category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஈரோட்டில் பொதுமக்கள் துணை மின் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு : ஈரோட்டில் பொதுமக்கள் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு பெருந்துறையில் நல்லாம்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் தொடர்ந்து 9 மணி நேரம் மின்வெட்டு நிலவியது. இதனையடுத்து விவசாயிகள், விசைத்தறி தொழிலாளர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து திங்களூர் துணை மின் நிலையத்தை மு...
இந்தியா
தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு : கசாப் முடிவு
மும்பை : மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பயங்கரவாதி அஜ்மல் கசாப், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளான். இலவச வக்கீ்ல் சேவை குழு மூலம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளான். சிறைத்துறை அதிகாரிகள் மூலம் இதற்கான ஏற்பாடுகளை அவன் செய்து வருவதாக...
General
ஓடி வருகிறார் ஒபாமா ; இந்தியா- அமெரிக்கா உறவு பிரிக்க முடியாததாக இருக்கும் என்கிறார்
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் முறையாக ஒபாமாஇந்தியா வரவுள்ளார். இதனை அறிவிப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், 21 ம் நூற்றாண்டில் இந்தியாவும், அமெரிக்காவும் உலக வளர்ச்சிக்கு பங்காற்றுவதில் முக்கியப்பங்கு வகிப்பதாக இருக்கும் என்றும், இந்திய அமெரிக்க உறவு என்றும் நீடீத்திருக்கும் என்றும் வாஷிங்டனில் அதிபர்...
தமிழகம்
கோவையில் கொ.மு.க., மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
கோவை : கோவையில் கொங்கு முன்னேற்ற கழக மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள் இறக்க அனுமதி கேட்டு போராட்டம் நடத்தியபோது கொங்கு முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பெண்களை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மோசமாக விமர்சித்தார் என்பது புகார். இதற்கு அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வர...
தமிழகம்
ராஜ்யசபா எம்.பி., தேர்தல் : காங்., வேட்பாளர் அறிவிப்பு
சென்னை : ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் , காங்கிரஸ் வேட்பாளரை கட்சி அறிவித்துள்ளது. சுதர்சனம் நாச்சியப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம்
ஆபத்து பயணம் அவசியமா?
எத்தனை தான் அவசர உலகம் என்றாலும், நம்மவர்களுக்கு உயிர்ப் பிரச்னையில் இத்தனை அலட்சியம் கூடாது. அவசரம், அலட்சியம், சிக்கனம் என ஏதேதோ காரணங்களுக்காக வாகனங்களில் அதிகம் பேர் பயணிக்கின்றனர். கொள்ளளவை மீறி கூடுதலாக செல்வதால், வாகனத்தை கட்டுப்படுத்தவோ, வளைவுகளில் திருப்பவோ சிரமப்படும்போது, "வாழ்க்கை'ப் பயணம் வழியை நோக்கிச் செ...
தமிழகம்
எஸ்.ஏ.ராஜா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சுப்ரீம் கோர்ட் அனுமதி
திருநெல்வேலி : ஆலடி அருணா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் எஸ்.ஏ.ராஜா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. அவர் 2 மாதங்கள் தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள்
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி கொலை செய்த கொடூரனுக்கு சேலம் விரைவு கோர்ட் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டது. சேலம் மாவட்டம் பதப்பேட்டையைச் சேர்ந்தவர் மரியசூசை. இவரது மனைவி மகாலட்சுமி. மகாலட்சுமியின் நடத்தை சரி இல்லாததால், மரியசூசை அவரை பிரிந்தார். அதன் பின்னர் மரியசூசை வேறு இடத்தில் திருமண...
தமிழகம்
ராஜ்யசபா எம்.பி., தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
சென்னை : ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியன், ஈரோடு கே.வி.ராமலிங்கம் ஆகிய இருவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று மனுதாக்கல் செய்தனர்.
தமிழகம்
திருச்சியில் கட்டாய திருமணத்தில் இருந்து சிறுமி மீட்பு
திருச்சி : திருச்சியில் கட்டாய திருமணத்தில் இருந்து சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். திருச்சி மாவட்ட உறையூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மணிமொழி (16) என்று மகள் இருக்கிறார். 10ம் வகுப்பு படித்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக மணிமொழியை உறவுக்காரப் பையன் சிவக்குமாருக்கு திருமணம் செய...
தமிழகம்
பயணிகள் வாகனங்களில் உலா வரும் ஆபத்து
ஒருபுறம் பயணிகள் வாகனங்களில் இரும்பு பைப், கம்பி, தகர சீட்டுகளை ஏற்றிச் செல்வதும், மறுபுறம் சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வது என விதி மீறிய பயணங்கள் தேனி மாவட்டத்தில் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. ஆட்டோக்களில் பயணிகளை மட்டுமே ஏற்றவேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணான இந்த பயணங்க...
தமிழகம்
திருச்சி ஏர்போர்ட்டில் ஜூன் 15ம் தேதி முதல் கூடுதல் கட்டணம்
திருச்சி : திருச்சி ஏர்போர்ட்டில் ஜூன் 15ம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையம் அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட்டதற்காக உள்நாட்டு பயணிகளுக்கு 180 ரூபாயும் , சர்வதேச பயணிகளுக்கு ரூ. 360ம் வசூலிக்கப்பட இருக்கிறது. இந்த கட்டண வசூ...
இந்தியா
மீண்டும் எம்.பி.,யாகிறார் அம்பிகா சோனி
புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி., தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில வேட்பாளராக மத்திய அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்கப்பட்டுள்ளார். சட்டீஸ்கரில் இருந்து மோனிசா கிட்வாய், ஜார்கண்டில் இருந்து தீரஜ் பிரசாத் சாஹூ, தமிழகத்தில் இருந்து சசுதர்சனம் நாச்சியப்பன், மகாராஷ்டிராவில் இருந்து விஜய் தர்தா, ...
தமிழகம்
எதிர்மறையாக செயல்படுவது இனிக்குமோ
எப்போதுமே எதிர்மறையாக செயல்படுவதென்றால் பொது மக்களுக்கு அலாதி பிரியமாக உள்ளது. அதுவும் மதுரையில் போக்குவரத்து விதிமுறையை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினால், அதை மீறுவதே பலருக்கு கடமையாக உள்ளது. "நோ என்ட்ரி'க்குள் வாகனத்துடன் நுழைவது, ஆஸ்பத்திரி, பள்ளி அருகில் "ஹாரனை' அலற விடுவது, நீண்ட கம்பிகளை டிரை சைக்கி...
தமிழகம்
வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் : தலைமை செயலர் தகவல்
கோவை : தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலர் ஸ்ரீபதி தெரிவித்தார். மேற்குவங்கம், பஞ்சாப் போன்ற மாநில‌ங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படும் என்றும் இதன் மூலம் மின் பற்றாக்குறையை சற்று சமாளிக்கலாம் என்றார். மேலும் கூடங்குளம் அணு மின...
தமிழகம்
சிவகாசியில் லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர் கைது
சிவகாசி : சிவகாசியில் லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர் கைது செய்யப்பட்டார். சிவகாசி தாலுகா வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏழைப் பெண்கள் திருமண திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நல உதவியை பெற விண்ணப்பித்திருந்தவரிடம் லஞ்சம் வாங்கிய போது அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும், களவுமாக பிடிபட்டார்.
இந்தியா
காமன்வெல்த் போட்டி : டிக்கெட் விற்பனை தொடங்கியது
புதுடில்லி : டில்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டி டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் விற்பனை டில்லி துனை நிலை கவர்னர் தஜேந்தர் கானா தொடங்கி வைத்தார். டிக்கெட் விலை ரூ. 50 ல் இருந்து ரூ. 50,000 வரை நிர்னயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை www.tickets.cwgdelhi2010.org என்ற இணையதளத்தில் புக் செய்யலாம்.
தமிழகம்
தங்கம் விலை குறைந்தது
சென்னை : இவ்வளவு விலையா என்று தங்கம் வாங்க பயப்படும் அளவுக்கு அதிகரித்து வந்த தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. ஆயிரத்து 712 ஆக இருந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 696 க்கு விற்கப்படுகிறது.
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
மும்பை : இந்திய பங்குச்சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று வர்த்தகம் ஏறுமுகத்தில் முடிந்திருக்கிறது. காலையில் ஊசலாட்டத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வர்த்த நேர முடிவின் போது 81 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 104 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 23 புள்ளிகள்...
தமிழகம்
ஆத்தூரில் ரூ. 79ஆயிரம் பணம் கொள்ளை
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் பட்டப்பகலி்ல் போலீஸ் ஸ்டேஷன் அருகில் ரூ. 79,000 பணம் கொள்ளைய‌டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் சிவசங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயம் செய்து வருகிறார். இவர் இன்று பிற்பகல் ஆத்தூர் கனரா வங்கியில் இருந்து ரூ. 79,000 பணம் எடுத்துக் கொண்டு பைக்கில...
இந்தியா
பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது இந்தியன் முஜாகிதீன்
புதுடில்லி : இந்தியன் முஜாகிதீன் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள் துறை அமைச்சகம் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது.
இந்தியா
பெரியகுளத்தில் விபத்து : அரசு பஸ் மோதி காரில் சென்ற 4 பேர் பலி
பெரியகுளம் : பெரியகுளத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். பெரியகுளத்தில் கார் - அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற, தேனி பி.சி. பாயிண்ட் கம்ப்யூட்டர் சென்டர் அதிபர் கதிரேசன், சிபி ‌ஹைவேஸ் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் மோகன சுந்தரம், புத்தக விற்பனையாளர் சுபாஷ் மற்றும் டிரைவர் செந்தில் ஆகிய 4 பேர...
இந்தியா
சி.பி.ஐ., விசாரணை மே. வங்கத்துக்கு நோட்டீஸ்
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் ஜார்கிராமில் நடந்த கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 148 பேர் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சி.பி.ஐ., விசாரணை குறித்த ‌நோட்டீஸ் மேற்குவங்க அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நோட்டீசை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள மே. வங்க...
தமிழகம்
பிரபல தாதா மணிகண்டன் கைது
திண்டிவனம் : தனது தம்பியின் இறப்பிற்காக கடைகளை அடைக்கக்கூறி மிரட்டிய தாதா மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பிரபல தாதா மணிகண்டன். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில், தனது தம்பியின் இறப்பிற்காக அங்குள்ள கடைகளை அடைக்கக்கோரி மிரட்டியுள்ளார். தடுத்த போலீசாரையும் மிரட்டியதால், போலீசார் அவரை கைது செய்து திண்டிவனம் மாஜிஸ...
தமிழகம்
தேயிலை தோட்டத்தில் புகுந்த பஸ் : பயணிகள் உயிர்தப்பினர்
வால்பாறை : வால்பாறை அருகே, கட்டுப்பாடு இழந்த அரசு பஸ், தாறுமாறாக ஓடி தேயிலை தோட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், வால்பாறை புதுக்காடு எஸ்டேட் பகுதியிலிருந்து, பொள்ளாச்சிக்கு தினமும் பஸ் (தடம் எண் 1631) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை, டிரைவர் ஏசுதாஸ் வழக்கம் போல் ஓட்டிச்சென்றார். பு...
தமிழகம்
மேட்டுப்பாளையம் அருகே மினி பஸ் மீது ரயில் மோதி 3 பேர் பலி
பெரியநாயக்கன்பாளையம்: மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த பாசஞ்சர் ரயில், லெவல் கிராசிங்கில் ஒரு மினி பஸ் மீது மோதியதில் பஸ்சிலிருந்த 3 பேர் பலியாயினர்; 10 பேர் காயம் அடைந்தனர். ரயில் வருவதைக் கவனிக்காமல் பஸ்சை அதன் டிரைவர் ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் வருவதைக் கண்ட ...
தமிழகம்
ராமேஸ்வரம் கோயில் வடக்கு கோபுரம் பணி துவக்கம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் நின்றுபோன வடக்கு கோபுரம் கட்டும்பணி ஆறு ஆண்டுகளுக்குப்பின் இன்று துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமைபெறாமல் மொட்டையாக காட்சியளித்துக் கொண்டிருந்த வடக்கு, தெற்கு கோபுரங்களை கட்டுவதற்கு ஜெயேந்திர சங்கரச்சாரியார் முன்வந்ததை தொடர்ந்து, 2001 செப். 13 ...
தமிழகம்
போலி ஆவணம் தயாரித்து பாஸ்போர்ட் திருச்சி கும்பலில் ஒருவர் கைது
திண்டுக்கல் : நூதன முறையில் போலி ஆவணங்களை தயாரித்து பாஸ்போர்ட் பெற்றுத்தரும் கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டைச் சேர்ந்த பாலமுருகன்,அருண்குமார் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 11.11.2009ல் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுடன் மேலும் இரண்டு பேர் வந்த...
தமிழகம்
ஜூன் 15 முதல் திருச்சி விமான நிலையத்தில் மேம்பாடுக்கட்டணம்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஜூன் 15ம் தேதி முதல் விமானநிலைய மேம்பாடு கட்டணமாக, உள்நாடு பயணம் செய்பவர்களிடம் 150 ரூபாய், வெளிநாடு செல்லும் பயணிகளிடம் 360 ரூபாய் என வசூலிக்கப்பட உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டெர்மினல் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் பயணிகள் பயன்பா...
தமிழகம்
போலி காப்பகத்தில் குழந்தைகளை அடைத்த போதகர் மனைவி கைது
நாகர்கோவில் : அனுமதி பெறாமல் போலி காப்பகம் நடத்தி குழந்தைகளை அடைத்து வைத்த வழக்கில் போதகர் மனைவி கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே நல்லூரில் சாரோன் சிறுவர் இல்லம் செயல்பட்டு வந்தது. பெனியேல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் போதகர் டைட்டஸ் பால்துரை என்பவர் இந்த இல்லத்தை நடத்தி வந்...
தமிழகம்
2 படகுடன் எட்டு மீனவர்கள் மாயம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் முனியசாமி, முருகநாதன், கார்மேகம், சண்முகம், தங்கச்சிமடத்தை சேர்ந்த கென்னடி என்பவரின் படகில் மீனவர்கள் கென்னடி, ஜெயராமு, ராஜேஸ், நாட்டார் ஆகியோர் ,கடந்த 2 ல் ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வழக்கம்போல் அ...
தமிழகம்
கலெக்டர் அலுவலக லிப்டில் சிக்கி தவித்த அலுவலர்கள்
தேனி : மின் தடையால் ஏற்பட்ட விபரீதத்தால் கலெக்டர் அலுவலக லிப்ட் டில் சிக்கிய இரண்டு அலுவலர்கள் ஒரு மணி நேரம் தவிக்க நேரிட்டது. தேனி கலெக்டர் அலுவலகம் நான்கு மாடிகளை கொண்டது. இங்கு அலுவலர்கள் செல்வதற்காக இரண்டு லிப்ட் உள்ளது. இவற்றில் ஒரு லிப்ட்டை கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அலுவலர்கள் ...
தமிழகம்
ஆசிரியை நியமனத்தில் மோசடி : வாலிபர் கொலை
திருநெல்வேலி: நெல்லை அருகே ஆசிரியை நியமனத்தில் மோசடி காரணமாக வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் திருவேங்கடத்தையடுத்த மைப்பாறையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு ஆசிரியை நியமனம் செய்வதில் மோசடி செய்ததாக தொடர்பாக மற்றொரு பிரிவினருக்கும், ரவிச்சந்திரனுக்குமிடையே முன்விரோதம் இருந்...
இந்தியா
தேசிய ஒருங்கிணைப்பு குழுவில் உத்தவ் தாக்கரே
புதுடில்லி : தேசிய ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக சிவசேனா கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரேயின் பெயரை பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகம்
குளிர்பான பாட்டிலில் இறந்து மிதந்த தவளை
சிதம்பரம் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பு.முட்லூரில் வாங்கிய குளிர்பான பாட்டிலில் தவளை இறந்து மிதந்தது. சிதம்பரம் அடுத்த பு.முட்லூரைச் சேர்ந்தவர் அஸ்கர்அலி (36). வக்கீல் குமஸ்தாவான இவரது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்ததால் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் உள்ள பேக்கரி ஒன்றில், 500 மிலி., "பெப்சி' பாட்டில் வாங்கினார். அதி...
தமிழகம்
நாமக்கல் அருகே பள்ளி மேற்கூரை இடிந்து மாணவர்கள் காயம்
நாமக்கல் : நாமக்கல் அருகே பள்ளி விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே பொரச்சபாளையத்தில் விநாயகா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் இரவு உணவுக்காக விடுதியிலுள்ள சாப்பாட்டு அறையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ...
General
நவம்பரில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகை
வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் ஒபாமா, நவம்பரில் இந்திய பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை அமெரிக்கா காலம் காலமாக வைத்திருக்கவும் விரும்புகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்தியா வரும்படி ஏற்கனவே, பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா சென்ற போது அழைப்பு விடுத்திருந்தார். இதற்கிடையே அமெரிக்க பயணம் ம...
தமிழகம்
இந்தியர் சுரேஷிற்கு முக்கிய பதவி
வாஷிங்டன் : அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை இயக்குனராக சுப்ரா சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது சுரேஷ், மாசாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவராக உள்ளார். அமெரிக்காவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனராக சுரேஷ், ஒபாமா நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். மிக உயர்ந்த இந்த பத...
General
பயங்கரவாதி ஹெட்லியிடம் விசாரிக்க குழு காத்திருப்பு
சிகாகோ :அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம் விசாரணை நடத்த வந்த இந்திய விசாரணைக் குழுவினர் தற்போது, சிகாகோவில் ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு, ஹெட்லியிடம் விசாரணை நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி (வயது 49) என்பவன், சில மாதங்களுக்கு முன், சிகாகோவில் கைது செய்யப்...
தமிழகம்
வங்கதேச தலைநகரில் பயங்கர தீ: 125 பேர் பலி* நாடே அதிர்ந்த பெரிய சோகம்
தாகா (வங்கதேசம்) :வங்கதேச தலைநகர் தாகாவில் நேற்று முன்தினம் இரவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 125 பேர் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில்  வங்கதேசமே சோகத்தில் மூழ்கியது. தாகாவின் ஒரு பகுதியான மக்கள் நெருக்கடி மிகுந்த பழைய தாகாவில், ஆறு மா...
General
மார்க் ட்வைன் சுயசரிதை வெளிவருகிறது
லாஸ் ஏஞ்சல்ஸ் : உலகப் புகழ் பெற்றவரும், அமெரிக்க எழுத்தாளருமான மார்க் ட்வைன் எழுதிய சுயசரிதை, அவர் இறந்து ஒரு நூற்றாண்டு கழிந்த நிலையில், விரைவில் வெளிவர இருக்கிறது. இதுவரை அவரைப் பற்றி நிலவி வந்த கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அவரது, "ஒரிஜினல்' சுயசரிதை இருக்கும். அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் மா...
தமிழகம்
ஜெ., முன்னிலையில் அ.தி.மு.க.,வினர் மனு தாக்கல் : 2 வேட்பாளர்களுக்குமே கோடிக்கணக்கில் சொத்து
சென்னை : ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க., வேட்பாளர்கள், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இவர்களில், மனோஜ் பாண்டியன் தனக்கு 2.34 கோடி ரூபாய் மதிப்புக்கும், கே.வி. ராமலிங்கம் 1.74 கோடி ரூபாய் மதிப்புக்கும் சொத்து உள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்...
தமிழகம்
பழநி யூனியன் கவுன்சிலருக்கு முன்ஜாமீன்
மதுரை : பழநி ஆயக்குடி அருகே பொட்டம்பட்டியில் உரக்கடை நடத்தி வருபவர் ஞானபண்டிதன். இவரது கடையில் புகுந்து ராமசாமி, அவரது உறவினர் நாச்சிமுத்து ஆகியோர் சேதப்படுத்தினர். கடை முன் நின்ற காரையும் சேதப்படுத்தினர். ஞானபண்டிதன் புகாரின்படி, ராமசாமி உட்பட இருவர் மீது ஆயக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராமசாமி ஐகோர்ட் கிளை வ...
இந்தியா
ரத்தோர் மனு மீதான தீர்ப்பு தள்ளி வைப்பு
சண்டிகார் : ருச்சிகா தற்கொலை வழக் கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி., ரத் தோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, ஜூன் 29ம் தேதிக்கு கோர்ட் தள்ளி வைத்துள்ளது. டென்னிஸ் வீராங் கனை ருச்சிகா தற் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட டி.ஜி.பி., ரத்தோருக்கு 18 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது மன...
இந்தியா
கிரிக்கெட் அணி ஏலம் : மந்திரி பவார், மகள் சுலே தொடர்பு
புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட்  புனே அணி ஏல விவகாரத்தில்  தங்கள் குடும்பத்திற்கு எந்தவித  தொடர்பும் இல்லை என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ., கோரிக்கை வைத்திருக்கிறது. மீண்டும் கிரிக் கெட் ஏல விவகாரப் ப...
இந்தியா
தமிழகத்திலிருந்து சுதர்சன நாச்சியப்பன்: சிட்டிங் எம்.பி.,க்கே மீண்டும் வாய்ப்பு
தமிழகத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ராஜ்யசபா எம்.பி., சீட்டிற்கான வேட் பாளராக சுதர்சன நாச்சியப் பன் பெயர் மேலிடத்தால்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எம்.பி.,யாக இருந்த சுதர்சன நாச்சியப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்டவர்கள், "சீட்' கேட்டு  முற்றுகையிட்ட போதும்  ப...
இந்தியா
பா.ஜ.,வின் ரூடி வேட்புமனு: சந்தன் மித்ரா, தருண் தேர்வு
புதுடில்லி : மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மாநிலங்களுக்கான ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்களை பா.ஜ., அறிவித்துள்ளது. பீகாரில் நேற்று  பா.ஜ.,வின்  முன்னாள் அமைச்சரான  ரூடி, மனு தாக்கல்  செய்தார். பா.ஜ., சார்பில் ராஜ்யசபா வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்து அக்கட்சியின் பார்லிமென்ட் குழு நேற்று கூடியது. அதன் பின் ...
தமிழகம்
பஸ் கவிழ்ந்ததில் ஒருவர் பலி
திருநெல்வேலி : நெல்லை அருகே அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் நோக்கிச்சென்ற அரசு பஸ் வீரவநல்லூர் அருகே பாலத்தில் எதிரே வந்த கார் மீது மோதாமல் தவிர்க்கும்போது விபத்துக்குள்ளானது.பஸ் பாலத்தில் கவிழ்ந்ததில் 40 பேர் படுகாயமுற்றனர். இதில் காயமுற்று நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத...
இந்தியா
ஜெய்ராம் ரமேஷ் எம்.பி.,யாக தேர்வு நிச்சயம்
ஐதராபாத் : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஆந்திராவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுகிறார்.ராஜ்யசபா தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் ஆறு இடங்கள் காலியாக உள்ளன. இதில் நான்கு இடங்கள் காங்கிரஸ் கட்சி சார்பிலும், இரண்டு இடங்கள் தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் நிரப்பப்பட உள்ளன. நான்கு இடங்களில் ஒன்...
தமிழகம்
3 அரசு மருத்துவ கல்லூரிகள் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படுமா?
சென்னை : தர்மபுரி, திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு குழு, மறு ஆய்வு செய்யவுள்ளதால், இக்கல்லூரிகள் முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், மதுரை, செங்கல்பட்டு, திருநெல்...
இந்தியா
ஐகோர்ட்டில் கசாப் மேல்முறையீடு : வக்கீலை அமர்த்தக்கோரி விண்ணப்பம்
மும்பை : மும்பைத் தாக்குதல் வழக்கில் சிறப்பு கோர்ட் விதித்த மரண தண்டனையை எதிர்த்து, பயங்கரவாதி அஜ்மல் கசாப், ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளான். அத்துடன், ஐகோர்ட்டில் தனக்காக வாதாட வக்கீலை நியமிக்க வேண்டும் என்றும், சட்ட உதவிக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளான். கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குத...
இந்தியா
மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ கூட்டம் முதல்வர் புத்ததேவ் பங்கேற்கவில்லை
கோல்கட்டா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் இன்று முதல் இரண்டு நாட்கள் டில்லியில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கலந்து கொள்ள வில்லை. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த உள் ளாட்சித் தேர்தலில், இடதுசாரி முன்னணி படுதோல்வி அடைந்தது. இதனால், பொலிட்பீரோவில் பெ...
இந்தியா
சுரங்கப் போராட்ட பெயரில் காலூன்றும் மாவோயிஸ்டுகள்
ஐதராபாத் : சத்திஸ்கரிலும், மேற்கு வங்கத்திலும் வன்முறை நிகழ்த்திய கையோடு, வட ஆந்திரக் கடற்கரைப் பகுதியில் வரவிருக்கும் பாக்சைட் சுரங்கத்துக்கு எதிரானப் போராட்டம் மூலம், மாவோயிஸ்டுகள், ஆந்திராவில் மீண்டும் காலூன்ற முயல்கின்றனர். ஆந்திராவின் வட கடற்கரைப் பகுதியான விசாகப்பட்டினம் மாவட் டத்தில் பாக்சைட் சுரங்கத்தைத் தனியார...
தமிழகம்
நெல்லையில் பஸ் கவிழ்ந்ததில் ஒருவர் பலி
திருநெல்வேலி : நெல்லை அருகே அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் நோக்கிச்சென்ற அரசு பஸ் மாலையில் வீரவநல்லூர் அருகே பாலத்தில் எதிரே வந்த கார் மீது மோதாமல் தவிர்க்கும்போது விபத்துக்குள்ளானது.பஸ் பாலத்தில் கவிழ்ந்ததில் 40 பேர் படுகாயமுற்றனர். இதில் காயமுற்று நெல்லை மருத்துவக்கல்ல...
தமிழகம்
கோவையில் மினி பஸ் - ரயில் மோதல்: 5 பேர் பலி
பெ.நா.பாளையம் : கோவை அருகே பெரியநாயக்கன்பாளையத்தில் ஆள் இல்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை, கடக்க முயன்ற மினி பஸ் மீது, ரயில் மோதியது. இதில், பயணம் செய்த ஐந்து பேர் இறந்தனர். கோவை மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் பாசஞ்சர் (சிபி3 ஏ) கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இயங்குகிறது. மேட்டுப்பாளையத்தில் பாசஞ்சர் ரயில் நேற்று மாலை 4.20 மணி...
தமிழகம்
தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி: கெடுபிடியை அரசு தளர்த்தியதால் பலன்
சென்னை : ஆட்டோ பெர்மிட் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 17 ஆயிரம் பேருக்கு ஆட்டோ பெர்மிட் வழங்கலாம் என, போக்குவரத்து கமிஷனர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. எனவே, விரைவில் தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். தமிழகத்தில் ஆட்டோ பெர்மிட் வாங்க வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கில் செலவு செய்தால் தான் வாங்க முட...
தமிழகம்
ஒரு கோடி ரூபாய் நில மோசடி : தந்தை, மகன் உட்பட மூவர் கைது
திருவள்ளூர் : போலி ஆவணம் தயாரித்து ஒரு கோடி ரூபாய் நில மோசடி செய்த தந்தை, மகன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சனம்; இவரது மகன் ஜெயச்சந்திரன்(45). இவரது பாட்டி பொம்மியம்மாள். இறந்து விட்டார். இவருக்கு, 1996ம் ஆண்டு இரண்டு ஏக்கர் 55 சென்ட் நிலத்தை பாட்டி, உ...
தமிழகம்
போலி ஆவணம் தயாரித்து பாஸ்போர்ட் திருச்சி கும்பலில் ஒருவர் கைது
திண்டுக்கல் : போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற்றுத்தரும் கும்பலை சேர்ந்த ஒருவரை, போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டைச் சேர்ந்த பாலமுருகன், அருண்குமார், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 2009ல், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். இவர்களுடன், மேலும் இரண்டு பேர் வந்தனர். இவர்கள் வைத்திருந்த ...
தமிழகம்
அரசு விடுதியில் சாப்பிட்ட பிளஸ் 2 மாணவிகள் மயக்கம்
திருநெல்வேலி : செங்கோட்டையில் பள்ளி மாணவிகள் 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் செயல்படும் எஸ்.ஆர்.எம்.,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் அருகில் உள்ள ஆதிதிராவிட அரசு விடுதியில் தங்கியுள்ளனர். பிளஸ் 2 பயிலும் மாணவிகள் 6 பேர் விடுதி...
தமிழகம்
குழந்தைகளை கடத்தி விற்றதாக கைதான ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து குழந்தைகளை கடத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில், இரு பெண் உள்ளிட்ட ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி எஸ்.பி.,பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து குழந்தைகள் கடத்தப்ப...
தமிழகம்
நடுரோட்டில் நிலக்கரி லாரி கவிழ்ந்து நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே நேற்று, நிலக்கரி ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி, நடுரோட்டில் கவிழ்ந்ததில் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நேற்று நிலக்கரி ஏற்றிய டிப்பர் லாரி, ஆறுமுகநேரி தனியார் ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. தென்காசி இசக்கிமுத்து(23) லாரியை ஓட்டினார். அம்பா...
தமிழகம்
மகனின் குடிப்பழக்கத்தால் குடும்பமே தற்கொலை
ஓமலூர் : ஓமலூர் அருகே, மகனின் குடிப்பழக்கத்தால், குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு, தந்தை, தாய், மருமகள், பேத்தி என நான்கு பேர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த வெள்ளார் பகுதியை சேர்ந்த ஹரிராமன் (55); தறி தொழிலாளி. அவரது மனைவி ராஜேஸ்வரி (50). மகன்கள் வரதராஜ், பாண்டுரங்கன். வரத...
தமிழகம்
குளிர்பான பாட்டிலில் இறந்து மிதந்த தவளை
சிதம்பரம் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பு.முட்லூரில் வாங்கிய குளிர்பான பாட்டிலில் தவளை இறந்து மிதந்தது. சிதம்பரம் அடுத்த பு.முட்லூரைச் சேர்ந்தவர் அஸ்கர்அலி (36). வக்கீல் குமஸ்தாவான இவரது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்ததால் நேற்று காலை எம்.ஜி.ஆர்., சிலை அருகில் உள்ள பேக்கரி ஒன்றில், 500 மிலி., "பெப்சி' பாட்டில் வாங...
தமிழகம்
ஆட்டோ டிரைவரை தாக்கிய பெண்கள் இருவர் கைது
திருவாரூர் : கூடுதல் பணம் கேட்ட, ஆட்டோ டிரைவரை தாக்கிய பெண்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைரோட்டைச் சேர்ந்த முகமது ஹனிபா மகன் முகமது யூசப் (30). இவர் முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள, ஆட்டோ ஸ்டாண்டில் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை அதே ஊரைச் சேர்ந்த சேசனா ...
இந்தியா
அனில் அம்பானி உஜ்ஜயினில் தரிசனம்
உஜ்ஜயினி (ம.பி.,) : தனது 51வது பிறந்த நாளையொட்டி, மத்தியபிரதேசத்திலுள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரரை, அனில் அம்பானி தரிசித்தார். அனில் அம்பானி தனது ஜெட் விமானத்தில் இந்தூர் வந்திறங்கி அங்கிருந்து நேற்று முன்தினம், மகாகாலேஸ்வரர் கோவிலுக்குச் சென்றார். அங்கு அதிகாலையில் நடக்கும், "பஸ்ம ஆரத்தி' என்ற விசேஷ பூஜையில் கலந்து கொண்...
இந்தியா
விசா விண்ணப்ப கட்டணம் உயர்வு : அமெரிக்கா செல்பவர்கள் அதிர்ச்சி
புதுடில்லி : குடியுரிமை அல்லாதவர்களுக்கான, விசா விண்ணப்ப கட்டணத்தை, அமெரிக்க அரசு உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்கா செல்ல விரும்புவோரிடையே, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா செல்ல விரும்புபவர்களுக்கு, பல்வேறு பிரிவுகளின் கீழ், விசா வழங்கப்படுகிறது. விசா வழங்குவதற்கு, விண்ணப்பத்தின் அடிப்படையில், கட்டணம்...
இந்தியா
இன்று உலக சுற்றுச்சூழல் தினம் : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தேசிய கொள்கை
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படும் சுற்றுச்சூழல் தினத்தின்போது சில மையக்கருத்துக்கள் பின்பற்றப்படும். இந்த ஆண்டு சில மையக்கருத்துக்களை வலியுறுத்த உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. சுற்றுச்சூழல் சம்மந்தமான பிரச்னைகளை மனிதநேயத்துடன் அணுக வேண்டும்; வளங்குன்றாத, சமவிகித வளர்ச்சியை ஈட்டும் வகையில் மக்களுக்கு விழிப்பு...
தமிழகம்
புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி? அடுத்த வாரம் முதல் துவங்குகிறது ஆய்வு
சென்னை : தமிழகத்தில் இந்தாண்டு புதிதாக துவக்கப்படும் பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்தி, அவற்றிற்கு அனுமதி வழங்கும் நடைமுறைகளை ஏ.ஐ.சி.டி.இ., அடுத்த வாரம் முதல் மேற்கொள்ள உள்ளது. தமிழகத்தில் தற்போது 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு, புதிதாக பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் துவங்க தமிழகத்தி...
தமிழகம்
கடல் காற்று வீசாததால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பு
சென்னை : குளிர்ந்த கடல் காற்று வீசாததால் வெப்பளவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் நேற்று 39.3டிகிரி செல்சியஸ் அளவு பதிவாகியது. கடலூரில் அதிகபட்சமாக 42.2 டிகிரி வெயில் கொளுத்தியது. உச்சக்கட்ட அக்னி நட்சத்திரம் வெயில் கடந்த 28ம் தேதி முடிந்த பின்னரும், தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை. குறிப்பாக, கடலோர மாவ...
இந்தியா
ஓடுபாதையில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு
மும்பை : மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதிக் கொள்ளும் பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாகத் தவிர்க்கப்பட்டது. விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியின் தகவலால் இவ்விபத்து தவிர்க்கப்பட்டது. மும்பையிலிருந்து சென் னைக்கு வரவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதை எண் 27ல் 109 பயணிகளுடன் நேற்று...
தமிழகம்
தேயிலை தோட்டத்தில் புகுந்த பஸ் : பயணிகள் உயிர்தப்பினர்
வால்பாறை : வால்பாறை அருகே, கட்டுப்பாடு இழந்த அரசு பஸ், தாறுமாறாக ஓடி தேயிலை தோட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், வால்பாறை புதுக்காடு எஸ்டேட் பகுதியிலிருந்து, பொள்ளாச்சிக்கு தினமும் காலை 6.30 மணிக்கு, பஸ் (தடம் எண் 1631) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை, டிரைவர் ஏசுதாஸ் நேற்று வழக்கம...
தமிழகம்
பாம்பன் சுவாமிகள் குரு பூஜை விழா
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின், குரு பூஜை விழா, வெகு விமரிசையாக நடந்தது.விழா காலை 6 மணிக்கு, மங்கள வாத்தியத்துடன் துவங்கியது. காலை 7 மணிக்கு, ஜவுளிக்கடை சத்திரத்திலிருந்து, பால்குடம் ஊர்வலம் புறப்பட்டது. பல்வேறு வீதிகள் வழியாக, கோவிலை வந்தடைந்...
தமிழகம்
500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கைது
வெம்பக்கோட்டை : சிவகாசி அருகே, அரசு நிதி உதவியை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, எதிர்கோட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதால், அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்காக, வெம்பக...
தமிழகம்
ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரேஷன் கடையில் முறைகேடு செய்த, விற்பனையாளர் ஒருவரை, தற்காலிக பணி நீக்கம் செய்யவும், ஆறு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின், இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையிலான, பறக்கும்படையினர், கடந்த மாதம் 28ம் தேதி, மாவட்டத்த...
தமிழகம்
மூன்று லாரிகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி : சென்னை- கோல் கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப் பேட்டை போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து, சென்னைக்கு மணல் ஏற்றிச் சென்ற, மூன்று லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.விசாரணையில், அனுமதியின்றி ஆந்திர மாநிலம், நெல்லூரிலிருந்து, சென்னைக்கு மணல் கடத்திச் செல்வது தெரிந்...
தமிழகம்
காஞ்சியில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி : தடையின்றி மின்சாரம் வழங்க கோரிக்கை
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், மீண்டும் மூன்று மணி நேரம், மின்தடை அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், நினைத்த நேரங்களில், மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த மாதம் வரை, மூன்று மணி நேரம், மின்தடை அமலில் இருந்தது. லைலா புயல் உருவானதும், மின்தடை இரண்டு மணி...
தமிழகம்
பெரியகுளம் அருகே அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதல்: நால்வர் பலி
பெரியகுளம் : பெரியகுளம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேரும் உடல் நசுங்கி பலியாயினர். தேனி மாவட்டம் பெரியகுளம் எ.புதுப்பட்டி அருகே, மதுரையிலிருந்து பெரியகுளம் நோக்கி, அரசு பஸ் நேற்று மாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில், தேனியிலிருந்து, திண்டுக...
தமிழகம்
கூரை தீப்பிடித்ததில் ரூ.4.5 லட்சம் சேதம்
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே, மாடி மீதிருந்த கூரை தீப்பிடித்து எரிந்ததில், 4.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், தீயில் எரிந்து கருகியது.திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன், சுப்பிரமணி (48). இவர் தனக்கு சொந்தமான வீட்டு மாடியில், ஓலையால் கூரை அமைத்து, குடியிருந்து வந்தா...
தமிழகம்
தமிழில் பெயர் பலகை வைக்காத 284 கடைகள் மீது நடவடிக்கை
திருவள்ளூர் : தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டும், விதிமுறைகளை மீறிய 284 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் அனைத்து கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள் பெயர்ப் பலகைகளை, அரசு குறிப்பிட்டுள்ளபடி தமிழில் எழுதி வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரும் த...
தமிழகம்
மீட்கப்படும் பெண் பிணங்கள்: எல்லையோர மக்கள் கடும் பீதி
திருவள்ளூர் : தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் மீட்கப் படும், அடையாளம் தெரியாத பெண் பிணங்களால், கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.ஆந்திர மாநில எல்லையில் திருவள்ளூர் மாவட் டத்துக்கு உட்பட்டு ஆரம் பாக்கம், ஊத்துக் கோட்டை, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன.இதில் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்...
தமிழகம்
மண் லாரிகளால் மக்கள் பீதி
பேரம்பாக்கம் : கடம்பத்தூர் அருகே, கசவநல்லாத்தூர் ஏரியிலிருந்து, மண் எடுத்து செல்லும் லாரிகள், அசுர வேகத்தில் செல்வதால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் விபத்து பயத்தில் உள்ளனர்.திருவள்ளூர் அருகே, கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது, கசவநல்லாத்தூர் கிராமம். இப்பகுதியில், அரசுக்கு சொந்தமான ஏரியில், மண் குவாரி இயங்கி வருக...
தமிழகம்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்
திருத்தணி : இரண்டு மாதங்களாக, குடிநீர் வினியோகம் சரிவர வழங்காததை கண்டித்து, ஒன்றிய அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.திருத்தணி ஒன்றியம், செருக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம், அருந்ததி காலனி, ராஜீலுகண்டிகை ஆகிய பகுதிகளில் இரண்டு மாதங்களாக, குடிநீர் வினியோகம் இல்லை. தொடர்ந...
தமிழகம்
கலெக்டர் அலுவலக லிப்டில் சிக்கி தவித்த அலுவலர்கள் : மின் தடையால் விபரீதம்
தேனி : மின் தடையால் ஏற்பட்ட விபரீதத்தால் , தேனி கலெக்டர் அலுவலக லிப்ட் டில் சிக்கிய இரண்டு அலுவலர்கள் ஒரு மணி நேரம் தவித்தனர். தேனி கலெக்டர் அலுவலகம் நான்கு மாடிகளை கொண்டது. இங்கு அலுவலர்கள் செல்வதற்காக இரண்டு லிப்ட்டுகள் உள்ளன. இவற்றில் ஒரு லிப்ட்டை கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அலுவலர...
தமிழகம்
குடிநீர் வாரிய பொறியாளர்கள் மொபைல் போன் எண் மாற்றம்
சென்னை : சென்னை குடிநீர் வாரிய பகுதி பொறியாளர்களின், மொபைல் போன் எண் கள், மாற்றப் பட்டுள்ளன. குடிநீர், கழிவுநீர் தொடர்பான புகார்களை, மக்கள் தெரிவிக்கவும், அவற்றை உடனுக்குடன் சரி செய்யும் வகையில், பகுதி பொறியாளர்களுக்கு, மொபைல் போன்கள், வழங்கப் பட்டுள்ளன. இந்த மொபைல் போன் எண்களில், சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே...
தமிழகம்
குப்பையால் நாறுது ஆவடி நாகம்மை நகர் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி
ஆவடி : ஆவடி, நாகம்மை நகரில் குப்பைத் தொட்டி இல்லாததால், தெருவிலேயே குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு, அப் பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.ஆவடி நகராட்சி, 14வது வார்டுக்கு உட்பட்டது நாகம்மை நகர், ரவீந்திர நகர். இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், குப்ப...
தமிழகம்
படகுகளுடன் எட்டு மீனவர்கள் மாயம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் முனியசாமி, முருகநாதன், கார்மேகம், சண்முகம். இவர்கள் கஸ்தூரி என்பவரது படகில், கடந்த ஜூன்2ல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த கென்னடி என்பவரின் படகில் மீனவர்கள் கென்னடி, ஜெயராமு, ராஜேஸ், நாட்டார் ஆகியோரும், மீன் பிடிக்க சென்றிருந்தனர். மறுநாள் வரவேண்டிய இவர...
தமிழகம்
வைத்தியநாதன் பாலத்தின் சீரமைப்பு எப்போது?
தண்டையார்பேட்டை  : வடசென்னையின் மையப்பகுதியான, தண் டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம், சென்னையின் மற்ற பகுதிகளுக்கு செல்பவர்களின், வசதிக் காக பயன்படுகிறது. சென் னையின் நெரிசலை தவிர்க் கும் வகையில், எண்ணெய் நிறுவன டேங்கர் லாரிகள், துறைமுக ஏற்றுமதி, இறக்குமதி லாரிகளின் போக்குவரத்திற்கும், அப் பாலம் பயன்பட்டு வருகிறது.ஏராளமா...
தமிழகம்
மொபைல் போன் பாட்டு வாலிபரின் உயிருக்கு வேட்டு
வில்லிவாக்கம் : மொபைல் போன் ஹெட்போனில் பாட்டு கேட்டபடி, தண்டவாளத்தைக் கடந்த வாலிபர், ரயிலில் அடிபட்டு பலியானார்.திருவள்ளூர் மணவாள நகரைச் சேர்ந்தவர் சங்கரன்; தனியார் நிறுவன பணியாளர். இவரது மகன் புவனேஸ்வரன்(20). டிப்ளமோ முடித்த இவர், நேற்று காலை வில்லிவாக்கத்திற்கு சென் றார்.வழியில் மொபைல் போனில்  பாட்டு கேட்டபடி தண்டவாள...
தமிழகம்
சுரங்கப்பாலம் அமைப்பு மின்சார ரயில்கள் நாளை ரத்து
சென்னை : வில்லிவாக்கத்தில் ரயில் பாதையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி  நடப்பதால் நாளை (6ம் தேதி) அந்த வழியாக இருவழி மார்க்கத்திலும் இயக்கப்படும் 39 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.இதன்படி,சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூருக்கு அதிகாலை ...
தமிழகம்
மின்வாரிய அதிகாரியிடம் ரூ.90 ஆயிரம் திருட்டு
சென்னை : சென்னை, அடையாறு அடுத்த சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ்; மின்வாரிய இளநிலை பொறியாளர். வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் அசோக் நகரில் உள்ள ஒரு வங்கியில் இருந்து 90 ஆயிரம் ரூபாயை எடுத்து, தன் டூவீலரின் முன்புறம் உள்ள பெட்டியில் வைத்துக் கொ...
தமிழகம்
கார்பென்டர் போல் நடித்து நகை, பணம் கொள்ளை
சென்னை : கார்பென்டர் போன்று நடித்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற, மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, அசோக் நகர், லேக்வியூ ரோட்டை சேர்ந்தவர், பாலசுப்ரமணியன் (75). இவரது மனைவி சம்பூர்ணம் (68). நேற்று முன்தினம், பிற்பகல் பாலசுப்ரமணியன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, வீட்டிற்கு வந்த மர்ம நபர், தன்னை ...
தமிழகம்
விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் நான்கு பேர் கைது
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே, லாரியில் எருது, பசு, கன்றுகளை கயிறு போட்டு கட்டி விற்பனைக்கு கொண்டு சென்ற நான்கு பேர், விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அடுத்த சாலைப்புதூரில் நேற்று முன்தினம் மாலை, ஒரே லாரியில் 4 எருது, 21 பசு, 5 கன்றுக்குட்டிகள் நெருக்கடியான நில...
தமிழகம்
விலைவாசி உயர்வுக்கு அ.தி.மு.க., கண்டனம்
சென்னை : விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு கண் டித்து அ.தி.மு.க., இளைஞர் பாசறை, இளம் பெண் கள் பாசறை மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில செயலர் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் விவரம்:ரோம்...
தமிழகம்
தலையில் கல்லைப்போட்டு தாய் கொலை : மகன் கைது
நாகர்கோவில் : தலையில் கல்லை போட்டு தாயை கொன்ற மகன் போலீசில் சரணடைந்தார். நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மேரிலில்லி (55). இவரது கணவர் அந்தோணி அருள்தாஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மகன் ராஜேஷ்(39). நடத்தை காரணமாக மனைவியும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். வேலைக்கு செல...
தமிழகம்
கோடையிலும் காலரா தாக்கம் அதிகரிப்பு: சென்னை மக்கள் தவிப்பு
சென்னை:மழை காலத்தில் மட்டுமே பரவும் காலராவின் தாக்கம், எதிர்பாராத விதமாக, கோடையிலும் சென்னையில் பாதிப்பை ஏற்படுத் தியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும், காலராவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.மழைக்காலம் வந்துவிட்டால், சென்னை மக்களுக்கு திண் டாட்டம்தான். சென்னையின் பெரும்பாலான பகுதிகள், தண்ண...
தமிழகம்
போலி காப்பகம் நடத்திய போதகர் மனைவி கைது
நாகர்கோவில் : அனுமதி இல்லாமல் போலி காப்பகம் நடத்தி குழந்தைகளை அடைத்து வைத்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் மனைவி கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே நல்லூரில் சாரோன் சிறுவர் இல்லம் செயல்பட்டு வந்தது. பெனியேல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் போதகர் டைட்டஸ் பால்துரை என்ப...
தமிழகம்
பி.எப்., குறைதீர்ப்பு சென்னையில் முகாம்
சென்னை : சென்னையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) குறைதீர்ப்பு முகாம் வரும் 10ம் தேதி  நடக்கிறது.இதுகுறித்து மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கமிஷனர் சர்வேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மண்டலத்தில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பி.எப்., தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்க்கு...
தமிழகம்
தமிழில் பெயர்ப் பலகை வைக்க அவகாசம் நீடிப்பு
சென்னை : சென்னை நகரில், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் பிரதானமாக இடம் பெறும் வகையில் எழுத, ஜூன் 20ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருப்பதாக மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி, சென்னையில் உள்ள வணிக நிறுவனங்கள், பெயர் பலகைகளில் தமிழ் பிரதானமாக இருக்கும் படி எழுத வேண்ட...
தமிழகம்
ரயிலில் இளம்பெண்ணை மிரட்டிய விபசார பெண் புரோக்கர் கைது
கள்ளக்குறிச்சி : ரயிலில் பயணம் செய்த இளம்பெண்ணை விபசாரத்திற்கு அழைத்து மிரட்டிய பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு பி.ஆர்.ஐ., காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி; இவரது மகன் சரத்குமார்(17) மகள் நித்யா(19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் நேற்று முன்தினம் இரவு பெங்களூரிலிருந்து திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ...
தமிழகம்
வேப்பந்தட்டை அருகே நகைக்காக மூதாட்டி கொலை
பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே நகைக்காக மூதாட்டி ஒருவரை கொலை செய்த மர்ம நபர்களை அரும்பாவூர் போலீஸார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதலைமுத்து மனைவி அமலோற்பவம் (70). இவர் ஈச்சங்காட்டில் தனது மகன் ஜோசப் வீட்டில் தங்கியிருந்தார். அமலோற்பவம் நேற்று முன்தினம் இரவு ...