category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | எரிசாராயம் பறிமுதல் | குறிச்சி : கேரளாவுக்கு காரில் கடத்திச் செல்ல முயன்ற 490 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கைப்பற்றினர்.தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அரிசி, மணல், எரிசாராயம் கடத்தப்படுகிறது. இதை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாளையார் செக்போஸ்ட் அருகே, கிணத்துக்கடவு போலீஸ் எஸ்.ஐ., பழனிசாமி தலைமையில் ... |
தமிழகம் | பெற்றோரை இழந்த ஏழை மாணவியருக்கு இலவச கல்வி | கோவை : பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பள்ளி விடுதியில் தங்கி படிக்க ஏழை மாணவியர் விண்ணப்பிக்கலாம்.பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்களில் ஒரு ஆரம்பப்பள்ளியும், மேல்நிலைப்பள்ளியும் பெண் குழந்தைகளுக்காக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளுடன் இணைந்த இலவச உணவு விடுதியில் தாய் அல்லது தந்தையை இழந்த பெண் குழந்தைகள், த... |
தமிழகம் | வடவள்ளி உழவர் சந்தை பதிவு செய்ய அழைப்பு | பெ.நா.பாளையம் : வடவள்ளியில் புதிய உழவர் சந்தை துவங்குகிறது. இதில், பங்கேற்க விரும்பும் விவசாயிகள் பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகலாம்.கோவை, வடவள்ளியில் ஜூன் 23ல்,புதிய உழவர் சந்தை துவக்கப்படுகிறது. வீரகேரளம், சோமையம்பாளையம், காளப்ப நாயக்கன்பாளையம், அஜ் ஜனூர், லிங்கனூர், சுண் டப்பாளையம் கிராமங்களை... |
தமிழகம் | விபத்தில் ஒருவர் பலி | தேனி:பூதிப்புரம் சுப்பிரமணியர் கோயிலை சேர்ந்தவர் பாரடிமுத்து (67). இவர், ஆடு வாங்குவதற்காக அல்லிநகரம் வந்தார். அங்கு மினிடோர் ஆட்டோ மோதி இறந்தார். அல்லிநகரம் போலீசார் ஆட்டோ டிரைவர் குருசாமியை கைது செய்தனர். |
தமிழகம் | இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை:7 பேர் கைது: 64 சவரன் நகை மீட்பு | திருநெல்வேலி:நெல்லையில் இன்ஸ்பெக்டர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளைகளில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செயப்பட்டனர்.திருநெல்வேலி மாநகர பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்தன. உதயா நகரில் இன்ஸ்பெக்டர் இளங்கோ வீட்டில் கடந்த ஆண்டு கொள்ளை போனது. இதே போல 19 சம்பவங்களில் ஈடுபட்ட சிங்கம்பாறையை சேர்ந்த அந்தோண... |
தமிழகம் | டாஸ்மாக் ஊழியரை மிரட்டி ரூ. 20 ஆயிரம் பறிப்பு:வார இதழ் நிருபர் கைது: மற்றொருவருக்கு வலை | கடலூர்:டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி 20 ஆயிரம் ரூபா பணத்தை பறிந்துச் சென்ற வார பத்திரிகை நிருபரை போலீசார் கைது செதனர். மற்றொரு நிருபரை தேடிவருகின்றனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சேப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்லதுரை. அஞ்சாநெஞ்சன் என்ற வார பத்திரிகை நிருபர். ராமநத்தத்தை அடுத்த வாகையூரை சேர்ந்தவர் மேனன் என்கிற க... |
தமிழகம் | ஒருவர் கைது | பெரியகுளம்: அரண்மனைப்புதூரைச் சேர்ந்த தொழிலாளி அய்யப்பன் (32). இவர், பெரியகுளத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, செயின்ட்சேவியர் தெருவைச் சேர்ந்த அழகுமலை (33), அய்யப்பனிடம் மதுபாட்டில் கேட்டுள்ளார். "கடையில் வாங்கிக் கொள் ளுங்கள்' என அய்யப்பன் தெரிவித்துள்ளார். கோபமடைந்த அழகுமல... |
தமிழகம் | கணவர் எட்டி உதைத்ததால்பிரசவத்தில் கர்ப்பிணி பலி | தூத்துக்குடி:கணவர் எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பெண் குறைப்பிரசவத்தின் போது இறந்தார்.தூத்துக்குடி சாத்தான்குளத்தை அருகே உள்ள பண்டாரகுளத்தை சேர்ந்தவர் சேர்மதுரை(26); ஆட்டோ டிரைவர். இவர், புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி மகள் பிச்சைகனியை காதலித்து திருமணம் செதுகொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஒன்பது மாத கர்... |
தமிழகம் | ஊராட்சி கிளார்க் மீது வழக்கு | தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகேயுள்ள மெஞ்ஞானபுரம் ஊராட்சியில், கடந்த 2005 ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை , பொதுமக்கள் செலுத்திய வரிப்பணம் 83,400 ரூபாய், போலி ரசீது மூலம் வசூலித்து மோசடி செய்யப்பட்டது தணிக்கையின்போதுதெரியவந்தது. ஊராட்சி தலைவர் பால்ஜோசப், மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக ஊராட்சி கிளார... |
தமிழகம் | குழல் விளக்கு பயன்படுத்த சேவா சங்கம் வேண்டுகோள் | அன்னூர் : மின்சாரத்தை சேமிக்க குண்டு பல்புக்கு பதில் குழல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்' என அட்சயா சேவா சங்கம் பிரசாரம் செய்தது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அட்சயா சேவா சங்கம் சார்பில் குன்னத்தூராம் பாளையம் மற்றும் எருக்கன்குளத்தில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்,... |
தமிழகம் | புகையிலை விலை சரிவால் விவசாயிகள் சோகம் நல்ல விலைக்காக பதப்படுத்தி இருப்பு வைப்பு | கோபிசெட்டிபாளையம்: சென்றாண்டை விட புகையிலைக்கு தற்போது குறைந்த விலை கிடைப்பதால், விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர். வைகாசி மாத இறுதியில் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் புகையிலை விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதி கொண்ட கோபி, டி.என்.பாளையம் மற்றும் நம்பியூர் பஞ்சாயத்து யூனி... |
தமிழகம் | ஐகோர்ட் தடையை மீற முயற்சி:தியாகதுருகம் அருகே பரபரப்பு | தியாகதுருகம்:தனியார் நிலத்தின் வழியே பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கோரி, பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த அலியாபாத் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவாத்தை. இவரது நிலத்தின் வழியாக பல ஆண்டுகளாக பிணத்தை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். இதற்கு அவர் எதிர்ப்பு த... |
தமிழகம் | கஷ்டப்பட்டு திறந்த சிக்னலை மூடிட்டாங்க! போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிப்பு | ஈரோடு: பல ஆண்டு கோரிக்கைக்கு பிறகு ஈரோடு எம்.ஜி.ஆர்., சிலை அருகே திறக்கப்பட்ட சிக்னல், நேற்று ஒரே நாளில் திடீரென மூடு விழா காணப்பட்டது. எஸ்.பி.,க்கு போலீஸ் அதிகாரிகள் அளித்த தவறான ஆலோசனையே இதற்கு காரணம். ஈரோடு நகரில் எம்.ஜி.ஆர்., சிலை அருகே பிரப்ரோடு, ஈ.வி.என். ரோடு, பெருந்துறை ரோடு, நசியனூர் ரோடு, மேட்டூர் ரோடு ஆகியவை... |
தமிழகம் | தமிழில் பெயர்ப்பலகை வணிகர்களுடன் ஆலோசனை | ஈரோடு: கடைகள், நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தொழிலாளர் துறை சார்பில் வணிகர் சங்கங்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களுடன் ஆலோனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு சேலம் மண்டல தொழிலாளர் உதவி ஆணையாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.கடைகள் மற்றும் நிறுவன... |
தமிழகம் | சத்தியில் நாளை சுயம்வரா பார்வதி யாகம் | பெருந்துறை: சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவு டேம் ரோடு விநாயகப் பெருமான், பாலதண்டாயுதபாணி கோவிலில், திருநெறிய திருமுறை தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மற்றும் 14வது ஆண்டு திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நாளை காலை 6 மணிக்கு நடக்கிறது. திருமணமாகாமல் தடைபட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் மற்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு ஈரோட்டில் மராத்தான் | ஈரோடு: கோவையில் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி முதல் நடப்பதை அடுத்து ஈரோட்டில் வரும் 15ம் தேதி மராத்தான் ஓட்டப்போட்டி நடப்பதாக கோவை பல்கலைக்கழக துணை வேந்தர் சாமிநாதன் கூறினார். அவர் கூறியதாவது: கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதிவரை செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டை முன்னிட்டு, ஏற்கனவே பல்கலைக்கழக அளவில் தமிழ்,... |
தமிழகம் | மாற்று திறனாளிகள் செல்ல புதிய பாதை | ஈரோடு: மாற்று திறனாளிகள் அலுவலகம் செல்வதற்காக புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாற்று திறனாளிகள் அலுவலகம் உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாற்று திறனாளிகள் விண்ணப்பம் கொடுக்கவோ, நலவாரிய அட்டை பெறவோ இங்குதான் வர வேண்டும். சமீபத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வளாகம் முழுவதும் தார் ரோட... |
தமிழகம் | குடிநீர் கோரி உண்ணாவிரதம் | ழஅந்தியூர்: அந்தியூர் அருகே மூங்கில்பாளையம் பகுதியில் குடிநீர் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தனர். அந்தியூர் யூனியன் எண்ணமங்கலம் பஞ்சாயத்து மூங்கில்பாளையம், எல்லப்பாளையம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த பத்து நாட்களாகவே குடிநீர் விநியோகம் நிறு... |
தமிழகம் | தக்காளி விலை ரூ. 38 பொதுமக்கள் அதிர்ச்சி | ஈரோடு: ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 38 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பரவலாக தக்காளி, வெண்டை, புடலை, அவரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகிறது. நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில் கணிசமாக மழை பெய்தபோதிலும், மே மாத அக்னி வெயிலால் ஈரோடு மாவட்டத்தில் விளை நிலங்கள் வற... |
தமிழகம் | சி.ஐ.டி., போலீசுக்கு ரூ.20 லட்சத்தில் புது ஆபீஸ் | கோவை : காந்திபுரத்தில், எஸ்.பி.சி.ஐ.டி., அலுவலகங்களுக்கான புதிய கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதி எஸ்.பி.சி.ஐ.டி., (தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை) அலுவலகங்கள், ரேஸ்கோர்ஸ், ரெட்பீல்ட்ஸ் சாலையிலுள்ள போலீஸ் குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக செயல்படுகின்றன. இந்நிலையில், எஸ்.பி.சி.ஐ.டி.,க்கான... |
தமிழகம் | எஸ்.ஐ.,யுடன் தகராறு ஒருவர் கைது | தேனி: கண்டமனூரை சேர்ந்தவர் கருப்பசாமி (30). இவரது கடையில் இதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (30) என்பவருடன் தகராறு செய்து கொண்டிருந்தார். எஸ்.ஐ., சுப்புராஜ் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயக் குமாரை கண்டித்துள்ளார். ஜெயக்குமார், எஸ்.ஐ., யுடனும் தகராறு செய்தார். போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர். |
தமிழகம் | கோழிப்பண்ணையால் குமிளம்பரப்பில் ஈ தொல்லை | ஈரோடு: ஈக்கள் தொல்லைக்கு காரணமான கோழிப் பண்ணையை அகற்றக் கோரி குமிளம்பரப்பு மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். சித்தோடு அருகே குமிளம்பரப்பு பாரதி நகர், பெருமாள் நகர் பகுதி மக்கள் கூறியதாவது: பாரதி நகர், பெருமாள் நகர் பகுதியில் 500 குடும்பங்கள் உள்ளன. இதன் அருகில் கோழிப்பண்ணை உள்ளது. கோழிப்பண்ணை நிறுவனத்தில் பச்சை கருவாட... |
தமிழகம் | மதுக்கடை அமைவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்ட எச்சரிக்கை | அந்தியூர்: அந்தியூரில் மதுக்கடை அமைவதை எதிர்த்து முற்றுகையிடப் போவதாக ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் ஆறு மதுகடைகள் உள்ளன. பஸ் ஸ்டாண்ட் அருகில் மூன்று கடைகளும், தவிட்டுப்பாளையத்தில் இரு கடைகளும், புதுக்காடு ரோட்டில் ஒரு கடையும் உள்ளன. தவிட்டுப்பாளையம் பாலம் அருகில் 3417ம் நம்பர் க... |
தமிழகம் | த.மு.மு.க., ஆர்ப்பாட்டம் | கம்பம்: கம்பம் நகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு டெபாசிட் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி த.மு.மு.க., சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு நகர தலைவர் சலீம் பாஷா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அஜ்மீர் காஜா முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் அப்துல்பத்ரி... |
தமிழகம் | மஞ்சள் விலை வீழ்ச்சியால் வரத்து அடியோடு சரிவு | ஈரோடு: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் மஞ்சள் விலை வீழ்ச்சி அடைவதால் மஞ்சள் வரத்து குறைந்துள்ளது. மஞ்சள் ஒரு குவிண்டால் 15 ஆயிரத்து 600 க்கு விற்கப்பட்டபோது மார்க்கெட்டுக்கு 8,000 மூட்டைகள் வரை வரத்தானது. தற்போது 3,000 மூட்டைகள் மட்டுமே வரத்தாகிறது. சென்றாண்டில் மஞ்சள் விலை குவிண்டால் ஒன்று 13 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்க... |
தமிழகம் | திருமணம் செய்துக் கொள்வதாக 20 பெண்களைஏமாற்றிய வாலிபர் கைது:சொகுசு கார் பறிமுதல் | சென்னை:திருமண தகவல் மையத்தில் விண்ணப்பித்த 20 பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாக நாடகமாடி, லட்சக்கணக்கில் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சொகுசு கார், மொபைல்போன், ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.போரூரை சேர்ந்தவர் சத்தியவதி (37); தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியை. விவாகரத்தான சத்தியவ... |
தமிழகம் | தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு | தேனி: பெரியகுளம் அருகே நடந்த விபத்தில் நான்கு பேரும், ஆண்டிபட்டி அருகே நடந்த விபத்தில் 11 பேரும் பலியாயினர். சம்பவம் நடந்த உடனேயே இடத்திற்கு சென்று தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களின் பணியால் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடிந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினரை அழைத்து பாலகிருஷ்ணன் எ... |
தமிழகம் | ஏ.டி.எம்., திறப்பு விழா | தேவாரம்: தேவாரத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 145 வது ஏ.டி.எம். மையம் திறப்பு விழா நடந்தது. வங்கியின் இயக்குனர் பெரீஸ் மகேந்திரவேல் தலைமை வகித்தார். தொழிலதிபர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஏலக்காய் எஸ்டேட் உரிமையாளர் பாண்டியன், ஏ.டி.எம். மையத்தை துவக்கி வைத்தார். வங்கியின் இயக்குனர் விக்கிரமன் குத்துவிளக் கேற்... |
தமிழகம் | வனக்காவலர் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் | தேனி: வனக்காவலர் காலி பணியிடத்திற்கான பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்து வருகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்(பொறுப்பு) பெரியசாமி கூறியதாவது; வனக்காவலர் பணியிடத்திற்கு மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான படிப் பில் ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தை படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ப... |
தமிழகம் | கரூரில் ரேஷன் அரிசி பறிமுதல் | கரூர்: கரூர் வழியாக கேரளா செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கை. நேற்று, காலை பறக்கும்படை தனி தாசில்தார் மதிவாணன், தனி ஆய்வாளர் பாலசக்ரபாணி மற்றும் அலுவலர்கள் மாலை நான்கு மணிக்கு கரூர் வந்த பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது 17 மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த 350 கிலோ ரேஷன் அரிசி பறிம... |
தமிழகம் | திருவிழாவில் மோதல் வார்டு உறுப்பினர் காயம் | குன்னூர்:வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை தேவாலய திருவிழாவின் போது, காவல் துறையினர் கண்ணெதிரே ஏற்பட்ட மோதலில், வார்டு உறுப்பினர் தாக்கப்பட்டார்; காவல் துறை, இதுவரை கைது நடவடிக்கையை எடுக்கவில்லை. வெலிங்டன் கன்டோன்மென்ட் எல்லைக்கு உட்பட்ட சின்ன வண்டிச்சோலையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் குருசடி உள்ளது; இங்குள... |
தமிழகம் | தாயை வெட்டிக்கொன்ற மகன் சொத்து தகராறால் வந்த வினை | க.பரமத்தி: தென்னிலை அருகே சொத்துத் தகராறில் தாயை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகனை தென்னிலை போலீஸார் தேடி வருகின்றனர். தென்னிலை அடுத்துள்ள காட்டம்பட்டியில் மலையப்பன் மனைவி பொன்னம்மாள்(70). இவருக்கு ராமலிங்கம்(45), பாவாத்தாள்(38) என இரண்டு பேர் உள்ளனர். ராமலிங்கம் மதுரையில் குடும்பத்துடன் வசிக்கிறார். மகள் பாவாத்தாள் வீட்டில... |
தமிழகம் | கொடுக்கல்- வாங்கல் பிரச்னை தொழிலாளி ஒருவர் கொலை | குளித்தலை: மரம் வெட்டும் தொழிலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட கொடுக்கல், வாங்கல் தகராறில் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். குளித்தலை அருகே பாலவிடுதியை சேர்ந்த சாத்துவார்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பன்(46). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் மனைவி விஜயா. இருவரும் தங்கள் வீடு அருகே நின்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக மரம் விய... |
தமிழகம் | மூங்கில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு | பந்தலூர்:பந்தலூர் அடுத்துள்ள பாட்டவயல்-வெள்ளேரி, பாட்டவயல்-சுல்தான் பத்தேரி சாலைகளில் மூங்கில் மரங்கள் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பந்தலூர்-பாட்டவயல்-சுல்தான் பத்தேரி, பாட்டவயல்-அம்பலமூலா சாலையோரங்களில், மூங்கில் மரங்கள் காய்ந்துள்ளன. சாலையோரங்களில் உள்ள மூங்கில்கள் வெட்டி அகற்றாத நிலையில், சிறு மழை பெய்த... |
தமிழகம் | மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முற்றுகை தொடரும் மின்தடையை கண்டித்து ஆவேசம் | கரூர்: இனாம் கரூர் நகராட்சி பகுதி 13வது வார்டு, குளத்துப்பாளையம் பகுதியில் தொடரும் மின்தடையை கண்டித்து, பகுதியை சேர்ந்த பெண்கள் வெங்கமேடு இளநிலை பொறியாளர் அலுவகத்தை முற்றுகையிட்டனர். வெங்கமேடு இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று கா லை, இனாம் கரூர் நகராட்சியை சே ர்ந்த பெரியகுளத்துப்பாளையம், பிள்ளையார் கோவில் தெரு, பாரத... |
தமிழகம் | சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு | கோத்தகிரி:கோத்தகிரி பாண்டியராஜ் நினைவு மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு நடத்தப்பட்டது.பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி லீனாகிரேஸ், சுற்றுச்சூழல் மாசுக்கான காரணங்கள், பாதுகாக்கும் முறை, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து பேசினார். சுற்றுச்சூழல் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிய... |
தமிழகம் | தொழிலாளி தற்கொலை | குளித்தலை: குளித்தலை அருகே இனுங்கூரில் தீராத வயிற்றுவலி காரணமாக தொழிலாளி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். குளித்தலை அருகே இனுங்கூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்(40). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். சம்பவத்தன்று வயிற்றுவலி தாங்கமுடியாமல் விஷம் அருந்தினார். மயக்க நிலையில் இருந்த மாணிக்... |
தமிழகம் | கல்லூரி மாணவி கர்ப்பம் பட்டதாரி வாலிபர் கைது | குளித்தலை: குளித்தலையில் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி திருமண செய்ய மறுத்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார். குளித்தலை அருகே கே.ஆர்புரம் பெரியசேங்கல் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சநாதன் மகள் புஷ்பராணி (18) பெயர்மாற்றப்பட்டுள்ளது. இவர் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அதே ஊரை சேர்ந்த பெருமாள் மகன் பாக்கியராஜ்(24). எம்... |
தமிழகம் | சர்வே கல்லில் சமத்துவ கோயில் | தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம், ஊத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜா. இவர் 1979ல் இருந்து பொதுச்சொத்து பாதுகாப்பு பராமரிப்புக்கான பணிகளை செய்து வருகிறார். விவசாயிகளுக்கு சர்வே கல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொண்டுள்ளார். விவசாயிகளின் கண்கண்ட தெ... |
தமிழகம் | பருவமழையால்... அழகை இழக்கும் ரோஜாக்கள்! தோட்டக்கலைத் துறையினர் நடவடிக்கை | ஊட்டி:பருவமழையால், ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள பல ரக மலர்கள் மண்ணுக்கு உரமாகின்றன; இருப்பினும், வார இறுதி நாட்களில், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.ஊட்டி தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டு நினைவாக, "96ம் ஆண்டில், விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது; இதற்கு நூற்றாண்டு ரோஜா பூங்கா என பெயரிடப்பட்டது. த... |
தமிழகம் | மகளிர் சுயஉதவி குழு பயிற்சி முகாம் | லாலாப்பேட்டை: சிந்தலவாடி பஞ்சாயத்து மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் துவங்குகிறது. சுவடு இயக்குனர் பிரபாகரன் தலைமை வகித்து துவக்கிவைத்தார். மகளிர் திட்டம், சுவடு தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. குழு குறித்த தெளிவான கருத்துகள், செயல்பாடு விதிமுறைகள், வங்கி கடன் குறித்த க... |
தமிழகம் | ரூ.20 லட்சத்தில் பணிகள் அரவையில் 4 பஞ்., தேர்வு | ழகரூர்: அரவக்குறிசச்சி யூனியனில் நடப்பாண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நான்கு பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டன. அரவக்குறிச்சி யூனியன் பி.டி.ஓ., நாகராஜன் அறிவித்துள்ளதாவது: அரவக்குறிச்சி யூனியன் பகுதியில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் 2010-11ம் ஆண்டுக்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு நான்கு ... |
தமிழகம் | நொய்யல் பிரிவு சாலையில் ரவுண்டானா: மக்கள் கோரிக்கை | க.பரமத்தி: கரூர் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தியிலிருந்து நொய்யல் செல்லும் பிரிவு சாலையில் விபத்தை தவிர்க்க ரவுண்டானா அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டாண்டு காலமாக சாலை விரிவாக்க பணி நடக்கிறது. க.பரமத்தி கடைவீதி பகுதியில் இருபக்கமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சா... |
தமிழகம் | நீர் வினியோகத்தில் சிக்கல் மஞ்சூர் ஹட்டி மக்கள் ஆத்திரம் | மஞ்சூர்:நீர் வினியோகப் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, மஞ்சூர் ஹட்டி பொதுமக்கள், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கீழ்குந்தா பேரூராட்சி 6வது வார்டான மஞ்சூர் ஹட்டி கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் ஆஷாவின் வார்டான இக்கிராமத்துக்கு, ஊசிமலை நீராதாரத்திலிருந்து நீர... |
தமிழகம் | மகளுக்கு கட்டாய திருமணம் செய்ய முயன்ற தாய் கைது | கம்பம்: காமயகவுண்டன்பட்டியில் மைனர் பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்ய முயன்ற தாய் கைது செய்யப்பட்டார். மணமகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் கோவிந்தம்மாள் மகள் முத்துலட்சமி (12). இவருக்கும் சின... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா | குளித்தலை: குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநராக பணியாற்றிய ஜாய் செல்வராணி, இவரது கணவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநராக பணியாற்றிய அடைக்கலராஜ் ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்து, ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பாராட்டினார். கரூர் மா... |
தமிழகம் | ஏல மையத்தில் தொடரும் விலை சரிவு தேயிலை விவசாயிகள் கவலை | குன்னூர்:குன்னூர் தேயிலை ஏல மையத்தில் தொடரும் விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை எண் 22க்கான ஏலம் நடத்தப்பட்டது. மொத்தம் 13.09 லட்சம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு தயாராக இருந்தது; இலை ரகம் 8.65 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 4.48 லட்சம் கிலோ அடங்கும். உள்நாட்டு வர்த்தகத்தை பொறுத்த... |
தமிழகம் | சத்துணவு ஊழியர் சங்க தாந்தோணி ஒன்றிய செயற்குழுக்கூட்டம் | கரூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தாந்தோணி ஒன்றிய செயற்குழு கூட்டம், ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கணேசன், அங்கமுத்து, மாலதி, வசந்தி முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் வேம்புசாமி, மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். சத்து... |
தமிழகம் | முதல்வர் பிறந்த நாள் விழாகட்சியினர் கொண்டாட்டம் | கூடலூர்:தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா, கூடலூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் தேவர்சோலை, ஓவேலி பேரூராட்சிகள், ஸ்ரீமதுரை ஊராட்சிகளில் கொண்டாடப்பட்டது.ஒன்றிய செயலர் ராஜேந்திரன் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மசினகுடியில் நடத்தப்பட்ட விழாவில், ஆதரவற்றோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு, கதர்வாரியத் துறை அமைச்சர் ராமச்சந்... |
தமிழகம் | யானை தாக்கி ஆதிவாசி பலி வனத்துறையினர் நவாரணம் | கோத்தகிரி:கோத்தகிரி அருகே யானை தாக்கி ஆதிவாசி ஒருவர் பலியானார்.கோத்தகிரி சோலூர்மட்டம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பங்களாபடிகை ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் மணி (42); மனைவி, மகன், இரு மகள்கள் உள்ளனர். மகனை தவிர மற்ற நால்வரும், நேற்று முன்தினம் மாலை பங்களாபடிகை கிராமத்தில் இருந்து, அருகேயுள்ள காபி தோட்டத்துக்கு நடந்து சென்றுள... |
தமிழகம் | இப்படியும் புகார் | தேனி: வீட்டில் இருந்த 131 சேலை, 49 ஜாக்கெட், 37 உள்பாவாடை, 28 உள்பாடிகளை காணவில்லை என தேனி அல்லிநகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் புகார் செய்துள்ளார். தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ராமசாமி (78) யின் இரண்டாவது மனைவி நல்லீஸ்வரி (50). ராமசாமி குடியிருக்கும் பூர்வீக வீட்டில் தனக்கும் பங்கு வேண்டும் என அவரத... |
தமிழகம் | மாவட்ட கைத்தறி கண்காட்சி ஊட்டியில் இன்று துவக்கம் | ஊட்டி:மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை, ஊட்டியில் இன்று துவக்கப்படுகிறது.கைத்தறி ஆடைகளின் விற்பனையை அதிகரிக்க, மத்திய அரசின் கைத்தறி அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் சார்பில், 2010-"11ம் நிதியாண்டில், தேசிய கைத்தறி கண்காட்சிகள் 25, மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சிகள் 85, தேசிய அளவிலான சிறப்பு கைத்தறி ... |
தமிழகம் | காத்திருந்து... காத்திருந்து...! மின்வாரிய களப்பணியாளர்கள் திண்டாட்டம் காலமுறை ஊதியம் தான் இவர்கள | குன்னூர் : தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் களப்பணியாளர்கள், காலமுறை ஊதியத்துக்காக காத்திருக்கின்றனர். தமிழக மின்வாரியத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். பலர், பல்லாண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வந்தனர். தி.மு.க., த... |
தமிழகம் | குறித்த நேரத்தில் பஸ் வராததால் பயணிகள் முற்றுகை | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு செல்ல வேண்டிய முன்பதிவு செய்த பஸ் குறித்த நேரத்தில் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ் ஸ்டாண்டில் நின்ற மற்ற பஸ்களை செல்ல விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு இரு அல்ட்ரா டீலக்ஸ் பஸ் மற்றும் நான்கு சாதாரண பஸ்களை அர... |
தமிழகம் | பழமை வாய்ந்த கோவில்களை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல் | உடுமலை : பழமை வாய்ந்த கோவில்களை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.உப்பாறு படுகை என அழைக்கப்படும் குடிமங்கலம் பகுதியில் பழமை வாய்ந்த கோவில்கள் அதிகளவு உள்ளன. பல கோவில்கள் போதிய பராமரிப்பு இல்லாமலும், நிலங்கள் ஆக்கிரமிப்பிலும் உள... |
தமிழகம் | போலீஸ் பற்றாக்குறையால் திணறும் முடீஸ் ஸ்டேஷன் | வால்பாறை : பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமலும், எப்.ஐ.ஆர்.,போடமுடியாமலும் முடீஸ் போலீசார் திணறி வருகின்றனர்.வால்பாறை உட்கோட்டத் திற்கு உட்பட்ட பகுதியில் வால் பாறை, முடீஸ் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களும், வாட்டர்பால், காடம்பாறை, ஷேக்கல்முடி ஆகிய அவுட் போலீஸ் ஸ்டேசன்களும் உள்ளன.வால்பாறையில் உள்ள பெரும்பாலான போ... |
தமிழகம் | காரில் போலி மது கடத்திய 3 பேர் கைது | கிருஷ்ணகிரி: கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் கடத்தி சென்ற 500 போலி மதுபாட்டில்களை கிருஷ்ணகிரி போலீஸார் காருடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.கர்நாடகா மாநிலத்தில் இருந்து பிரபல மது கம்பெணிகள் பெயரில் போலி மது பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வழியா... |
தமிழகம் | சுற்றுலா தல முக்கிய ரோடுகளை மேம்படுத்த கோரிக்கை | உடுமலை : செம்மொழி மாநாட்டையொட்டி உடுமலை பகுதியிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மாவட்ட முக்கிய ரோடுகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கோவையில் செம்மொழி மாநாடு இம்மாதம் நடக்கிறது. மாநாட்டையொட்டி பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் சிறப்பு விருந்தினர்கள் அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல... |
தமிழகம் | ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகம் | உடுமலை : தேவனூர்புதூர் மூன்று ரோடு சந்திப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது.உடுமலை-ஆனைமலை ரோடு மற்றும் செல்லப்பம்பாளையம் ரோடு தேவனூர்புதூர் மூன்று ரோடு சந்திப்பில் இணைகிறது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.இந்த ரோட... |
தமிழகம் | மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை தடுத்த அதிகாரிகளை மிரட்டிய அரசியல் கட்சியினர் | மடத்துக்குளம் : மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் பிடித்த நிலையில், பழநியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர்கள் வண்டிகளை மீட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ளது மடத்துக்குளம். இங்குள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் சம... |
தமிழகம் | மொபட்டில் 5 பேர் பயணம் லாரி மோதியதில் இருவர் பலி | காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே ஐந்து பேர் சென்ற மொபட் மீது லாரி மோதியதில், சிறுவன் உட்பட இருவர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மல்லப்பாடியை சேர்ந்தவர் சரளா (35). இவர் காவேரிப்பட்டணம் அடுத்த கூரம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்றனர். அப்போது, அவ்... |
தமிழகம் | மின் தடையால் ரூ.10 கோடி உற்பத்தி பாதிப்பு: ஓசூர் தொழிற்சாலைகளில் பணிகள் முடக்கம் | ஓசூர்: அறிவிக்கப்படாத மின் நிறுத்தம் காரணமாக ஓசூரில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளில் உற்பத்தி பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாளில் 10 கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மேம்பாட்டுக்கு வணிகமும், தொழிற்சாலையும் இரு கண்களாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ... |
தமிழகம் | பார்வையிழந்த சுரேக்கா வீட்டிற்கு துணை முதல்வர் திடீர் விசிட் | சென்னை: தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கண் பார்வை பாதிக்கப்பட்டு, ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று திரும்பிய சிறுமி சுரேக்கா வீட்டிற்கு, துணை முதல்வர் நேரில் சென்று நலம் விசாரித்தார். திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதுவண்ணாரப்பேட்டையச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் சுரேக்கா (13).... |
தமிழகம் | பொம்மையசாமி கோவில் கும்பாபிஷேக விழா | உடுமலை : பொன்னேரி பொம்மையசாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.உடுமலை அருகேயுள்ள பொன்னேரியில் பொம்மையசாமி, பொம்மம்மாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. விழா இன்று காலை 7.30 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு துவங்குகிறது. தொடர்ந்து, வரும் 13 ம் தேதி தி... |
தமிழகம் | பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகள் வனிதா (31). அங்குள்ள குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது, இவரை பின்தொடர்ந்து வந்த அதே ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (39) என்பவர் வனிதாவை கையைப்பிடித்து இழுத்து, புட... |
தமிழகம் | விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால்... டிராபிக் ஜாம்: லாரன்ஸ் ரோட்டில் தொடரும் அவலம் | கடலூர் : ஒருவழிப் பாதையான லாரன்ஸ் ரோட்டில் விதிகளை மீறி வந்த அரசு பஸ் களால் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம் பித்தது. கடலூர் நகரின் பிரதான பகுதியாக லாரன்ஸ் ரோடு உள்ளது. இங்கு பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர், வங்கிகள், வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்தது வந்தது. கடைவீத... |
தமிழகம் | அஞ்சல் துறை அசத்தல் | திருப்பூர் : அரசு பள்ளிகளுக்கு தேவையான பாட நூல்கள் வினியோகிக்கும் பணியை, இந்தாண்டு முதல் அஞ்சல் துறை மேற்கொள்கிறது. திருப்பூர் கோட்டத்தில் திருப்பூர், தாராபுரம், மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலக பகுதிகளில் புத்தக வினியோகிக்கும் பணி, கடந்த ஒரு மாதமாக நடந்தது.துவக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள... |
தமிழகம் | வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் மாற்று சாகுபடியில் விவசாயிகள் | கடலூர் : கடலூர் பாரம்பரிய பயிர் செய்ய கூலி ஆள் கிடைக்காததால் விவசாயிகள் குறைந்த வருவாய் உள்ள பூ சாகுபடிக்கு மாறியுள்ளனர். கடலூர் பகுதியில் நாணமேடு, உச்சிமேடு, கண்டகாடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக கத்திரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர். இது விவசாயிகளுக்கு... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி | ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சிங்காளந்தபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளி சார்பில், தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. சிங்காளந்தபுரம் பஞ்சாயத்து தலைவர் ராஜு தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவி, ஏ.இ.இ.ஓ., பூங்கோதை, கிராமக்கல்வி குழு தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் வ... |
தமிழகம் | நிர்மல் புரஸ்கார் விருது; 24 ஊராட்சிகள் பரிந்துரை | திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், 2009-10ம் ஆண்டுக்கான நிர்மல் புரஸ்கார் விருதுக்காக, 13 ஒன்றியங்களில் இருந்து 24 ஊராட்சிகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.முழு சுகாதார திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் ஊராட்சிகளுக்கு நிர்மல் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. மத்திய அரசு சார்பில் அவ்விருதும், மக்கள் தொகை அடிப்படையில் ஐ... |
தமிழகம் | ராசி கல்லூரி வெள்ளி விழா | ராசிபுரம்: ராசிபுரம் ராசி கல்லூரி துவங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, கல்லூரி பயிற்சி இயக்குனர் நஸிர் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் பரமசிவம், சின்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் ஹபிபுல்லா பங்கேற்று பேசினார். விழாவை முன்னிட்டு நடந்த ஆங்கில இலக்கண போட்டியில் வெற்... |
தமிழகம் | மக்காச்சோளம் விலை எகிறியது | பல்லடம் கர்நாடகாவில் இருந்து மக்காச்சோளம் வரத்து குறைவு எதிரொலியாக, உள்ளூர் மக்காச்சோளம் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 100 ரூபாய் உயர்ந்தது.பல்லடம் பகுதிகளில் 5,000க்கும் மேற் பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகளில், தினமும் ஆறு லட்சம் கோழிகள் வரை தமிழகத்தின் பல்வேறு ... |
தமிழகம் | காதல் ஜோடி போலீஸில் தஞ்சம் | பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி போலீஸில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது. பனமரத்துப்பட்டி ஈச்சமரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த மாதேஸ்வரன் மகள் சங்கீதா(19). குரால்நத்தம் பகுதியை சேர்ந்த மணி மகன் நிர்மல்குமார்(24). சங்கீதாவும், நிர்மல்குமாரும் ஒருவரையொருவர் காதலித்தனர். கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி ... |
தமிழகம் | மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவி முதலிடம் | நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் மகளிர் பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி முத்தமிழ்பிரியா திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டார். அதில் முதலிடம் பிடித்தார். தேசிய அளவிலான சிலம் பம் போட்ட... |
தமிழகம் | பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் சேர... ஆர்வம்! மாணவ, மாணவியருக்குள் கடும் போட்டி | திருப்பூர் : மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர விரும்புவதால், இப்பிரிவுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, கடந்த 26ம் தேதி வெளியானது; அதைத் தொடர்ந்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ... |
தமிழகம் | கடலூரில் நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு | கடலூர் : இந்திய மருத்துவச் சங் கம், சென்னை மலர் மருத் துவமனை சார்பில் நரம் பியல் அறுவை சிகிச்சை குறித்த தற்போதைய நிலை மற்றும் இருதய அறுவை சிகிச்சையில் தோல்வி குறித்த கருத் தரங்கு கடலூரில் நடந்தது.கிருஷ்ணா மருத் துவ மனையில் நடந்த கருத் தரங்கிற்கு இந்திய மருத் துவ சங்க செயலாளர் டாக் டர் சீனுவாசன் தலைமை தாங்கினார். கிருஷ்... |
தமிழகம் | கடலூர் சாலையில் மீண்டும் பள்ளம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி | கடலூர் : கடலூர் நகரில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஆங்காங்கே தோண்டப்பட்டு வரும் பள்ளங் களால் விபத்து ஏற்படுகிறது.கடலூர் நகரின் முக்கிய சாலைகளில் பாதாள சாக்கடை பணிக்காக பைப் புதைக்க நெல்லிக்குப்பம் ரோடு, வண்டிப்பாளையம், என முக்கிய சாலைகளில் பள்ளம் தோண் டப்பட்டது. நீண்ட நாட்களாக பைப்புகள் புதைக்கப்படாததால் அடிக்... |
தமிழகம் | அருந்ததியர் மக்கள் முன்னேற்ற நல சங்க ஆலோசனை கூட்டம் | நாமக்கல்: அருந்ததியர் மக்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் சக்திவேல் தலைமையில் நாமக்கல் அடுத்த சிவியாம்பாளையத்தில் நடந்தது. சங்க நிர்வாகி பழனிசாமி வரவேற்றார். ஊர் பிரமுகர் பிச்சைமுத்து, மாநில பொது செயலாளர் ராஜன், துணை செயலாளர் சேதுபதி, துணைத்தலைவர் ஆண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத... |
தமிழகம் | கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை: நகரமன்றம் ஒப்புதல் | கடலூர் : கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை, பான்பரி மார்க் கெட்டிற்கு சர்வீஸ் ரோடு அமைக்க நெடுஞ்சாலை துறை நில ஆர்ஜிதம் செய்ய நகர மன்றத் தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.கடலூர் நகர மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். கமிஷனர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங... |
தமிழகம் | செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை துவக்கம் | மோகனூர்: எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நாளை (ஜூன் 9) துவங்குகிறது.மோகனூர் யூனியன் எஸ்.வாழவந்தியில் உள்ள பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 3ம் தேதி காலை 6 மணிக்கு காப்புகட்டுதலுடன் துவங்கியது. நாளை (ஜூன் 9) காலை 9 மணிக்கு ஸ்வாமி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. த... |
தமிழகம் | தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்ற சிதம்பரத்தில் உண்ணாவிரதம் | சிதம்பரம் : தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்றக் கோரி சிதம்பரத்தில் அம்பேத்கர் பேரவை - தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.ஜமாபந்தியில் மாவட்டத்தில் எந்த தாலுகாவிலும் பஞ்சமி நில விவரம் ஒட்டப்படாததை கண்டித்தும், தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்றக் கோரியும், பஞ்சமி நிலங்களை மீட... |
தமிழகம் | தலைமறைவு குற்றவாளிகள் 6 பேர் கைது | நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.பி., உத்தரவின் பேரில், போலீஸார் அதிரடி சோதனை நடத்தி தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் ஆறு பேரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., பாரி உத்தரவின் பேரில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலூர்உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் அந்தந்த பகுதி போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். சோத... |
தமிழகம் | மரக்கன்று நடும் விழா | நாமக்கல்: உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் எம்.பி., தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ப.வேலூர் யூனியனுக்கு உட்பட்ட சுங்காரம்பட்டி கிராமத்தில் மரம் நடும் விழா நடந்தது. எம்.பி., தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். ப.வேலூர் எம்.எல்.ஏ., தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்திரன் முன்னிலை வகித்... |
தமிழகம் | போலீஸ் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளது: எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் குற்றச்சாட்டு | கிள்ளை : போலீஸ் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ., அருண் மொழித்தேவன் பேசினார். விலைவாசி உயர்வை கண் டித்து சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம் நடந்தது. கிள்ளை நகர செயலாளர் விஜயன், நஞ்சைமகத்து வாழ்க்கையில் தொகுதி செயலாளர் தெய்வீகன், தில்லைவிடங்கனில் ஊராட்சி செயல... |
தமிழகம் | பெற்றோர் கண்டிப்பு மகன் தற்கொலை | நாமக்கல்: பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.எருமப்பட்டி அருகே வரகூரை சேர்ந்தவர் ராஜேஸ் (22). மது பழக்கத்துக்கு அடிமையான ராஜேஸ் வேலைக்கு செல்லாமல், குடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். அதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய ராஜே... |
தமிழகம் | தீக்குளித்து பெண் தற்கொலை | விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.மங்கலம்பேட்டை அடுத்த வலசை கிராமத்தை சேர்ந்த குள்ளன் மகன் ரவி. இவர் அதே ஊரைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகள் தனலட்சுமியை (25) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேவேந்திரன் என... |
தமிழகம் | வி.ஏ.ஓ., மீது லஞ்சப்புகார் | நாமக்கல்: பட்டா மாறுதல் செய்ய அன்பளிப்பு கேட்டதாக வி.ஏ.ஓ., மீது கூறப்பட்ட புகாரை விசாரிக்கும்படி கலெக்டர் த்தரவிட்டார். மல்லசமுத்திரம் அருகே கருமனூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வி.ஏ.ஓ., தங்கராஜிடம் பட்டா மாறுதல் தொடர்பாக மனு அளித்தார். ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தால்தான் பட்டா மாறுதல் செய்யமுடியும் என வி.... |
தமிழகம் | மணல் கடத்தல்: லாரி பறிமுதல் | பண்ருட்டி : கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சப் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் திருட்டு மணல் ஏற்... |
தமிழகம் | உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி | மோகனூர்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி உதவி தலைமையாசிரியர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் உமாபதி முன்னிலை வகித்தார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளியில் துவங்கிய பேரணி வளையப்பட்டி சாலை, அக்ரஹா... |
தமிழகம் | ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பழைய மரத்தூண்கள் இன்று ஏலம் | கடலூர் : கடலூர் பி.டி.ஓ., அலுவலக கட்டடத்தில் பிரித் தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த மரத் தூண்கள் ஏலம் மீண்டும் இன்று நடக்கிறது.கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கனமழையின் போது இடிந்து விழுந்தது. அதிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த மரத்தூண்கள், இரும்பு கம்பிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்... |
தமிழகம் | வல்லப மகாகணபதி கோவில் ஜூன் 14ல் கும்பாபிஷேகம் | நாமக்கல்: சிந்தாமணி வல்லப மகா கணபதி கோவிலில், ஜூன் 14ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது. நாமக்கல் மகரிஷி நகரில் உள்ள சிந்தாமணி வல்லப மகா கணபதி ஸ்வாமி கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் துவங்கியது. பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜூன் 14ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜூன் 13ம் தேதி காலை 10... |
தமிழகம் | பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேரவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கடலூர் : பிற்படுத்தப்பட்ட விடுதியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் வரும் ஜூலை 31ம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக் கென பள்ளி மற்றும் கல் லூரி... |
தமிழகம் | திருமண நாளில் மணப்பெண் மாயம் : அத்தை மகளை மணந்தார் மாப்பிள்ளை | ராசிபுரம்: திருமணத்திற்கு முன், மணப்பெண் காதலனுடன் சென்றதால், மாப்பிள்ளை அத்தை மகளுக்கு தாலிகட்டினார்.ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் ராஜா (27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஐ.டி.ஐ., படித்த அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கும் மல்லூர் நெம்பர் 3 குமாரபாளையத்தை சேர்ந்த... |
தமிழகம் | வாலிபர் விஷம் குடித்து தற்கொலை | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் அருகே குரும்பாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் ஆசைத்தம்பி (32). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவரது பசு மாடு ஒன்றை முப்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். இந்த பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி செலவ... |
தமிழகம் | வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் | பெரம்பலூர்: கல்வி கடை சரக்காவதை தடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தா... |
தமிழகம் | மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு | பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் விஜயகுமார் சிறுமத்தூர் மஜிரா எஸ்.குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலுசாமி என்பவருக்கு... |
தமிழகம் | சிவன் கோவிலில் வருஷாபிஷேகம் | கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அமராவதி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது. கந்தர்வக்கோட்டை சிவன் கோவில் என அழைக்கப்படும் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சிவாச்சாரியார்களால் ஜூன் ஆறாம் தேதி முதல் கால யாக வேள்வியும், பிரசாதமும் வழங்கப்பட்டது. ஏழாம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ... |
தமிழகம் | விதி மீறிய 239 வாகனங்கள் மீது வழக்கு: ரூ.2.34 லட்சம் அபாரதம் | விருதுநகர்: மாவட்டத்தில் மே மாதத்தில் விதிகளை மீறி இயக்கிய 239 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதமாக 2.34 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பல பகுதிகளில் வாகன சோதனை செய்தனர். முறையான வழித்தடத்தில் இயக்காதது, பெர்மிட் இல்லா... |
தமிழகம் | பூட்டிய வீட்டில் புகுந்து 20 பவுன் நகை கொள்ளை | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் புகுந்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். புதுக்கோட்டை அடுத்த நமுணசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் சிங்கப்பூரில் வேலைபார்க்கிறார். வீட்டில் இவரது மனைவி பர்வதம்(35) மற்றும் குழந்தைகள் வசிக்கின்றனர். உறவினர் திர... |
தமிழகம் | போக்குவரத்து பாதிப்பு | விருதுநகர்: ராமமூர்த்தி ரோட்டில் ரயில்வே கேட் நேற்று மாலை 5.45 மணியளவில் பூட்டப்பட்டது. ஆனால் மழை காரணமாக கேட் பழுதானதால், ரயில் சென்ற பின்னும் கேட்டை திறக்க முடியவில்லை. 6.45 மணிக்கு கேட்டை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.