category
stringclasses 3
values | title
stringlengths 1
636
| text
stringlengths 1
138k
⌀ |
|---|---|---|
இந்தியா
|
சிபு சோரன் மகன் ராஜினாமா
|
ராஞ்சி:ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அவரது மகன் ஹேமந்த் சோரன் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஜார்க்கண்ட் முதல்வராக, கடந்தாண்டு டிசம்பரில் சிபு சோரன் பதவியேற்றார். இவர் இன்னும் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்படவில்லை. அடுத்த மாத இறுதிக்குள் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்படவில்லை எனில், சிபு சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்படும்.இதையடுத்து, ஜே.எம்.எம்., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சிபு சோரனின் மகனுமான ஹேமந்த் சோரன், தன் தந்தை தேர்தலில் போட்டியிடுவதற்காக தம்கா தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சிபு சோரனிடம் அவர் கொடுத்துள்ளார். இருந்தாலும், இதுகுறித்து சபாநாயகரை அவர் இன்னும் சந்திக்கவில்லை
வெட்டுத் தீர் மான விவகாரத்தில் பா.ஜ.,வுக்கும், ஜே.எம். எம்., கட்சிக்கும் இடை யே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கியதையடுத்து, ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.மேலும் வரும் சனிக்கிழமை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்று நேரில் சம்பந்தப் பட்டவர்களுடன் பேசப் போவதாக பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறினார். அவர் கோவாவில் அளித்த பேட்டியில், "ஜார்க்கண்டில் உள்ள சிறிய கட்சிகளை உடைத்து லாபம் காண, காங்கிரசை அனுமதிக்க மாட்டோம்' என்றார்.
|
தமிழகம்
|
குறைந்த விலைக்கு வீட்டுமனை தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த 4 பேர் கைது
|
காஞ்சிபுரம்: சென்னை மற்றும் பெங்களூரில், அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டுமனையை குறைந்த விலையில் தருவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் வெங்கட்கவுதம்(35). இவர் பெங்களூரு ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், டெக்கான் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். பின் டாபடைல்ஸ் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவு விற்பனையை துவக்கினார். இவரது அலுவலகத்தில் கிறிஸ்டோபர், ராஜேந்திரன், சரண்யா, ஜான்(27), பாபு(32), நெல்சன்(32), கேலின்ராஜ்(23) ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்களில் சிலர் பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். நீச்சல் குளம், பள்ளி, கோவில், சர்ச், மசூதி, பூங்கா உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய பகுதியில், வீட்டு மனை குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது என விளம்பரம் செய்தார். முன் தொகையாக, குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதை நம்பிய பணம் செலுத்தியவர்களுக்கு ரசீதும் வழங்கப்பட்டது. ஆனால், வீட்டு மனை வழங்கப்படவில்லை. அதன்பின் சென்னை அசோக் நகரில் கிளை துவக்கினர். காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் கிராமத்தில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்தனர். 2400 சதுர அடி வீட்டு மனை, ஏழு லட்சத்து, 80 ஆயிரம் என அறிவித்தனர். முன் பணமாக சில லட்சங்களை செலுத்தினால் சலுகைகள் என்றனர். அதை நம்பிய, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி சுப்பிரமணியம் மூன்று லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். போரூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் விகாஷ்குமார்சின்கா இரண்டு லட்சத்து, 98 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். சதீஷ் என்பவர் ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என பலர் பணம் செலுத்தினர். மாதங்கள் கடந்தும், வீட்டு மனைகள் வழங்கப்படவில்லை.
பணம் செலுத்தியவர்கள் வீட்டு மனை தராவிட்டால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்றனர். பெங்களூரு வரும்படி கூறினர். அங்கு சென்றவர்களை நிறுவன ஊழியர்கள் மிரட்டினர். இதனால் ஏமாற்றமடைந்தவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., பிரேம்ஆனந்த் சின்காவிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., பூங்காவனம், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் ஆகியோர் விசாரித்தனர். சென்னையைச் சேர்ந்த 20 பேர் 50 லட்சம் ரூபாய் ஏமாந்துள்ளதாக புகார் கொடுத்தனர். அதேபோல் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த 54 பேர் கோடிக்கணக்கான ரூபாய் ஏமாந்ததாக, ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 5ம் தேதி புகார் கொடுத்தனர். இதை அறிந்ததும் வெங்கட்கவுதம் தலைமையிலான கும்பல் தலைமறைவானது. இரண்டு மாநில போலீசாரும் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் வெங்கட் கவுதம் தரப்பை சேர்ந்த ஜான்(27) பாபு(32) நெல்சன்(32) கேலின்ராஜ்(23) ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவருக்கும் வெங்கட்கவுதம் மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் கொடுத்துள்ளார். இவர்கள் வீட்டுமனைப் பிரிவில் மனை வாங்க விரும்பியவர்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர். இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான வெங்கட்கவுதம் உட்பட மற்றவர்களை தேடி வருகின்றனர். இக்கும்பல் புதிதாக, ஊட்டியில் வீட்டு மனை விற்பனைப் பிரிவை துவக்கியுள்ளனர். இது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
|
தமிழகம்
|
கேரளாவுக்கு மணல் கடத்திய 14 பேர் கைது: அதிகாலையில் பறக்கும் படை அதிரடி
|
பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், துடியலூர், ஆனைகட்டி வழியாக கேரளாவுக்கு மணல் கடத்திய 14 பேர் கும்பலை மாவட்ட பறக்கும்படை போலீசார் கைது செய்தனர். கேரளாவில், ஆற்றுப்படுகை உள்ளிட்ட இடங்களில் மணல் அள்ள கேரள அரசு தடை விதித்துள்ளது. இதனால், பாலக்காடு, மன்னார்க்காடு மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து ஆனைகட்டி வழியாக மணல் கடத்தப்படுகிறது. கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியிலிருந்து எடுத்து வரப்படும் மணல், கோவையில் பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்படுகிறது. நள்ளிரவில் உள்ளூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு "மாமூல்' கொடுத்து, லாரிகளில் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுகிறது.
கோவையில் 8,000 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லாரி லோடு மணல், கேரளாவில் 32,500 ஆயிரத்திற்கு விற்பதாக கூறப்படுகிறது. கோவை - ஆனைகட்டி செல்லும் வழியில், மாங்கரையில் போலீஸ் "செக்போஸ்ட்' டில் போலீசார் இல்லாததால் கடத்தல் தொடர்கிறது. வனத்துறை செக்போஸ்ட்டிலும் மணல் லாரிகளை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், கோவை பறக்கும் படை போலீஸ் எஸ்.ஐ.வெங்கடாசலம் தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 17,16 மற்றும் 21 டன் எடையுள்ள மணலை ஏற்றி சென்ற மூன்று லாரிகள், ஆனைகட்டி பஸ் ஸ்டாண்டில் மடக்கிப் பிடித்தனர். லாரிகளுக்கு "பைலட்டாக' சென்ற ஸ்கார்பியோ மற்றும் ஸ்விப்ட் காரும் பிடிபட்டன. இந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்திய 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 37 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய நிஜாமுதீன்(30) என்பவரை போலீசார் தேடுகின்றனர். பிடிபட்ட 14 பேரும் துடியலூர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். கனிமபொருட்களை சட்ட விரோதமாக கடத்தியதாக, இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.
|
தமிழகம்
|
பொது சேவை மையம் என்ற பெயரில் மோசடி: பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் முற்றுகை
|
சென்னை: பொது சேவை மையங்களை துவக்குவதாக அறிவித்த இன்போடெக் நிறுவனத்தில் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத் தரக் கோரி, அந்நிறுவனத்தை இளைஞர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் ஆன்-லைன் வசதியுடன் கூடிய 5,440 பொது சேவை மையங்கள் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு ஒப்பந்தத்தில் துவக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆன்-லைன் சேவைகளை அரசிடம் இருந்து 3ஐ இன்போடெக் சாப்ட்வேர் என்ற நிறுவனம் பெற்று வழங்க ஒப்பந்தம் செய்தது.
இதற்காக கிராமங்கள் தோறும் பொது சேவை மையங்களை திறக்க அந்த நிறுவனம், படித்த இளைஞர்களுக்கு அனுமதி அளித்தது. இதற்காக ஒவ்வொருவரிடமும் 1.25 லட்சம் ரூபாய் கட்டணத்தையும் வசூலித்தது. ஆனால், பொது சேவை மையங்களை இயக்கத் தேவையான முழு வசதிகளையும் இந்நிறுவனம் செய்து தரவில்லை. இதனால், பொது சேவை மையமும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை.
பொது சேவை மையத்தை துவக்கிய இளைஞர்கள், டிபாசிட் பணம் மற்றும் தளவாடப் பொருட்களை வாங்கி வைத்து என்ன செய்வதென்று தவித்தனர். இதை முறையாகச் செயல்படுத்த, கடந்த பிப்ரவரி மாதத்தில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் உண்ணாவிரதம் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 3ஐ இன்போடெக் நிறுவனத்திற்கு அரசு அளித்த அனுமதியை ரத்து செய்தது. இந்த நிறுவனத்தில் 1,725 பேர் பணத்தைக் கட்டி ஏமாந்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு நஷ்ட ஈடு கோரியும், டிபாசிட் பணத்தை திருப்பித் தரக் கோரியும் நேற்று அண்ணா சாலையில் உள்ள 3ஐ இன்போடெக் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். மேலும், பொது சேவை மையங்களை மீண்டும் துவக்கி செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
தமிழகம்
|
எஸ்.ஐ.,யை காரில் கடத்திய விபசார கும்பல்: கண்ணாடியை உடைத்து தப்பினார்
|
சென்னை: காரில் விபசாரம் நடத்தியவர்களை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.,யை, அதே காரில் விபசார கும்பல் கடத்தியது. சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை, திருமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் சிவக்குமார் (34). திருமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டூவீலர் திருட்டில் தொடர்புடைய ஒருவன், கிண்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக இவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் அவர் போலீஸ் உடையின் மேல் சாதாரண சட்டை மட்டும் அணிந்து கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். உடன், சில போலீசாரும் சென்றனர். கிண்டியில் அந்த டூவீலர் திருடன் இல்லாத நிலையில், மீண்டும் திருமங்கலம் திரும்பிய போது, இரவு 9:30 மணியளவில் சிவக்குமாருக்கு, கிண்டி பகுதியில் காரில் விபசாரம் நடப்பதாகவும், கார், அப்பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனம் முன் நிற்பதாகவும் தகவல் கிடைத்தது. முதலில் தயங்கிய சிவக்குமார், பின்பு போனில் தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றார். அங்கு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
காரின் அருகில் சென்ற சிவக்குமார், உள்ளே இருப்பவர்களை கவனித்தார். காரில் மூன்று பெண்கள் இருந்தனர். அருகில், டூவீலரில் ஒருவரும் நின்று கொண்டிருந்தார். விபசார புரோக்கரான அவரிடம் பேச்சுக் கொடுத்த சிவக்குமார், காரினுள் இருப்பவர்கள் அழகிகள் என்பதை உறுதி செய்து கொண்டு, காரின் பின்புற கதவை திறந்து ஏறினார். வாடிக்கையாளர் என்று காரில் இருந்தவர்கள் நினைத்தனர். டிரைவராக இருந்த நபர், சிவக்குமாரிடம், "நீங்கள் யார்?' என்று கேட்க, சிவக்குமார் தான் போலீஸ் என்பதை தெரிவித்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து எஸ்.ஐ., சிவக்குமார், காரை அருகில் உள்ள கிண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். டிரைவர், காரை போலீஸ் நிலையம் கொண்டு செல்வது போன்று பாவலா காட்டி பல சந்துகளில் வேகமாக ஓட்டியதுடன், கிண்டி போலீஸ் நிலையத்தை தாண்டி ஜி.எஸ்.டி., சாலையில் நுழைந்து சைதாப்பேட்டை நோக்கிச் சென்றார்.
காரின் கண்ணாடிகள் "மின்னணு' இயக்கத்துடன் இருந்ததால், டிரைவர் கண்ணாடிகளை உயர்த்தியதுடன், பவர் லாக் செய்தார். இதனால், எஸ்.ஐ.,யால் வெளியில் யாரையும் கூப்பிட முடியவில்லை. அப்போது காரின் டிரைவர், எஸ்.ஐ., சிவக்குமாரிடம், "எங்களையா பிடிக்கப் போகிறாய். உன்னை என்ன செய்கிறோம் பார். எங்கள் ஆள் அங்கு நிற்கின்றனர். அங்கு கொண்டு சென்று உன்னை கொல்லப் போகிறோம்' என்று மிரட்டினார். கார், சின்னமலையில் வலதுபுறமாக திரும்பி ராஜ்பவன் நோக்கிச் சென்றது. ராஜ் பவன் அருகில் சர்தார் படேல் சாலையில் திரும்பிய போது சுதாரித்துக் கொண்ட சிவக்குமார், கார் டிரைவரின் கழுத்தை பிடித்து பின்புறம் இழுத்தார். அத்துடன், காரின் கண்ணாடியையும் உடைத்தார். இதனால், நிலைதடுமாறிய டிரைவர், காரை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது இரவு 10.30 மணி. கார் அப்பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்றதால், அங்கிருந்த பொதுமக்களின் சிலரும் காரை பார்த்து ஓடிவந்தனர். அப்போது காரில் இருந்த மூன்று பெண்களும் இறங்கி ஓடிவிட்டனர்.
காரில் இருந்த நபரை பிடித்துக்கொண்ட எஸ்.ஐ., காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். கோட்டூர்புரம் ரோந்து போலீசார் சம்பவ இடம் வந்தனர். பிடிபட்டவரை அவர்களிடம் சிவக்குமார் ஒப்படைத்தார். சினிமாவில் வருவதை போன்று நடந்த அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிபட்டவரையும், காரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மணப்பாக்கத்தை சேர்ந்த சுஜித் கண்ணா (35) என்பதும், டூவீலரில் வந்தவன் பெயர் மதன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் கன்னட பிரசாத்தின் கூட்டாளிகளா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கார் யாருடையது என்பது குறித்தும், தப்பி ஓடிய பெண்கள் குறித்தும் விசாரணையை துவக்கியுள்ளனர்.
கடத்தல் இல்லை; கமிஷனர் ராஜேந்திரன்: இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, "எஸ்.ஐ.,யை யாரும் கடத்தவில்லை. வேறு ஒரு குற்றவாளியை பிடிக்கச் சென்ற போது, விபசார கும்பல் குறித்த தகவல் கேட்டு, காரை பிடித்து அதில் சென்று ஒருவரை பிடித்துக் கொடுத்துள்ளார்' என்றார்.
|
தமிழகம்
|
வாஸ்து மீன்கள் விமானத்தில் கடத்தல்
|
சென்னை: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட வாஸ்து மீன்கள் மீண்டும் சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. நேற்று காலை 11.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஏர்- இந்தியா விமானம் வந்தது. இதில் பயணிகளின் உடைமைகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது(40) கனி(35) ஆகியோர் கொண்டு வந்த சூட்கேஸ்களை சோதனையிட்டதில், அதில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாஸ்து மீன்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்கள் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வாஸ்து மீன்கள் நேற்று மாலை சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்ட போது, விமானத்தில் கொண்டு வரப்பட்ட நான்கு சூட்கேஸ்கள் கேட்பாரற்று இருந்தன. இதை பிரித்துப் பார்த்ததில் அதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. இது குறித்து குடியுரிமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
|
தமிழகம்
|
வயிற்றுப்போக்கிற்கு மூவர் பலி: அதிகாரிகளை கண்டித்து மறியல்
|
வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வயிற்றுப் போக்கால் பலியாயினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகேயுள்ள ஆத்துப்பட்டியை சேர்ந்த மூக்கக்கோனார் மகள் தமிழ்ச்செல்வி( 32). இவரது நாத்தனார் முனியம்மாள் ( 38). அக்கா மகன் ராஜபெருமாள்(24) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு பறிக்கப்பட்ட நிலக்கடலையை சாப்பிட்டுள்ளனர். மூவருக்கும் இரவில் கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.அருகிலிருந்தவர்கள் தாடிக்கொம்பு அரசு ஆஸ்பத்திரி, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.எங்கிருந்தும் இவர்களுக்கு உதவி கிடைக்காததால், வாடகை காரில் மூவரையும், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தமிழ்ச்செல்வி, முனியம்மாள் இருவரும் இறந்ததால், இருவரது உடலையும் ஊருக்கு கொண்டு வந்து விட்டனர்.சிகிச்சையில் இருந்த ராஜபெருமாளும் நேற்று காலை இறந்தார்.
மூவரும் இறந்ததற்கு தங்கள் பகுதியில் ரோடு வசதி இல்லாததே காரணம், உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது என இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த பொது மக்கள் திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜபெருமாள் உடலை வைத்து ஒரு மணி நேரம் மறியிலில் ஈடுபட்டனர்.போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஆர்.டி.ஓ.ராமசாமி, எஸ்.பி.முத்துச்சாமி ஆகியோர் மறியல் செய்தவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக தற்காலிக பாலம் அமைத்து ரோடு போடுவதாகவும்,இரண்டு மாதங்களுக்குள் புதியதாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
|
தமிழகம்
|
ஏ.டி.எம்., இயந்திரத்தில் கள்ள நோட்டு
|
மாமல்லபுரம்: இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் எடுக்கப்பட்ட பணத்தில், கள்ள நோட்டு இருந்தது, வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழரசு. இவர், மதுராந்தகம் மற்றும் கூவத்தூர் இந்தியன் வங்கி கிளையில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 5ம் தேதி மதுராந்தகம் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில், ஒரு கார்டு மூலம் 20 ஆயிரம் ரூபாயும், மற்றொரு கார்டு மூலம் 3 ஆயிரம் ரூபாயும் பணம் எடுத்தார்.
அதில், 21 ஆயிரம் ரூபாயை மதுராந்தகம் எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் செலுத்தினார். அங்கு பணத்தை பெற்றுக்கொண்ட கேஷியர், இயந்திரம் மூலம் பரிசோதித்த போது, ஒரு 500 ரூபாய் நோட்டு (எண். 9 பி பி 625217 ) கள்ள நோட்டு என்றார். இதையடுத்து செந்தமிழரசு, மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார். வங்கி மேலாளரிடம் கூறியபோது, "இதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது' என கூறினார். பின்னர் கள்ள நோட்டை பெற்றுக் கொண்டு, வேறு 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். வங்கிகளில் கள்ள நோட்டுகளை கண்டறியும் இயந்திரம் இருந்தும், ஏ.டி.எம்., இயந்திரத்தில் கள்ள நோட்டு வந்தது, வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
தமிழகம்
|
திண்டிவனம் ஓட்டலில் ரெய்டு: காலாவதி பொருட்கள் பறிமுதல்
|
திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தி, ஓட்டலில் இருந்த போலி டீ தூள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், திண்டிவனம் நகராட்சி கமிஷனர் முருகேசன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டிவனம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ் நிலையத்தில் இயங்கும் ஓட்டலில் நேற்று இரவு 7 மணிக்கு சுகாதார ஆய்வாளர்கள் பாலக்கிருஷ்ணன், ராஜரத்தினம் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர். அரசு விரைவு போக்குவரத்துக் கழக கிளை பொதுமேலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஓட்டலின் கேஷியர் ஸ்ரீதர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். ஓட்டலில் இருந்த காலாவதியான மிக்சர், சிப்ஸ், குளிர்பானங்கள், வாட்டர் பாக்கெட் மற்றும் சாயம் கலந்த டூப்ளிகேட் டீ தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சமையல் அறை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக பராமரிக்குமாறு ஓட்டல் நிர்வாகத்தினரிடம் சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
|
இந்தியா
|
காங்கிரசில் மீண்டும் லட்சுமண் சிங்
|
போபால்:மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் இளைய சகோதரர் லட்சுமண் சிங், மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார்.மத்திய பிரதேச ராஜ வம்சத்தை சேர்ந்தவர் திக்விஜய் சிங். தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக உள்ளார். இவரது தம்பி லட்சுமண் சிங்.மத்திய பிரதேசத்தின் ரகோகார் பகுதியை இவர்கள் மூதாதையர்கள் ஆட்சி செய்தனர். இன்றும் இவர்களுக்கு இந்த பகுதியில் செல்வாக்கு உள்ளது. திக்விஜய் சிங்கை "பெரிய ராஜா' என்றும், லட்சுமண் சிங்கை "சின்ன ராஜா' என்றும் இந்த பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்த லட்சுமண் சிங், 2004ம் ஆண்டு திக்விஜய் சிங்குடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பா.ஜ.,வில் இணைந்தார். 2003ம் ஆண்டு ம.பி., சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட் சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால், "இனி 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட் டேன்' என, திக்விஜய் சிங் சபதம் மேற் கொண்டார். அதன்படி அவர், இன்று வரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் ரகோகார் பகுதியில் நடந்த கூட்டத்தில் திக்விஜய் சிங் கும், லட்சுமண் சிங்கும் ஒன்றாக கலந்து கொண்டனர். உறவினர்களும், ஊர்மக்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் எல்லாருக்கும் மோர், மாம்பழ ஜூஸ் பரிமாறப்பட்டது.காங்கிரஸ் கட்சிக்கு லட்சுமண் சிங் மீண்டும் திரும்பியதற்கான காரணம், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால், பா.ஜ., வுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.திக்விஜய் சிங் உள்ளூர் அரசியலில் தலையிடாததால் ம.பி., காங்கிரஸ் தலைவர் சுரேஷ் பச்சோரி சந்தோஷமாக இருந்தார்.
லட்சுமண் சிங் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளதால், கட்சிக்குள் அவர் மூக்கை நுழைப்பார் என பயப்படுகிறார் சுரேஷ் பச்சோரி.மத்திய பிரதேசத்தில் வரும் 2013ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திக்விஜய் சிங் மேற்கொண்ட சபதமும், இந்த ஆண்டு முடிகிறது. எனவே, லட்சுமண் சிங்கின் காங்கிரஸ் வருகை, பெரிய ராஜாவின் அரசியல் பிரவேசத்துக்கு மீண்டும் வழி ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
|
தமிழகம்
|
வி.சி., மாவட்ட துணை செயலர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
|
ஆர்.கே.நகர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி, வடசென்னை மாவட்ட துணை செயலர் உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டனர். கொருக்குபேட்டையில் கடந்த மாதம் 27ம் தேதி பாடிகாட் முனீஸ்வரர் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள அம்பேத்கர் நகரில், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே, கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு கோஷ்டியினர் அரிவாளால் வெட்டியதில், அதே பகுதியை சேர்ந்த மதன் (28) பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பாக, ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் சரவண பிரபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மதன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது, வடசென்னை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலர் சவுந்தர் (35) மற்றும் அவரது கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.
இது தொடர்பாக, சவுந்தர் மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்த துலுக்காணம் மகன் சிற்றரசு(34), செல்வம் மகன் பிரபு (26) காசி மகன் வேலா (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சவுந்தர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெயிலர் ஜெயக்குமார், கொலைவழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நான்கு பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, கமிஷனர் ராஜேந்திரன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சவுந்தர், சிற்றரசு, பிரபு, வேலா ஆகிய நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
|
தமிழகம்
|
மாஜிஸ்திரேட் முன் வாலிபர் தற்கொலை முயற்சி
|
மன்னார்குடி: மாஜிஸ்திரேட் முன்னிலையில், வாலிபர் ஒருவர் அரளி விதை சாற்றை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசிப்பவர் மாதவன் (25). இவர், மனித உரிமைக்கழக மாவட்ட அதிகாரி என்றும், நிருபர் என்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பவர் என்றும் மாறி, மாறி கூறி வந்தார். நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், போலீஸ் ஸ்டேஷனுக்கு மாதவனை அழைத்துச் சென்று, போட்டோ மற்றும் கைரேகைகளை பதிவு செய்தார். "எதற்காக இதை எடுக்கிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்?' என மாதவன் கேட்டார்.
அதற்கு இன்ஸ்பெக்டர் மணிமாறன், "உன் மீது சில வழக்குகள் உள்ளன. அதற்காக எடுத்தோம்' என்றார். நேற்று காலை 10 மணி மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில், மாதவன் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் ஜெயஸ்ரீ முன்னிலையில், போலீசார் மீது புகார் கூறி, "நீதி வேண்டும்' என, மனு கொடுத்தார். அதற்கு மாஜிஸ்திரேட், "30 நிமிடங்கள் வெளியே அமருங்கள். பிறகு நான் அழைக்கிறேன்' என்றார். மாதவன் வெளியே செல்லாமல், ஏற்கனவே மறைத்து எடுத்து வந்த அரளி விதை சாறை குடித்தார். அதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மாதவன் சேர்க்கப்பட்டார்; போலீசார் விசாரிக்கின்றனர்.
|
தமிழகம்
|
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப பலி
|
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோடை விடுமுறைக்கு வந்த சென்னை சிறுவன், கிணற்றில் தவறி விழுந்து இறந்தான். சென்னை அடுத்த வன்னியதேவனாம்பேட்டை நல்லான்தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பைரோஸ்(15); 9ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளி கோடை விடுமுறை விட்டதையொட்டி விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு காலனியில் உள்ள தனது தாத்தா அன்பழகன் வீட்டிற்கு வந்திருந்தான். நேற்று காலை தாத்தா வீட்டிலிருந்து மல்லிகைப்பட்டில் உள்ள அன்பழகனின் நிலத்திற்கு சுற்றிப் பார்க்கச் சென்றான். பகல் 12 மணியளவில் நடந்து சென்றபோது அருகே இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்தான். அந்த கிணற்றில் 40 அடி வரை தண்ணீர் நிரம்பியிருந்ததால், நீச்சல் தெரியாத ராமச்சந்திரன், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பஞ்சமூர்த்தி தலைமையிலான குழுவினர் கிணற்றில் மூழ்கிய பைரோஸ் பிரேதத்தை மீட்டனர். காணை சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் விசாரிக்கிறார்.
|
தமிழகம்
|
இருந்தும் இல்லாத ஆம்புலன்ஸ்: பரிதவிக்கும் ஏழை நோயாளிகள்
|
இடைப்பாடி: இடைப்பாடி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இருந்தும் இல்லாததால், அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இடைப்பாடி தாலூக்கா அரசு மருத்துவமனைக்கு கொங்கணாபுரம், சித்தூர், பூலாம்பட்டி, கோரணம்பட்டி, கன்னியாம்பட்டி, குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, குரும்பப்பட்டி உள்ளிட்ட பகுதி நோயாளிகள் வருகின்றனர். இடைப்பாடிக்கு அருகில் உள்ள குள்ளம்பட்டி, சித்தூர், செட்டிமாங்குறிச்சி, கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. என்றாலும் இடைப்பாடி அரசு மருத்துவமனையில்ஆபரேசன் தியேட்டர், ஈ.ஜி.சி, எக்ஸ் ரே, பரிசோதனைகள் என அனைத்து வசதிகளும் இருப்பதால் பெரும்பாலான நோயாளிகள் இம் மருத்துவமனைக்கு வருவது வழக்கம்.
சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் யாருக்காவது நோய் தீவிரம் அடைந்தால் நோயாளியை வேறு மருத்துவமனைக்கு இரவில் கொண்டு செல்ல இடைப்பாடி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. நேற்று முன்தினம் பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (50) என்பவர் விபத்தில் அடிபட்டு ஆபத்தான நிலையில் இடைப்பாடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டு, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. மூன்று மணிநேரம் ராஜாவின் உறவினர்கள் அவதிப்பட்டனர். பின்னர் ஆம்னி வேன் மூலம் ராஜா சேலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இடைப்பாடி அரசு மருத்துவமனையில் ஒரே டிரைவர் மட்டுமே இருப்பதால் ஆம்புலன்ஸ் பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்படுகிறது. இரவு நேரத்தில் டிரைவர் இல்லாததால் ஆம்புலன்ஸ் இயக்கப்படுவது இல்லை. இரவு நேரங்களில் விபத்து, மற்றும் உடல்நிலை சரியில்லாத நோயாளிகளை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆய்வு செய்து இடைப்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கூடுதல் டிரைவர் நியமனம் செய்து நோயாளிகளின் உயிரை காக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
|
தமிழகம்
|
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் பெற்ற வி.ஏ.,ஓ., கைது
|
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., அருகே மானகசேரியில் வாரிசு சான்றிதழ் வழங்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., அம்மையப்பனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மானகேசரியை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன்(25). இவரது தந்தை சமுத்திரம்(56). இவர் கடந்த பிப்., 24ம் தேதி இறந்தார். வாரிசு சான்றிதழ் கேட்டு ஸ்ரீவி., தாலுகா அலுவலகத்தில், ஏப்., 23ம் தேதி சுப்பையா பாண்டியன் மனு செய்தார்.
மனுவை வைத்து கொண்ட மானகசேரி வி.ஏ.ஓ., அம்மையப்பன்(56), சான்றிதழ் வழங்க சுப்பையா பாண்டியனிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து சுப்பையா பாண்டியன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரசாயனம் தடவி போலீசார் கொடுத்த 500 ரூபாயை, நேற்று மாலை 3 மணியளவில் ஸ்ரீவி,- மல்லி ரோட்டருகே நின்றிருந்த அம்மையப்பனிடம், சுப்பையா பாண்டியன் கொடுத்தார். மறைவிடத்திலிருந்த டி.எஸ்.பி., சியாமளாதேவி தலைமையிலான போலீசார், அம்மையப்பனை கைது செய்தனர்.
|
தமிழகம்
|
தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி தர்ணா
|
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று, தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் (எஸ்.சி.,) சேர்க்க சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும், நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும், தலித் கிறிஸ்தவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கவேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி, தூத்துக்குடியில் நேற்று மாலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ராஜாஜி பூங்கா முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. மார்க்.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.,வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலர் கனகராஜ், தூத்துக்குடி - நாசரேத் சி.எஸ்.ஐ., பிஷப் ஜெபசந்திரன், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு ஆஸ்வால்ட், தலித் கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் சுந்தரிமைந்தன், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
|
தமிழகம்
|
நித்யானந்தாவுக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு
|
புதுச்சேரி போலீசாரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, சாமியார் நித்யானந்தா சார்பில், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக சாமியார் நித்யானந்தாவை பெங்களூரு சி.ஐ.டி., போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். விசாரணைக்கு பின், பெங்களூரு ராம் நகர் கிளைச் சிறையில் சாமியார் அடைக்கப்பட்டார்.
நித்யானந்தா மீது புதுச்சேரி உருளையன்பேட்டை போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை கைது செய்து விசாரிப்பதற்கான உத்தரவை, புதுச்சேரி குற்றவியல் கோர்ட் நீதிபதி கோகுலகிருஷ்ணன் பிறப்பித்தார். உருளையன்பேட்டை சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த 5ம் தேதி பெங்களூரு சென்றனர். புதுச்சேரி போலீசாரிடம் நித்யானந்தாவை ஒப்படைக்க ராம் நகர் சிறை அதிகாரிகள் மறுத்து, ராம் நகர் கோர்ட் உத்தரவிட்டால்தான் ஒப்படைக்க முடியும் என, தெரிவித்தனர். இதை தொடர்ந்து, நித்யானந்தாவை ஒப்படைக்கக் கோரி ராம் நகர் குற்றவியல் கோர்ட்டில் புதுச்சேரி போலீசார் நேற்று முன்தினம் மனு செய்தனர். ஆனால், இந்த மனுவை கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, புதுச்சேரி போலீசார் வெறுங்கையுடன் திரும்புகின்றனர். புதுச்சேரி போலீசார், நித்யானந்தாவை கைது செய்வதை தடுக்கும் வகையில் சாமியார் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நித்யானந்தா முன்ஜாமீன் மனு தள்ளுபடி: பெங்களூரு, ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், சாமியார் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ராம்நகர் கிளை சிறையில் இருக்கும் அவரது ஜுடிஷியல் கஸ்டடி முடிந்து, வரும் 13ம் தேதி, நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும்.
|
தமிழகம்
|
உண்மை கண்டறியும் சோதனை: கைதான குப்தா கோர்ட்டில் மனு
|
அஜ்மீர்: அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தேவேந்திரா குப்தா, தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஜ்மீர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளான்.
ராஜஸ்தான், அஜ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, கடந்த ஏப்ரலில் தேவேந்திரா குப்தா என்பவன் கைது செய்யப்பட்டான். குண்டு வெடிப்பில் குப்தாவுக்கு உள்ள தொடர்பை உறுதி செய்வதற்காக, ராஜஸ்தான் போலீசார் அவனிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்கு அஜ்மீர் மாஜிஸ்திரேட் கோர்ட் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், உண்மை கண்டறியும் சோதனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி, அஜ்மீர் செஷன்ஸ் கோர்ட்டில் குப்தா சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
|
தமிழகம்
|
பத்தாம் தேதிக்குள் ஆஜராகும்படி ஹாலப்பாவுக்கு நோட்டீஸ்
|
பெங்களூரு: பாலியல் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ஹாலப்பா, மே 10ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று சி.ஐ.டி., போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஹாலப்பா மீதான பாலியல் பலாத்கார விவகாரத்தில், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சி.ஐ.டி., சிறப்பு குழுவினர், பாதிப்புக்குள்ளான சந்திராவதி, அவரது கணவர் வெங்கடேஷ் மூர்த்தியிடம் விசாரணையை நடத்தி முடித்துள்ளனர்.
சிறப்பு குழுவினர், தலைமறைவாக இருக்கும் ஹாலப்பா, வரும் 10ம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி, ஹாலப்பாவின் பசவேஸ்வர நகர் வீடு, எம்.எல்.ஏ., விடுதி, சொரபா மற்றும் ஹரத்தாலுவிலுள்ள அவருக்கு சொந்தமான வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சி.ஐ.டி., போலீசார் அனுப்பியுள்ள நோட்டீசின் பிரதிகள், ஹாலப்பாவுக்கு சொந்தமான நான்கு வீடுகளின் கதவுகள் மீதும் ஒட்டப்பட்டுள்ளது. ஷிமோகா நீதிமன்றத்தில், ஹாலப்பா தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மீதான மனு, வரும் 11ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அதற்கு ஒரு நாள் முன்கூட்டியே விசாரணைக்கு வருமாறு சி.ஐ.டி., போலீசார், ஹாலப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதே வேளையில், "பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்குட்பட்ட முன்னாள் அமைச்சர் ஹாலப்பா விவகாரத்தில், உண்மை வெளிவர வேண்டும். அவரை கைது செய்வது அரசின் பணியல்ல; போலீசாரின் பணி. ஹாலப்பா விவகாரம், அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது' என, நகர அபிவிருத்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
|
தமிழகம்
|
ரூ.50 லட்சத்தை ஒப்படைக்க ஷெரிஜா பானு கோர்ட்டில் மனு
|
மதுரை: கஞ்சா வழக்கில் போலீசார் பறிமுதல் செய்த பணத்தில், வருமான வரி பிடித்தம் போக, ஐம்பது லட்சம் ரூபாயை திரும்ப வழங்கக் கோரி ஷெரிஜா பானு, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
மதுரையில் கஞ்சா கடத்தியதாக முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் ஷெரிஜா பானு, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒருகோடியே 40 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய், 35 கிலோ கஞ்சா, 21 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் குற்றம்சாட்டினர். பின், இவ்வழக்கு மதுரை கோர்ட்டில் நடந்தது. பணத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, வருமான வரித்துறையினர் தனியாக மனு செய்தனர். பின், வழக்கை விசாரித்த கோர்ட், குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படாததால்,ஷெரிஜா பானு உட்பட மூவரையும் விடுதலை செய்தது. பணத்தை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
அதை எதிர்த்து வருமான வரித்துறை, ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, ""வருமான வரியை பிடித்தம் செய்து விட்டு, மீதி பணத்தை வழங்கலாம்,'' என உத்தரவிட்டார். விசாரணை கோர்ட்டில் மனு செய்து பணம், பறிமுதல் செய்த பொருட்களை பெறலாம் எனவும் குறிப்பிட்டார். அதன்படி, வருமான வரி பிடித்தம் செய்ததுபோக, மீதமுள்ள பணம் மற்றும் வட்டி சேர்த்து ஐம்பது லட்சத்து 99 ஆயிரத்து 730 ரூபாயை ஒப்படைக்கக் கோரி ஷெரிஜா பானு, போதை பொருள் கோர்ட்டில் வக்கீல்கள் கனகராஜன், சந்திரசேகர் மூலம் நேற்று மனு செய்தார். மற்றொரு மனுவில், 21 சவரன் நகைகள், கார் மற்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் அவர் கோரினார்.
|
தமிழகம்
|
பாதுகாக்கப்பட்ட வனம் என்ற அறிவிப்பை எதிர்த்த வழக்கு: கஞ்சா பயிரிடுவதாக அரசு தரப்பில் வாதம்
|
மதுரை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மேகமலை பகுதியை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவித்ததை எதிர்த்த வழக்கு விசாரணையின் போது, விவசாயம் என்ற போர்வையில் கஞ்சா பயிரிடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அப்பகுதியினரை வெளியேற்றுவதற்கான தடையை மதுரை ஐகோர்ட் கிளை நீடித்தது.
தேனி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஏற்கனவே தாக்கல் செய்த பொது நல வழக்கு: ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் மேகமலை, வருசநாடு, தும்பைகாடு ஊராட்சிகள் உள்ளன. மலை பகுதிகளில்24 ஆயிரத்து 655 எக்டேர் வனப் பகுதியை "பாதுகாக்கப்பட்ட வனம்' என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட் கிளை, அப்பகுதியினரை வெளியேற்ற இடைக்கால தடை விதித்தது. வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.பழனிவேலு, ஆர்.எஸ்.ராமநாதன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் மனோஜ்பாண்டியன், கணேசன் ஆஜராயினர். மேகமலை விவசாயிகள் சங்க செயலாளர் ராமச்சந்திரராஜா சார்பில் வக்கீல் மகேந்திரன், கடமலை, மேகமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தங்கராஜ் சார்பில் வக்கீல் முருகானந்தம் இதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் இரு வழக்குகளை தாக்கல் செய்தனர்.
அரசு வக்கீல் ஜானகிராமுலு, ""வனப்பகுதியில் விவசாயம் என்ற போர்வையில் கஞ்சா பயிரிடப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க பாதுகாக்கப்பட்ட வனம் என அரசு அறிவித்துள்ளது. ஐகோர்ட் கிளையின் இடைக்கால உத்தரவை ரத்துசெய்ய வேண்டும், என்றார். இருப்பினும் இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அப்பகுதியினரை வெளியேற்றுவதற்கான தடையை நீடித்தனர். விசாரணை மே 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
|
தமிழகம்
|
திருநாகேஸ்வரம் கோவிலில் கட்டடம் கட்டுவதை எதிர்த்து மனு: ஐகோர்ட் நோட்டீஸ்
|
மதுரை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோவிலுக்குள் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து தாக்கலான மனு குறித்து, இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருநாகேஸ்வரத்தை சேர்ந்த பி.எஸ்.ராஜா தாக்கல் செய்த மனு: திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. நாகு தலங்களில் இக்கோவில் முக்கியமானது. வெளிநாடுகளில்இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தோஷம் நீங்க வழிபாடு நடத்துகின்றனர். கடந்த 1982, 1995 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலில், கிழக்குபகுதியில் ஆகம விதிப்படி யாகசாலை அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. யாகசாலை அமைக்கப்பட்ட இடத்தில், தற்போது செயல் அலுவலர் அலுவலகத்திற்கு கட்டடங்கள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. அங்கு நின்று கோபுரங்களை தரிசிக்க இயலாது. வேறு எந்த இடத்தில் இருந்தும் கோபுரங்களை காண்பது அரிது. கட்டடத்திற்குள் கழிவறை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கட்டடம் கட்டுவதை எதிர்த்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. கட்டடம் கட்டக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பழனிவேலு, ஆர்.எஸ்.ராமநாதன் கொண்ட பெஞ்ச், மனு குறித்து பதிலளிக்கும்படி அறநிலையத்துறை கமிஷனர், இணைக் கமிஷனர் மற்றும் நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
|
தமிழகம்
|
அரசு கூடுதல் வக்கீலுக்கு முன்ஜாமீன்
|
மதுரை: மதுரையில் வரதட்சணை கொடுமையால் பேராசிரியை தற்கொலை செய்த வழக்கில் அரசு கூடுதல் வக்கீல் சாமுவேல் ராஜ், அவரது மனைவி உஷா வாசுகிக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் வழங்கியது. மதுரை ஐகோர்ட் கிளை அரசு கூடுதல் வக்கீல் எஸ்.பி.சாமுவேல்ராஜ். இவரது மகன் வக்கீல் கால்வின் கிறிஸ்டோபருக்கும், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஸ்டாலின் மைக்கேல் மகள் பேராசிரியை நிஷானா ஜெபமலருக்கும் 2009 ஜூலை 2 ல் திருமணம் நடந்தது. ஏப்ரல் 19 ல் நிஷானா ஜெபமலர் தந்தை வீட்டில் தற் கொலை செய்து கொண் டார். ஊமச்சிகுளம் போலீசார் விசாரித்தனர். வரதட்சணை கொடுமையால், நிஷானா தற் கொலை செய்தது தெரிந் தது. கால்வின் கிறிஸ்டோபர், சாமுவேல்ராஜ், தாயார் உஷா வாசுகி மீது வரதட்சணை கொடுமை பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சாமுவேல்ராஜ், உஷா வாசுகி முன்ஜாமீன் மனு நேற்றைக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. கால்வின் கிறிஸ்டோபரும் தனியாக முன்ஜாமீன் கோரி மனு செய்திருந்தார்.
மனுக்கள் நேற்று, நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன் விசாரணைக்கு வந்தன. சாமுவேல்ராஜ் சார்பில் வக்கீல் சுபாஷ் பாபு, கால்வின் சார்பில் வக்கீல் சுவாமிநாதன் ஆஜராயினர். அரசு தரப்பில் வக்கீல் முருகன் ஆஜரானார். நிஷானாவின் தாயார் சத்தியவாணி பொன்ராணி சார்பில் வக்கீல் குமார் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் ""சாமுவேல்ராஜ், அவரது மனைவிக்கு மட்டும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி,'' நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் இரு வாரங்களுக்கு ஊமச்சிகுளம் ஸ்டேஷனில் தினமும் காலையில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது. கால்வின் மனு ஜூனுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
|
இந்தியா
|
இ.எஸ்.ஐ., மருத்துவ வசதிக்கு மாத வருமான உச்சவரம்பு உயர்வு
|
புதுடில்லி:தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் (இ.எஸ்.ஐ.,) கீழ் பயன்பெற மாத வருமான உச்சவரம்பை, 15 ஆயிரம் வரை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது.தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இ.எஸ்.ஐ., திட்டப்படி மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடும் வழங்கப்படுகிறது.பத்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு, இந்த சலுகை வழங்கப்பட்டு வந்தது. இனி மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களும், இந்த சலுகையை அனுபவிக்க வழி செய்யும் மசோதா, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது.
ராஜ்ய சபாவில் இந்த சட்டதிருத்த மசோதாவை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று தாக்கல் செய்து பேசுகையில்," இ.எஸ்.ஐ.,யை தனியார் மயமாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. பல மாநிலங்களில் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை நவீனமயமாக்கி வருகிறோம்' என்றார். இந்த மசோதா ராஜ்ய சபாவில், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை ஆதரித்து பேசிய பாரதிய ஜனதா உறுப்பினர் எஸ்.எஸ்.அலுவாலியா குறிப்பிடுகையில், "இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால், அங்கு நோயாளிகள் சரியாக கவனிக்கப்படாத சூழல் நிலவுகிறது. எனவே, இந்த மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட வேண்டும்' என்றார்.காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.சி.குந்தியா என்பவர் குறிப்பிடுகையில், "இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷனுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுள்ளது. இவ்வளவு நிதியை வைத்துள்ள, இந்த அமைப்பின் மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லை' என்றார்.
|
இந்தியா
|
தமிழகத்தில் ஆறு எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க ஜூன் 17ல் தேர்தல்
|
புதுடில்லி:தமிழகத்தில் ஆறு உட்பட ராஜ்ய சபாவில் காலியாகும் 55 எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 14 மற்றும் 17ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அன்பழகன், டி.டி.வி.தினகரன், மலைச்சாமி, கோவிந்தராஜன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், பா.ம.க., அன்புமணி என, தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பிக்கள் ஆறு பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
அதேபோல், உ.பி.,யில் 11, மகாராஷ்டிரா, ஆந்திராவில் தலா 6, பீகாரில் 5, கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4, ஒரிசா, மத்திய பிரதேசத்தில் தலா 3, சட்டீஸ்கர், பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்டில் தலா 2, உத்தரகண்டில் ஒன்று என, 12 மாநிலங்களைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி.,க்கள் 49 பேரின் பதவிக்காலமும் முடிவடைகிறது.இவர்களுக்குப் பதிலாக புதிதாக 55 எம்.பி.,க்களைத் தேர்வு செய்ய ஜூன் 14 மற்றும் 17ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இருந்து 49 எம்.பி.,க்களைத் தேர்வு செய்ய ஜூன் 17ம் தேதியும், ஆந்திராவில் ஆறு எம்.பி.,க்களைத் தேர்வு செய்ய ஜூன் 14 ம் தேதியும் தேர்தல் நடக்கிறது.இதுதவிர, ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,யான கிருஷ்ணன் லால் பால்மிகி மரணம் அடைந்ததால், அவரது இடத்திற்கும் புதிதாக ஒரு எம்.பி., தேர்வு செய்யப்பட உள்ளார்.
ஆந்திராவில் நடக்க உள்ள ராஜ்ய சபா தேர்தலுக்கான முறையான அறிவிப்பு, மே 28ம் தேதி வெளியிடப்படுகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 4ம் தேதி. ஜூன் 14ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதேநாளில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.தமிழகம் உட்பட இதர 12 மாநிலங்களில் நடைபெற உள்ள ராஜ்ய சபா தேர்தலுக்கான முறையான அறிவிப்பு மே 31ம் தேதி வெளியிடப்படும். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 7. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 10. ஓட்டுப்பதிவு 17ம் தேதி நடைபெறும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
|
இந்தியா
|
தமிழக மேலவைக்கு லோக்சபா ஒப்புதல்:அ.தி.மு.க - தி.மு.க., காரசார விவாதம்
|
தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கு லோக்சபா நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 24 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் சட்டசபை மேலவை அமைக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த மசோதாவிற்கு, அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தில் சட்டசபை மேலவை அமைக்க வேண்டுமென தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது. இந்த மசோதாவிற்கு ராஜ்ய சபாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று லோக்சபாவிலும் தமிழக மேலவைக்கான மசோதா உறுப்பினர்களின் கடும் விவாதத்திற்கு பிறகு நிறைவேறியது. மசோதாவிற்கு அ.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கையெழுத்து இட்ட பின், தமிழகத்தில் சட்ட மேலவைக்கான அதிகாரப்பூர்வ பணிகள் துவங்கும்.
லோக்சபாவில் 80 நிமிடம் விவாதத்திற்கு பிறகு பதிலளித்து சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பேசியதாவது:தமிழக மக்களின் விருப்பத்தை அறிந்து தமிழக அரசு மேலவை அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது அரசின் கடமை. மத்திய அரசின் வசம் வேறு எந்த மாநிலத்தில் இருந்தும் மேலவை அமைப்பதற்கான தீர்மானம் அனுப்பப்படவில்லை.பஞ்சாப் அரசு தங்கள் மாநிலத்திற்கான தீர்மானத்தை நிறுத்தி வைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது. அசாம் அரசு மேலவை அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை; தமிழக அரசு தான் அதிக ஆர்வம் காட்டியுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எங்கும் மேலவையை கலைக்கவில்லை. மேலவை அமைப்பது ஜனநாயகத்திற்கு அவசியம் என மத்திய அரசு கருதுகிறது. அதனால், அனைத்து மாநிலங்களிலும் மேலவை அமைக்கப்பட வேண்டும் என கருதுகிறோம்.இவ்வாறு வீரப்ப மொய்லி பேசினார்.
விவாதத்தில் சட்டசபை மேலவையை ஆதரித்து தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசும் போது, "தமிழகத்தில் சட்டசபை மேலவை அமைக்கப்பட வேண்டும் என 2006ம் ஆண்டு எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளோம். அதைத்தான் இப்போது நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம்.தமிழகத்தில் மேலவை அமைந்தால், அதில் 78 உறுப்பினர்கள் இடம் பெறுவர். இதில், எம்.எல்.ஏ.,க்களால் 26 பேர், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளால் 26 பேர், ஆசிரியர்கள் - பட்டதாரிகளால் தலா ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். கவர்னரால் 12 பேர் நியமனம் செய்யப்படுவர். அண்ணாதுரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உதவியது மேலவை தான்' என்றார்.
மசோதாவை எதிர்த்து அ.தி.மு.க., குழுத் தலைவர் தம்பிதுரை பேசும் போது, "தமிழகத்தில் அ.தி.மு.க., அடுத்த ஆண்டு ஆட்சிக்கு வந்த உடன், மேலவையை கலைத்து விடுவோம். மேலவை அமைப்பது தேவையற்றது என கருதுகிறோம். இது, அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியது இப்போது தான் தி.மு.க.,விற்கு ஞாபகத்திற்கு வந்துள்ளதா' என வினா எழுப்பினார்.
தீர்மானத்தில் கேரளாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் உறுப்பினர் பி.கே.பிஜு பேசும் போது, தமிழகத்தில் மட்டும் மேலைவையை அமைப்பதற்கு அவசரம் காட்டப்படுவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். பா.ஜ., உறுப்பினர் ஷானவாஸ் உசேன் பேசும் போது, "நாட்டில் ஆறு மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது. தமிழகத்தில் மேலவை அமைப்பதில் காட்டும் தீவிரத்தை மேலவை இல்லாத மற்ற மாநிலங்களிலும் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
விவாதத்தில் பங்கேற்று பிஜூ ஜனதா தள தலைவர் மகதாப் பேசும் போது, "மாநில அரசுகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் மத்திய அரசு ரப்பர் ஸ்டாம்பாக செயல்படக்கூடாது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மேலவை அமைப்பதும், அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும் போது மேலவையை கலைப்பதுமான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு பயன்படக்கூடாது' என்றார். தமிழக சட்டசபை மேலவைக்கான மசோதாவை ஆர்.ஜே.டி., தலைவர் லாலு, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.முன்பு, தமிழக சட்டசபை மேலவையில் ராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி, முத்துலட்சுமி ரெட்டி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட தலைவர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். -நமது டில்லி நிருபர்-
|
தமிழகம்
|
பேச்சு, பேட்டி, அறிக்கை
|
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நடக்காத விஷயம் குறித்து பேச்சு:ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். அதை கடமையாக ஆசிரியர்கள் ஏற்க வேண்டும்.
நிதியமைச்சர் அன்பழகன் பேச்சு: வணிகர்கள் லாபத் தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் என்ற கண்ணோட்டம் கூடாது. சமூகத் தேவைகளைக் குறிப்பு அறிந்து நிறைவு செய்பவர்கள் வணிகர்கள். யாராக இருந்தாலும் ஒரு தொழிலைச் செய்து தான் வாழ வேண்டும். அப்படி தொழில் செய்யாமல் வாழ்பவர்கள், சமூகத்தை ஏமாற்றுகின்றனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் பேச்சு: நம்மிடம் உள்ள இயற்கை ஆதாரங்களை பகிர்ந்து கொடுப்பதில் உள்ள சிரமங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். எனினும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரும் எண்ணம் எதுவும் இல்லை.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச்சு: உணவுப் பொருட்களின் விலை உயர்ந் திருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். சாதாரண மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான், ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உணவு வழங்கல் துறையில் ஊழல் இன்றி, திட்டத்தின் நலன்கள் ஏழைகளுக்கு சேர்கிறதா என்பதை மாநில அரசுகள் தான் கண்காணிக்க வேண்டும்.
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா பேச்சு: இலங்கையில் நியாயத்தை நிலை நாட்டுவதற்கு அவசர காலச் சட்டத்தை நீக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கக் கூடிய சட்டம் உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. இதனால், மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் ஹரீஷ் ராவத் பேச்சு: நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குழந்தைத் தொழிலாளர்கள் பணியிடங்களில் இருந்து மீட்கப்பட்டு, அவர்கள் சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு: நீங்க பெற்ற பிள்ளைகளுக்கு நீங்க முட்டை போட மாட்டீங்க. ஆனால், நம்ம முதல்வர் சத்துணவில் வாரத்திற்கு மூன்று முட்டைன்னு, மாதத்திற்கு 12 முட்டைகள் போடுறாரு. தொடர்ந்து பத்து வருஷம் முட்டை சாப்பிட்டா நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும், மூளை நல்லா வளரும். பசங்க சூப்பரா படிப்பாங்க. இது ஒரு தொலை நோக்கு திட்டம்.
|
General
|
பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?
|
லண்டன்:பிரிட்டனில் நேற்று பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. அடுத்த பிரதமர் யார் என்ற விவரம் இன்று தெரியும்.பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் மொத்தமுள்ள 649 இடங்களுக்கு, 4 ஆயிரத்து 150 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. நேற்று மாலையே ஓட்டுகள் எண்ணும் பணிகள் துவங்கிவிட்டன. புதிய பிரதமர் யார் என்ற விவரம் இன்று தெரியும்.
ஆளும் தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தலில் பின்னடை ஏற்படும் என்றும், கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆளும் தொழிலாளர் கட்சியை வழி நடத்தும் கார்டன் பிரவுன் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா என்பது சந்தேகம்.பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கேமரூன் ஓரளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார். ஆனால், கூட்டணி ஏதும் கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
மூன்றாவதாக லிபரல் டெமாக்ரட் என்ற சுதந்திர ஜனநாயக கட்சி இத்தடவை சற்று முன்நோக்கி நிற்கிறது.ஆனாலும், பிரிட்டன் என்பது அதிக அளவில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடு. கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு சூழ்நிலை, இன்னமும் பிரிட்டனை விட்டு அகலவில்லை. தேர்தல் பிரசாரத்தில் கூட மக்களின் நேரடிக் கேள்விகளுக்கு, தொழிலாளர் கட்சித் தலைவர்களோ அல்லது கன்சர்வேடிவ் கட்சித் தலைவர்களோ பதிலளிக்க முடியவில்லை. ஆனால், எல்லா துறைகளிலும் இனி வளர்ச்சி இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
தேர்தல் முடிந்த பின், பதவிப் பொறுப்பை ஏற்கும் புதிய அரசு, பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது என்ற கருத்து எழுந்துவிட்டது. இது குறித்து பொருளாதார ஆய்வு நிபுணர்கள் கூறியிருப்பதாவது:இனி செலவினத்தைக் குறைத்து சிக்கனம் என்று ஆளுவோர் பேசுவர். அதில் சம்பள அளவு குறையும், பென்ஷன்தாரர்கள் பாதிக்கப்படுவர், சாலைகள் இனி பளபளப்பாக இருக்காது; குண்டும் குழியாக மாறிவிடும். ரயில்களில் கட்டணம் அதிகரிக்கும். கல்லூரி கட்டணங்கள் அதிகரிக்கும் .இக்கருத்துக்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. அதிக ஜனநாயக சுதந்திரம் உடைய பிரிட்டனில் நடைபெற்ற இத்தேர்தல், மிகவும் வித்தியாசமான தேர்தலாகும்.இன்று ஆட்சி அமைப்பது யார் என்பதும், கட்சிகள் பெற்ற ஓட்டுகளும் தெரிந்துவிடும்.
|
General
|
தலைமறைவான இந்திய பெண் திரும்ப வந்தார்
|
துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்டின் அஜ்மான் பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல், 25 ஆண்டுகளாக தங்கியிருந்த இந்திய பெண் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பெங்களூரை சேர்ந்த பாத்திமா மன்சூர்கான் (60) என்ற பெண் கடந்த 85ம் ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்டிலுள்ள அஜ்மான் பகுதிக்கு வீட்டு வேலை செய்வதற்காக வந்தார். அங்கு எஜமானரின் தொல்லைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். மாஸ்பவுத் என்ற இடத்தில், அக்பர் என்ற பாகிஸ்தானிய நபருடன் இவர் வசித்து வந்துள்ளார்.எந்தவித ஆவணங்களும் இல்லாமலிருந்த இவர், தாயகம் திரும்புவதற்காக இந்திய தூதரகம் உதவியுள்ளது. ஏர் இந்தியா இவருக்கு டிக்கெட் வழங்கியுள்ளது. இதையடுத்து பாத்திமா மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.விரைவில் அவர் பெங்களூரூவிலுள்ள தனது குடும்பத்தினருடன் இணைய உள்ளார்.
|
General
|
வன்னியில் பிரபாகரன் வீடு:புதிய நபர் கேட்கிறார் உரிமை
|
கொழும்பு:விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் வன்னியில் வசித்த வீட்டுக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபர், உரிமை கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் வந்துள்ள செய்தி:விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு சில காலத்துக்கு முன், வன்னியில் விஸ்வமடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். புலிகள் தோற்கடிக்கப்பட்ட உடன், அந்த வீட்டை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. தற்போது அந்த வீடு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், வவுனியாவில் உள்ள முகாமில் வசித்து வரும் ஒரு நபர், பிரபாகரன் வசித்த வீட்டை, தன் வீடு என உரிமை கோரியுள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன், இந்த வீட்டை விடுதலைப் புலிகள் தன்னிடம் இருந்து கட்டாயப்படுத்தி பறித்ததாக தெரிவித்துள்ள அவர், தற்போது அங்குள்ள ராணுவ வீரர்களை வெளியேற்றி விட்டு, வீட்டை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வருகிறார்.புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர், தற்போது சிறைகளில் உள்ளனர். அவர்களிடம் விசாரித்த பின்னர், இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.இருந்தாலும், இந்த செய்தியை ராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.
|
தமிழகம்
|
சொல்கிறார்கள்
|
இளம் சாதனையாளர் நான்! யோகா சாதனையாளர் பரணி ஸ்ரீ: ஏழாவது படிச்சப்ப, பள்ளி விழாவில் ஒரு சிறப்பு விருந்தினர் யோகா பத்தி பேசிட்டு இருந்தார். முதல் வரிசையில உட்கார்ந்திருந்த நான் தூங்கி விழ, "இதோ பாருங்க ஒரு வருங் கால சாதனையாளர் தூங்கிட்டு இருக்காரு'ன்னு நகைச்சுவையுடன் மைக்ல சொல்ல, மொத்த பார்வையாளர்களும் சிரிக்க, அரைத் தூக்கத்துல திடுக்கிட்டு எழுந் தேன். விழா முடிஞ்சதும் அவர்கிட்ட போய், "நீங்க பேசினதை நான் மிஸ் பண்ணிட் டேன்'னு சொல்லி மன்னிப்பு கேட்க, அவரும் யோகா பத்தி தெளிவா விளக்கினார். அதுல இருந்து தான் ஆரம்பமானது என் யோகா பயிற்சி. பத்தாவது படிக்கிறப்ப தான் முதன் முதலா யோகா போட் டியில கலந்துக்கிட் டேன். ஆனா, "பதினெட்டு வயசு ஆகலை'ன்னு சொல்லி, கிட்டத்தட்ட பதினெட்டு போட்டிகள்ல என்னை சேர்த் துக்கல. பிளஸ் 2 முடிச்சப்ப, யோகா மாஸ்டர் ராம் ரகுநாத், "யோகாவுல கண் டிப்பா சாதிக்கணுங்கற எண்ணம் இருக்கா'ன்னு உறுதி மொழி வாங்கிட்டு, என்னை பெங்களூர்ல இருக்கற சுவாமி விவேகானந்தா பல்கலைக் கழகத்துல பி.எஸ்சி., யோகா சேர்த்துவிட்டார். அங்க போன பின் தான், மாவட்டம், மாநிலம், நாடு, உலகம்னு யோகா போட் டிகள்ல தனி முத்திரை பதிச்சேன். தேசிய அளவு வரை வரிசையா கோப்பைகளை ஜெயிச்சிருக்கேன். "இன்டர்நேஷனல் ஹிமாலயன் ஒலிம்பயர்' போட்டியில இரண்டாவது பரிசு; புதுச்சேரியில நடந்த சர்வதேச போட்டியில முதல் பரிசுன்னு வாங்கினேன். கடந்த 2006 - 2007ம் வருடம் யோகாவுக்கான, "யோகினி' விருது வாங்கிய இளம் சாதனையாளர் நான். எதிர்காலத்துல யோகாவுல பிஎச்.டி., முடிச்சுட்டு, எங்க ஊர்ல ஒரு யோகா பள்ளி ஆரம்பிக்கணுங்கறது தான் என் லட்சியம்.
|
தமிழகம்
|
இது உங்கள் இடம்
|
ஊழலின் உச்சம் கேதன் தேசாய்! டாக்டர் எஸ்.எஸ்.அர்த்தநாரி, ராயப் பேட்டை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: இந்திய மருத்துவ கவுன்சில், கவுரவமிக்க அமைப்பு. இதை உருவாக்கிய மேதைகளான, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சி.ராய், டாக்டர் ஏ.எல்., போன்ற சான்றோர்கள், இந்தியாவில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மருத்துவர்களின் தரத்தைப் பாதுகாத்து வந்தனர். ஆனால், காளான் போல முளைத்து வரும் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை வற்றாத அமுத சுரபியாக மாற்றியவர் இந்த கேதன் தேசாய். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லூரிக்கு ஐந்து இடங்கள் என்று, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தார். இதற்கு மேல் தனது கைத்தடிகளை ஆய்வாளராக அனுப்பி, குறைகளை கண்டுபிடிப்பது, இவர் மிரட்டல் தந்திரம். மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை, வகுப்பு அறைகள், கழிவு அறை, லேபரட்டரி, ஆபரேஷன் தியேட்டர், புறநோய்ப்பகுதி என்று பல துறைகளில் இந்த இன்ஸ்பெக்டர்கள் ஆய்வு செய்து, மிரட்டி பணம் பெறுவது, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த தேசாய் 2002ல், பதவி நீக்கம் செய்யப்பட்டு, ஊழலில் சிக்கியவர். அதன் பிறகு வந்த அரசு, இவரை மீண்டும் பதவி அமர்த்தியது. அதன் விளைவு, இப்போது ஊழல் வெளியே வந்து, மன்மோகன் சிங், சோனியா தலையிட்டு, இவர் சி.பி.ஐ., மூலம் பிடிபட்டார். இதற்கு, மன்மோகன் சிங், சோனியாவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இவர் மருத்துவ கவுன்சிலில் தலைவராக இருந்த காலத்தில், தனியார் மருத்துவக் கல்லூரிகளோடு சேர்ந்து, ரஷ்யா, சீனா, ஜெர்மன், ஆஸ்திரேலியா முதலிய நாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களை தடுக்க வழிகண்டவர். அங்கு படித்து வந்தால், கடுமையான, "ஸ்கிரீனிங் டெஸ்ட்' வைத்து, பல ஆயிரக்கணக்கான மாணவர்களை இதில் தோல்வியுறச் செய்து, மேல் நாடு போகாமல் தடுத்தார். இவர்கள் நமது நாட்டில் எந்த விலை கொடுத்தாவது, சீட் வாங்கிடுவர். இதனால், உள்நாட்டு தேவை அதிகமாகும் என்று, ஊழலுக்கு வழிவகுத்து சிண்டிகேட் அமைத்தார். கேதன் தேசாய் விவகாரம், வெளியே தெரியும் ஐஸ் கட்டியில் ஒரு துண்டு தான். இனி முழு ஐஸ்கட்டியையும் உடைக்க வேண்டும் அரசு.
தலைசுற்றும் புள்ளிவிவரம்! ஆர்.சோமு, திருச்சியிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மதுரை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் மற்றும் கும்மிடிபூண்டி ஆகிய பகுதிகளிலும், சமீபத்தில், ஒரே நாளில், அதிகாலை அடுத்தடுத்து நடந்த விபத்துகளில், 19 பேர் பலியாகி உள்ளனர். விபத்துகள் நேர்வதற்கு டிரைவர்களின் அஜாக்கிரதை ஒரு காரணமாக இருந் தாலும், அதுவே முழு காரணமல்ல. சுங்கவரி வசூலிக்கும் சாலைகளைத் தவிர, நாட்டில் உள்ள பல சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட, படு மோசமான நிலையில் உள்ளன. அடுத்து வாகன பராமரிப்பு... பெரும்பாலான வாகனங்கள், குறிப்பாக அரசு வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுவதோ, பழுதுபார்ப்பதோ சுத்தம் செய் வதோ, பரிசோதிப் பதோ கிடையாது. மூன்றாவது, சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் குளறுபடி. நான்காவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது போன்றவை விபத்துகளுக்கு காரணம். கடைசியாக, ஓய்வின்மை... இயந்திரமே ஆனாலும், அதை அவ்வப் போது நிறுத்தி, ஓய்வு கொடுத்து சூட்டைத் தணிக்காவிட்டால், ஒரு கட்டத்தில் இயந்திரம் மொத் தமாக அப்படியே தன் இயக்கத்தை நிறுத்தி விடும். இப்படி விபத்து ஏற்படுவதற்கு பலவித காரணங்கள் இருக்கும்போது, "டிரைவர்களின் அஜாக்கிரதை' என்று, பொத்தாம் பொதுவாக குறை கூறி குற்றம் சாட்டுவது முறையல்ல. ஆனால், மற்ற மாநிலங்களில் இந்தாண்டு இதுவரை நடந்த விபத்துகளில், 2,846 பேர் மாண்டிருக்கின்றனர்; தமிழகத்தில் வெறும் 764 பேர் இறந்திருக்கின்றனர். மற்ற மாநிலங்களில் விபத்துகளால் காயமடைந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 814; தமிழகத்தில் வெறும் 2,432 பேர் மட்டுமே காயமடைந்திருக்கின்றனர். அவர்களும் அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... தமிழகத்தில் நேஷனல் பர்மிட் உள்ள லாரிகளும் ஓடுகின்றன. வட மாநில டிரைவர்கள் ஓட்டிவரும் இவ்வாகனங்கள், தமிழகத்தில் விபத்தில் சிக்கியதாக எப்போதாவது கேள்விப் பட்டதுண்டா?
ஏழைகள் வயிற்றில் பால் வார்க்கும்! கோ.பரங்கிரிநாதன், வசந்த நகர், மதுரையிலிருந்து எழுதுகிறார்: "குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும்போது கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்' என, சட்டசபை தொடர் ஆரம்பிக்கும் போது, கவர்னர் உரையில் கூறியிருந்ததை, "தினமலர்' நாளிதழ் வாயிலாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். என்னைப் போன்று பலரும் மகிழ்வடைந்திருப்பர். இந்நிலையில், இது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது; இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். எனினும், கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்பது போல, "முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத் திட்டம் பொருந்தாது' என, அந்த செய்தியில் உள்ளது; இது பெருத்த ஏமாற்றத்தையும் தருகிறது. எனக்கு ஒரே மகள்; வேறு குழந்தைகள் இல்லை. நானோ, என் மனைவியோ பட்டதாரிகள் இல்லை. அரசு கவுன்சிலிங் மூலம் கடந்தாண்டு, என் மகளை நேரடி இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் சேர்த்து விட்டேன். அக்கம் பக்கம் கடன் வாங்கித்தான் சேர்த்துவிட்டேன். என்னைப் போல் பலரும் கஷ்டப்பட்டுதான், தங்கள் பிள்ளைகளை பொறியியல் பட்டப்படிப்பில் சேர்த்து விட்டுள்ளனர். "ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்' என, அரசு ஆணையில் இருந்திருப்பின், அரசுக்கு கூடுதல் சுமை ஒன்றும் அதிகமிராது; எங்களைப் போன்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. வெளிவந்த அரசு ஆணையில், "ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்' என திருத்தம் செய்து, ஜூன் மாதத்திற்குள் அரசாணை வெளிவந்தால், அது என்னைப் போன்ற பல ஏழைகளின் வயிற்றில் பால் வார்த்ததைப் போல் இருக்கும்.
எப்படி வளரும்? சா.சுயம்பிரகாசம், ஆதம் பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கோவை செம்மொழி மாநாடு நடக்க உள்ள இந்த நேரத்தில், தமிழகம் எங்கும் ஆங்கில பெயர்ப் பலகைகளாகவும், பேச்சில் மக்கள் இங்கிலீஷ் கலந்த தமிழ் பேசுபவர்களாகவும் உள்ளனர். மருத்துவமனை, கல்வி நிலையம், போக்குவரத்து, ரயில், பஸ் நிலையம், வணிக நிறுவனங்கள் அனைத்தும் ஆங்கில மயம் தான். தமிழகத்தில், "தமிழ் வாழ்க' என சொல்லி பயன் என்ன? முதல்வர் தமது திரைப்படத்தை தொடங்கி வைக்கும் போது, "ஆக்ஷன்' என ஆங்கிலம் பேசுகிறார். செய் தியாளர்களிடம் சமயத்தில், "நோ கமென்ட்ஸ்' என்கிறார். எப்படி தமிழ் வளரும்?
|
தமிழகம்
|
தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் எச்சரிக்கை : அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
|
சென்னை : தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட கோவிந்தராஜன் குழு, கட்டணத்தை நேற்று அறிவித்தது. இதை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.
தனியார் பள்ளிகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து அரசு நடவடிக்கை எடுத்தது. குழுத் தலைவர் கோவிந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக பல்வேறு வழக்குகளில், சுப்ரீம் கோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட்டால் வழங்கப் பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள், மாணவர் எண்ணிக்கை, தற்போது வசூல் செய்யும் கட்டணம், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போன்ற விவரங்களை சரிபார்க்க, 200 ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் ஒரு சிறப்பு அலுவலர் மேற்பார்வையில், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித் தனியாக நிர்ணயம் செய்யப் பட வேண்டிய கட்டணம் குறிப்பிடப் பட்டு, ஒவ்வொரு பள்ளியின் விவரமும் குழுவால் பரிசீலிக்கப் பட்டு இறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் அளிக்கப் பட்ட விவரங்களின் அடிப்படையில், அப்பள்ளியின் மொத்த வருமானம் கணக்கிடப்பட்டு, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் சராசரி வருமானம் மற்றும் செலவீனம் கணக்கிடப்பட்டது.
இக்குழுவால் தற்சமயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். பள்ளியின் வளர்ச்சிக்காக, ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தற்போது நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டண விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகளுக்கு, அங்கீகாரத்தை ரத்து செய்ய, அரசுக்கு இந்த குழு பரிந்துரை செய்யும் என்றார். இதற்கிடையே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டசபையில் நேற்று பேசும்போது, "அரசு அமைத்துள்ள குழுவின் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுத்தார்.
பள்ளி கட்டண நிர்ணய ஆணை 2 நாட்களில் அனுப்பப்படும்: தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான உத்தரவு 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என அரசு நியமித்த ஆய்வுக் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோவிந்த ராஜன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, குழுவின் முன் அனுமதியின்றி, மூன்று ஆண்டுகளுக்குள் இடைப் பட்ட காலத்தில் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்ய, பள்ளிகளுக்கு அதிகாரமில்லை. கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட ஆணைகள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, இன்னும் இரண்டு நாட்களில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்பப்படும். அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், தற்போது நிர்ணயம் செய்யப்படும் கட்டணம், பள்ளிக் கல்வித் துறையின், www.pallikalvi.in
|
இந்தியா
|
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசு உறுதி : எதிர்ப்புகளுக்கு இசைந்தார் பிரதமர்
|
ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்கள் பார்லிமென்டில் வலியுறுத்தியதை அடுத்து, இதுகுறித்து நல்ல முடிவை அரசு எடுக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்துள்ளார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக, ஜாதி வாரியாக கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து ஏற்கனவே சில தினங்களுக்கு முன், மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனையும் செய்தது. இந்நிலையில் நேற்று பார்லிமென்டில் இதுகுறித்த விவாதம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசும் போது அவரது பேச்சு தெளிவற்றதாக இருக்கிறதென கூறி, எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின. சிதம்பரம் பேசும் போது, "ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. இதை மத்திய அரசின் புள்ளி விவரக் கணக்கு தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 21 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்துவதில் போதிய அனுபவம் இருக்குமா என்பது தெரியவில்லை. ஏனெனில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அதில் பல்வேறு ஜாதிகள், அதிலும் மாநிலத்திற்கு மாநிலம் வேறு நிலை என்ற பிரச்னை இருக்கிறது. இது குறித்து தெளிவாக தகவல் சேகரிக்க பயிற்சியும் அளிக்கப்படவில்லை. முன்பு 2001ம் ஆண்டு தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது கூட இதே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை எழுப்பப் பட்டது. அதற்கு அந்த அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது ஏன் வலியுறுத்தப்படுகிறது என்பது புரியவில்லை' என்றார்.
இதற்கு பா.ஜ., எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாலு, முலாயம் மற்றும் சரத் யாதவ் ஆகிய மூன்று யாதவ தலைவர்களுமே குரல் எழுப்பினர். இவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க., - பா.ஜ., உள் ளிட்ட கட்சிகளும் சபாநாயகர் இருக்கை அருகே வந்து குரல் எழுப்பியதால், அவையில் பலத்த அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவை 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த இடைவெளியில் மூன்று யாதவ தலைவர்களுமே, அவையில் இருந்த சோனியா, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று பேரிடமும் சென்று வாக்குவாதம் செய்தனர். இவர் களை சமாதானப்படுத்த முயன்றாலும் அவர்களால் முடியவில்லை. ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொள்ளவில்லையெனில், பார்லிமென்டை நடத்த விடமாட்டோம் என்று வாதிட்டனர். பின்னர், மூன்று பேரையும் மன்மோகன் சிங் அழைத்து பேசி சமாதானம் செய்தார். அக்கூட்டத்தில் பா.ஜ.,வின் கோபிநாத் முண்டே மற்றும் ஜனதா தள சரத் யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர். உள்துறை அமைச்சர் சிதம்பரமும் பங்கேற்றார்.
மீண்டும் அவை துவங்கியவுடன் பேச ஆரம்பித்த போது பிரதமர் மன்மோகன் சிங், "ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோருகின்றன. இந்த கோரிக்கை குறித்த அவர்களது உணர்வில் உள்ள நியாயத்தை உணர்கிறேன். விரைவில் மத்திய அமைச்சரவை கூடி இதுகுறித்து நல்ல முடிவை எடுத்து அறிவிக்கும்' என்று கூறினார். பிரதமரின் இந்த வாக்குறுதியை அடுத்து, அவரது இருக்கைக்கே சென்று மூன்று யாதவ தலைவர்களும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். பிரதமர் அளித்துள்ள வாக்குறுதியை அடுத்து, விரைவில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளும் என்று தெரிகிறது. இதன் மூலம் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், முதன்முறையாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத் தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது டில்லி நிருபர் -
|
இந்தியா
|
லோக்சபாவில் அமளியால் 70 மணி நேரம் வீண்
|
புதுடில்லி : பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முடிவுக்கு வந்தது. இரு சபைகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன. அதே நேரத்தில், இரண்டரை மாத காலம் நடந்த இந்தக் கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் 70 மணி நேரம், ராஜ்ய சபாவில் 45 மணி நேரம் என, 115 மணி நேரம் எம்.பி.,க்களின் ரகளையால் வீணானது.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்., 22ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. இந்த கூட்டத்தொடரில் பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் மசோதா உள்ளிட்ட 20 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, ராஜ்ய சபாவில் நிறைவேறிவிட்டாலும், லோக்சபாவில் அது தாக்கல் செய்யப்படவில்லை. வெட்டுத் தீர்மானத்தை முறியடித்து, நிதி மசோதாவை மத்திய அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்தப் பிரச்னையாலும், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முடிவுக்கு வந்தது. இரு சபைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத் தொடர் பற்றி கருத்து தெரிவித்த லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூறியதாவது: விவாதிக்க வேண்டிய விஷயங்களை விட்டு விட்டு, கூச்சல் போட்டு ரகளை செய்யும் உறுப்பினர்கள் மற்றும் பல நாட்கள் சபை செயல்படாதது குறித்து நாடு கவலைப்படுகிறது. நம் நாட்டின் உயர்ந்த புகழுக்கு சின்னமாக விளங்கும் இந்த சபையில், இது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு என்ன காரணம் என்பதை ஆராய வேண்டும். கேள்வி நேரத்தை தற்போதுள்ள 11 மணியிலிருந்து மாற்றுவது குறித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பேசுவேன். இவ்வாறு மீரா குமார் கூறினார்.
கவுரவம் குறைந்தது: ராஜ்ய சபா தலைவர் அமீது அன்சாரி கூறுகையில், ""பொதுமக்களின் பார்வையில் சபையின் கவுரவம் குறைந்துள்ளது கவலை அளிக்கிறது. மொத்தம் நடந்த 31 அமர்வுகளில், 13 அமர்வுகளின் போது கேள்வி நேரத்தை நடத்த முடியவில்லை. உறுப்பினர்களின் அமளியால், சபையை நடத்துவதற்கான விதிமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன,'' என்றார். பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறுகையில், ""உறுப்பினர்களின் கூச்சல் குழப்பத்தால் லோக்சபாவில் 70 மணி நேரம், ராஜ்ய சபாவில் 45 மணி நேரம் என மொத்தம் 115 மணி நேரம் வீணானது,'' என்றார்.
|
தமிழகம்
|
இன்ஜி., மாணவர் மீது தாக்குதல் : போலீஸ் முன் ரவுடி கும்பல் நடத்திய களேபரம்
|
கோவையில், போலீஸ் முன்னிலையிலேயே இன்ஜி., மாணவர் மீது, ரவுடிக் கும்பல் கொலை வெறி தாக்குதல்நடத்தியது. சம்பவ இடத்திலிருந்த போலீஸ்காரர், அவசர உதவி கோரி போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட போது, "எல்லை பிரச்னையை' காரணம் காட்டி, உதவி மறுக்கப் பட்டது. அதன் பின் நிகழ்ந்த களேபரமும், போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களும், போலீஸ் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைகுலையச் செய்துள்ளன.
கோவை நகரில், மகாளிபாளையம் ரோட்டிலுள்ள "டாஸ்மாக்' மதுக்கடை பாரில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, 50க்கும் மேற்பட்டோர் போதை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஒரு கும்பல், திடீரென அருகிலிருந்த வாலிபரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கத் துவங்கியதும், பலரும் அலறியடித்து ஓடினர். தாக்குதலுக்குள்ளான வாலிபர் உயிர் தப்ப, மகாளிபாளையம் ரோட்டில் அரை கி.மீ., தொலைவுக்கு ஓட, விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் மரக் கட்டை, கற்களால் மூர்க்கத்தனமாக தாக்கியது. அதிர்ச்சியடைந்த சிலர், போலீஸ் "கன்ட்ரோல் ரூமுக்கு' போனில் தெரிவித்ததும், அடுத்த 15வது நிமிடத்தில் ரமேஷ் என்ற போலீஸ்காரர் ரோந்து பைக்கில் வந்தார். சுற்றி நின்றிருந்த கும்பல், அப்போதும் தாக்கிக் கொண்டே இருந்தது. கும்பலை தடுக்க முயன்ற போலீஸ்காரர் ரமேஷ் தள்ளப்பட்டு, அவரிடம் இருந்த "வாக்கி-டாக்கி'யும், மொபைல் போனும் தவறி கீழே விழுந்தது.
பதட்டமடைந்த போலீஸ்காரர், "வாக்கி-டாக்கி'யை தேடி எடுத்து கன்ட்ரோல் ரூம் போலீசாரை தொடர்பு கொள்ள முயன்ற போது, அது இயங்கவில்லை. அருகிலிருந்த ஒருவர் தனது மொபைல் போனை போலீஸ்காரரிடம் கொடுத்தார். பீளமேடு போலீஸ் ஸ்டேஷனை போனில் தொடர்பு கொண்ட போலீஸ்காரர் ரமேஷ், உதவிக்கு போலீசாரை அழைத்தார். மறுமுனையில் பேசிய போலீஸ்காரர், "அது எங்க "லிமிட்' இல்லை; நீ சிங்காநல்லூர் போலீசுக்கு போன் போடு...' எனக் கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார். மறுபடியும் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்த போலீஸ்காரர்விஷயத்தை சொல்ல, அடுத்த நிமிடமே "ஒயர்லெஸ்' தகவல் பரிமாற்றம் அலறியது. அதன் பிறகும் கூட அப்பகுதிக்கான இரவு ரோந்துப்பணி உதவி கமிஷனர் முத்துராஜ் மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை. எல்லாம் முடிந்து அரை மணி நேரம் கழித்து, பீளமேடு எஸ்.ஐ., முத்துசாமியும், சிங்காநல்லூர் பெண் எஸ்.ஐ., பிரபாவதியும் சம்பவ இடத்துக்கு, "சினிமா போலீசாக' கடைசியில் வந்தனர்.
அதற்குள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரின் தந்தை, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார்; அவர், ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் வந்த பிறகு தான், அடிபட்ட வாலிபர் சி.ஐ.டி., கல்லூரியில் பி.இ., இறுதியாண்டு படிக்கும் பிரகாஷ்(19) என்பது தெரிய வந்தது. தனது மகன் உயிருக்கு போராடுவதைக் கண்ட தந்தை, போலீசிடம் வாக்குவாதம் செய்து மகனை காப்பாற்ற கெஞ்சினார். ஆத்திரமடைந்த போலீசார், அவரை கழுத்தைப் பிடித்து தள்ளி ஜீப்பில் ஏற்றினர்; தாக்குதலில் ஈடுபட்டவர்கள், "ஹாயாக' அருகிலேயே நின்றிருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், போலீசுடன் வாக்குவாதம் செய்தனர். அதன் பின் வேறு வழியில்லாமல், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த சிலரையும் போலீசார் ஜீப்பில் ஏற்றினர். அப்போது, சிங்காநல்லூர் எஸ்.ஐ., பிரபாவதியுடன் மொபைல் போனில் பேசிய இரவு ரோந்து இன்ஸ்பெக்டர், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலின் தலைவனை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். அடுத்த வினாடியே ஜீப்பில் இருந்த தாக்குதல் கும்பல் விடுவிக்க பட்டது; இத்தனையும், பலரது சாட்சியாகவே அரங்கேறியது.
தாக்கிய நபர்களை விடுவித்தது தொடர்பாக அங்கிருந்த சிலர் போலீசிடம் கேள்வி எழுப்ப, "அவர்கள் எங்கே போய் விடுவர்; காலையில் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரிக்கிறோம்' என "பொறுப்புடன்' பதிலளித்துள்ளார் பெண் எஸ்.ஐ. இத்தனையும் நடக்கும் வரை, அடிபட்ட நபர் உயிருக்கு போராடியபடியே தரையில் சரிந்து கிடந்தார். அருகிலிருந்தோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதை தடுத்த ஒரு எஸ்.ஐ., அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறு மிரட்டல் தொணியில் கூறினார் (அரசு மருத்துவமனையில் சேர்த்தால், வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்பதால்). அவ்வாறே அந்த வாலிபர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், பின்னர் அவர் பீளமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். இவ்வளவுக்கு பிறகும் நேற்று மதியம் வரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இச்சம்பவம் குறித்து, கமிஷனர் அலுவலக அதிகாரிகளுக்கு கூட தகவல் தெரிவிக்கப்படாதது ஆச்சரியமளிக்கிறது.
|
தமிழகம்
|
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் பெரிய கிரிமினல்களுக்கு நிம்மதி
|
குற்றம் சாட்டப்பட்டவர் களின் அனுமதியில்லாமல் அவர் களிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் களிடம், மூளை வரைப்பட சோதனை (ப்ரைன் மேப்பிங்) பாலி கிராப், நார்கோ அனாலிசிஸ் போன்ற உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப் பட்ட மனுவின் பேரில், "இதுபோன்ற சோதனைகளை குற்றம் சாட்டப்பட்டவரின் அனுமதியில்லாமல் நடத்தக்கூடாது' என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால், பல்வேறு வழக்கில் சிக்கியுள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஆந்திராவில் "சத்யம்' கம்ப்யூட்டர் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் "உடல்நிலை சரியில்லை' என, சொகுசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறி, ஓய்வெடுத்து வருகிறார். இவரிடம் உண்மை கண்டறியும் சோதனைகளை மேற் கொள்வதற்காக சி.பி.ஐ., ஆந்திர ஐகோர்ட்டில் மனு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேர் வெவ்வேறு விதமாக கருத்து கூறியதால், மூன்றாவது நீதிபதியின் கருத்துக் காக இந்த வழக்கு காத்திருக் கிறது.
கோபால் ரெட்டி என்ற நீதிபதி, "உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கூடாது' என கூறினார். கோவிந்தராஜுலு என்ற நீதிபதி, "தேவைப்பட்டால் உண்மை கண்டறியும் சோத னையை சி.பி.ஐ., மேற்கொள்ளலாம்' என கூறினார். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட் ராமலிங்க ராஜுவுக்கு சாதகமான வகையில் தீர்ப்பு கூறியுள்ளது. ராமலிங்க ராஜு உள்ளிட்ட 50 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. "க்ருஷி' என்ற திட்டத்தில், 32 கோடி ரூபாய் ஊழல் செய்த, வெங்கடேஸ்வரராவ் மூன்றாண்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, இவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். விஜயவாடாவில் ஏழு வயது சிறுமி நாக வைஷ்ணவியை கொலை செய்தவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக, போலீசார் ஆமதாபாத் சென்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் இந்த விசாரணையில், பின்னடைவு ஏற் படும் சூழல் உருவாகியுள்ளது.
ஆந்திர பிரதேச தடய அறிவியல் ஆய்வக முன்னாள் இயக் குனர் கே.பி.சி.காந்தி குறிப் பிடுகையில், "பாலி கிராப், நார்கோ அனாலிசிஸ் போன்ற சோதனைகள் அறிவியல் சாராதவை. மனித தன்மைக்கு முரணானவை, சட்டத்துக்கு புறம்பானவை. எனவே, சுப்ரீம் கோட்டின் தீர்ப்பு வரவேற்கதக்கது தான்' என்றார். ஆனால், முத்திரைத்தாள் தெல்கி போன்றவர்கள் எத்தனை சோதனை நடத்தினாலும், உண்மையை முழுவதும் கண் டறிய முடியாத நிலை ஏற்பட் டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, இனி போலீசார் முன்பு போல கொடுமையான சித்ரவதை முறைகளைப் பின்பற்றினால், தான் ஓரளவு உண்மைகளை கொண்டு வரமுடியும் என்ற கருத்தும் பேசப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
|
General
|
மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுடன் சதிகாரன் ஷசாத்திற்கு அதிக தொடர்பு
|
லண்டன்:அமெரிக்காவின் நியூயார்க் டைம் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்த ஷசாத், மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவர்களுடன் தொடர்புடையவன் எனக் கூறப்படுகிறது.அமெரிக்காவின் நியூயார்க் டைம் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்து விட்டு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற பைசல் ஷசாத் என்ற பாகிஸ் தானியரை, எப்.பி.ஐ., போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காரில் இருந்த குண்டு வெடிக்கும் முன்பாகவே செயலிழக்கச் செய்யப் பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
நியூயார்க் சதுக்கத்தில் குண்டு வைப்பதற்கு முன் னதாக ஷசாத், பாகிஸ்தானில் ஐந்து மாதம் பயங்கரவாத பயிற்சி பெற்றுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளான்.தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் -இ- முகமது அமைப்புடன் ஷசாத்துக்கு நெருங்கிய தொடர்பு இருந் துள்ளது. இந்த அமைப் பைச் சேர்ந்த ஏழு பேரை, ஷசாத்துடன் தொடர்புடையவர் கள் என்பதால் பாகிஸ் தான் கைது செய்துள்ளது."மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த பாகிஸ் தான் நபர், ஷசாத்தின் பள்ளிக்கூட நண்பர்' என அமெரிக்காவின் ஏ.பி.சி., செய்தி தெரிவித்துள்ளது. எனினும், அந்த பாகிஸ் தான் நபரின் பெயரை அமெரிக்கா வெளியிடவில்லை.நேபாளத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது, இந்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த மசூத் அசார் என்ற பயங்கரவாதியை மத்திய அரசு விடுவித்தது.
இதைத் தொடர்ந்து, இந்திய பயணிகளை ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் விடுவித்தனர்.தற்போது பாகிஸ்தானில் மசூத் அசார் கட்டுப் பாட்டில் இயங்கும் மசூதிக்கு, ஷசாத் சமீபத்தில் சென்று வந்துள்ளான் எனவும் ஏ.பி.சி., செய்தி தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் எல்லையில் தலிபான்களை ஒழிக்க, ஆளில்லாத விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்து தான், டைம் சதுக்கத்தில் குண்டு வைத்ததாக ஷசாத் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஏ.பி.சி., செய்தி தெரிவிக்கிறது.
|
தமிழகம்
|
கேண்டீன் அருகே ஒதுங்கியவருக்கு உதை : ரத்தம் சொட்ட பஸ்சில் பயணித்த அவலம்
|
திருநெல்வேலி : சாத்தூர் அருகே கேண்டீனில் வனத்துறை அதிகாரி ஒருவருக்கு அடி உதை விழுந்ததில், ரத்தம் சொட்ட சொட்ட அவர் பயணத்தை தொடர்ந்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சாத்தூர் அருகே ஒரு கேண்டீனில் நின்றது. அதிக பஸ்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததால் கூட்டம் இருந்தது. ஆண் பயணிகள் சிலர் கேண்டீனில் உள்ள கழிவறையை பயன்படுத்தாமல் ரோட்டோரமாக சிறுநீர் கழித்துள்ளனர். ரோட்டோரமாக சிறுநீர் கழிப்பதால் வருமானம் பாதிக்கப்படுவதால் அதற்காக கையில் கம்போடு நிற்கும் அடியாள் நேற்று பயணி ஒருவரை தாக்கியுள்ளார். தலையில் பயணிக்கு காயம்பட்டதால் சக பயணிகள் பரபரப்படைந்தனர். காயம்பட்ட நபர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த எஸ். கருணாநிதி(44). கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றுகிறார்.
சொந்த ஊருக்கு செல்லும் போது இச்சம்பவம் நடந்தது. இருப்பினும் சிகிச்சையளிக்க வாய்ப்பில்லாமல் பஸ் கிளம்பியது. அந்த பஸ்சிலும் முதலுதவி உபகரணங்கள் எதுவும் இல்லாததால் அவர் ரத்தம் சொட்ட சொட்ட பஸ்சில் பயணித்தார். பஸ்சில் சென்ற சக பயணி ஒருவர், இதுகுறித்து நமக்கு தகவல் தெரிவித்தார். நாமும் சென்னையில் உள்ள அரசு விரைவு பஸ் கட்டுப்பாட்டுஅறை, அரசு விரைவு பஸ் 24 மணிநேர குறைதீர்க்கும் பிரிவு ஆகியவற்றிற்கு தகவல் தெரிவித்தோம். சென்னை அதிகாரிகள் உடனடியாக அந்த பஸ் டிரைவர், கண்டக்டரை தொடர்புகொண்டனர். இரவில் 12மணியளவில் மதுரையில் அந்த பயணிக்கு சிகிச்சைஅளிக்க ஆலோசனை கூறியதாகவும், சம்பந்தப்பட்டபயணி குடிபோதையில் இருப்பதாகவும் கூடுதல் தகவல் தெரிவித்தனர். தனியார் மோட்டல்கள் குறித்து அண்மையில் சட்டசபையிலும் விவாதம் நடந்தது. கழிப்பறைகள் மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படுகிறதே என்பதற்காக பயணிகளை ஆயுதங்களால் தாக்கும் விபரீதத்தை எப்படி பொறுத்துக் கொள்வது..!
|
General
|
ரோகித் சர்மா துணிச்சல் ஆட்டம் : இந்தியா போராடி தோல்வி
|
பார்படாஸ் : ஒன்மேன் ஆர்மியாக ரோகித் சர்மா துணிச்சலுடன் போராட, ஆஸி.,க்கெதிரான உலக கோப்பை டுவென்டி-20 சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 3வது உலக கோப்பை டுவென்டி-20 போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 8 ஆட்டங்கள் நடந்து வருகின்றன. பார்படாசில் நடந்த சூப்பர் 8 போட்டி ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்தியா, ஆஸி.,யை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஆஸி., அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், வார்னரும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அடித்து ஆட ஆரம்பித்த அந்த ஜோடியை பிரிக்க இந்திய அணியினர் எடுத்த முயற்சி வீணானது. பந்துவீச்சுக்கு சாதகமானது என்று கருதப்பட்ட மைதானத்தில் அந்த ஜோடியின் ஆட்டம் இந்திய வீரர்களை திகைக்க வைத்தது. முதல் விக்கெட்டுக்கு 104 ரன்களை குவித்த அந்த ஜோடியை பதான் பிரித்தார். வாட்சன் 54 ரன்களையும், வார்னர் 72 ரன்களையும் எடுத்து ஆஸி., அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து ஹாடின் 8 ரன்களுக்கும், ஹசி 35 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸி., நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. இந்திய தரப்பில் நெஹ்ரா மற்றும் யுவராஜ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியினர், களத்தில் நிற்பதைக்காட்டிலும், பெவிலியனுக்கு திரும்புவதில் அதிக ஆர்வம் காட்டியது போல் விளையாடினர். விஜய் 2, காம்பிர் 9, ரெய்னா 5, யுவராஜ் 1, தோனி 2, பதான் 1, ஜடேஜா 4 என ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெகுவிரைவாக பெவிலியன் திரும்பினர். இறுதியில் ரோகித் சர்மா மட்டும் துணிச்சலுடன் விளையாடினார். ஆஸி., பந்து வீச்சை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் சிதறடித்த அவர், 46 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார். இறுதியில் இந்திய அணி, 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
|
தமிழகம்
|
கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய பிற்பட்டோர் நல அதிகாரி கைது
|
தேனி:கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய, தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெகதீசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், போடியை சேர்ந்த விவசாயி அமர்நாத் (60). இவர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில், 50 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் பெற மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெகதீசனிடம் (56) விண்ணப்பித்தார்.
இந்த கடன் அனுமதி வழங்க, 10 ஆயிரம் ரூபாயை ஜெகதீசன் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து அமர்நாத், தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். தேனி என்.ஆர்.டி., நகரில் அவர் தங்கியிருந்த அறைக்கு, நேற்று காலை சென்ற அமர்நாத்,வேதிப்பொருள் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெதீசனிடம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
அறையை சோதனையிட்ட போலீசார், 4.75 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். இதில் கணக்கு காண்பிக்கப்பட்ட, 2.25 லட்சம் ரூபாயை அவரிடம் போலீசார்திருப்பி கொடுத்தனர். கணக்கில் காட்டப்படாத 2.50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். தான், இருதய நோயாளி என அவர் கூறியதால், போலீசார் அவரை தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
|
தமிழகம்
|
கோவை அருகே கார் - லாரி மோதல் இரு பெண்கள் உள்பட 5 பேர் பலி
|
கோவை:திருப்பதிக்கு சென்று விட்டு, கேரளா திரும்பிய கார் மீது லாரி மோதியதில் இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், சம்பவ இடத்திலேயே இறந்தனர்.எர்ணாகுளம் மாவட்டம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர்கள் மூன்று கார்களில் இரு நாட்களுக்கு முன் திருப்பதி சென்றனர். சுவாமி தரிசனத்துக்குப் பின் நேற்று அதிகாலை கேரளா திரும்பிக் கொண்டிருந்தனர்.கோவை அருகே, இவர்கள் பயணம் செய்த மூன்று கார்களில் இரண்டு கார்கள் கடந்து சென்ற நிலையில், ஹூண்டாய் கார், பாலக்காடு ரோட்டில், நவக்கரை நந்தி கோவில் முன்பாக சென்று கொண்டிருந்தது.
முன்னால் சென்ற டெம்போ டிராவலரை கார் முந்த முயன்றது. அப்போது எதிரே, திருச்சூரில் இருந்து சென்னைக்கு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் லோடு ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.இதில், காரின் முன்பக்கம் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ரமேஷ்(49), நிஷாந்த்(29), கமலவேணி(59), ஆயிஷா(56), இவரது கணவர் ரகுநந்தன்(61) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
க.க.சாவடி போலீசார், லாரி டிரைவர் முருகனை கைது செய்தனர்.இரண்டு கார்களில் முன்னே சென்ற உறவினர்கள் விபத்து பற்றிதகவல் அறிந்து, மீண்டும் சம்பவ இடத்துக்கு திரும்பினர். போலீசார், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
|
தமிழகம்
|
வங்கியினுள் ஊழியர் தீக்குளித்து தற்கொலை
|
நாமக்கல்:நாமக்கல் கார்ப்பரேஷன் வங்கியின் உள்ளே, ஊழியர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் மாவட்டம் குளியம்பாறையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (27). இவர், நாமக்கலில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில், வேளாண் பிரிவில் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை 9 மணிக்கு வங்கிக்கு வந்த கார்த்திகே யன், மாடியில் உள்ள கழிவறைக்கு சென்று, அங்கிருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம்கேட்டு,வங்கியின் கீழ் தளத்தில் இருந்தவர்கள் மேலே ஓடினர்.கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், அவரை காப்பாற்ற இயலவில்லை. சிறிது நேரத்தில் கார்த்திகேயன் துடிதுடித்து உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
|
தமிழகம்
|
ஊட்டி மலைப்பாதையில் தீப்பிடித்த வேன்
|
குன்னூர்:ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வேன் தீப்பிடித்து எரிந்தது; வேனில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். இச்சம்பவத்தால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன்(65). இவர், தனது உறவினர்கள் 10 பேருடன், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் டெம்போ டிராவலரில் நேற்று காலை ஊட்டிக்கு சுற்றுலா வந்தார்.
குன்னூரில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் மரப்பாலம் அருகே வேன் வந்த போது, வேனிலிருந்து கருகிய வாடை வீசியுள்ளது. இதனால், வேனில் இருந்தவர்கள் அவசரமாக இறங்கினர்; சிறிது நேரத்தில் வேன் தீப்பிடித்து எரியத் துவங்கியது. வேனில் வந்தவர்கள், தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதை பார்த்ததும், ரோட்டின் இருபுறமும் வந்த வாகனங்கள் பாதுகாப்புடன் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. வெலிங்டன் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்பு ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆனால், விபத்து நடந்த பகுதியில் இருந்து மூன்று கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், தீயணைப்புத் துறை வாகனம் உடனடியாக சம்பவ இடத்துக்கு போக முடியவில்லை. ஒரு வழியாக அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.
தீயில் எரிந்த வாகனத்தை, கயிற்றின் மூலம் கட்டி இழுத்து ஓரமாக நிறுத்தினர். இதன்பின், மலைப்பாதையில் போக்குவரத்து துவங்கி யது. போலீசார் கூறுகையில், சுற்றுலா வந்த வேன் பேட்டரி ஒயர் கழன்றதால், அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றனர்.
|
தமிழகம்
|
மரக்காணம் அருகே அனல் மின் நிலையம் கிராம மக்கள் எதிர்ப்பால் பணிகள் பாதிப்பு
|
திண்டிவனம்:மரக்காணம் அருகே அமையவுள்ள அனல் மின் நிலையத்திற்காக மண் பரிசோதனை செய்வதற்கு, நடுக்குப்பம் கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 5,000 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதில், 500 ஏக்கர் மட்டுமே அரசு புறம்போக்கு நிலம்; மீதியுள்ள 4,500 ஏக்கர் நிலம் பொதுமக்களிடமிருந்து தான் பெறப்பட வேண்டும்.
இந்த நிலங்கள், மரக்காணம் அடுத்த நடுக்குப்பம், ஓமிப்பேர், அடசல், புதுப்பாக்கம், கந்தாடு, குரும்பரம், ஆலத்தூர், வடகோட்டிப்பாக்கம், சிறுவாடி, கொளத்தூர் ஆகிய கிராமங்களில் நிலம் எடுக்க உள்ளனர்.அனல் மின் நிலையம் அமைப்பதற்காக மத்திய அரசின் டில்லி நேஷனல் பவர் டெர்மினல் கார்ப்பரேஷன் நிறுவனத்தினர், மண் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிறுவனத்தினர் 4,000 ஏக்கர் நிலத்தில் மண் பரிசோதனையை நடத்தி முடித்துள்ளனர். இறுதியில் 1,063 ஏக்கர் நிலம் உள்ள நடுக்குப்பம் கிராமத்தில் மண் பரிசோதனை செய்ய முயன்றபோது, பொதுமக்கள் சிலர் மண் பரிசோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தடுத்தனர். இக்கிராமத்தினர், அரசு சார்பில் தங்கள் நிலத்திற்கு நிர்ணயிக்கப்படவுள்ள கிரைய விலையை முன்னதாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நடுக்குப்பம் கிராமத்தில் மண் பரிசோதனை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அனல் மின் நிலைய பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்கூட்டியேவிலை நிர்ணயம்:நடுக்குப்பம் கிராமத்தில் ஒரு ஏக்கர் 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதற்கு குறைவில்லாமல் விலை நிர்ணயிப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினால், அரசிடம் நிலத்தை ஒப்படைப்பதில் ஆட்சேபனையில்லை என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். நிலத்தை அரசு கையகப்படுத்திய பின்னர், குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக கிராம பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
|
தமிழகம்
|
நெல்லையில் கொட்டித்தீர்த்தது கோடை மழை
|
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் பகலில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலுக்கு மாற்றாக மாலையில் கோடை மழை கொட்டித்தீர்த்தது. இடி, மின்னலுடன் மாலை 5.30 மணிஅளவில் துவங்கிய மழை, ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்தது. நெல்லை மாநகர பகுதியில் பெய்த மழையினால் ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாலையில் துண்டிக்கப் பட்ட மின்சார சப்ளை சகஜ நிலைக்கு திரும்ப இரவு ஆனது.
|
தமிழகம்
|
சுற்றுலா பயணிகளுடன் போலீஸ்காரர் மோதல்
|
கூடலூர்:ஊசிமலை அருகே, புதுச்சேரி சுற்றுலா பயணிகளுடன் மோதிய போலீஸ்காரரால், ஊட்டி - மைசூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.புதுச்சேரியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ், நேற்று மைசூரில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டி நோக்கி சென்றது. கூடலூர்-ஊட்டி சாலை ஊசிமலை அருகே சுற்றுலா பஸ் சென்றபோது, எதிரே ஊட்டியில் இருந்து கர்நாடகாவை சேர்ந்த தனியார் பஸ் வந்தது.
வழி விடுவதில் இரண்டு பஸ் டிரைவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.ஊட்டியில் இருந்து வந்த பஸ்சில் பயணித்த போலீஸ்காரர் ஒருவர், புதுச்சேரி சுற்றுலா பஸ் டிரைவரை தாக்கினார். சீருடையின்றி, குடிபோதையில் இருந்த போலீஸ்காரரை, சுற்றுலா பயணிகள் தட்டிக்கேட்டனர். அவர்களையும் போலீஸ்காரர் தாக்கினார். பதிலுக்கு சுற்றுலா பயணிகளும் அவரை தாக்கினர்.
தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார், அங்கு வந்து சுற்றுலா பயணிகளிடமிருந்து போலீஸ்காரரை காப்பாற்றி ஜீப்பில் அமர வைத்தனர். அதை கண்டித்த சுற்றுலா பயணிகள், போலீஸ் ஜீப்பை முற்றுகையிட்டனர். இப்பிரச்னையால், அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர் டி.எஸ்.பி., குமரேசன், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போக்குவரத்து சீரானது. போலீசார் விசாரிக்கின்றனர்.
|
தமிழகம்
|
சிறையில் மொபைல் பயன்படுத்துவதில் தகராறு கூர்மையான ஆயுதத்தால் கைதி மீது தாக்குதல்
|
செங்குன்றம்:மொபைல் போனை பயன்படுத்துவதில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, திருட்டு வழக்கில் சிக்கிய கைதி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார். சென்னை அடுத்த பொன்னேரி எம்.ஜி.ஆர்., நகர், பேரக்ஸ் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் (29). இவர் 2006ல் திருட்டு வழக்கு தொடர்பாக மாமல்லபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.சென்னை கொடுங்கையூர் வெங்கடேசா நகரை சேர்ந்த சுந்தர் என்கிற அசோக் (27) என்பவரும், திருட்டு வழக்கு தொடர்பாக அம்பத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.
அவர்கள் இவரும் புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.நேற்று முன் தினம் இரவு சிறையின் ஒரு பகுதியில் பொன் முருகன், மொபைல் போனில் யாருடனோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற அசோக் "நானும் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும். மொபைல் போனை கொடு' என்றார். அதற்கு பொன்முருகன் மறுத்தார். மொபைல் போனை கொடுக்கவில்லை என்றால் சிறை அதிகாரிகளிடம் போட்டு கொடுப்பேன் என்றார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முரளி மற்றும் கவியரசு என்கிற கைதிகள், அசோக்கிற்கு ஆதரவாக பொன்முருகனிடம் தகராறு செய்தனர். இதையடுத்து அவர்கள் மூவரும் பொன் முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். அங்கிருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால், பொன்முருகனை மார்பில் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சிறை அதிகாரிகள், பொன்முருகனை சிகிச்சைக்காக சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் வைத்திருந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகள் மோதல் சம்பவம் குறித்து ஜெயிலர் இளவரசன் புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மொபைல் போன் ரகசியம்:சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் தொடர்ந்து மொபைல்போன் பறிமுதல் செய்யப்படுகிறது. சிறைக்காவலர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டாலும் மீண்டும், மீண்டும் மொபைல் போன்களின் ரகசிய பயன்பாடு நீடிக்கிறது. கடந்த மாதம் 28ம் தேதி இரவு காமினி என்கிற ராஜமதுர காஜி பிரியங்க ரணசிங்கே (44) என்ற இலங்கை கைதியிடமும், கடந்த 2ம் தேதி கோட்டை காளி முத்துசாமி (38) என்ற கைதியிடமும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியவர்கள். விஜிலன்ஸ் போலீசார் திடீர் அதிரடி ரெய்டு நடத்தினால், மேலும் பல மொபைல் போன்கள் மற்றும் காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய பயங்கர ஆயுதங்களும் சிக்கும் என்று கூறப்படுகிறது.
|
தமிழகம்
|
அண்ணன், தம்பி படுகொலை பின்னணி
|
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, முன்விரோதத்தில் அண்ணன், தம்பியை படுகொலை செய்தவர்களை, மூன்று தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் மேலசாத்தான்குளம், பேச்சிமுத்து மகன்கள் மணிகண்டன் (28), ஹரிகோவிந்தன் (25) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, அவர்களது தச்சுப்பட்டறையில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.
போலீசார் கூறியதாவது:சபரிமலைக்கு செல்வது தொடர்பாக, கொலை செய்யப்பட்டவர் களுக்கும், அதே ஊரைச் சேர்ந்த மணிரத்தினத்திற்கும் பிரச்னை இருந்து வந்தது. அதன் காரணமாக, கடந்த ஆண்டு டிச.,7ம் தேதி ஹரிகோவிந்தனை, மணிரத்தினம் அரிவாளால் வெட்டினார். அந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. இந்நிலையில், கொலையுண்ட மணிகண்டன் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்ததால், மணிரத்தினம் தரப்பினர் அவரை கண்டித்தனர்.
இந்த பின்னணியில், சாத்தான்குளம் அண்ணாநகர் சுப்பிரமணியன், மணிரத்தினம் ஆகியோர் கூட்டாளிகளுடன் சேர்ந்து மணிகண்டன், ஹரிகோவிந்தனை வெட்டிக் கொலை செய்து தப்பியோடி விட்டனர்.இவ்வாறு போலீசார் கூறினர். கொலையாளிகளை, மூன்று தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.
|
தமிழகம்
|
மாமல்லபுரம் அருகே மூன்று கார்கள் மோதல் சினிமா போட்டோ கிராபர் உட்பட இருவர் பலி
|
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அருகே மூன்று கார்கள் ஒன்றுக்குடன் ஒன்று மோதிக் கொண்டதில் சினிமா போட்டோ கிராபர் உட்பட மூன்று பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் கோபிநாத்(40). சினிமா போட்டோகிராபர். இவர் நேற்று மாலை மாருதி எஸ்டீம் காரில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன், மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்றார்.
மாலை 5.15 மணிக்கு தெற்குபட்டு கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த டவேரா செவர்லெட் கார், மாருதி எஸ்டீம் கார் மீது நேருக்கு நேர் மோதியது. டவேரா மீது, பின்னால் வந்த பொலீரோ கார் மோதியது.இவ்விபத்தில் மாருதி எஸ்டீம் காரில் வந்த கோபிநாத், இளம் பெண் ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். பெண் குறித்த விபரம் தெரியவில்லை.
செவர் லெட் காரில் வந்த ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவ் விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
|
தமிழகம்
|
வாஸ்து மீன்கள் விமானத்தில் கடத்தல்
|
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு ஏர்- இந் தியா விமானம் வந்தது. இதில் பயணிகளின் உடமைகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது(40), கனி (35) ஆகியோர் கொண்டு வந்த சூட்கேஸ்களை சோதனையிட்ட போது, அதில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாஸ்து மீன்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.அவர்கள் இருவருக்கும் அபராதம் விதிக்கப் பட்டது. அந்த வாஸ்து மீன்கள் நேற்று மாலை சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
|
தமிழகம்
|
நில மோசடி கும்பல் வங்கி கணக்கு முடக்கம் காஞ்சிபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை
|
காஞ்சிபுரம்:சென்னை மற்றும் பெங்களூரில், அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டு மனையை, குறைந்த விலையில் தருவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த பெங்களூரு வாலிபரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. பெங்களூரைச் சேர்ந்தவர் வெங்கட் கவுதம்(35). இவர், டாபடைல்ஸ் என்ற பெயரில் வீட்டு மனைப் பிரிவு விற்பனையைத் துவக்கினார். இவரது அலுவலகத்தில் கிறிஸ்டோபர், ராஜேந்திரன், சரண்யா, ஜான், பாபு, நெல்சன், கெலின்ராஜ் ஆகியோர் பணிபுரிந்தனர்.
இவர்களில் சிலர், பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். நீச்சல் குளம், பள்ளி, கோவில், சர்ச், மசூதி, பூங்கா உட்பட அனைத்து வசதிகளையும் கொண்ட பகுதியில், வீட்டு மனை குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது என, விளம்பரம் செய்தனர். முன் தொகையாக, குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தனர். ஏராளமானோர் பணம் செலுத்தினர்.அதன் பின், சென்னை அசோக் நகரில் கிளை துவக்கினர். காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் கிராமத்தில், வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்தனர்.
அதை நம்பி, ஓய்வு பெற்ற விஞ்ஞானி, கம்ப்யூட்டர் இன்ஜினியர், பத்திரிகை நிருபர் உட்பட ஏராளமானோர், முன் தொகையாக லட்சக்கணக்கான ரூபாய் செலுத்தினர். அவர்களுக்கும் வீட்டுமனை வழங்கப்படவில்லை. பணத்தை திரும்ப கேட்டவர்களுக்கு பணமும் வழங்கப்படவில்லை.ஏமாந்த 20 பேர், 50 லட்சம் ரூபாய் ஏமாந்துள்ளதாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
பெங்களூரு பகுதியைச் சேர்ந்த 54 பேர், கோடிக்கணக்கான ரூபாய் ஏமாந்ததாக, பெங்களூரு அடுத்த ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து, மோசடி கும்பல் தலைமறைவானது.காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், நேற்று முன்தினம் வெங்கட் கவுதம் தரப்பைச் சேர்ந்த ஜான், பாபு, நெல்சன், கேலின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்; மற்றவர்களை தேடி வருகின்றனர்.மோசடி கும்பல் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் கூறியதாவது:இக்கும்பல், புதிதாக ஊட்டியில் வீட்டு மனை விற்பனைப் பிரிவை துவக்கியுள்ளது. 1,500 சதுர அடி பரப்பளவு கொண்ட 380 வீட்டு மனைகள், விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர்.
அங்கு எத்தனை பேர் ஏமாந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. பெங்களூரு கல்யாண் நகரில் உள்ள ஆக்சிஸ் வங்கியிலிருந்த வெங்கட் கவுதம் கணக்கை முடக்கியுள்ளோம். அதேபோல், ஊட்டி வங்கியில் உள்ள கணக்கை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள் ளோம். எங்களிடம் வந்த புகார் தவிர, மேலும் எவ்வளவு பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு சுகுமாரன் கூறினார்.
|
தமிழகம்
|
திருச்சியில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது
|
திருச்சி:திருச்சியில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட ஐந்து பேரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 226 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.திருச்சி மிளகுபாறை பகுதியில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் வைத்திருப்பவர் ராஜேந்திரன். அவரிடம் திருவானைக்கோவிலைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் புல்லட் ஒன்றை விலை பேசியுள்ளார்.
23 ஆயிரம் ரூபாய் விலைபேசி முடித்த ரவிச்சந்திரன், முன்பணமாக 15 ஆயிரம் ரூபாயை மெக்கானிக் ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளார்.முன்பணமாக வந்த 500 ரூபாய் நோட்டுக்கள் 30ம் கள்ள நோட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ராஜேந்திரனுக்கு வந்தது. இது குறித்து அவர், மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம் புகார் அளித்தார். அதன்பேரில், கமிஷனர் தனிப்படை அமைத்து கள்ள நோட்டு புழக்கம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
புல்லட் வாங்க கள்ள நோட்டை முன்பணமாக கொடுத்த ரவிச்சந்திரனை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ரவிச்சந்திரன் போன்று மேலும் சிலர் மாநகரில் இருப்பதாக தகவல் கிடைத்தது.திருச்சி உறையூரைச் சேர்ந்த கண்ணன், சிந்தாமணியைச் சேர்ந்த ராஜன், காந்திமார்க்கெட் துரை, புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த முத்துக்குமார் என நான்கு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 196 கள்ள நோட்டுக்கள்(98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது) பறிமுதல் செய்யப்பட்டது.
புல்லட் வாங்க அட்வான்ஸ் கொடுத்த 500 ரூபாய் கள்ளநோட்டுக்களையும் சேர்ந்து ஐந்து பேரிடமிருந்தும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 226 கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சியில் புழக்கத்தில் விடப்பட்ட கள்ளநோட்டுக்கள் அனைத்தும் கேரளா மாநிலத்தில் இருந்து வந்துள்ளதால், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல், கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
|
தமிழகம்
|
காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்
|
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று மாநகராட்சி மற்றும் உணவு வழங்கல்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து டபிள்யு.ஜி.சி.,ரோடு, சிவன்கோயில் தெரு, வட்டக்கோயில் உள்ளிட்ட இடங்களிலுள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.அங்கிருந்து காலாவதியான ஊறுகாய், மாவு உள்ளிட்ட 20,000ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். காலாவதி உணவுப்பொருட்களை விற்கக்கூடாது என கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
|
தமிழகம்
|
சுடுகாட்டில் மதுபாட்டில் பதுக்கியவர் கைது
|
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சுடுகாட்டில் விற்பனைக் காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர். வசவப்ப புரம்- கீழபுத்தனேரி ரோட்டில், சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற, வசவப்பபுரம் நாக முத்துவை (53), விசாரித்தனர். விசாரணையில், அவர் பதுக்கி வைத்திருந்த 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, நாகமுத்துவை கைது செய்தனர்.
|
தமிழகம்
|
எஸ்.ஐ.,வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது
|
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, போலீஸ் எஸ்.ஐ., வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார். தூத்துக் குடி மாவட்டம் சாத்தான்குளம் ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன்(52), நாசரேத் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., ஆக பணிபுரிகிறார்.புழுக்கமாக இருப்பதாக கூறி, நேற்றுமுன்தினம் அதிகாலை இரண்டு மணிக்கு வேல் முருகன், வீட்டின் கதவு, ஜன்னல்களை திறந்துவைத்து தூங்கினார்.
அப்போது, அவரது வீட்டிற்குள் புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்(21), அங்கிருந்த 10 பவுன் நகை, 10,000 ரூபாய் ரொக்கத்தை திருடி தலைமறை வானார். சிவசுப்பிரமணியத்தை நேற்று கைது செய்த சாத்தான்குளம் போலீசார், அவர் எஸ்.ஐ.,வீட்டில் திருடிய 90,000 ரூபாய் மதிப்புள்ள நகை,பணத்தை மீட்டனர். அவர் மீது மேலும் சில திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
|
தமிழகம்
|
தேனி மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரி மாணவிகள் வயிற்றுப்போக்கால் பாதிப்பு
|
தேனி:தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில், பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி விடுதியில் 200க்கும் மேற்பட்ட மாணவி கள் தங்கி படித்து வருகின்றனர்.இங்கு சுகாதார குறைபாடு அதிகளவில் உள்ளதாகவும், வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும் பல மாதங்களாக புகார் இருந்து வருகிறது.
பிரச்னைகள் இருந்தாலும், மாணவிகள் யாரும் வெளிப்படையாக புகார் கூற விரும்ப வில்லை. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.இதற்கு தரக் குறைவான உணவே காரணம் என மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.
பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்ட மாணவிகள் கூறியதாவது: வார்டனும், டெபுடி வார்டனும் மாணவிகளின் புகாரை கண்டுகொள்வதில்லை. உணவின் தரத்தையும் சோதிப்பதில்லை. பாத்திரங்களை முறையாக கழுவுவதில்லை. தொடர்ந்து நீடிக்கும் சுகாதாரக் குறைபாட்டையும் நீக்குவ தில்லை. வயிற்றுப் போக்கால் சில மாணவிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர், என்றனர்.
|
தமிழகம்
|
வத்திராயிருப்பில் போலி டாக்டர் கைது
|
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒருவர் தலைமறைவானார்.வத்திராயிருப்பு அருகே குன்னூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜெகநாதபிரபு. இவர் கூமாபட்டி யிலுள்ள ஒரு கிளினிக்கில் சோதனை செய்தார். அப்போது அங்கு ராகவன் (73) முறையான சான்றிதழ் இல்லாமல் மருந்துகள் வழங்கிக்கொண்டிருந்தார்.
இது குறித்து கூமாபட்டி போலீசில் ஜெகநாதபிரபு புகார் செய்தார். போலீசார், ராகவனைக் கைது செய்தனர்.* சுந்தரபாண்டியத்திலுள்ள முறையான சான்றிதழ்கள் இல்லாமல் சடையாண்டி என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்ய வந்த போது தலைமறைவானார். ஜெகநாதபிரபு புகார் செய்தார். சடையாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
|
தமிழகம்
|
கள்ளத்தொடர்பு தகராறில் ஒருவர் வெட்டி கொலை
|
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே நேற்றிரவு கள்ளத்தொடர்பு தகராறில், ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடைச் சேர்ந்தவர் சிவலிங்க பெருமாள்(42). அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தம்மான்(30). இருவரும், தூத்துக்குடியிலுள்ள தனியார் உலர் பூ கம்பெனியில் பணிபுரிந்தனர்.
சிவலிங்கபெருமாளின் இரண்டாவது மனைவி வேலம்மாளுக்கும்(30), தம்மானுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதை சிவலிங்கபெருமாள் கண்டித்துள்ளார்.அதனால், வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு செல்ல சிவலிங்க பெருமாள் முடிவெடுத்தார்.
இதையறிந்த தம்மான், நேற்றிரவு 8 மணியளவில் சிவலிங்கபெருமாள் வீட்டிற்குச் சென்று, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். சிவலிங்கபெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். தப்பியோடிய தம்மானை, முறப்பநாடு போலீசார் தேடி வருகின்றனர்.
|
இந்தியா
|
குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்
|
மும்பை:குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து, அரைகுறைக் கோலத்தில் கிடந்த தோழியைப் படம் எடுத்து, லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்லூரி மாணவர் கள் போலீசில் சிக்கியுள்ளனர்.மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கல்லூரியில் படிப்பவர் கள் காவேஷ் மதன், கரண் மதன்(18) என்ற இரட்டையர்கள் மற்றும் மகேஷ். இவர்களின் நண்பர் மூலம் தோழியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் கல்லூரியில் படிக்கும் இளம் பெண் ஒருவர்.
மதன்சகோதரர்கள் சாதாரண நடுத்தர வர்க்கத்தைசேர்ந்த, அடக்கமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தோழியோ செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அறிமுகமான அன்றே, நான்கு பேரும் சேர்ந்து ஒரு "பப்'பில் பார்ட்டி கொண்டாடுவதற்காகச் சென்றுள்ளனர். அங்கு, தோழியின் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்துள்ளனர் மதன் சகோதரர்களும், மகேஷும்.மயங்கிப் போன தோழி, மது மயக்கத்தில் அரைகுறை ஆடையுடன் படுக்கையில் கிடந்தார். அதை அப்படியே படம் பிடித்துக் கொண்டனர் மூவரும்.
இந்தச் சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது.அதையடுத்து, அந்தப் படங் களை இணையதளத்தில் போட்டு விடுவதாகவும், தோழியின் பெற் றோரிடம் காட்டி, மானத்தை வாங்கப் போவதாகவும் மிரட்டி, பணமாக 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், தங்க வளையல்கள், சங்கிலிகள், பிரேஸ்லெட்கள் என நகைகளாக மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பு வரையிலும் பணம் பறித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாமல் இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும், மதன் சகோதரர்களையும், மகேஷையும் விசாரணைக்கு அழைத் துள்ளனர்.கொந்தளித்துப் போன மதன் சகோதரர்களின் குடும்பத்தார், "அந்தப் பெண்ணுக்கு, இவர்கள் இருவரில் ஒருவர் மீது காதல் இருந்திருக்கிறது. ஒரு பையன் தனியாக இருக்கும் போது அவள் அவனது வீட்டுக்கு வந்திருக்கிறாள்' என்று கதையை மாற்றிக் கூறினர்.
இருப்பினும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், மதன் சகோதரர் கள், "இளம்பெண்ணின் தந்தையிடம் நாங்கள் ஐந்தரை லட்ச ரூபாய்கடனாக வாங்கியதை திருப்பித் தர வேண்டும் என்று அவர் கோரியுள்ளது தவறு. நாங்கள் அவ்வளவு தொகை கடன் வாங்கவில்லை.தவறுதலாக இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம்' என்றும் கூறி, அவர் மீது வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
|
இந்தியா
|
டில்லி ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
|
புதுடில்லி:டில்லி - அமிர்தசரஸ் சதாப்தி ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் போன் காரணமாக, பயணிகளிடையே பெரும் பீதி பரவியது. ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.சமீப காலமாக, வடக்கு மற்றும் வட மத்திய ரயில்வேயில், ரயில்களில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பி விடப்படுவது வழக்கமாகியிருக்கிறது.கடந்த ஒரு மாதத்துக்கு முன், மாணிக்பூர் - ஹசரத் நிஜாமுதீன் விரைவு ரயிலில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின், அப்பகுதி பயணிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.இதனால், அப்பகுதி ரயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று டில்லியிலிருந்து அமிர்தசரஸ் செல்லும் "ஸ்வர்ண சதாப்தி' ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, டில்லி ரயில் நிலையத்தின் துணை நிலைய கண்காணிப் பாளருக்கு ஒரு மிரட்டல் போன் வந்தது.இதனால், அந்த விரைவு ரயில், நரேலா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு சோதனையிடப் பட்டது. முழுமையான சோதனைக்குப் பின், அந்த போன் புரளி கிளப்புவதற்காக செய்யப் பட்டது என்பது தெரிய வந்தது. சோதனைக்குப் பின், ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால், டில்லி, அம்பாலா, கல்கா மற்றும் டில்லி, அமிர்தசரஸ் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
|
இந்தியா
|
கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி
|
நிஜாமாபாத்:ஆந்திராவில், விவசாயக் கிணறு ஒன்றில் டிராக்டர் கவிழ்ந்ததில், 13 பேர் பலியாயினர்; 30க்கும் மேற்பட் டவர்கள் படுகாயம் அடைந்தனர்.ஆந்திர மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் பிராமண பள்ளி ஒட்டர் காலனியைச் சேர்ந்த ராஜன்னா. இவர், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு, தனது உறவினர்கள் சிலருடன், வர்மி மண்டலம் அருகே உள்ள படாபஹத் தர்காவிற்கு, டிராக்டரில் சென்ற போது, விவசாயக் கிணறு ஒன்றில் டிராக்டர் கவிழ்ந்தது.
டிராக்டரில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதால், டிராக்டரின் டயர் வெடித்து, தாறுமாறாக ஓடிய டிராக்டர், எதிர்ப்பாராதவிதமாக, சாலை ஓரத்தில் இருந்த கிணற் றில் விழுந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. டிராக்டர் டிரைவர் தப்பியோடிவிட்டார்.
|
இந்தியா
|
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு 25ம் தேதிக்கு தள்ளிவைப்பு
|
பெங்களூரு:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வக்கீல் நவநீதகிருஷ்ணனுக்கு மே 24ம் தேதி விமானம் கிடைப்பது சிரமம் என்று கூறியதால், விசாரணை மே 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் நவநீதகிருஷ்ணன், "சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மே 11ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கிற்கு கால அவகாசம் தர வேண்டும்' என்று கேட்டார்.நீதிபதி, "முறைப்படி சாட்சிகளுக்கு, மெமோ அனுப்புகிறேன். ஆனால், உடனடியாக விசாரணைக்கு எடுக்க முடியாது. எந்த நாளில் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவது என்று இரு தரப்பும் பேசினால், நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும். இந்த வழக்கை மே 24ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்' என்றார்.
அதற்கு வக்கீல் நவநீதிகிருஷ்ணன், "மே 24 விமான டிக்கெட் கிடைப்பது கஷ்டம். இந்த வழக்கை, 25ம் தேதிக்கு தள்ளி வையுங்கள்' என்றார்.அதை நீதிபதி ஏற்று கொண்டு வழக்கை, மே 25ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார்.
|
இந்தியா
|
விரிவுரையாளருக்கு நெட், ஸ்லெட் தகுதி தனி நீதிபதி உத்தரவுக்கு தடை
|
சென்னை:விரிவுரையாளர் பணிக்கு நெட், ஸ்லெட் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட உத்தர வுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங் களை ஆசிரியர் தேர்வு வாரியம் வரவேற்றது. இவர்களுக்கான கல்வித் தகுதி நிர்ணயிக்கப் பட்டது. முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம், சம்பந்தப்பட்ட பாடத்தில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) பெற்றிருக்க வேண்டும் அல்லது முது கலைப் பட்டத்தில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மற்றும் பிஎச்.டி., பெற்றிருக்க வேண்டும்.
இதன்படி, 1993ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் எம்.பில்., பட்டம் பெற்றவர் களுக்கு, நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் விதிவிலக்கு கிடையாது. எனவே, யு.ஜி.சி.,யின் விதிமுறைகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சசிதரன் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. நளினி சிதம்பரம், வக்கீல் சுரேஷ் விஸ்வநாத் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "முதல் பெஞ்ச்' இடைக்கால தடை விதித்தது. அப்பீல் மனுக்களுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
|
தமிழகம்
|
கோவை கே.எஸ்., நெட் நிறுவனத்தில் கைப்பற்றிய பணம் கோர்ட்டில் ஒப்படைக்க கோரி மனு: அரசுக்கு நோட்டீஸ்
|
சென்னை:கோவையில் உள்ள கே.எஸ்., நிறுவனத்திடம் கைப்பற்றிய பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த அருள்மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனு:
கோவையில் கே.எஸ்.நெட்வொர்க் மற்றும் கே.எஸ்.மெர்க்கன்டைல் நிறுவனங்களை சசிரேகா என்பவர் துவங்கினார். திருச்சியில் கணினி வர்த்தகத்தில் நான் ஈடுபட்டிருந்தேன். சசிரேகாவிடம் என்னை அறிமுகப்படுத்தினர். அவர் சொன்னதை நம்பி, 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். பொதுமக்களிடம் பணம் வசூலித்து ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் கே.எஸ்., நிறுவனங்களில் முதலீடு செய்தேன்.இந்த நிறுவனத்தின் திட்டப்படி, ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரு மாதத்தில் இரண்டு லட்சம் கொடுக்கப்படும் என்றும், அந்தப் பணத்தை எடுக்கவில்லை என்றால் மேற்கொண்டு மாதம் தோறும் 100 சதவீதம் "டிவிடென்ட்' வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், திட்டத்தை நிறைவேற்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் தவறி விட்டனர்.சசிரேகா அளித்த உறுதிமொழிப்படி, அவர் எனக்கு 28 கோடி ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். 21 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் அவர்களை அலைய வைத்தனர்.அசல், டிவிடென்ட் தொகையை வழங்கவில்லை. இதை யடுத்து, உள்துறைச் செயலர், டி.ஜி.பி., சென்னை மற்றும் கோவை போலீஸ் கமிஷனர்களுக்கு புகார் அனுப்பினேன். இந்த நிறுவனத்துக்கு எதிராக போலீசார் தான் நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த மாதம் 18ம் தேதி சசிரேகாவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்ததில், 1,500 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக தெரிவித்துள்ளார். கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், புலனாய்வு அதிகாரியாக உள்ளார். கோடிக்கணக்கில் பணம், சொத்து ஆவணங்களை இன்ஸ்பெக்டர் கைப்பற்றியுள்ளார்.இந்தப் பணத்தை கோர்ட்டில் அவர் ஒப்படைக்கவில்லை. இன்ஸ்பெக்டர் வசம் பணம் உள்ளது. சசிரேகாவிடம் இருந்து எவ்வளவு பணத்தை கைப்பற்றியுள்ளார் என்பதற்கு எந்த கணக்கும் இல்லை.
இன்ஸ்பெக்டரின் செயல் வெளிப்படையாக இல்லை. கைப்பற்றிய பணம், பொருட்களை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.எனவே, கே.எஸ்.நெட்வொர்க், கே.எஸ்.மெர்க்கன்டைல் நிறுவனங்களில் இருந்து கைப்பற்றிய பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
|
தமிழகம்
|
மோசடி நிதி நிறுவன உரிமையாளர் ஜாமீன் மனு மீது மே 10ல் உத்தரவு
|
கோவை:அரசு தரப்பு பதில் தாக்கல் செய்ததையடுத்து, மோசடி நிதி நிறுவன உரிமையாளர் சசிரேகாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவு, வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.கோவை புதூரை சேர்ந்தவர் சசிரேகா (45); ஷேர் புரோக்கர். பீளமேடு - காளப்பட்டி ரோடு, நேரு நகரில் கே.எஸ்.மெர்கன்டைல் எனும் பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட 100க்கும் மேற்பட்டோர், இந்நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.அடுத்த சில மாதங்களிலேயே, முதலீட்டாளர்களுக்கு சசிரேகா கொடுத்த செக், பணம் இல்லாமல் திரும்பியது.
இதுபற்றி கேட்க சென்ற போது, நிதி நிறுவனம் மூடப்பட்டிருந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்து, கோவை மாநகர போலீசில் புகார் கொடுத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, சசிரேகாவை கைது செய்தனர். சிறையில் இருக்கும் சசிரேகா, ஜாமீன் கேட்டு மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அரசு வக்கீல் ஆஜராகி, பதில் மனுதாக்கல் செய்தார். அதையடுத்து, சசிரேகாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, நீதிபதி சீனிவாசன் வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
|
தமிழகம்
|
கொலை குற்றவாளிக்கு ஆயுள் ஆறு ஆண்டுகளாக குறைப்பு
|
மதுரை:பட்டுக்கோட்டை அருகே, கொலை வழக்கில் செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை 6 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் செந்தில்.இவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜனிடம் கடன் வாங்கியிருந்தார். சம்பவத்தன்று நாகராஜன் கடனை திருப்பிகேட்டார்.
இதில் எழுந்த தகராறில் நாகராஜன் கத்தியால் குத்தியதில் செந்தில் இறந்தார். நாகராஜனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய்அபராதமும் விதித்து செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து நாகராஜன் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஆனந்தகுமார் ஆஜரானார்.
நீதிபதிகள் பி.முருகேசன், டி.மதிவாணன் கொண்ட பெஞ்ச், மனுதாரர் திடீரென ஏற்பட்ட ஆத்திரத்தில் சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வருகிறது. எனவே அவர் மீதான கொலை வழக்கு பிரிவு "இறப்புக்குகாரணம்' என மாற்றப்படுகிறது. அதன்படி ஆயுள் தண்டனை ரத்துசெய்யப்பட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அபராத தொகை உறுதி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டது.
|
தமிழகம்
|
நெதர்லாந்து ஆசாமி ஜாமீனுக்கு தடை
|
சென்னை:சிறுவர்களிடம் தகாத உறவு கொண்டதாக தொடரப் பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுக் காரருக்கு வழங்கிய ஜாமீனுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் வில்லி யம்ஸ். சென்னை சூளைமேட்டில் வசித்து வந்தார். சிறுமியரிடம் ஆபாச படங்களை காட்டி அவர்களிடம் தகாத உறவு கொண்டதாக இவர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின், இவர் கைது செய்யப்பட்டார்.
இவருக்கு சைதை கோர்ட் ஜாமீன் வழங்கியது.இவர் மீதான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு, விரைவு கோர்ட்டுக்கு மாற்றப் பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி ஜாமீனில் வில்லியம்ஸ் வெளியே வந்தார்.இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சைபர் கிரைம் போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வெளி நாட்டவர் என்பதால் அவர் தப்பிச்
செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் எனவே ஜாமீனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.மனுவை நீதிபதி கர்ணன் விசாரித்தார். போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சரவணன் ஆஜரானார். வில்லியம்சுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு நீதிபதி கர்ணன் இடைக்காலத் தடை விதித்தார்.
|
தமிழகம்
|
பெரியாறு அணை உடைந்தால்ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு: அறிக்கை தயாரிப்பில் கேரளா மும்முரம்
|
கூடலூர்:பெரியாறு அணை உடைந்தால், கேரளாவில் ஏற்படும் பாதிப்பு குறித்து கேரள பொறியியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். சுப்ரீம் கோர்ட் அமைத்த ஐவர் குழு விசாரணைக்கு வரும் போது சமர்ப்பிக்க, அறிக்கை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவது தான் தீர்வு என்ற நிலையில், கேரள அரசு மும்முரமாக இறங்கி பணிகளை நடத்தி வருகிறது.
பெரியாறு அணையில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் புதிய அணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து, அப்பகுதியில் பாறைகளின் தன்மை குறித்து அறிய, பல கட்ட சர்வே பணியை அண்மையில் நடத்தி முடித்துள்ளது. பெரியாறு அணை பிரச்னை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கையில் முழு வீச்சில் இறங்கி உள்ளது.
மத்திய அரசு மூலம் ஐவர் குழு அமைத்து பெரியாறு அணையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. இக்குழுவில் கேரள அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.தாமஸ், தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு விரைவில் பெரியாறு அணைக்கு வந்து ஆய்வு நடத்த உள்ளது.இக்குழு அணைப் பகுதிக்கு வரும் போது சமர்ப்பிப்பதற்காக, பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பணியை கேரள அரசு துவக்கி உள்ளது.
அதில் முக்கியமானதாக, பெரியாறு அணை உடைந்தால் எந்தவிதமான பாதிப்பு உண்டாகும் என்பதை முதலாவது பிரச்னையாக முன்வைக்க உள்ளது. இதற்காக கேரள பொறியாளர் குழு நேற்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டது. இக்குழுவில் கேரள நீர்பாசனத் துறை செயற்பொறியாளர் ராஜசேகரன், மின் வாரிய செயற்பொறியாளர் ஜேம்ஸ் வில்சன், உதவி செயற்பொறியாளர்கள் பிரியே, அனில்குமார், பாபு ரோய், ராஜேஸ் ஆகியோர் இருந்தனர்.
பெரியாறு அணையில் இருந்து கேரளா வழியாக நீர் வெளியேறும் வல்லக்கடவு, உப்புத்துறை, சப்பாத்து ஆகிய இடங்கள் வழியாக இடுக்கி அணை வரை 40 கி.மீ., தூரம் ஆய்வு மேற்கொண்டனர். இடுக்கி அணை மற்றும் அதை ஒட்டி உள்ள சிறுதோணி அணை, குளமாவு அணை, பைனாவு அணை ஆகியவற்றிலும் ஆய்வு நடத்தினர்.
இக்குழுவினர் கூறும் போது, "பெரியாறு அணை உடைந்தால் அங்கிருந்து வெளியேறும் நீரின் மூலம் பாதிப்புகள் எப்படி இருக்கும். இடுக்கி அணை, சிறுதோணி அணை, குளமாவு அணை, பைனாவு அணை ஆகிய அணைகளுக்கு எந்தவிதமான பாதிப்பு வரும். இது தவிர, எந்தெந்த இடங்கள் எல்லாம் பாதிக்கும் என்பது குறித்து வரைபட அமைப்பு தயாரிப்பதற்காக ஆய்வு நடத்தினோம். இதை விரைவில் தயார் செய்து, அணைக்கு வர உள்ள ஐவர் குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளோம்' என்றனர்.
|
தமிழகம்
|
60 அடி உயர தூக்குதேர் திருவிழா கோலாகலம்
|
தியாகதுருகம்:விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த முடியனூர் திரவுபதியம்மன் தூக்கு தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.விழுப்புரம் மாவட்டம் தியாக துருகம் அடுத்த முடியனூரில் நூற்றாண்டு பெருமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தூக்குதேர் திருவிழா நேற்று நடந்தது. மற்ற கோவில்களில் திருவிழாவின் போது சக்கரம் பூட்டிய தேர், பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்துச் செல்வது வழக்கம்.
முடியனூர் திரவுபதியம்மன் கோவிலில், சக்கரம் இல்லாமல் 60 அடி உயரத்திற்கு தேர் அலங்கரித்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக தூக்கிச் செல்வர்.இத்தேர் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது.
பின், காளி கோட்டை இடித்து, தூக்கு தேரில் அலங்கரிக்கப்பட்ட திரவுபதிஅம்மன், அர்ஜுணன் சிலைகள் வைத்து 60 அடி உயரமுள்ள தூக்கு தேரை பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர். மாலை 4 மணிக்கு தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.திருவிழாவை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.
|
தமிழகம்
|
சிவில் சர்வீஸ் தேர்வில் விவசாயி மகன் தேர்ச்சி
|
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, விவசாயி மகன் சிவசுப்ரமணியன் சிவில் சர்வீஸ் தேர்வில் 311வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.அவர் கூறியதாவது:விழுப்புரம் அடுத்த நேமூர் கிராமத்தில் வசிக்கிறேன். தந்தை காளிரத்தினம் விவசாயி. தாய் ஞானசுந்தரி. சகோதரர் இளையராஜா, சகோதரி செல்வகுமாரி. பள்ளிப்படிப்பு பத்தாம் வகுப்பு தான். பின் அரசு ஐ.டி.ஐ., பிட்டர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, சென்னையில் அப்ரன்டிஸ் முடித்தேன்.
அப்போது நடந்த (1999ம் ஆண்டு) சிவில் சர்வீஸ் தேர்வில், எனது பெரியம்மா மகன் ரமேஷ் தேர்வானார். அது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதனால் ஏற்பட்ட உத்வேகத்தால், நான் தேர்வு எழுத வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்காக, தனியாக பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். 2004ம் ஆண்டு, அண்ணாமலை பல்கலையில் தொலைதூர கல்வியில் பி.ஏ., வரலாறு பட்டம் பெற்றேன்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி முகாமில் இரண்டு ஆண்டுகள் படித்தேன்.
பின் சென்னை அண்ணா நகரில் உள்ள, அகில இந்திய குடிமைப் பணித்தேர்வாணய பயிற்சி முகாமில் தேர்வாகி படித்தேன். 2006ம் ஆண்டு புவியியல், தமிழ் இலக்கியம் விருப்ப பாடமாக தேர்வு செய்து தேர்வில் பங்கேற்றேன். முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்தேன்.இதே போல், இரண்டு ஆண்டுகள் தோல்வியை சந்தித்த நான் இம்முறை அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று, 311வது இடத்தில் தேர்வாகியுள்ளேன்.
ரேங்க் அடிப்படையில் ஐ.பி.எஸ்., வாய்ப்பு உறுதியாகியுள்ளது.இதற்கிடையே 2006ல் ரயில்வே தேர்வில்(ஆர்.ஆர்.பி.) வெற்றி பெற்று திருச்சி பொன்மலையில் பணியாற்றினேன். பின் குரூப் 1 தேர்வில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்தேன். பின், குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து விருத்தாச்சலத்தில், வருவாய்த் துறை உதவியாளராக தற்போது பணியாற்றி வருகிறேன்.
தந்தையை சிறிய வயதிலேயே பிரிந்த நிலையில், எனது தாயார் தான் எங்களை படிக்க வைத்து முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தார். விவசாயப் பணிகளை பார்த்துக் கொண்டே, பயிற்சி மையங்களில் படித்து வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி.இவ்வாறு சிவசுப்ரமணியன் கூறினார்.
|
தமிழகம்
|
ஊட்டியில் இன்று ரோஜா கண்காட்சி
|
ஊட்டி:ஊட்டியில் இன்று நடக்கும் ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, கலங்கரை விளக்கம், யானை, நீர்வீழ்ச்சி ஆகியவை, ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.ஊட்டி விஜயநகர பண்ணையில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் 3,000 ரக ரோஜாக்கள் உள்ளன. இங்குள்ள 30 ஆயிரம் ரோஜா செடிகளில், பாதிக்கும் மேற்பட்டவற்றில் பூ பூக்கத் துவங்கி விட்டது. சுற்றுலா பயணிகளை கவரும் பச்சை ரோஜா, கறுப்பு ரோஜா, நீல ரோஜா ஆகியவை, அதிக எண்ணிக்கையில் பூத்துள்ளன.இன்று காலை ரோஜா கண்காட்சி துவக்க விழா நடக்கிறது.
கதர்வாரிய அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைக்கிறார். கண்காட்சியையொட்டி தனியார் பூங்காக்கள் பங்கேற்கும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. சிறந்த பூங்கா, மலர் அலங்காரம், சிறந்த மலர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது. பெங்களூரூ, புனே உட்பட பிற பகுதிகளில் இருந்தும் ரோஜா மலர்கள் கொண்டு வரப்படுகின்றன.
கண்காட்சியில், ரோஜா மலர்களால் செய்யப்பட்ட கலங்கரை விளக்கம், நீர் வீழ்ச்சி, யானை ஆகியவை சிறப்பம்சமாக இடம் பெறுகின்றன. கொய்மலர் அலங்காரம், ரோஜா ஒயின், குல்கந்த், தனியார் ரோஜா அலங்காரங்களும் இடம் பெறுகின்றன.
கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும் ரோஜா உற்பத்தியாளர்கள் கண்காட்சியில் அரங்கு அமைக்கின்றனர். போட்டிகளில் சிறப்பான அலங்காரத்துக்கு பரிசும் வழங்கப்படுகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவர் என எதிர்பார்க்கப் படுவதால், சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
|
தமிழகம்
|
இலவச வீடு பயனாளிகள் பட்டியல் மே 15 க்குள் சமர்ப்பிக்க உத்தரவு
|
விருதுநகர்:தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில், பயனாளிகள் பட்டியலை மே 15க்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் 385 யூனியன்களில் ஓலைக்கூரை வீடுகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்து, அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்துள்ளனர்.
இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு "ஆன்லைன்' மூலம் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் தகுதியுடையவை, நிபந்தனையுடன் தகுதியுடையவை, தகுதியற்றவை என பதிவின் போது பிரிக்கப்பட உள்ளன. இதில் தகுதியுடைய பயனாளிகள், நிபந்தனையுடன் தகுதியுடைய பயனாளிகள் பட்டியலை இறுதி செய்ய வேண்டும்.
இதன்பின், கூரை வீடுள்ள பயனாளிகளை அவர்களது வீடு முன் நிறுத்தி போட்டோ எடுக்க வேண்டும். இந்த போட்டோக்களை பயனாளிகளின் பட்டியலுடன் இணைத்து, அரசுக்கு மே 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
|
தமிழகம்
|
மக்கள் தொகை கணக்கெடுப்பு பொருளாதாரத்தை ஆய்வு செய்யுமா?
|
மதுரை:நடக்க உள்ள 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டின் மக்களின் சமூக, பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் அம்சமாகவும் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, பிரமாண்டபணியாக மேற்கொள்ளப் பட இருக்கிறது.
ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இதில் ஈடுபட உள்ளனர். இப்போதே, இதற்கான வேலைகள் துவங்கி விட்டன. கணக்கெடுப் பாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் நாடு முழுவதும் நடக்கின்றன. இந்த ஆண்டு துவங்கும் பணி, அடுத்த ஆண்டு முடிகிறது. இந்திய பொதுத் தேர்தலை போலவே, இதுவும்உலகின் பிரமாண்டமான அரசு பணியாக கருதப்படுகிறது.
வளர்ந்து வரும் நமது நாட்டில் மக்களின் பொருளாதாரத்தை கணக்கிடவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற் காகவே, கணக்கெடுப்பின் போது பல்வேறு கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. வீட்டின் தரை, சுவர், கூரை ஆகியவை எதனால் கட்டப்பட்டவை, சமையல் அறை, குளியலறை, கழிவறை, நடைபாதை, வராண்டா, வசிக்கும் அறை, படுக்கை அறை, உணவருந்தும் அறை, வரவேற்பறை, படிக்கும் அறை, வேலையாட்களின் அறை போன்றவை இருக்கின்றனவா போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
குடிநீர் இணைப்பு, சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர், சுத்திகரிக்கப்படாத குழாய் நீர், மூடப்பட்ட கிணறு, மூடப்படாத கிணறு, கைபம்ப், ஆழ்துளை கிணறு, மின் விளக்கு, கழிப்பறை இருந்தால் எந்த வகை கழிப்பறை, பாதாள சாக்கடை இணைப்பு, கழிவு நீர் தொட்டி, திறவை சாக்கடை, குளியலறை, சமையலுக்கு பயன்படும் எரிபொருள் என்னஆகியவை பற்றியும் கேட்க பட உள்ளன.
ரேடியோ, "டிவி', கம்ப்யூட்டர், இன்டர்நெட் இணைப்பு, மொபைல் போன், சைக்கிள், இரு சக்கர வாகனம், கார், வங்கிக் கணக்கு விபரம் ஆகியவையும் அறியப்பட உள்ளன. கணக்கெடுப்பு முடிவில், இதை வைத்து நாட்டுமக்களின் பொருளாதார நிலைமையையும் கணக்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
|
தமிழகம்
|
வேளாண் விஞ்ஞானி ஜி.வி.செல்லம் நினைவு அஞ்சல் தலை இன்று வெளியீடு
|
சென்னை:பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி ஜி.வி. செல்லத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது நினைவு அஞ்சல் தலை இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது.ஆந்திர மாநிலம், குடிவாடா கிராமத்தில் 1909ம் ஆண்டு நவ., 9ல் பிறந்தவர் ஜி.வி.செல்லம். 21 வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, வேலூரில் இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின் வெளியே வந்து, எம்.எஸ்சி., பிஎச்.டி., பட்டம் பெற்றார். உணவுப் பற்றாக்குறையால் நாடு திண்டாடிய நிலையில், பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம், அதிக மகசூல் தரும் நெல் விதைகளை கண்டுபிடித்தார்.மத்திய வேளாண் அமைச்சகத்தில் துணை, இணை ஆணையராக பணியாற்றினார். அவரது தலைமையில் தேசிய விதைக் கழகம் நிறுவப் பட்டது.அதன் முதல் பொது மேலாளராகவும், பின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார். அப்போது தான், நெல், கோதுமை, மக்காச்சோளம், காய்கறி பயிர்களுக்கு உயர்தர விதைகள் தயாரித்து, வேளாண் துறைக்கு தனது பங்களிப்பை அளித்தார்.
இந்தியாவில் 1960ல் வெளிநாடுகளிலிருந்து கப்பல் வந்தால் தான் உணவு என்ற நிலை இருந்தது. அந்த சமயத்தில், மணிலாவில் உள்ள அகில உலக நெல் ஆராய்ச்சி நிலையத்திற்குச் சென்று, ஆய்வு செய்து, "டெய்ச்சிங் நேட்டிவ்-1' என்ற வகை நெல் தான் இந்திய மண்ணிற்கு ஏற்றது என கண்டறிந்தார்.
மணிலாவிலிருந்து தனது, "கோட்' பையில் கொண்டு வந்த நெல் பயிரிட்டு கிடைத்தது தான், "ஐ.ஆர்., 8' வகை நெல். அமோக விளைச்சல் கிடைத்ததன் மூலம், நாட்டில் உணவுப் பற்றாக்குறை தீர்ந்து, பசுமைப் புரட்சிக்கும் வித்திட்டது. இவரது சாதனைகளுக்காக மத்திய அரசு 1967ல், "பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது.எதிர்பாராத விதமாக 57வயது வயதில் மாரடைப்பால் இறந்தார்.
அவரது நூற்றாண்டு விழாவையொட்டி இந்திய அஞ்சல் துறை, செல்லத்தின் உருவம் கொண்ட நினைவு அஞ்சல் தலையை இன்று வெளியிடுகிறது.இதற்கான விழா, சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடக்கிறது. அஞ்சல் துறைத் தலைவர் மூர்த்தி அஞ்சல் தலையை வெளியிட, பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் எம்.பி., பெற்றுக் கொள்கிறார்.
செல்லத்தின் மகனும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ரங்கா ராவ் கூறும்போது, எனது தந்தை ஜி.வி.செல்லத்திற்கு கிடைக்கும் கவுரவம், வேளாண்துறை விஞ்ஞானிகளை யும், துறையைச் சேர்ந்த பணியாளர்களையும் ஊக்குவிக்கும். மத்திய அரசுக்கு எங்கள் நன்றி' என்றார்.
|
தமிழகம்
|
வறண்டு கிடந்த தென்பெண்ணையில் கோடை மழையால் தண்ணீர் வரத்து
|
திருக்கோவிலூர்:வறண்டு கிடந்த, திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் நீர் வரத்து துவங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் நந்திதுர்காவில் உருவாகி, பலநூறு கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து வரும் இந்த நதியின் குறுக்கே, கர்நாடக அரசு ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி தண்ணீரை திருப்பிக் கொண்டு விட்டது. தமிழக அரசும், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஆற்றில் ஆங்காங்கே கிணறுகளை அமைத்து, தண்ணீரை உறிஞ்சி எடுத்து வருகிறது.
அரசு குவாரிகள் மூலம், சட்டத்திற்கு புறம்பாக பல மீட்டர் ஆழத்திற்கு பொக்லைன் மூலம் தோண்டி மணல் எடுக்கப்படுகிறது.இதனால் எப்போதும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் தென்பெண்ணை ஆறு கடந்த சில மாதங்களாக வறண்ட பாலைவனமாக மாறியது. ஆடு, மாடுகளுக்கு குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது பெய்த கோடை மழையால் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து துவங்கியது.
நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே இருந்ததால், போர்' போட்டு விவசாயம் செய்த தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள விவசாயிகள், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கத்தில் இருந்தனர். ஆற்றில் நீர் வரத்து துவங்கி இருப்பது, விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் பெறும் கிராமங்களுக்கு, இன்னும் மூன்று மாதத்திற்கு தண்ணீர் பிரச்னை ஏற்படாது.
|
தமிழகம்
|
ஓட்டல்களில் சாப்பிடுபவரா நீங்கள்?
|
மதுரை:தமிழகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும், காலாவதி உணவுகளை விற்கும் ஓட்டல்களில் தொடர்ந்துஅதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பெரும்பாலும் பிளாட்பார, தெருவோர, அங்கீகாரம் பெறாத ஓட்டல்கள்தான், லாபத்தை மட்டும் குறியாக வைத்து, வாடிக்கையாளர்களின் உயிரோடு விளையாடு வருகின்றன.மதுரையில் பூக்கடை, பெட்டிக்கடை நடத்த அனுமதி வாங்கி ஓட்டல்கள் நடத்திய சிலர் அண்மையில் பிடிப்பட்டனர்.
ஓட்டலுக்கு சாப்பிட செல்லும் போது, சுகாதாரமான ஓட்டலா என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம்.சுகாதாரமான ஓட்டல்களை கண்டறிவது எப்படி என்பது குறித்து, மதுரை ஓட்டல்உரிமையாளர் சங்கத் தலைவர் குமார் கூறியதாவது :குறைந்தது ஆயிரம் சதுரஅடியில் ஓட்டல் அமைவிடம் இருக்க வேண்டும். அங்கேயே தயார் செய்து, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.தினமும் தேவைப்படும் உணவுகளை, அன்றே தயார் செய்ய வேண்டும். மீதமாகும் உணவை, குப்பைத் தொட்டியில் கொட்டி விட வேண்டும்.
சாப்பிட்ட பின், தட்டு, டம்ளரை வெந்நீரில் சுத்தப்படுத்த வேண்டும். "யூஸ் அண்ட் த்ரோ' கையுறை, தலைமுடி உதிராமல் இருக்க தொப்பி அணிந்த சர்வர்கள் இருக்க வேண்டும். சாப்பிடும் டேபிளை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி திரவத்தை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். மதுரையில் சமீபகாலமாக, சமையல் செய்வதை நேரில் பார்த்துக் கொண்டே சாப்பிடும் வசதி சில ஓட்டல்களில் வந்துவிட்டது.
விரைவில் மற்ற ஓட்டல்களிலும் இவ்வசதிஏற்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சி, தொழிலாளர் நலத்துறை மற்றும் வணிகவரித்துறையில் ஓட்டல்கள் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இதன்அடிப்படையில் தான்சுகாதாரமான ஓட்டல்கள் கண்டறியப்படுகின்றன.
எங்கள் சங்கத்தில் உள்ள ஓட்டல்களுக்கு சில அறிவுரைகளை ஏற்கனவே வழங்கியுள்ளோம். நாட்டு காய்கறிகளை ஒரு நாள், இங்கிலீஷ் காய்கறிகளை இரண்டு நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மாவு உட்பட பலசரக்கு சாமான்களை 15 நாட்கள் வரை வைத்திருக்கலாம். அரிசி, பருப்பு வகைகளை ஒருமாதம் வரை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்,என்றார்.
|
தமிழகம்
|
கரை ஒதுங்கும் உயிரினங்களை கண்காணிக்க படகுகளில் ரோந்து
|
ராமநாதபுரம்:கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குவதை கண்காணிக்க படகுகள் மூலம் ரோந்து செல்ல வனத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில், கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கு வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான உயிரினங்கள் படகுகள் தட்டியும், பவளப்பாறையில் மோதி யுமே கரை ஒதுங்குகின்றன.
கடல்வாழ் உயிரினங்களின் அபிவிருத்தி காலமான ஏப்., 15 முதல் இம்மாதம் இறுதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், படகுகள் புழக்கம் இல்லை. இருந்தும் கடலோர உயிரினங்கள் கரை ஒதுங்குவது தொடர்கதையாக நடக்கிறது. இதில் கடல்பசு, கடல் ஆமை, ஓங்கிகள் அதிகமாக இருக்கின்றன.
"வேட்டைக்காரர்களின் தாக்குதலால் இவை கரை ஒதுங்கலாம்,' என, சந்தேகிக்கப்படுகிறது. பாதுகாக்க வேண்டிய உயிரின பட்டியலில் உள்ள இவற்றில் பல காயங்களுடன் கரை ஒதுங்குகின்றன. மீனவர்கள் புழக்கம் இல்லா ததால், அந்த உயிரினங்கள் குறித்த தகவல்கள் கிடைப்பதில்லை. இதனால், சிகிச்சை அளிக்க வாய்ப்பின்றி இறந்து விடுகின்றன. இதை தவிர்க்க, இப்படி கரை ஒதுங்கும் உயிரினங்களை கண்காணிக்க, வனத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 10 படகுகளில் தீவிர ரோந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் வனஉயிரின காப்பாளர் சுந்தரக்குமார் கூறியதாவது: கரை ஒதுங்கும் உயிரினங்கள் குறித்த தகவல் எங்களை வந்தடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வழக்கமான "இன்பார்மர்கள்' உதவியும் எங்களுக்கு இருப்பதால், இதை தடுக்க முடியும். வேட்டையாடப்படுவது தெரியவந்தால், ஏழு ஆண்டு சிறை தண்டனை, அபராதமும் வழங்கப் படும். அனைத்து உயிரினங்களுக்கும் இது பொருந்தும், என்றார்.
|
தமிழகம்
|
விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் போக்குவரத்து 10ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா
|
சென்னை:விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, வரும் 10ம் தேதி மயிலாடுதுறையில் நடக்கிறது.விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றிமைக்கப்பட்டு, இப்பாதையில் கடந்த மாதம் 23ம் தேதியிலிருந்து ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இப்பாதையை திறந்து வைத்து, ரயில் போக்குவரத்தை துவங்கி வைக்க மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் முயற்சித்தனர்.
இதற்கு டில்லியிலிருந்து பதில் வராததால், இப்பாதை திறப்பு தாமதமானது. தாமதமில்லாமல் இப்பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட வேண்டும் என்று மயிலாடுதுறை, தஞ்சை பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தாமதித்தால், சில இடங்களில் போராட்டம் நடத்தவும் தயாரானார்கள்.இந்நிலையில், விழா ஏதும் நடத்தாமல் இப்பாதையில் கடந்த ஏப்., 23ம் தேதியிலிருந்து ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. நாகூர் எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ், வாரணாசி எக்ஸ்பிரஸ், வாரத்தில் இரண்டு நாட்கள் மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே பாசஞ்சர் ரயில்களும் தற்போது இப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
விழா ஏதும் நடத்தாமல் திடீரென ரயில்வே அதிகாரிகள் ரயில் போக்குவரத்தை துவங்கிவிட்டனரே என்று உள்ளூர் அரசியல் தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் விழா நடத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதையொட்டி இப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு மயிலாடுதுறை நிலையத்தில் நடக்கிறது.இந்த விழாவில் மத்திய அமைச்சர் வாசன், மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது ஆகியோர் கலந்து கொண்டு, இப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர்.
விழாவில் மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம், தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் அப்பகுதி எம்.பி.,க்கள், எம்.எல்,ஏ.,க்கள் கலந்து கொள்கின்றனர். விழுப்புரம் - மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தவும், வழியில் உள்ள சீர்காழி, ஆடுதுறை, பாபநாசம், நீடாமங்கலம் நிலையங்களில் ரயில் நின்று செல்ல வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.தஞ்சை ரயில் நிலையத்தில் மொத்தம் ஐந்து பிளாட்பாரங்கள் உள்ளன.
முன்னர் ரயில் போக்குவரத்து குறைவாக இருந்ததால், நிலையத்தின் நுழைவாயிலிருந்து மிக அருகில் இருந்த ஒன்றாவது மற்றும் இரண்டாவது பிளாட்பாரங்களில் பாதிப் பகுதி மூடப்பட்டுவிட்டன. இதனால், இவைகளில் ரயில்கள் நிறுத்த முடியாத நிலை உள்ளது. ஐந்தாவது பிளாட்பாரத்தில் தினசரி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப் படுகிறது.
மூன்று மற்றும் நான்காவது பிளாட்பாரங்கள் மட்டும் ரயில்கள் வந்து செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையம் வழியாக தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்களின் போக்குவரத்து அதிகம் உள்ளதால், சில நேரம் ரயில்கள் நிலையத்திற்குள் வருவதற்கு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் வரை வழியில் காத்திருக்க வேண்டியுள்ளது. ஒன்றாவது மற்றும் இரண்டாவது பிளாட்பாரங்கள், ரயில்கள் வந்து செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படாது.
தஞ்சை- திருச்சி இடையே அகல ரயில் பாதையில் ஆலக்குடியில் கிராசிங் லைன் இருந்தும் இன்னும் இதற்கு இணைப்பு கொடுக்கப்படாததால், 17 கி.மீ., தூரத்தில் உள்ள பூதலூர் நிலையத்தில் தான் கிராசிங் லைனை பயன்படுத்த முடிகிறது. இதனால், எதிர் ரயில் முன்கூட்டியே வழியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆலக்குடி ரயில்வே கிராசிங் லைனை ரயில் பாதையுடன் தாமதமின்றி இணைக்கப்பட வேண்டும். இந்த வழியாக இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்.
எதிர்கால நலன் கருதி திருச்சி - தஞ்சை இடையே பழைய மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக (இரண்டாவது பாதை) மாற்றியமைக்கவும் வரும் ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.
|
தமிழகம்
|
ரயில் நேரம் மாற்றம்
|
மதுரை:மதுரை ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பு: மதுரை - திருப்பரங்குன்றம் இடையே பாலப் பணிகள் நடப்பதால், கோவை- நாகர்கோயில் ரயில் (வ.எண்: 384) மதுரையில் 95 நிமிடங்களும், செங்கோட்டை - மதுரை ரயில் (788) விருதுநகரில் 50 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்படும்.
|
தமிழகம்
|
உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர்களுக்கு பயிற்சி
|
மதுரை: பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களுக்கான ஆறுவார கால புத்துணர்வு பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
தமிழக உடற்கல்வித் துறை, விளையாட்டு பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தடகளம், கூடைபந்து, கால்பந்து, வாள்சண்டை, ஹாக்கி, டென்னிஸ் மற்றும் வாலிபால் விளையாட்டுகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. புத்துணர்வு முகாம் மே 17 முதல் ஜூன் 30வரை சென்னை நவீன விளையாட்டு அரங்கில் நடத் தப்படுகிறது.
பயிற்சி பெற, www.sportsinfotn.com, www.tnpesu.ort என்ற இணையதளங்களில் இருந்து விண்ணப் பத்தை "டவுன்லோட்' செய்யலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மே 10க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங் களுக்கு உறுப்பினர் செயலர், எஸ்.டி.ஏ.டி., சென்னை - 600 084 ஐ தொடர்பு கொள்ளலாம். பிற விபரங்கள் விண்ணப் பத்தில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது என, எஸ்.டி.ஏ.டி., மண்டல முதுநிலை மேலாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
|
தமிழகம்
|
பிற மாநிலம் செல்லும் வாகனங்கள் வரி வசூலிப்பதில் சிக்கல்
|
சிவகங்கை:பிற மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கான வரி வசூல் முறையில், மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தை, செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கு தற்காலிகமாக செல்லும் வாகனங்களுக்கு, ஏழு முதல் 30 நாட்கள் வரை, அந்தந்த மாநில வட்டார போக்குவரத்து அலுவலங்களில் அனுமதி வழங்கப்படுகிறது.
நிரந்தரமாக வெளி மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு, தேசிய சரக்கு ஊர்தி சான்று, ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.பிற மாநிலங்களுக்கு சேர வேண்டிய அனுமதி வரியை, வட்டார போக்குவரத்து துறையினர், மத்திய அரசு கணக்கில் செலுத்தி விடுவர். மத்திய அரசு இத்தொகையை, அந்தந்த மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும். இதில், சில மாநிலங்கள் நேரடியாக வரி வசூலிக்கின்றன.இந்த மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள், வரி செலுத்த "செக் போஸ்ட்' களில் பல மணி நேரம் காத்து கிடக்கின்றன.
அந்தந்த மாநிலத்திலேயே வரி செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என, அகில இந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர். இதை ஏற்று கொண்ட மத்திய அரசு, நாட்டின் எந்த பகுதிக்கும் செல்ல, அந்தந்த மாநிலத்திலேயே வரி செலுத்தலாம் என, அறிவித்தது. இந்த நடைமுறை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டது. மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் இதற்கான திருத்தம் செய்யப்படவில்லை.
இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், இதற்கான வரியை பெற மறுக்கின்றனர். இதில் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை, பழைய முறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரி வசூல் குறித்த தெளிவான அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட வேண்டும்
|
இந்தியா
|
புதுச்சேரி பல்கலை மாணவி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி
|
காலாப்பட்டு:புதுச்சேரி பல்கலைக்கழக சமூகவியல் துறை மாணவி உமா மகேஸ்வரி சிவில் சர்வீஸ் தேர்வில், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், 875 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 527வது இடத்தை புதுச்சேரி பல்கலைக்கழக சமூகவியல் துறை எம்.பில்., ஆய்வு மாணவி உமா மகேஸ்வரி பெற்றுள்ளார்.
சமூகவியல், பொதுநிர்வாக பாடங்களை விருப்பப் பாடங்களாக எடுத்து படித்த இவர், சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.சிவில் சர்வீஸ் பணிக்குத் தேர்வாகியுள்ள மாணவி உமாமகேஸ்வரி கூறியதாவது: எனது சொந்த ஊர் மதுரை. சிவில் சர்வீஸ் தேர்வில் 527வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.ஏ.எஸ்.,தேர்வுக்காக எங்கும் கோச்சிங் செல்லாது, சுய முயற்சியால் வெற்றி பெற்றேன்.
நாளிதழ்களை தினந்தோறும் படித்து வந்தது, சிவில் சர்வீஸ் தேர்விற்கு உதவியாக இருந்தது. அவ்வவ்போது, சமூகவியல் துறைத் தலைவர் மொகந்தி வழங்கிய ஆலோசனைகள், வெற்றி பெற தூண்டுகோலாக அமைந்தது. ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு தயாராகும் மாணவர்கள், திட்டமிட்டு அர்ப்பணிப்புடன் படிக்க வேண்டும். விருப்பப் பாடங்களை உள்ளார்ந்து படித்தால், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்று சாதிக்கலாம்.
இவ்வாறு உமா மகேஸ்வரி கூறினார். உமா மகேஸ்வரிக்கு துணைவேந்தர் தரீன், பல்கலைக்கழக இயக்குனர் பாலசுப்பிரமணியன், துறைத் தலைவர் மொகந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
|
இந்தியா
|
குமாரநல்லூர் தேவி கோவில் விழா நாளை ஆரம்பம்
|
கோட்டயம்:கேரள மாநிலம் கோட்டயம் அருகே, குமாரநல்லூர் தேவி கோவிலில் பாகவத சொற்பொழிவு நிகழ்ச்சி நாளை துவங்கி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.இக்கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான இந்த "பாகவத சப்தாக யக்ஞம்' மள்ளியூர் சங்கரன் நம்பூதிரியின் ஆசியுரையுடன் துவங்குகிறது. மும்பை சந்திரசேகர சர்மா சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
நாளை மாலை 5 மணிக்கு பாரம்பரிய வரவேற்புடன் நிகழ்ச்சி துவங்குகிறது. தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை சகஸ்ரநாம ஜெபம் மற்றும் சமூக பிரார்த்தனை, 7 மணி முதல் பகல் 12 மணி வரை பாகவத சொற்பொழிவு நடக்கிறது.வரும் 14ம் தேதி மாலை 4.30 மணிக்கு ருக்மணி தேவி விக்ரக ஊர்வலம் நடக்கிறது. இக்கோவிலில் குடும்ப அமைதி, அபிவிருத்திக்கான சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 0481-231 2737 ஐ தொடர்பு கொள்ளலாம்.
|
இந்தியா
|
சங்கரர் கோயில் கும்பாபிஷேகம் சிருங்கேரி பாரதிதீர்த்த சுவாமிகளுக்கு வரவேற்பு
|
காலடி:கேரள மாநிலம் காலடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஸ்ரீ ஆதிசங்கரர் அத்வைத மதத்தை பரப்ப தெற்கில் சிருங்கேரியில் சாரதா பீடத்தை ஏற்படுத்தினார். காலடி சிருங்கேரி பீடத்தில் 33 வது பீடாதிபதி சச்சிதானந்தா சிவாபிநவ நரசிம்ம பாரதி சுவாமிகளால் சாரதாம்பாள், சங்கரர் கோயில்களுக்கு 1910ல் கும்பாபிஷேகம் நடந்தது.
அதன் நூற்றாண்டு விழாவை யொட்டி மே 14 முதல் 18 வரை சங்கர ஜெயந்தி, 19 ல் லட்ச மோதக கணபதி ஹோமம், 20முதல் 31 வரை அதிருத்ர மகாயாகம், 23 ல் சாரதாம்பாள், சங்கரர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் பாரதி தீர்த்த சுவாமிகள் முன்னிலையில் நடக்கின்றன.நேற்று, அவரை கேரள அமைச்சர்கள் ஜோஸ் தெட்டாயில், ராமச்சந்திரன் கடனப்பிள்ளி, திருவாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா வரவேற்றனர். சுவாமிக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பின், ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
|
இந்தியா
|
சிறிய கிரகத்தில் பனிக்கட்டி கண்டுபிடிப்பு: பூமியில் நீர் தோன்றியதற்கான ஆதாரம்
|
புதுடில்லி:சூரியக் குடும்பத்திலுள்ள ஒரு சிறிய கிரகத்தில், பனிக்கட்டி படர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமிக்கு எப்படி நீர் வந்தது என்று கண்டறிய, ஆய் வாளர்கள் முயன்று வருகின்றனர்.சூரியக் குடும்பத்தில், செவ் வாய் மற்றும் வியாழன் கிரகங்களின் சுற்றுப்பாதைக்கு நடுவில், சிறிய பாறை வடிவிலான கிரகம், சூரியனை சுற்றி வருகிறது.இதன் சுற்றளவு 200 கி.மீ.,"24 தெமிஸ்' என்ற பெயர் கொண்ட அந்த கிரகத்தில், பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட் டுள்ளது.
அமெரிக்காவின் சதர்ன் மெய்ன் பல்கலைக்கழகம் மற்றும் ஜான்ஸ் ஹாப் கின்ஸ் பல்கலைக்கழக வானியல் ஆய்வாளர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் தான், இதைக் கண்டறிந்துள்ளன.ஒரு சிறிய கிரகத்தில், பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. "தெமிஸ்' கிரகத்தில் பனிக் கட்டி மற்றும் உயிர்வாழத் தேவையான கார்பன் அடங்கிய மூலக்கூறுகளும் காணப்படுகின்றன.
இதற்கு முன்பு வரை நடந்த ஆய்வுகளின் படி, சிறிய கிரகங்களில் பனிக்கட்டி இருக்குமானால், அது வேதியியல் மாற்றத் துக்கு உள்ளாகி, தாதுப் பொருட்களாக மாறிவிடும். ஆனால் இந்தக் கிரகத் தில் பனிக்கட்டி அப் படியே இருப்பது விஞ் ஞானிகளைத் திகைக்க வைத்துள்ளது."தெமிஸ்' கிரகத்தில் படிந்துள்ள பனிக்கட்டி படிமத்தின் தடிமன் 0.1 லிருந்து 0.01 மைக்ரோமீட்டர் தான் என்றாலும், அது கிரகத்தில் 10லிருந்து 30 சதவீத இடத்தில் இருக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் எதிர்பாராததாக உள்ளது. இதன் மூலம், பூமியில் எவ்விதம் நீர் தோன்றியது என்று கண்டறிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.கடந்த 400 கோடி ஆண்டுகளில், "தெமிஸ்' கிரகத்திலிருந்த பனிக் கட்டி, எப்படி மறைந்தது என்பதை விஞ்ஞானிகளால் கண்டறிய முடியவில்லை.அதே நேரம், மீண்டும் பனிக்கட்டியை அங்கு எப்படி உருவாக்குவது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை.
வால் நட்சத்திரங்களில் பனிக்கட்டிகள் இருப்பது ஏற்கனவே கண்டறியப் பட்டது தான். வால் நட்சத்திரங்கள் போன் றவை பூமி போன்ற கிரகங்களில் மோதி விழும் போது அவற்றிலுள்ள பனிக்கட்டி மூலக்கூறுகள் பூமியிலும் இடம் மாறி, அதன் மூலம் நீர் மற்றும் தாதுப் பொருட்கள் பூமிக்கு வந்திருக்கக் கூடும் என்பது விஞ்ஞானிகளின் யூகம்.அதை இந்தக் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
|
தமிழகம்
|
பேச்சு, பேட்டி, அறிக்கை
|
காங்கிரஸ் எம்.பி., மணிசங்கர் அய்யர் விரக்தி பேட்டி: டில்லியைப் பொறுத்தவரை, அமைச்சராக இருப்பது பெரிய சுமை. ஒரு கருத்தை மனம் விட்டுப் பேசக் கூட முடியாது. நமக்கான சுதந்திரம் குறித்த அளவுகோல் நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் இந்த பாரம் புரியும். அதனால், அமைச்சர் பதவியை நான் எதிர்பார்க்கவில்லை.
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்று, தண்டனை வழங்கப்படாமல் சிறையில் உள்ள அப்சல் குருவை போல், மும்பை தாக்குதல் குற்றவாளியான அஜ்மல் கசாப்பும் இருந்தால், சட்டமும், நீதித் துறையும், அரசும் கேலிக்குரியவைகளாக ஆகிவிடும். மும்பை குற்றவாளி, கசாப்பிற்கு உடனே தண்டனையை நிறைவேற்றினால் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச நிம்மதி தரும்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி:"புலி' பிரபாகரன் தாயார், பார்வதியை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தமிழக முதல்வருக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. அவரை வைத்து அரசியல் பண்ண வேண்டும் என்று கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் அவ்வளவு மட்டமான குணம் உள்ளவர்கள் அல்ல.
த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி: அரசின் நல்ல விஷயங்களைப் பாராட்டுவோம்; அதே சமயம், மக்கள் பிரச்னைகளுக்காக போராடவும் தயங்க மாட்டோம். விலைவாசி உயர்வை கண் டித்து நடத்தப்பட்ட "பந்த்'தில் நாங்களும் பங்கேற்றோம். இதை வைத்து கூட்டணி முடிச்சு போடுவது சரியல்ல.
இந்திய கம்யூனிஸ்ட் செயலர் மகாதேவன் பேச்சு: முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் கிடைக்காவிட்டால், தென்மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்படும்; வீட்டுக்கு ஒருவர் போராட்டத்திற்கு வர வேண்டும். அப்போது எழுப்பப்படும் குரல், டில்லியில் உள்ள மத்திய அரசை பேச வைக்க வேண்டும். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் துணை நிற்கும்.
சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன் பேட்டி: உலகில் அதிகளவில் சூரிய சக்தி இந்தியாவில் தான் கிடைக் கிறது. குறிப்பாக, தமிழகத்தில் கிடைக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மிகக் குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை செய்ய முடியும். இதன் மூலம், தடையில்லா மின்சாரம் கொடுக்கலாம். அதனால், வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
|
இந்தியா
|
சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்துகிறது காங்.,: ஜனாதிபதியிடம் பா.ஜ., புகார் மனு
|
புதுடில்லி:காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அரசியல் ஆதாயத்துக்காக சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, பா.ஜ., எம்.பி.,க்கள் ஜனாதிபதி பிரதிபாவிடம் நேற்று மனு அளித்தனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த லோக் சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.,க் கள் அனைவரும், நேற்று ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்தனர். "காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, எதிர்க்கட்சித் தலைவர்களை பழி வாங்குவதற்கும், தங்களுக்கு ஆதரவு அளிக்கும் தலைவர்களை மகிழ்ச்சி படுத் துவதற்காகவும் சி,பி.ஐ.,யை தவறாக பயன்படுத்தி வருகிறது' என, ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.
இதற்கு பின், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சி.பி.ஐ.,யின் செயல்பாடுகள் நடுநிலையானதாக இருக்க வேண்டும். எந்தவித விருப்பு, வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் சுயமாக செயல் பட வேண்டும். அப்போது தான், அந்த அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். பா.ஜ., ஆட்சிக் காலத்தில் சி.பி.ஐ.,யை ஒரு போதும் தவறான காரணங்களுக்காக பயன்படுத்தியது இல்லை.தற்போது நிலைமை தலைகீழாகிவிட் டது. காங்கிரஸ் அரசு, சி.பி.ஐ., அமைப் பை தனது அரசியல் ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்துகிறது. காங்கிரசைச் சேர்ந்த சதீஷ் சர்மா, போபர்ஸ் வழக்கில் தொடர்புடைய குட் ரோச்சி போன்றவர்கள் மீதான வழக்கில் அவர்களுக்கு சாதகமாக சி.பி.ஐ., செயல்பட்டது.
மாயாவதி, லாலு, முலாயம் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக, இவர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சி.பி.ஐ., யை ஒரு கருவியாக காங்கிரஸ் அரசு பயன்படுத்துகிறது.அதுபோல், எதிர்க்கட்சித் தலைவர்களை பழி வாங்குவதற்கும் சி.பி.ஐ.,யை காங்கிரஸ் அரசு பயன்படுத்துகிறது. சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில், குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகள் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, போலீசாரின் மன உறுதியை குலைத்து விடும். குஜராத் மாநில பொன் விழா கொண்டாட்டங்கள் நடக்கும் சூழ்நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., மாநில அரசுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் தலையிடுமாறு, ஜனாதிபதியிடம் மனு அளித்துள் ளோம். இதுகுறித்து பார்லிமென்டில் விவாதிக்கவும் அனுமதி கேட்போம்.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.பா.ஜ., மூத்த தலைவர்கள் அத் வானி, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களும் அப்போது உடன் இருந்தனர்.
கசாபுக்கு தூக்கு: பா.ஜ., தேசிய துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, உ.பி.,யில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மும்பை தாக்குதல் வழக் கின் குற்றவாளி கசாபுக்கான தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பார்லி தாக்குதல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள அப்சல் குருவுக்கான தண்டனை தாமதப்படுத்தப்பட்டது போல், இதையும் தாமதப்படுத்தக் கூடாது' என்றார்.
|
இந்தியா
|
ஜெயா பச்சான், மலைச்சாமி உட்பட 51 எம்.பி.,க்களுக்கு பதவி முடிந்தது
|
புதுடில்லி:ராஜ்ய சபா உறுப்பினர் காலம் முடிந்த 51 பேருக்கு நேற்று பிரிவு உபசார விழா நடந்தது.ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவி வகித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பாரதிய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் ராஜ்ய சபா துணை தலைவர் நஜ்மா ஹெப்துல்லா, காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், அ.தி.மு.க.,வை சேர்ந்த மலைசாமி, சமாஜ்வாடிகட்சியை சேர்ந்த ஜெயா பச்சன் உள்ளிட்ட 51 பேருக்கு வரும் ஜூலை மாதத்திற்குள் ராஜ்ய சபா உறுப்பினர் காலம் முடிவடைகிறது.
இதையொட்டி அவர்களுக்கு நேற்று பிரிவு உபசாரம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுகையில், "ஓய்வு பெறும் உறுப்பினர்களில் சிலர் மீண்டும் எம்.பி., யாகலாம்.இந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் பொது வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் பணி செய்யத் தான் போகிறார்கள்' என்றார்.பாரதிய ஜனதா தலைவர் அருண் ஜெட்லி குறிப்பிடுகையில், "ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெறும் சிலர் மீண்டும் இந்த சபைக்கு தேர்வு செய்யப்படலாம். அப்படி வர வாய்ப்பில்லாதவர்களுக்கும் அரசியல் என்ற நிரந்தர பதவி உள்ளது.
இதிலிருந்து ஓய்வு பெறவே முடியாது' என்றார்.பெண்கள் மசோதாவை எதிர்த்து ரகளை செய்த சமாஜ்வாடி கட்சி எம்.பி., நந்தகி÷ஷார் யாதவ் கடந்த மார்ச் மாதம் 8 மற்றும் 9ம் தேதி தான் நடந்து கொண்ட முறைக்காக வருத்தம் தெரிவித்தார். அவர் குறிப்பிடுகையில், "சபை தலைவரை அவமானப்படுத்த வேண்டும், என்ற நோக்கில் நான் செயல்படவில்லை. எதுவாக இருந்தாலும் உறுப்பினர்களை சபைக் காவலர்கள் வெளியேற்றியது முறையற்றது' என்றார்.
அ.தி.மு.க., உறுப்பினர் கோவிந்தராஜ் குறிப்பிடுகையில், "அரசியல் என்பது பொதுசேவைபோன் றது. எங்கே சென்றாலும் நாம் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும். கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.மற்றொரு உறுப்பினர் மலைச் சாமி குறிப்பிடுகையில், "நான் 33 ஆண்டுகாலம் அதிகாரியாக இருந்த போது தெரிந்து கொள்ளாததையெல் லாம், ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த காலத்தில் கற்றுக்கொண் டேன்' என்றார்.
|
இந்தியா
|
சுழற்சி ஆட்சிக்கு பா.ஜ., தயக்கம்
|
புதுடில்லி:ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுழற்சி முறையில் ஆட்சி நடத்த வரவேண்டும், என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாரதிய ஜனதாவை வற்புறுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு கட்சி முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கும் என்று ஒப்பந்தம் செய்யும் முறை இது. ஆனால், இதற்கு பாரதிய ஜனதா மறுப்பு தெரிவித்து வருகிறது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபுசோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கடந்த மாதம் 28ம் தேதி லோக்சபாவில் கொண்டு வரப்பட்ட வெட்டு தீர்மானத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தது. இதனால், பா.ஜ., சிபுசோரன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் சிபுசோரன் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்க பா.ஜ., முடிவு செய்தது.தங்களுக்கு அளித்து வரும் ஆதரவை பாரதிய ஜனதா திடீரென வாபஸ் பெறும் அபாயம் உள்ளதால், சுழற்சி முறையில் ஆட்சி நடத்த பாரதிய ஜனதா முன்வர வேண்டும், என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வற்புறுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மாயாவதியுடனும், கர்நாடகாவில் குமாரசாமியுடனும் சுழற்சிமுறையில் ஆட்சி நடத்தி பாரதிய ஜனதா சூடுபட்டு விட்டது. மேலும் ஒரு முறை ஜார்க்கண்ட்டில் சிபுசோரனுடன் சுழற்சி முறையில் ஆட்சி நடத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு உடன்பாடில்லை.
தற்போது சிபுசோரன், டில்லியிலிருந்து சென்னைக்கு மருத்துவ சோதனைக்காக செல்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்ட் குழு உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை முடிவு செய்ய உள்ளனர்.
|
இந்தியா
|
எம்.பி.,க்களுக்கு சம்பள உயர்வு:அதிக அக்கறை காட்டவில்லை அரசு
|
புதுடில்லி:பார்லிமென்ட் கூட்டு நடவடிக்கை குழு பரிந்துரையின் அடிப்படையில், எம்.பி.,க்களுக்கு ஐந்து மடங்கு சம்பள உயர்வு அளிக்கும் மசோதா, பார்லியில் இப்போது நிறைவேறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.எம்.பி.,க்களுக்கு தற்போது மாதம் 16,000 ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டுமென, பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.சில மாநிலங்களில் எம்.எல்.ஏ.,க்கள் பெறும் சம்பளத்தை விட, தங்களுக்கு மிகக்குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக எம்.பி.,க்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, காங்., எம்.பி., சரண் தாஸ் மகந்த் தலைமையில் அமைக்கப் பட்ட பார்லிமென்ட் கூட்டு நடவடிக்கை குழு, அதன் பரிந்துரைகளை சபாநாயகர் மீராகுமார் மற்றும் ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி ஆகியோரிடம் சமர்ப்பித் துள்ளது.எம்.பி.,க்களுக்கு சம்பளம் மற்றும் இதர சலுகைகளுடன், மாதம் 80,000 ரூபாய் வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்திய அரசுப்பணியிலுள்ள செயலரை விட, எம்.பி.,க்களுக்கு அதிகப்படியான சம்பளம் கிடைக்கும்.ஆனால், இந்த விவகாரத்தை பொறுத்தவரை அரசு உடனடியாக செயல்படாது என்றே கருதப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, இந்த மசோதா தாக்கல் செய்யப் படுவது சந்தேகமே என அரசு வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
இம்மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஒரு எம்.பி.,யானவர் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற முடியும்.எம்.பி.,க்களே தங்களது சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு, மா.கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. நாங்கள் இதனை எதிர்ப்பதால் தான், கூட்டு நடவடிக்கை குழுவில் இடம் பெறவில்லை என, மா.கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப் பினர் சீதாராம்யெச்சூரி தெரிவித்துள்ளார்.
|
இந்தியா
|
அணு விபத்து இழப்பீடு மசோதா: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
|
அணுமின் நிலைய விபத்து இழப்பீடு மசோதா லோக்சபாவில் அறிமுகப்படுத் தப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தன.அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்படுமானால் இழப்பீடாக வெளிநாட்டு நிறுவனங்கள் தரப்பிலிருந்து 500 கோடி ரூபாயை நிவாரணமாக அளிப்பதற்கு வகை செய்யும் மசோதா, நேற்று லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.அணு உலை விபத்து ஏற்பட்டு எத்தனை பேர் பலியானாலும், எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும், 500 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணமாக அளிக்க இம்மசோதா வகை செய்கிறது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
பா.ஜ., எம்.பி.,யான யஷ்வந்த் சின்கா பேசும் போது, "இந்தியாவின் நலனுக்கு முற்றிலும் எதிரானது இம்மசோதா. அமெரிக்காவில் விபத்து ஏற்பட்டால், இழப்பீட்டு தொகையாக 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அதே விபத்து ஏற்பட்டால், 500 கோடி ரூபாய் மட்டுமே வழங்க வகை செய்யப்படுகிறது. அமெரிக்கர்களின் ரத்தமும், இந்தியர்களின் ரத்தமும் ஒன்று தான்; வெவ்வேறானதல்ல.
இந்திய அரசியல் சட்டத்தின்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கு உரிமை உள்ளது. இந்த உரிமையை பறிக்கும் மசோதா இது; சட்ட விரோதமானதும் கூட' என்று கூறினார்.இதேபோல மார்க்சிஸ்ட் எம்.பி.,யான பாசுதேவ் ஆச்சார்யாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.,யான குருதாஸ் தாஸ் குப்தாவும் மசோதாவை கடுமையாக எதிர்த்துப் பேசினர். இம்மசோதா அறிமுகத்தை எதிர்த்து பா.ஜ., இடதுசாரிகள், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவின் நிறை, குறைகளை பேசுவதை விட்டு, தடுக்க வேண்டும் என்ற கருத்தில் பேசுவதாக அவை முன்னவர் பிரணாப் கருத்து தெரிவித்தார்.- நமது டில்லி நிருபர் -
|
தமிழகம்
|
விடியலுக்கு காத்திருந்தும்... அஸ்தமனம் தான்...!யார் வருவார் இவர்களை கை தூக்க?
|
பந்தலூர் : பந்தலூர் சேரம்பாடி வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வந்த வனப்பகுதிகள் பல, வனக்கொள்ளையர்களால் அழிக்கப்பட்டதாலும், நிலங்களை சொற்ப தொகைக்கு ஏமாற்றி வாங்கி, பலர் விரட்டப்பட்டதாலும், பூர்வீகத்தை விட்டு இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவ்வகையில், "சட்டை' செய்யாமல் விடப்பட்ட ஆதிவாசி கிராமம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. பந்தலூர் அடுத்துள்ள சேரம்பாடி - கண்ணம்வயல் சாலையில், சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், தனியார் தோட்டத்தின் கட்டுபாட்டில் உள்ள வனப்பகுதியில், பல ஆண்டுகளாக காட்டுநாயக்கர் பழங்குடி இனத்தை சேர்ந்த 6 குடும்பங்கள் வசித்து வந்தன.மூங்கிலால் வேயப்பட்ட சுற்றுச்சுவர், மூங்கில், கோரைப் புற்களால் வேயப்பட்ட மேற்கூரை என வசித்து வந்த இவர்களின் குடிசைகள், காலப்போக்கில் வானம் பார்த்த கூரையாக மாறின; இப்பகுதியில் மூங்கில்கள் அழிந்து விட்டதாலும், கோரைப் புற்கள் கிடைக்காமல் போனதாலும் இந்நிலை ஏற்பட்டது.கிராமத்துக்கு செல்லும் ஒற்றையடி நடைபாதையை, சிமென்ட் நடைபாதையாக மாற்ற, எஸ்டேட் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இருப்பினும், அரசின் சார்பில் இலவச மின்சாரம், கலர் "டிவி' வழங்கப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால், குடிசைகள் பாதிக்கப்பட்டன. சிறிது காலம் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் தங்கியிருந்து, பிழைப்பு தேடி, கேரள மாநில எல்லைப் பகுதி வனத்தில் தஞ்சமடைந்தனர். தற்போது, 3 குடும்பங்கள் மீண்டும் இதே இடத்தில் குடியேறியுள்ளன; நெடுந்தூரம் சென்று மூங்கில் கோரைப் புற்கள் சேகரித்து, குடிசை எழுப்பியுள்ளனர். ஆண்கள், வனப்பகுதியில் தங்கி தேன் எடுத்து விற்பனை செய்து, கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நகர்த்துகின்றனர்.குடிசைகளுக்கு பதில், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் அமைத்து தர கணக்கெடுக்கப்பட்ட நிலையில், கான்கிரீட் வீடுகள் கட்டித் தர எஸ்டேட் நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். எனவே, இவர்கள் அவதிப்படாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம், எஸ்டேட் நிர்வாத்துடன் ஆலோசித்து, கான்கிரீட் வீடுகள் கட்டவும், தண்ணீர், நடைபாதை உட்பட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
|
தமிழகம்
|
மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு
|
மடத்துக்குளம் : அமராவதி ஆற்றில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை, இன்ஜின் மற்றும் மோட்டார் வைத்து உறிஞ்சப்படுகிறது.மடத்துக்குளம் ஒன்றிய பகுதியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடிநீர் மற்றும் பாசனத்துக்கு அமராவதி ஆற்றையே நம்பி உள்ளனர். மடத்துக்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக அமராவதி ஆறு உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால், ஆற்றில் நீர் வரத்து குறைந்து மிகவும் குறைவான அளவு நீர் மட்டுமே ஆற்றில் தேங்கியுள்ளது.காரத்தொழுவு, கணியூர், கொழுமம் உள்ளிட்ட முக்கிய ஊர்களில் சித்திரைத்திருவிழா நடந்து வருகிறது. சராசரி நாட்களை விட, திருவிழா நாட்களில் அதிகளவு குடிநீர் தேவையுள்ளதால், மக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு வரும் நிலை உள்ளது. இந்நிலையில், ஆற்றில் இருக்கும் சிறிதளவு நீரை இன்ஜின் மற்றும் மின் மோட்டார் வைத்து திருடி விவசாயத்துக்கும், விற்பனைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கொழுமம் பகுதியில் இருந்து அமராவதி ஆற்றுப்படுகையில் உள்ள பழைய ஆயக்கட்டு பகுதியில் இத்திருட்டு நடந்து வருகிறது.ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள விவசாய நிலங்களில் பம்பு செட்டுகளை, மரங்கள் மற்றும் செடிகளுக்கு மத்தியில் மறைவாக வைத்திருக்கின்றனர். அதிலிருந்து ரப்பர் ஓஸ்களை, ஆற்றில் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிலத்தடியில் பதித்துள்ளனர். இரவு நேரத்தில் பம்பு செட்டுகளுடன் இணைக்கப்பட்ட இன்ஜினை பயன்படுத்தி நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதுபோல் கல்லாபுரம், கொழுமம், மற்றும் மடத்துக் குளம் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் திருடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:கோடை காலமானதால் தற்போது குடிநீருக்கே மிகவும் தட்டுப்பாடாக உள்ளது. பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும், தண்ணீரை விலைக்கு வாங்கியும் பயன்படுத்தி வருகிறோம். ஆற்றுப்பகுதியில் தேங்கி உள்ள நீரை தலையில் சுமந்து வந்து பயன்படுத்தி வருகிறோம்.சிலர் ஆற்றில் தேங்கியுள்ள நீரை இன்ஜின் வைத்து உறிஞ்சி பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், தேங்கியுள்ள நீரும் உறிஞ்சப்பட்டு, அமராவதி ஆறு பாலைவனமாக மாறிவிடும். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நீராதாரத்தை காப்பாற்ற வேண்டும், என்றனர்.
|
தமிழகம்
|
உப்பாறு ஓடையில் 3 தடுப்பணைகள் ரெடி
|
உடுமலை : நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், உப்பாறு ஓடையின் குறுக்கே மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.குடிமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. மழைக்காலங்களில் உப்பாறு ஓடையில் வீணாகச் செல்லும் தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை சார்பில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், கசிவு நீர் குட்டை, தடுப்பணை போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் பி.ஏ.பி., உடுமலை கால்வாய் உபகோட்டத்துக்கு உட்பட்ட மூன்று இடங்களில் கசிவு நீர் குட்டை மற்றும் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டது.கொண்டம்பட்டி ஊராட்சி, சனுப்பட்டி கிராமத்தில் உப்பாறு ஓடை மற்றும் வறட்டுகரை பள்ளம் இணையும் இடத்தில் தடுப்பணை கட்ட, 18 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகள் துவங்கின. நீர் வரத்து ஓடை தூர்வாரப்பட்டு கரைகள் வலுப்படுத்தப்பட்டன. மழைக்காலங்களில் வீணாகச் செல்லும் தண்ணீரை தேக்க, தடுப்பணை சுவர் உட்பட கட்டுமான பணிகள் துவங்கி, தற்போது முடிவடைந்துள்ளன. வெள்ளியம்பாளையம், முருங்கப்பட்டி கிராமங்களிலும் தடுப் பணை பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:உப்பாறு ஓடை பகுதியில் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டத்தில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. கடந்தாண்டு திட்டத்தில் மூன்று இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தடுப்பணைகளில் பல மாதங்களுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதன் மூலம் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள் ளது. இதனால், கிணறு மற்றும் போர் வெல்களுக்கு நீர் வரத்து அதிகரிக்கும்.சனுப்பட்டி தடுப்பணை பணிகள் மழைக்காலத்துக்கு முன் முடிக்கப் பட்டுள்ளதால், வரும் பருவ மழை காலத் தில் தண்ணீர் தேங்கும். அடுத்தாண்டு ஐந்து இடங்களில் தடுப்பணை கட்ட, விவசாயிகளின் கோரிக்கை அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அரசு, நிதி ஒதுக்கியதும் பணிகள் துவங்கும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
|
தமிழகம்
|
கல்வி கடனுக்கு அலைக்கழிப்பு : மாணவி பரிதவிப்பு
|
காரைக்குடி : வங்கி கடன் கிடைக்காததால், பி.எட்., தேர்வு எழுத முடியாமல் காரைக்குடி மாணவி ரோஸ்பானு பரிதவிக்கிறார்.காரைக்குடி செஞ் சையை சேர்ந்த இவரது தந்தை கூலி தொழிலாளி. திருப்புத்தூர் அருகே தனியார் கல்லூரியில், கடந்த ஆக., 19 ம் தேதி, பி.எட்., வகுப்பில் சேர்ந்தார்.கடந்த ஆக., 29 ம் தேதி, காரைக்குடி இந்தியன் வங்கியில் கல்வி கடனுக்காக மனு செய்தார். ஆனால், விண் ணப்பத்தை பெறாமல் வங்கி அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். தொடர்ந்து, கல்வி கடனுக்காக போராடி வருகிறார்.இந்நிலையில், வரும் 17ம் தேதி தேர்வு நடக்கவுள்ளது. கட்டணம் செலுத்தாததால், தேர்வு எழுதுவது கேள்விக்குறியாகியுள்ளது.
மாணவி கூறுகையில், ""வசதி படைத்த மாணவர்களுக்கு தான் கல்வி கடன் வழங்கப்படுகிறது. ஏழ்மையான மாணவர்களுக்கு கடன் வழங்க தயங்குகின்றனர்,'' என் றார்.
இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் முத்தையா கூறுகையில், ""மாணவியிடம் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன் தான், விண்ணப்பம் பெறப்பட்டது. கடன் விரைவில் வழங்கப்படும். தேர்வு கட்டண தாமதம் குறித்து, கல்லூரி முதல்வரிடமும் பேச தயாரக உள்ளோம்,'' என்றார்.
|
தமிழகம்
|
அங்கன்வாடி மையம் இல்லாததால் குழந்தைகள்பாதிப்பு மதுரையில் 300 குழந்தைக்கு தெருவோர சத்துணவு
|
மதுரை : மதுரையில் குறைந்த வாடகைக்கு கட்டடங்கள் கிடைக்காததால், அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துமாவு, மதிய உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சுமார் 300 குழந்தைகளுக்கு கலையரங்கம், தெருவோர திண்ணைகளில் வைத்து சத்துணவு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையம் மூலம் இரண்டு வயது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காலையில் சத்துமாவு உருண்டையும், மதியம் முட்டையுடன் கூடிய மதிய உணவும் வழங்கப்படுகிறது. மதிய உணவுக்கு பின் குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும். காலையில் ஆடல், பாடலுடன் கல்வி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகள் கூட்டாக சேர்ந்து விளையாடும் சிறு விளையாட்டுகள் கற்று கொடுக்கப்படுகிறது. அரசு சார்பில் கட்டடங்கள் இல்லாத பகுதிகளில் நகரில் 700 ரூபாய் மதிப்பிலும், கிராமங்களில் 500 ரூபாய் மதிப்பிலும் வாடகைக் கட்டடங்களை அமர்த்தி சத்துணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.சத்துணவு வழங்குவதில் சிரமம்: குடிநீர், மின் வசதி, கழிப்பறை, விளையாடுவதற்கு தேவையான இடம், குறைந்தபட்சம் 15 குழந்தைகள் படுத்து தூங்குவதற்கு தேவையான காற்றோட்டம் மிகுந்த கட்டடங்கள் வாடகைக்கு கிடைக்காமல், ஒருங்கிணைப்பாளர்கள் சிரமம் அடைகின்றனர். வேறுவழியின்றி ஊராட்சி கலையரங்கம், "ஓசி'யில் கிடைக்கும் திண்ணைகளில் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். அங்கேயே உணவும் வழங்கப்படுகிறது.
300 குழந்தைகள் பாதிப்பு: மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிகுளம் ஊராட்சியில் இரண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்கள் உள்ளன. இதில் 15 குழந்தைகள் கொண்ட ஒரு பிரிவிற்கு கட்டடம் கிடைக்காமல், செட்டிகுளம் ஊராட்சி கலையரங்கில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதைப்போல் மதுரையில் உள்ள 17 தொகுப்புகளில் (100 குழந்தைகள் கொண்டது ஒரு தொகுப்பு) மூன்று தொகுப்புகளின் (300 குழந்தைகள்) நிலைமை மோசமாக உள்ளது. வசதியற்ற இடத்தில் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். பெற்றோரிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டு குழந்தைகளை அழைத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைக்கு கோடை விடுமுறை: தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தவுலத் கூறும்போது, ""குறைந்த வாடகைக்கு கட்டடங்கள் கிடைப்பதில்லை. அரசு கட்டடங்களில் இயங்கும் மையங்களில் கூட அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடங்களுக்கான வாடகையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், தற்போது ஓரளவு வாடகை கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. 30 சதவீத மையங்கள் வசதி குறைவான கட்டடங்களில் இயங்குகின்றன. சுட்டெரிக்கும் வெயிலில் வசதியற்ற கட்டடங்களில் குழந்தைகளை நீண்ட நேரம் வைத்திருப்பதால், வேனல் கட்டிகள், சரும நோய் ஏற்படுகிறது. எனவே, கோடை முடியும் வரை சத்துணவு மையங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது,'' என்றார்.
|
தமிழகம்
|
38ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குளம்
|
நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே கனமழைக்கு 38 ஆண்டுகளுக்குப்பின் குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நிலக்கோட்டையில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர். குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டது. விவசாயம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் கடந்த 30 அன்று இரவு 16 செ.மீ., அளவிற்கு மழை பெய்தது. இதனால் நிலக் கோட் டை பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீர் வந் தது. சீத்தாபுரத்தில் உள்ள பாப்பாகுளம் நிரம்பி மறுகால் சென்றது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும் போது, "1973க்குப் பின் தற்போது தான் நிரம்பி உள்ளது. 45 ஏக்கர் நிலம் பயன் அடையும். குளம் நிரம்பியதால் அருகில் உள்ள கிணறுகளிலும் ஊற்றி பிடிக்கும்' என்றார். வைகை ஆற்றில் நேற்று வரை மழை வெள்ளம் சென்றது. குடிநீர் திட்ட கிணறுகளில் ஊற்று பிடிக்கத் துவங்கியதால் பத்து நாட்கள் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது.
|
தமிழகம்
|
அடிப்படை வசதி செய்யாததால் கொழுமம் ஊராட்சி மீது அதிருப்தி
|
மடத்துக்குளம் : அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்காததால், கொழுமம் ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மடத்துக்குளம் அருகே கொழுமத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். குமரலிங்கம், பாப் பான்குளம், சங்கரமநல்லூர், மடத்துக்குளம், குளத்துபாளையம், ருத்ராபாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் பங்கேற்பர்.இக்கோவில், கொழுமம் ஊராட்சியில் அமைந்துள்ளது. திருவிழா நாட்களில் பல ஆயிரம் மக்கள் பங்கேற்பர்.கோவில் மற்றும் கொழுமம் சுற்றுப்பகுதியில் சுகாதாரம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், குடிநீர் உள்ளிட்ட பல முக்கிய அடிப்படை வசதிகள், மக்களுக்கும், பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பிலும், ஊராட்சியினர் சார்பிலும் செய்து கொடுக்க வேண்டும்.ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. அங்கு கொட்டப்படும் கழிவுகள் அள்ளப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. கழிப்பிடங்கள் இல்லாமல் பெண்கள் மற்றும் வயதானவர்கள் தவிக்கின்றனர். குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் பி.டி.ஓ., இந்துமதி கூறுகையில், ""விழா நடக்கும் நாட்களில் குடிநீர், கழிப்பிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடியாக செய்து கொடுக்கும்படி கூறப்பட்டுள்ளது,'' என்றார்.
கொழுமம் பகுதி மக்கள் கூறுகையில், "ஆண்டுதோறும் நடந்து வரும் விழா குறித்து ஊராட்சியினர் மெத்தனமாக இருப்பது வேதனைக்குரியது. பொது நல சங்கங்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,' என்றனர்.
|
தமிழகம்
|
வீட்டை காலி செய்ய நோட்டீஸ் 20 குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி
|
இடைப்பாடி: கொங்கணாபுரம் சந்தைப்பேட்டை புறம்போக்கு நிலத்தில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் 20 குடும்பத்தினர், வீட்டை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான சந்தைப்பேட்டை புறம்போக்கு நிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.தற்போது இந்த இடத்தை காலி செய்து பேரூராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குடியிருப்பவர்களுக்கு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், "அந்த இடத்தை எங்களுக்கே பட்டா வழங்க வேண்டும்' என்று கோரியுள்ளனர்.இது குறித்து ஸ்ரீதர் என்பவர் கூறியதாவது:பேரூராட்சியில் குடிநீர் இணைப்பும், உப்பு தண்ணீர் இணைப்பும் பெற்று மாதம் தவறாமல் கட்டணமும் செலுத்தி வருகிறேன். 40 ஆண்டுகளாக வரி செலுத்தி வருகிறேன். வீட்டை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். நாங்கள் குடியிருக்கும் இடத்தையே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, தமிழக முதல்வருக்கும், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கும் மனு கொடுத்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சரவணன் என்பவர் கூறும்போது, ""மூன்று ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் அனைத்து புறம்போக்கு நிலங்களுக்கும் பட்டா வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.""ஆனால், இந்த புறம்போக்கு நிலம் சந்தைப்பேட்டை புறம்போக்கு நிலமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பினால், அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் அவர்களை காலி செய்ய முடியாது என்பதால், நீதிமன்றம் மூலம் கேவிட் பெற்று, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் பேரூராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பாமல் நீதிமன்றம் மூலம் அனுப்பியுள்ளனர்,'' என்றார்.
பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ""வெளியூரில் இருப்பதால் நீங்கள் பேசுவது கேட்கவில்லை,'' என்று கூறி தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.