category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மூன்று மாதங்களுக்கு நூல் விலை மாறாது : மில் உரிமையாளர் - ஏற்றுமதியாளர் ஒப்பந்தம்
திருப்பூர் : வரும் ஆகஸ்ட் இறுதி வரை நூல் விலையில் மாற்றம் செய்யாத வகையில், நூற்பாலை உரிமையாளர்களும், திருப்பூர் ஏற்றுமதியாளர்களும் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விலை அனைத்து மில்களிலும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்...
தமிழகம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை:தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நாளை, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்தப்படும் என, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:கடந்த நான்கு ஆண்டு காலமாக, ...
தமிழகம்
செயின் பறிப்பின் போது கீழே விழுந்த பெண் பலி
மதுரவாயல் : மகனுடன் டூவீலரில் சென்ற பெ ண்ணின் செயினை மர்ம நபர்கள் பறித்த போது, நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் மீது எதிரே வந்த வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால்(55). இவரது மனைவி மல்லிகா(50). இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். கடைசி மகன் சீனிவாசன்(22) மற்றும் அவரது தாய் மல்லிகா இர...
தமிழகம்
தீப்பெட்டி கேட்டதால் மோதல் : 7 பேர் கைது
வளசரவாக்கம் : சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்ட விவகாரத்தில், சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கு மோதிக் கொண்டதில், சாப்ட்வேர் ஊழியர்கள் மூவர் காயமடைந்தனர். விசாரணை நடத்திய போலீசார், ஓட்டல் ஊழியர்கள் ஏழு பேரை கைது செய்தனர்.சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வெங்கட்(30) சீனிவாச...
தமிழகம்
கருத்தரங்கம்
எழும்பூர் : சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய டாக்டர்கள் சங்கமும், தமிழ்நாடு அறிவியல் பேரவையும் இணைந்து, மருத்துவத்துறையில் உலக மயமாக்கல் கொள்கையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கை எழும்பூரில் நடத்தினர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கிராமப்புற டாக்டர்கள் என்ற மூன்றரை ஆண்டு மருத்துவ படிப்பை எதிர்க் கிறோம...
தமிழகம்
குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி வேண்டுகோள்
செங்கல்பட்டு : பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து செங்கல்பட்டு நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு கூறியதாவது:செங்கல்பட்டு நகராட்சி குடிநீர் உபவிதிகளின்படி நகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைத்தளத் தொட்டிகள் மற்றும் தலைமை நீரேற்று நி...
தமிழகம்
முத்துசாமி ஆதரவாளர்கள்12ம் தேதி தி.மு.க.,வில் சேர்ப்பு
சென்னை:முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆதரவாளர்கள், தி.மு.க.,வில் இணையும் விழா, வரும் 12ம்தேதி சென்னையில் நடக்கிறது.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முத்துசாமி இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் சேருகிறார். தனது ஆதரவாளர்களுடன் இணையும் விழா, வரும் 12ம் தேதி சென்னையில் நடக்கிறது. தனது சொந்த மாவட்டமான ஈரோடு மட்...
தமிழகம்
ஆதிசங்கரர் குறித்து ஆய்வு: பெரு நாட்டு தூதர் ஆர்வம்
காஞ்சிபுரம் : இரு நாட்டு உறவு மேம் பட முதலில் மக்களுக்கு இடையே புரிதல் அவசியம் என்று, பெரு நாட் டைச் சேர்ந்த இந்தியாவுக் கான தூதர் கேர்லோஸ் ஏ.இரிகோவன் போர்னோ தெரிவித்தார்.காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமகா வித்யாலயா நிகர்நிலைப் பல்கலைக் கழகத் திற்கு, பெரு நாட்டைச் சேர்ந்த இந்தியாவுக்கான தூதர் கேர்லோஸ் ஏ.இரிக...
தமிழகம்
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., அலுவலகம் இடமாற்றம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., அலுவலகம் இன்று முதல் புதுப்பிக்கப் பட்ட பழைய கட்டடத்தில் செயல்படும்.செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலை அரசு மருத்துவமனைக்கு அருகில் செங்கல்பட்டு வருவாய்க் கோட்ட அலுவலகம் (ஆர்.டி.ஓ.) செயல் பட்டு வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இவ்வலுவலக கட்டடத்தின் மேற்கூரை சீமை ஓடுகளால் ஆனது.பழ...
தமிழகம்
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவ மாணவியருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி., கேட்டரிங், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.காம்., போன்ற பட்டப்படிப்புகள் துவ...
தமிழகம்
ஜெ.,விடம்ரூ.40 லட்சம் ஒப்படைப்பு
சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிடம் கட்சி வளர்ச்சி நிதியாக 40 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை, திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் செந்தூர் பாண்டியன் நேற்று வழங்கினார்.அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் செந்தூர் பாண்டியன் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது, திருந...
தமிழகம்
பைக்-லாரி மோதல் வாலிபர் பலி
செங்கல்பட்டு : பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் இறந்தார்.உத்திரமேரூர் அடுத்த இளநகர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் தியாகராஜன்(21). நேற்றுமுன்தினம் பகல் 12.30 மணிக்கு புக்கத்துறை கூட்ரோட்டில் இருந்து உத்திரமேரூர் நோக்கி ஹீரோ ஹோண்டா கிளாமர் பைக்கில் சென்றார்.கட்டியாம்பந்தல் பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை மு...
தமிழகம்
தைலமர காட்டில் வாலிபர் உடல் மீட்பு
செங்கல்பட்டு : மறைமலைநகர் அடுத்த கூடலூர் தைலமரக் காட்டில் 35 வயது மதிக் கத்தக்க வாலிபர், வெட்டுக் காயங்களுடன் முகம் எரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப் பட்டு கிடந்தார். மறைமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் ஜெயராமன் மற் றும் எஸ்.ஐ., ரகுநாதன் மற் றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதன...
தமிழகம்
வி.ஏ.ஓ.,வுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
செங்கல்பட்டு : ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சாலவாக்கம் அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவிச்சந்திரன்(37). இவர், கிராமத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான சர்வே எண் 151/5சி இடத்தை ஆக்கிரமித்து இருந்தார். கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமா...
தமிழகம்
வேளச்சேரி சாலையில் மழைநீர் கால்வாய் தேவை
தாம்பரம் : தாம்பரம் - வேளச்சேரி சாலையில் மழைநீர் கால் வாய்கள் இல்லாததால் மழைநீர், சாலையிலேயே குட்டைபோல் தேங்கி விடுகிறது.அதிக போக்குவரத்து கொண்ட தாம்பரம் - வேளச்சேரி சாலையில் இரு புறங்களிலும் மழைநீர் கால்வாய்கள் அமைக் கப்படவில்லை. இதனால், மழைக் காலங் களில் சாலையில் பல இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி விடுகிறது. வாகன...
தமிழகம்
ராஜ்யசபா மனு தாக்கல்: கடைசி நாள்
சென்னை:ராஜ்யசபா தேர்தலுக்கான மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது.தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ளது. இதற்கான மனு தாக்கல், கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது. தி.மு.க.,வினர் மூன்று பேர், அ...
தமிழகம்
ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி
தாம்பரம் : தனியார் கல்லூரி மாணவர் மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தார்.இது குறித்து போலீசார் கூறியதாவது:ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் முருகேசன்(20). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு மறைமலைநகர் - பொத்தேரி இடையே மின்சார ரயிலில் அடிபட்டு மு...
தமிழகம்
இடிதாக்கி மாணவர் பலி
திருவள்ளூர் : இடி தாக்கியதில் பள்ளி மாணவர் உடல் கருதி பரிதாபமாக உயிரிந்தார்.திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்த சத்தரைகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் டில்லிபாபு(13). இதே கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால், மாலை கிரிக்கெட் விளையாட நண்பர்களுடன் வயல்வ...
தமிழகம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த மீஞ்சூர், திருப்பாலைவனம், காட்டூர் வழியாக செல்லும் சாலையின் இருபுறங்களிலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்த சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை ரூ.13 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய் துள்ளது.இதையடுத்து, சாலை விரிவாக்கப் பணிக்காக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரம...
தமிழகம்
போதை ஆசாமி பலி
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்த ஓசூரான் மகன் ஆறுமுகம்(63). கடந்த 4ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டு மாடிப்படியில் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவரை சிகிச்சைக்கென போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார். செவ்வாப்பேட்டை ப...
தமிழகம்
வாகனம் மோதி ஒருவர் பலி
திருத்தணி : திருத்தணி அடுத்த அகூர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி(55). நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு சைக்கிளில் அகூர் கிராமத்திலிருந்து திருத்தணி நோக்கி சென்றார். அகூர் பஸ் நிலையம் அருகே செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
நெடுஞ்சாலையில் மரண பள்ளங்கள் : விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
திருத்தணி : சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையானது, மரண சாலையாக மாறி வருவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட் டிகள் அடிக்கடி விபத் துக்குள்ளாகி அவதிப்படுகின்றனர்.சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர், பட்டறைபெரும்புதூர், கே.கே.சத்திரம், ஆற்காடு குப்பம், திருத்தணி உட்பட பல கிராமங்கள் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்ச...
தமிழகம்
தெருவில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
திருவள்ளூர் : திருவள்ளூர் தேரடி பஸ் நிறுத்தம், மோதிலால் தெரு ஆகிய இடங்களில் ஆட்டோக்கள் மற்றும் பைக்குகளை ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.திருவள்ளூர் தேரடி, பனகல் தெரு, காக்களூர் சாலை மற்றும் மோதிலால் தெரு ஆகிய தெருக்களில் எந்நேரமும் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். செங்குன்றம், கும்ம...
தமிழகம்
மீனவர்களிடம் மீன்களை பறித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம் : தமிழக மீனவர்களிடம், இலங்கை கடற்படையினர் மீன்களை பறித்துக்கொண்டு, எச்சரித்து அனுப்பினர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவிற்கும் தலைமன்னாருக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகளை, இலங்கை கடற்படையினர் மடக்க...
தமிழகம்
தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்செட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகு(35); கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராதிகா(30). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு ரகு வேலைக்கு சென்றதும் ராதிகா குழந்தைகளுடன் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார். அப்போது சண்முகம் மகன் ராமு(28)என்பவர், ரகுவ...
தமிழகம்
அனுமதியின்றி லாட்டரி விற்ற மூவருக்கு காப்பு
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் அரசு அனுமதியின்றி வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக திருவள்ளூர் எஸ்.பி., வனிதாவுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் மணவாளநகர் போலீஸ் எஸ்.ஐ., மீனாலோச்சனா மற்றும் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.அப்போது திருவள்ளூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் ...
தமிழகம்
ராஜகோபுரம் கட்டும் பணி ஆய்வு
திருத்தணி : திருத்தணி மலைக்கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணியை அறங்காவலர் குழுத் தலைவர் ஈஸ்வரப்பன் ஆய்வு செய்தார்.திருத்தணி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கப்படுவது மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.தேவஸ்தான குடில்களில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய...
தமிழகம்
பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பயணிகள் அவதி
பேரம்பாக்கம் ;கால அட்டவணை இல் லாததால், அரசு பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பேரம்பாக்கம் பயணிகள் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் வழியாக பூந்தமல்லி, அரக்கோணம், திருத்தணி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஊத்துக் கோட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் சென...
தமிழகம்
சிக்னலுக்காக நிற்கும் ரயில்கள் பயணிகள் கடும் அவதி
திருவள்ளூர் : திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து வரும் புறநகர் ரயில்கள் திருவள்ளூருக்கு அருகே உள்ள சிக்னலில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக சென்னைக்கு தினமும் ஏராளமான புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ஏராளமானோர் ...
தமிழகம்
வால்பாறையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
வால்பாறை : வால்பாறை பகுதிகளில் மீண்டும் சிறுத்தை நடமாடுவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். வால்பாறை அருகே தோணிமுடி எஸ்டேட்டில் கடந்த நான்கு மாதங்களில் இரண்டு சிறுவர்கள், சிறுத்தையின் கொடூர தாக்குதலால் இறந்தனர். இந்நிலையில், தோணிமுடி முதல் பிரிவைச் சேர்ந்த முத்து என்பவருக்கு சொந்தமான மாட்டுத் தொழுவத்தில் நேற்று முன்தினம் ந...
தமிழகம்
பெண் எஸ்.ஐ.,க்கள் இல்லாத 22 ஸ்டேஷன்கள் : புகார் அளிக்க பெண்கள் தயக்கம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள 22 போலீஸ் நிலையங்களில் பெண் எஸ்.ஐ.,க்கள் இல்லாததால் தங்கள் பிரச்னை குறித்து வெளிப்படையாக புகார் அளிக்க முடியாமல் பெண்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக் கோட்டை, பொன்னேரி, திருத்தணி என ஐந்து போலீஸ் சப்-டிவிஷன்கள் உள்ள...
தமிழகம்
புதுப்பெண் தற்கொலை: கணவர் கைது
திருவொற்றியூர் : வரதட்சணை கொடுமையால், திருமணமான ஐந்து மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர் பாக, கணவரை போலீசார் கைது செய்தனர்.தண்டையார்பேட்டை சாஸ்திரி நகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மூன்றாவது மகள் சியாமளாதேவி(25). இவருக்கும் திருவொற்றியூர் 8வது தெருவைச் சேர்ந்தவர் யுவராஜூ...
தமிழகம்
கஞ்சா விற்ற:தம்பதியர் கைது
பேசின்பாலம் : வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த தம்பதியரை போலீசார் நேற்று கைது செய்தனர்.பேசின்பாலம் கணேசபுரம் ஒன்பதாவது பிளாக்கை சேர்ந்தவர் மணிவண்ணன்(32). இவரது மனைவி வேலழகி(28). இவர்கள் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக பேசின்பாலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீச...
தமிழகம்
உலக சுற்றுச்சூழல் தினவிழா
திருப்போரூர் : உலக சுற்றுச்சூழல் தினவிழா திருப்போரூரில் நடந்தது.திருப்போரூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம், ஆலத்தூர் ஆக்டாவிஷ் நிறுவனம் மற்றும் பேரூராட்சி இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழாவை நடத் தின. விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் செல்வி தலைமை தாங்கினார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக வெப்பமயமாதலை தடு...
தமிழகம்
இளம்பெண் தற்கொலை
பெரியபாளையம் : பெரியபாளையம் அடுத்த மெய்யூர் சோமதேவன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமு மகள் தேவி(20). இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வயிற்று வலி அதிகமானதால், மனமுடைந்த இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ஆசிட் குடித்து வாலிபர் பலி
புதுகும்மிடிப்பூண்டி : புதுகும்மிடிப்பூண்டி அடுத்த ராமஞ்சேரிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் ராஜேஷ்(22). அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவருக்கு, நேற்று முன்தினம் வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த இவர் பாத்ரூமில் வைத்திருந்த ஆசிடை குடித்தார். இவரை சிகிச்சைக்கென சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்...
தமிழகம்
குடியிருப்பு பகுதியில் ஒரே குழாய் ரயில்வே போலீசாரின் பரிதாப நிலை
அரக்கோணம் : ரயில்வே போலீஸ் குடியிருப்புப் பகுதியில் ஒரே குழாய் இருப்பதால் குடிநீர் கிடைக்காமல் காலி குடங்களுடன் பெண்கள் அலைகின்றனர்.அரக்கோணம் ரயில்வே போலீஸ் குடியிருப்புப் பகுதியில் 32 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ஒரே குடிநீர் குழாயில் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. இதனால் குடியிருப்பு மக்களுக்கு குடிநீரின்றி தட்டுப்பாடு...
தமிழகம்
ஊழியர்கள் பற்றாக்குறை: நோயாளிகள் கடும் அவதி
அரக்கோணம் : அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் இடநெருக்கடி காரணமாக புதிதாக 1.40 கோடி ரூபாயில் கூடுதல் கட்டடம் கட்டி சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு ஸ்கேன் மற்றும் இ.சி.ஜி., அறைகள், மகப் பேறு அறைகள், ஆய்வுக் கூடம், ...
தமிழகம்
அனைத்து துறைகளில் மத்திய அரசு தோல்வி : கட்காரி
ஐதராபாத் : இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளதாக பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மூன்று நாள் பயணமாக பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி ஐதராபாத் வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த கட்காரி, இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள ஐக்கிய முற்போக்க கூட்டணி அர...
தமிழகம்
சாலையில் நிறுத்தப்படும் அரசு பஸ்கள் செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல்
செங்குன்றம் : பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.சுற்றியுள்ள பகுதிகளுக்கு தினமும் 150க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.தவிர, திருவள்ளூர், திருத்தணி, பொன் னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், ஆரணி, ஊத்துக்க...
தமிழகம்
கலந்துரையாடல் நிகழ்ச்சி
சென்னை : உலக புற்றுநோய் வெற்றியளர்கள் தினமான' நேற்று சென்னை மருத்துவ கல்லூரியில் புற்று நோயல் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ”கேக்' வெட்டி கொண்டடினர். இதில் கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரமோகன்,மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர...
தமிழகம்
மதுரையில் 21 மி.மீ., மழை
மதுரை : மதுரை, தேனி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று முன்தினம் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 கன அடியாக இருந்தது. நேற்றைய நீர்மட்டம் 110.20 அடி. வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர்மட்டம் 28.64 அடியாக இருந்தது. மழையளவு(மி.மீ.,) : பெரியாறு 6.2, வைகை 2, மஞ...
தமிழகம்
தேனி விபத்தில் சிக்கியவர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் நிதியுதவி
சென்னை : விபத்தில் மரணமடைந்த ஆண்டிப்பட்டி தொகுதியைச் சேர்ந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க., சார்பில் தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர்கள் வீரபாண்டியில் உள்ள உறவினர் வ...
தமிழகம்
நண்பர்கள் கேலி செய்ததால் காதல் ஜோடி தற்கொலை
வேலூர் : திருப்பத்தூர் அருகே நண்பர்கள் கேலி செய்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் மகன் சிவலிங்கம்(21); கட்டட மேஸ்திரி. குரிசிலாப்பட்டு கல்லுக்குட்டை புதூரை சேர்ந்த பழனி மகள் திவ்யா(14). அவர், வடுகமுத்தம்பட்டி அரசு மேல்ந...
இந்தியா
பீகார் சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் போட்டி : ஏபி பரதன்
பாட்னா : பீகார் சட்டபை தேர்தலில் இடதுசாரி கட்சிகள் 150 இடங்களில் போட்டியிடும் என்று கூறினார். விரைவில் பீகார் சட்டசபைக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஏபி பரதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பீகாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து 50 இடங்களி...
தமிழகம்
ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு நிதியுதவி
பெ.நா.பாளையம் : ரயில் - பஸ் மோதலில் இறந்தவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் கூடுதல் பாசஞ்சர் ரயில் கடந்த 4ம் தேதி மாலை 5 மணிக்கு, இடிகரை அருகே லெவல் கிராசிங்கை கடக்கும் போது மினி பஸ் மீது மோதியது. இதில், பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவி உத்ரா...
தமிழகம்
வெளிநாட்டிற்கு கடல் அட்டை கடத்த முயன்ற 4 பேர் கைது
மண்டபம் : மண்டபத்திலிருந்து வெளிநாட்டிற்கு கடல் அட்டை கடத்த முயன்ற நான்கு பேரை, விருதுநகர் வனத்துறையினர் கைது செய்தனர். மன்னார் வளைகுடா கடல் மார்க்கமாக இலங்கை வழியாக கடல் அட்டை அவ்வப்போது கடத்தப்பட்டு வருகிறது. இதை ராமநாதபுரம் மாவட்ட தடுப்பு பிரிவினர் சரியாக கண்டுகொள்ளாத நிலையில், விருதுநகரிலிருந்து வன உயிரின உதவி காப்...
தமிழகம்
கடல் அலையில் சிக்கினர் வாலிபர்கள் : ஒருவர் மீட்பு, மற்றொருவர் மாயம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குளித்த இரண்டுபேரை கடல் அலை இழுத்து சென்றது. ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் பிரேமா காலனி பகுதி தனியார் மில்க் கம்பேனி ஊழியர்கள் 8பேர் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு பகுதிகளை சுற்றிபார்த்த ...
தமிழகம்
போலி நகைகள் மூலம் ரூ.15 லட்சம் மோசடி : ஒருவர் கைது
நாகர்கோவில் : கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து 15 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.  நாகர்கோவில் அருகே வெட்டுர்ணிமடத்தை சேர்ந்தவர் வினோத் (32). இவர், சரக்கல்விளை கூட்டுறவு சங்கத்தில் ஒரு ஆண்டுக்கு முன்னர் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு நகை அடகு வைத்துள்ளார். இந்த நகைக்கு வட்டியும் கட்டப்பட...
தமிழகம்
கூட்டுறவு கடன் சங்கத்தில் பல லட்சத்திற்கு ஈடாக போலி நகைகள் கொடுத்து மோசடி: நான்குபேர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவில் சரக்கல்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகை வைத்து பல லட்சம் மோசடி செய்த கேபிள் டி.வி. உரிமையாளர் உடந்தையாக இருந்த கடன் சங்க செயலாளர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் வல்லன்குமாரவிளை சரக்கல்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. நகை கடன் வ...
தமிழகம்
சாமிதோப்பு அய்யா கோபுரம் திறப்புவிழா
தென்தாமரைகுளம்: சாமிதோப்பு தலைமைப்பதியில் புதிதாக அமைக்கப்பட்ட 96 அடி உயர புதிய அய்யா கோபுரத்தை, மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.சாமிதோப்பு தலைமைப்பதியில் தற்போது வைகாசி திருவிழா நடந்து வருகிறது. 10ம் திருவிழாவான நேற்று காலை தலைமைப்பதியில் புதிதா...
தமிழகம்
கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் ரயிலில் ஹைட்ராலிக் டாய்லெட் சிஸ்டம் அறிமுகம்
கன்னியாகுமரி : கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹைட்ராலிக் டாய்லெட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.உலகின் மிகப்பெரிய பொதுதுறை நிறுவனமான இந்தியன் ரயில்வே முக்கிய நகரங்களையும் சுற்றுலா தலங்களையும் இணைத்து ரயில் சேவையை நடத்தி வருகிறது. தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்வதன் மூலம் கோடிக்கணக்கான ரூபா...
தமிழகம்
தூத்துக்குடி சின்னகோவிலில் நற்கருணை பெருவிழா பவனி
தூத்துக்குடி: தூத்துக்குடி திரு இருதயங்களின் பேராலயத்தில் (சின்னகோவில்) இயேசுவின் திரு இருதய பெருவிழா மற்றும் மரியாவின் மாசற்ற இருதயப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று நற்கருணை பவனி நடந்தது.தூத்துக்குடி திரு இருதயங்களின் பேராலயத்தில் இயேசுவின் திரு இருதய பெருவிழா வரும் 11ம் தேதியும், மரியாவின் மாசற்ற இருதயப் பெருவிழா வரும்...
தமிழகம்
தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் வெற்றி
தூத்துக்குடி,: -தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பள்ளியில் 153 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சிவசங்கரி 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், ஆபிரகாம் செல்வின், ரமேஷ்குமார் ஆகிய...
தமிழகம்
செய்துங்கநல்லூரில் சென்சஸ் பணி துவக்கம்
செய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூர் பிர்க்காவில் சென்சஸ் பணியினை தேர்தல் தாசில்தார் துவக்கி வைத்தார்.இந்திய அரசு சென்சஸ் 2010 என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. செய்துங்கநல்லூர் பிர்க்காவில் செய்துங்கநல்லூர் 1வது வார்டில் இப்பணி துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பஞ்.,தலைவி ஜீனத்அலியார் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் பிர்க்...
தமிழகம்
தூத்துக்குடி-திருச்செந்தூர் பைபாஸ் பாலத்தில் தடுப்பு சுவர் : வாகன ஓட்டிகள் கோரிக்கை
தூத்துக்குடி,: தூத்துக்குடி-திருச்செந்தூர் பைபாஸ் ரயில்வே மேம்பாலத்தில் இடிந்து போன தடுப்பு சுவரினை மீண்டும் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் திசையில் தினசரி ஏராளமான லாரிகள், பஸ்கள், கார்கள், டூவிலர்கள் சென்று வருகின்றன. இவை அனைத்தும் தூத்துக்குடி-திருச்...
General
விசாரணைக்கு ஒத்துழைக்க ஹெட்லி மறுப்பு?
சிகாகோ: இந்திய அதிகாரிகளின் விசாரணைக்கு ஹெட்லி ஒத்துழைக்க மறுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹெட்லி சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மும்பை தாக்குதலில் ஹெட்லிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்த இந்தியா முடிவு செய்தது. அவரிடம் விசாரணை நடத்த கடந...
தமிழகம்
வேளாண் தொலைநிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு
புதூர்: தமிழ்நாடு வேளாண் பல்கலையின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது என்று இதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநர் வள்ளுவபாரிதாசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, முதுநிலை பட்டப்படிப்பில் (செமஸ்டர் முறை), எம்.பி.ஏ.,(...
தமிழகம்
கூட்டுறவு வங்கியில் பல்வேறு பணிகளுக்கு பதிவு மூப்ப அறிவிப்பு
தூத்துக்குடி,: கூட்டுறவு பாங்க் உதவியாளர், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிட நியமனத்திற்கான பதிவு மூப்பு பட்டியலை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு ப...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடம் இல்லாத காரணத்தினால் பல் வேறு ந
புதூர்: - மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து போதிய விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடம் இல்லாத காரணத் தினால் கணக்கெடுப்பதில் பல் வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்கவேண்டியதிருப்பதாகவும் அதனால் மக்கள் புரிந்து கொள்ளக்கூடியஅளவில்விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தவேண்டும் என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்களுக்கும், மேற்பார்வையாளர...
தமிழகம்
பேய்க்குளம் அருகே சூறாவளி காற்று : 10 ஆயிரம் வாழைகள் சேதம்
பேய்க்குளம் :  பேய்குளம் அருகே ஏற்பட்ட சூறாவளி மழையினால் 10 ஆயிரம் வாழைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன.பேய்க்குளம் மற்றும் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென மழை மற்றும் சூறாவளி காற்று வீசியது. இதனால் கோமானேரி பஞ்.,குட்பட்ட கோமானேரி கூவைகிணறு, கலுங்குவிளை மற்றும் கருங்கடல் பஞ்.,குட்பட்ட கருங்...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா
கோவில்பட்டி: -கோவில்பட்டியில் தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.கோவில்பட்டி வேலாயுதபுரம் 6 வது வார்டில் தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கோவில்பட்டி ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் 274 பயனாளிகளுக்கு அடுப்...
தமிழகம்
பைக் விபத்து போலீஸ் ஏட்டு காயம்
பசுவந்தனை : பசுவந்தனை அருகே டூ வீலர் விபத்துக்குள்ளானதில் கயத்தாறு போலீஸ் ஏட்டு தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கயத்தாறு போலீஸ் ஸ்டேசனை சேர்ந்த இப்ராஹிம் ஜெயக்குமார் (46). இவர் வெளிப்புற பணிக்காக ஓட்டப்பிடாரம் போலீஸ் ஸ்டேசனுக்கு டூ வீலரில் சென்றுள்ளார். இந்நிலையில் பசு...
தமிழகம்
பொது இடத்தில் ஊதிய தள்ளிய 26 பேருக்கு அபராதம்
கோவில்பட்டி : கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்டில் புகை பிடித்த 26 நபர்களிடமிருந்து 2 ஆயிரத்து 600 ரூபாய் அபதாரம் வசூலிக்கப்பட்டது.கோவில்பட்டி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரால்ப் செல்வின் உத்தரவின் படியும், தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் பகவதி பெருமாள் ஆலோசனையின் பேரிலும் கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார...
தமிழகம்
செயின் பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலை
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே கடைக்கு சென்ற இளம் பெண்ணிடம் தங்க செயினை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி பிஎன்டி காலனியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகள் ரம்யா (17). இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அங்குள்ள கடை க்கு சென்ற...
தமிழகம்
கோவில்பட்டியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டி : கோவில்பட்டியில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.கோவில்பட்டி இலுப்பையூரணி நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம், பார்வதி உயர்நிலை பள்ளி பசுமை படை மற்றும் கோவில்பட்டி பசுமை இயக்கம் சார்பில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு நடந்த இயற்கை பாதுகாப்பு விழிப்...
தமிழகம்
ஒரு வழிப்பாதையில் பாய்ந்து வந்த கார் பைக் மீது மோதி விபத்து
தூத்துக்குடி, : தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமுறை மீறி சென்ற காரும், அதே ரோட்டில் ஒழுங்காக சென்ற பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது.சம்பவ இடத்திற்கு போலீசாரும், போக்குவரத்து போலீசார் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை சரமாரியாக அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...
இந்தியா
26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை
போபால் : சுமார் 15 ஆயிரம் உயிரை கொன்ற போபால் விஷ வாயு வழக்கில் சேர்க்கப்பட்ட 8 பேர் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இன்றைய தீர்ப்பை கேட்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் கோர்‌ட் முன்பாக கூடினர். தீர்ப்பு கடுமையாக வழங்கிட வேண்டும், என்று கோஷங்க...
தமிழகம்
கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்
தூத்துக்குடி : கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்க கிளைக்கூட்டம் நடந்தது.பாண்டியராஜன் தலை மை வகித்தார். தாலுகா செயலாளர் தம்பித்துரை வரவேற்றார். கூட்டத்தில் நடராஜபுரம் மின்சார சுடுகாடு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நடராஜபுரம் மேற்கு பகுதி பெரிய ஓடையை தூர்வார வேண்டும். கட்டுமான தொழிலாளி விபத...
தமிழகம்
காதல் கணவன் எட்டி உதைப்பு: கர்ப்பிணி பெண்,குழந்தை பலி
பெரியதாழை : தட்டார்மடம் அருகே கர்ப்பினி பெண் வயிற்றில் பிறந்த ஆண் குழந்தை இறந்தது. பிறந்த குழந்தை மறுநாளிலே பரிதாபமாக இறந்து போனதால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் கணவர் வயிற்றில் மிதித்ததால் தான் இறந்ததாக மனைவியின் அண்ணன் தட்டார்மடம் போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி...
தமிழகம்
தி.மு.க., உறவு: பா.ம.க., செயற்குழு நாளை முடிவு
சென்னை:ராஜ்யசபா எம்.பி., பதவிக்காக தி.மு.க., விதித்துள்ள நிபந்தனையை ஏற்று, தி.மு.க., கூட்டணியில் இணைவதா என்பது குறித்து முடிவு செய்ய, பா.ம.க., செயற்குழு நாளை கூடுகிறது.பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, அவர் மீண்டும் எம்.பி.,யாக, தி.மு.க.,வின் ஆதரவை பா.ம.க....
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தி விற்பனை: மக்கள் கோபம்
கேந்திரபாரா : ஒரிசாவில் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மலிவு விலை அரிசியை, ரேஷன் கடை ஊழியர்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஒரிசாவில் ஏழை மக்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ அரிசி ரூ. 2க்கு விற் பனை செய்யப்படுகிறது. ஆனால், மலிவு விலை அரிசியை ரேஷன் கடை ஊழியர்கள் கள்ளச...
தமிழகம்
காயல்பட்டிணத்தில் சென்செஸ் பணி துவக்கம்
காயல்பட்டணம், ஜூன் 7- காயல்பட்டண நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது.காயல்பட்டண பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த 1ம் தேதி முதல் துவங்கப்பட்டது. முதல் கணக்கெடுப்பு பணி நகராட்சி மன்ற தலைவர் செய்து அப்துல் ரகுமான் வீட்டிலிருந்து துவங்கியது. பொதுமக்கள் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர்....
தமிழகம்
விஷம் கலந்த கள் விற்றவர் கைது
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் விஷம் கலந்த கள் விற்றவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,தருவைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் துரைசாமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள கோயில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை ...
தமிழகம்
கல்வித்துறை ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை
தூத்துக்குடி, : தூத்துக்குடியில் கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர் வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி பொன்னகரம் தெருப்பகுதியைச் சே ர்ந்தவர் ஜெயரா ணி(44). இவர் கல்வித்துறை ஆபிசில் ஊழி...
தமிழகம்
சுந்தரவேல்புரம் கோயிலில் நாளை கொடை விழா
தூத்துக்குடி,: தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் நாளை கொடை விழா நடக்கிறது.கடந்த 1ம் தேதி தொடங்கிய கால்நாட்டு விழாவுடன் கொடைவிழா ஒரு வார காலமாக நடந்து வருகிறது. அம்மனுக்கு தினசரி விதவிதமான அலங்காரத்துடன் பூஜை நடந்து வருகிறது. நாளை பால்குடம் எடுத்து அம்மனுக்கு பூஜைகள் செய்து சுந்தரவேல்புரம் பகுதி முழ...
தமிழகம்
இரு விமானங்களின் சேவை ரத்து : திருச்சி பயணிகள் கடும் அதிர்ச்சி
திருச்சி : திருச்சியில் இருந்து தினமும் காலை, மாலை சென்று வந்த இரு விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது, பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு தினமும் மாலை 5.20 மணிக்கு பாரமவுண்ட் விமானம் வந்து, மீண்டும் 5.45 மணிக்கு சென்னை செல்லும். நேற்று முன்தினம் மாலை வர வேண்டிய அந்த விமானம் தி...
இந்தியா
ராஜ் தாக்கரே மீது ஏகப்பட்ட வழக்குகள் விசாரிக்க மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
மும்பை : மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க, மகாராஷ்டிர மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில், "மும்பை மராட்டியர்களுக்கே சொந்தம்' என்பது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களுக்காக, அவ்வப்போது போராட்டம் நடத்துபவர் நவநிர்மாண் சேனா அமைப்பின் தலை...
தமிழகம்
துணை ஜெயிலர்கள் 9 பேர் அதிரடி மாற்றம்
கோவை : தமிழக சிறைகளில் பணியாற்றும் ஒன்பது துணை ஜெயிலர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 12 மத்திய சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகள், தாலுகா அளவிலான கிளைச் சிறைகள் உள்ளன. தவிர மகளிர் மற்றும் திருட்டு, கொலை குற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை பாதுகாக்கும் மையங்கள் உள்ளன. இச்சிறைகளில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என...
தமிழகம்
யானைகளை பாதுகாக்க ஆய்வுக்குழு
தர்மபுரி : யானைகளை பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்ய, குழு அமைக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், காவிரி படுகை பகுதிகள், யானைகள் வாழ் விடமாக உள்ளன. கோடையில் யானைகள், தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேறி, மலைக் கிராம பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட கிராமப் பகுதி...
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 4ம் தேதி 76.7 அடியாகவும், நீர் இருப்பு 38.747 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. கடந்த இரு நாட்களாக தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதனால், அணைக்கு நீர்வரத்து நேற்று மதியம் 12 மணிக்கு 6,700 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 7,525 கனஅடியாகவும் அதிகரித்...
தமிழகம்
சம்பள உயர்வு இல்லாமல் தவிக்கும் தினக்கூலி நூலகர்கள்
மதுரை : தமிழகத்தில் தினக்கூலிகளாக பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட நூலகர்கள், சம்பள உயர்வு இல்லாமல் தவிக்கின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியுடையவர்கள் நூலகர்களாக பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு அரசின் அகவிலைப்படி போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. அதே சமயம் நூலகங்களில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க, பிள...
தமிழகம்
நகராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி சென்னைக்கு நடைபயணம்
பழநி: உடுமலை நகராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமச்சந்திரன் என்பவர் நடை பயண போராட்டத்தை துவக்கினார். பழநி அருகேயுள்ளது பேச்சி நாயக்கனூர். இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன், பால்சாமி, மதுரை கண்ணன் ஆகியோர் காகதி ஆலை ஒன்றை துவக்கினர். இதில் உடுமலை நகராட்சி தலைவர் வேலுச்சாமியை ஒரு பங்கு...
தமிழகம்
மின்வெட்டை சமாளிக்க கோவை மாநகராட்சியில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு பணி துவக்கம்
கோவை : கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தின் மேற்பகுதியில் சோலார் பேனல்கள் பொருத்தி ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை பேட்டரியில் தினமும் சேகரம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். கோவையில் தொடரும் மின்வெட்டை சமாளிக்க, டொமஸ்டிக் வின்ட் மில், சூரியஒளி மின்னுற்பத்தி, யு.பி.எஸ்., போன்ற மாற்று வழிகளை மக்கள் பின்பற்றத் துவங்கிவிட்டனர். சூ...
தமிழகம்
மூதாட்டி வெட்டிக் கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கணக்கு கேட்டவர்களை தட்டிக்கேட்ட மூதாட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் வக்கம் பட்டி அருகேயுள்ள மைக் கேல்பட்டியில் பகவதியம்மன், காளியம்மன் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கோயில் கட்டும் பணிக்கான வரவு, செலவை இதே பகுதியை சேர்ந்த முருகேசன் கவனித்து வருகிறார். கணேஷ...
தமிழகம்
இரவில் நடுவழியில் நின்ற அரசு பஸ் மாற்று பஸ் விடாததால் ரோடு மறியல்
குஜிலியம்பாறை: வேடசந்தூரில் இருந்து புளியம்பட்டி சென்ற அரசு டவுன் பஸ், இரவில் நடுவழியில் நின்றதால், இரண்டு மணிநேரம் தவித்த மக்கள் மாற்று பஸ் விடக்கோரி ரோடு மறியலில் ஈடுபட்டனர். வேடசந்தூரில் இருந்து கூம்பூர் வழியாக புளியம்பட்டிக்கு அரசு டவுன் பஸ் செல்கிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ், போதிய பராமரிப்பின்றி மோசமா...
தமிழகம்
வேலை வாய்ப்பு திட்டத்தை வலுப்படுத்த கருத்தரங்கு
செம்பட்டி: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை வலுப்படுத்தவும், குறைகளை நீக்கவும் ஊராட்சி தலைவர்களுக்கான கருத்தரங்கம் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக் கட்டளை மூலம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், கிராம ஊராட்சி நிர்வாகங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் பயன்பாடுகள் பயனாளிகளை...
தமிழகம்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்தவர் அந்தோணி(23), இவரது தங்கையை கடந்த 2ம் தேதி முதல் காணவில்லை. தனது தங்கை குறித்து கல்லுப்பட்டியை சேர்ந்த பிரபு(20)விடம் அந்தோணி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த பிரபு, இவரது நண் பர்கள் இருதயராஜ்(25), அருள் சுரேஷ்(24), மணிகண்டன்(24) ஆகியோர் அந் தோணியை அரிவாளால் வெட்டினர். காயமடைந்த ...
தமிழகம்
முப்பெரும் விழா
வேடசந்தூர்: மனித நேய மக்கள் கட்சி சார்பில் கொடியேற்று விழா,நகர அலுவலகம் திறப்பு விழா, கொள்கை விளக்க பொதுக் கூட்டம் வேடசந்தூரில் நடந்தது. நகர செயலாளர் அபிஷேக் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் அன்சாரி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹபிபுல்லா முன்னிலை வகித்தனர். நகர ஒருங்கிணைப் பாளர் கமால்தீன் வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர...
தமிழகம்
பா.ஜ., பொதுக்கூட்டம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் பா.ஜ., சார்பில், பெரும் பான்மையினருக்கும் கல்வி உதவி தொகை வழங்க கோரி பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் வீரமணி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப் பினர் பெரியசாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரவி,ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் முன் னிலை வகித்தனர்.ஒன்றிய பிரசார அணித்தலைவர் குமரவேல் ...
தமிழகம்
கைத்தறி கண்காட்சி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கைத் தறி, கைவினைப் பொருட் கள் கண்காட்சி, விற்பனை வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில் டெரகோட்டா, மரப்பொம்மைகள் வீட்டு உபயோக பொருட்கள், ராஜஸ்தான் அரக்கு வளையல்கள், ஐதராபாத்முத்து, பவளம், ராசிக் கற்கள், ஐம் பொன்நகைகள், கர்நாடகா, ஆந்திராடாய்ஸ், கோல்கட்டா ஜூட் பேக்ஸ், கான்பூர் லெதர் கிர...
தமிழகம்
ஆதரவற்ற குழந்தைகளை காப்பகத்தில் சேர்க்க வாய்ப்பு
திண்டுக்கல்: ஆதரவற்ற குழந்தைகளை, அரசு காப்பகத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட சமூக நல அலுவலர் அறிக்கை: அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில், 2010-2011 கல்வியாண்டில் குழந்தைகள் சேர்க்கப்பட உள்ளனர். ஆதரவற்ற, தாய், தந்தை இருவரில் ஒருவர் இழந்திருப்பவர், கணவரால் கை விடப்பட்டவர், மனநோயால் பாதிப்படைந்த...
தமிழகம்
இந்து முன்னணி கூட்டம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் இந்து முன்னணி மாநாட் டின் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. வரும் 20ல் கரூரில் 6 வது மாநில மாநாடு நடைபெறவுள் ளது. இதற்கான விளக்க பொதுக்கூட்டம் மூஞ்சிக்கலில் நடந்தது.நகரத்தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். நகர பொதுச்செயலாளர் கணேஷ் வரவேற்றார். பொருளாளர் மோகன் முன் னிலை வகித்தார். நடைபெறவுள்ள மாநி...
தமிழகம்
தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர்கள் கலக்கம்
ராஜபாளையம் : ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்ட யோகா பயிற்சியாளர்கள், தொடர்ந்து பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை அரசு அறிவிக்காததால், அவர்கள் கலக்கமடைந்துள்ளனர். மக்களிடையே யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 2007ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்டம்தோறும் யோகா பயிற்சியாளர்களை அரசு நி...
தமிழகம்
எல்.எல்.ஆர்., லைசென்ஸ் பெற ரத்த வகை குறிப்பிட அறிவுறுத்தல்
திண்டுக்கல்: வாகனம் ஓட்டுவதற்கான எல்.எல்.ஆர்., லைசென்ஸ் பெற, விண்ணப்பதாரர்கள் ரத்த வகை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் லைசென்ஸ் பெறுவதற்கு, முன்னதாக பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) வழங்கப்படுகிறது. லை சென்ஸ், எல்.எல்.ஆர்., ஆகியவற்றிற்கு விண்ணப் பிக்கும்போது, ரத்த வகை குறிப்பிடும் முறை இதுவரை இல்லை. விபத்...
தமிழகம்
அய்யலூர் மேம்பாலத்திற்காக கட்டடங்கள் அகற்றும் பணி
வடமதுரை: திண்டுக்கல்- திருச்சி இடையே அமைக்கப் பட்டு வரும் நான்கு வழிச் சாலை திட்ட பணியில் அய்யலூரில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் இடங்களில் இருந்த கட்டடங்கள் இடிக் கும் பணி துவங்கியுள்ளது. திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை(எண்.45) நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த மூன்றாண்டுகளாக நடந்த...
இந்தியா
ஜிப்மர் நுழைவு தேர்வு 21,895 பேர் எழுதினர்
புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை இந்தியா முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் 21,895 மாணவ, மாணவியர் நேற்று எழுதினர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டில்லி, போபால், ஆமதாபாத், நாக்பூர், கோல்கட்டா, கவுகாத...
தமிழகம்
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
ராஜபாளையம்: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி சமத்துவபுரம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து(37). இவரது மனைவி தங்கம்(32). இவர்களுக்கு 13 வயதில் சர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். காளிமுத்து, மேடை ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் நடனக் கலைஞராக ...
தமிழகம்
ஆமணக்கு சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆமணக்கு கொட்டையை சாப்பிட்ட எட்டு குழந்தைகள் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராமநாதபுரம் அருகே வன்னிவயல் அரசு துவக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இதயமாலினி(10), முகிலா(8), புஷ்பராணி(10), சவுமியா(11), இதயபிரபு(10), இளவரசி(12), ரஞ்சிதா(5), பவித்ரா(11) ஆகியோர் நேற்று ...
தமிழகம்
இளம் பெண்களை குறிவைத்து கழுத்தை நெறித்து கொலை... மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை சுற்றி கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத இளம் பெண்கள் பிணம் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டநிலையில் வீசப்பட்டு வருகிறது. கொலை செய்த மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஒதுக்கு புறமான பகுதிகளில் இளம் பெண்கள் ஒரே மாதிரியாக கொலை செய்ய...