category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா | பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனர் சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ... |
தமிழகம் | எறையூர் சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி நிலையம் துவக்கம் | பெரம்பலூர்: எறையூர் சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி நிலையம் சென்னையிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸி மூலம் முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைக்கிறார். பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலையில் நிராவி மற்றும் மின்சார உபயோகத்தினை குறைத்து அதிக அளவில் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்க ஏதுவாக ஆலையை நவீனப்... |
தமிழகம் | திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் சுற்று மண்டபம் அமைக்க பூமிபூஜை | புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் வலம்வர வசதியாக புதிய சுற்றுமண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்றத் திருக்கோவில்களில் ஒன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில்.
இங்கு ஆண்டுதோறும் மாசிப்பெருந்திருவிழா நடப்பது வழக்கம். விழாவின்போது அம்மன் க... |
தமிழகம் | தொடர் மின்தடையால் மக்கள் ஆவேசம் புதுகை மாவட்டத்தில் சாலை மறியல் | புதுக்கோட்டை: புதுக்கோட் டை மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து எட்டுமணி நேரத்துக்கும் மேல மின்சாரம் தடைபட்டு வருகிறது. இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் விவசாயப் பணிகள் மட்டுமின்றி குடிநீர் வினியோகம் ஸ்தம்பித்துள்ளது. ஆத்திரமடைந்துள்ள அம்மாட்ட மக்கள் மின் வாரியத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட... |
தமிழகம் | தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீஸார் வழக்குபதிவு அரியலூர் ஆர்.டி.ஓ., விசாரணை | அரியலூர்: அரியலூரில் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட இரண்டு தரப்பை சேர்ந்த 20 பேர் மீது போலீஸார் தொடர்ந்த வழக்கை, அரியலூர் ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார். அரியலூர் ஓடக்கார தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் பாபு(45). பூமாலை மகன் லட்டு சரவணன்(28). பழைய சந்தை பேட்டை தெருவை சேர்ந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜா(30). கண்... |
தமிழகம் | குருங்குளம் அரசு சர்க்கரை ஆலையில் இன்று மின் உற்பத்தி திட்டம் துவக்கம் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் உள்ள அரசின் சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் கருணாநிதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் துவக்கி வைக்கிறார்.
தஞ்சை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் வெளியாகும் கரும்பு சக்கையைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி ச... |
தமிழகம் | கொத்துக்கோவில், புதூரில் காலி குடங்களுடன் சாலைமறியல் | திருவிடைமருதூர்: கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் குடிர் பைப்புகளில் தண்ணீர் வருவதில்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மின்தடை வெகுநேரம் டிப்பதால் குடிர் பைப்பு களில் அறவே தண்ணீர் வருவதில்லை. இதனால், ஆத்திரமடைந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதும... |
தமிழகம் | குடந்தைக்கு நாளை ஸ்டாலின் வருகை | கும்பகோணம்: கும்பகோணம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக் கை: கும்பகோணத்துக்கு நாளை வருகை புரியும் ஸ்டாலினுக்கு சுந்தரபெருமாள் கோவில் பஞ்சாயத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில், தி.மு.க., ஒன்றிய, பேரூர் கழக, கிளை கழக நிர்வாகிகள், யூனியன் கவுன்சிலர்கள், யூனியன் முன்னாள், இன்னாள் தலைவர் கள், உள்ளாட்ச... |
தமிழகம் | மின்வாரியம் அறிவிப்பு மின் உற்பத்தி பாதிப்பால் கூடுதல் நேர மின்தடை | அரியலூர்: மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக கூடுதல் நேரம் மின்தடை செய்யப்படுவதாக வும், நிலமை சீராகும் வரையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்ட பொறியாளர் விருத்தாஜலம் விடுத்த அறிக்கை:
அரபிக்கடலில்... |
தமிழகம் | திருவிடைமருதூர் யூனியனில் 2 புதிய பாலம் கட்டுமான பணி | கும்பகோணம்: திருவிடைமருதூர் யூனியனில் இரண்டு புதிய பாலங்கள் 1.11 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணியை யூனியன் தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் யூனியனில் ஒருங்கிணைந்த நிர்ணயம் செய்யப்பட்ட வருவாய் இனத்தில் 2010 - 11ம் ஆண்டுக்கு பழியஞ்சியநல்லூரில் கும்பகோணம் - காரைக்கால் நெடுஞ்சாலையை இணைக்... |
தமிழகம் | தொழுநோயாளிகளுக்கு உணவு, உடை வழங்கல் | கும்பகோணம்: தமிழக முதல்வர் கருணாதியில் 87வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் தொழுநோய் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு கும்பகோணம் ஒன்றிய தி.மு.க., சார்பில் உணவு, உடை வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் சாக்கோட்டை அன்பழகன் தலைமை வகித்தார். தொழுநோய் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு அமைச்சர் கோ.சி.... |
தமிழகம் | பள்ளி தாளாளர்களுக்கு வேதையில் பாராட்டு விழா | வேதாரண்யம்: வேதாரண்யம் புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளராக பணியாற்றிய அமிர்தராஜுக்கு பாராட்டு விழா, புதிய தாளாளர் வின்சென்ட்டுக்கு வரவேற்பு விழா பள்ளி தலைமை ஆசிரியை கேத்ரின் தலைமையில் நடந்தது. பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்று தாளாளர் அமிர்தராஜுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கினர். புதிதாக பொறுப்பே... |
தமிழகம் | மன்னை அருகே பெண் கடத்தல்: மூன்று பேர் கைது | மன்னார்குடி: மன்னார்குடி அருகே குருக்கள் மகளை கடத்திய டாக்சி டிரைவரை போலீஸார் தேடிவருகின்றனர்.மன்னார்குடி மேலதிருப்பாலக்குடியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் பல கோவில்களில் குருக்களாக பணி செய்கிறார். இவரது மகள் ப்ரியா (17). பெயர்மாற்றப்பட்டுள்ளது. சிவகுமார், அவரது மனைவி சாவித்ரியும் மகளை வீட்டில் விட்டுவிட்டு உறவினர் வீ... |
தமிழகம் | அரசு கல்லூரிகளில் முதுகலை வகுப்புகள் துவக்குதில் சிக்கல் | சிவகங்கை : அரசு கல்லூரிகளில், புதிய முதுகலை பாடப்பிரிவுகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 67 அரசு கலைக் கல்லூரிகளில், முதுகலை படிப்புகள் துவங்க, கல்லூரிகள் சார்பில் அனுமதி கோரப்பட்டது. பெரும்பாலான கல்லூரிகள், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பு துவங்க அனுமதி கேட்டனர். சில கல்லூரிகளுக்கு அனுமதி ... |
தமிழகம் | துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை | தஞ்சாவூர்: தஞ்சையில் துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறில் வெட்டுக்காயம் அடைந்தவர்களில் ஒருவர் இறந்தார்.தஞ்சை சேப்பனவாரி கீழக்கரையைச் சேர்ந்தவர் இளங்கோ மகன் இளஞ்செழியன் (21). தஞ்சை பொன்னையா ராமஜெயம் பொறியியல் கல்லூரியில் நான்காமாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் இவர் ஹோண்டா டூவீலரில... |
தமிழகம் | தமிழக முதல்வர் பிறந்த தினவிழா | அரியலூர்: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கடைவீதியில், முதல்வர் கருணாநிதி 87வது பிறந்தநாளை முன்னிட்டு, கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. தி.மு.க., நகர அவைத் தலைவர் அப்துல் மஜீத் தலைமையில் பஞ்சாயத்து தலைவர் (பொ) உலக ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், நகர பொருளாளர் தியாகராஜன், ஒன்றிய ... |
தமிழகம் | ரேஷன் கார்டு ஆய்வு பணி ஆலோசனை கூட்டம் | தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் தலைமையில் 100 சதவீத ரேஷன் கார்டு ஆய்வுப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. சென்னை உணவுப்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அலுவலக உதவி ஆணையர் சண்முகநாதன், கண்காணிப்பாளர் விஜயகுமார், பத்மாசங்கர், குணசேகர் ஆகியோர் யோசனைகள் தெரிவி... |
தமிழகம் | குடிபோதையில் கடையை நொறுக்கிய நால்வர் கைது | கும்பகோணம்: கும்பகோணம் உப்புகாரத் தெருவைச் சேர்ந்தவர் கோபு (25). இவர் பழைய பஸ் ஸ்டாண்டில் சூப் கடை வைத்துள்ளார். இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு சிவா (25), அய்யப்பன் (24), ஆனந்தராஜ் (25), மணிகண்டன் (25) ஆகிய நால்வரும் கோபு கடைக்கு சென்று போதையில் முட்டை சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றனர். அவர்களிடம் கோபு... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் சிறப்பு பணி 5 பஞ்., தலைவர்களுக்கு கேடயம் வழங்கல் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பில் சிறப்பாக பணி செய்த ஐந்து பஞ்சாயத்து தலைவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2009 மே முதல் 2010 மே மாதம் வரை குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், ஆட்டோ ஒர்க்ஷாப்புகள், ப... |
தமிழகம் | உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தின விழா: கலெக்டர் பங்கேற்பு | திருவாரூர்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினவிழா நடந்தது. நுகர்வோர் அமைப்பு செயலாளர் ரமேஷ் வரவேற்றார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு கலெக்டர் சந்திரசேகரன் பேசியதாவது: நிலம், நீர், காற்று ஆகியவை தன் தன்... |
தமிழகம் | குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் கால்நடைகளை கட்டினால் நடவடிக்கை : சுகாதாரத்துறை | திண்டுக்கல் : குடிநீர் தொட்டிகளுக்கு கீழே ஆடு, மாடுகளை கட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் காலரா, மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, சிக்குன் குனியா உட்பட பல நோய்கள் நீரின் மூலமும், கொசுக்கள் மூலமும் பரவுகின்றன. இவற்றை தடுப்பதற்கு அந்தந்த வட்டார ச... |
தமிழகம் | அம்மிக்கல்லால் அடித்து தாய் கொலை: பணம் தராததால் மகன் வெறிச்செயல் | நாகர்கோவில்:நாகர்கோவிலில் செலவுக்கு பணம் தராத தாயின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது நாகர்கோவில் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் அந்தோணி அருள்தாஸ் மனைவி லில்லிமேரி (51). இரவது மகன் ராஜேஷ் (39). இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உண்டு.... |
தமிழகம் | குளத்தில் மூழ்கி மாணவன் பலி | வேலூர்: குளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தார். சோளிங்கரைச் சேர்ந்தவர் அரிசி வியாபாரி ராஜா. இவரது மகன் விக்னேஷ் (18). இவர் அரூரில் உள்ள அரசு பள்ளியில் ப்ளஸ் 2 படித்து தேர்வில் 1,133 மதிப்பெண்கள் பெற்றுதேர்ச்சி பெற்றார். சோளிங்கருக்கு வந்த விக்னேஷை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அவர்களது பெற்றோர்கள் ஏற்பாடு செய்... |
தமிழகம் | குமரியில் குறைந்தது சாரல் மழை: சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதி | நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வந்த சாரல் மழையின் தாக்கம் குறைந்தது. கடந்த நான்கு நாட்களாக அடிக்கும் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக பெய... |
தமிழகம் | தர்மபுரி மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்: தாலுகா வாரியாக நடக்கும் கிராம பகுதிகள் அறிவிப்பு | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் ஜமாபந்தி கடந்த 2ம் தேதி முதல் துவங்கி வரும் 9ம் தேதி வரையில் நடக்கிறது. தாலுகா வாரியாக நடக்கும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் ஜமாபந்தி விபரங்கள் வருமாறு:
நேற்று (ஜூன் 4) தர்மபுரி உள்வட்டத்தில் வெள்ளேகவுண்டன்பாளை... |
தமிழகம் | கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் 50 லட்சம் ரூபாயில் கும்பாபிஷேக திருப்பணிகள் | கன்னியாகுமரி:கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது.நாட்டில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் கடந்த 1998-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவ... |
தமிழகம் | 100 சதவீதம் தணிக்கை பணியில் ரத்தான ரேஷன் கார்டுகளுக்கு மீண்டும் வாய்ப்பு | விருதுநகர் : தமிழகத்தில், 100 சதவீதம் தணிக்கை பணியில் ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்க நுகர்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கார்டுகள் குறித்து தணிக்கை செய்யும் பணி வீடு, வீடாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் கண்டறியப்பட்ட போலி கார்டுகளுக்கு ... |
தமிழகம் | கடைகள் திடீர் அடைப்பு:தக்கலையில் பரபரப்பு | தக்கலை:தக்கலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகள் திடீரென அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பத்மனாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் தக்கலை பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. பயணிகள் நிற்பதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில கடைகளில் பயணிகள் நிற்கும் இடங்களில் ஆக்ரமித்து பொருட்களை... |
தமிழகம் | ராமேஸ்வரம் கோவில் வடக்கு கோபுரம் பணி : ஆறு ஆண்டுகளுக்கு பின் துவக்கம் | ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோவிலில் நின்றுபோன வடக்கு கோபுரம் கட்டும் பணி, ஆறு ஆண்டுகளுக்குப்பின் நேற்று துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமைபெறாமல் மொட்டையாக காட்சியளித்துக் கொண்டிருந்த வடக்கு, தெற்கு கோபுரங்களை கட்டுவதற்கு, சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்வந்ததை த... |
தமிழகம் | மின் நிறுத்தத்தால் நோயாளிகள் பரிதவிப்பு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறல் | தர்மபுரி: தர்மபுரி அரசு மருந்துவமனையில் மின் நிறுத்தம் காரணமாக நோயாளிகள் பெரும் பரிதவிப்புக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவமனை ஜெனரேட்டரும் இயங்காததால், டாக்டர்கள் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறினர். தமிழகம் முழுவதும் ஜூன் முதல் தேதி முதல் இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் நிறுத்தம் செய்யப்படும் ... |
தமிழகம் | தலையில் கல்லை போட்டு தாய் கொலை : மகன் கைது | நாகர்கோவில் : தலையில் கல்லை போட்டு தாயை கொன்ற மகன் போலீசில் சரணடைந்தார். நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மேரிலில்லி (55). இவரது கணவர் அந்தோணி அருள்தாஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மகன் ராஜேஷ்(39). இவருக்கு திருமணமாகியும் மனைவி இவரது நடத்தை காரணமாக பிரிந்து சென்று விட்டார்... |
தமிழகம் | சுசீந்திரத்தில் அனுமதியின்றி குழந்தைகள்: இல்லம் நிர்வாகி மனைவி தந்தை கைது | சுசீந்திரம்:சுசீந்திரம் அடுத்த நல்லூரில் அனுமதியின்றி குழந்தைகள் இல்லம் நடத்திவந்த சாரோன் இல்ல நிர்வாகி மனைவி மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர். சுசீந்திரம் அடுத்த நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் டைட்டஸ் பால்துரை சிங்(27). அவரது மனைவி மஞ்சு (24) மற்றும் தந்தை இணைந்து சாரோன் சிறுவர் இல்லம் என்ற பெயரில் ஒரு சிறுவர்... |
தமிழகம் | ஆசிரியர் நியமிக்க கோரி மாணவர்கள் சாலை மறியல் | தர்மபுரி: பென்னாகரம் அருகே அரசு பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்க கோரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் அடுத்த நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் சமீபத்தில் இடமாறுதல் கேட்டு வேறு ஊர்களுக்கு சென்று வ... |
தமிழகம் | இறந்த முதியவர் கண்கள் தானம் | தர்மபுரி: பாப்பாரப்பட்டியில் இறந்த முதியவரின் கண்கள் தானமாக பெறப்பட்டது. பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ஆசிரியர் கனகராஜ். இவரது தந்தை சாந்தம்செட்டியார் (86). இவர் தனது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே முடிவு செய்து அதற்காக ஆவணங்களை வழங்கி இருந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த 29ம் தேதியன்று இறந்தார். இதையடுத்து த்பன்னாகரம் கண்... |
தமிழகம் | தெலுங்கு மொழியில் வினாத்தாள் வழங்கல் : ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வில் குழப்பம் | கடலூர் : கடலூரில் நேற்று நடந்த ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வில், தனித் தேர்வர்களுக்கு தெலுங்கு மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள் கொடுத்ததால், குழப்பம் நிலவியது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, 2.15 மணி நேரம் கழித்து தமிழ்வழி வினாத்தாள் வழங்கப்பட்டது. ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு, கடலூர் மாவட்டத்... |
தமிழகம் | பெண்ணிடம் தாலி பறித்த வாலிபர் சுற்றி வளைப்பு | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே பெண்ணிடம் தாலி செயினை பறித்த வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் பொக்லைன் டிரைவர் அர்த்தநாரீஸ்வரன். இவரது மனைவி தனம் (20). அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சம்பவத்தன்று நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கல்லாவி அ... |
தமிழகம் | அரசு அலுவலகத்தில் பொருட்கள் கொள்ளை | காரிமங்கலம்: காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள அரசு அலுவலகத்தில் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். காரிமங்கலம் மெயின்ரோடு போலீஸ் ஸ்டேஷன் அருகே உதவி தொடக்க கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அலுவலக பணி முடிந்து வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டி சென்று விட்டன... |
தமிழகம் | கடல் காற்று வீசாததால் வெப்பம் அதிகரிப்பு கடலூரில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் | சென்னை : குளிர்ந்த கடல் காற்று வீசாததால் வெப்பளவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் நேற்று 102.74 டிகிரி பாரன்ஹீட் அளவு பதிவாகியது. கடலூரில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. உச்சக்கட்ட அக்னி நட்சத்திரம் வெயில் கடந்த 28ம் தேதி முடிந்த பின்னரும், தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை. குறிப்பாக, கடலோர ம... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் | சென்னை : தமிழ்நாடு சிமென்ட்ஸ் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கான கமிஷனராக பணியாற்றிய ஜி.ஏ.ராஜ் குமார் மாற்றப்பட்டு, தமிழ்நாடு சிமென்ட்ஸ் கழகத்தின் தலைவர... |
தமிழகம் | லாரி கடத்தல்: 11 பேர் மீது வழக்கு | காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே லாரியை கடத்தியதாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி கோடியூரை சேர்ந்தவர் சிவபிரகாசம் (43). இவருக்கு சொந்தமான லாரியை காவேரிப்பட்டணம் பகுதியை
சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனை செய்துள்ளார். லாரிக்கு கட்ட வேண்டிய பணத்த... |
தமிழகம் | மன்னார் வளைகுடாவில் சுருங்கி வரும் தீவுகள் : தூத்துக்குடியில் கண்காணிப்பு குறைவு | ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் தீவுகள் சுருங்கி வரும் நிலையில், தூத்துக்குடி பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்திய கிழக்கு கடற்கரையில் பாம்பன் தீவிலிருந்து கன்னியாகுமரி வரை மன்னார் வளைகுடா பரவிஉள்ளது. இந்திய-இலங்கை கடற்கரைகளுக்கு இடையே கிழக்கு மேற்காக இதன் தூரம் 15 கடல் மைல் ஆகும்... |
தமிழகம் | தேயிலை தோட்டத்தில் புகுந்த பஸ் பயணிகள் உயிர் தப்பினர் | வால்பாறை : வால்பாறை அருகே, கட்டுப்பாடு இழந்த அரசு பஸ், தாறுமாறாக ஓடி தேயிலை தோட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், வால்பாறை புதுக்காடு எஸ்டேட் பகுதியிலிருந்து பொள்ளாச்சிக்கு தினமும் காலை 6.30 மணிக்கு பஸ் (தடம் எண் 1631) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை டிரைவர் ஏசுதாஸ் நேற்று வழக்கம் போ... |
தமிழகம் | பாஷா மருமகனுக்கு பரோல் | கோவை : பாஷா மருமகனுக்கு 11 மணி நேர பரோல் வழங்கப்பட்டது.கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் முகமது அலி; அல் - உம்மா தலைவர் பாஷாவின் மருமகன். குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கோரிய இவருக்கு சிறை நிர்வாகம் 11 மணி நேர பரோல் வழங்கியது. நேற்று காலை 7.00மணிக்கு சிறையில் இருந்து, உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் ... |
தமிழகம் | எஸ்.டி., கல்லூரி மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை | பொள்ளாச்சி : பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில், நடப்பாண்டில் எம்.பி.ஏ., பிரிவில் படித்த 59 மாணவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தது.சரஸ்வதி தியாகராஜா கல்லூரிச் செயலர் சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கை:கல்லூரியில், எம்.பி.ஏ., துவங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை மொத்தம் 385 பேர் ... |
தமிழகம் | உண்டியல் காணிக்கை பணம் கொள்ளை | பென்னாகரம்: பென்னாகரத்தில் கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பென்னாகரத்தில் இருந்து தர்மபுரி செல்லும் பிரதான சாலையில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் ஹிந்து அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. நேற்று காலை 7 மணிக்கு பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் உண்டிய... |
தமிழகம் | கி.கிரியில் தாட்கோ மூலம் இலவச தொழிற் பயிற்சி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹிந்து ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு தாட்கோ மூலம் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
தாட்கோ மேலாண்மை இயக்குனரின் செயல்முறை ஆணைபடிகிருஷ்ணகிரி மாவ்டத்தில் 2010-11ம் ... |
தமிழகம் | 2வது திருமணம் செய்து ஏமாற்றிய விவசாயி கைது | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே இரண்டாவது திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய விவசாயியை போலீஸார் கைது செய்தனர். ஊத்தங்கரை அடுத்த கதவணி புதூரை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மகன் விவசாயி சரவணன் (41). இவருக்கு சுமதி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். சரவணனுக்கும் அதே ஊரை சேர்ந்த அருள்மொழி (27) என்ற பெண்ணுக்கும் இடையில் பழக்... |
தமிழகம் | மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை | பொள்ளாச்சி : ஆனைமலையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனைமலை மேற்குப்பகுதிக்கு உட்பட்ட 8,9,10,11 மற்றும் 16 வார்டு உட்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அன்றாட பணிகளை முடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி... |
தமிழகம் | சரக்கு லாரி மோதி கல்லூரி பேராசிரியை பலி | பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த விபத்தில், கல்லூரி பேராசிரியை பலியானார்.பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி வித்யா லட்சுமி (28); இவர், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணிக்கு விழாவ... |
தமிழகம் | மாற்றுவழித்தடத்தில் செல்லும் பஸ்களில் கூடுதல் கட்டணம்: பயணிகள் அதிருப்தி | பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் குடிநீர் திட்ட பணிக்காக பஸ்கள் மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படும் நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சியில் கோட்டூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், பொள் ளாச்சியில் இருந்து கோட்டூர் ரோட்டிற்கு செல்லும... |
தமிழகம் | மேட்டுப்பாளையம் குட்டியானை டாப்சிலிப் வந்தது | பொள்ளாச்சி : மேட்டுபாளையத்தில், பள்ளத்தில் சிக்கிய ஆண் குட்டி யானை மீட்கப்பட்டு பராமரிப்புக் காக பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மேட்டுபாளையம் அடுத்த கல்லாறு வனப்பகுதியில், பள்ளத்தில் இரண்டு மாத ஆன ஆண் யானை குட்டி சிக்கியது. வனத்துறை அதிகாரிகளும், பொள்ளாச்சி வனத்துறை டாக்டர் மனோகரன் ஆகியோர் யா... |
தமிழகம் | வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது மொபைல், மோதிரம் பறிமுதல் | பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து, ஒரு மொபைல்போன், அரைபவுன் மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.நெல்லை மாவட்டம் செங்கோட் டையை சேர்ந்தவர் ராமையா (24); வால்பாறையிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பொள் ளாச்சி வந்துள்ளார். பெருமாள் செட்டி வீதி வழியாக வரும் போது, ஆட்ட... |
தமிழகம் | இலவச பஸ் பாஸ்: முறைப்படுத்த வலியுறுத்தல் | வால்பாறை : இலவச பஸ் பாஸ் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை தாலுகாவில் அட்டகட்டி, வால்பாறை, சோலையார்நகர், முடீஸ் உள்ளிட்டப்பகுதிகளில் ஆறு மேல்நிலைபள்ளியும், நான்கு உயர்நிலைப்பள்ளி உட்பட 94 பள்ளிகள் உள்ளன.
இந்தப்பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வர... |
தமிழகம் | தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை | கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் பெயிலான மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேப்பனப்பள்ளி அடுத்த நல்லூரை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவரது மகள் லோகேஸ்வரி(16). இவர் சென்னந்திரம் அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வந்தார். எஸ்.எஸ்.எல்.ஸி.,தேர்வில் லோகேஸ்வரி தேர்ச்சி பெறவில்லை... |
தமிழகம் | டிராக்டர் - அரசு பஸ் மோதலால் போக்குவரத்து பாதிப்பு | வால்பாறை : வால்பாறை அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதியது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வால்பாறையிலிருந்து நேற்று காலை 8.45 மணிக்கு அரசு பஸ் சோலையார் வழியாக முடீஸூக்கு புறபட்டு சென்றது. அப்போது சோலையாரில் எதிரே வந்த சோலையார் எஸ் டேட் டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் டிராக்டரின் முன்பகுதி ... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் சேரும் முன்பு எச்சரிக்கை!அங்கீகாரம் உள்ளதா என தீர விசாரிக்க வேண | பொள்ளாச்சி : ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேரும் முன்பாக போதிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என சரிபார்க்க வேண்டும்; சந்தேகமிருந்தால் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்திடம் விசாரித்து தெளிவடையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருசில பகுதிகளில் ஆங்காங்கே போதிய அங்கீகாரம் இல்லாமலேயே ஆசிரியர் பயிற்சி கல்வி ... |
தமிழகம் | மணல் கடத்த முயன்ற 2 லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது | பொள்ளாச்சி : பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு மணல் கடத்த முயன்ற இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து, அதன் டிரைவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூரிலிருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் மணலுக்கு, தமிழக எல்லை வரை மட்டுமே "பர்மிட்' வழங்கப்படுகிறது. கேரளாவுக்குள் செல்ல லாரிகள் முறையான "பர்மிட்' பெறுவது கிடையாது. மேலும், ஓவ... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., தேர்வில் வால்பாறை மாணவர் சாதனை | வால்பாறை : வால்பாறையை சேர்ந்த மாணவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.வால்பாறை டவுன் காமராஜ் நகரை சேர்ந்தவர் கருப்பையா. வியாபாரி. இவரது மனைவி முத்துலட்சுமி சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.இவரது மகன் ரோஹன்ராஜ் வால்பாறை திருஇருதய மெட்ரிக் பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்துவிட்டு, வால்பாறை அரசு மேல்நிலைப்ப... |
தமிழகம் | கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், கேரளாவுக்கு கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் துறை தாசில்தார் பறிமுதல் செய்தார்.பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு பஸ் மூலமாக ரேஷன் அரிசி கடத்துவதாக, குடிமை பொருள் வழங்கல் துறை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் தாசில்தார் ... |
தமிழகம் | கண் சிகிச்சை இலவச முகாம் | அன்னூர் : அன்னூரில் கண் சிகிச்சை இலவச முகாம் நாளை நடக்கிறது.மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனை மற்றும் ஸ்வேதா ஆப்டிகல்ஸ் சார்பில், கண் சிகிச்சை இலவச முகாம் அன்னூர் வடக்கு துவக்கப் பள்ளியில் நாளை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடக்கிறது. முகாமில் கண்ணில் நீர் வடிதல், கண் புரை,... |
தமிழகம் | மாரியம்மன் தேர்த்திருவிழா | பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள எண். 4 வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசித் தேர்த்திருவிழா நடந்தது. விநாயகர் சாட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து மாரியம்மன் பூச்சாட்டுதல், அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜை, திருமஞ்சனம் நடந்தது. நாயக்கனூரிலிருந்து பூக்கம்பம் கோவில் வந்தடைதல், அனிக்கூடை பூஜை செய்து கோவில் ... |
தமிழகம் | தேசிய டென்னிஸ் போட்டி ஷமீமா, விக்னேஷ் சாம்பியன் | கோவை : கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் மாநில அளவில் 10, 12 வயது சிறுவர், சிறுமியர், தேசிய அளவில் 14, 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான டென்னிஸ் போட்டி ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நடந்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில சிறுவர், சிறுமியர் 64 பேர் போட்டியில் பங்கேற்றனர். நேற்று காலை நடந்த இறுத... |
தமிழகம் | தொடர் மின்வெட்டு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | பெ.நா.பாளையம் : தினசரி இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக மின் வினியோகம் நடப்பதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் வடமதுரை மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை வடக்கு பகுதியில் உள்ள சின்னதடாகம், வரப்பாளையம், வீரபாண்டி, மடத்தூர், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் கரும்பு, வாழை, தென்னை ... |
தமிழகம் | வடவள்ளியில் ரூ. 22.5 லட்சம் மதிப்பீட்டில் உழவர் சந்தை | பேரூர் : வடவள்ளியில் ரூ. 22.5 லட்சம் மதிப்பீட்டில், உழவர் சந்தை அமைக் கப்படுகிறது. வடவள்ளி பஸ் ஸ்டாப் பின்புறம் புளியந்தோப்பு பகுதி உள்ளது. இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கடந்த மாதம் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத் தில், <உழவர் சந்தை அமைக்க வடவள்ளி பேரூராட்சி நிர்... |
தமிழகம் | மருதமலைக்கு வந்த சோதனை தண்ணீரின்றி பக்தர்கள் வேதனை | பேரூர் : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடக்கவுள்ள நிலையில், மருதமலைக்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர் கூட கிடைப்பதில்லை; கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வடவள்ளி அடுத்துள்ள மருதமலைக்கு தமிழ் கடவுள் சுப்ரமணியரை தரிசிக்க பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைமீதுள்ள முருகனை தரிசிக்கும் பக்தர்களுக்கும், வேண்டுதலுக்காக மொட்ட... |
தமிழகம் | வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே நிலத்தகராறு தொடர்பாக வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர். ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை சையத்நகரை சேர்ந்த விவசாயிகள் அயூப்கான் (40). இவரது அண்ணன் இப்ராஹிம். இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்துள்ளது. அயூப்கானின் நிலத்தை இப்ராஹிம் அவரது பெயருக்கு மாற்றி விட்டதாக புகார் எழுந்த... |
தமிழகம் | விடிந்ததும் முடிந்தது பிரச்னை விடிய, விடிய போராட்டம் வாபஸ் | பேரூர் : வீரகேரளம் பேரூராட்சியில், தனியாருக்கு சொந்தமான 2.22 ஏக்கர் விவசாய நிலம் லே அவுட்டாக மாற்றப்பட்டதாகவும், அந்த நிலம் விவசாய பூமியாக விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பேரூராட்சி கவுன்சிலர்களின் ஒப்புதல் பெறாமலே, பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. " பேரூராட்சிக்கு வருவா... |
தமிழகம் | இலவச வீட்டுமனை பட்டா வழங்கல் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த பள்ளத்தூரில்இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. “பள்ளத்தூர் கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் 16 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’ என முதல்வரிடம் தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் மூர்த்தி மனு அளித்தார்.
மனுவின் பேரில், 16 குடும்பங்களுக்கும் இலவச வீட்... |
தமிழகம் | தம்பியுடன் தகராறு அண்ணன் தற்கொலை | கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே தம்பியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயக்கோட்டை அடுத்த சஜ்ஜல்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (35). இவரது அண்ணன் ராமதாஸ் (40). இவருக்கு திருமணமாகததால் தம்பி வீட்டில் வசித்துவந்தார்.
ராமதாஸ் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக ஊர் சுற்றி வந்துள்ளார்.... |
தமிழகம் | பொதுக்கூட்டம் | காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் இன்று (ஜூன் 5) மாலை நடக்கிறது. ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை வகிக்கிறார்.
ராஜன், சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதிகள் டேம்ரோடு செல்வம், சுப்பிரமணி, அவைதலைவர் அண்ணாமலை, யூனியன் சேர்மன் ஆதிமகேந்திரன், துணை மக... |
தமிழகம் | சித்தா, ஆயுர்வேத டாக்டர்களை நியமிக்க அரசு நடவடிக்கை | தேனி : அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையினை தீர்க்க அலோபதி தவிர மற்ற அனைத்து மருத்துவப்பிரிவுகளுக்கும் டாக்டர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ் மக்கள... |
தமிழகம் | திருச்சி விமான நிலையத்தில் மேம்பாடு கட்டணம் ஜூன் 15 முதல் பயணிகளிடம் வசூலிக்க முடிவு | திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஜூன் 15ம் தேதி முதல் விமானநிலைய மேம்பாடு கட்டணமாக, உள்நாடு பயணம் செய்பவர்களிடம் 150 ரூபாய், வெளிநாடு செல்லும் பயணிகளிடம் 360 ரூபாய் என வசூலிக்கப்பட உள்ளது.
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான... |
தமிழகம் | சிறையில் மண்ணில் புதைத்திருந்த 2 மொபைல் ஃபோன் கண்டுபிடிப்பு | திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகள் மத்தியில் சட்டத்துக்கு புறம்பாக அதிகளவில் மொபைல்ஃபோன் புழக்கத்தில் இருப்பதாக அடிக்கடி புகார் வந்தது. இதையடுத்து சிறையில் அடிக்கடி சோதனை நடந்தது.
அதன்படி, கடந்த மாதம் நடந்த சோதனையில் சிம்கார்டு இல்லாத மொபைல்ஃபோன் கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ச... |
தமிழகம் | அண்ணா கோளரங்கத்தில் அறிவியலாளருடன் சந்திப்பு | திருச்சி: திருச்சி அண்ணா அறிவியல் மைய (பொ) திட்ட இயக்குனர் ராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருச்சி அண்ணா அறிவியல் மையம் சார்பில், இன்று (5ம் தேதி) உலக சுற்றுச் சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, "நமது சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என்ற தலைப்பில், திருச்சி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச் சூ... |
தமிழகம் | போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் துப்பாக்கி குண்டு கைவிலங்கு மாயம் | வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் ஏட்டு கொண்டு சென்ற துப்பாக்கிக் குண்டுகள், கைவிலங்கு ஆகியவை மாயமானதால் அவரை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., உத்தரவிட்டார். வேதாரண்யம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வாரம் ஒரு முறை கைதிகளை பிற சிறைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்புப் பணிக்காக நாகை சென்று வருவது வ... |
தமிழகம் | பஸ்ஸில் இடம் பிடிக்க வைத்த சூட்கேஸ் 8 பவுன் நகையுடன் மர்ம நபர்கள் அபேஸ் | திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட்டில் பஸ்ஸில் சீட் போட்டிருந்த சூட்கேசை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை எம்.ஜி.ஆர்., நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (65). இவரது பேத்தி திருமணம் ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் தனது மனைவியுடன் பங்கேற்ற பின் சே... |
தமிழகம் | இடைநிலை ஆசிரியர் பட்டயத் தேர்வு கண்காணிக்க 2 சிறப்பு பறக்கும்படை | திருச்சி: திருச்சி மாவட்டம் முழுவதும் நடக்கும் இடைநிலை ஆசிரியர் பட்டயத்திற்கான அரசுத் தேர்வினை கண்காணிக்க, இரண்டு சிறப்பு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்ற முதலாம் ஆண்டு மற்றும் 2ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு, கடந்த 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை, இடைநிலை ஆ... |
தமிழகம் | போலீஸ் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் 38 பேருக்கு டி.ஐ.ஜி., உத்தரவு வழங்கல் | திருச்சி: திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மத்திய மண்டலத்தில் பணியாற்றும் போலீஸார், அமைச்சு பணியாளர்கள், ஓய்வு பெற்ற போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினரின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது.
மத்திய மண்டல ஐ.ஜி., கரண்சின்கா, டி.ஐ.ஜி., அமல்ராஜ் உத்தரவின் பேரில், ... |
தமிழகம் | ஆதரவற்ற குழந்தைகளை காப்பகத்தில் சேர்க்க வாய்ப்பு | திண்டுக்கல்: ஆதரவற்ற குழந்தைகளை, அரசு காப்பகத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட சமூக நல அலுவலர் அறிக்கை: அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில், 2010-2011 கல்வியாண்டில் குழந்தைகள் சேர்க்கப்பட உள்ளனர். ஆதரவற்ற, தாய், தந்தை இருவரில் ஒருவர் இழந்திருப்பவர், கணவரால் கை விடப்பட்டவர், மனநோயால் பாதிப்படைந்த... |
தமிழகம் | இலவச காப்பீடு திட்ட பயனாளிகள் பேரணி | நாமக்கல்: நாமக்கல்லில் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்கள் பேரணி நடத்தினர்.நாமக்கல்லில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்து குணமானவர்கள் நேற்று அணிவகுப்பு நடைபயணம் மேற்கொண்டனர் அரசு ... |
தமிழகம் | கறவைமாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு | நாமக்கல்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தொலைநிலைகல்விப் பிரிவு விரிவாக்கக் கல்வி இயக்ககம் சார்பில் கறவை மாடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து மூன்று மாத மற்றும் ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று இயக்குனர் கதிரேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப்பயிற்சிக்கு விண்ணப்பம... |
தமிழகம் | சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு விழா | நாமக்கல்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராம வளர்ச்சி நிறுவன வளாகத்தில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியீட்டு விழா நடந்தது. இந்திய ஆயுள் காப்பீட்டு சேலம் கோட்ட நுண் காப்பீட்டு மேலாளர் கோவிந்தராஜா தலைமை வகித்து, பிரசுரங்களை வெளியிட்டு பேசினார். அமைப்பின் இயக்குனர் தில்லை சிவக... |
தமிழகம் | ஆஸ்பெஸ்டாஸ் கூரை விழுந்து 25 பள்ளி மாணவர்கள் காயம் | நாமக்கல்: தனியார் பள்ளியில் உள்ள சமையலறையின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை கீழே விழுந்ததில் 25 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். நாமக்கல் திருச்செங்கோடு மெயின்ரோட்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நேற்று மாலை 6 மணியில் இர... |
தமிழகம் | 138 கிராமங்களில் விசேஷ கணக்கெடுப்பு பழங்குடியினர் விபரம் சேகரிக்க ஏற்பாடு | திண்டுக்கல்: மாவட்டத்தில் உள்ள 138 மலைக்கிராமங்களில், பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக'' கலெக்டர் வள்ளலார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சமீபத்தில் பழநி அருகே கத்தாளம்பாறையில் ஆய்வு நடத்தப்பட்டது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், கொத்தடிமைகள் போன்று நடத்தப்பட்டு வந்தனர்.
இவர்கள... |
தமிழகம் | வளைகாப்பு விழா | ப.வேலூர்: கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. யூனியன் சேர்மன் மூர்த்தி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் பானு வரவேற்றார். யூனியன் சேர்மன் சரஸ்வதி வளைகாப்பு விழாவை துவக்கி வைத்தார். கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு ம... |
தமிழகம் | ஹை-டெக் மானியம் பெற வேளாண் அதிகாரி அழைப்பு | நாமக்கல்: விவசாயிகளுக்கு பழச்செடிகள் மற்றும் நுண்ணீர் பாசனம் ஹை-டெக் மானியத் திட்டத்தில் வழங்கப்படுகிறது என்று புதுச்சத்திரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டாரத்தில் பரவலாக பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி ... |
தமிழகம் | மோகனூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு | மோகனூர்: மோகனூரில் நடந்த ரோட்டரி சங்க துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்க தலைவர் கணபதி தலைமை வகித்தார். கவுரவத்தலைவர் வக்கீல் சரவணன், யூனியன் சேர்மன் நவலடி... |
தமிழகம் | பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி | நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று மாலை பெய்த கன மழையால் சாலையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் நகரப் பகுதியில் நேற்று காலை முதல் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. மாலை நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணியளவில் நகரப் பகுதி முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தத... |
தமிழகம் | சீரான மின் வினியோகம் கோரி விளக்கு ஏந்தி நூதன போராட்டம் | நாமக்கல்: சீரான மின் விநியோகம் வழங்க கோரி, களங்காணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன், கிராம மக்கள் மண்ணெண்ணெய் விளக்கு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் அருகே உள்ள களங்காணி கிராமத்துக்கு களங்காணி துணை மின் நிலையம் மூலம் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. கிராமத்துக்கு உட்பட்ட குடியிருப்புகளில் நாள்த... |
தமிழகம் | ஈரோடு நகரில் போக்குவரத்து மாற்றம் | ஈரோடு: ஈரோடு பி.எஸ்., பார்க் மேம்பாலபணிக்காக ஈரோடு நகரில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன் அறிக்கை: ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடப்பதால், காந்திஜி ரோட்டிலும், பிரப் ரோட்டிலும் சகஜ நிலையில் வாகனங்கள் இயக்க முடியாத சூழ்நிலை உரு வாகியுள்ளது.... |
தமிழகம் | நூல் பேல் கடத்திய 5 பேர் கைது | ஈரோடு: வில்லரசம்பட்டி அருகே நூல் பேல் கடத்தியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல் பேல் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு வில்லரசம்பட்டி அருகே வேலப்பகவுண்டம் வலசை சேர்ந்தவர் விஜயகுமார்(32). எல்லப்பாளையம் கொங்கு நகரில் "மருதமலை டெக்ஸ்' என்ற பெயரில் நூல் மில் நடத்துகிறார... |
தமிழகம் | மாநில கைப்பந்து : கோவை தடாகம் சாம்பியன் | கோத்தகிரி: கோத்தகிரி கெங்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், கோவை தடாகம் அணி, கோப்பையை வென்றது. பொரங்காடு சீமை படகர் சங்கம், எச்.ஆர்.எம்., நினைவு அறக்கட்டளை மற்றும் கெங்கரை விளையாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான கைப்பந்து போட்டி, கெங்கரை கிராமத்தில் நடத்தப்பட்டது; மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்த... |
தமிழகம் | ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை ஆரம்பம் | ஈரோடு: ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் நடப்பாண்டுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரசு ஐ.டி.ஐ.,யில் பொருத்துனர், கடைசலர், எந்திர வேலையாள், மின் பணியாள், மின்கம்பியாள், டெக்ஸ்டைல் வெட் பிராஸஸிங் டெக்னீஷியன் ஆகிய இரண்டாண்டு தொழிற் பிரிவுகளுக்கும், பற்ற வைப்பவர் ஓராண்டு தொழிற் பிரிவுக் கும் மாணவர் சேர்க்கை ந... |
தமிழகம் | கருங்கல்பாளையத்தில் ரோட்டின் நடுவே சுவர் | ஈரோடு: போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் நடுவே தடுப்பு சுவர் கட்டப் பட்டுள்ளது. ஈரோடு நகரில் நாளுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பிரப் ரோடு, நேதாஜி ரோடு, ஆர்.கே.வி., ரோடு, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, பூந்துறை ரோடு, காந்திஜி ரோடு, சத்தி ரோடு ஆகிய இடங்களில் போக்குவரத... |
தமிழகம் | மாநகராட்சி கமிஷனர் பெயர் இல்லாத அறிவிப்பு பலகை | ஈரோடு: மாநகராட்சியில் பணியாற்றிய கமிஷனர்கள் விபரம் அலுவலக பெயர்ப்பலகையில் எழுதாமல் வெற்றிடமாக இருக்கிறது. ஈரோடு நகராட்சியாக இருந்தபோது 1934 முதல் 2008 வரை 57 நகராட்சி கமிஷனர்கள் பணிபுரிந்துள்ளனர். இவர்கள் பெயர் பட்டியல் கொண்ட அறிவிப்பு பலகை மாநகராட்சி பார்வையாளர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்த... |
தமிழகம் | பழநியில் தொடரும் மின்தடை நோயாளிகள் கடும் பாதிப்பு | பழநி: பழநியில் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பழநியில் கடந்த சில நாட்களாக எந்த நேரம் மின்தடை ஏற்படும் என கூற முடியாத நிலை உள்ளது. நேற்றுமுன்தினம் 5 மணி முதல் நேற்று மாலை 5 மணி வரை பல முறை மின்தடை ஏற்பட் டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.
பழநி அரசு ஆஸ்பத்திரியில் பெ... |
தமிழகம் | பாலம் பராமரிப்பு பணி தீவிரம் | ஈரோடு: ஈரோடு காந்திஜி ரோட்டில் பெரும்பள்ளம் ஓடை பாலம் பணி தீவிரமாக நடக்கிறது. ஈரோடு பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே ஈ.வி.என். ரோடு, காந்திஜி ரோடு, ஜீவானந்தம் ரோடு, மரப்பாலம் ஆகிய இடங்களில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில், காந்திஜி ரோட்டில் உள்ள பாலம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பாலத்தின் வழியே தினந்தோறும... |
தமிழகம் | விலை உயர வாய்ப்புள்ளதால் வெங்காயம் பயிரிட்டால் லாபம் | ஈரோடு: தமிழகத்தில் சிறிய வெங்காயம் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் இப்பருவத்தில் சிறிய வெங்காயம் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 2008-09ல் 77.29 லட்சம் டன் வெங்காயம் 5.54 லட்சம் ஹெக் டேரில் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே சிறிய வெங்காயம் உற் பத்தி செய்ய... |
தமிழகம் | அரசு பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம் 13 ஒன்றியங்களுக்கு படிவம் வழங்கல் | திருப்பூர் : பள்ளிகளை தரம் உயர்த்துவது, புதிதாக பள்ளிகள் துவங்குவது குறித்த பள்ளி வரைபட பணிமனை கூட்டம், திருப்பூர், வெள்ளகோவில் மற்றும் பல்லடத்தில் நடந்தது. 13 ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு பள்ளிகளின் தேவைகளை அறிவதற் கான படிவங்கள் வழங் கப்பட்டன.
இதுகுறித்த அறிக்கை வரும் 12ம் தேதி மாநில குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட... |
தமிழகம் | அனைவரும் கல்வி பெற விழிப்புணர்வு ஊர்வலம் | திருப்பூர் : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நல்லூர் மற்றும் கே.செட்டிபாளையம் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையங்களுக்கு உட்பட்ட பள்ளிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது; நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிராம கல்விக்குழு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அர... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.