்கு பேருக்கு இலவச பைக்குகளை கலெக்டர் ஹரிஹரன் வழங்கினார். மாற்று திறனாளிகள் நலஅலுவலர் நடராஜன் உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். |
தமிழகம் | கலைஞர் வீட்டுவசதி திட்ட கணக்கெடுப்பு பூட்டியிருந்த வீடுகளுக்கு மீண்டும் வாய்ப்பு : வரும் 30க்குள் மன | தூத்துக்குடி : கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கணக்கெடுக்க வரும் போது பூட்டப்பட்டிருந்த குடிசை வீடுகள் மேலாய்வின் போதும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் வரும் 30ம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் ஊராட்சி தலைவர் அல்லது பி.டி.ஓவை தொடர்பு கொண்டு கோரிக்கையை தெரிவிக்கலாம்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வெளி... |
இந்தியா | சபரிமலையில் நவீன கோசாலை | சபரிமலை: சபரிமலையில் மாடுகளை பராமரிக்க வசதியாக நவீன கோசாலை அமைக்கும் பணிகள், முடியும் தறுவாயில் உள்ளன. சபரிமலையில் அரவணை தயாரிக்கும் நிலையத்தின் அருகே சிறிய கொட்டகையில் கோசாலை, பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அச்சிறிய இடத்தில், 15க்கும் மேற்பட்ட மாடுகளை பராமரிக்க இடவசதி இல்லாமல் இருந்தது.
இதையடுத்து திருவிதாங்கூர் தேவஸ... |
இந்தியா | திருமலையில் 6 நாட்களில் 9 கோடி ரூபாய் வசூல் | நகரி: கோடை காலம் மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறை ஒட்டி கடந்த ஒரு வாரத்தில், திருமலை வெங்கடேச பெருமாளை தரிசிக்க ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். இதில், பக்தர்கள் உண்டியலில் அளித்த காணிக்கை, கடந்த மாதம் 26ம் தேதி ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய், 27ம் தேதி ஒரு கோடியே 49 லட்சம், 28ம் தேதி ஒரு கோடியே 72 லட்சம், ... |
தமிழகம் | தங்க காயின் பெயரில் நூதன மோசடிமர்ம கும்பலை பிடிக்க தனிப்படை | ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் தங்க காயின் வழங்குவதாக கூறி நூதன மோசடி செய்து நகை மற்றும் பணத்தை அபகரித்தழ மர்ம கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரியாங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ்(35). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இவர் ராமநாதப... |
தமிழகம் | மாணவர்களிடம் மரம் வளர்க்க புது முயற்சி : எந்த நட்சத்திரக்காரர் | அரும்பாக்கம் : எந்த நட்சத்திரக்காரர் எந்த மரத்தை வளர்த்தால், எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற ரீதியில், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மரம் வளர்க்கும் விழிப்புணர்வில், தனியார் கல்லூரி நிர்வாகம் இறங்கியுள்ளது. நட்சத்திரங்கள் மற்றும் நவகிரகங்களுக்கு உகந்த மரம் மற்றும் செடிகளை கொண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.எந்தவொரு திட்ட... |
தமிழகம் | முதல்வர் கருணாநிதி 87வது பிறந்த நாள் விழா கோலாகலம்:பிரதமர் மன்மோகன் சிங், சோனியா வாழ்த்து | சென்னை:முதல்வர் கருணாநிதி, 87வது பிறந்த நாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் மற்றும் பல்வேறு முக்கிய கட்சித் தலைவர்கள், தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வரின் பிறந்த நாளை ஒட்டி, முதல்வரின் கோபாலபுரம், சி.ஐ.டி., காலன... |
தமிழகம் | பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த நடவடிக்கை | ஏர்வாடி: கீழக்கரை வனச்சரக ஆய்வாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கீழக்கரை பகுதியில் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க பல் வேறு பிரசாரங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. வனத்துறை சார்பில் வாலிநோக்கம்,சின்ன ஏர்வாடி,தினைக்குளத்தில் தலா ஒரு லட்சம் ரூபாய் செலவில் குடிநீர்வசதி, பைப் இணைப்பு, ஊரணி ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்... |
இந்தியா | ரயில்வே பணிக்கு தேர்வு: 70 லட்சம் பேர் பங்கேற்பு | புதுடில்லி: ரயில்வேயில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களுக்கு வரும் 6 மற்றும் 13ம் தேதிகளிலும், ஜூலை மாதமும் தேர்வு நடக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்வுகளை 70 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், கார்டு, டெக்னிக்கல் சூப்பர்வைசர்கள், உதவி லோகோ பைலட்டுகள் மற்றும் எழுத்தர் பணியிடங்கள் என, ரயில... |
தமிழகம் | கடப்பாக்கத்தில் இரண்டாவது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் | செய்யூர் : வியாபாரிகளை தாக்கிய தி.மு.க., கிளைச் செயலரை கைது செய்யக் கோரி, கடப் பாக்கத்தில் நேற்று இரண் டாவது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உறுதிமொழியை ஏற்று போராட் டத்தை மதியம் கைவிட் டனர்.கடப்பாக்கத்தைச் சேர்ந் தவர் சங்கர். வார்டு தி.மு.க., கிளைச் செயலர். பேரூரா... |
இந்தியா | இரவு ரயில்கள் ஒரிசாவில் ரத்து | புவனேஸ்வர்: ஒரிசாவில், மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டள்ளன. இது குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, காரக்பூர் - ரூர்கேலா மற்றும் காரக்பூர் ... |
தமிழகம் | பெருங்குடி குப்பைக் கிடங்கு மறைமுக விரிவாக்கம் : சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார சீர்கேடு அதிகரிப்பு | பெருங்குடி குப்பைக் கிடங்கு கைவேலி சதுப்பு நிலப்பகுதியில் மறைமுகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு, குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைவதோடு, சுகாதார சீர் கேடும் ஏற்பட்டு வருகிறது.சென்னை மாநகர் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3,200 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இதில், தென்சென்னை பகுதிக்க... |
தமிழகம் | உத்திரகோசமங்கை கோயில் கும்பாபிஷேக விழா துவக்கம் | ராமநாதபுரம்: சிறப்பு பூஜைகளுடன் முறைப்படி உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. காலை 8 மணிக்கு அனுக்கை ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை மற்றும் தனபூஜையுடன் விழா தொடங்கியது. முத்துக்குமார், தேவேந்திர குருக்கள் பூஜை... |
தமிழகம் | சாத்தை., எக்ஸ்சேஞ்சில் டெலிபோன் பில் கட்டும் கருவியை செயல்முறை படுத்த வேண்டும் | சாத்தான்குளம் : சாத்தான்குளம் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வாங்கப்பட்டு 5 மாதமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் டெலிபோன் பில் போடும் கருவியை செயல்முறைக்கு கொண்டு வரவேண்டும் என வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியத்தில் சாத்தான்குளம், முதலூர், நடுவக்குறிச்சி, புத்தன்தருவை, படுக்கப்... |
தமிழகம் | கமுதியில் கலெக்டர் ஆய்வு | கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றியம் நத்தம் ஊராட்சியில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஹரிஹரன் ஆய்வு செய்தார். தவிர பாப்பனம், விஜயபுரம், நகரத்தார்குறிச்சி ஊராட்சிகளில் நடந்த பல்வேறு பணிகளையும் பார்வையிட்டார். பி.டி.ஓ.,கள் கந்தசாமி, சுப்பிரமணி, பொறியாளர்கள் ரமேஷ், பாண்டுரங்கன... |
தமிழகம் | வீடு வழங்கும் திட்டத்தில் வாய்ப்பு | ராமநாதபுரம்: அரசின் இலவச விடு வழங்கும் திட்டத்தில் குடிசைகள் வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த மார்ச் 29 முதல் நடந்து வருகிறது. கணக்கெடுப்பு குழுவினர் வரும் போது பல குடிசை வீடுகள் பூட்டியிருந்ததால் அதற்கான விபரங்கள் பெற முடியவில்லை.
மேற்கொண்ட விபரங்கள் பெற ஏதுவாக சம்மந்தப்பட்ட குடிசைவாசிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது... |
தமிழகம் | நெசப்பாக்கம் எர்ரம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் | நெசப்பாக்கம் : விருகம்பாக்கம்,நெசப்பாக்கம் எர்ரம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது.நெசப்பாக்கம் எர்ரம்மன் திருக்கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களால் உருவாக்கப்பட்டது. சப்த மாதா, சப்த கன்னி சிலைகளை இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். நாளடைவில் சிறிய கோவிலாக எழுப்பப்பட்டது.இந்... |
தமிழகம் | அடிக்கடி மின்தடையால் பாதிப்பு | திருவாடானை: திருவாடானை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பாதிக்கபட்டுள்ளனர். திருவாடானை பகுதியில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்தடை அறிவிக்கபட்டுள்ளது.ஆனால் இரு தினங்களாக இடைவெளி விட்டு பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது.இதனால் அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சுட்டெ... |
தமிழகம் | மாமனை கொலை செய்த மைத்துனர்கள் கைது | பூந்தமல்லி : கணவன், மனைவி தகராறில் சமரசம் பேச வந்து, மாமனை அடித்துக் கொலை செய்த வழக்கில், மைத்துனர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:குன்றத்தூரை அடுத்த சோமங்கலம், நல்லூர், புதுநகரைச் சேர்ந்தவர், ஞானவேல் (30). லாரி டிரைவர். இவரது மனைவி, கோடீஸ்வரி (29). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.